• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 16

ஆனந்தமாய் அனுபவங்கள் அமைந்தால், அதிகம்
ஆண்டவனை நினைக்க மாட்டோமோ? அதனால்

கஷ்டங்களைத் தந்து, தன் வலிமையைக் காட்டிட,
இஷ்டப்படுகின்றான் பரம்பொருள், என்பேன் நான்.

உடல் நலம் கொடுக்கும் அதிகாலை நடைப் பயிற்சி,
உடல் நலம் கெடுக்கும் வகையாக மாறிய அதிர்ச்சி!

எப்போதும்போல காலை காபிக்குப் பின்னர், நடக்க
எப்போதும்போலப் புத்துணர்வுடன் சென்ற என்னவர்,

ஒரு மணி நேரம் கழித்து, முன் கதவைத் தட்ட, நான்

ஒரு மாதிரி அவர் இருப்பதைக் கண்டு வியந்தேன்!

மேட்டில் ஏறிவந்த சிரமம் என்று மழுப்பிவிட்டு, தன்

கட்டில் அருகிலே, நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

முன் தினம் இரவு, என் PC crash ஆனது; எனவே அன்று

என் தினம் தொடங்கியது, எழுத்து வேலையே இன்றி!

சில நிமிடங்களில் தன் உடை மாறி வரும் என்னவர்,

பல நிமிடங்கள் வராததால், கொஞ்சம் அதிர்ந்தேன்!

என்னவென்று கேட்கப் போனதும், நடக்கும் பொழுது

சின்னதாகக் கல்லில் தடுக்கி விழுந்ததாக உரைத்தார்.

வியர்த்து நனைந்த T shirt ஐக் கழற்றிவிட்டபின், நானும்

வியர்த்தேன், முதுகில் மூன்று பெரிய கீறல்கள் கண்டு!

கல் தடுக்கி விழுந்தால், எப்படிக் கீறல் முதுகில் வரும்?

சொல்வதற்குத் தயக்கம் என எண்ணி, மீண்டும் வினவ,

'வேன்' ஒன்று பின்புறமாக வந்து, இடப்புறம் இடித்ததால்,

தான் வலப்புறமாகத் தள்ளப்பட்டு, விழுந்ததாகச் சொல்ல,

பின்னே சாலையில் வரும் வண்டிகள் காண, வண்டியின்

முன்னே பொருத்தியுள்ள Rear view mirror தான், முதுகில்

இடித்துத் தள்ளியிருக்கும் என்று அனுமானித்தேன்; அது

இடித்ததால், தோள்பட்டை Freeze ஆனதை அறிந்தேன்!

:bump2: . . . :sick: தொடரும்..............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 17

நடுங்கிவிட்டாள் பெண்ணரசி இவர் நிலைமை கண்டு;
நடுக்கம் அதிகமானது மகன் வெளிநாட்டில் உள்ளதால்!


தன் பணிக்காக மகன் ஜெர்மனியில் இருக்க, பாஸ்டனில்
தன் பொறுப்பில் நாங்களும் வந்ததையும் உணர்ந்தாள்.

கைக்குழந்தையுடன், காரோட்டத் தெரியாத என்னுடன்,
மெய் வருந்த அவள்தான் செய்யவேண்டும் எல்லாமே!

போட்ட டீயைக் கூடக் குடிக்க மனமில்லாமல், உடனே
போட்டது போட்டபடி தங்கள் பெரிய காரை எடுத்தாள்.

வண்டியில் அதிக அதிர்வு வராது ஓட்டி, Emergency-யில்
கொண்டு சேர்த்தாள், நாற்பது மணித்துளிகளில். பின்

குழந்தையை என்னிடம் தந்து, பதிவு செய்யச் சென்று,
குழந்தைபோலவே என்னவரைத் தாங்கி கவனித்தாள்.

நான்கு மணி நேரத்தில் முதற்கட்டப் பரிசோதனைகள்;
நான்கு விலா எலும்புகள், தோள் பட்டையில் முறிவு!

நுரையீரலிலை விலா எலும்பு செய்த சேதம் நிர்ணயிக்க,
நுரையீரலை X ray எடுத்ததுடன் நில்லாது, எங்களை

வருந்த வேண்டாமென C T Scan பார்த்துவிட்டு, அந்த
மருத்துவர்கள் சொல்ல, கொஞ்சம் நிம்மதி வந்தது!

