• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


புத்தாண்டு தரட்டும் மகிழ்ச்சி!


ஒன்று ஒன்று என்ற தேதி தந்திடும்,
என்றும் மனதினில் புதிய உற்சாகம்!

புதிய நாட்காட்டியை நாம் கண்டதும்,
புதிய நம்பிக்கை பிறந்திடும், நிஜம்!

இந்த நம்பிக்கை இனிய தருணங்களை
நன்கு தரட்டும், இந்த ஆண்டு முழுதும்!

இறையின் அருளால், இனிமை தொடர்ந்து,
நிறைவான ஆண்டாய் உருண்டு ஓடட்டும்!

:clock:

இணையதள நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
 
ஆருத்ரா தரிசனம்.

சிறு வயது நிகழ்வுகள் சில மனதில்
அருமையாய்ப் பதியும்; அது நிஜம்!

குறை தீர்க்கும் இறைவன், திங்கள்
பிறை சூடும் சிவபெருமான், எமது

சிறிய கிராமத்தின் திருக்கோவிலில்
சீரிய வடிவில் அருள் தந்திடுவார்.

ஆருத்ரா தரிசன தினத்தில், தமது
ஆபரண அலங்காரங்களுடன், ஒரு

அரச மரத்தடி வினாயகரை, வலம்
அழகாக வருவதும் வழக்கமாகும்.

வெடிச் சத்தம் கேட்டதும், நாங்கள்
வெகு விரைவில் ஓட்டம் பிடித்து,

இறைவன் வலம் வரும் முன்பே
அடைவோம் அந்த அரசமரத்தை!

அன்று மூச்சிரைக்க கண்ட காட்சி,
இன்று மீண்டும் அகத் திரையிலே!


:pray:
... :hail:
 
முடிவு தந்த முடி காணிக்கை!

'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்'!
பல காலமாக உலவும் ஒரு பழமொழிதான்.

பல வகையுண்டு அகப்படுவதில்; அவற்றில்
சில வகை முடிந்திடும் மிக்க அதிசயத்தில்!

திருட்டைத் துவங்கும் முன், இறைவனுக்கு
திருடன் ஒருவன் தருவான் முடி காணிக்கை!

அவனைத் தேடிச் சலித்த இரு போலீஸார்,
அவன் பாதையையே பின்பற்ற விழைந்து,

தம் வேட்டையில் வெற்றிக் கனி வேண்டி,
தம் முடி காணிக்கை செலுத்தச் சென்றிட,

திருடனும் அதே சமயம் அங்கு வந்து சேர,
இரு போலீஸாரும் பிடித்தனர், ஆசை தீர!

:pray2: . . . :thumb:
 
உள்ளம் குளிர்ந்தது!

தனக்குவமையில்லா ஒரு கணபதி,
மணக்குள வினாயகர் என்ற நாமம்.

புதுவை நகரிலே அருள் பாலிக்கும்,
புதுமை மாறாத சித்தி புத்தி நாதன்!

ரங்கனாதன் என்ற அடியார் ஒருவர்,
மங்காத பக்தியுடன், நியூயாரிக்கின்

மஹாவல்லப கணபதியின் வடிவை
மணக்குளத்தார் கோவிலில் வைத்து,

வருக, வருக என அவரை வரவேற்க
ஒரு பாடலை வடிக்க எனைக் கேட்க,

உதித்த பாடலை அச்சிலேற்றி, தன்
உள்ளம் குளிர்ந்ததென உரைத்தார்!



இதோ அப் பாடல்: :welcome:

DSCN8512.JPG
 
Dear Kumar Sir,

Thanks for your compliments. I could take the snap of my poem but could not get the picture of Maha Vallabha Ganapathi,

printed on the other side of that card! It was really a strange experience. All the snaps were out of focus! :(

Here is the picture taken from Google images:

Sri_Maha-Ganapati.JPG
 

மன்மதன்
அருளட்டும்! :angel:

மன்மதன் என்பவன் காமன்;
மனித குலத்திற்கு common!!

அவன் பெயரில் இந்த ஆண்டு;
அவன் அருளட்டும் இவ்வாண்டு!

