• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


நண்பிகள்,
நண்பர்கள் அனைவருக்கும்


Tamil+new+year1.jpg
 

நாராயணா எனும் திவ்ய நாமம்!

சந்தேகம் வர வைத்துச் கலகம் செய்யும் நாரதரே
சந்தேகம் வந்து குழம்பிப் போகக் காரணம் என்ன?

'நாராயணன்' என்றால் என்ன பொருள் என்ற ஐயம்!
'நாராம் என்றால் தண்ணீர்; அயனன் என்றால் சயனம்;

கடல் நீரிலே சயனித்திருப்பவன் நாராயணன்', என்று
கட கடவென விளக்கம் ஒரு முனிவர் சொல்ல, அதில்

திருப்தி அடையாத நாரதர், நாராயணனையே வினவ,
'திருப்தியான பதிலை நர்மதைக் கரையில் உள்ள ஒரு

வண்டு சொல்லும்' என்றிட, நாரதர் கேட்டவுடனேயே
வண்டு சுருண்டு மாண்டு போய்விட, மிரண்ட நாரதர்

ஓடி வந்து கூற, நாராயணன் ஒரு கிளியைக் காட்டிட,
ஓடிச் சென்று கிளியைக் கேட்டதும், அதுவும் இறக்க,

கன்று ஒன்றை அடுத்ததாகக் காட்ட, மருண்ட நாரதர்,
கன்றைக் கொன்ற பாவம் வேண்டாமெனப் பயந்தும்,

நாராயணன் தந்த தைரியத்தால் அதனிடமும் வினவ,
நாராயணன் நாமம் கேட்ட அதுவும் மாண்டு போனது!

இனிமேல் பூச்சி, பறவை, விலங்குகளைக் கேட்காமல்,
மனிதனான காசி இளவரசனை வினவுமாறு பணிக்க,

அரச தண்டனை வருமோ என்ற அச்சத்துடன், அவரும்,
அரச குமாரனை வினவ, பணிவுடன் பதில் உரைத்தான்!

'நாராயணன் பெயரைக் கேட்டவுடன், வண்டாக இருந்த
நான் கிளியாகப் பிறந்து, பின் கன்றாகப் பிறந்து, பின்

மனிதனாக உயர்ந்துவிட்டேன்! அதிலும் ஒரு சாதாரண
மனிதனாக அல்லாது, செல்வச் செழிப்பில் உதித்தேன்!

தொடர்ந்து அதே திவ்ய நாமத்தைச் சொல்லி, முடிவில்
உயர்ந்த வைகுண்டப் பதவியும் அடைவேன்!' இவ்வாறு

நாராயண திவ்ய நாமத்தின் மகிமையை அறிந்த நாரதர்,
'நாராயண! நாராயண!' என்று உலாவைத் தொடர்ந்தார்!

:pray2: . . . :hail:
 

கன்னியாக முயற்சி!

கன்னிப் பெண்ணை, அவளின் சரியான வயதில்
கன்னிகா தானம் செய்வார், நல்ல மணமகனுக்கு!

காலத்தின் கோலத்தால், திருமணத்திற்கு முன்பு
காதல் செய்து, காமத்திலும் ஈடுபடுகிறார் இன்று!

காதலன் அல்லாத வேறு ஒருவனை மணந்தால்,
காதலும், காமமும் அம்பலமாகிவிடும் என்பதால்,

கன்னித் தன்மை மீட்டிடும் அறுவை சிகிச்சையை
கன்னியல்லாத மணப்பெண்கள் நாடுகின்றனராம்!

பதினைந்தாயிரம் ஒரு பெரிய தொகை அல்லவே!
அதனால் பட்டணத்துப் பெண்கள் மட்டுமன்றி, சில

பழங்குடிப் பெண்களும் சிகிச்சையை நாடும் புதிய
வழக்கத்தால், சில மருத்துவர் கூட வருந்துகிறார்!


:pout:
 

கன்னியாக முயற்சி!

கன்னிப் பெண்ணை, அவளின் சரியான வயதில்
கன்னிகா தானம் செய்வார், நல்ல மணமகனுக்கு!

காலத்தின் கோலத்தால், திருமணத்திற்கு முன்பு
காதல் செய்து, காமத்திலும் ஈடுபடுகிறார் இன்று!

காதலன் அல்லாத வேறு ஒருவனை மணந்தால்,
காதலும், காமமும் அம்பலமாகிவிடும் என்பதால்,

கன்னித் தன்மை மீட்டிடும் அறுவை சிகிச்சையை
கன்னியல்லாத மணப்பெண்கள் நாடுகின்றனராம்!

பதினைந்தாயிரம் ஒரு பெரிய தொகை அல்லவே!
அதனால் பட்டணத்துப் பெண்கள் மட்டுமன்றி, சில

பழங்குடிப் பெண்களும் சிகிச்சையை நாடும் புதிய
வழக்கத்தால், சில மருத்துவர் கூட வருந்துகிறார்!


