• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....



[h=1]The Guru is a Super-Person[/h]by Swami Krishnananda



Guru Purnima, the holy, most blessed occasion of the year, is very much connected with the purnima or the fullness of the devotion of the aspiring soul to the Guru of this universe. We also call this most auspicious occasion Vyasa Purnima, dedicating our memories, our hearts, our feelings and our souls to the majestic power that has been planted on this Earth in the form of Sri Krishna Dvaipayana Vyasa, whose presence, as tradition goes, is an eternal presence.
Bhagavan Sri Vyasa is one of the Chiranjivis, eternal existences that will continue to be with us as long as the world lasts. But the potency of this presence is far above the level of human understanding. Human nature is never full; it is not purna, and Bhagavan Vyasa represents the purnatva of spiritual potency, spiritual power, and spiritual magnificence. We are accustomed to material magnificence, the magnificence of gadgets, the magnificence of physical comfort, the magnificence of everything that pleases the eyes and the ears and the sensations. But these are deceptive presentations that tell us what is not there, and hide what is really there. This is the reason why people in the world who are able to think and perceive only in terms of sensations cannot even imagine the presence of such mighty existences like Bhagavan Vyasa.
Closely associated with this mighty power is the presence of Nara-Narayana in this world. These are the supreme potentates here physically in our own vicinity, we may say, if we go by the word of the scripture that in the most sanctified shrine of holy Badrinath we find the eternal radiances invisibly performing their austerity – Narayana and Nara, and also Bhagavan Sri Vyasa.
Guru Purnima, as I mentioned, is the fullness of our approach to the Guru. The great Guru is our goal. Anything that is transcendent to us, that which propels us, that which is our ideal, that which keeps us restless because of its presence, that which fulfils us, makes us complete, can be regarded as our Guru.
In the hierarchy of the Masters narrated in the verses Narayanam Padmabhavam Vasishtam, etc., we seem to be given a hierarchy of the Gurus before us, a degree of the manner in which we have to approach these Masters, because there are Masters above Masters, Gurus above Gurus. That seems to be the message behind these gradations mentioned in the verseNarayanam Padmabhavam Vasishtam, etc.
The immediate Guru is our visible Master. To us, of course, it is Worshipful Gurudev Sri Swami Sivanandaji Maharaj, and others may have devotion to their own Masters who are visible guides to them in this world. But behind the visibility of the Guru there is an invisibility which is the real soul of the Guru. The Guru, the Master, the spiritual preceptor or the divine presence is not to be regarded as an external reality in front of us which we can merely photograph with a camera. We have to be a little cautious in our understanding of the meaning of the word ‘Guru’. It is a master presence which overcomes us, overwhelms us, rises above us, transcends us, engulfs us, and includes us in its presence.
The higher is not merely the external. The Guru is a higher presence, and not an external schoolmaster whom we can see sitting with a whip or a cane, seated on a chair in an educational institution. He may be that also, but there is a difference between a Guru and a schoolmaster. The Guru is a spiritual presence. The spirituality implied in the presence of the Guru makes the Guru a presence that involves us in its total existence. The Guru is above us. The aboveness of the Guru, or the spiritual presence, is a proper explanation for why the Guru is not merely an external personality. In that sense, our Guru never dies. It is a perpetual presence. Vyasa, Nara-Narayana, Worshipful Swami Sivanandaji Maharaj are presences. A presence which is spiritual cannot vanish. It has to be there in one degree of its existence. When its physicality is invisible, it becomes more potent by the rarefied form it takes as a power and not merely a visible object.
