• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

Dear VSK Sir,

சில நாளாய்க் காத்திருந்தேன்; மடல் கிடைத்தது இன்று;

சில நிமிடம் ஆனந்தித்தேன், கவிதை வாழ்த்துக் கண்டு!

விடுப்பு எடுத்துச் செல்லும் காலம், விரைவிலே வரும்;

அடுத்து வரும் க(வி)தைகளும், நண்பர்களைச் சேரும்!

Regards,
Raji Ram :typing:
 
சேருமந்தக் காலத்தைக் கணந்தோறும் காத்திருப்பேன்
கூறுமந்தக் கவிவரிகள் எமைநனைக்கக் காத்திருப்பேன்
தீருமெங்கள் ஆவலெலாம் புதுவரிகள் கண்டதுமே
வாருமெங்கள் கவிதாயினியே விருந்தொன்று படைத்திடவே!:))
 
ஆனந்தம் தரும் ஆலயங்கள்...

இறை அருள் இருந்தால் ஆலய தரிசனம் கிடைக்கும்;
நிறைவான தரிசனம் கிட்டும், குறைவான நேரத்திலும்!

உடன் பிறப்பின் உதவிக்கு கேரளா செல்ல, மற்றொரு
உடன் பிறப்பின் உதவியால் ஆலயங்கள் பார்த்தேன்!

சென்னையிலிருந்து என் பயணம், தனியாக; முதலில்
என்னை வாட்டியது, 'இவர்' சமையல் அறியாததால்!

'கேடரிங்' உபயத்தால் நிம்மதி கிடைத்தது; இரு வாரம்
'கேடரிங்' சாப்பாடு; 'இவர்' ஹோட்டலுக்குச் செல்லார்!

என் ரயில் அனுபவங்களை முதலில் எழுதுகின்றேன்;
என் ஆலய அனுபவங்கள் அதைத் தொடர்ந்து வரும்!

ரயிலில் 'குளிர்ப்பெட்டி' சிலவேளை தொல்லை தரும்!
ரயில் பெட்டியில் உள்ளவரின் ஓயாத 'செல்' பேச்சால்!

கேரளாக்காரர் தன் மலையாளத்திலே 'பறைந்து' தள்ள,
கேளாத செவிக்கும் கூடக் கேட்கும், அப்பெரும் அரவம்!

ஒருவழியாக நள்ளிரவில் பேச்சுக் கச்சேரி நிறைவடைய,
ஒருவழியாக மற்றவர்கள் நித்திராதேவியை நாடினோம்!

நிம்மதி தொடர்ந்தது கொஞ்ச நேரமே! மீண்டும் 'கேரளா'
நிம்மதி கெடுத்தது, நான்கு மணி நேரத்திலேயே! தனது

குடும்பம் முழுவதையும் ஒவ்வொருவராய் அழைத்தது;
நடுங்கும் குளிரிலும், எரிச்சலால் வியர்க்க வைத்தது!

ஐந்து மணிக்கு அவர்கள் எல்லோரும் இறங்கிச் செல்ல,
ஐந்து பேர்கள் கொண்ட வேறு குடும்பம் உள்ளே வந்தது!

காபி, டீ என்று குடிக்க ஆரம்பித்து, நித்திரை கலைத்தது;
காபிக் 'கப்' ஒன்றை என்னிடம் நீட்ட, நான் மறுத்தேன்!

ரயில் ஏழுமணிக்குத் திருச்சூரை அடைய, பெட்டிகளுடன்,
ரயிலை விட்டு இறங்கினேன், ஒரு பயணக் களைப்புடன்!

பெட்டிகளா என வியக்க வேண்டாம்! ஒன்றில் உடைகள்;
குட்டிப் பலாக்காய்கள் (எம் வீட்டிலிருந்து) மற்றொன்றில்!

:car: தொடரும்.....

 
க(வி)தையைப் படித்து ரசித்தற்கு நன்றி, குஞ்சுப்பு சார்!

தொடர்ந்து படியுங்கள்; உங்கள் கேரளா அல்(ல)வா!!! :ranger:
 
ஆனந்தம் தரும் ஆலயங்கள்... 2

இளைய சகோதரியின் இனிய இல்லத்தில் ஓய்வெடுத்து,
இனிய மாலை வேளை, ஆலயங்கள் காணச் சென்றோம்.

