• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 5

'யாமிருக்க பயமேன்' என முருகன் கூறுவதுபோல,

'ராமிருக்க பயமேன்' என்ற எண்ணத்தில், இருவரும்

விசேஷமாக ஏதும் நடக்காது, 'செக் இன்' செய்தோம்;
விரட்டியடித்த தூக்கம் கண்ணை அழுத்த, விரைவில்

நல்ல இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம்; எதிரில்
நல்ல ஈடுபாட்டுடன், ஒரு மாமி ஒரு புத்தகம் படிக்க,

இவரை எங்கோ பார்த்தோமே என நான் நினைக்க,
அவரே எழுந்து வந்து பேசினார், சில நிமிடங்களில்!

எங்கள் காலனியில் வசிக்கும் அவரின் பிள்ளைதான்,
எங்களை அடையாளம் கண்டான் லஷ்மி கோவிலில்!

பரஸ்பரம் குசலம் விசாரித்துக்கொண்டோம், நாங்கள்;
பரஸ்பரம் தத்தம் வீடுகளுக்கு அழைப்பு விடுத்தோம்!

ஒருவேளை இந்த முறையும் கோவில் சந்திப்புடனே
இருந்துவிடுமோ எங்களின் நட்பு? எப்படி அறிவேன்?

விமானம் ஏற அழைப்பு வந்தது; நம்மவர்களுக்கோ
சாமான்யத்தில் தெரியாது, க்யூ என்ற ஒரு விஷயம்!

ஐந்து வேறு க்யூக்களாக நின்று, வெறுப்பேற்றினர்!
வந்த விமான நிலையப் பணியாளர்கள், பணிவுடன்

கெஞ்சியபின், இரு க்யூக்களாக நின்று, நகர்ந்தனர்;
மிஞ்சிய இருக்கைகள், அடுத்தடுத்துக் கிடைத்திட,

வேறு வேறு வரிசையில் போட்டிருந்த seat களை,
ஒரே வரிசையில் மாற்றி எமக்குத் தந்தனர். ஆனால்

நான் கேட்ட ஜன்னல் இருக்கை கிடைக்கவில்லை;
நான் போட்டோக்கள் எடுக்க முடியாத ஒரு நிலை!

தங்க நகை உள்ள பையை, என்னருகிலே வைத்து,
எங்கள் மற்ற கைப்பெட்டியை, மேலே வைத்தோம்.

கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு - சர்வமும்
கறுப்புப் பெட்டிகள்; எங்கள் பெட்டிக்கு, வெள்ளை

வலையில், ரிப்பன் போலச் செய்து கட்டிவிட்டேன்;
எளிதில் அடையாளம் காண, அது ஒரு வழிதான்!


:plane: தொடரும் ...........
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 6

பக்கத்து வீட்டுக்காரர் நல்லவராக அமையவும்,

பக்கத்து சீட்டுக்காரர் நல்லவராக வரவும் கூட,

ஆண்டவன் அருள் வேண்டுமோ, என்னமோ?
ஆண்டவன் அருள், இம்முறை அறவே இல்லை!

கொக் கொக், மே மே தின்னும் பெண்மணியே,
பக்கத்தில் இருக்கிற ஜன்னல் இருக்கையிலே!

கொஞ்சம் கஷ்டமே; கடிவாளம் இட்டது போல
கொஞ்சமும் திரும்பாது, உண்ண வேண்டுமே!

இந்த முறை யோகம் இவ்வளவே என்று, நான்,
வந்த வருத்தத்தை, மறைக்கவே முயன்றேன்!

ஓயாது ஏதேனும் குடித்து வந்தாள், அந்தப் பெண்;
ஓயாது பேசவில்லை; எனவே நான் தப்பித்தேன்!

இந்த பயணத்தில்தான், நிஜ ஹீரோ போன்ற ஒரு
சுந்தர வதனம் கொண்டவன், உள்ளே இருந்தான்.

பயணிகளைக் கவனிப்பது, அவனின் பணியே!
பயணிகள் சாப்பிட்ட தட்டுக்களை, சிரித்தபடியே

அவன் எடுத்துச் சென்றபோது, கொஞ்சம் எனக்கு
மனம் வருத்தம் எழுந்தது நிஜமே; சிறந்த ஆபீஸ்

வேலை மட்டும் இவன் செய்தால், அவனுடைய
வேலை கண்டு பெற்றோர், எத்தனை மகிழ்வர்!

