• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

Best Wishes for Navaratri festival to all the Lady Members of
this forum. Keep a Kamakshi Picture and light it in the evening
and say a prayer as you like and offer some Neivedhyam to HER
and offer it to female children, if possible. The significance being
that she is supposed to sit on the Meru after the sunset.
 

எளிமை வேண்டாமாம்!

பத்து கஜம் புடவையைச் சுற்றியும்,

பற்றாமல் போன துணியைப் போல

முட்டிக் கால் வரையிலே வெளியே
எட்டிப் பார்க்கும் பல பெண்களுக்கு!

கடினமான பணியை எளிமையாக்க,
கடினமாக ஆராய்ந்து யோசித்ததில்,

எளிதில் மடிசார் புடவை உடுத்திட,
எளிய முறையும் வந்து உதித்திட,

அதைப் பார்த்த பலரும் பாராட்டிட,
அதை ஒரு பெண் ஏற்கவே இல்லை!

பழமைதான் பெரியது; நாமெல்லாம்
புதுமையாய் எதுவும் முயலலாகாது!

பாட்டி கால முறைதான் உயர்ந்தது;
ஏட்டிக்குப் போட்டி கூடவே கூடாது!

பின் கச்சம் உருண்டை வடிவினில்,
பின்னே இருந்தால் அதுதான் அழகு!

பழமைவாதிகள் மாற வேண்டாம்;
புதுமையும், எளிமையும் விரும்பும்

என் சகோதரிகளின் நற்சான்றையே
என் உள்ளம் உயர்வாக நினைக்கும்!


:decision: . . . :thumb:
 
dear raji,

with your recent reference to ease the wearing of madisar, i am wont to think, the original purpose behind the madisar being purity of cloth. the same goes with panchakachcham, i think.

we have, always been concerned with the concept of ritual purity, and hence, the insistence that the madisar/panchakaccham be worn right after bath, with nary a cloth between the silk and the body. i think washed cotton is considered impure.

so, your modified madisar, with its naadas and suchlike, maybe violating the concept of purity. also the trend of modern women/men to have underwear coming between their madisar/panchakaccham might be violating furthermore the codes of purity.

so, maybe we have transformed what is essentially a ritually pure garment, into one of convenience/fashion to satisfy today's modesty mores? eh!!
 

Dear Kunjuppu Sir,

Cotton has never been considered impure! Ram's father used to wash his cotton dhOtis and angavasthram every day and

dry it on a
high clothes line for madi purpose, so that even a tall person can not touch them with his head. I have also seen

the pure silk garments (dhOti / saree) kept unwashed for years together for madi purpose! Unwashed 'kOdi' was accepted as

madi! Undergarments are allowed for many years now, even for ladies. In fact, brides wear a 3/4 lengh leggings inside the

madisAr, on their wedding day. ( I had stitched a 3/4 pyjamA with new cloth, for this purpose, on my wedding day!)

So, elastics, washed cotton etc are well within the madi concept! :)
 
My Grandma used to explain the purpose and necessity of wearing
Madisar during certain occasions viz. Shardham, Varalakshmi Nonbu, etc.
Normally, after one takes bath and wears Madisar, is not supposed to
attend to the Nature's Calls in between. If done, one has to take bath
again. In order to avoid, that Madisar is preferred. This in fact enables,
to hold hip nerves on both sides by the knot one makes besides
it also compresses the back bone holding the nerves, which in the process
may not generate a feeling of nature's call in the mid function or celebration.
Besides, it also enables a person to hold the feeling of hunger and
thirsty to a certain extent. Therefore, if one wears Madisar rigidly,
one can get the above advantage.
 

Dear Bala Sir,

We do not eat any solids on the special days till the poojA / ceremony is over and hence no need to visit the toilets!

Those grannies are really great! Wonder how they managed the daily madisAr life style. It was my M I L's daily wear.