திருச்சூரில் மூன்று ஆலயங்கள் மிகப் பிரதானம்; ஒன்று
திருச்சூர் பூர விழாவை விமரிசையாகக் கொண்டாடும்

திரு வடக்குநாதர் சிவாலயம்; இன்னொன்று கண்ணனின்
திருவம்பாடிக் கிருஷ்ணனின் ஆலயம்; இன்னும் ஒன்று

பாரமேக்காவு பகவதி ஆலயம்; முதலிலே சிவ ஆலயமே
பார்க்க ஆவல்; பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று இது!

v1.JPG


பரந்து, விரிந்த ஒன்பது ஏக்கர் பரப்பளவிலே அமைந்தது;
பரந்த மனம், அக்கால அரசர்களுடையது என அறிவிப்பது!

சிறிய மலைப் பகுதி போல உயர்ந்த மேட்டுப் பகுதி; அதில்
அரிய இந்த ஆலயம், பிரம்மாண்டமாக வியாபிக்கின்றது!

ஆலயத்தின் உள்ளே போகும்போது, சூரிய அஸ்தமனம்;
ஆதவனின் அழகை, நின்று ரசிக்க ஆரம்பித்தோம்! நல்ல

குங்கும நிறத்தில் கண்ணைப் பறித்தது; இறைவன் ஆடும்
பாங்கான பந்து ஒன்றோ, என்று வியக்கவும் வைத்தது!

ஒரு நொடி தோன்றியது, பகவதி அம்மனின் பொட்டோ?
மறு நொடி, அதுவே நிஜமெனத் தோன்றியது! ஆதவன்

கார் மேகத்தின் இடையில் புகுந்து, சிறுத்து, மறுபடியும்
சீரான வட்டமாகப் பரிமளித்து அசத்தினான்! இதென்ன?

இறையை தரிசிக்க வந்த இடத்தில், எங்களை எல்லாம்
சிறைப் பிடித்து வைக்கிறானே, இப் பொல்லாத சூரியன்!

DSCN0888.JPG


இன்னும் கொஞ்சம் கீழிறங்கிப் போய், ஆதவன் மறைய,
மின்னும் தீபங்கள் திகழும் ஆலயத்தினுள் சென்றோம்!

:pray: தொடரும்..........
 
Note:

As a lover of sunrise, sunset and the Moon, I never miss a chance to click their beauty.

But unfortunately, I did not have my digicam with me, during the recent visit to Kerala.

Hence, missed to click the mesmerizing ORANGE SUN, surrounded by grey clouds!

The above picture of the Sun is a click of sunrise at Kanyakumari, in 2009!

And........... Now, a bunch of jack fruits hanging in our garden... Today's snap!


DSCN5868.JPG


:thumb: ... :cool:
 
ஆனந்தம் தரும் ஆலயங்கள்... 3

மிகவும் வேறுபாடுகள் தமிழ் நாட்டு முறைகளிலிருந்து;
மிகவும் வேறுபட்ட கூரைகள், ஓடுகளின் நளின வரிசை!

மின்சாரத்தை அதிகம் நம்பாது, எண்ணெய் விளக்குகள்;
மென்மையாய்க் கண்களுக்கு விருந்தாய் பிரகாரங்கள்!

உடையிலும் வேறுபாடு! எளிய வெள்ளை நூலாடைகள்;
சடையில் தொங்கும் மல்லிச் சரங்கள் காணவேயில்லை!

கரையில் முழ சரிகை வேலைப்பாடு இல்லாத 'முண்டு';
கரைக்கு ஏற்ற வண்ணத்தில் எளிய ரவிக்கையே உண்டு!

ஆண்கள் மேற்சட்டைகளுக்கு அனுமதி அங்கு இல்லை;
ஆண்களின் கூட்டத்தில் வியர்வை வழிந்து, தொல்லை!

பக்தியுடன் கண்மூடிப் பிரார்த்திக்கின்றார் அனைவரும்;
சக்தி வேண்டும், உயரப் படிகளைத் தாண்டி நாம் செல்ல!

சிவ லிங்கத்தை மூடியுள்ளது நெய்யால் ஆன சிறு குன்று;
சில நூறு ஆண்டுகளாகச் சேர்ந்து, பத்தடி உயரம் இன்று!

சந்திர கலைகளை வரிசையாக அடுக்கி, மின்னும் அழகு!
சந்ததம் மனத்திலிருந்து நீங்காது, மயக்கும் அந்த அழகு!

பரசுராமர் தியானத்தில் சிவனை வழிபட்டு உருக, அவர்
அழகு விஷ்ணுவின் மூர்த்தியைக் கண் விழித்துக் காண,

ஸ்ரீ ராமராக அந்த மூர்த்தியை நிலை நிறுத்தி, மீண்டும்
சீரான தியானத்தில் மூழ்க, வந்தது சங்கர நாராயணன்!