In our meditations and prayers we often find it difficult to conceive what this presence is, and on what we are contemplating. We have an inveterate habit of imagining that all things are outside us, even God Himself. Though we may accept that God Almighty is the Creator of the universe, there is an outsideness of His presence seeping itself into our consciousness, and we cannot easily accommodate ourselves to the requirement that all realities that are super-physical are also transcendent in their nature. The word ‘transcendence’ negates its externality.
Now, a Guru or a Master, a spiritual presence representative of God Almighty, being transcendent, involves us in its presence. When automatic shaktipadatakes place, as it were, as put in proper language, the Guru enters us. The external cannot enter us because externality keeps the two terms of relation apart from each other. But the Guru is not such a term of relation which is purely outside in space and time. Here is the essence of the spirituality behind the Guru, who does not exist merely as a person before us. The Guru is not a person; it is a super-person. The super-personality of the Guru is the divinity thereof. So is Vyasa, Krishna Dvaipayana Bhagavan, so is Nara-Narayana, and so is every degree of manifestation before us of God Almighty Himself.
This feeling in us – the acceptance of the fact that our existence as aspiring souls or disciples is involved totally in the existence of the ideal which we adore, on which we contemplate – will make us purna, complete. Otherwise, we remain as fractions; we remain as individuals, parts of a whole but not capable of entertaining the wholeness of reality in our own selves. We cannot even think God as a wholeness if we remain in our own egoistic affirmations as an isolated, finite person. The I-ness should so participate in the presence of the divine existence before us, call it Guru or God, such that, for the time being, we flow into it, melt into it, become it, and it inundates us. At that time it is that we feel that power inside us. We feel as if some energy has entered us, and that we are more than a person.
This is our meditation, this prayer that Guru Purnima, the fullness of the moon, may also be the fullness of our mental structure, our understanding, our psychophysical makeup, everything that we are. Let everyone find a few minutes to ponder over this matter as to what this purnatva is, what fullness is, and how it is that we do not feel any indication of fullness in our personalities. We feel we are small individuals, little persons, a little drop in the sea of humanity. We are frightened by the world, afraid of people, afraid of nature, and afraid of everything because we are unable to feel a sense of communion with that which actually belongs to us and in which we are inextricably involved.
Spiritual contemplations, prayers, are not merely words that we utter, a ritual that we perform, or a routine with which we are accustomed. It is a total dedication of ourselves. The world ‘total’ has to be underlined. The totality of our existence has to be placed before the totality of the ideal. I have underlined the word ‘purna’, the fullness. The fullness is that which includes ourselves and our ideal in a greater fullness, if we can conceive what it could be, which rises in its generalisations higher and higher until it becomes the final fullness. Where the lower degrees of fullness are involved, subsumed and absorbed in such a way, there is only one fullness. This should be our meditation, and here in this holy shrine of Gurudev we may feel the presence of Bhagavan Sri Vyasa.
We are told that Masters walk in front of us, though we may not be able to visualise their presence. Just now a great Master may be in front of us. In his compassion he may be here to bless us. Our physical eyes may not be able to notice his presence, but may we accept that great truth. There are many things in this world which our frail intellect cannot appreciate. Let us be humble; let us abolish ourselves and negate this individuality so that we may become full.

