• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

If HE is with us, every thing ends in success.

420_354280814688887_1109805041_n.jpg
 
மாவேழ் சனனம் கெட மாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவா சங்கர தேசிகனே .
கந்தர் அநுபூதி
கோவே -உலகங்கன்கெல்லாம் அரசே
குரமின்கொடி தோள் புணரும் -குரவற்குலத்தில் வளர்ந்த
மின்னல்கொடி போன்ற வள்ளினாயகியின் தோள்களை
தழுவுகின்ற
தேவே- தெய்வமே
சிவசன்க்ரதேசிகனே -மங்கள மூர்த்தியும் சுகத்தைத் செய்பவருமான
சிவமூர்த்தியின் குருநாதரே
மா ஏழ்சனனம் கெட -பெரிய ஏழுவகையான பிறவிகளும் தொலயுமாறு
மாயை விடா -மாயையினின்றும் நீங்காத
மூ ஏடணை -மூன்று ஆசைகளும்
என்று முடிந்திடுமோ -எப்பொழுதுதான் அடியேனை ப் பற்றாது அகலுமோ?
விலக அருள்புரிவீராக


ஏழு வகைப் பிறவிகள் ஆவன !
1.தேவர் ---------------11லட்சம் கருவேருபாடுகள்
2மனிதர் .....................9லட்சம் கருவேருபாடுகள்
3.விலங்கு................10லட்சம் கருவேருபாடுகள்
4.பறவை ..................10லட்சம் கருவேருபாடுகள்
5ஊர்வன ..................15லட்சம் கருவேருபாடுகள்
6.நீர்வாழ்வன ..........10லட்சம் கருவேருபாடுகள்
7.தாவரம் ...................19லட்சம் கருவேருபாடுகள்
------
84 இலட்சம் யோனி பேதங்களாம்
-------
- ஏழு கடல்களைப்போல் ஏழு பிறப்புக்கள் ,இப்பிறவிப் பெருங்கடல்
கடத்தர்கரியது.


மாயைவிடா :-
மாயையின் காரியம் உடல்முதலிய கருவிகள்
மூவேடனை ;-
தனெடனை ,தாரேடனை ,புத்திரேடனை ,
தனெடனை -செல்வத்தாசை
தாரேடனை -மனைவியாசை
புத்திரேடனை -மக்களாசை

இந்த மூன்று ஆசைகளும் ஏழுவகைப்பிரப்புக்களை உணடாக்குகின்றன .
இவைகளை விட்டாலன்ரி பிரவிபெருங்கடளிளுருந்து கரையேறமுடியாது '.


ஒருவன் ஆயிரம் பவுன்களை செர்த்துவைத்திருந்தான்.அழகிய இளம்
மனைவி ,5வயது பாலகன் இவர்களுடன் இனிமையாக வாழ்ந்து வந்தான் .
மழைப்பொழிந்து வெள்ளத்தில் ஊரே மூழ்கிவிட்டது.அவன் பவுன்மூட்டை
மகன் மனைவிஇவர்களை சுமந்துக்கொண்டு வெள்ளத்தில் நீந்த்லானான்


மேலும் வெள்ளம் அதிகரிக்கவே பவுன்மூட்டையை விட்டுவிட்டு
சிறிது பாரம் குறைவோடு நீந்தினான் .மேலும் வெள்ளம் அதிகரிக்க அவன்
மனைவியை விடுவதா அல்லது மகனை விடுவதா என்று யோசித்தான் ..
மனைவியை தன விருப்பதால் மணந்துகொள்ளலாம் .மக்கட்செல்வம்
தெய்வம் கொடுத்தாலன்றி கிடைக்கது என்று எண்ணிமனைவியைவிட்டு
விட்டு நீந்தி கரை சேர்ந்தான்.


வெள்ளம் என்பது பிறவிப் பெருங்கடல் .பொன்னாசை மாணவி மக்கலாசை
என்று ஒவ்வொன்றாக விட்டபிரகுமுக்திக்கற சேர்ந்தான்.அனுபூதிக்கு ஆசைகளே
தடையாதளால் ஆசைகளை விட்டு முருகன் அனுபூதியை பெற வேண்டும் .



சிவசங்கரனே தேசிகனே !ஏழு பிறவிக்கும் வித்தாகிய மூன்று ஆசைகளையும்
விலக்கி அருள்செய் .என்று நம்மையல்லாம் வேண்டும்படி வாரியார் சுவாமிகள்
கூறியக் கருத்தை உங்களுட பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்கிறேன் .