She told me the trick how to loosen only the 'kachcham' portion, step out of it, while using the toilet. Really amazing, how

one long piece of cloth could make such complicated folds and loops. (jatti, underskirt and saree all in one)

I want simplicity in everything. Hence the new idea. It was a very comfortable wear during this year poojA and a few mAmis

commented that I have reduced weight, whereas it is the other way! :) Only one naughty (?) nephew of Ram found out that

the 'kachcham' portion was not visible in my madisAr! :spy:
 

Dear Kunjuppu Sir,

... In fact, brides wear a 3/4 lengh leggings inside the

madisAr, on their wedding day. ( I had stitched a 3/4 pyjamA with new cloth, for this purpose, on my wedding day!)

So, elastics, washed cotton etc are well within the madi concept! :)

precisely the point dear raji. :deadhorse::gossip:

we have stretched the rules over the years. the great grandma would have no clue of the leggings. silk garments are ok but washed cotton clothes are a stretch.

as one who does not believe/practise madi, it is only from an observer's viewpoint, that i felt, to remark. thank you dear lady. :cheer2:
 

Just a funny thought!!

No offense please........

மன்மத பாணங்கள்!

கூட்டுக் குடும்பமாய் வாழும்போதும்,
கூடியது வீட்டில் பிள்ளைச் செல்வம்!

கூட்டும் பின்னழகை மடிசார் என்பதால்
கூடியதோ மன்மத பாணங்கள் அன்று?

:love: . . . :baby: :baby: :baby: :bump2:
 
Thank you Mam. Your explanation if read by ladies will be of much beneficial.
I am told that nowadays off-the shelf madisar & panchakacham clothes
are readily available, which can be bought for both Iyers and Iyengars.
In fact it is a pre-stitched ones based on the measurement given in advance
which can be preserved in wardrobes, without any worry for preparation
for puja, etc. I believe that there are some shops which do this also.

Balasubramanian
 

Just a funny thought!!

No offense please........

மன்மத பாணங்கள்!

கூட்டுக் குடும்பமாய் வாழும்போதும்,
கூடியது வீட்டில் பிள்ளைச் செல்வம்!

கூட்டும் பின்னழகை மடிசார் என்பதால்
கூடியதோ மன்மத பாணங்கள் அன்று?

:love: . . . :baby: :baby: :baby: :bump2:

dear raji, here is a pictorial tribute to கூட்டுக் குடும்பம் and the accompanying பிள்ளைச் செல்வம் which resulted due to the பின்னழகு of the மடிசார் :)

Koottu Kudumbam.webp
 
3138d1381922050-a-koottu-kudumbam.jpg


Thanks for the apt picture Kunjuppu Sir! :)

Gopulu is just great!
award_star.png

Interesting pix isn't it. i remember looking at it during a vikatan edition .. could be 56 or 57 or thereabouts.

there is the granpa/granma. a very virile dad with a wide spread midriff. the mom looks prematurely mid aged, though only must be in her late twenties or early thirties judging by the marrying age of those times (40s, 50s).

there is the teenage daughter with dhavani, the next, a son, already looking weighed by the impending responsibilities that he can see coming in his way; #3 looks like a daughter wishing to have none of it with the family, the next, the poonaled son, who apparently had the dose of castoroil/kadukkai whose effects he is already feeling.

the next sweetie crying over the dose she just got, and yet to feel the effect of the பேதி, the next சுட்டி பையன் being consoled with a spoonful of sugar, which makes the 'medicine' go down and not out of the mouth :);

judging by the age difference between the kids, the couple look like அடுக்கடுக்கா பெத்தின்ருக்கா. and judging by the age of the youngest, there is probably no more buns in the oven.

all in all a wholesome family... something that is history today. in our community.
 

Wonderful description Kunjuppu Sir!

Here comes my write-up, inspired by your post! :)


கூட்டுக் குடும்பம் - அன்று!


பட்டை விபூதி தன் உடலை அலங்கரிக்க,
சட்டையைச் சட்டை செய்யாத தாத்தா!