நாம் கடமைப்பட்டவர்களுக்கு இவ்வாறு சேவை
நாம் செய்தால், வருத்தமே கிடையாது! சம்பளப்

பணத்துக்கு வேண்டி, இதுபோல வேலை செய்வது,
மனத்துக்கு வருத்தமே எனக்குத் தந்தது! நண்பர்

ஒருவர், இதில் என்ன கௌரவக் குறைவு என்று
ஒரு வாதம் செய்தாலும், எனக்கு வருத்தம்தான்!

:humble:

தொடரும் .............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 7

காலை உணவும், மதிய உணவும் விமானத்தில்
வேளை தவறாமல் கொடுத்தார்கள்; ஒரு முறை,

ஆறு மணி நேரம், அடுத்த விமானம் ஏற இருக்க,
வேறு உணவுகள் எதுவுமே கிடைக்காது தவிக்க,

ஆறு டாலருக்கு ஒரு குட்டிச் சுட்டிக் கடும் காபி,
வேறு வழியின்றிக் குடித்தது நினைவில் வந்திட,

கொடுத்த எல்லா உணவையும், உள்ளே தள்ளாது,
எடுத்து வைத்தேன் BUN, பிஸ்கட்களை, பையில்.

DSCN6066.JPG


மிகவும் பெரியது
லண்டன் விமான நிலையம்!

மிகவும் நீளமான மூன்று எஸ்கலேட்டர்களில்

கீழே இறங்கி, மேலும் மூன்றில் ஏறி, விரைவில்
நேரே பாதுகாப்பு சோதனை இடத்தை அடைய,

வேகமான 'ஷட்டில்' வண்டிகளில் சென்றோம்.
மோசமான கால்களால் நடக்கவே இயலாது!

நடு வயதுக்காரர்கள் சிலரும் அதனால்தானோ
கிடு கிடுவென்று 'வீல்' சேரில் செல்லுகின்றார்?

அதிகாரி, கைவளையல்களை எடுக்கச் சொல்ல,
எதிரி போல அவைகள் வராது முரண்டு பிடிக்க,

'பத்து மணி நேரப் பயணத்தில் என் கைகால்கள்
மொத்தமாய் வீங்கிவிட்டன' என்று நான் கூற,

அதிகாரி சிரித்து, பரவாயில்லை என்று சொல்லி,
அதிகம் சோதிக்காமல், உடனே அனுப்பிவிட்டார்.

அடுத்த விமானம் ஏற, ஐந்து மணி நேரம்; ஓய்வு
எடுக்க, ஒரு மிகப் பெரிய ஹாலை அடைந்தோம்.

அதிக உயரம் இல்லாவிட்டால், சுருண்டு படுக்க
அதிகம் பிரயத்தனப்பட வேண்டாம்; Advantage!

ஆண்டவன் எனக்கு அளித்த வரப் பிரசாதத்தால்,
ஆண்டவனை எண்ணியபடி, நானும் சுருண்டேன்!

:couch2: . தொடரும் ...............
 
hi raji/ VR
its heathrow airport.....terminal 5.... i travelled from chennai to heathrow, then to enga pettai washington dc.....last month.i reached chennai

in april early morning 3.30am to enga maanagara singara chennaikku......then from 5.30am from singara chennai....i visted coimbatire

with nice idli sambar in annapoorna/gauri shankar.....i got uppuma with oothapam in BA towards chennai with knonjum tamil

announcements.......


regards
tbs
 
Last edited:
Yes TBS Sir! I forgot to mention about the announcement in Tamil, just before

landing at Heathrow airport, London! We were served half of 'kaanja' masaal

dosai and uppma with chutney and sambar for breakfast soon after take off at

Chennai. It was just tolerable.. :hungry:
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 8

நித்திரா தேவியின் பூரண அருள் கிடைக்கவில்லை;
நித்தம் வேண்டும் ஓய்வில், ஒரு பகுதி கிடைத்தது!

இரண்டு மணி நேரம் இவ்வாறு செல்ல, மெதுவாக
எழுந்து வந்தது பசி! நான் தயார் நிலையில்தானே!

ஒப்பனை அறைக்குச் சென்று refresh ஆன பின்பு,
ஓட்டினோம் பசியை, bun பிஸ்கட்டுகள் கொண்டு!