 

மதிப்பிற்குரிய பாலா சார்,

தங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் எழுத்துப் பிழைகள் அனேகம்!

வெள்ளம் என்பது பிறவிப் பெருங்கடல் .பொன்னாசைமாணவி மக்கலாசை
என்று ஒவ்வொன்றாக விட்டபிகுமுக்திக்க சேர்ந்தான். .
ஆனாலும் 'மனைவி', 'மாணவி' ஆகலாமா? :decision:
 

ஏன் மூன்று முறை?


துணிக் கடையை மூன்று முறை உடைத்த
துணித் திருடன், மாட்டிக்கொண்டு, பின்னர்

நீதி மன்றத்தில் நிறுத்தப்பட, அங்கு இருந்த
நீதிபதி 'ஏன் மூன்று அடுத்தடுத்த இரவுகளில்

கடையை உடைத்துத் திருடினாய்?' என்று
கடையை உடைத்த காரணத்தைக் கேட்க,

'ஒரு புடவைதான் திருடினேன், ஐயா!' எனத்
திருடன் பதிலளிக்க, வியந்த அந்த நீதிபதி,

'ஒரு புடவையைத் திருட மூன்று இரவுகளா?
இது என்ன விந்தை?' என்று மீண்டும் வினவ,

'இரு முறை வேறு புடவை மாற்றி வருமாறு
திருமதி சொன்னதால் வந்தேன்!' என்றான்!

:lock1:
 

இதுவல்லவோ சமர்த்து!


தன் மகனுக்குச் சமர்த்துப் போதாது என,
தன் நண்பரிம் புலம்புவார் தந்தை ஒருவர்!

தன் நண்பரிடம் இதை நிரூபிக்க விரும்பி,
தன் கைகளில் வைத்தார் இரு நோட்டுகள்!

வலது கையிலே இருந்தது ஐம்பது ரூபாய்;
இடது கையிலே இருந்ததோ பத்து ரூபாய்!

'ஒரு நோட்டை எடுத்துக்கொள்' என்றதும்,
மறு நொடியில் எடுத்தான் பத்து ரூபாயை!

'இவன் இத்தனை அசடா?' என்ற நண்பரும்,
அவனை ஒரு ஐஸ்கிரீம் கடையில் கண்டு,

'ஏன் ஐம்பதை விட்டுப் பத்தை எடுத்தாய்?'
என்று அதிசயித்துக் கேட்டிட, சொன்னான்,

'என்று ஐம்பது ரூபாயை எடுக்கின்றேனோ,
அன்
று முடிந்துவிடும்தானே இந்த ஆட்டம்!'

:decision:
 
கத்தி எடுத்தவனுக்கு....

புத்தியை வளர்க்காமல் கத்தியை எடுத்தவன்
கத்தியால் சாவான் என்பது உலகு சொல்வது!

கட்டப் பஞ்சாயத்து செய்து, அறிவாள் சகிதம்
எட்டுத் திசையும் வலம் வந்து நடுங்க வைத்து,

எங்கள் காலனியிலே வசித்த ஒரு 'தலைவன்',
எங்கள் கோவில் அருகிலே வெட்டப்பட்டான்!

திருப்பதி போக விழைந்து, தன் வீட்டிலிருந்து
விருப்பத்துடன் புறப்பட்டவனை வெட்டிவிட,

எதிர் வந்தது எட்டுப் பேர்கள் கொண்ட கும்பல்;
எதிர்பாராத கணம் அவன் உயிரைப் பறித்தது!

நம் தேசம் எங்கே போகிறது? கொல்ல உரிமை
நம் மக்களுக்கு யார் கொடுத்தது? நானறியேன்!

:noidea:
 

Source : கத்தி எடுத்தவனுக்கு...

'சங்கரராமன் கொலை வழக்கு, ஆரம்பகால நண்பர், ரவுடி சின்னாவை பூந்தமல்லியில் கொன்ற வழக்கு,

ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கொல்ல முயன்ற வழக்குகள் இவர் மீதுள்ள வழக்குகளில்
குறிப்பிடத்தக்கவை.'
 

நாற்றுப் பெண்!

நெல்லை விதைத்த பின், நாற்று வந்ததும்,
நெற்பயிர் நிறைவாகக் கிடைக்க வேண்டி,

வேறு நல்ல வளமான இடத்திலே மாற்றி,
வேண்டுவார் அபரிமித விளைச்சலையும்!