முடிவாகக் கிடைத்ததுதான் சிவனின் லிங்க உருவமாம்;
அழகாக மூன்று சன்னதிகளும், இன்றும் இருக்கின்றன!

சிவனின் பிரகாரத்தை, முழு வலம் வருவது கிடையாது;
கொஞ்சம் வலம் வந்தபின், எதிர் திசையில் செல்கிறார்!

விநாயகர், ஐயப்பன், ஸ்ரீ பார்வதி, கோபாலகிருஷ்ணன்,
வினை தீர்த்து நமைக் காக்க, எழிலுடனே திகழ்கின்றார்!

தொடரும்........

:pray:
 
ஆனந்தம் தரும் ஆலயங்கள்... 4

வழிபாடு செய்ய விதி முறைகள் பற்பல; அதன் வரிசை
தெளிவாக பெரிய பலகையில் எழுதியும் வைத்துள்ளார்!

ஒவ்வொரு இறை தரிசனம் செய்தபின் எந்த இறை என
ஒவ்வொரு விவரமும் மிக அருமையாக எழுதியுள்ளார்.

சில முறை படித்தாலும் நினைவில் நிற்கவில்லை! ஒரு
சிறு தாளில் எழுதி வைத்தால் முறையாகச் செய்யலாம்!

ஆதி சங்கரரின் பெற்றோர் இந்த ஆலயத்தில் வழிபட்டு,
ஆதிபகவன் அருளால் அவரை மகனாய் அடைந்தாராம்!

சங்கு சக்கரம் வைத்த, கூரை இல்லாத சன்னதி, அந்தச்
சங்கரரின் சன்னதியாக விளங்குவதையும் காணலாம்!

மிகப் பெரிய மைதானம் ஆலயத்தில் உண்டு; சுற்றிலும்
மிகப் பெரிய கோட்டைச் சுவர்களும் அழகாய் உண்டு!

பண்டிகைக் காலங்களில் பந்தலிட்டு, கச்சேரிகள் பற்பல
பண்டிதர்கள் செய்திடும் இடம், அந்த மைதானம் ஆகும்!

உலகு புகழும் சிறந்த திருச்சூர் பூரம் விழாவில், மிகவும்
அழகு அலங்காரத்தில் யானைகள் வரிசை கூடும் இடம்!

ஒரு வரிசை திருவம்பாடி கிருஷ்ணன் கோவிலிலிருந்து,
ஒரு வரிசை எதிரிலுள்ள பாரமேக்காவு கோவிலிலிருந்து,

என்று புறப்படும் யானை வரிசைகள், பஞ்ச வாத்தியங்கள்
நன்கு முழங்க, விழிகட்கும், செவிகட்கும் நல்ல விருந்தே!

paramekkavu%20pooram%20start%20off.jpg


ThrissurPooram-Kuda1.jpg


திருக்கோவிலின் எல்லா சன்னதிகளையும் தரிசித்தபின்,
திருவம்பாடிக் கிருஷ்ணன் கோவிலை வந்தடைந்தோம்!

ஒன்று கூற மறந்தேன்! எங்குமே நம்மைப் பிச்சை கேட்டு
வந்து, ஒருவரும் தொந்தரவு செய்வது இல்லவே இல்லை!

:hail: ... தொடரும்..............

 
ஆனந்தம் தரும் ஆலயங்கள்... 4

வழிபாடு செய்ய விதி முறைகள் பற்பல; அதன் வரிசை
தெளிவாக பெரிய பலகையில் எழுதியும் வைத்துள்ளார்!

ஒவ்வொரு இறை தரிசனம் செய்தபின் எந்த இறை என
ஒவ்வொரு விவரமும் மிக அருமையாக எழுதியுள்ளார்.

சில முறை படித்தாலும் நினைவில் நிற்கவில்லை! ஒரு
சிறு தாளில் எழுதி வைத்தால் முறையாகச் செய்யலாம்!

ஆதி சங்கரரின் பெற்றோர் இந்த ஆலயத்தில் வழிபட்டு,
ஆதிபகவன் அருளால் அவரை மகனாய் அடைந்தாராம்!

சங்கு சக்கரம் வைத்த, கூரை இல்லாத சன்னதி, அந்தச்
சங்கரரின் சன்னதியாக விளங்குவதையும் காணலாம்!

மிகப் பெரிய மைதானம் ஆலயத்தில் உண்டு; சுற்றிலும்
மிகப் பெரிய கோட்டைச் சுவர்களும் அழகாய் உண்டு!

