• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


Dear Kunjuppu Sir,

It is true that cinema is spoiling the society like a slow poison. As you say, TV could be switched off easily but how to control the

movie watching masses? Violence has increased and so are the dances with scanty attire and molesting scenes. Short cuts like

molesting a girl / woman to get her married and throwing acid bottles on her face, if she refuses to marry and so on are shown in

detail in many movies. Invariably, a rich girl who fights with a thug kind of uneducated guy in the first reel will dance for a duet

song in the fourth reel and love him! I find that young boys tease girls a lot in the city buses. This trend is really alarming!



 

இறைவனிடமுமா?


'பிறர் சொத்தைக் கண்டு பொறாமை கூடாது;

பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது', என்பதை

இளம் வயது உள்ள பள்ளிப் பிள்ளைகளுடைய
மனம் பதியக் கற்றுத் தருவது ஒரு வழக்கமே!

சின்னஞ் சிறு அக்ரஹாரக் கோவில் நிலத்தில்,
என்னமாகச் சொத்தை அபகரித்துள்ளார் சிலர்!

ஒரு விளம்பரப் பலகையிலே, கோவிலுக்குத்
தர வேண்டிய தொகையினை எழுதி வைத்திட

உத்தரவு வந்துவிட, அதன்படி வைத்துள்ளார்
எத்தனை பணம் பாக்கி என்கின்ற விவரத்தை!

இத்தனை லட்சங்களைச் சுருட்டி விட்டு, சிலர்
எத்தனை மெத்தனமாக உள்ளார்! ஒரு வேளை,

'சிவன் சொத்து குல நாசம்' என்றுதானே நமக்கு
எவர் சொன்ன பழமொழியையோ கூறுகின்றார்!

நவனீத கிருஷ்ணன் பணத்தை எடுத்தால், அதில்
தவறேதும் இல்லை என்று எண்ணிவிட்டாரோ?

:decision: . . . :cool:
 

'சிவன் சொத்து குல நாசம்' என்றுதானே நமக்கு
எவர் சொன்ன பழமொழியையோ கூறுகின்றார்!

நவனீத கிருஷ்ணன் பணத்தை எடுத்தால், அதில்
தவறேதும் இல்லை என்று எண்ணிவிட்டாரோ?


IMG_4100.JPG
 

எப்படி மாட்டினாய்?


இரு சிங்கங்கள் விடுதலை வேண்டுமென்று, ஒரு

மிருகக்காட்சி சாலையிலிருந்து ஓடிப் போயின!

ஒரு சிங்கம் காட்டிற்குள் சென்று ஒளிய விழைய,
ஒரு சிங்கம் சிங்காரச் சென்னையுள் ஓடிவிட்டது!

காட்டில் ஒளிந்த சிங்கம் மறு நாளே பிடிபட்டுவிட,
நாட்டில் சென்ற சிங்கம் தேடலிலேயே இருந்தது!

ஒரு மாதம் கழித்து அதுவும் பிடிபட்டுவிட, அதே
மிருகக்காட்சி சாலையில் அடைந்துவிட்டது! தன்

நண்பனைக் கண்டு மகிழ்ந்தாலும், இதுவரையில்
நண்பன் எப்படி ஒளிந்திருந்தான் என்று ஐயமெழ,

அந்த விவரம் அறிய விழைந்து வினா விடுத்தது,
'எந்த இடத்தில் இந்நாள் வரை ஒளிந்தாய்' என்று!

'சிங்காரச் சென்னையில் அரசாங்க அலுவலகத்தில்,
பாங்காகச் சென்று ஒளிந்தேன்', என்று ஆரம்பித்துத்

தொடர்ந்தது தன் ஒரு மாதக் கதையை உரைத்திட!
'அடர்ந்து கிடந்த கோப்புக்களின் பின்னே ஒளிந்திட,

எவருமே அறியவில்லை நான் வந்த விஷயத்தை!
எவர் அறைக்குள்ளே வந்தாலும், அவரைப் பிடித்து,

அன்றைய பசியைத் தீர்த்தேன்; அலுவலகத்திலே
என்றுமே சரியாக வேலை செய்யாத பலர் இருக்க,

அவர்கள் மாயமான விவரம் வெளி வரவில்லை!
அவர்கள் ஒவ்வொருவருக்கும் பதிலாக, மீண்டும்

இருவர் பணியில் அமர, என் பாடு கொண்டாட்டம்!
ஒருவாறு 'செட்டில்' ஆனேன் என மகிழ்ந்த வேளை,

தவறு ஒன்று இழைத்ததால், மாட்டிக் கொண்டேன்!'
'தவறு என்ன செய்தாய் நண்பனே?' என்ற வினா வர,

'அலுவலகத்தில் டீ வழங்கும் சிறுவனை உண்டுவிட,
அலுவலகமே அல்லாடிப்போனது உடனேயே, அன்று!

