கடல் கடந்த முதல் அனுபவம் ..... 60
வாஷிங்டனில் இறங்கி, இன்னொரு விமானம் ஏறி,
வாஷிங்டன் விட்டுப் பறக்கும்போது, எமக்குத் தந்தனர்
'சான்ட்விச் பாக்கெட்'கள்; இரவு சமைக்கவே வேண்டாம்!
'சான்ட்விச்' வாங்கிய என் முகம் மலர, எம் மகன் அலற,
புரியாமல் நான் விழிக்க, 'அம்மா! நீல ஸ்டிக்கர் non veg!
தெரியாமல் வாங்கினாய்! பச்சையை வாங்கு!' என்றான்.
மீண்டும் சென்று, சாரி சொல்லி, பாக்கெட்டை மாற்றி,
மீண்டு வந்தேன், செய்த அந்தக் கந்தரகோளத்திலிருந்து!
சரியான நேரத்தில் விமானம் புறப்பட்டதால், நாங்கள்
சரியான நேரத்தில் பாஸ்டன் வந்து சேர்ந்துவிட்டோம்!
பேருந்தில் விமான நிலையத்திலிருந்து, t service வந்து,
பேருந்து அடுத்தது பிடிக்க, மூன்று சப்வே ரயில்கள் மாறி,
இனிய பயணம் முடித்த மன நிறைவுடன், பத்து நிமிடச்
சிறிய நடையில், இனிய இல்லம் வந்தோம், நள்ளிரவில்!
பச்சை 'ஸ்டிக்கர்' 'வெஜிடபள் சான்ட்விச்' உண்ட பின், அந்த
மிச்ச இரவு நேரத்தை, நிம்மதியாக உறங்கிக் கழித்தோம்!
என் பிறந்த தேதி மறுநாள்; அதிகாலை, குளியல் முடித்தேன்;
என் உடன் பிறப்புக்களின் இ-மெயில் வாழ்த்துக்கள் கண்டேன்!
'ஷிப்ட்' போட்டு என்னவர் தூங்கித் தூங்கி நேரத்தைக் கழிக்க,
'ஷிப்ட்' போட்டு வீடு சுத்தம் செய்தபடியே நான் சுற்றி வர,
மூன்று லோடு துணிகளை 'மெஷின்' துவைத்து, உதவி புரிய,
அன்று பொழுது போனது தெரியவேயில்லை; ஓடிவிட்டது!
வீட்டில் துவைக்க 'மெஷின்' இருப்பவர்கள், எப்பொழுதும்
ரோட்டில் துணியை எடுத்துக் கொண்டு செல்லவேண்டாம்!
வசதி அதுபோல இல்லாதவர்கள்தான், துணி துவைக்கும்
வசதி கொண்ட இடத்திற்கு, 'அழுக்கு' கொண்டு செல்வார்!
தொடரும் ...............