• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

...........
'மாத்திரை உடைக்க வேண்டி, குட்டி உபகரணம் ஒன்று!'

PILL SPLITTER:

086pill%20splitter.jpg

:peace:
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 83

குட்டிப் பெட்டிக் கடைகளில் கூட, கல்லாப் பெட்டியில் உள்ள
குட்டிப் பசங்கள், நம்ம ஊரில் மனக்கணக்கில் 'பில்' போடும்!

இந்த ஊரில் பல கடைகளில் 'பில்' போட "ராமானுஜர்கள்"!
எந்தக் கணக்கு என்றாலும், மெஷின் தேவை அவர்களுக்கு!

இப்போது என் காமெடி அனுபவம்:

மகன் வீட்டில், ஒரு பெட்டி நிறைய பத்து சென்ட்டுகள் கிடக்க,
அவன் அறியாமல், நான் ஒரு நாள் அவற்றை எண்ணி இருக்க,

ஐம்பது டாலர் வரை காசுகள் சேர்ந்து கனத்திருக்க, அவற்றை
ஐம்பது டாலர்களாக்க, பத்துப் பத்தாய் CELLOTAPE ஆல் சுற்றி,

கடைக்குக் கொண்டு சென்று, கொஞ்சம் பொருட்கள் வாங்கி,
கடையில் தந்த 9 டாலர் 12 காசு பில் பணத்துக்கு, நான் செய்த

ஒன்பது உருண்டைகளும் (!), பன்னிரண்டு காசுகளும் எடுத்து
அன்புச் சிரிப்புடனே கொடுக்க, 'கல்லாப் பெட்டி' அதிசயித்து,

அதையெல்லாம் பிரித்துப் போடச் சொல்ல, 'யாரால் ஒட்டிய
இதையெல்லாம் பிரிக்க முடியும்', என்று சலித்துக்கொண்டு,

பத்து டாலர் நோட்டும், பன்னிரண்டு சென்ட்டும் தந்தேன், ஒரு
பத்து சென்ட் காசேனும் வீட்டை விட்டுச் செல்லுமே, என்று!

அவனோ, 'YOU AAZH GIVIN' TOO MUCH MONEY' என உரைத்து,
சிவனே என்று, என் சென்ட்டுகளை என்னிடமே தள்ளினான்!

'இதையும் எடுத்துக்கொண்டு, ஒரு டாலர் கொடுங்கள்', என்று
அதி சாமர்த்தியம் போல நான் சொல்ல, உடனே தன்னுடைய

மெஷினைத் தட்டி, 'இல்லை, நான்தான் 88 சென்ட் தரணும்!
மெஷின் கூறும் சரியாக!' என்று கணக்குச் சொல்லிவிட்டு,

என்னுடைய பன்னிரண்டு சென்ட்டுகளுடன், 88 சென்ட்டுகள்
தன்னுடைய கல்லாப் பெட்டியிலிருந்து கொடுத்துவிட்டான்!

மனதில் 'அட ராமானுஜா!', என்று எண்ணியபடி, மேலும் பை
கனக்க, அந்த எண்பத்தெட்டு காசுகளை அள்ளிப் போட்டேன்!

:clap2: . :clap2: . தொடரும்..................
 
very good Malaysia Kavithigal. Feel like going to Malaysia
Thank you Sir! If you have not visited the US, please read

கடல் கடந்த முதல் அனுபவம் (written later) and

கடல் கடந்த இரண்டாம் அனுபவம் (written first!)
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 84

சென்னை திரும்பும் நாள் நெருங்கி வந்து விட்டது;
இன்னும் மகனின் அலுவலகம் பார்க்கவே இல்லை!

தன் அதி நவீன KEY BOARD, MOUSE ஆகியவை காட்ட,
தன் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான்!

உடை பற்றி அதிக அக்கறை காட்டாது, மிக எளிய
உடையான அரை நிஜாரில், சிலர் அங்கு உலவினர்.

கொஞ்சம் நன்றாக உடுத்துவது, நம்ம பசங்களே.
மிஞ்சும் வடிவழகில் புதிய KEY BOARD, மகனுக்கு!

