• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

அடங்கிப்போக போக ஆட்டுவிக்கிறார்களே அடங்கிப்போகத்தான் ஆண்டவா என்னைப்படைத்தாயோ ஆயினும் குறையொன்றுமில்லை கோவிந்தா
 
என்னங்க ராஜிராம் வாழ்வின் அனைத்து விஷயங்களையும் கவிதையாய்ப் பொழிந்துவிட்டீர்கள் அனைத்தும் இனிமை
 
என்னங்க ராஜிராம் வாழ்வின் அனைத்து விஷயங்களையும் கவிதையாய்ப் பொழிந்துவிட்டீர்கள் அனைத்தும் இனிமை

மிக்க நன்றி நண்பரே! நான் எப்பொழுதும் எண்ணுவது இதுவே!

தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே எந்தன் ஆக்கம். :)
 

அடுத்த வீட்டில் நடக்கும் வரை!!

உலகை மேம்படுத்தவதாக நினைத்து,
உலக விஷயங்களை அலுசுவார் சிலர்!

முற்போக்குவாதி என்ற பெயரெடுக்க,
தற்கால மாற்றங்கள் தேவை என்பார்!

வேறு குல வாழ்க்கைத் துணையினை.
தேர்வு செய்தலே நலம் என்றுரைப்பார்!

குணமே உயர்வு என்று தத்துவம் பேசி,
பணமே பொருட்டல்ல என்று கூறுவார்!

திருமணத்திற்கு முன்பே தம்பதியராக
இருவர் வாழ்வதும் புதுமையே என்பார்!

அந்த வாழ்வினால் பிள்ளைச் செல்வம்
வந்தால் சட்டம் ஏற்க வேணுமென்பார்!

பல திருமணங்கள் செய்த மங்கையைப்
பலவாறு புகழ்வார்; வீர மங்கை என்பார்!

எல்லாம் நலம்தான் அவர்களுக்கு, இவை
எல்லாம் அடுத்த வீட்டில் நடக்கும் வரை!!


:couch2: . . . :blah:
 
then tamizhil ezhudum ungal kavithaigal yenakku mikka magizhchi alikarathu [ melurrukkum kavithai utpada]

tamil kulam seerazhivathil ungal varutham ,kopam therikirathu .

nalla matrangal varavendum enra aathangam purikirathu ..

kula kattupadu meeri nadakkum thirumanangal,

thirumanam illamal thambthiyarai vazhvaduponra cheyalkal ungalai varuthukkurathu.

neengal solvadhu seri

nam veetil nadakkada varai niraya pesuvom enru tonrukirathu ungalukku.

varum kalangalil neraya matrangal varum

nammal thakku pidika mudiyuma ?

yojani panna vendiya vishayam.

sila karuthukkal ungalai thunpurrthi irundal yen anuthabangal

the above is my pathetic attempt to write tamil in english .
vaasaka dhosham tchandavya
 
Last edited:
I was a sort of shocked to read Dhikshita Sir's post!

He is descendant of a great musician, who invented the type of Veena that Carnatic artists are playing now. :thumb:
 
Dear RR ji,


Dikshita Ji is a fairly new member who is polite and asks relevant questions in Forum..I feel he is also entitled to share his opinion just like anyone else.

Dikshita ji has been a gentleman in Forum.

RR ji..I truly understand your good nature which is full of admirable cultural values but whatever said and done we need to respect Diskhita Ji's opinion in his post too.

So may be you might want to consider deleting your post to be fair to him.


I hope you dont take my post in the wrong sense.


Dikshita Ji..in case you feel that this is none of my business and I did not even need to write this post I apologize in advance to you.
 
Last edited:
Dear Renu,

Dhikshita Sir has written

Madam,

Extremely sorry for my above posting since I have no other option except to swim along the flow of water reluctantly. I cannot vent my inner feelings here. Sorry, Sorry!!
After reading the words in bold in the above post , I think there is no need to delete my post.

I really did not expect the earlier post from him because he is from a very traditional family. :thumb:
 
Dear Renu,

Dhikshita Sir has written

After reading the words in bold in the above post , I think there is no need to delete my post.



Dear RR ji,

Agreed but even those who come from traditional families too might have their own opinion..yes I too read what he replied you that is why in my post in live in thread I told him not to go along the flow of the majority and he can differ and bravely state his views..but RR ji even then I feel you should delete your post cos a new person reading it might feel that Diskhita is not like his ancestors and people might get the wrong impression of a good man like him..so its for that sake I wish you would delete your post.
 
Ho...You observed so many things...and put it in very nice words...i wonder how can be so specific in expressing your thoughts even without leaving a single male inactivity

rv
 
குளிர்ந்தது சிங்காரச் சென்னை!

அக்னியின் தாக்கம் போல வருத்துமே என,
அக்னி நட்சத்திரத் தொடக்க நாளில் எண்ண,

இறையின் அருளினால் வந்து பொழிந்து, மிக
விரைவில் குளிர்வித்தது வான்மழை இன்று!

குளிர்ந்தது சிங்காரச் சென்னை மண் மட்டுமா?
குளிர்ந்தது இங்கு வாழ் மக்களின் மனங்களும்!