'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது!' அவர்
தலையில் அடி இல்லாது, எலும்பு முறிவுடன் நின்றது!

மருத்துவமனையின் வரவேற்பறையில், ஒரு மங்கை,
கருத்துடன் உதவி செய்ய எண்ணி, போலீசில் சொல்ல

அறிவுறுத்தி, பேச வேண்டிய தொலைபேசி எண்ணையும்

அறிவித்தாள்; அது மிகப் பெரிய உதவியாக ஆகிவிட்டது.

:help: .. :angel: தொடரும்...............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 18

41236906.jpg


பெரிய மருத்துவமனை M G H, பாஸ்டன் நகரில்;

பெரிய அளவில் உதவி கிடைக்கும் என்பதால்,

இரண்டு மணிக்கு, அங்கே அழைத்துச் செல்ல,
இரண்டு பேர் ஓர் ஆம்புலன்ஸ் எடுத்து வந்தனர்.

உயரமான Stretcher; மொத்தம் எட்டு சக்கரங்கள்;
உயரமான X வடிவ frame நடுவிலே இருக்கிறது.

இரண்டு ஜோடிச் சக்கரங்கள், முன்னும் பின்னும்,
இருக்கின்றன மேற்புறப் பகுதியை ஒட்டியவாறு.

முதல் இரண்டு சக்கரங்கள் வண்டியுள் போனதும்,
அடுத்த நான்கு சக்கரங்கள் மடிந்துவிடுகின்றன.

மீண்டும் வெளியேறும்போது, நான்கும் அழகாக
மீண்டும் நீண்டு வந்துவிடுகின்றன, தரை வரை!

ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொன்றுக்கு,
வேறு Stretcher மாறாது, அதிலேயே செல்லலாம்.

Stretcher%2Btrolley.jpg

அதிக அதிர்வில்லாது, வேகமாக ஓட்டும் பெண்;
அதிகம் பேசாத அவளுடைய அருகிலே நான்.

பெண்ணரசி, குழந்தைக்கு வேண்டியதைச் செய்து,
தன் காரில் வந்தாள், போலீஸிடம் அறிவித்த பின்!

அன்றுதான் Rising to the occasion என்பதன் பொருள்,
நன்கு நான் அறிந்தேன், அவளின் செயல்பாட்டால்!

பெரிது மருத்துவமனை; நிறைய சிறந்த மருத்துவர்;
சிறிது நேரத்திலே எல்லாச் சோதனைகளும் முடிய,

வசதியான படுக்கையில் என்னவரை இருத்தினர்;
வசதிகள் இருந்தன, உடல் நிலை monitor செய்ய.

ஆக்சிஜன் பார்க்க, E T யின் விரல் விளக்குபோல்,
ஆள்காட்டி விரல் நுனியில், ஒரு சிவப்பு விளக்கு.

எளிதாக சுவாசம் வர, ஆக்சிஜன் செலுத்தும் ஒரு
மெலிதான குழாயை மூக்கில் மாட்ட, தொடர்ந்து

இதய இயக்கம் காண, நான்கு இடங்களில் ஒட்டி
இணைந்த Wire களை, ஒரு Monitor இல் பொருத்த,

கிரே வண்ணத்தில் மருத்துவமனையின் கவுன்,
கிரேக்க வீரன் போல உடலை மறைத்துச் சுற்ற,

என்னவரின் சிகிச்சை அன்று தொடர்ந்தது, இந்தத்
தன்னிகரில்லா பாஸ்டனின் மருத்துவமனையிலே!

:painkiller: . . தொடரும் .............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 18

41236906.jpg


பெரிய மருத்துவமனை M G H, பாஸ்டன் நகரில்;

பெரிய அளவில் உதவி கிடைக்கும் என்பதால்,

இரண்டு மணிக்கு, அங்கே அழைத்துச் செல்ல,
இரண்டு பேர் ஓர் ஆம்புலன்ஸ் எடுத்து வந்தனர்.

உயரமான Stretcher; மொத்தம் எட்டு சக்கரங்கள்;
உயரமான X வடிவ frame நடுவிலே இருக்கிறது.

இரண்டு ஜோடிச் சக்கரங்கள், முன்னும் பின்னும்,
இருக்கின்றன மேற்புறப் பகுதியை ஒட்டியவாறு.