:pout:

This is a sorry state of affair of the day. What to do!!
Some make it owing to society and environmental necessities.
If I am to comment on this, parents have to be watchful when
the girl reaches the age of 18 or so.

Balasubramanian
 

எப்போது ஆரம்பித்தது?

மாடிப் படிகளைத் தாண்டித் தாண்டி ஏறாமல்,
ஆடியாடி, கைப்பிடியைப் பிடித்தபடி ஏறுவது!

தரை மீது நொடிப் பொழுதிலே அமர்ந்திடாது,
தரையிலே கை ஊன்றியும், அமரத் தவிப்பது!

சீருந்தில் லாவகமாக இருக்கையில் அமராது,
சிரமத்தோடு வளைந்து, அதன் பின் அமர்வது!

பேருந்தைப் பிடிக்க, அதைத் துரத்தி ஓடாமல்,
பேருந்து நின்றிடும் வரை பொறுமை காப்பது!

பயணப் பெட்டியை எளிதில் தூக்க முடியாமல்,
பயணத்திற்கு Pull-man suitcase ஸை நாடுவது!

காலையில் காபி போட ஆவலுடன் செல்லாது,
காலைக் காபி கையில் வராதா என ஏங்குவது!

ஓஹோ....... எனக்கு மணிவிழா முடிந்துவிட்டது!! :clock:
 
Dear Bala Sir,

Girls mature very fast and 18 years seems to be a little high!

They also know many ways to cheat their parents efficiently!

yesterday's neeya naana show dealt with this - college girls, can they have platonic men friends. pitted against them, the parents, who close to 100% frowned upon it.

only once the issue of sons was brought up. nobody worried about the sons, even they these had many many female friends. the hypocracy was a couple of brothers, who while were free to talk to girls, would not permit their sisters the same privileges.

if the boys are brought up properly at home, would there be any need for the girls' parents to be worried? a telling question, that went unanswered.
 
Thanks for the feed back, Kunjuppu Sir. I am yet to watch the program. IPL matches are ON and the

TV is Ram's property till all the matches are over! :)

Shall watch in in youtube upload. :ranger:
 

When I sent
'
எப்போது ஆரம்பித்தது?' to my friend, this was the reply:

"Your concept and examples are so inspiring that I follow your foot steps

to include one more experience. Thanks.

என் அனுபவத்தில்.....


நடை பாதை ஓரம் நின்று, இருபுறமும் தலையைத் திருப்பி

இடை விடாது பாய்ந்து வரும் வாகனங்களுக்கு இடையில்,

இடைவெளி சிறிது, எப்போது கிடைக்குமென, ஏங்கி நிற்கையில்,


இளவட்டங்கள் பல குறுக்கே பாய்ந்து, நடுவில் நின்று,

வளைந்து நெளிந்து லாகவமாய் அக்கரை சேர்வது என்பது

சாகசம் நிறைந்த சர்க்கஸ் விளையாட்டாய் தெரியும்போது ,


நான்,


இரண்டு வயது குழந்தையாக மாறுகின்ற நிலையைத்தான்

இரண்டாவது குழந்தைப் பருவம் என்கிறார்களோ?"

 
raji,

this below is a pix of mowbrays (now TTK road) road. it was about 70 years ago i guess :)

whenever i go to chennai, invariably i have to cross TTK road, and it takes about20 minutes to perform the act. oh for those good ole day!!

mowbrays road.webp

and today's ttk road, even though it still has some of the old shade bearing trees.

ttk road.webp
 

Thanks for the nice pictures, Kunjuppu Sir!

Mowbrays road was renamed T T K Road since it goes through the Music academy.

I used to catch a bus on that road, to reach Triplicane to attend Prof S. Ramanathan's music classes.

We lived in a flat near C V Raman road for two years, soon after shifting to Sing. Chennai! :)
 

இப்படி ஒரு தியாகி!

படிப்பறிவு அதிகமாக இல்லாத ஒருவன்;
குடிக்கும் பழக்கமும் கொண்டவன் அவன்!

குடித்ததன் விளைவாக விரோதி நாட்டினில்
அடியெடுத்து வைத்துப் பிடிபட்டுவிட்டான்!

உளவாளியோ எனச் சந்தேகித்த அந்த நாடு
உள்ளே தள்ளிக் கம்பிகள் எண்ண வைத்தது!

தான் உளவாளி அல்ல எனப் புரிய வைத்தும்,
தாம் நம்புவதாக இல்லை விரோதி அரசினர்!

சக கைதிகளால் அடிபட்டு, மிதிபட்டு, பின்னர்
மிக நேர்த்தியான வைத்தியம் செய்தும், தன்

உயிரைத் துறந்தான் அந்த நாட்டிலே! இன்று
உயிர் தந்த தியாகியாக உயர்வு எய்திட்டான்!

ஒரு கோடிப் பணம், வேலை இரு மகள்களுக்கு,
தருகிறது பஞ்சாப் அரசு அரசியல் செய்திட!

நிஜமான தியாகிகள் மறக்கப்படும் நாட்டிலே,
நிஜமே இதுபோலத் தியாகிகள் உருவாவதும்!