பெய்யாதா என்று ஏங்கியபோது வந்த மழை,
மெய்யாகவே கோடை மழைதான்; நிஜமே!!

:rain: . . . :dance:
 
மௌனம் கலக நாஸ்தி!

நல்லவை உரைக்கப் போனால், நமக்கெதிராய்
அல்லவை உரைக்க நண்பரும் கூட வருவார்!

என்றோ விளையாட்டாகச் செய்ததைச் சுட்டி,
இன்று எதிர்த்திட விழைவார் கங்கணம் கட்டி!

'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்,
அதனின் அதனின் இலன்' என்றது பொது மறை!

மனம் அமைதியடைய எளிய வழி யாதெனில்,
தினம் மௌனம் காக்க வேண்டும் சில முறை!

:tape: ..... :peace:
 
Madam,
It is a pleasure to read such sarcastic comments passed on the better part which also contains hilarious thought.
 
Madam,
It is a pleasure to read such sarcastic comments passed on the better part which also contains hilarious thought.
மௌனம் கலக நாஸ்தி!

இது என் இணையதள நண்பர்கள் சிலருக்கும் பொருந்துவதை அறிவீர்களா?
வேறு இழையில் நடந்தவைதான் என் எண்ண அலைகளைத் தூண்டிய இப்படி!! :ranger:
 
இயற்கையின் மேன்மை!

பூமித் தாயின் தேகத்தைக் குளிர்விக்க
பூமியில் விழவேண்டும் குளிர் மழை!

எத்தனை தண்ணீர் நாம் ஊற்றினாலும்
அத்தனை குளிர்ச்சி தந்திட முடியாது!

சிங்காரச் சென்னையிலே இரவு நேரம்
பாங்காக வந்தது இடியுடன் பெரு மழை!

அக்னி நட்சத்திற்குப் பின்பும் தொடர்ந்து
அக்னியாய் வாட்டிய சூடும் குறைந்தது!

இயற்கையின் மேன்மை நிகரற்றது!
செயற்கை அதற்கு ஈடிணையாகாது!

:rain: . . . :thumb: . . . :cool:
 
கலிகாலத்தில் கைமேல் பலன்!

கலிகாலத்தில் கைமேல் பலன் என்ற வாக்கியத்தை
அறிவாளியின் கூற்றாக அனுபவத்தில் அறிந்தேன்!

இளமையில் செய்த நன்மை தீமைகளே, வாழ்வின்
முதுமையில் பிரதிபலிக்கும் என்பது உண்மையே!

தாய் தந்தையரைச் சிரத்தையுடன் பேணியவர், தம்
சேய்களால் காக்கப்படுவது என்றென்றும் நிஜமாகும்!

இளமையில் ஒரு பெண்ணை மணக்காது மறுத்தவர்,
முதுமையில் தன் பேரன் விவாகரத்தைக் காண்பார்!

பெற்றவருக்குப் புது உடை வாங்கித் தராதவர், உடை
சற்றும் அணிய முடியாது அவஸ்தை அனுபவிப்பார்!

தந்தைக்கு வீட்டில் அனுமதி அளிக்காதவர், பிள்ளை
தன்னை கவனிக்காததைச் சொல்லிப் புலம்பிடுவார்!

சுற்றத்தைப் போற்றாது வாழ்ந்தவர், தம் முதுமையில்
சுற்றம் பராமுகமாய்ப் போவது கண்டு வருந்திடுவார்!

நல்லதை நினைத்து, நல்லதைச் செய்தால், முதுமை
நல்ல விதம் அமையும்; நினைவிலே கொள்வோம்!

:decision: .... :angel:

 
thanks - very nice quote !

Very Nice quote !

Thanks a lot

கலிகாலத்தில் கைமேல் பலன்!

கலிகாலத்தில் கைமேல் பலன் என்ற வாக்கியத்தை
அறிவாளியின் கூற்றாக அனுபவத்தில் அறிந்தேன்!

இளமையில் செய்த நன்மை தீமைகளே, வாழ்வின்
முதுமையில் பிரதிபலிக்கும் என்பது உண்மையே!

தாய் தந்தையரைச் சிரத்தையுடன் பேணியவர், தம்
சேய்களால் காக்கப்படுவது என்றென்றும் நிஜமாகும்!

இளமையில் ஒரு பெண்ணை மணக்காது மறுத்தவர்,
முதுமையில் தன் பேரன் விவாகரத்தைக் காண்பார்!

பெற்றவருக்குப் புது உடை வாங்கித் தராதவர், உடை
சற்றும் அணிய முடியாது அவஸ்தை அனுபவிப்பார்!

தந்தைக்கு வீட்டில் அனுமதி அளிக்காதவர், பிள்ளை
தன்னை கவனிக்காததைச் சொல்லிப் புலம்பிடுவார்!

சுற்றத்தைப் போற்றாது வாழ்ந்தவர், தம் முதுமையில்
சுற்றம் பராமுகமாய்ப் போவது கண்டு வருந்திடுவார்!

நல்லதை நினைத்து, நல்லதைச் செய்தால், முதுமை
நல்ல விதம் அமையும்; நினைவிலே கொள்வோம்!

:decision: .... :angel:

 

Latest posts

Latest ads

Back
Top