• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

Dussehra-Greeting-Cards-3.gif


Picture courtesy: Google images.
 

எங்கே குருவிகள்?

சிட்டுக் குருவிகள் எப்போதுமே தம்

பட்டுச் சிறகுகளை விரித்துப் பறக்க

நாடுமாம் தூய்மை நிறைந்த இடமே;
தேடுமாம் சுகாதாரமான சூழலையே!

அலைபேசிக்காக அமைத்த கோபுரம்
தொலைதூரம் நுண் ஒலி அலைகளை

அனுப்புவதும் ஒரு துன்புறுத்தாலாம்!
அலுத்திடுமாம் அதனால் குருவிகள்!

சிங்காரச் சென்னையிலே, சுகாதாரம்
எங்கே என்று கேட்பது போலச் சூழல்!

உயர்ந்த கோபுரங்கள்! அதனால் இடம்
பெயர்ந்தன சிட்டுக் குருவிகள் இன்று!

நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமது
ஏற்றமான முயற்சியால், குருவிபோல

வடிவம் அமைத்து மக்களை அசத்தினர்!
வடிவம் அமைத்தவருக்கு நம் பாராட்டு!

:clap2:

 

நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமது


ஏற்றமான முயற்சியால், குருவிபோல


வடிவம் அமைத்து மக்களை அசத்தினர்!

IMG_3930.JPG


This is a click of the photo which appeared in T O I news paper!! :photo:
 
எங்கள் புறநகர்ப் பகுதியில் இந்திய ராபின்
என்று பெயர்பெற்ற குண்டுக் குருவிகள்
ஆரவாரத் திரள்களாய் ஆங்காங்கே அமர்ந்து
ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டும்
ஒன்றை யொன்று துரத்திக் கொண்டும்
பூச்சட்டி நீரில் குளித்துக் கொண்டும்
காலையில் காக்கைக்கு வைத்த உணவைக்
காக்கையைத் துரத்திவிட்டுப் பகிர்ந்து கொண்டும்
விடுமுறையில் குழந்தைகள் போல் தினமும்
அட்டகாசம் செய்வதோர் இனிய அனுபவம்.
 
Last edited:
எங்கள் புறநகர்ப் பகுதியில் இந்திய ராபின்
என்று பெயர்பெற்ற குண்டுக் குருவிகள்
........
அட்டகாசம் செய்வதோர் இனிய அனுபவம்.
தங்கள் பகுதிக்கு வரத் தூண்டும்,
தங்கள் இந்திய ராபின் கவிதை!

தந்தை ராபின் உணவை ஊட்டும்
விந்தை காண்பீர் இ
ந்தப் படத்தில்!

800px-Indian_Robin_%28Saxicoloides_fulicata%29-_Male_with_feed_for_Immature_W_IMG_8064.jpg


Picture courtesy: Wikipedia :)
 

வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று காட்டுகிறது மேலேயுள்ள ராபினின் படம். :kev:
 

வான் மழையே, வருக!


இந்த ஆண்டு கோடையில் மழை பொய்க்க,
வந்தது இப்பொழுது கன மழை குளிர்விக்க!

இரண்டு நாட்கள் முன்பு, இரவு நேரத்திலே,
திரண்டு எழுந்தன மேகங்கள் வானத்திலே!

ஒரு கோடியில் துவங்கி, உருண்டு சென்று,
மறு கோடியில் நின்றன, முழங்கிக்கொண்டு!

துயில் கலைந்து போனால் என்ன? மக்கள்
உயிர் காக்கும் குளிர் மழை வருமல்லவா?

சிங்காரச் சென்னைத் தெருக்கள், மீண்டும்
அங்கங்கே நிலவுப் பாதைபோல் மாறினும்,

'நீரின்றி அமையாது உலகு' என்பது நிஜமே;
நீரின் வரவை நினைத்து மகிழ்வது மனமே!

வாகனங்கள் எழுப்பிடும் தூசியால், மங்கிய
வானுயர மரங்களும் பசுமையாய் மாறிடும்!

வெப்பத்தால் வெந்து வாடிய உடல்களும்,
வெப்பக் குறைவால் வியர்க்க மறந்திடும்!

பட்டுடைகளை அணிந்து மகிழும் மகளிர்,
கொட்டும் மழையால் சஞ்சலம் அடைவர்!

உயிர் காக்கும் மழையல்லவா நம் தேவை?
உடல் அலங்கரிக்கும் உடைகள் அல்லவே!!

:rain: . . . :dance:
 

இறைவனைக் கேட்டேன்!

------ சுவாமி விவேகானந்தர்


இறைவனைக் கேட்டேன் சக்தி அளித்திட;
இடர் சில அளித்தான் நான் எதிர்கொள்ள!

சிறந்த புத்தியும், யுக்தியும் வேண்டினேன்;

உயர்ந்த புதிர்களைத் தந்தான் விடுவிக்க!

என்றுமே ஆனந்தம் தேவையெனக் கேட்க,

அன்றே காண்பித்தான் சோகமான பலரை!