 

Picasa மாயம்!

ஆதவன் உதயத்தை எப்போது பார்த்தாலும்,
ஆலாய்ப் பறந்து படங்கள் எடுப்பவள் நான்!

மகன் வீட்டுச் சன்னல் வழிச் சிறைப் பிடித்த,
எனது புகைப்படங்கள் சிலவற்றைத் தேடி,

எழுந்து வரும் ஆதவன் போலவே அழகாக
எடுத்துத் தந்திருக்கிறது Picasa Auto Backup!

நேற்றுக் கண்டு மகிழ்ந்த அந்த உதயத்தை,
இன்று பகிர்கிறேன் என் நண்பர் வட்டத்தில்!

011-MOTION.gif
 

உள்ளது கிடைக்கும்!


என்றும் எம் அன்புத் தந்தை எம்மிடம் கூறுவார்,
'என்றும் நமக்கென உள்ளது கிடைக்கும்', என்று.

சுத்தமாகத்தான் இருக்கிறதே என்று நினைத்து,
சுத்தமாக்க நேரவில்லை சமையல் அறையை!

ஆறு மாதங்கள் தேடி, 'காணாமல் போனது' என,
ஆறுதல் சொல்லிக்கொண்ட ஒரு சிறு பொருள்,

புதிதாக வாங்கிய குக்கரின் 'weight valve' ஆகும்.
புதிய குக்கரில் பழைய weight valveவையே இட,

அதுவே சரியாக இருந்ததால், தேடலும் நின்றது.
அதுவே தினசரி எனது உபயோகமாகப் போனது!

நேரம் நேற்று கிடைக்க, பாத்திரங்களை அடுக்க,
நேரே கீழே விழுந்தது கண்ணாமூச்சி ஆடிய அது!

எனக்கென உள்ளதுதானே அந்தச் சிறு பொருள்?
எனக்கே கிடைத்தது குட்டிப் புதையலைப் போல்!

'அவனின்றி ஓரணுவும் அசையாது' என்பதையே
'அவன்' அடிக்கடி உணர்த்தியபடி இருக்கின்றான்!

:pray2: . . . :hail:
 

காலம் மாறுகிறது!


எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வந்து,
அப்போது வேண்டியதை எடுக்கும் உரிமையை

முந்தைய தலைமுறையில் சுற்றம் பெற்றது!
இன்றைய நிலைமையே வேறாகிப் போனது!

சொல்லாமல் வந்துவிட்டால், அது Gate crash!
சொல்லிவிட்டு வருவதே இன்றைய நாகரிகம்!

சிங்காரச் சென்னையில், பயணங்கள் செய்வது
சிக்கனமே அல்ல; பெரும் செலவாய் ஆகிறது!

நெரிசலான பேருந்தை நாடவே முடியாது; அந்
நெரிசலைத் தவிர்த்திட, துள்ளுந்தை நாடினால்,

மகிழ்வுந்தைப் போலவே கட்டணம் ஆகிவிடும்!
மகிழ்வுந்தில் செல்ல ஆயிரத்தில் பாதி! எனவே

அழைப்பு அனுப்பினாலும், பராமுகமாயிருந்து,
அழைப்பை ஏற்க விழைவதில்லை சுற்றத்தார்!

நிலையில்லா உலகில் சந்திப்பு எதற்கு? வெறும்
வலை நட்புப் போதுமே என்றும் சிலர் கூறுவார்!


:ranger:
 

காதலோ காதல்!


என் தந்தை கொன்றுவிடுவார்
என் காதலனை என்றிடுவாள்!

காதலன் இல்லாமல் எனக்கு
ஏது வாழ்வு என்று கூறுவாள்!

காவல் வேண்டும் எங்களுக்கு!
காதல் வேண்டும் எங்களுக்கு!!

இப்படிச் சொல்லும் பெண்ணே
எப்படி மாறிப் போகின்றாள்?

பாசம் இல்லாது பிரிந்ததும்,
பணம் இல்லாது போய்விடும்!

காதலன் பணம் தராவிட்டால்,
காதலாவது கத்திரிக்காயாவது?

:love: =>:popcorn:


 

கூட்டம் எங்கே?

தோட்டத்திலுள்ள மாமரத்தை, நான்
நோட்டமிடுவேன் பூத்ததா என்றறிய!

பங்குனி மாதம் பூக்களைக் காணாது,
இம்முறை ஏன் தாமதம் என எண்ண,

மாம்பழக் காலம் முடியும் தருவாய்;
மாம்பூ
க் கொத்துக்கள் பல வருகை!

தாமதமாய்ப் பூத்து, காய்த்து, கனிந்து,
தாமதமாய் மாமரத்தை நிறைந்தன!

கிளிகள், காகங்களுடன் போட்டியிட
அணில்கள் வந்துவிடும் அதிகாலை!

தத்தைகளின் இனிய பேச்சுக்கள், எம்
தூக்கத்தையும் கலைக்கும் இனிதாக!