எங்கு சென்றான் அவன் என்று அலசி ஆராய்ந்து, என்
தங்கும் இடத்தைக் கண்டுவிட்டனர், விதிவசத்தால்!'

:lock1:
 

செவிப்பறை என்னவாகும்?


பஜனைப் பிரியையான நண்பி என்னிடம்
பஜனைக்குச் செல்லாலாமென அழைக்க,

நாம சங்கீர்த்தனம் நல்லதே என எண்ணிய
நான், மறு பேச்சில்லாது அவளோடு போக,

அருகிலுள்ள கல்லூரி A. C ஹாலின் உள்ளே,
பெருகி வந்த பக்தர் கூட்டம் அடைந்திருக்க,

எப்போதும் போல ஒலிபெருக்கி அளவினை
தப்பாது உயர் மட்டத்தில் வைத்திருக்க, ஒரு

இறை அனுபவம் வேண்டிய எங்கள் செவிப்-
பறை அதிர, கைகள் எம்மையும் அறியாமல்

செவிகளை மூடிட, மற்ற பக்தர்களோ, தமது
கைகளைத் தட்டி மேலும் ஒலியை அதிகரிக்க,

அஞ்சினோம்! பின் ஒரு தீர்மானம் செய்தோம்!
பஞ்சினால் செவிகள் பிழைத்திடும் என்பதால்,

அடுத்து வருகிற பஜனை நிகழ்ச்சிக்கு, பஞ்சை
எடுத்து வர மறவாது இருக்க வேண்டுமென்று!


:drum: . . . :scared:
 

Dear Bala Sir,

The echo is not the only problem. Carnatic music and bhajans are supposed to take us to a higher level and nearer to God.

I wonder why the artists keep the volume so high and torture the audience. A medium level of amplification will enable the

clarity of words and we can enjoy the music better. In the bhajan program I have written about, words were not clear! :tsk:
 

One more torture is the light music program arranged during wedding reception. The sound level will be very very

high and the guests talk at the top of their voices, to beat that sound! My friend asked, 'Why is this called light music?
The correct name is heavy metal music!' :drum:

For my son's wedding reception - one at Bangalore and one at Sing. Chennai - I requested only for channel music to be

played in a mild volume. The experience was really nice! Some of our friends also do this. :)
 

புதுவிதக் கட்டு!

வாழை மரங்களை விழாக் காலங்களில் வாயில்
நுழைவினில் அலங்காரமாகக் கட்டுவது வழக்கம்!

பூவும் தாருமாய்க் காய்த்த மரத்தைத்தானே நாம்
தேர்வு செய்து எடுத்து வந்து கட்டச் சொல்வோம்!

மிக நீண்ட காம்பு நுனியில் பூ இருந்தால், அதுவே
மிகக் கீழே தொங்கி, மக்களை வருத்துமே! எனவே

வெட்டிக் கட்டிவிட்டார் நீளம் குறைந்திட, எங்கள்
கெட்டிக்காரத் தோட்டக்காரர்! இதோ காணுங்கள்!

IMG_4145.JPG
 

இரு திவ்ய தேசங்கள் - 1


நாராயணனே தஞ்சம் என்போர் அமைத்தனர்

நாராயணனுக்கான ஆலயங்கள் பலவற்றை.

அவற்றுள் மிகவும் சிறந்த திருத்தலங்களை
அவர்கள் காட்டினர் நம் திவ்ய தேசங்களாக.

