• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

நட்பு வளரும்போது....

முகம் காணாமலே வளரும் நட்பு;
அகம் மகிழத் தொடரும் நட்பு - அது

இந்த இணையதளம் அளித்த நட்பு
அந்த நட்பு வட்டம் நேரில் சந்திக்க

அருமையான யோசனை தந்தார் ஓர்
அருமையான நண்பர்! ஓராண்டிலே

சில தடவை சந்தித்து மகிழ்ந்தோம்!
பல இனிய நினைவுகளைப் பகிர்ந்து,

இனியும் இது தொடர வேண்டினோம்!
இனிய நட்பு வட்டம் வளர வேண்டும்!

:grouphug: . . . :)
 
நட்பு வளரும்போது....

முகம் காணாமலே வளரும் நட்பு;
அகம் மகிழத் தொடரும் நட்பு - அது

இந்த இணையதளம் அளித்த நட்பு
அந்த நட்பு வட்டம் நேரில் சந்திக்க

அருமையான யோசனை தந்தார் ஓர்
அருமையான நண்பர்! ஓராண்டிலே

சில தடவை சந்தித்து மகிழ்ந்தோம்!
பல இனிய நினைவுகளைப் பகிர்ந்து,

இனியும் இது தொடர வேண்டினோம்!
இனிய நட்பு வட்டம் வளர வேண்டும்!

:grouphug: . . . :)


Mam,


இனியும் தொடரும், அது இனிதே வளரும்.


வாழ்க வளமுடன்.


Regards
 
எப்படி உருவாக்கினீஈ?

இரு வக்கீல்கள் சந்தித்து, தமது வாதத் திறமை கொண்டு
பெரும் பணம் ஈட்டிய சம்பவத்தைப் பற்றி உரையாடினர்.

முதலாமவர் தனது வீடு எரிந்து போய்விட்டதால், உடனே
சேதங்களைக் கணக்கிட்டு, தன் காப்பீட்டுக் கழகத்திலிருந்து

கோடிகளில் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றதாக உரைத்தார்!
கோடிகள் தானும் பெற்றதாக மற்றவரும் கூறி, தன் வீட்டில்

சுனாமி நுழைந்து பொருட்கள் அழிந்ததாக உரைத்திட, 'நீர்
சுனாமியை எப்படி உருவாக்கினீர்?', எனக் கேட்டர் நண்பர்!

:decision: . . . :becky:
 
The credit goes to Raji Madam who took the initiative for a get together. Let our
TB relationship continue and grow further and further not only in the internet but also
through the occasions like the one the Madam gave an interesting start.

Wish everyone a Happy New Year and also for continued TB relationship to shine and
glitter like the stars always

Balasubramanian
 
வண்ணத் தமிழ் நாவில்
சொல்ல வந்த சேதியை
வாய்ப்பு கிடைத்த நாளில்
சொல்லி வைப்பேன் இன்று

இராசியான பெண் என்று
போற்றுவோர் பலர் உனை
வண்ண வண்ண மனிதர்கள்
வந்துன்னை நிதம் துதிப்பர்

மலேசியப் பயணத் தொடர்
கவிதை மலர் தொடுக்க
குறைவில்லாத் தமிழ் நாளும்
மலர வேண்டும் இனி-

தலைக்கனம் இல்லாப் பெண்
நீயோ தமிழால் வாழும் கண்
பலமுறை உதவிய பாங்கு
கண்டு வியந்தேன் இங்கு

எண்ண அலைகள் கண்டு
வியந்தோர் பலர் உண்டாம்
உன் வண்ண எழுத்திற்கோ
வாசகர் ஆயிரம் உண்டாம்

அந்தநல் குலத்து மங்கையோ
நீ அடக்கம் வளர்த்த நங்கையோ
முகநக நட்ப்பும் வளர்ப்பாயோ
அன்றிலகம் மட்டும் பார்ப்பாயோ

என்று வினா கொண்டு
வண்ணமயில் தூரிகையால்
தீட்டிவிட்டேன் வாழ்க நீ
ஆண்டுகள் பல கண்டு

அன்புடன் சிவசண்முகம்
 
Last edited:

வாழ்த்துச் செய்தியும், கவிதையும் அளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. :)
 
இன்ப வாழ்வு!

புத்தாண்டு பிறந்தாலே வந்திடும்
புதிய தீர்மானங்கள் நம் மனதிலே!