எப்போது காய், கனிகள் முடிந்ததோ
அப்போது பறவைகளும் மறைந்தன!

சின்ன விஷயமே ஆனாலும், அதிலும்
சின்னத் தத்துவமும் இருப்பது சகஜம்!

செல்வச் செழிப்பு நமக்கு இருந்தாலே,
செல்லம் கொஞ்ச ஒரு கூட்டம் வரும்!

ஏதேனும் பயன் கிட்டுமென அறிந்தால்,
மோதுவர் அலைபோல் சுற்றம், நட்பும்!

பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை;
அருளிய வாக்கு பொய்யாக இயலுமா?

ஈட்டிய செல்வத்தை பாங்காய்க் காத்து,
ஈட்டுவோம் கூட்டமாய்ச் சுற்றம் நட்பு!

:grouphug:
 
RR madam,

The two images of Sun - are they still images or video images. In any case, I see animation. I would appreciate if you could please explain how you manage to do it. Thanks in advance.
 
...... The two images of Sun - are they still images or video images. In any case, I see animation. I would appreciate if you could please explain how you manage to do it. Thanks in advance.
Please go through my write up once again to find the answer! :decision:

P.S: They are still images. :)
 

Dear Siva Sir,

This is the story... One fine morning, I opened my Picasa album and found a new album captioned 'Picasa Auto Backup'.

The Sun in blue colour with Venus as a black dot ( I clicked a few shots form my PC screen during the live relay of the

transit of Venus) moving! I opened the album to find out four entries. Two are already posted here. Two others are that

of the Sun in blue and red colours. Those two are not very impressive but the Sun rise was!

So it is the work of Picasa and not me. :)
 

இன்றே செய்!


'நன்றே செய்; அதை இன்றே செய்',
என்று பெரியோர் கூறுவது உண்டு!

ஆதவன் உதயத்தை animation போல
ஆச்சரியப்படும் வகையிலே செய்து

அசத்தியது பிகாஸா மென்பொருள்.
அசத்திய ஆல்பம் இன்று காணோம்!

அன்றே நான் சேமித்தது நன்றானது;
நண்பர்களுடன் பகிர வகை செய்தது!

:cool:
 

இரு விதப் புலம்பல்கள்!


தன் கணவனுக்குத் திதி கொடுப்பதற்குத்
தன் மகன் தயங்கி நிற்க, தாய் புலம்பல்!

அவரின் அந்திமக் காலத்தில், சகோதரன்
அன்பு காட்டவில்லை; சகோதரி புலம்பல்!

:(
 

எப்படி நிறுத்துவது?

எப்போது விருந்துக்குச் சென்றாலும்,
அப்போது தமது உபாதைகளைக் கூற

வந்த நண்பர்கள் கூடி, மருந்து கேட்க,
நொந்துவிட்டார் ஒரு மருத்துவர்! தன்

வக்கீல் நண்பரிடம் ஆலோசனைக்கு
வரவில்லை எவரும் எனக் கண்டவர்,

அதன் காரணத்தை அறிய விழைந்து,
அதனை அவரிடமே கேட்க, அவரும்,

'என் ஆலோசனை பெற்ற மறு நாளே
என் Fees எவ்வளவு என இ-மெயிலில்

Bill லை அனுப்புவேன்; அதை அறிந்து
தொல்லை செய்வதில்லை யாரும்!'

என்று சொல்ல, மருத்துவர் மகிழ்ந்து
அன்று தனக்கு Fees தர வேண்டியது

எவரெவர் என்று குறித்துக் கொண்டு,
அவர்களுக்கு இ-மெயில் அனுப்பிட

மெயில் பெட்டியை மறு நாள் திறக்க,
அதில் பார்த்தார் அந்த வக்கீலின் Bill.


:faint:

 

அடுத்தது எப்போது காண்போம்?