முதல் இரண்டு சக்கரங்கள் வண்டியுள் போனதும்,
அடுத்த நான்கு சக்கரங்கள் மடிந்துவிடுகின்றன.

மீண்டும் வெளியேறும்போது, நான்கும் அழகாக
மீண்டும் நீண்டு வந்துவிடுகின்றன, தரை வரை!

ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொன்றுக்கு,
வேறு Stretcher மாறாது, அதிலேயே செல்லலாம்.

Stretcher%2Btrolley.jpg

அதிக அதிர்வில்லாது, வேகமாக ஓட்டும் பெண்;
அதிகம் பேசாத அவளுடைய அருகிலே நான்.

பெண்ணரசி, குழந்தைக்கு வேண்டியதைச் செய்து,
தன் காரில் வந்தாள், போலீஸிடம் அறிவித்த பின்!

அன்றுதான் Rising to the occasion என்பதன் பொருள்,
நன்கு நான் அறிந்தேன், அவளின் செயல்பாட்டால்!

பெரிது மருத்துவமனை; நிறைய சிறந்த மருத்துவர்;
சிறிது நேரத்திலே எல்லாச் சோதனைகளும் முடிய,

வசதியான படுக்கையில் என்னவரை இருத்தினர்;
வசதிகள் இருந்தன, உடல் நிலை monitor செய்ய.

ஆக்சிஜன் பார்க்க, E T யின் விரல் விளக்குபோல்,
ஆள்காட்டி விரல் நுனியில், ஒரு சிவப்பு விளக்கு.

எளிதாக சுவாசம் வர, ஆக்சிஜன் செலுத்தும் ஒரு
மெலிதான குழாயை மூக்கில் மாட்ட, தொடர்ந்து

இதய இயக்கம் காண, நான்கு இடங்களில் ஒட்டி
இணைந்த Wire களை, ஒரு Monitor இல் பொருத்த,

கிரே வண்ணத்தில் மருத்துவமனையின் கவுன்,
கிரேக்க வீரன் போல உடலை மறைத்துச் சுற்ற,

என்னவரின் சிகிச்சை அன்று தொடர்ந்தது, இந்தத்
தன்னிகரில்லா பாஸ்டனின் மருத்துவமனையிலே!

:painkiller: . . தொடரும் .............

திருமதி ராஜி ராம் அவர்களுக்கு ,
என்னவர் என்றால் உங்கள் கணவரா?
 
திருமதி ராஜி ராம் அவர்களுக்கு ,
என்னவர் என்றால் உங்கள் கணவரா?

என்னவர் என் கணவர்தான் சண்முகம் சார்! உடல் நலத்திற்காகச் செய்த நடைப் பயிற்சி, உடலில் பலத்த காயத்தை ஏற்படுத்தியது...

அமெரிக்க நாட்டில் பாதசாரிகளுக்கு ஏக மரியாதைதான். இது எப்படி நடந்தது என்பது போலீஸ் உட்பட யாருக்குமே புரியவில்லை!

மேலும் தொடரைப் படித்து விவரங்களை அறியுங்கள்.
தற்போது என்னவர் எங்கள் கவனிப்பில் நன்கு தேறியுள்ளார்.

எல்லாம் ஆண்டவன் அருளும், எங்கள் தந்தை ஊரில் செய்த உயர்வான மருத்துவப் பணியின் விளைவும் என நம்புகின்றேன். :angel:


நட்புடன்,

ராஜி ராம்
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 19

அடுத்த நாள் ஒன்பது மணிக்குப் பின் வருமாறு,
எடுத்து உரைத்தனர் மருத்துவர், எம் இருவரிடம்.

இரவு நேரம் உடன் இருக்க அனுமதி கிடையாது;
இரவு நேரம் அடைந்தோம், எம் இனிய இல்லம்.

சிரித்து எப்போதும் விளையாடும் தாத்தா, அங்கு
படுத்து இருப்பதைப் பார்த்த குழந்தை, பயந்தாள்!

குழந்தை சீட்டிலே, காரில் படுக்காது, அழுதாள்;
எழுந்து என் மடியில் படுத்து, உறங்கிப் போனாள்.

இரண்டாம் நாள் சிறிது தெம்பு வந்தது; இன்னும்
இரண்டு வாரம் சென்றால், வலி குறையுமென்று.