நல்ல வடிவில் இருந்தது அதன் அழகிய தோற்றம்;
சின்ன உருண்டையாக சின்ன ஒரு MOUSE ன் ஏற்றம்!

மிக அதிக நேரம் கணினியுடன் அவன் கழிப்பதால்,
மிக இதமாகக் கைகளுக்கு அவை இருக்கின்றன.

குடிப்பதற்கு நீருடன் பலவித பானங்களும் உள்ளன;
எடுத்துச் செல்லலாம், எந்த நேரத்திலும், தாம் குடிக்க.

OATS உணவை எல்லோரும் விரும்பி உண்ணுவதால்,
OATS வகைகளும், வெந்நீரும் வைத்துள்ளார், அங்கு.

காய்கறி மட்டும் வீட்டிலிருந்து கொண்டு போனால்,
'ஓட்ஸ்' சாதம் எப்போதும் தயாரித்துக் கொள்ளலாம்!

வசதியாக அலுவலகம் முழுதும் அமைந்து உள்ளதால்,
அசதியாகும் வரை, பல மணி நேரம் வேலை நடக்கும்!

:hungry: . . :tea: . தொடரும் ...................

 
Last edited:
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 85

அந்த நாளும் வந்தது! விமானம் ஏறணும் அன்று.
அந்த ஊர் சுற்றத்திடம், தொலைபேசினோம்!

சரியான நேரத்தில் அந்த விமானம் புறப்பட்டது;
சரியாகக் காலை ஐந்தரைக்குச் சேரும் FRANKFURT.

கொடுத்த உணவில் இலை தழைகள் அதிகம்;
எடுத்த பசிக்கு ஏதோ சாப்பிட்டு சமாளித்தோம்.

காபியைப் பற்றிச் சொல்லக் கூடாது! கொடுத்த
காபி போல அந்தக் கசப்பு, குடித்ததே கிடையாது!

இரண்டு மணி நேரம் பறந்ததும், வெளியே பார்க்க,
இருண்டு, வானம் கருமையாய் நக்ஷத்திரச் சிதறல்.

இந்தியாவில் பௌர்ணமியில் 'நிற்கும் முயல்' ;
விந்தையாக இருக்கும் 'படுத்த முயல்' போல இங்கு!

பால் வண்ண மேகப் படுக்கை, நிலா வெளிச்சத்தில்;
பாற்கடல் இப்படித்தான் வடிவழகாக இருக்குமோ?

சினிமா சானலில் MUPPET TREASURE ISLAND வந்தது;
சினிமாவில் வில்லன் சிரிப்பு, ரஜனி 'ஸ்டயிலில்'.

எப்போதும்போல சூடான டவலுடன், 'GOOD MORNING';
அப்போது பரிமாறினார், நல்ல சூடான சிற்றுண்டி.

ஐந்து மணி நேரம். செக் இன் செய்வதற்கு இருக்க,
எழுந்து பொடி நடையாக ஒரு சுற்று சுற்றினோம்!

:plane: . . தொடரும் ....................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 86

நான்கு மணி நேரம் கடந்தவுடன், எனக்கு வந்தது
நன்கு பசி; எனக்கு அப்போதே 'ஆ அம்' வேண்டும்!

சுற்றிலும் அசைவ உணவுகளே பல நிறைந்து மணக்க,
சுற்றிலும் நோட்டமிட்டோம், BUN கிடைக்குமாவென.

ஒரு இடத்தில் BUN கண்ணில் பட, அந்தக் கடையில்
ஒருவன் சொன்னான், 'இது HAM BURGER செய்யவே'.

அந்த BUN தட்டையே எடுத்து, அந்தப்புறம் வைத்தான்;
எந்த உணவேனும் கிடைக்குமாவெனத் தேடினோம்.

காபி மட்டும் குடிக்கலாம் என்று ஓரிடத்தில் ஆர்டர்;
காபி வந்தது, துக்கிணியூண்டு குட்டிக் கப்பில் எமக்கு!

அந்தக் கசப்புக் காபி, அதற்கு மேலே இறங்காது என்று
வந்த எண்ணத்தினால்தான் அந்தத் துக்கிணிக் கப்பா?

