கலிகாலத்தில் கைமேல் பலன்!
கலிகாலத்தில் கைமேல் பலன் என்ற வாக்கியத்தை
அறிவாளியின் கூற்றாக அனுபவத்தில் அறிந்தேன்!
இளமையில் செய்த நன்மை தீமைகளே, வாழ்வின்
முதுமையில் பிரதிபலிக்கும் என்பது உண்மையே!
தாய் தந்தையரைச் சிரத்தையுடன் பேணியவர், தம்
சேய்களால் காக்கப்படுவது என்றென்றும் நிஜமாகும்!
இளமையில் ஒரு பெண்ணை மணக்காது மறுத்தவர்,
முதுமையில் தன் பேரன் விவாகரத்தைக் காண்பார்!
பெற்றவருக்குப் புது உடை வாங்கித் தராதவர், உடை
சற்றும் அணிய முடியாது அவஸ்தை அனுபவிப்பார்!
தந்தைக்கு வீட்டில் அனுமதி அளிக்காதவர், பிள்ளை
தன்னை கவனிக்காததைச் சொல்லிப் புலம்பிடுவார்!
சுற்றத்தைப் போற்றாது வாழ்ந்தவர், தம் முதுமையில்
சுற்றம் பராமுகமாய்ப் போவது கண்டு வருந்திடுவார்!
நல்லதை நினைத்து, நல்லதைச் செய்தால், முதுமை
நல்ல விதம் அமையும்; நினைவிலே கொள்வோம்!
:decision: .... :angel:
It takes all sorts to make this worldநான்காம் ஆண்டு நிறைவு!
நாட்காட்டியில் இன்றைய தேதி கண்டதும்
நான் எண்ணியது இந்த இணையதளத்தை!
இந்த நான்கு ஆண்டுகளில், நிஜ வாழ்விலும்
வ்ந்த நல்ல நண்பர்கள் சிலருக்கு என் நன்றி!
நல்ல பரிசுகள் தந்த நல்ல நண்பர் ஒருவர்;
அல்லவை கூறி மனதை வருத்த ஒருவர்!
முதல் நாள் முதலாய் மதிப்பவர் ஒருவர்;
மோதலில் துவங்கி நண்பரானவர் ஒருவர்!
நல்லவை வரும்போது எண்ணி மகிழவும்,
அல்லவை வரும்போது சிரித்து விலகவும்,
என்னைத் தயார் செய்தது இந்தத் தளமே!
என் பாராட்டுக்கள் என்றும் உரித்தாகுமே!
அன்னை ஒரு குழந்தை!
மணிவிழா முடிந்த பின், குழந்தைப் பராமரிப்பு,
இனிதே வந்திடும், வாரிசுகள் அருகிலிருந்தால்!
அவர்கள் கடல் கடந்து போய்விட்டாலோ, நாம்
அவர்களிடம் சென்றாலே அந்த வேலை வரும்!
தளிர் நடைக் குழந்தைக்கு மட்டும்தானா உதவி?
தளர் நடை அன்னைக்கும் அது தேவையாகுமே!
நீராட்ட, முடி கட்ட, உணவூட்ட, உதவி தேடிடும்,
சீராட்டி வளர்த்த நம் அன்னையும் ஒரு குழந்தை!
தீபாவளி உயர்வை அளிக்கட்டும்!
மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்று
மனித குலத்துக்கு உரைத்தது உயர்ந்த வள்ளுவம்!
மாசு படிந்த இடமெல்லாம் ஒளி மங்கும்; மனதின்
மாசுகளோ மனதை இருள் மயமாக்கிக் கெடுக்கும்!
தீப வரிசைகள், இந்த தீபாவளி நன்நாளில், நமைத்
தீய வழியில் செல்ல வைக்கும் மன இருளை நீக்கி,
தூயவராய் இருக்கச் செய்து, மனித குலம் முழுதும்
தூய அன்பு பெருகச் செய்து, உயர்வை அளிக்கட்டும்!
இணையதள நண்பர் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அன்னை ஒரு குழந்தை!
மணிவிழா முடிந்த பின், குழந்தைப் பராமரிப்பு,
இனிதே வந்திடும், வாரிசுகள் அருகிலிருந்தால்!
அவர்கள் கடல் கடந்து போய்விட்டாலோ, நாம்
அவர்களிடம் சென்றாலே அந்த வேலை வரும்!
தளிர் நடைக் குழந்தைக்கு மட்டும்தானா உதவி?
தளர் நடை அன்னைக்கும் அது தேவையாகுமே!
நீராட்ட, முடி கட்ட, உணவூட்ட, உதவி தேடிடும்,
சீராட்டி வளர்த்த நம் அன்னையும் ஒரு குழந்தை!