எத்தனை முறை தொலைபேசினாலும்,
எத்தனை முறை கடிதம் எழுதினாலும்,

நேரில்
காணும் மகிழ்ச்சி பெரிது, நிமிட
நேரங்களே ஆயினும்; இது நிஜம்தான்!

செவிக்கு உணவும், அத்துடன் சேர்ந்து

தெவிட்டாத பண்டங்களும் கிட்டினால்,

இரட்டிப்பு மகிழ்ச்சியல்லவா? இதையே

திரண்ட நண்பர் குழாம் அனுபவித்தது!

மழையும் பெய்யாது உதவி செய்யவே,

விழைந்து கூடிய 'மீட்டிங்' வெற்றியே!

அடுத்தது எப்போது காண்போம் என்றே

தொடுத்தது உள்ளம் கேள்வி ஒன்றை!


:decision: . . . :grouphug:
 

இன்றைய ஆச்சரியம்!


இந்த வலைத்தளத்தைத் திறந்தபோது,
வந்த செய்தி ஆச்சரியிக்க வைத்தது!

நான் இங்கே சேர்ந்து முடிந்துவிட்டது
மூன்று ஆண்டுகள் என்பதுதான் அது!

பத்து - பத்து - பத்து என்ற தேதியிலே
வைத்தேன் முதலடி இத் தளத்திலே!

மாதக் கணக்குத்தானோ கணினிக்கு,
மாதம் முப்பது நாட்கள் என வைத்து?

காலச் சக்கரத்திற்கு எத்தனை வேகம்!
மாதம் முப்பத்தியாறு முடிந்துவிட்டது!

இனிய நண்பர்கள் வட்டம் அமைந்ததும்,
இனிதே; அது இந்த வலைத்தள உபயம்!


:grouphug:
 

எல்லாமே அம்பலம்!


எந்தச் சின்ன விஷயம் ஆனாலும்
அந்த நொடியில் பரப்புவாள் நண்பி!

பிறருக்கு அந்த விஷயம் வேண்டி-
யிருக்குமா என்று எண்ணாமலேயே!

ஒரு ஐயம்தான் மனத்தில் எழுகிறது!
ஒரு வேளை தனது முற் பிறவியில்,

செய்திகளை உடனுக்குடன் அறிவிப்புச்
செய்யும், தண்டோராக்காரரோ அவள்?


:drum:
 
At the outset, kindly accept my heartiest congratulations
for keeping your participation in the TMB enervating over a
period of 3 years with your continued tiresomeness effort.
Though it is late, please accept my best wishes on the eve
of your milestone. As my system was down for the past
few days, I had to go to browsing centre to keep my interest
alive.

Balasubramanian
 

அன்னையர் மூவர்!

தினமும் போற்றிப் புகழ்ந்தாலும், சிறப்பு
தினத்தில் இறையைப் போற்றுவது சிறப்பு!

கல்வி, செல்வம், வீரம் மூன்றுமே தேவை

நல் வாழ்வை மக்கள் இனிதாய் வாழ்ந்திட.

கலைமகள் கல்வி, அலைமகள் செல்வம்,
மலைமகள் வீரம் என்று நமக்கு அருளுவர்!

நவராத்திரி நாட்கள் மூவரையும் வழிபட
நமக்குக் கிடைக்கும் சிறந்த தினங்களாம்!

பட்டு உடை உடுத்திய மகளிர் உலவுவதும்,
நட்பு, உறவினரைச் சந்தித்து மகிழ்வதும்,

பரஸ்பரம் வாழ்த்துச் சொல்லுவதும், அன்பு
பரவச் சின்னப் பரிசுகளைத் தருவதும் என,

பறந்திடும் இந்த ஒன்பது நாட்களும்; மேலும்
சிறந்திடும் அன்புடன் பாசப் பிணைப்புகளும்!

பக்தி பெருகிடும் இனிய வேளையில், நமது
சக்தியும் பெருகிடும் அன்பின் வலிமையால்!


நண்பர்களுக்கு இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்! :)

 

Latest ads

Back
Top