குனிந்த முதுகை இன்னும் வளைத்தபடி,
இனித்த பேச்சால் மயக்க முயலும் பாட்டி!

பருத்த தன் வயிறைக் காட்டத் தயங்காது,
வெறுத்த மருந்தையும் குடிக்க வைத்திட,

உருட்டி மிரட்ட விசிறிக் காம்பைக் காட்டி,
உங்கள் இல்லத்தரசன் நான் எனும் அப்பா!

பிள்ளைச் செல்வங்களை ஈன்று, சலித்து,
இல்லாத முதுமையைத் தன் இள வயதில்

பெற்று, இனிக்கும் சர்க்கரையைத் தந்து,
பெற்ற மகனை தாஜா பண்ணும் அம்மா!

தாவணி அணிந்த வளர்ந்த நங்கை; தான்
தாங்க வேண்டியவரை நோக்கும் தனயன்!

மருந்தின் ருசியினால் அழும் பெண் குட்டி;
அருவருப்பைத் தமது முகத்தில் காட்டும்

சின்ன அக்கா; மழலை மாறாது பூணலிட்ட
சின்னஞ் சிறுவன்; நம்மையும் பிடித்து

மருந்தைத் தருவாரோ என்கிற பயத்தில்
மறையும் தாத்தா பின்னே கடைக்குட்டி!

கூட்டுக் குடும்பம் கலகலப்பு நிறைந்தது;
ஏட்டில் பார்த்து இன்று இளைஞர் அறிவது!

இன்று காணக் கிடைக்காத அந்தக் காட்சி;
அன்று கோபுலு வரைந்த படம்தான் சாட்சி!

:grouphug: . . . :thumb:
 

I sent the above write-up with along with the picture to few of my friends

and got this feed back from one of them!

"பிறந்தது முதல் கிராமத்து வாழ்க்கையில்,

கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்து பழகிய என்னை,

இந்தக் கவிதை பழைய இனிய நினைவுகளுக்கு


இழுத்துச் சென்றது. எழுதிய விதம் அற்புதம்.


இரத்தினச் சுருக்கமாக அத்தனை பேரும்


இதில் அடக்கம்.


Hats off to your writing skill."
So....... 50% of the credit goes to K Sir for the description given his post! :yo:
 
Dear Raji Ram

I used to wonder your ability to write poems at will, and it is not something which everyone can do it.

Recently i came across a reply given by one Thennammai Lakshmanan about writing poems:

கவிதை என்பது ஒரு சம்பவம் போல என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி., துக்கம்., சோகம்., விரக்தி, வெறுப்பு., அசூயை., கோபம்., வீரம்., தன்னம்பிக்கை ., என எல்லா நிலைகளிலும் சில உணர்வுகள் கவிதைவரிகளாய்ப் பிரசவிக்கின்றன.


Her Kavithagal like yours are very simple;

1) முட்டையிடக்
கூடுகட்டும் பறவைகள்
வாழ்ந்த சுவடுகளைப்
பதித்து வைப்பதில்லை.
என்னுது என்னுதென்னும்
இறுக்கமில்லை.
கைவிட்டுப் போமோவென்ற
நடுக்கமில்லை.
என் செய்வோமென்ற
சிந்தனையில்லை.
அலகுகளால் உயிர்ப்பித்து
இறக்கைகளால்
பறக்கக் கற்பித்தபின்
விட்டு விடுதலையாகின்றன
ஒன்றிடமிருந்து ஒன்று..

2)கிளையோடும்
இலையோடும்
காற்றோடும் கலந்து
சிதறிக் கிடக்கும் சுள்ளிகளில்
வரலாறாய்க் கிடக்கிறது
வம்சம்பெருகிய காவியம்.2) கறுப்பென்றாலும்
சிவப்பென்றாலும்
வெள்ளையென்றாலும்
கொஞ்சம் பயமெனக்கு.

தினமும் மையிட்டுக் கொள்கிறேன்.
நெற்றி வகிட்டில் குங்குமம்.
வெள்ளி மிஞ்சியும் கூட.