சிரித்துக்கொண்டே ஆறு டாலர் தருமாறு அவன் கேட்க,
வெறுப்பு வந்தது! 'சாக்கலேட்'டே வாங்கியிருக்கலாம்!

சர்க்கரை அளவு குருதியில் ஏறினாலும், அந்த நேரம்,
அக்கறையுடன் பசியை, அந்தச் சர்க்கரை குறைக்குமே!

பத்து மணிக்கு எங்களை வரிசையில் வருமாறு அழைத்து,
மெத்தக் கால்வலி எடுக்கும் வரை, நிற்கவே வைத்தனர்!

சென்னை செல்லும் விமானப் பயணிகள் அந்த இடத்தில்,
செல்லாக் காசு போலவே மதிப்பின்றிப் போகின்றார்கள்!

ஜன்னல் மற்றும் நடு இருக்கைகள் விமானத்தில் கிடைக்க,
ஜன்னல் இருக்கைக்குச் சென்று, அமர்ந்துவிட்டேன் நான்.

:plane: . . தொடரும் ..........................


 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 86
...................
பத்து மணிக்கு எங்களை வரிசையில் வருமாறு அழைத்து,
மெத்தக் கால்வலி எடுக்கும் வரை, நிற்கவே வைத்தனர்!

சென்னை செல்லும் விமானப் பயணிகள் அந்த இடத்தில்,
செல்லாக் காசு போலவே மதிப்பின்றிப் போகின்றார்கள்!
..................

மதிப்பு!

அன்று காந்திஜி காலம்; இந்தியப் பயணிகளை
ஒன்றுக்கும் உதவாதவர் போல நினைத்தனர்!

அவர் அனுபவித்த பயண அனுபவக் கொடுமை,
எவர் ஆயினும் மறக்கவே முடியாது; உண்மை!

அன்று FRANKFURT விமான நிலையத்தில், நாங்கள்
நின்ற சென்னைப் பயணிகள் வரிசை, பாடுபட்டது.

இத்தனை துன்பப்படுத்துவது ஏன் என்று, மனதில்
எத்தனை ஆராய்ந்தாலும், விடையே இல்லை!

இந்திய மாணவர்கள், இன்று US நாட்டில் படும்பாடு
சிந்தித்தால், ஏனென்று அதற்கும் விடை இல்லை!

இந்தியரின் நிலைமை உயர்ந்திடவேண்டும் என,
இந்தியத் தாயையே நாம் வேண்டிக்கொள்வோம்!

உலகில் இந்தியா உய்ய வேண்டும்... :pray2:
ராஜி ராம்
 
Last edited:
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 87

மணிக்கு ஒரு முறை ஏதோ சாப்பிடக் கொடுத்தனர்;
பசிக்க விடாமல் பயணம்; ஆனால் தூக்கமில்லை.

ஆறு மணிநேரம் பறந்த பின், நன்றாக இருட்டியது;
இரு அடுக்குகளாய் மேகங்கள்; நடுவில் விமானம்.

உலக வரைபடத்தில் பார்ப்பதுபோலவே, ஓரிடத்தில்,
அழகு வடிவத்தில், சிவப்பு மலைப் பகுதி தெரிந்தது.

ஒரு இடத்தில் கீழே, கண்ணில் பட்டது பளீர் மின்னல்;
ஒரு இடிச் சத்தம்கூட உள்ளே நாம் கேட்க முடியாதே!

நள்ளிரவு நெருங்கிவிட்டது; நெருங்கினோம் நாங்கள்,
உள்ளம் கவர் சிங்காரச் சென்னையை; விமானம்

மாநகரைத் தாண்டிச் சென்று, கடல் மீது வட்டமிட்டு,
விமான நிலையத்தில் வந்து, மெதுவாக இறங்கியது.

உயரே இருந்து பார்த்தால், சென்னை மிகச் சிங்காரமே!
உயர்ந்த ஒளி விளக்குகள் மிளிர, ஒளிரும் ஒரு அழகே!

விமானம் தரையைத் தொடும் நேரம் வந்துவிட்டது;
நிதானம் வேண்டுமென அறிவிப்பும் வந்துவிட்டது!