நூற்றியெட்டு திவ்ய தேசங்களாக உள்ளதில்
நூற்றியாறு மட்டும் உலகில் உள்ளதென்றும்,

கடைசி இரு திவ்ய தேசங்களாக உள்ளவை,
கடைசி மூச்சு நின்ற பின் காணலாமென்றும்,

பெரியோர் கூறுவதைக் கேட்டேன்; இப்போது
அரிதான அவ்விரு திவ்ய தேசங்கள், இங்கே

சிங்காரச் சென்னை அருகிலே உள்ளதென்று,
பாங்கி என்னிடம் சொன்னதும் வியந்தேன்!

'திருப்பாற்கடல்' நூற்றியேழாவது; மற்றும்
'பரமபதம்' நூற்றியெட்டாவது என்று கூறிட,

வேலூர் செல்லும்போது கண்டு களித்தேன்,
மேலான இந்த இரு திவ்ய தேசங்களையும்!

கோவிலை வலம் வந்த பின் உள்ளே போக
கோவிலில் அறிவிப்பு, திருப்பாற்கடலிலே!

அழகிய, அமைதியான ஆலயம்தான் அது;
அழகிய பெரிய திருக்குளம் வாயில் அருகே.

சிவ லிங்கம் அமையும் ஆவுடையார் பீடம்;
சிறு புன்னகையுடன் பெருமாள் அதன் மீது!

அரியும் அரனும் ஒன்றுதான் என உரைக்கும்
அரிய திருக்கோலமாக அது திகழ்கின்றது!

தொடரும் ......................
 

ஆலயத்தின் உள்ளே காமராவுக்கு அனுமதி கிடையாது!

ஆலயத்தில் குடி கொண்ட இறையின் வடிவை,

ஆலய வரலாறு கூறும் புத்தகத்தில் சிறைப் பிடித்தேன்! :photo:

 


இரு திவ்ய தேசங்கள் - 2


ஆலயத்தை வலம் வந்து, அரிய திருவுருவை
ஆவலுடன் தரிசித்த பின்பு, வெளியேறியதும்,


இன்னொரு திருக்கோவில் அருகில் பார்த்தும்,
இன்னொரு திருக்கோலம் தரிசிக்க முடியாமல்

திரும்பினோம்; அதன் கதவுகள் மூடியிருக்க,
திருப்பணிகள் செய்து பல காலம் ஆயிருக்க,

அனந்தன் மீது பள்ளி கொண்ட திருக்கோலம்
அங்கு இருப்பதைக் காணாது திரும்பினோம்!

வலைத்தளத்திலே திருவுருவம் கிடைத்தது!
தலை சிறந்த அத்தி மர சுயம்பு உருவம் அது!

அடுத்த தரிசனம் பரமபத நாதர்! வழி முழுதும்
அடுத்தடுத்து உள்ளன வாழைத் தோட்டங்கள்!

ஒரு ஏரிக் கரை ஓரமாகவே அமைந்த பாதை;
ஒருவரும் எதிர்ப்படாத அமைதி; பின் வந்தது

சிறு கிராமம்; தாவணி அணிந்த பல சிறுமிகள்;
ஒரு மாடு ஓட்டிச் செல்லும் சிறுமி வழிகாட்ட,

பரமபதம் சென்று வழிபட்டோம். அங்கே ஒரு
சிறந்த சிலை அமைப்பை அர்ச்சகர் காட்டிட,

இது எப்படி சாத்தியமென வியந்தோம்! ஆம்!
பொதுவாக இறைவியருக்கு மூக்குத்தியை

ஒட்டித்தான் வைத்து அலங்கரிப்பர்; இங்கோ
ஒய்யாரமாக அமைந்துள்ளன சிறு துளைகள்!

மூக்குத்தி, நத்
து, புல்லாக்கு இவை தேவியர்
மூக்கில் அழகாகச் சொருகிவிட முடிகின்றது!

தொடரும் ...................

 

அனந்தன் மீது பள்ளி கொண்ட திருக்கோலம்
அங்கு இருப்பதைக் காணாது திரும்பினோம்!

IMG_4251.JPG
 

ஆலய வரலாறுப் புத்தகத்தில் மூக்குத்தி, நத்து, புல்லாக்கு அலங்காரம் இல்லை!!
 

இரு திவ்ய தேசங்கள் - 3


திருத்தலப் புராணப் புத்தகத்தில் வெளியிட்ட

திருவுருவங்களில் அணிகலன்களே இல்லை!