வற்றாத செல்வம் தந்தருள வேண்டினேன்;

சற்றும் அயராது உழைத்திடச் சொன்னான்!

தினமும் எனக்கு உதவிகள் வேண்டினேன்;

தினம் கடின உழைப்புக்கு வழி காட்டினான்!

மனத்தில் எப்பொழுதும் நிம்மதி கேட்டேன்;

கணத்தில் பிறருக்கு உதவிடச் சொன்னான்!

நான் வேண்டிய எதுவும்
அளிக்காது, அவன்,
என் தேவைகளுக்கு நல்வழி காண்பித்தான்!


:angel: . . . :pray2:

 
Ref: post # 1560

Swami Vivekananda says:

When I Asked God for Strength
He Gave Me Difficult Situations to Face

When I Asked God for Brain & Brown
He Gave Me Puzzles in life to Solve

When I Asked God for Happiness
He Showed Me Some Unhappy People

When I Asked God for Wealth
He Showed Me How to Work Hard

When I Asked God for Favors
He Showed Me opportunities to Work Hard

When I Asked God for Peace
He Showed Me How to Help Others

God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed


 

என் பதிவுகள் பிடிக்கவில்லை என்றால், எனக்கே நேரடியாக PM எழுதலாம்!

நான் newbie அல்ல!! :thumb:
 
Hello RR Mam,wow ,post 1559,1560, will lead us to more of positive vibration ,thought.energy busters.its actually 100% true fact.thanks a lot for your creation.I just luv it.:happy: .
 
Post #1559...

என்றுமே ஆனந்தம் தேவையெனக் கேட்க,
அன்றே காண்பித்தான் சோகமான பலரை!

சோகமான பலரைக் கண்டால் ஆனந்தமா!? ..... ஐயோ! :scared:
 
........... சோகமான பலரைக் கண்டால் ஆனந்தமா!? ..... ஐயோ!
மதிபிற்குரிய தவத்திரு ஸ்வாமி விவேகானந்தர் அவர்களே!

தங்களது வரிகளைக்கண்டு அஞ்சு நடுங்குகின்றார் ஒருவர்.


தாங்கள் அவரது கனவிலேனும் வந்து, தைரிய வார்த்தைகள் கூறி,
அச்சத்தைப் போக்கிட வேண்டுகின்றேன்! :pray2:

 

அன்புள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


எதைப் படித்தாலும் அஞ்சும் நெஞ்சம் உள்ளவர்கள்,

தயவுசெய்து இங்கு வரும் பதிவுகளைப் படிக்க வேண்டாம்! :nono:


அடிக்கடி அச்சப்பட்டால், உடல் நலம் கெட்டுவிடுமாம்! :sick:
 

மாரியால் மாறிய குரல்கள்!


'சத்யா தோட்டம்' என்ற இடம் என்பதால்,

நித்தம் வந்து கூடும் பறவைகள் கூட்டம்.

அதிகாலை குயிலின் இனிய குரல் எழும்;
மெதுவாக எதிரொலிகளும் எழுந்து வரும்.

எங்கோ ஒரு சேவல், விடியலின் வரவை,
மங்காத கூவலால் தப்பாது அறிவிக்கும்.

காக்கைகளின் கூட்டம், வட்டமாய் வரும்;
நோக்கும் இடமெல்லாம் கூடிக் கரையும்.

பச்சை வண்ணத் தத்தைகள், மாமரத்தில்
இச்சையுடன் பழங்களை உண்ண வேண்டி,

கொஞ்சும் குரல்களில் மிழற்றி மகிழ்ந்து,
நெஞ்சம் நிறைய ஆனந்தம் அளித்திடும்!

இரவு வேட்டையை முடித்த ஆந்தைகள்,
தமது கோட்டையை அடைய அலறிடும்!

இன்று அதிகாலை இக் குரல்கள் இல்லை!
இன்று கேட்டன தவளைகளின் குரல்களே!


:music:
 
Hello RR Mam , IMPOV, each person are gifted by some talents by the almighty,if in case its of fine arts ,music ,dance, critic by their pen & mind power,expressing the worldly happening by means of kaveeedai ,kalai &kaivannam--painting ,so on ... .I feel that it has to be , encourage in right time & manner ,so it can reach to its heights. this is my humble thought.:love::humble:
 

தேவை ஒரு மூளை!


மாற்று இதயம் பொருத்துவது போன்று,

மாற்று மூளை சிகிச்சை வந்தது இன்று!

தன் மூளையில் கட்டி வந்ததால் தவித்து,
தனக்கு மாற்று மூளை வேண்டும் என்று

கேட்டு வந்தார் ஒரு செல்வந்தர்! அதைக்
கேட்ட மருத்துவர், தன்னிடம் மூளைகள்

இரண்டு இருப்பதாகக் கூறி, முதலாவது
சிறந்த விஞ்ஞானியினுடையது என்றும்,

இன்னொன்று பேருந்து ஓட்டுனருடையது
என்றும் சொல்லி முடிக்க, செல்வந்தரும்

விலைகள் பற்றிக் கேட்க, 'முதலாவதின்
விலை ஐயாயிரம்; இரண்டாவதின் விலை

நான்கு லட்சம்', என்றும் தெரிவிக்க, கேட்டு
நன்கு வியந்த செல்வந்தர் காரணம் கேட்க,

'அதிகம் உபயோகித்த பொருளுக்கு விலை
அதிகம் இருக்காதே!', என்றார் மருத்துவர்!