தட தடவென்ற சத்தத்துடன், ஓடு தளத்தில் விமானம்;
கட கடவென்ற எங்கள் தெருக்களுக்கு, முன்னோட்டம்!

உருளை வைத்த பெட்டியின் கைப்பிடியைப் பிடித்து,
உருட்டினார் என்னவர், இருபுறமும் பெட்டி ஆடி வர!

அன்று துச்சாதனன் திரௌபதியைப் பற்றி, அவைக்கு
கொண்டு சென்றது, ஏனோ எனக்கு நினைவு வந்தது!

:wave: தொடரும் .............


 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 88

நடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க, நான் அங்கு
இடையிடையே அவசரமாய் ஓடவேண்டியிருந்தது!

ஓடினது நல்லதுதான்; வரிசையில் அவர் விரும்பித்
தேடிய முதலிடம் கிடைத்தது; மனம் மகிழ்ந்தோம்!

மூன்று பெட்டிகள் பத்து நிமிடங்களில் வந்து விழ,
முப்பது நிமிடங்களுக்குப் பின், நான்காவது வந்தது!

கிடைக்காது போனால், மீண்டும் விமான நிலையம்
அடுத்த நாளும் வரவேண்டும்; நல்ல வேளைதான்!

அண்ணா மகன், வாடகைக் கார் கொண்டுவந்திருக்க,
சொன்னபடி அவன் செய்ததால், மீண்டும் மகிழ்ச்சி!

இனிய இல்லம் நுழைய, நாப்தலின் உருண்டையின்,
இனிய மணம் கமழ்ந்தது; கரப்பான் ஒன்றும் இல்லை.

செல்லப் பெயர், 'ஜூஜூ' என்று கொண்ட ஒரு பல்லி,
செல்லமாக ஓடும், தினமும் ஜன்னலின் வெளியில்!

ஜன்னல் அருகே காத்திருந்தது, அன்று உள்ளேயே;
ஜன்னல் வலையைத் திறந்ததும், ஓடியது வெளியே!

என்னவரின் அக்கா, பால், பழம், பிஸ்கட், ரொட்டி என,
எல்லாம் வாங்கி, மேசை மீது அடுக்கி வைத்திருந்தார்.

இருபத்தியெட்டு மணி நேர அழுக்குப் போக்க, அந்த
இருட்டு வேளையில் குளித்த பின், பசியாறினோம்!

குறையில்லாது எங்கள் பயணம் நிறைவேற்றிய, எம்
இறையைப் பணிந்த பின்னர், உறங்கச் சென்றோம்!

:pray2: . . :sleep: தொடரும் ......................


 
re 302

dear raji,

one kutty request. in future, can you please pr msg me if you have a specific request. the only reason being, that i do not visit all posts, and many a times, i might miss a specific post directed at me.

a private msg would ensure a reply. hope you don't mind.

re the content of the post: yes, the salesclerks in canada too, look at the cash register, even for the simplest amounts. it appears to be an automatic reaction and also i suspect, that it is a mechanical action done void of any thinking.

the brain will only work when we ask it to work, n'est pas?

incidentally, without meaning to hurt any nationality, i have found the chinese store clerks here in toronto, more attuned to using their brains, and able to handle special requests like yours.

incidentally my wife is of the same, ie eager to dispense with loose change and also reluctant to break paper currencies unless she has to. :) the chinese clerks particularly the girls always cheerfully deal with such requests. the whites or the blacks appear unable to decipher her request in the first place, and it takes a lot of explaining. whatever may be the reason, indian kids, as a rule, do not appear to take retail part time jobs.

surprisingly, i see nowadays, even in chennai, where there are automatic cash registers, the counter clerks automatically tend to look at the cash register prior to dispensing with change.
 
re 302..........
surprisingly, i see nowadays, even in chennai, where there are automatic cash registers, the counter clerks automatically tend to look at the cash register prior to dispensing with change.
Thanks for your reply Sir! Since you were sending your comments on my previous posts, I sent the request along with my post..

You are right. The persons at our K K Nagar departmental store, look at the machine, to find out the amount to be returned... No mental math, what so ever!!