ஆலயத்தில் தேவை மராமத்துப் பணிகள் பல!
ஆலயத்தின் திருக்குளம் பாழடைந்து, மரத்தின்

இலைகள் பல காலம் கொட்டி, குப்பை கூளமான
நிலையில் உள்ளது; தேவை உழவாரப் பணியே!

அரை நூறுக்கு ஆனந்தித்தார் அர்ச்சகர்; வாழ்வில்
குறைகள் பல அவருக்கு என்பதையே காட்டியது!

தல புராணம் பல சொன்ன அவர், ஜடாயு மோட்சத்
தலம் அருகிலே இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

சிங்காரச் சென்னைக்கு அருகிலே ஜடாயு தகனம்
பாங்காக நடந்தது, இதுவரை அறிந்திராத் தகவல்!

கோதண்டபாணி, சீதா, லக்ஷ்மண, ஆஞ்சனேயரும்
கோலோச்சுகின்ற சன்னதி ஒன்று அமைந்துள்ளது!

வைகுண்ட ஏகாதசி நாள் மட்டும் மக்கள் கூட்டம்
வைகுண்ட வாசல் திறப்புக்கு வந்து கூடிவிடுவார்!

மற்ற நாட்களில் நடமாட்டம் இல்லை; ஜாதகத்தில்
உற்ற தோஷ பரிகாரத் தலம் என்று அறிவித்தால்

அலை மோதுவார் மக்கள் என்பதில் ஐயம் இல்லை!
அலை பாயும் மனத்திற்கு, பரிகாரம்தானே ஆறுதல்!

உலகில் காண முடியாத திவ்ய தேசங்களாக, மேல்-
உலகில் இருப்பதாக நினைத்த இரு தலங்களையும்

தரிசித்த ஆனந்தத்துடன் பயணித்தோம், வேலூரில்
தரிசனம் செய்ய வேண்டிய ஆலயங்களை நோக்கி!


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:
 

அன்ன தானம்!


'தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை
அழித்திடுவோம்', எனப் பாடிச் சென்றார் பாரதியார்!

இனி இதனை நிஜமாக்குவோம் என்று அரசுக்கு ஒரு
இனிய எண்ணம் வந்திட, தோன்றியது ஒரு சேவை!

பெரிய கோவில்களில் எல்லாம் செய்திட விழையும்
அரிய சேவையான அன்ன தானம்தான் அது! ஆனால்

உடல் நலம் குன்றி, வேலை செய்ய இயலாது போன-
வுடன், ஏழைகள் வந்து பெற வேண்டிய இலவசத்தை,

சோம்பேறி வாழ்க்கை வாழ நினைக்கும் சில நபர்கள்,
தாம் தினம் வந்து உணவைப் பெற்றுச் செல்லுவதால்,

பணம் திரட்டிச் செய்யும் நற்பணி ஒன்று, சோம்பேறி
இனம் வளர வழி காட்டுவதாக மாறிவிட்டது இன்று!

அன்ன தானம் பெறுவோரைத் தேர்வு செய்த பின்னர்
அன்னம் அளித்தால் மட்டுமே இதைத தடுக்க இயலும்!

:sleep: . . . :hungry: . . . :becky:

 
மத்திர தேசம் என்ற நாட்டை ஆண்டு வந்த அசுவபதி என்ற ராஜாவிற்கு குழந்தை இல்லை
என்ற கவலை. ஒரு நாள் நாரதர் அங்கு வந்த போது, அவரிடம் தன் குறையை சொல்ல,
நாரதர் சாவித்திரி தேவியை நினைத்து பூஜை, ஹோமங்கள் செய்தால் வழி பிறக்கும்
என்று சொல்லி மறைந்தார். ராஜாவும் அவர் சொன்னபடியே செய்தார். அந்த
ஹோமம் செய்த அக்னி குண்டத்திலிருந்து, ஜெகத்ஜோதியாய் தேவியவள் வந்தாள்.
பிரம்மதேவன் அனுப்பியதால் இங்கு வந்தேன். இப்போது உனக்கு மகன் இல்லை.
இனிமேல் உண்டாகும். c செய்த தவத்திற்கு பலனாக நானே கன்னிகையாய் வந்து
அவதரிப்பேன் என்று சாவித்திரி தேவி சொல்லி மறைந்தாள்.