உயர்ந்த இலக்குகளை வைத்தால்,
உயர்வும் வாழ்விலே கிடைக்கும்!

தனிமையில் இனிமை நாடாமல்,
இனிய சுற்றம், நட்பைப் போற்றி,

அன்பெனும் பாலத்தால் சேர்த்து,
இன்பமாய் வாழ முயலுவோம்!


உலகம் உய்ய வேண்டும்,

ராஜி ராம் :pray:
 

நண்பர்கள் அனைவருக்கும், புத்தாண்டில்

நன்மைகள் பெருகிட, நல்வாழ்த்துக்கள்! :high5:
 
Wishing all our Near and Dear members a very happy new year with good health,prosperous new year:happy::love::pray2: . :pray2: Thanks RR Mam for you wishes ,, wish you and your family best wishes.
 
Recap!!

அன்று கீதையில்:

'எதை நீ கொண்டுவந்தாய்,

அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய்,

அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ,

அது அங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள்,

அது வேறொருவருடையதாகும்...

இதுவே உலக நியதியும்

எனது படைப்பின் சாராம்சமுமாகும்.'

- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.



இன்று இணையதளத்தில்:


'எதை நீ 'எனது' என்கிறாய்?

அதை நீ ஆரம்பித்தவர் மட்டுமே!

எதை நீ படைத்திருந்தாய்,

அது 'எனது' என்பதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ,

அது அங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள்,

அது வேறொருவருடையதாகும்...

இதுவே இணையதள நியதியும்

எனது படைப்பின் சாராம்சமுமாகும்!'

- இணையதள உரிமையாளர். :peace:
 
பொங்கல் திருநாள்.

புதுப் பானையை வாங்கிவந்து, அதில்
புது அரிசியிட்டுப் பொங்கல் செய்யும்

காலம் மாறி, 'குக்கர்' பொங்கல் செய்து,
காலத்தை சேமிக்கின்ற காலமே இது!

பழையன கழிதலும் புதியன புகுதலும்,
விழைய வேண்டிய பழைய விஷயம்!

உள்ளத்தில உள்ள ஆறு அழுக்குகளை
அள்ளி வெளியே வீசுதல் நலம் தரும்!


:peace:
 
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

DSCN1957.JPG
 
கேள்வி ஞானம்.

நல்ல இசை பாட ஞானம் வேண்டும்; எந்த
நல்ல இசையையும் ரசித்திட வேண்டும்.

அந்த இசையைப் பாடவும் திறன் இருந்தால்,
எந்த ஆசானும் தேவையில்லை அல்லவா?

எளிய குடும்பத்தில் பிறந்து, இசை ஞானம்
அரிய விதத்தில் இருக்கும் ஓர் இளைஞன்.

விடாமுயற்சியை மூலதனமாக்கி, பற்பல
இடர்கள் தாண்டி, மேலே எழுந்து, முடிவில்

மக்களின் பேராதரவால் பட்டமும் வென்று,
அக்கணம் பெற்றோருக்குப் பெருமை தந்து,

கேள்வி ஞானம் சிறந்து இருந்தாலே, இசை
வேள்வி செய்தல் எளிது என நிரூபித்தான்!

அவன் இசைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்!

Here is his song with a bang:

Grand Finale Diwakar Sings Neeye Unakku Endrum Nigaranavan
 
yes raji, it is heartwarming to see diwakar's success. just see his family circumstances here in this [video=youtube;N4sdcm9omkw]http://www.youtube.com/watch?v=N4sdcm9omkw[/video].
 
Hello RR Mam, it was really super to watch the finale,actually i felt both the girls could have selected better songs as they did very well in studio,any ways ,it was a good tough results, Dhivakar really deserve it .:first: :clap2: .The song he selected was amazing,its his master piece,Syed in 2 place too good along with sharath.All are well talented
 
Dear Dr. Narayani,

Ram and I started watching this program only in December 2013. It is very interesting to note that the first and

second prizes are won by the two boys, who have only 'kELvi jnAnam'! :thumb:
Hats off the Ananth Sir, for nicely guiding the singers. He brought out the best in each of them. :yo:
 
Hello RR Mam, very well said,these two guys who won the show is of non-musical family back ground,its there shear interest and dedication thats what given the results.
 

Latest ads

Back
Top