பண்டிகைக் காலங்களில் பந்தலிட்டு, கச்சேரிகள் பற்பல
பண்டிதர்கள் செய்திடும் இடம், அந்த மைதானம் ஆகும்!

உலகு புகழும் சிறந்த திருச்சூர் பூரம் விழாவில், மிகவும்
அழகு அலங்காரத்தில் யானைகள் வரிசை கூடும் இடம்!

ஒரு வரிசை திருவம்பாடி கிருஷ்ணன் கோவிலிலிருந்து,
ஒரு வரிசை எதிரிலுள்ள பாரமேக்காவு கோவிலிலிருந்து,

என்று புறப்படும் யானை வரிசைகள், பஞ்ச வாத்தியங்கள்
நன்கு முழங்க, விழிகட்கும், செவிகட்கும் நல்ல விருந்தே!

paramekkavu%20pooram%20start%20off.jpg


ThrissurPooram-Kuda1.jpg


திருக்கோவிலின் எல்லா சன்னதிகளையும் தரிசித்தபின்,
திருவம்பாடிக் கிருஷ்ணன் கோவிலை வந்தடைந்தோம்!

ஒன்று கூற மறந்தேன்! எங்குமே நம்மைப் பிச்சை கேட்டு
வந்து, ஒருவரும் தொந்தரவு செய்வது இல்லவே இல்லை!

:hail: ... தொடரும்..............


தங்களின் பயணக்கட்டுரைக்கு (கவிதைகள்) நன்றி ..குறிப்பாக *புகைப்படங்களோடு வருவது நன்றாக உள்ளது..புகைப்படங்கள்தான் கட்டுரைக்கு மேலும் மெருகூட்டும் .
 
நன்றி சிவ ஷண்முகம் சார்!

குட்டிப் பயணமே எனினும் நான் தரிசித்த கோவில்களின் அழகு, எழுதத் தூண்டியது.

என் மூத்த சகோதரியின் உதவிக்காக கேரளா சென்றிருந்தேன்! இரு வாரங்களில், முதல் இரு நாட்கள் இளைய சகோதரியின் இனிய இல்லத்தில் தங்கியபோது, இந்த அருமையான தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன்!

நட்புடன்,
ராஜி ராம் :ranger:
 
ஆனந்தம் தரும் ஆலயங்கள்... 5

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான திருக்கோவில் இது;
ஆயிரம் கண்கள் போதாது கண்ணனின் அழகைக் காண!

சந்தனக் காப்பு இட்டு, வீசும் வாசனையுடன், நளினமாய்
புன்சிரிப்புத் தவழும் திருமுகம் குருவாயூரப்பன் போல!

கண்ணனின் இடப்புறம் தேவி பகவதியின் திருச்சன்னதி;
கண்கவர் அலங்காரியாக அருள் பாலித்து நிற்கின்றாள்!

நடையை மறைக்க வேண்டாமென அடிக்கடி வேண்டுதல்;
நடையை வீதியிலிருந்தே காணும் வகையில் அமைப்பு!

சின்ன ஜன்னல் போன்ற அமைப்பை எதிரே வைத்ததால்,
நின்று, வெளியிலிருந்தே தரிசனம் செய்ய மிகவும் வசதி!

நேரம் இன்மையால் ஆலயத்துள் வர இயலாத பக்தர்கள்,
நேர் எதிரே நின்று, வீதியிலிருந்து சேவித்துச் செல்கிறார்!

thiruvambaditemple.jpg


கண்ணனின் எல்லாப் பண்டிகைகளுமே விமரிசையாகக்
கண்கவர் வண்ணமாகக் கொண்டாடப்படும் ஆலயம் இது.

யானைகளின் வரிசைக்கு இடும் அலங்காரங்களை, நன்கு
யாவரும் போற்றும் வண்ணம் பாதுகாத்து வைக்கின்றார்!

thirvembady%20%2C%20elephant%27s%20decorations.jpg


கண்ணன், தேவியரை தரிசித்து, மற்ற சன்னதிகள் கண்டு,
கண்ணான பாரமேக்காவு பகவதியைக் காணச் சென்றோம்.

:pray: தொடரும்..........

We can find youngsters, standing near one window, to get a glimpse of the Lord!

Two small windows are provided to have dharshan of Lord Krishna and Devi
 
ஆனந்தம் தரும் ஆலயங்கள்... 6

-Paramekkavu_Temple.JPG


திருக்கோவில் முழுதும் பாறைமேல் அமைந்தது; எனவே
திருக்கோவில் 'பாரமேக்காவு' என்ற பெயரும் பெற்றதாம்!