:popcorn:
 

மனித மனம்!

எது நம்மிடம் இல்லையோ, மனம்
அது வேண்டும் என்றே ஏங்கிடும்!

வான் மழை பொய்த்தபோது, அந்த
வான் மழை வேண்டும் என்றிடும்!

கன மழை பொழிந்தாலோ, கொஞ்ச
கணங்களில் நிற்கவே வேண்டிடும்!

பயிர்கள் வாடின என்றும் புலம்பும்;
பயிர்கள் மூழ்கின என்றும் அலறும்!

கேட்டது கேட்டபடியே வந்தாலும்,
கேளாமலே நன்மைகள் வந்தாலும்,

அளவுக்கு மிஞ்சாமல் கிடைத்தால்,
அளவில்லா ஆனந்தம் அடையும்!

:dance:

 
மனதில் ஆசைகள் வந்து போகும், ஆனந்த நேரமும் கடந்து போகும்
எத்தனை விருப்பங்கள் எத்தனை தேவைகள், எத்தனையோ எதிர்பார்ப்புகள்
கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்,எத்தனை எண்ணங்கள் மனதில் தோன்றும்

இந்த மனதில் ஏற்படும் மாற்றங்கள், இந்த புத்தி தான் அறியாதோ!
புத்திக்கு ஏற்படும் ஞானம், இந்த மனசுக்கு தான் புரியாதோ!!
காலம் கடந்து சிந்தித்தால், எத்தனனயோ அர்த்தங்கள் வீணாய் போகும்
புறிந்தாலும் புறியாவிட்டலும், வாழ்கை என்பதோ கசப்பாய் தோன்றும்
 
Last edited:

உங்கள் அஞ்சலுக்கு மிக்க நன்றி, ரவி!
பல எண்ணங்களைத் தூண்டுகின்றன உங்கள் எண்ண அலைகள் ..... :decision:
 
உங்கள் அங்கீகாரத்துக்கு மிக்க நன்றி, ஸ்ரீமதி ராஜி ராம்
 
கடல் அலைகள் ஒய்வது இல்லை, மனிதநீன் மனசை போல
தொடர்ந்து வீசும் அலைகலீன் ஓசையோ, மனிதன் வேருபதில்லை
தனக்குள் இருக்கும் சஞ்சலத்தை, மனிதன் விரும்பதில்லை
அலைகலீன் துடிப்பை நேசிக்கிறான், கடல்கரையீன் ரசனை போல

தன் கொழபத்தை தீர்க்க துடிகிறான், ஒரு
பட்டாம் பூச்சி போல
விடை காணாமல், தெளிவை தேடி அலைகிறான், தன்னை அடியாளம் காண
ஓயாமல் வீசும், அலைகளை கண்டு மகழ்கிறான், சிறு குழந்தை போல
தன்னையை செரியாக காண சென்றவன், மைமறந்து போகிறான் ஒரு சித்தன் போல

தன்னை மறந்து மகழ்கிறான், பார்த்து ரசிக்கும் சில நேரம் வரை
வாழ்கையின் ஓட்டத்தில் திரும்பிகிறான், பல காலம் வரை
கடல் கரை பக்கம் திரும்பிகிராம், அவ்வபோது , அலைகலீன் அழகை தேடி
மனிதன்னாய் வாழும் வாழ்க்கையில், ஏங்குகிறான், பல வேதனைகளை தாங்கி

அலைகளும் ஓய்வதில்லை, நேரமும் நிற்பதில்லை,
வாழ்கையின் கோலங்களில் விதிமுறையும் இல்லை
இயற்கையின் அழகு இதுதானோ? வாழ்கையின் ரகசியம் சேரி தானோ?

வாழ்வில் சந்தோஷம் நிரந்தரம் இல்லை, துக்கம்மும் நீடிபர்தில்லை
வாழும் வரை வாழ்கையில், முற்றிலும் விஷமும் இல்லை
வாழ்கையின் வண்ணங்கள் இதுதானோ?
மனிதநீன் மனசு சுகம் தானோ?

ஆம், மனதை தாங்கி வாழ்கின்றோம், ஓயாத அலைகள் போல தொடர்கின்றோம்
மனதில் காணும் உணர்வுகளின், முழுமையான் வாழ்வை காண்கின்றோம்.
 
Last edited:

நல்லறிவுச் சுடர்!


தேவி சரஸ்வதி நல்லறிவு அருளுவாள்!
தேடி அவளின் திருவடி நாடி, நல்லறிவை

வேண்டி, அவள் புகழைப் பாடி மகிழ்வோம்!
தூண்டிடுவோம் நம் நல்லறிவுச் சுடரையும்!



:pray: . . . :angel:
 

Latest posts

Latest ads

Back
Top