ஒரு பருவம் வரை மகளை வளர்த்த பின்,
ஒரு நல்ல மணாளனைத் தேர்வும் செய்து,

அவனுக்கு மணம் முடித்து, அதற்குப் பின்,
அவனுடன் அனுப்புவர், அந்தக் காலத்தில்!

மகனின் மனைவியை 'நாட்டுப் பெண்' என
அகம் மகிழ்ந்து பெற்றோர் குறிப்பிடுவார்!

நாற்றைப் போன்று இடம் மாறிவிடுவதால்,
'நாற்றுப் பெண்' என்று குறித்த பெயர்தான்,

'நாட்டுப் பெண்' என மாறிவிட்டது என்பதே,
கேட்டு வந்த செய்தியாகும்! அது போலவே,

'ராமன் இருக்குமிடம் அயோத்தி' எனக் கூறி,
ராமன் போல வரும் மணமகனுடன் செல்வர்.

அங்கை நிறைய வருமானம் பெறுவதினால்,
மங்கையர் நாற்றாக மாட்டர், இக்காலட்தில்!

'ராமன் இருக்கும் இடம் அயோத்தி', என்பதை,
'ராமன் இருக்கும் இடம் மிதிலை!' என்கிறார்!


:couch2: . . . :peace:
 

நாற்றுப் பெண்!

நெல்லை விதைத்த பின், நாற்று வந்ததும்,
நெற்பயிர் நிறைவாகக் கிடைக்க வேண்டி,

வேறு நல்ல வளமான இடத்திலே மாற்றி,
வேண்டுவார் அபரிமித விளைச்சலையும்!

ஒரு பருவம் வரை மகளை வளர்த்த பின்,
ஒரு நல்ல மணாளனைத் தேர்வும் செய்து,

அவனுக்கு மணம் முடித்து, அதற்குப் பின்,
அவனுடன் அனுப்புவர், அந்தக் காலத்தில்!

மகனின் மனைவியை 'நாட்டுப் பெண்' என
அகம் மகிழ்ந்து பெற்றோர் குறிப்பிடுவார்!

நாற்றைப் போன்று இடம் மாறிவிடுவதால்,
'நாற்றுப் பெண்' என்று குறித்த பெயர்தான்,

'நாட்டுப் பெண்' என மாறிவிட்டது என்பதே,
கேட்டு வந்த செய்தியாகும்! அது போலவே,

'ராமன் இருக்குமிடம் அயோத்தி' எனக் கூறி,
ராமன் போல வரும் மணமகனுடன் செல்வர்.

அங்கை நிறைய வருமானம் பெறுவதினால்,
மங்கையர் நாற்றாக மாட்டர், இக்காலட்தில்!

'ராமன் இருக்கும் இடம் அயோத்தி', என்பதை,
'ராமன் இருக்கும் இடம் மிதிலை!' என்கிறார்!


:couch2: . . . :peace:

..
and then there is my family

of my grand parents, who had 5 cows 1 bull and 3 heifers

who prided themselves in providing fresh 'karandha paal karandha padi' milk

to the husband lord, daughters and grand children

and who needed a free maid to look after the cows

wash them every morning and evening,

put bottus on their nethi,

rush to catch the moothram for the mottapatti to proshnam in her hand at regular intervals,

gather the chaanams

mix it with dry hay and leave it to dry in the hot sun

and make varatti which was sold at 5 paise per shot to the local slum dwellers

or even the funeral ghat

and feed on hay or fresh grass got from the nearby fields

or coconut or eLLU punnakku mixed with water

and overall incharge of the MAADUS

and so in our family we called this young unsuspecting innocent bride

MAATTU PONN :)
 

Dear Kunjuppu Sir,

I am reminded of my experience in Ram's village, soon after entering their sweet village home as the

fresh 'mAttup poNNu', when I was asked to collect 'gOmiyam' - the word which I did not understand -

by my loving mother in law, for the sake of our neighbour mAmi! :D
 

Dear Kunjuppu Sir,

I am reminded of my experience in Ram's village, soon after entering their sweet village home as the

fresh 'mAttup poNNu', when I was asked to collect 'gOmiyam' - the word which I did not understand -

by my loving mother in law, for the sake of our neighbour mAmi! :D

there was a bhagyaraj movie with a funny scene - where he masquerades as a brahmin and is asked by the priest to collect the same.

i really dont know what to make of such traditions..
 