காமராவை எடுத்துக்கொண்டு வட்டம் போனேன்;
காமரா நினைவாக கொண்டுவந்துள்ள பாட்டிற்கு,

சில படங்களாவது எடுக்க வேண்டாமோ? பெரிய
பல கண்ணாடி ஜன்னல்கள் சுற்றிலும் இருக்க, ஒரு

வண்ணத்துப் பூச்சிகளின் நீண்ட, வளைந்த வரிசை,
வண்ணமயமாகக் கண்ணைப் பறிக்க, அவற்றை

சிறைப்பிடித்தேன் என் சின்னக் காமராவில்; மனம்
நிறைவடைந்தேன், அவைகள் கிடைத்த மகிழ்வில்!

DSCN6065.JPG


DSCN6067.JPG


அடுத்த விமானம் ஏற அழைப்பு; கைப்பெட்டிகள்

எடுத்துக் கொண்டு விரைந்தோம், gate ஐ நோக்கி.

இந்த இருக்கைகளும் பழைய கதையே; அருகில்
வந்த தம்பதியர், கொக்கொக், மேமே தின்போர்!

நான் வேண்டிய ஜன்னல் இருக்கையும் இல்லை!
நான் எடுத்துப் போட்டேன் காமராவை உள்ளே!

முதல் பயணத்தில் இருந்த திரைப்படங்களில்,
முதல் முறையாக Harry Potter - இன் ஏழாவதும்,

'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தையும்,
கண் வலிக்கப் பார்த்தால், உறங்க முயன்றேன்!

இறங்க ஒரு மணி நேரம் உள்ளபோது, அதில்
இருந்த 'எந்திரன்' ஹிந்தி வடிவைக் கண்டேன்!

ஆசைக்குக் கொஞ்ச நேரம் பார்த்துவைத்தேன்,
ஆசைப்பட்டும் சென்னையில் பார்க்காததால்!

:ranger:

தொடரும் .............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 9

நாங்கள் பயணித்த விமானம் பாஸ்டன் வந்ததும்,

எங்கள் மனத்தில் உற்சாகம் தொற்றிக்கொண்டது!

வாரிசின் வாரிசைச் சில நிமிடங்களில் காண்பது,
பேரின்பம் தரும் நிமிடங்கள் அல்லவா? விரைந்து,

இறங்க முயன்றபோது, ஒரு வேண்டுதல் வந்தது;
இருந்த பயணிகளில் ஒருவருக்கு, நெஞ்சு வலி!

அவருக்கென ஒரு கதவை விட்டுவிடச் சொல்ல,
அவரின் நலத்திற்கு, ஆண்டவனை வேண்டியபடி,

ஒரே கதவு வழியாக அனைவரும் இறங்கி வந்து,
நேரே சென்றோம், சுங்க அதிகாரியிடம்; எங்களது

கைரேகைகள் மற்றும் முகத்தை சரி பார்த்தபின்(!)
பையக் கேட்டார், எதற்கு வந்தோம் என்று! நாங்கள்

மகனின் குடும்பத்துடன் இருக்க, என்று சொல்ல,
அவனிடம் எத்தனை காலம் இருக்க வேண்டுமென

வந்த கேள்விக்கணைக்கு, கோரஸாக, ஆறுமாதம்
என்று பதிலளித்தோம்; முத்திரையும் கிடைத்தது!

சிரிக்காத அந்த சீரியஸ் அதிகாரிக்கு, சின்னதாகச்
சிரித்து நன்றி பகன்று, விரைந்தோம் இருவரும்.

என்னவர் தன் பெட்டிகளை, ஸ்கேன் செய்ய வைக்க,
என் பெட்டிகளைத் நான் தூக்க முடியாதென மறுக்க,

உணவுப் பொருட்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு,
உடனே, இல்லை என்று பொய்யைக் கூறிச் சிரித்து,

விடுதலை பெற்றதுபோல், வந்தோம் வெளியிலே,
வேப்பிலை கட்டும் வந்தது, எங்களின் பெட்டியிலே!

சின்னஞ்சிறு கிளியுடன், எங்கள் இனிய பெண்ணரசி;
சின்னவள் என்னிடம் உடனே வந்து, தந்தாள் குஷி!