Regards..........
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 89

அமெரிக்கா சென்று வந்ததில்
ஆதாயம்தான் எனக்கு! – மகனின்

வீட்டுப் பராமரிப்புப் பொறுப்பேற்று – அவனை
விட்டுப் பிரியாமல் இருந்தோம், மூன்று திங்கள்.

நானே அறிந்திரா என் திறமைகளில் சில,
தானே வெளி வந்தது மிக வினோதம்தான்!

புதிதாக மோதிய எண்ண அலைகள் – சில
புதுக் கவிதைகளாய் மலர்ந்தன – என்

புதுக் கவிதைகள் படித்த சுற்றத்தார் – என்
புது ரசிகர்களாய் மாறி மனம் மகிழ்ந்தனர்.

பத்துப் படி 'எஸ்கலேடரில்' ஏறிச் செல்ல,
பத்து முறை யோசித்துத் தயங்கும் நான்,

அடுக்கடுக்கான 'எஸ்கலேடர்களில்',
தடுக்காமல் பலமுறை ஏறி இறங்கினேன்.

எல்லோரும் விரும்பும் 'டிஸ்னி' உலகில்,
பல்வேறு RIDE - களில் சென்று வந்தேன்!

'எலக்ட்ரிக் கிடார்' வாங்கிவிட்டு – அதை
வாசிக்க நேரமில்லாத, அன்பு மகனிடம்,

'ஹாட் டிரிக்' போல மூன்று பாடல்கள்,
முதல் நாளிலேயே வாசித்து, அசத்தினேன்!

பல பெற்றோர்கள் அமெரிக்காவில் செய்யாத
பல வேலைகள், நாங்கள் செய்து விட்டோம்.

'பஸ்'ஸிலும், 'சப்வே ரயிலிலும்', பல
பயணங்கள் செய்து விட்டோம்.

பல மைல்கள் நடந்து, நடந்து சென்று,
சில 'பவுண்டுகள்' எடை குறைந்தோம்.

பாலில் 'ஹார்மோன்' அதிகம், எனப் பயந்து,
பால், தயிர் குறைவாக உண்ண அறிந்தோம்.

எவ்வித சுற்றுச் சூழல் இருந்தாலும்,
செவ்வனே வாழலாமென அறிந்தோம்!

:peace: . . தொடரும் ...............


 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 90

அமெரிக்க வாழ் பசங்களை எண்ணினால், நம்
அமைதி கொஞ்சம் கலைந்துதான் போகிறது!

சமைக்க, சாப்பிட, தூங்க என எதற்கும் நேரம்
கிடைக்கக் கடினமான வாழ்க்கை முறைதான்!

எத்தனை நாள் முன் நறுக்கின காய்கறிகளோ!
அத்தனையும் வாங்கித்தான் சமைக்கின்றார்.

பாத்திரங்களில், 'ஒட்டாத பூச்சு' வகைகள், எம்
மாத்திரம் உடல் நலம் காக்குமென, அறியோம்.

'மைக்ரோவேவ்' சமையல் தீங்கு; என்றாலும்,
'மைக்ரோவேவ்' இல்லாத சமையலறை ஏது?

நன்றாகப் பழ வகைகள் கிடைத்தாலும், அவை
அன்றாடம் உண்பதில்லை; நறுக்க சோம்பலே!

திருமணமாகி, நல்ல மனைவி வாய்த்தால்தான்,
ஒருவாறு நம் பசங்களின் வாழ்க்கையும் சீராகும்!

நூறு நாள் அமெரிக்காவில் கழித்த நினைவுகள்,
ஆறு போல, ஓடி வரும் பல இனிய எண்ணங்கள்!

இறை அருளால் கிடைத்த நல்ல அனுபவங்கள்;
நிறைவான மகிழ்வைத் தந்தன, அந்த நாட்கள்!


உலகம் உய்ய வேண்டும், :pray:
ராஜி ராம்


 

நன்றிகள் பல.....

கடல் கடந்த இரண்டாம் அனுபவம் முதலில்;
கடல் கடந்த முதல் அனுபவம் அதன் பின்!