சிறிது நாட்களுக்கப் பிறகு தேவி அவள் சொன்னபடியே அரசனின் பட்ட மகிஷியான
மாளவியின் வயிற்றில் சாவித்திரி தேவி பிறந்தாள். அவள் வளர்ந்து பருவ மங்கையானதும்
அவளுக்கு திருமணம் செய்ய நினைத்தார்கள். அவளுடைய அழகிற்கு ஈடாக எந்த அரச
குமாரனும் இல்லை, என்பதால் அசுவபதி ராஜா, தன் மகளிடம்''நீயே உன்
தோழிமாரோடு சென்று உனக்கேற்றவனைக் தேர்ந்தெடுத்து வா''என்று சொல்லி அனுப்பினார்.

சாவித்திரி தேவியும் தேசமெங்கும் ஆராய்ந்தும் கிடைக்காமல் இருந்தபோது,
நாட்டை இழந்து காட்டில் வசிக்கும் சாலுவ தேசத்து அதிபதியின் மகனை (சத்தியவான்)
வனத்தில் கண்டாள். தன் தந்தையிடம் வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்போது
அங்கு வந்த நாரதர் அதைக் கேட்டுக் கலங்கினார். காரணம் என்ன என்று ராஜா
கேட்டதற்கு நாரதர் சொன்னார். '' அந்த சத்தியவான் ஒரு வருடத்தில் மரணம் அடைந்து
விடுவான்
'' என்று. ராஜா தன் மகளிடம் '' c வேறு ஒருவரை வரித்து '' வா என்று
சொன்னார். ஆனால் சாவித்திரியோ மனதில் ஒருவரை வரித்த பின்பு-வேறு ஒருவரைத்
தேடுவது பதிவிரதம் கெட்டுவிடும். அவரையே தான் நான் மணப்பேன் என்று உறுதியாகக்
கூறிவிட்டாள்.

நாரதர் அரசனிடம், சாவித்திரி அவள் மன திடத்தாலே எமனையும் வெற்றி பெறுவாள்
என்று சொல்ல, அரசரும் அவள் விருப்பப் படியே காட்டிற்கு சென்று சத்தியவானிடம் கன்னிகா
தானம் செய்து விட்டு வந்தார். காட்டில் சாவித்திரி பதிவிரதா தர்மத்திற்கு ஒரு குறையும்
இல்லாமல் கணவனோடு கானகத்தில் வாழ்ந்து வந்தாள். கணவனுடைய மரண தேதியை
அறிந்து இருந்ததால், கடுந்தவம் செய்தாள், கௌரி நோன்பு இருந்தாள். காமாக்ஷி தேவியை
நோக்கி கடுந்தவம் இருந்தாள்.அந்த பங்குனி முதல் நாள் வந்தது. கடும் நோன்பு இருந்து
உணவு இல்லாமல் இருந்தாள். காட்டில் விறகு கொண்டு வர கணவனுடன் சென்றாள்.
விறகு பிளக்கும் போது கணவன் உயிர் துறந்தான். சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்க
சபதம் கொண்டாள். கணவனுக்கு ஈமைக்கிரியைகள் செய்ய உறவினர்கள் வந்தபோது
செய்ய அவள் அனுமதிக்கவில்லை. சாவித்திரி தனது கணவனின் உடலுடன் காட்டில் தனியாக
அவன் உயிரை மீட்க காமாட்சி தேவியை நோக்கி பூஜித்தாள். பூஜையை தொடர்ந்து
நடுவே எமன் தோன்றி ''உன்னுடைய பூஜைகள் அனைத்தும் வீண். உயிர் பிரிந்தது பிரிந்ததுதான்''
என்று சொல்லியும் அவள் தன் விரதத்தை கைவிடவில்லை. காட்டில் கிடைத்த பூக்களையும்,
பழங்களையும் வைத்து பூஜித்தாள். அம்மைக்கு அமுது படைக்க விரும்பினாள். காடுகளில் ஏதும்
கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்னை அடையாகவும், கள்ளிப் பாலை வெண்ணெயாகவும்
பாவித்து பூஜை செய்தாள்.