சிணுங்கியபடி என்னிடம் செல்லம் கொஞ்சியதும்
சிணுங்கலே எனக்கு தேவ கானமாய்க் கேட்டது!

:biggrin1: . தொடரும் .....................
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 10


தன் அலுவலக வேலையாக மகன் பாரிசில்;
தன் நண்பரின் உதவியைக் கேட்டிருந்ததால்,

அவர் தனது காரில் அழைத்துப் போக வந்தார்;
அவருக்கு, மனம் உவந்த நன்றி உரைத்தோம்.

மகன் வீட்டை போட்டோவில்தான் பார்த்தோம்;
அவன் வீட்டை நேரில் அன்றுதான் பார்த்தோம்.

எத்தனை பெரிய வீட்டை வாங்கியுள்ளார்கள்!
அத்தனை விசால அறைகளையும் சுற்றினால்,

நல்ல நடைப் பயிற்சியே ஆகிவிடும்! மேலே
உள்ள கூரைகளில், பதித்த கண்ணாடிகள் பல.

DSCN6073.JPG


மிகுந்த வெளிச்சமும், காற்றுமாக இருந்தது,

மிகுந்த மன நிறைவையும் எமக்குத் தந்தது!

கீழேயுள்ள Basement - ல் Table Tennis, மற்றும்
மேல் மட்டத்தினரின் Snooker Board உள்ளது.

பொழுது போவது கடினமேயில்லை இங்கு;
பொழுது போதாது இருக்கவே chance உண்டு!

நல்ல சுடு நீர்க் குளியலுக்குப் பின், உண்டோம்
நல்ல சுடச்சுட நம் தென்னிந்திய உணவுகளை.

நாற்பத்தெட்டு மணி நேரம் நல்ல தூக்கமில்லை;
நாங்கள் சென்று விழுந்தோம் எம் படுக்கையிலே!

:sleep:

தொடரும் .....................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 11

வசதியான எம் அறை கீழேயே அமைந்திருக்க,

அசதி தீரும்வரை, நித்திரையில் ஆழ்ந்தோம்.

விடியல் ஒளி, நாலரை மணிக்கே பரவி வர,
விடியல் அழகை ரசிக்க, உடனே எழுந்தேன்.

காபிப் பொடி இத்யாதி வைத்த இடம் கேட்டு,
Gas அடுப்பைப் பற்ற வைக்கும் முறை கேட்க

மறந்தேன்! நம்ம ஊர் போல இல்லை ignition.
அடைந்தேன், 'மைக்ரோவேவ்' தயவினையே!

காபி தயார் ஐந்து நிமிடத்தில்; காமராவுடன்,
காபியை ருசித்தபடி, ஆதவனை எதிர்நோக்க,

சுறுசுறுப்பாக அவனும் ஐந்தேகால் மணிக்கே
விரித்தான், தன் ஆரஞ்சு நிறக் கிரணங்களை.

DSCN6087.JPG


DSCN6114.JPG


பல போட்டோக்களைக் க்ளிக்கி, ஆனந்தித்து,

பல நிமிங்கள் இயற்கை அழகை ரசித்தேன்!

நடைப் பயிற்சிக்கு 'யானை மெஷின்' இருக்கு;
நடைப் பயிற்சி ஆரம்பம் அப்போதே, எனக்கு!

என்னவரின் காலை, ஏழு மணிக்கு ஆரம்பம்;
என்னவரின் Walk அடுத்த நாள்தான் ஆரம்பம்!

மகன் ஊரில் இல்லாததால் Burgler's alarm ஐ,
அவன் சொல்லி, பெண்ணரசி வைத்திருக்க,

ரோஜாக்கூட்டம் வாசலில் என்னை அழைக்க,
ரோஜாப்பூ காணும் ஆவலில் கதவைத் திறக்க,

DSCN6099.JPG


காதைப் பிளக்கும் 'சைரன்' ஒலி எழத் தொடங்க,

அதை நிறுத்தும் வழி அறியாது நான் பரிதவிக்க,

படிகளில் தாவி இறங்கி வந்தாள் பெண்ணரசி;
சடுதியில் நிறுத்தினாள், எண்களைச் சுழற்றி!

எப்போதேனும் நான் லூட்டி செய்வது வழக்கம்;
இப்போது, முதல் நாளே என் லூட்டி தொடக்கம்!

தொடரும் ....................
 