I may not have to explain the significance and importance of Panchagavya,
which is used in all our traditional rituals. Now it is used in ayurvedic medicines
which they name it as Cowpathy and many medicines are produced based on that.
It is also used in fertilizers and pesticides for routine agricultural activities. Since
I am from Tanjore District, and moved and lived with such people, I used to noice
the necessity every day. You have taken up a good topic.

Balasubramanian
 
there was a bhagyaraj movie with a funny scene - where he masquerades as a brahmin and is asked by the priest to collect the same.

i really dont know what to make of such traditions..
P J Sir posted the scene in another thread and I too have seen it!

Probably some scientist from the U S of A will research and find out the medicinal value of 'gOmiyam',

get a nice brand name and sell the 'formula' in bottles! :D
 

Dear Bala Sir,

'Panchagavyam' might be good for health. But when the sAsthigaL come to supply it in any pooja,

I will be the first one to :bolt:just like a school kid who hides seeing the 'oosi mAmA'!
 

Google search gives lot of details about panchagavyam!

Now its use as medicine! We need not wait for a scientist from the U S of A! :lol:

Panchagavya_ghritam.jpg


Text : Ashtangahridayam

Develops the brain. This is good in epilepsy, insanity, jaundice and chronic fever.

Demoniacs and dullness will not trouble children if this is given regularly.

Dosage :

15 to 25 ml; For a 3 years old : up to 5 ml. To be taken on empty stomach.

Composition:

Ghritam 10.549ml; Gomay asvarasam 10.549ml; Gomutram 10.549ml;

Gadhi 10.549ml; Ksiram 10.549ml


P.S: Even evil spirits will not trouble children who take this! WOW!!

 

I got this info. from one of the closed threads! Posted by Gopalan Sir!

"PREPARATION OF PANCHAGAVYAM; DETAILS; place 6 empty cups.In the centre cup pour 35 grams of cow's

urine; In the eastern side cup put cow's dung half of your thumb; pour 245 grams of cow's milk in the south

side cup; Pour cow's curd 105 gram in the west side cup; pour 35 grams of cow's ghee in the north side cup;

pour water 35 grams in the north east side cup;

With help of 2 dharbai touch the centre cup saying GAYATHRI MANTHRAM. Saying gandad dwaaraam

duradarsham......vaya sriyam .touch eastern side cup,cow's dung. saying aapyaaya swasame duthae

........sangathey. touch the south side milk cup; saying dadhikraavinno akarusham.......dhaarishat touch the

cow's curd in the west side cup. Saying sukramasi jyothirasi theyjosi touch the northern side ghee cup; Saying

devasyathva savithuhu....maaththey touch the pure water cup in the north east direction cup.

These milk.curd,ghee, urine, dung must be collected from the same one cow.

Saying the same manthras in the same order pour the other cups contents in the centre cup.."

Source:
Upanayanam. Kaarya kramam for yajur vedha iyers aapasthamba soothram.
 

The instruction is - 'These milk, curd, ghee, urine, dung must be collected from the same one cow'.

But in our village milk, curd and ghee are given from the stock we have in the house!! :)
 

எளிய
கூறைப் புடவை!

மணமகள் பட்டாடை உடுத்திக்கொண்ட பிறகுதான்
மணமகன் மாங்கலயம் கட்டிட, துணைவியாவாள்!

கூறைப் புடவை என அழைக்கப்படும் புடவைக்காக
கூறுவர் ஆயிரங்களில் செலவு ஆகிவிடுமே என்று!

ஒரு நாள் கூத்துக்கு என்றிருப்பினும், மிக அழகியாக
ஒரு நாளேனும் இருக்க விழையும் அந்த மணமகள்,

உற்றாரும் உறவினரும் கண்டு மகிழ, பெரும் பணம்
பெற்றோர் செலவு செய்திடவைப்பது வழக்கம்தான்!

சென்ற மாதம் ஒரு கோவிலில் கண்டேன் ஒரு காட்சி!
செல்ல மகளுக்குப் பல நகைகளை அணிவித்துவிட்டு,

கட்டம் போட்ட வாயில் புடவை உடுத்தி, கோவிலை
வட்டம் சுற்றி வந்த பின் திருமணம் முடித்தனர்! ஏன்?

திருஷ்டி எல்லோருக்கும் ஒரே போல இருக்காது; சில
திருஷ்டி பட்டால் துயரம் வந்து சேருமெனக் கூறுவர்!