மகன் வந்துவிட்டால், மருத்துவமனைக்கு நான்
அவன் கூட வரலாம்; குழந்தை வரவேண்டாம்.

காலை வேளை என்னை என்னவரிடம் விட்டபின்,
வேலைகளை கவனிக்கப் பெண்ணரசி சென்றாள்.

ஆண்டவன் தயவால், ஒரு நல்ல செய்தி வந்தது.
வேண்டியது வலி மருந்தும், ஒய்வுமே என்றனர்.

மாலையில் மகன் வந்துவிட, நிம்மதியும் வந்தது;
வேலைகளை இனி அவன் தோள்களில் ஏற்றலாம்.

தன் துக்கத்தை மறைத்துக் கொண்டு, தந்தைக்கு,
தன் ஊக்கச் சொற்களால், உற்சாகம் அளித்தான்.

இரு நாட்கள் தூங்காது கழிந்த அசதியால், நான்
ஒரு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தேன், அன்றிரவில்.

துணிந்து மறுநாள் CID வேலை செய்தேன்; அவர்
அணியும் செருப்பில், வலது Sole காணவில்லை!

செருப்பில் கிடைத்த மண்ணை எடுத்துத் திரட்டி,
பொறுப்பாய் வைத்தேன், ஒரு பேப்பரிலே கட்டி!

பெண்ணரசி அதைக் கண்டு, தன் மனதில் உதித்த,
இன்னொரு யோசனை சொன்னாள்; அதை ஏற்று,

பெயர்ந்த அடிப்பாகம் மண்ணிலேயே கிடந்தால்,
உயர்ந்த காமராவில் படம் எடுக்க விழைந்தோம்.

அடிபட்ட இடத்தில் போய் மகனுடன் தேட, அங்கு
அதிரடியாகப் பல விஷயங்களை அறிந்தோம்!

:spy: . . . :fish2: தொடரும்.................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 20

அடித்தது, பின் நோக்கும் கண்ணாடி, என நான்
எடுத்துச் சொன்னதில், தவறு ஒன்றுமில்லை!

இரட்டைக் கண்ணாடியின் கூடு உடைந்துபோய்,
இரண்டு கண்ணாடிகளும் விரிசலுடன் கிடக்க,

உடைந்த கூட்டின் உட்புறம் எழுதி வைத்ததில்,
அடித்த வண்டியின் தகவல் எல்லாம் கிடைக்க,

என்னவரின் செருப்பின் அடிப்பாகம், பத்து அடி
முன்னே மண்ணில் திரும்பிக் கிடக்க, அவர்

பத்து அடிகள் தூக்கி எறியப்பட்டதை, நாங்கள்
அந்தக் கணம் புரிந்துகொண்டு, அதிர்ந்தோம்!

கண்ணாடியின் கூடு உடைந்து T shirt ல் சிக்க,
என்னவர் வட்டமடித்து விழுந்த விசையிலே

நான்கு பகுதிகள், அரை வட்டத்தில் சிதறிவிட,
நன்கு இழுத்தன முதுகில், ஆழமான கீறல்கள்!

எல்லா Evidence - ம் காமராவில் சிக்கவைத்து,
எல்லாவற்றையும் மகன் Laptop ல் ஏற்றினான்.

போலீஸ் அதிகாரி மதியம் சிரித்தபடி வந்தார்;
போலீஸ் விசாரணை ஆரம்பமாகும் முன்னே,

தான் ஜிம் செல்லும்போது, தினம் என்னவரை,
தான் பார்த்திருப்பதாக எங்களிடம் சொன்னார்.

கேஸ் இன்னும் எளிதாகிவிட்டது அப்போது;
கேஸ் இன் Evidence எல்லாம் காட்டினோம்.

தனக்குக் கம்ப்யூடர் பற்றி அதிகம் தெரியாது;
தன் மனைவி கேலி செய்வாள், என்று கூறி,

போட்டோக்களை CD யில் தருமாறு கேட்க,
போட்டோக்களை Pen drive இல் கொடுக்க,

வேலையை எளிதாக்கியதற்கு நன்றி கூறி,
வேலைகள் மேலும் இருப்பதால் நகர்ந்தார்.