Last edited:
The Month Of Roses. [SUP]__[/SUP]Elva May Root.

Whence comes this mist of sweet perfume of fragrant
blooming roses

That fills the air at early dawn and after daylight closes,

When through the day the song bird sings and in the
night reposes?

Tis June, the fairest month of all, bright June, the
month of roses.

The sky has changed its grayish hue for that of deepest
azure,

And fleecy clouds are floating o'er and dancing as in
pleasure;

While near these fairy clouds are seen great Alps of
cloudland glory,

Where sunbeams darting to and fro mount each lofty
story,

When comes this grandeur in the skies that in winter
time reposes?

In June, the fairest month of all, bright June, the
month of roses.

The trees spread out their leafy boughs, the meadows
bloom with flowers;

The air is cooled, the dust is laid by calm, refreshing
showers;

The sun is up at early morn [SUP]__[/SUP] his eyes he scarcely closes,

For sunny June is with us now, fair June, the month
of roses.

The yellow rose blooms, the white, pink, red in prairie,
field and garden,

And for the number and variety seem to ask your
pardon;

Their rich perfume so fills the air, the world seems
naught but roses;

A rosy crown they've made for June, and crowned her
Queen of Roses.
 
Wonder how they make such a tiny tooth paste tube and print on it too!

Given free, on board BA flight.

DSCN6122.JPG




hi RR,
they provided with brush....i collected 4 like these toothpaste..for one time use and throw....last time BA provided

socks with someother things too for free... now they stopped...only paste with brush to use heathrow...


regards
tbs
 
Last edited:
Yes, TBS Sir! They gave two sets of tooth brush + paste for each person.

The brush was just a little less than usual size. But this kutty tube was fascinating! :becky:

 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 12

முதல் இரு நாட்கள் ஓய்விலேயேதான் சென்றன;

முதல் வேலை, கண்ணம்மாவிடம் விளையாட்டு!

நூறுகளில் சென்னை வெய்யில் பழகியதால், இந்த
அறுபதுகள் என்னை மிகவும் நடுங்கவே வைத்தன.

மகன் வந்தபின் A C ஐப் போட்டுக் கொண்டு உறங்க,
அவன் அமெரிக்கவாசியாக மாறியதை அறிந்தேன்!

பெண்ணரசி, வந்த மறுநாளே எனக்கென PC ஐத் தர,
எண்ண அலைகளை மீண்டும் எழுத ஆரம்பித்தேன்!

குட்டிக் கண்ணம்மாவுக்காக, அவள் தன் வேலையை
கெட்டியாகப் பற்றாமல், விலகிவிட்டாள்; அதனால்

இந்த முறை, அவளுடன் நிறையப் பேசவும் முடியும்;
எந்த உதவியானாலும், உடனே செய்யவும் முடியும்.

இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்த, இந்த முறை
தருணங்கள் பல வருமென்று, எனக்குத் தோன்றியது.

வெள்ளி மாலை நேரம், 'லைப்ரரி' செல்லலாம் என்று,
துள்ளி வரும் உற்சாகத்துடன் புறப்பட்டுக் காரினுள்

ஏறி அமர்ந்த பின் தெரிந்தது, Battery அம்பேல் ஆனது!
ஏறிய வேகத்திலேயே இறங்கிச் சின்னக் காரில் ஏறி,

'லைப்ரரி' நோக்கிச் சென்றிட, அங்கும் களேபரம்தான்!
'லைப்ரரி' ஐந்து மணிக்கே மூடிவிட்டனர்; என்றாலும்

புறப்பட்ட பாட்டிற்கு ஏதேனும் செய்ய எண்ணி, ஒரு
சிறப்பு அங்காடியில், பொருட்களை வாங்கினோம்.

வார விடுமுறை வந்ததால், மறுநாள் அலுவலகம்
சேர, விழுந்து அடித்துப் புறப்படத் தேவையில்லை!

கீழ்த்தளத்தில் நாங்கள் இருப்பதால், மிக வசதியே;
கீழ் வானம் சிவக்கும்போதே, காபி என் கையிலே!

DSCN6111.JPG


:director: தொடரும் .............
 
மிக அழகிய காட்சிகளை படம் பிடிக்கும் பொழுது இன்னும் சிறிது
கவனம் வேண்டும்..படம் இன்னும் தெளிவுடன் இருந்திருந்தால் பார்க்க நன்றாக இருந்திருக்கும்..cell fone cam எடுத்தது என்று நினைக்கிறேன் ...
 