ஆயிரம் ஆண்டுகள் பழைமை இந்தக் கோவில், என்றனர்;
ஆயினும் நம்ப முடியவில்லை, புதுமையாய் இருக்கிறது!

'தேவி சரணம்' என்று வரவேற்பு எழுத்துக்கள் ஜொலிக்கும்
தேவி கோவிலுக்குள் ஜொலித்தன எண்ணெய் விளக்குகள்.

எங்கு நோக்கினும் ஜுவாலைகள் ஆடியபடி இருக்க, நாம்
அங்கு காணுவது பக்தி மிக்க அன்பர்களின் கூட்டத்தை!

தங்கக் கவசத்தில் கண்களைப் பறிக்கும் அலங்காரியாக,
அங்கம் நிறை ஆபரணங்களுடன், அன்னை அருளுகிறாள்!

அசுரன் தலையைக் கொய்து பிடித்த திருக்கரம் இருந்தும்,
அசர வைக்கும் அமைதியுடன் உள்ளது அவள் திருமுகம்!

எட்டுக் கரங்களுடன் ஓங்கி உயர் வடிவமாக, தாய் அவள்
எட்டு திசைக்கும் புகழ் பரவி, பக்தர்களைக் காக்கின்றாள்!

bhagavati.jpg


திருச்சூர் பூராத் திருவிழாவில், யானைகளின் ஒரு வரிசை,
திருக்கோவில் வாயில் இருந்தே புறப்பட்டு வரும் என்றார்.

மனம் நிறையும் விஷயம் என்னவென்றால், விழா நடக்கும்
தினம், எல்லா மதத்தினரும் ஒற்றுமையாய்க் கூடுவாராம்!

மத நல்லிணக்கத்தைப் பறைசாற்ற, தென் இந்தியாவில்,
இதைவிட வேறு என்ன விழா சிறப்புற விளங்க முடியும்?

அன்னை தரிசனம் கண்டு, மன நிறைவு அடைந்து, உலகின்
அன்னை அருளாசியுடன், இனிய இல்லம் திரும்பினோம்!

இறை அருள் கிடைத்தால், மன நிறைவு வருவது நிஜமே!
இறை அருளை எண்ணியே, சாந்தியும் நிறையும் தினமே!


உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
Note:

இது என் பயணக் கவிதை இல்லை!

சிறு வயதில் படித்த ஆங்கிலக் கவிதை...

தமிழாக்கம் செய்யும் ஆர்வத்தால் எழுத விழைந்தேன்!

பின்னூட்டங்கள் வந்தால் மகிழ்வேன்!


இதயம் நிறைத்த இனிய பாடல்!

வயல் வெளியில் ஒற்றையாய்; அவளைப் பாருங்கள்!
கயல் விழியாள்; தொலை தூரத்திலே, தனிமையிலே,

அறுவடை செய்துகொண்டும், தானே பாடிக்கொண்டும்!
சற்றே நில்லுங்கள்; அல்லது, மெதுவாகச் செல்லுங்கள்!

தன் சுய முயற்சியால், பயிரை வெட்டி, தானியம் கட்டி,
தன் இனிய குரலால், பாடும் பாடலுக்கு மெருகு ஊட்டி,

அதோ! கேளுங்கள்! மிகவும் சிறந்த அவளின் பாடலை;
இதோ! நிறைந்து பெருகி வரும், அந்த இசைக் கடலை!

மேலே பறக்கும் எந்த வானம்பாடியும், இதைவிடவும்,
மேலான சிறந்த இசையை, எடுத்துக்கொண்டு சென்று,

பாலைவனத்தில், அரபிய நாட்டில் பயணம் செய்வோர்,
சோலைவனத்தில் தங்கும்போது, கொடுத்தது இல்லை!

கந்தர்வ இசை இது போன்று, இதுவரை கேட்டதில்லை,
சுந்தர வசந்த காலத்தில், கானக் குயிலின் குரலிலும்!

பரந்து விரிந்த ஆழ்கடலின் அமைதியையும் கெடுத்து,
விரிந்து பரவும் இதுவே, தொலை தூர தேசங்களிலும்!

ஏன் அவள் பாடுகிறாள் என, எவரேனும் சொல்வாரா?
தேன் குரலில், அவள் தன் சோகத்தை இசைக்கிறாளா?

என்றோ கொண்ட மன வருத்தங்களை, சச்சரவுகளை,
எங்கோ உள்ள பலவற்றை, நினைத்துப் பாடுகிறாளா?