:yo: . தொடரும்..............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 21

இடித்து ஓடிய ஓட்டுனர், போலீசிடம் சென்று, தான்
இடித்த விவரத்தை ஒப்புக் கொண்டானாம்; அந்தப்

பேடி, நிறுத்தினால் என்ன ஆகுமோ என்று பயந்து,
ஓடி வந்ததாக அவன் எஜமானரிடம் சொல்ல, அவர்

ஒப்புக் கொள்ளாத குற்றத்தைக் கண்டுபிடித்தால்,
தப்பாது கடும் தண்டனையும், சிறையும் கிடைக்கும்

என்று அச்சுறுத்தியதால், எஜமானருடனேயே அவன்,
அன்று காவல் நிலையத்திற்கு, நடுங்கி வந்தானாம்!

மனித நேயம் சிறிதும் இன்றி ஓடி வந்ததற்காக, அந்த
மனிதனை, காவல்துறை அதிகாரிகள் கண்டித்தனராம்.

ஒரு ரொட்டிக் கம்பெனியின் வண்டி அது; எனவே எந்த
ஒரு கஷ்டமும் இல்லாமல் இன்ஷூரன்ஸ் கிடைக்கும்.

என்னதான் பணம் திரும்பக் கிடைத்தாலும், அடிபட்டு
என்னவர் படும்பாட்டை யாராவது குறைக்க முடியுமா?

கனிவாகப் பேசுவதை, இங்கு அதிகம் பார்க்கலாம்.
'ஹனி' என்றுதான் பலரும் இங்கு அழைக்கின்றார்!

வாய்ச்சொல்லே என்றாலும், நம் மனதிற்கு இதமே;
வாய் நிறைய வாழ்த்துக்கள் சொல்லுவதும் நிஜமே!

ஐஸ் வைக்க இனிய சொற்கள் போதாதென்று, நல்ல
ஐஸ் போலக் குளிராக அறையையும் வைக்கின்றார்!

மூன்றடுக்கு ஆடையிலும், எனக்கு நடுங்கித் தள்ள,
மூன்றடுக்கு மேல் அணிந்தேன், Sweater - ஐ மெல்ல!

வாணவேடிக்கை, சுதத்திர தினத்தன்று பார்த்த பின்,
வானில் பறந்து, Philadelphia சென்று வர விழைந்து,

எடுத்த விமான டிக்கட்டுகள், ரத்து செய்தோம்; இனி
அடுத்த பயணம் பற்றி எண்ணவே யாம் மறந்தோம்!

ஜூன் மாதக் கடைசி நாளில் இருந்தோம்; வருகின்ற
ஜூலை மாதம் நன்றாக இருந்திட வேண்டினோம்!

:pray: . . . தொடரும் ..............
 
raji,

you hit the nail on the head. after all, it is the victim who has to suffer the pain. especially when it was unwarranted.

how many hours after the accident did the driver confess. maybe he was under the influence of drugs or alcohol. quite common here.

my mommy, even in the thick of summer, used to wear double sweater, and the rest of us, in minimal clothes, with the a/c blasting .

this year, when i was in chennai, january, i was very surprised to see, little children with earmuffs. all for chennai 'winter'. had a good laugh.

have a enjoyable july and a safe trip back home, dear lady. with a fully recovered 'ennavar' :)
 
Dear Sir,

So far so good! July is going smooth for us. We have planned this vacation for 5 months and wish to see the beautiful fall

colours this year. We missed that season in the two earlier trips!

Regards,
Raji Ram
 
When I refer to my dh, he is என்னவர்!
When my friends write about him to me, he is உன்னவர் / உங்களவர்!! :decision:
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 22

அடுத்த வீட்டுக்காரர் நன்கு கிடைப்பதும் யோகம்;
அடுத்த படுக்கைக்காரர் நன்கு வருவதும் யோகம்!

முதல் இரண்டு இரவுகள் வந்தவன், ஓர் இளைஞன்;
முதல் முக்கிய வேலை அவனுக்கு, உண்ணுவதே!

சிலர் உயிர் வாழவேண்டி, உணவு உண்ணுவார்கள்;
சிலர் உணவு உண்ணவேண்டியே, உயிர் வாழ்வார்!

இவன் இரண்டாவது ரகம்; கடோத்கஜன் போல!
அவன் அறுவை சிகிச்சை, அடுத்த நாள் இருக்க,

ஊர்வன பறப்பன எல்லாமே உண்ணக் கேட்டான்;
ஊர்ஜிதம் செய்துகொண்டான், மதுவும் கிடைக்க!