திருமணம் வேண்டிடுவோருக்கு,
அருமையான ஜோடி அமைந்து,

இனிய வாழ்வு தொடங்கி - அந்த
இல்லறம் நல்லறம் ஆகட்டும்!

:hug: . . . :dance:

 
எம் அன்னை!

மருத்துவர் மகளாய்ப் பிறந்து, குடும்பத்தில்
கருத்துடன் யாவரையும் பாசத்தினால் கட்டி,

கண் பார்த்தால் கை செய்யும் திறமை காட்டி,
பெண் இனத்திற்கே உன்னதப் பெருமை கூட்டி,

பிறந்த வீட்டில் மட்டுமின்றி, இளம் வயதிலே
புகுந்த வீட்டிலும் ஒரு ராணி போலத் திகழ்ந்து,

கணவரின் இளவல்களைத் தாய் போல் பேணி,
அனைவரின் நல்வாழ்வையும் நிலை நிறுத்தி,

அலைமகள், கலைவாணி, அன்னபூரணியுடன்,
மலைமகளின் பரிபூரண ஆசிகளையும் பெற்று,

மங்கையாகப் பிறந்தது மாதவம் என எண்ணி,
மங்காப் புகழ் தந்திடும் தாய்மைப் பேறு பெற்று,

அன்புடன் அமுதமூட்டி, ஆவலுடன் தாலாட்டி,
பண்புடன் வழிகாட்டி, நேசமுடன் மருந்தூட்டி,

எப்போதும் மகிழ்வூட்டி, ஊர் மெச்சச் சீராட்டி,
தப்பாது வாரிசுகள் உயர அன்புடன் கரம் நீட்டி,

எம் சிறப்பே உன் பரிசு என்பதை நிலை நாட்டி,
எம் உயர்வே உன் வாழ்வு என வாழ்ந்து காட்டி,

என்றும் கருணை மிக்க அன்னையே! நாங்கள்
உன்னை வணங்குவோம், தினமும் தவறாது!

எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துவாயே!
எங்கிருந்தாலும் எமக்கு நல் வழிகாட்டி நீயே!!

:angel: . . . . . :pray2:
 
'ஸீதா கல்யாண வைபோகமே'

'ஸீதா கல்யாண வைபோகமே' என்று
எல்லாத் திருமணங்களிலும், மகளிர்

களி தெலுங்கில் பாடும் பாடலில் - ஒரு
துளியும் கல்யாணக் காட்சி இல்லை!

ராமனின் பெருமை மட்டுமே உள்ள
ராமனைப் போற்றிடும் பாடலே அது!

இந்த எண்ணம் அலை மோதியதால்,
வந்த பாடல்தான் ஒரு புதிய பாடல்!


பாடல் அடுத்த பதிவில். :)

 

''ஸீதா கல்யாண வைபோகமே!''


பல்லவி:

ஸீதா கல்யாண வைபோகமே!
ராம கல்யாண வைபோகமே!

சரணங்கள்:

ரகுவம்ஸ திலகனாய் அவனிதனில் அவதரித்த
ரகுராமன் இளவலுடன் ஜனகபுரி சேர்ந்திட
(ஸீதா கல்யாண...​)

ஸாமஜ வரகமனன் கம்பீர நடை காண,
தாமதம் செய்யாமலே வைதேகி வந்திட
(ஸீதா கல்யாண...​)

அண்ணலும் நோக்கிட, அவளும் நோக்கிட,
கண்களும் இணைந்திட, காதலும் மலர்ந்திட
(ஸீதா கல்யாண...​)

ஒப்பில்லா அரசர்களால் ராஜ சபை நிறைந்திட,
ஒப்பில்லா சிவதனுஸை ஸ்ரீ ராமன் முறித்திட
(ஸீதா கல்யாண...​)

மனந்தனில் வரித்தவனே மணாளன் ஆகிட,
மனம் நிறையப் பரவசமாய் மணமாலை சூட்டிட
(ஸீதா கல்யாண...​)

விண்ணோரும் மண்ணோரும் ஆனந்தக் களிப்பிலே,
பண்ணோடு கொண்டாடிப் பல்லாண்டு பாடிட
(ஸீதா கல்யாண...​)

:pray2:
 
மதமும், மனிதமும்!