ஏதேனும் சாதாரணமான நிகழ்வை எண்ணித்தானா?
ஏதேனும் இன்று நடந்துவிட்ட, பழகிய ஒரு விஷயமா?

ஏதேனும் இயற்கையிலேயே வந்து சேர்ந்த துயரமா?
ஏதேனும் மீண்டும் வரும், வேதைனையும் இழப்புமா?

எதுவாயினும், கன்னியவள் பாடியபடி இருக்கின்றாள்;
எது வந்தாலும், என் பாடலும் முடியாது, என்பதுபோல்!

தான் வேலை செய்யும் வேளை முழுதும், பாடியபடி,
தன் வளைந்த அரிவாளுடனே, தானும் வளைந்தபடி!

கேட்டேன்; ரசித்தேன் நானும்; ஆடாது, அசையாது;
கேட்டபடியே சென்றேன், உயர்ந்த மலையின் மீது!

கேட்ட இசை, என்னுடைய இதயத்தை நிறைத்தது;
கேட்கவே இல்லை அதுபோல, நாட்கள் பல கடந்தது!


அன்புடன்,
ராஜி ராம் :ranger:

***********************************************************

Solitary reaper by William Wordsworth.

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.

No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne’er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

Will no one tell me what she sings?--
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?

Whate’er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o’er the sickle bending;--
I listened, motionless and still;
And, as I mounted up the hill
The music in my heart I bore,
Long after it was heard no more.
 
Last edited:
raji,

i would like to thank you for opening the beauty and world of poems again, after so many decades.

wordsworth, ofcourse is tops. every spring, when i see daffodils grown here, i think of him. to do justice to him, i should be thinking of wordsworth all the time.

thank you again dear lady.
 
For my friends who missed this post which appeared in another thread!


மிகவும் பிடித்த இந்த நல்ல கவிதையை,
மிகவும் எளிய தமிழில் தர விழைகிறேன்!

ஒவ்வொரு சொல்லின் பொருள் தேடாது,
ஒருவாறு கருத்தைத் தர முனைகிறேன்!

*****************************************

What is this life if, full of care,
We have no time to stand and stare.

No time to stand beneath the boughs
And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,
Streams full of stars, like skies at night.

No time to turn at Beauty's glance,
And watch her feet, how they can dance.

No time to wait till her mouth can
Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,
We have no time to stand and stare.

--William Henry Davies

*****************************************

என்ன வாழ்வு இது?

என்ன வாழ்வு இது? பொறுப்பு மிகுதியால்,
நின்று நோக்கவும் நேரம் இல்லை எனில்!

இல்லை நேரம், மரக்கிளை நிழலில் நின்று,
பார்வை, மேயும் ஆநிரைகள் மீது செலுத்த!

இல்லை நேரம், காடுகள் கடக்கும் பொழுது,
துள்ளித் திரியும், சிறு அணில் கண்டு மகிழ!

இல்லை நேரம், காண, பரந்த பகல் ஒளியும்,
கொள்ளை நட்சத்திரங்கள், இரவு வானிலும்!

நேரம் இல்லை, அழகின் கடைக்கண் விழியும்,
பாதம் ஆடும் நடனமும், கவனித்து நோக்க!

நேரம் இல்லை, இதழ் விரிந்து, அந்தக் கண்கள்
ஆரம்பித்த புன்னகை, இனிதாய் மலரக் காண!

என்ன வாழ்வு இது? பொறுப்பு மிகுதியால்,
நின்று நோக்க, நேரமும் இல்லை எனில்!


அன்புடன்,
ராஜி ராம் :ranger:
 
Dear Kunjuppu Sir!

When I sent the above translation to my friends, one of them gave the idea to try the all time favorite poem by W W and I did so!

We had our primary education in a Tamil medium school in Anaimalai village, and of course learnt (mugged!!) this poem too! But during college days, when it appeared again, we could enjoy it better!

Thanks for your encouraging words.

Regards,
Raji Ram :cool:
 
ஆனந்தம் தரும் ஆலயங்கள்... 2
.................
ஆலயத்தின் உள்ளே போகும்போது, சூரிய அஸ்தமனம்;
ஆதவனின் அழகை, நின்று ரசிக்க ஆரம்பித்தோம்! நல்ல

குங்கும நிறத்தில் கண்ணைப் பறித்தது; இறைவன் ஆடும்
பாங்கான பந்து ஒன்றோ, என்று வியக்கவும் வைத்தது!