தான் ஒரு மொடாக் குடியனே என்று வாக்குமூலம்
தானே தந்து, அதற்கு ஏற்பாடு செய்துகொண்டான்!

அர்த்த ராத்திரி மூன்று மணிக்கு நர்ஸை அழைத்து,
தீர்த்தம் போல wine வேண்டுமெனக் கேட்டானாம்!

தன் வலிகளை அடிக்கடி உணர்த்த, கத்துவதற்குத்
தன் கடும் குரலைத் தயங்காது உபயோகித்தான்.

அடுத்தவர்கள் பற்றி அக்கறை என்பது அவனுக்கு
எடுத்துச் சொன்னாலும் புரியாதோ, என்னவோ?

என்ன வலி வந்தாலும் சொல்லாத குணம் கொண்ட
என்னவருடன் ஒப்புமை செய்துபார்த்தேன் அவனை!

:attention:. . :rant: தொடரும் ............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 23

நண்பர்கள் ஆலோசனையால், அன்று வக்கீலை
நட்புடன் நாடினான் மகன்; உதவி வேண்டினான்.

நமது அலைச்சலை இனிமேல் அவரே ஏற்பார்;
தமது உதவிக்கு, நல்ல பணமும் அவர் பெறுவார்!

மூன்றாம் நாள், அறை மாற்றியும் பயனே இல்லை;
ஊன்றுகோல் உபயோகிக்கும் முதியவர், அருகில்!

இருமியும், கனைத்தும், பேசியும், கனத்த குரலில்
உறுமியும், எம் உறக்கம் கலைத்தார்! என்னவரின்

நரம்பு வழி வலி நிவாரண மருந்து நிறுத்தப்பட்டு,
உணவுடன் மாத்திரையானது நிம்மதியே அன்று.

இரு நாளில் இல்லம் செல்ல எண்ணியபோது,
சிறு வீக்கம் தோன்றிவிட்டது வலது பாதத்தில்.

அதிலும் ஒரு எலும்பு முறிவு காணப்பட்டதால்,
எளிதில் இல்லம் திரும்பவும் முடியாது! மீண்டும்

வலது கால் அளவு எடுத்துச் சென்று, ஷூ ஒன்று
வலது காலில் மாட்டினர், Astronaut போல அன்று!

இந்திய இரவு நேரத்தில், இரண்டு மணி நேரம்
இங்கே தூங்குவதை, தினம் நான் தொடருவேன்.

மதிய நேரம் முழுதும் விழித்தே இருந்தால், என்
இரவு தூக்கம், இந்தியா திரும்பிய பின் கெடுமே!

தொடர்ந்து சிகிச்சை நடப்பதால், அதுவரையில்
தொடர்ந்து நல்ல உறக்கமில்லை, இருவருக்கும்.

விழிப்பு நிலையிலிருந்து, உறக்கம் வரும்போது
எழுப்புகின்றார் மருத்துவம் செய்யணும் என்று!

மூன்றாம் நாள் இரவு நர்ஸ் மிகவும் சுட்டிதான்;
மூன்று நாள் குறுந்தாடியை எடுத்துவிட்டாள்!

நன்கு உடல் துடைத்தாள்; அதனால் என்னவர்,
நன்கு தெளிந்திருந்தார், மறுநாள் காலையில்!

:bathbaby: . . :thumb: . . தொடரும் ...............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 24

போட்டோக்கள் எடுத்த இடத்தை மகன் பார்த்தபோது,
போட்டோவில் சிக்கிய எதுவும் அங்கு இல்லையாம்!

எங்கள் CID வேலையில் கிடைத்த Evidence எல்லாம்,
தங்கள் கண்டுபிடிப்புப் போலவே போலீஸ் எடுத்தது!

சென்ற வாரம் ஒரு நாள், தொலைபேசி மணி அடிக்க,
என்னவர் அதை எடுக்க, சிறிய காமெடி ஆகிவிட்டது.

தன் பெயரைச் சொல்லி யாரோ கேட்டபோது, உடனே
தான் பேச ஆரம்பித்தவர், பின்னர் அறிந்துகொண்டார்,

மகனிடம் பேச விழைந்த யாரோதான், தன் பெயரால்
அவனை அழைத்த, இந்த நாட்டில் உள்ள பழக்கத்தை!