ஷண்முகம் சார்,

நான் professional photographer அல்ல... என் digital காமராவில் படங்களை

எடுக்கிறேன், சுற்றம் நட்புடன் பகிர! அ
வ்வளவே... அந்த சூரிய உதய

போட்டோக்களை வீட்டின் உள்ளிருந்தே எடுத்தேன், ஜன்னல் வலை வழியாக.

வெளியில் கிடு கிடு குளிர்!


நட்புடன்,
ராஜி ராம்
 
Last edited:
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 13

இரண்டு தவணைகளாகத் தூக்கம் 'செட்' ஆனது.

இரண்டு முதல் நான்கு வரை, மதியத் தூக்கமும்,

இரவு பதினொன்று முதல், காலை நான்கு வரை,
இரவுத் தூக்கமும் என ஏழு மணிகள், கணக்காக!

காலைக் காபிக்குப் பின், நடைப் பயிற்சி; பிறகு
காலை சூரிய உதயத்தின் அழகை ரசித்தல்; வீடு

முதல் தளத்தை Swiffer இட்டுச் சுத்தம் செய்தல்,
உடல் புத்துணர்ச்சிக்கு, வெந்நீர்க் குளியல் என

தினசரி வேலைகள் துவக்கம் ஆகின்றன; நாம்
அனுசரித்துச் சென்றால், வாழ்வு எளிமைதான்!

ஞாயிற்றுக்கிழமை நண்பனின் குழந்தை பிறந்த-
நாள் விருந்துக்கு அழைப்பு இருந்ததால், காலை

பதினோரு மணிக்கு, அவர்கள் போகவேண்டும்.
அதிர்ந்தது காது பிளக்கும் 'சைரன்', அந்த நேரம்!

என்னவென்று அறியாது, குழந்தையுடன், மகன்
சொன்னபடிக் கேட்டு, நான் வெளியேற, அவன்

எமது அறையில் Smoke alarm அடிப்பதைக் கண்டு,
ஏனென்று புரியாமல் விழிக்க, அதுவாகவே நிற்க,

புறப்பட எத்தனித்தபொழுது, மீண்டும் அது அலற,
புறப்படும் முன்பு, அதைக் கழற்றிடக் கூறினோம்.

smoke%20alarm.jpg


அந்த உபகரணம், மேசை மீது வந்து குடியேறிட
,

அந்த நேரம் முதல், அதன் வாய் மௌனமானது!

ஐந்து நாட்கள் மறந்துபோன சமையல் வேலை,
ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் தொடங்கினேன்!

:popcorn:தொடரும் ...............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 14

இந்த இணைய தளத்தில், சமீபத்தில் அறிமுகமான
இந்த நாட்டில் வாழும் நண்பி, தன்னுடன் பேசுவதற்கு

விருப்பமாவெனக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதும்,
'கரும்பு தின்னக் கூலியா?' என, உடனே சம்மதித்தேன்!


நீண்ட நேரம் அன்பாகப் பேசினார்; எழுத ஆவல் தனக்கு
உண்டு என்றதும், அவற்றைப் பகிருமாறு உரைத்தேன்.

நல்ல நட்பு கிடைத்தால், ஆனந்தம்தானே! மறுபடியும்
நல்ல சமயம் கிடைக்கும்பொழுது, பேசி மகிழலாமே!

சென்னையிலிருந்து, தினம் மதியம் இரண்டு மணிக்கு,
அன்னையிடம் பேசுவேன்; இப்போதும் அதே நேரமே!

காலை நான்கு மணிக்குக் கொட்டக் கொட்ட விழிப்பு;
காலை காபிக்குப் பின்பு, இந்தியாவில் மணி இரண்டு!

'இன்டர்நெட்' உள்ளது மிக வசதி! நம் அறையிலிருந்து
'இன்டர்நேஷனல்' பேச்சுக்களைப் பேச எளிதாகிறது!

காமரா பிடித்த கையால் சும்மா இருக்க முடியாது;
காமராவில் என்ன செய்வதென முடிவெடுத்தேன்.

சென்ற முறை வந்தபோதே, Movie எடுத்துப் பழக்கம்;
இந்த முறை சின்னக் கிளியை Movies சில எடுத்தேன்.