ஒரு நொடி தோன்றியது, பகவதி அம்மனின் பொட்டோ?
மறு நொடி, அதுவே நிஜமெனத் தோன்றியது! ஆதவன்

கார் மேகத்தின் இடையில் புகுந்து, சிறுத்து, மறுபடியும்
சீரான வட்டமாகப் பரிமளித்து அசத்தினான்! இதென்ன?

இறையை தரிசிக்க வந்த இடத்தில், எங்களை எல்லாம்
சிறைப் பிடித்து வைக்கிறானே, இப் பொல்லாத சூரியன்!

.................

Here is a picture of crimson sun, captured by my nephew at Trissor! :thumb:

Sunset%20%281%29.jpg
 
raji,

w.h.davies had a very interesting life story. i think he fought in world war 1 for the british.

later he came to canada, and travelled the length of the country as a tramp, basically begging and riding free in goods trains.

during one of this episodes, he fell down the wagon, and one of his legs was run over by the rails and he lost it.

still, with the kindness of canadians he was able to get by and continue. he wrote his life story in 'the autobiography of a super tramp'.

he returned to london, was poor and finally died alone and in poverty in a boarding house.

he was a minor poet of the 1/3 of 20th century. i do not know if he is even in print anymore.

i had an anglo indian teacher in school, whom i think i owe everything i know. d.o.perry.

mr.perry prescribed couple of davies' poems, which is how i came to know him. one of my life's lost pleasures which has opened up again thanks to you - english poems :)
 
Dear Sir!

I thought only Tamil poets were poor! Very touching story, you have given. Thank you.

All my friends who read the translations of the two poems say that, they think of their school days and thank me for that!!

Regards,
Raji Ram
 
Thank you Kunjuppu Sir, for the link.

I am reminded of an incident when my student made an error in the Tamil lyrics of a song. She sang பாவலர் யாவரும் பாடிய வேதனை, instead of வேந்தனை! Problem in spelling... She left the first 'n' in 'vendhanai' (most of my students write Tamil lyrics in English, since their second language is Hindi and third language, either Sanskrit of French!!

I told her, it is true that பாவலர் sing their வேதனை in many songs but here it is வேந்தனை!

Remembering one poem which we read in school! It is still fresh in my memory, though I forgot the name of the poet! Hope you will have the patience to read!!

நாரை விடு தூது.

நாராய், நாராய், செங்கால் நாராய்!

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன,

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!

நீயும் நின் மனைவியும்

தென்திசைக் குமரியாடி,

வடதிசைக்கு ஏகுவீராயின், எம்மூர்

சத்திமுற்றத்து வாவியுள் தங்கி,

நனை சுவர்க் கூரை கனை குரல் பல்லி

பாடு பார்த்திருக்கும் எம் மனைவி கண்டு,

எங்கோன் மாறன் வழுதி கூடலில்,

ஆடையின்றி வாடையால் மெலிந்து,

கையது கொண்டு மெய்யது பொத்தி,

காலது கொண்டு மேலது தழீஇ, இப்

பேழையுள் இருக்கும் பாம்பென விளங்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே!

The poet tells a stork which flies past, "Hey red legged, red beaked (compared to coral colour of cut பனையின் கிழங்கு) stork! If you go towards the North after having a bath in Then Kumari, (Kanyakumari), please go and stay at the pond in my village சத்திமுற்றம், and tell my wife, who is waiting for the voice of the lizard, which sits on the roof of my hut with wet walls, that you both have seen me (the poet) without proper clothing, becoming lean because of the blowing cold wind, covering my body with my arms and legs, appearing like a snake in a basket, in Raja Maaran Vazhuthi's Koodal nagaram."

On hearing this poem, the Raja presented the poet with lot of wealth, according to a story!

Regards,
Raji Ram :typing:
 
Continuing journey with William Henry Davies.

இணை உண்டோ?

பூக்களே! என் வீட்டின் வெளியே மலருங்கள்;
புத்தகங்களே! என் வீட்டின் உள்ளே அமருங்கள்!
சின்ன அளவில், இனியதாக அழகு இல்லம்;
வண்ண இலைகள் படர்ந்த, பெரிய தோட்டம்!

தேவை தங்கம் கொஞ்சம், எல்லா வாரமும்;
சேவை நானே உலகில் செய்ததால் கிட்டாது,
கிட்டவேண்டும், தன் மனதை மாற்ற இயலாத,
எட்டா உலகு சென்று அடைந்தவன், கொடுத்து!

அன்பு காட்டும் மனைவி; மென்மை மிகுந்தவள்;
அன்பு நோட்டம் என் கண்களில் மட்டும் கண்டு,
பேரழகை வருணிக்க, என் குரல் மட்டும் கேட்டு,
பேராசை இல்லாது, மன நிறைவு கொண்டவள்!

தானே கைதியாகி, ஆயுள் முழுதும், என்னுடன்
தான் கழித்திடுவாள், கல்லால் ஆன கூண்டிலும்!
கானகப் பறவைகளும் சுற்றிலும் பாடி மகிழும்,
தானாக, வாயிலிலும், புதரிலும், மரத்திலும்!

இன்குரலில் சிலவேளை அவள் பதில் தருவாள்;
இனிக்கும் அது பறவைகளின் குரலையே மிஞ்சி!
அன்புடன் தளிர் இலைகள் பார்க்கும் பறவைகள்,
அன்புடன் கூடிக் களிக்கும், கற்சுவரில் கொஞ்சி!

சிறிய இனிய இல்லம்; பெரியதொரு தோட்டம்;
சிறிதளவு தங்கம்; அன்பைப் பொழியும் மனைவி;
திடமாய் சரீரம்; அமைதியாய் மனம்; இப்பேறு
தினமும் பெற்றவனுக்கு, இணையுண்டோ, கூறு!


Truly great!

W. H. Davies


My walls outside must have some flowers,
My walls within must have some books;
A house that's small; a garden large,
And in it leafy nooks.

A little gold that's sure each week;
That comes not from my living kind,
But from a dead man in his grave,
Who cannot change his mind.

A lovely wife, and gentle too;
Contented that no eyes but mine
Can see her many charms, nor voice
To call her beauty fine.

Where she would in that stone cage live,
A self-made prisoner, with me;
While many a wild bird sang around,
On gate, on bush, on tree.

And she sometimes to answer them,
In her far sweeter voice than all;
Till birds, that loved to look on leaves,
Will doat on a stone wall.

With this small house, this garden large,
This little gold, this lovely mate,
With health in body, peace in heart—
Show me a man more great.

:couch2:
 
Last edited:
Truly great! by W. H. Davies

நம் பாரதியாரின் 'காணி நிலம் வேண்டும்'
நினைவிற்கு வருகிறது, அல்லவா? :clap2:
 
மலரே! தங்க மலரே!

அலைந்தேன் தனியே; மலை மேல்
அலையும் அந்த மேகத்தைப் போல்!

கண்ணால் கண்டேன் ஒரு கும்பலை;
எண்ணில் அடங்கா, தங்க மலர்களை!

ஏரியின் அருகில், மரங்களின் நிழலில்,
ஆடின, துடித்தன, தென்றல் காற்றில்!

தொடர்ந்து சென்றன, இரவு வானின்
அடர்ந்த, நட்சத்திர மின்னல் அழகாய்!

மின்னும் பால் வீதியைப் போன்று
இன்னும் நீளும்; எங்கும் முடியாது!

கரையின் ஓரம், தொடரும் மலர்கள்;
நிறைவாய் ஒரே பார்வை கண்டது,

அள்ளும் அழகில், ஒரு பத்தாயிரம்,
துள்ளும் நடனம் செய்து கொண்டு!

தலைகள் ஆட, அருகில் இருக்கும்
அலைகள் நடனம் ஆட.... ஆனால்,

துடித்த இலைகள் அதிகம் ஆட,
துடிக்க இதயம் மறந்து போக,

காணும் பாவலன் மனதில், என்ன
தோணும், இன்பம் ஒன்று தவிர?

இதுபோல் இனிய நட்பு வட்டம்,
மெதுவாய், தானே வந்து கிட்ட!

என்ன செல்வம் இது தர முடியும்?
என் மஞ்சம் மீது சாயும்போது,

என் மனம் வெறுமை ஆயினும்,
என் மனம் வருத்தம் ஆயினும்,

வரும், தங்க மலர்கள் கூட்டம்;
தரும், அந்த அருமை அனுபவம்!

வரும், மனக்கண் உள்ளே இருந்து;
தரும், என் தனிமையில் இனிமை!

ஆனந்தம் வந்து, மனம் நிறைவுடன்
தானங்கே ஆடும், தங்க மலருடன்!


:dance: . :dance: . :dance:

அன்புடன்,
ராஜி ராம்



The Daffodils

I wandered lonely as a cloud

That floats on high o'er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze.Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance.The waves beside them danced, but they

Out-did the sparkling leaves in glee;

A poet could not be but gay,

In such a jocund company!

I gazed-and gazed-but little thought

What wealth the show to me had brought:For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.


William Wordsworth.

 

Latest posts

Latest ads

Back
Top