பாசச் சந்தனமும்
விபூதியும் பற்றாகக் கூட.,
பச்சையமாய் சமைக்கிறேன்.

மஞ்சள் நிலவில்
அடர் நீல இரவில்
வண்ணங்கள் தெறிக்கும் கனவில்..

உறங்கும் குருவிதானென்றாலும்
விழிப்பு வந்ததும்
எட்டிய உயரம்வரை
பறக்க மறப்பதேயில்லை தினமும்



3)எளிய மனிதர்களும், ஊர்களும்.:-

எளிய ஊர்களைப் போலவே
இருக்கின்றார்கள்
எளிய மனிதர்களும்.
நதிக்கரையோர
சணல்படுதா குடிசைகள்,
புட்டாமா அடித்துப்
பொட்டுவைத்த குழந்தைகள்,
ஏதோ ஒரு போராட்டக்கல்
உடைத்த ஜன்னலுடன் பேருந்து,
புகையிலை வாடையுடன் வரும்
பழக்கூடைக்காரி,
வீசும் கொட்டைக்கோ பழத்துக்கோ
தோப்பிலிருந்து வால் தூக்கி
சலாமடிக்கும் அணில்கள்,
குழையக் குழையச் சேறோடு
மணக்கும் சம்பா வயல்கள்,
எளிய மனிதர்களைப் போலவே
காவி காட்டிச் சிரிக்கின்றன
எளிய ஊர்களும்..


Kannadasan Movie songs had wonderful meanings, very seldom we come across such great poets.

You are doing a great job, wish you to continue seeing Goodness in every thing!!
 
Last edited:

Dear P J Sir,

Smt. Thennammai's words are from her heart!

She seldom bothers about 'edhugai' or 'mOnai' in her poems. :cool:

Thanks for sharing a few here. :)
 

Dear Bala Sir,

Thank you for your kind words. I should thank the 'genes' in my family for my ability to write, which many do not consider as poems!

I write my feelings with possible 'edhugai' or 'mOnai' and meter! FYI, my grandpa 'Haridasa Narayanan' has composed many songs,

a few of which my Sis has posted in the Music section. She writes much more in our Forum than me. My brother is a writer and on of

his books titled 'Trick or treat' was one of the best sellers and it was translated later in Tamil and published in Junior Vikatan with the

title 'Postmortem'! :thumb:
 

Dear Bala Sir,

Thank you for your kind words. I should thank the 'genes' in my family for my ability to write, which many do not consider as poems!

I write my feelings with possible 'edhugai' or 'mOnai' and meter! FYI, my grandpa 'Haridasa Narayanan' has composed many songs,

a few of which my Sis has posted in the Music section. She writes much more in our Forum than me. My brother is a writer and on of

his books titled 'Trick or treat' was one of the best sellers and it was translated later in Tamil and published in Junior Vikatan with the

title 'Postmortem'! :thumb:

Hats Off to you. Long live.
 

ஆங்கிலக்கவிதைகள் தினம் அரும்புகின்றன அங்கு (Wife and sacrifice)
தமிழ்கவிதைகள் மனம் பரப்புகின்றன இங்கு


 
இக்குழுமம் ஆகிவிட்டது பிருந்தாவனம்
மலருக்கு மலர் தாவ விழைகிறது மனம்




வாழ்க வளமுடன்


 
அன்புடன் பாலசுப்ரமணி
 

ஆங்கிலக்கவிதைகள் தினம் அரும்புகின்றன அங்கு (Wife and sacrifice)
தமிழ்கவிதைகள் மனம் பரப்புகின்றன இங்கு


 
இக்குழுமம் ஆகிவிட்டது பிருந்தாவனம்
மலருக்கு மலர் தாவ விழைகிறது மனம்




வாழ்க வளமுடன்


 
அன்புடன் பாலசுப்ரமணி

Hai, A new flower has now blossomed. Heartiest Welcome.
 

Latest ads

Back
Top