:hail:
 

அன்னையர் வாழ்க!


மனித குலம் வாழையடி வாழையாய்த் தழைத்து,

இனிது வாழ வழி வகுப்பவர்கள் அன்னையர்தான்!

பால் ஊட்டி, சீராட்டி, கண்மணி போல் பாதுகாத்து,
பார் புகழ வைப்பவர்தான் நல்ல அன்னையராவர்!

ஜனனியாக இருந்து, மனித குலத்தைக் காப்பவரை,
ஜகத்ஜனனியான அன்னை பராசக்தி காத்திடுவாள்!

அன்னையர் தினத்தில் மட்டும் அல்லாது, நாம் நம்
அன்னையைப் போற்றுவோம், என்றுமே மறவாது!

:hail: . . . :pray:
 

இன்றுதான் புரிகிறது!

ஒரு கதவு மூடினால்,

மறு கதவு திறக்குமாம்!


அது எப்படியென்று

அன்று வியந்ததுண்டு!

பழைய சீருந்தினைப்

பாராமல் வாங்கிய

இன்றுதான் எனக்கிது

நன்றாகப் புரிகிறது!

:decision:
 

மூன்று கேள்விகள்!

வாதத் திறமை மிக்க ஒரு வக்கீலை, தனக்கு
வாதாட அழைக்கச் சென்றான் செல்வந்தன்!

'எத்தனை பணம் கேட்பீர்கள்?' என்று வினவ,
'பத்தாயிரம் மட்டுமே; மூன்றே கேள்விகள்!'

'அவ்வளவு உயர்ந்த தொகையா?' என்று கூறி
அவன் அதிர்ச்சி அடைந்திட, அவர் கேட்டார்,

'எப்போதும் வாங்கும் ஃபீஸ்தானே! அது சரி,
இப்போது உங்கள் மூன்றாம் கேள்வி என்ன?


:twitch: . . . :faint2:
 

எங்கும் எதிலும் சூது!

பல மனிதர்களின் நேரத்தை வீணடித்து,
பல நாட்களாக நடக்கும் விளையாட்டு!

நடுநிசி வரை கண் கொட்டாது பார்த்துப்
படும் பாட்டை என்னவென்று சொல்ல?

விளையாட்டிலும் சூதினைப் புகுத்தி,
விலை போய்விடுகிறார் சில வீரர்கள்!

கோடி காட்டச் சமிக்ஞைகளை வைத்து,
கோடிகளில் சம்பாதிக்க வழி செய்கிறார்!

விளையாட்டுக்காக விளையாட்டு அல்ல;
சுளையாகச் சம்பாதிக்கும் சூதாட்டம் இது!

வேஷம் போட்டு விளம்பரத்தில் வந்தவர்,
வேஷம் கலைந்த பின், முகத்தை மூடுவர்!

காசுக்காகவே நேர்மையைத் தொலைத்து,

மோசம் செய்திடும் இதிலா இந்த மோகம்?

இனியேனும் இதை விடாமல் பார்ப்பதால்

இனிய நேரம் விரயமாவதைத் தடுப்போம்!


:clock:
 

எங்கு சென்று தேடுவாய்?

தில்லு முல்லு செய்து பணம் ஈட்டியவர்
செல்லும் இடம் நரக லோகம் அல்லவா?

இந்த வகை மென்பொருள் பொறியாளர்
வந்து சேர்ந்தனர் சிலர் நரக லோகத்தில்!

தம் அறிவுத் திறத்ததால் மாற்றங்களைத்
தாம் செய்து நரகத்தை மேம்படுத்தினர்!

அவர்களின் நரகம் Hi Tech ஆக, இந்திரன்
சுவர்க்கத்தையும் மேம்படுத்
திட எண்ணி

எமனிடம் பொறியாளர்களைக் கேட்டிட,
எமனோ அதற்கு உடன்படாது மறுத்திட,

'நான் வழக்கறிஞரை அழைத்து வாதாடி,
நான் எண்ணியதை நிறைவேற்றுவேன்!'

என்று சொல்ல, எமன் சிரித்து, 'இந்திரா!
எங்கு சென்று சுவர்கத்திலே தேடுவாய்?

வேண்டும் அவர்களை நீ தேடிப் பிடிக்க,
மீண்டும் இங்கேதானே வரவேண்டும்?!

:fish2:

 

கடற்கரையில்............


மனம் மகிழ வைக்கும் கடற்கரையில்
மனம் ஏங்கும் குழந்தையாய் மாறிட!

ஓயாத அலைகள் நம்மை வருடினால்,
ஓய்ந்த மனமும் குதூகலிக்கும்; நிஜம்!

வண்ண வண்ணக் கிளிஞ்சல்களையும்,
சின்னக் குழந்தைபோல் மணலில் தேடி,

புதையல் ஒன்று கிடைத்ததாய் எண்ணி
அதையும் பையில் வைக்கத் தோன்றும்!


IMG_0436.JPG
 

Latest posts

Latest ads

Back
Top