மதம்தான் மனித நேய அடிப்படையா?
மறுக்கத்தான் நினைக்கின்றது மனம்!

ஒரே மதத்தில் உதித்த இருவர்; ஒருவர்
ஒரே உயர்ந்த எண்ணம் கொண்டதால்,

இருபது இருபதில், ஒரு வல்லரசாக நம்
இந்தியா உயர வேண்டுமென விழைய,

மற்றவரோ, பயங்கரவாதத்தில் முழுகி,
உற்ற நேரத்திலே சதி வலை விரித்தார்.

இருவரின் நல்லடக்கமும், இந்தியாவில்,
ஒரு நாளில் நடந்தது என்ன வினோதம்!

கண்ணீர் அஞ்சலி ஒருவருக்கு; யாரும்
காணாத இறுதிப் பயணம் மற்றவருக்கு!

:angel: ..... :evil:
 
காரணப் பெயர்!

காரணம் ஒன்றைக் கருதிக் கொடுப்பதே
காரணப் பெயர் என்று நாம் அறிவோம்!

பொழுது விடிந்ததும் காதில் ஒலித்தது,
அழுது வடியும் யானைகளின் அலறல்!

இப்படி வேழங்கள், காலை வேளையில்
எப்படி நுழைந்தன தேவர் தோட்டத்தில்?

சில நொடிகளில் புரிந்தது, அந்தச் சத்தம்
சில மாணவமணிகள் எழுப்புவது என்று!

ஸப்த ஸ்வரங்களை, பக்கத்துப் பள்ளியில்
சப்தமாகத் தேடுகிறார், தம் ட்ரம்பெட்டில்!

சுதந்திர தின விழா அணிவகுப்பில், நமது

சுதந்திர இந்தியாவின் தேசிய கீதத்தினை

இசைக்கவே நடக்கின்றது பயிற்சி இன்று;
இசை கேட்குமாறு இருக்க முயற்சி ஒன்று!

வாரண
ப் பிளிறலுக்கு, 'ட்ரம்பெட்' என்பது
காரணப் பெயர்தான்
எனப் புரிந்தது இன்று!

:decision:

 

இன்நாள் தரும் இனிய நினைவுகள்!

இனிய நினைவுகள் பல அலை மோதும் நாள்;
இணையதளத்தில் நான் இணைந்த இன்நாள்!

ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டதை அறிந்ததும்,
வந்து நிறைந்தன மனதில் மகிழ்வலைகள்!

வலைத்தளத்தில் கிடைத்த நட்பி
ல், எனக்கு
நலம் விரும்பிகள் மேலும் கிடைத்தது நிஜம்!

இனி வரும் நாட்களும் இதுபோல் தொடர்ந்து,
இனிய நட்பினை வளர்க்க வேண்டுகின்றேன்!

:pray2:

 
Super !

great 5 years of website service to us !

all the best to grow many many years more to serve happy kavithaigals to us and for peaceful prosperous and healthy future to you !
regards

 
ஓர் ஆண்டு கழித்து வந்தேன். நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.
 

இன்நாள் தரும் இனிய நினைவுகள்!

இனிய நினைவுகள் பல அலை மோதும் நாள்;
இணையதளத்தில் நான் இணைந்த இன்நாள்!

ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டதை அறிந்ததும்,
வந்து நிறைந்தன மனதில் மகிழ்வலைகள்!

வலைத்தளத்தில் கிடைத்த நட்பி
ல், எனக்கு
நலம் விரும்பிகள் மேலும் கிடைத்தது நிஜம்!

இனி வரும் நாட்களும் இதுபோல் தொடர்ந்து,
இனிய நட்பினை வளர்க்க வேண்டுகின்றேன்!

:pray2:

Thanks a lot for making newcomers comfortable in this forum .

I learnt a lot from you.

You will be a great guru for your shisyas whom you teach carnatic music.

Hope to see you performing sometime with your disciples in chennai
 
என்னை ஊக்குவிக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றி! :)

என்றும் நான் எண்ணுவதும், எழுதுவதும் இதுவே:

''தங்கள் ஊக்கம்; எந்தன் ஆக்கம்''! :thumb:
 

Latest posts

Latest ads

Back
Top