நாங்கள் மட்டும் விளையாடினால் போதுமா, என்ன?
எங்கள் சுற்றம், விளையாட்டைக் காணவேண்டாமா?

குட்டிக் குட்டி Movies எடுத்து அனுப்பிவிட, அவளது
சுட்டித்தனம் சில, அவர்களும் கண்டு களிக்கின்றார்.

Basement பக்கமே போகவில்லை; Table Tennis court
Basement - இல் காத்திருக்கிறது எங்கள் வரவுக்கு!

:photo: தொடரும் ................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 15

தினப்படி routine வேலைகள் ஒருவாறு சரியானது;
தினம் காலை நடைப்பயிற்சி உண்டு என்னவருக்கு.

மேகம் திரண்டு, ஒருநாள் காலை வேளை, பூமியின்
தாகம் தீர்த்திடும் மழை பொழியத் தயாராக இருக்க,

'வரும் பெரு மழை', என்று நான் எச்சரிக்கை செய்ய,
பெறும் உடற்பயிற்சி, அன்று தடையாகாது இருக்க,

என்னவரும் எப்போதும்போல வெளியேறிச் செல்ல,
பின்னே வரும் நிழல்போல, மழையும் பின்னால் வர,

அரை மைல் சென்றபின், பெய்த மழையில் நனைந்து,
அரை மணியில் திரும்பினார், சொட்டும் ஈரத்துடன்!

குளிரும் காலை நேரத்தில், ஈரமும் சேர்ந்துகொள்ள,
குளிரில் நடுங்கும் குருவிபோல வீட்டினுள்ளே வர,

கொதிக்கும் வெந்நீர்க் குளியல் உடனே உதவ, உடல்
பாதிக்கும் ஜுரம் வராது, என்னவரும் தப்பிவிட்டார்!

நட்பு மழையே என்று என்னதான் கொண்டாடினாலும்,
நட்புக் கருதி நம்மை ஆட்டுவிக்காது விடுமா, என்ன!

கோடை மழை, சென்னையில் அடித்து விளாசிவிடும்;
கோடை மழை இங்கு வந்தால், குளிர்வித்துப் போகும்!

வாசலில் அழைப்பு மணி அடிக்க, யாரென்று நாங்கள்
வாசலில் நின்ற இருவரையும் விசாரிக்க, அவர்கள்

'கூரையை சரி செய்ய வந்தோம்', என்று கூறிவிட்டு,
கூரை மீது ஏறினர், நீளமானதோர் ஏணியை வைத்து!

சொன்ன நேரத்தில் வந்து, என்ன தடைகள் வந்தாலும்,
சொன்ன வேலையை முடிக்கும் உறுதி சிறந்ததுதான்!

பெய்யும் மழையைப் பொருட்படுத்தாது, கூரையில்
செய்யும் வேலையை முடித்தபின், பணம் வாங்கினர்.

வேலை செய்யாது, மறு நாள் செய்வேன் என்று கூறும்
வேலையாட்கள் இவர்களிடம் நாணயம் கற்கவேண்டும்!

:roll:தொடரும் ...........
 
hi raji,

வேலை செய்யாது, மறு நாள் செய்வேன் என்று கூறும்
வேலையாட்கள் இவர்களிடம் நாணயம் கற்கவேண்டும்!

naanayam enna vilai? idhu america....adhu chennai maa nagaram......velai kara adhigaram pannum ooru....yajamanan vaye moodi irukka vendum......

நாணயம் என்ன விலை? இது அமெரிக்க...அது சென்னை மாநகரம்..........வேலைக்காரன் அதிகாரம் பண்ணும் ஊரு.....யஜமானன் வாயே மூடி
இருக்க வேண்டும்...


regards
tbs
 
Last edited:
அமெரிக்காவில் ஒரு அநியாயம்!

பாதசாரிகளுக்கு மதிப்புத் தரும் நாட்டில்,
பாதையில் நடக்கும்போது, ஒரு விபத்து!

தன் நடைப்பயிற்சியின் சமயம், ராமைத்
தன் வண்டியால் இடித்தான் ஒருவன்!

வந்து அவர் இல்லம் சேர்ந்தபின் வரும்,
அந்தக் கரும் நாட்களின் அனுபவங்கள்!


நட்புடன்,
ராஜி ராம்
 

Latest posts

Latest ads

Back
Top