இப்போது மருத்துவமனையில், இவரின் தந்தை பெயர்
எப்போதும் இவரை அழைக்கப் பயன்படுகின்றது!

இனிய இல்லம் திரும்பியபின், இவர் தனது பெயரை
இனிய தன் தந்தை பெயராக மாற்றிச் சொல்வாரோ?

ரயில் நிலையம் மருத்துவமனையின் எதிரே உண்டு;
ரயிலில் பாதி தூரப் பயணம் செய்தோம், அன்று இரவு.

ஒரு மணி நேரம் நாம் காரில் செல்லுகின்ற நேரத்தில்,
இருபது நிமிடம் குறையும், இவ்வகைப் பயணத்தால்.

அடுத்த கட்டச் சிகிச்சை முடிந்துவிட்டால், நாங்கள்
அடுத்து வரும் சுதந்திர தினத்தில், இல்லம் போகலாம்.

சுதந்திர தினம் நெருங்க, பலர் வீடுகளிலே விருந்து;
சுதந்திரம் வேண்டும் எமக்கு MGH இலிருந்து! ஆனால்

மீண்டும் X ray எடுத்தப் பரிசோதனை செய்த பின்னர்,
வேண்டும் இன்னுமோர் குழாய்ச் செருகல் என்றனர்!

:fear:தொடரும் ....................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 25

ஐந்தாம் நாள் விடியலில் வாழ்வு முறையே

வந்த ஊரில் மாறிவிட்டதுபோல் இருந்தது.

காலைக் காபி, குளியல், சிற்றுண்டி; பின்,
சாலை வழியே மருத்துவமனை அடைதல்.

நான் துணையாக அங்கு அமர, எம் மகன்
தான் சென்று பிற அலுவல்கள் கவனிக்க,

பெண்ணரசி தயாரித்த ருசியான உணவை,
உண்ணுவோம் மதியம் நாங்கள்; இடையில்

மருத்துவரும், பிறரும் சோதித்துச் செல்ல,
கருத்துடன் கவனிப்பு, இங்கு தொடர்ந்தது.

உறுதி செய்தபடி, உட்காயத்தால் சேர்ந்த
குருதியை வெளியேற்றக் குழாய் ஒன்று!

ருவரும் இல்லம் திரும்பி வந்த பின்னே,
மூவர் குழு நள்ளிரவில் குழாய் சொருகிட,

தனக்கு பாரம் குறைவது தெரிகின்றதென
எனக்குத் தொலைபேசியில் சொன்னார்.

நுரையீரலை அடுத்து இருந்தது, உட்புறம்
அரை லிட்டர் குருதி, அலுங்காமல்! அது

வெளியேற, கனம் குறைந்துவிட, வலியும்
வெளியேறும் பாதையில் அடி வைத்தது!

வீட்டு உணவு தந்த மகன், தன் தந்தையை
விட்டு வலி போக, நிம்மதி அடைந்தான்.

பெண்ணரசியும் குழந்தையும் வந்ததில்,
என்னவரின் மகிழ்ச்சி அதிகரித்துவிட,

சிரிக்கும் தாத்தாவைக் கண்ட குழந்தை
சிரித்து அவரிடம் தாவிவிட முயன்றாள்;

முதல் நாள் அவர் வேஷத்தைப் பார்த்து,
நுதல் சுருங்க, முகம் சிவக்க அழுதவள்!

:blah: . . தொடரும் ................

 
Dear Sir,

So far so good! July is going smooth for us. We have planned this vacation for 5 months and wish to see the beautiful fall

colours this year. We missed that season in the two earlier trips!

Regards,
Raji Ram

let the fall colours be your rewards raji, for the troubles that you guys are experiencing.

the whole of northern part of usa and all of canada, are blessed with the sudden turn of colours. where i live it is to be found all over. i guess it would be the same in boston. i was told that the state of vermont is a good drive to witness the full glory of God's colourful creations :)
 
You have translated it correctly. You may want to try in Google Translate to get answers (at least as first approximations) ...........

Dear Prof. MSK,

Thanks for the message. I was using some other translation so far! Had a funny experience!

I tried from English to Tamil and it worked well. But to try from Tamil to English, I typed 'nuraiyeeral' requesting to allow phonetic

typing, google asked me if the word was 'nurai eeral'. Then if said from Italian to English!! And typed out 'nurai eeral' as the

translation! But when I copy pasted நுரையீரல் the answer given was 'lung'.