எளிய புடவையைக் கட்டிவிட்டு, மணம் முடிந்தவுடன்,
எளியோர் யாருக்காவது புடவையைத் தானம் செய்து,

கண்படாது மணமகளைக் காப்பது சிலரின் வழக்கமாம்!
கண்ணான மகளின் மகிழ்ச்சிதானே முதன்மையாகும்!

இதே வழக்கத்தை எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்தால்,
அதோ கதி ஆகிவிடும் பட்டுக் கூறைப் புடவை உற்பத்தி!

:humble:
 
May be or may not be suitable here, but I wanted to share with you all. Hope you won't mistake it.



[h=2]கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க - ஓர் உளவியல் பார்வை![/h]





மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.


குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவு, செலவை வரையறுப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?


தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

உங்கள் பங்கு என்ன?


உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

எதற்கும் யார் பொறுப்பு?


நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3.இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6.எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7.ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!



 
nannilam,

i would like toadd somethings here

husband wife - should praise and promote each other's inlaws. nothing gives greater happiness to the husband than hearing the wife praise his mother (or father) or siblings. and equally important vice versa

husband wife - should avoid denigrating the in laws at all times;

in laws - do not interfere (i repeat 100 times) even for the smallest or the biggest reason. keep your mouth shut. let the couple solve it.

in laws - do not complain to the daughter or son - about the dil or sil. this is a sure way to crack up a marriage.

in laws - do not give adivce how to bring up the grand children; enjoy these part time and leave full time caretaking and character building to the parents,.
 

ஓஹோ! அப்படியா?

ஒரு மிருகக்காட்சி சாலையில், இறந்தது
இருந்த ஒரே கொரில்லாக் குரங்கு ஒன்று!

கூட்டம் குறையுமோ என்ற அச்சத்தினால்,
கூறினார் ஒரு யோசனையை ஓர் அதிகாரி!

மனிதன் ஒருவனை அழைத்து, வேடமிட்டு,
இனிதே உலவவிடலாம் கொரில்லாவாக!

பட்டினியால் வாடிய படிக்காத ஒரு ஏழை,
சட்டென ஒத்துக்கொண்டான் வேடம் இட!

நாட்கள் நகர்ந்தன; இவனும் அங்கு வரும்
ஆட்கள் மகிழப் பல சாகசங்கள் செய்தான்!

ஒரு நாள் மிக உயரமாகக் குதிக்க முயல,
ஒரு நொடியில் சென்று விழுந்துவிட்டான்,

அடுத்து இருந்த சிங்கத்தின் கூண்டினுள்ளே!
எழுந்து சிங்கம் தன்னருகே வந்துவிட, மிக

நடுங்கிப் போனவன். 'உதவி! உதவி!' என்று
நடுங்கும் குரலை எழுப்ப முயல, சிங்கமோ

மெதுவாய் அவன் தோளிலே கை வைத்து,
மெதுவாய்க் அவன் காதிலே கிசுகிசுத்தது,

'பதறாதே நண்பனே! நானும் உன்போலவே
தவறாமல் வேடம் இடும் மானிடனேதான்!


:gossip: . . . :becky:
 

அந்த நாளும் வந்திடாதோ?

'விஷுக்கணி' காணும் புத்தாண்டு தினத்தை
விரும்பிக் காத்திருக்கும் சின்னஞ்சிறு வயது!

ஆதவன் எழுந்து உதித்திடும் முன்னே, எங்களை
ஆவலுடன் எழுப்புவார் தாய் தந்தை இருவரும்!

கண்ணாடிக்குத் தங்க மாலை இட்டு, அதன் முன்
வண்ண வண்ணமான நவதானியங்கள் அடுக்கி,

தங்கம், வெள்ளி, புதிய காசுகள், ரூபாய்களெனப்
பாங்காக வைத்து, காய், கனிகளோடு அழகு மிக்க

சித்திரை மாத மஞ்சள் பூவை வைத்து, அதனை
நித்திரை கலைந்ததும் முதலிலே காண் வைத்து,

புத்தாண்டு முழுவதுமே நிறைவுடன் இருந்திடப்
புத்தம் புதிய காசுகளைக் கையிலே கொடுப்பார்!

எத்தனை ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் கூட,
சித்திரைப் பிறப்பின் இளவயது நினைவுகளை

எண்ணாமல் இருக்க முடியாதே! மனம் இன்று
எண்ணுது 'அந்த நாளும் வந்திடாதோ?' என்று!

:decision:

 

Latest ads

Back
Top