பயணக் க(வி)தைகள் 2009 இல்தான் ஆரம்பம்!
பயண முதல் அனுபவமோ 'பேச்சு' நடையில். (2003)

அந்தக் குறிப்புகள் மாறின புதுப் பக்கங்களாக;
இந்த விஷயமே முன்-பின் ஆகக் காரணம்.

மீண்டும் எழுதியபோது, மலரும் நினைவுகளில்,
மீண்டும் ஆனந்தித்தேன், நானும் உங்களுடன்!

பொறுமையாக இத்தனை பக்கங்களையும் படித்து,
அருமையாக எனக்கு ஊக்கமளித்த நண்பர்களுக்கு,

நன்றிகள் பல உரைப்பதுடன், முடிக்கிறேன்! மீண்டும்
என்று நல்ல பயணம் வந்தாலும், பகிர்ந்துகொள்வேன்!


:thumb: . . . :yo:

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்

 
நன்றி. ராஜி உய்ய வேண்டும்.

not quite sure what உய்ய means..but since raji wishes it for the whole wide world, i think it must be good, and so i would like to wish it for her too :) :)
 
hi raji,
these are nice poems as travelogue.....im in america more than ten years....life is like that ....some time when we land in chennai....

we have different feelings....even though chennai is our land ...some time we feel NRI....initialy we are NON RESIDENT INDIAN...now

we beacme a NEVER RETURNED INDIAN....here we keep milk more than 15 days in fridge....nothing has happen .....but in chennai

yesterdays milk todays moru.......one gallon milk we can use many days here...........LIFE IS LEARNING....WE LEARN EVERY MOMENTS/

EVERY DAY NEW THINGS..... here we callled three WWW's not permanent....WORK...WEATHER...WOMAN....its our life....

sometimes we says ...5 DIN NOUKARI...EK DIN GROCERY..EK DIN LAUNDARY..... for some ppl seven days naukari here.....

LIFE IS NOT BED OF ROSES ALWAYS....SOMETIMES THORNS TOO.... my 2 cents....

regards
tbs
 
...................
not quite sure what உய்ய means..........

'உய்ய வேண்டும்' என்பது, 'எல்லா நலமும் பெற்று, மேன்மை அடையவேண்டும்' என்ற வாழ்த்து..

தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

ராஜி ராம் :typing:
 
hi raji,
these are nice poems as travelogue.....im in america more than ten years....life is like that ..................
regards
tbs
Thank you TBS Sir, for your feed back.

'கடல் கடந்த முதல் அனுபவம் ..... 90

அமெரிக்க வாழ் பசங்களை எண்ணினால், நம்
அமைதி கொஞ்சம் கலைந்துதான் போகிறது!

சமைக்க, சாப்பிட, தூங்க என எதற்கும் நேரம்
கிடைக்கக் கடினமான வாழ்க்கை முறைதான்!'.............

I recorded these views about unmarried boys, since our son was not married at that time.....

As you say, life is tough in the US, at any stage of life, though many people in India imagine that NRIs lead a carefree, easy life there!

Regards,
Raji Ram :cool:
 
Uploading a few snap shots of the hard copies taken during our first visit, using my digicam

Photos taken during River cruise ride, Disney world.

DSCN5806.jpg


DSCN5809.jpg


DSCN5810.jpg
 
Photos of photos!

The snap shots of a tree near my son's apartment:

In April

DSCN5802.jpg


In May

DSCN5803.jpg


In June

DSCN5804.jpg


I would see the tree, through the window, everyday!

The photos were taken from our room. :thumb:

 
கடல்கடந்த அனுபவத்தைக் மடமடவெனத் தந்தினித்தீர்
அடைமழையாய்க் கவிதைகளில் அடுக்கடுக்காய்ச் சொல்லிட்டீர்
மடைதிறந்த வெள்ளமென மனவரியில் பதிந்திட்டீர்
அடுத்துவரும் கவிமழைக்காய்க் காத்திருக்க ஏலாது!
விடுப்பெடுத்துப் புறப்படுவீர்! மீண்டுமெமை நனைத்திடுவீர்!

வாழ்க!
 

Latest posts

Latest ads

Back
Top