Regards,
Raji Ram
 
Last edited:
மீண்டும் X ray எடுத்தப் பரிசோதனை செய்த பின்னர்,
வேண்டும் இன்னுமோர் குழாய்ச் செருகல் என்றனர்!

The procedure is called 'insertion of chest tube'!

This is done to remove the blood collected outside the lung, by the injury!

Google search gave this image for us to understand better.

ChestTubePlacement.jpg

 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 26

இனிய இல்லத்தில் உறங்கும் ஐந்து மணிகள்,

இனிமேல் எனக்கு போதாதுபோல இருந்தது.

கண் எரிவுடன், விமானப் பயணம் போலவே,
கண்ணயர வேண்டும், மருத்துவமனையிலே.

எட்டு மணி நேர உறக்கம் பழகிவிட்ட நான்,
தட்டுத் தடுமாறினேன், சில நாட்களிலேயே!

உடன்பிறப்புகள் அன்புக் கட்டளை இட்டனர்,
உடல் நிலையை, நான் நன்கு கவனிக்கும்படி.

சாவி கொடுத்த பொம்மையாகச் சுழன்றேன்;
தேதி என்னவெனத் தெரியாது, மருண்டேன்!

நீண்ட வார விடுமுறையில் பலரும் செல்ல,
நீண்டு போகும் மருத்துவம், மேலும் தொடர,

சென்ற ஆண்டு முதல் காண விரும்பிய, அந்த
சிறந்த 'ஜூலை நாலு' கொண்டாட்டம், அன்று!

சுதந்திரதினத்தை மறக்க முடியுமோ? நான்
சுதந்திரதின வாணவேடிக்கை காண்பதற்கு,

மகன் இரவு ரயில் பயணம் செய்து வந்தால்,
அவன் துணையுடன் போகலாம், என்றேன்!

மனபாரம் குறைய, மாறுதல் தேவையானது;
மனம் கவரும் நிகழ்ச்சி, அன்றிரவு இருந்தது!

தொடரும் .................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 27

பத்து நிமிட நடையில் வரும் Longfellow Bridge;
பத்தரை மணிக்கு ஆரம்பம், வாணவெடிகள்!

இரவு உணவு முடித்து, நடந்து சென்று, அந்த
இரவு குழுமிய மக்கள் கடலிலே கலந்தோம்.

ஜோடிகளாகப் பலரும் வர, வெட்ட வெளியில்
கூடிக் குலவுவதை வெட்கம் இல்லாது செய்ய,

USA - USA என்று கூட்டமாகக் கூக்குரல் எழுப்ப,
USA யின் சிறந்த காட்சியை எதிர்பார்த்தோம்.

வானத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடிக்க,
வானத்திலிருந்து அது ஒரு Spot light அனுப்ப,

ஒளி வட்டம் பாஸ்டன் பாப் இசை நிகழ்ச்சியை
எளிதாகக் காட்ட, மக்கள் அதை ரசித்து நிற்க,

பாலத்தின் மீது நிற்போருக்கு ஒளி மட்டுமே!
பாலம் வரை இசை நிகழ்ச்சி கேட்கவில்லை.

எழுந்த இரு வாணவெடிகளால், மக்கள் சிலர்
எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தொடங்க, அவை

முன்னோட்டம்தான் என அறிந்து, அவர்களும்
முன்போலத் தரையில் மீண்டும் அமர்ந்துவிட,

சரியாகப் பத்தரை மணிக்குத் தொடங்கின மிக
அரிதான அழகிய வான வாணவேடிக்கைகள்!

சொற்களால் வர்ணிக்க இயலாத காட்சிகளே;
கற்பனை செய்து மகிழ வேண்டிய காட்சிகளே!

பிந்துமாலினி ராகத்தில் தியாகராஜரின் பாடல்,
'எந்த முத்3தோ3 எந்த சொகஸோ' என்பதில்,

'எவரால் வர்ணிக்க முடியும்?' என்று கேட்பார்;
எவரால் வான ஒளி அழகை வர்ணிக்க முடியும்?

இறைவன் ராமன் அழகு, சொல்லில் அடங்காது;
நிறைவான இந்த வானொளி நிகழ்ச்சி அப்படியே!

:clap2: . தொடரும் ....................

 

Latest posts

Latest ads

Back
Top