Raji Ram
Active member
ஆயுத பூஜை...
வான் மழை கொட்டித் தீர்த்ததால், வெளியில்
நான் செல்லத் தயங்கினேன் எட்டு நாட்களாக!
நேற்று வானம் தெளிந்ததால், மன மகிழ்வுடன்,
நேற்று மாலை ஒரு சுற்றுச் சுற்றியும் வந்தேன்!
சிங்காரச் சென்னைத் தெருக்கள் நிலவு போல;
அங்கங்கே தேங்கிய மழை நீர்க் குட்டைகள் பல!
துள்ளுந்து ஓட்டுனர்கள் பாடு கொண்டாட்டம்; நம்
உள்ளூர் மக்கள் பாடு திண்டாட்டாம், செலவால்!
கேட்ட பணம் கை மாறினால், அந்த ஓட்டுனர்கள்,
ஓட்டுவார் கொஞ்சம் நிதானமாக! இல்லையேல்,
போகும் வேகத்தால், நம் சில எலும்புகள் முறிந்து
போகும் என்ற அச்சம் நம் மனதில் வரும் எழுந்து!
பொறி கடலை, அலங்காரப் பொருட்கள், பூக்கள்,
பெரிய பூசணிக் காய்கள், பழ வகைகள், இவைகள்
விற்பனையில் கொடி கட்டிப் பறக்க, முட்டி மோதி,
பற்பல இன மக்கள் மும்மரமாக அவற்றை வாங்க,
வண்டிகள் சுத்தமாய் மின்ன, அவற்றில் சந்தனம்,
வேண்டிய வடிவங்களில் தெளித்திருக்க, மாலை,
சின்ன வாழை மரங்கள், தோரணங்களோடு இருக்க,
சிதறிய பல திருஷ்டிப் பூசணிக்காய்களும் கிடக்க,
எலுமிச்சம் பழங்களை வண்டிச் சக்கரங்கள் நசுக்க,
பல விதக் காட்சிகள் இருந்தன கண்களை நிறைக்க!
வண்ண வண்ண உடைகளில் மக்கள் குழுமியிருக்க,
எண்ண எண்ண இனிக்கும் ஆயுத பூஜை நினைவுகள்!
:thumb: