கடல் கடந்த மூன்றாம் அனுபவம் .... 1
இறை அருளால் கிடைத்த தேவதையே அவள்;
நிறைவான அன்பைக் காட்டும், மகனின் மகள்.
இந்த முறை எம் அமெரிக்க விஜயத்தில் காண
விழைந்த முதல் மகள், சின்னஞ்சிறு கிளிதான்!
தனி வீட்டை ஒதுக்கிவிட்டு, மாதக் கணக்கில்
இனிய பயணம் செய்ய, ஏற்பாடுகள் எத்தனை!
சென்ற முறை, மாடியில் நண்பர் தங்கியதால்,
சென்றோம் கவலையே இன்றி, அந்தப் பயணம்!
இந்த முறை, அவரைத் தொந்தரவு செய்யாமல்,
எந்த ஏற்பாடு செய்யலாமென ஆலோசித்தோம்!
முதல் மாடிப் பகுதியை, வாடகைக்கு விட்டால்,
அதில் பாதுகாப்பும் வருமே, என்கிற ஆசையில்,
விளம்பரம் செய்ததுதான் முதல் வேலை! இது
களேபரம் ஆனதே தவிர, ஒரு பயனும் தரலை!
பெண் பார்த்த மாப்பிள்ளை வீட்டார், சம்மதம்
பின் சொல்கிறோம், என்று செல்லுவது போல,
வந்த சிலரும் சொல்லி, மாயமாகப் போய்விட,
வந்த நான்கு இளைஞர்கள், புதிய கம்பெனியை
ஆரம்பிக்கப் போவதாகக் கூற, என்னவருக்கு
ஆரம்பித்தது காருண்யம்! படித்த பசங்களுக்கு
உதவவேண்டும் என்று பெரிய மனது பண்ணி,
முதலில் தரும் அட்வான்ஸ் முதல், வாடகை
வரை குறைத்துச் சொல்லி, agreement போட
விரைவாக ஆடிட்டரை நாடி, பேப்பர் வேலை
முடிக்க, அந்தப் பசங்களோ, எங்கள் நம்பரை
அடித்துத் தொலைபேசியில் கூட sorry என்று
சொல்லாமல், காணமல் போயினர்! எத்தனை
சொல்லியும், நான் சமாதானமே ஆகவில்லை!
சிங்காரச் சென்னை வெய்யிலைப் பாழாக்காது,
பாங்காக எல்லாம் செய்தபின், ஏமாற்றினால்,
எப்படித்தான் பொறுத்துக் கொள்ளுவது? இது
இப்படி நடக்க, மீண்டும் வந்தன சோதனை பல!
தொடரும்..................