எமதர்மன், சத்தியவான் உயிரை எடுத்துவிட்டுச் சென்று கொண்டிருந்தார். சாவித்திரி விடாமல்
பின் தொடர்ந்து சென்றாள். எமன் அவளைப் பார்த்து ''என்னை ஏன் தொடருகிறாய்?''என்று கேட்க
''என் கணவன் உயிர் வேண்டும்''என்றாள். வேறு எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன்,
என்ற எமனிடம் ''எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்''என்று வரம் கேட்க, ''தந்தேன் அம்மா
உனக்கு''என்றார். தொடர்ந்து அவரைப் பின் தொடர்ந்து உங்கள் வரம் ''பலிக்காமல் போகலாமா!
கணவனில்லாமல் எப்படி உங்கள் வரம் எனக்கு பலிதமாகும்? தரும தேவனுடைய
வாக்கு பொய்யாகலாமா?''என்றாள். எமதேவனுக்கு அப்போது தான் சாவித்திரி தேவியின் மதி
நுட்பம் புரிந்தது. சாவித்திரியின் பூஜைகளையும், மதி நுட்பத்தையும் மெச்சி உள்ளங்குளிர்ந்து,
கணவனுடைய உயிரைப் தந்ததோடு, இழந்த ராஜ்ஜியத்தையும் அளித்தார்.

இவ்வாறு காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு, சாவித்திரியம்மன் செய்த
கௌரி நோன்பு தான் காரணமாகும். அப்படி சாவித்திரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும்
செய்யும் காரடையார் நோன்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம்
சுமங்கலிகள் பூஜை செய்தால், அவர்களுடைய கணவரைப் பிரியாமல், தீர்க்க சுமங்கலிகளாக
இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம்.

காட்டில் சாவித்திரி படைத்த மண் அடையை வெல்ல அடையாகவும், கள்ளிப்பாலை
வெண்ணெயாகவும் நாம் அன்னைக்கு படைக்கிறோம். பூஜையின்போது ''உருகாத வெண்ணெயும்,
ஒரடையும் நான் உனக்கு தருவேன். கணவனை பிரியாத வரம் வேண்டும்''என்று சுமங்கலிகள்
அனைவரும் காரடையார் நோன்பு எனும் பூஜையை செய்தால் சாவித்திரி போல திடமான
மனதையும், கொண்ட கொள்கையில் உறுதியும் காமாட்சி அன்னையின் அருளையும் பெறுவார்கள்
என்பது உறுதி.

 

சிவன் அருள்!

மஹா சிவராத்திரி அன்று, தவறாமல்
மஹாதேவனைப் பணிதல் வழக்கம்!

ஜோடி சரியாகக் கிடைத்திட வழிகளை
நாடி அலையும் இளைஞிசமூகத்திற்கு,

ஒரு வாழ்த்து மடலைப் புதிய வடிவில்
திருத்தமாக வெளியிட்டதைப் பார்த்து,

சிவனே என்று சிவனிடம் சரண் அடைய,
சிவனருள் ஜோடி தருமென அறிந்தேன்!


இதோ அந்த வாழ்த்து:

shiv-ratri-1.jpg
 
Last edited:

யாரும் வேண்டாம்!

திருமண வயதில் பெண்ணோ பையனோ இருந்தால்,
ஒருமனதுடன் வரன் வேட்டையில் உறவினர் பலரும்

ஓடி வந்து உதவுவார், அந்தக் காலத்தில்! இப்போதோ,
ஓடி ஒளிகின்றார், வரன் வேட்டை என்று அறிந்தாலே!

யாருடைய தயவும் வேண்டாமே என்று ஒதுக்குவதும்,
யாருக்கும் சிபாரிசு செய்தல் தீது என்று ஒதுங்குவதும்,

வேடிக்கைக்காகக் கூறும் விஷயமே இல்லை; இன்று
வாடிக்கையாகப் பார்க்கும் விஷயமாக ஆகிவிட்டது!

நண்பியிடம் ஒரு பெண்ணைப் பெற்றவர் கூறினாராம்,
'பெண்ணும் பையனும் பேசிக்கொண்டாலே போதுமே!

பெற்றவரும், உற்றவரும் பேசுவதில் பயனில்லையே!'
பெற்றவரும் ஒதுங்கும் காலம் விரைவிலே வருமோ?


:noidea:
 

Latest ads

Back
Top