• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

Longfellow bridge:

boston-longfellow-bridge.jpg


Photo courtesy : Internet
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 28

தரையில் அமருவது நம் வழக்கம் மட்டும் அல்ல;
தரையில் அமைந்தனர், பாலத்தில் இருந்த பலர்.


சாப்பிடுவதற்கு அஞ்சாத மக்கள் இவர்கள்! பலவித

சாப்பிடும் பொருட்களைப் பலர் வைத்திருந்தனர்.

கோலா முதல் மதுவகைகள் வரை, குடிப்பதற்கும்,
தாராளமாகப் பரப்பி வைத்திருந்தனர், தம் அருகில்!

முன்பு 2003 ல் இந்தக் காட்சி காண்பதற்கு, நாங்கள்
அங்கு புல்வெளியில் குழுமிய மக்களுடன் நின்று,

ஒலிபரப்பும் இசையுடன், வண்ண வெடிகளையும்,
ஒளி, ஒலி பிரம்மாண்டங்களாகப் பார்த்து, அந்த

இசைக்கு ஏற்ப அமைந்த ஒளி வட்டங்களால், பல
திசைகளிலும் பரவிய நிறங்களால், மகிழ்ந்தோம்.

வானத்தில் இருந்த ஹெலிகாப்டர் மறைந்து போக,

வானத்தில் வண்ண மயமான மாயம் தொடங்கியது.

தங்க நிறத்திலும், மாணிக்கச் சிவப்பு நிறத்திலும்,

மங்காத நீலம் மற்றும் பச்சை நிறங்களிலும், அங்கு

பற்பல வடிவங்களில் சிதறிய தீப்புள்ளிப் பிழம்புகள்,

சொற்களில் அடங்காத அழகை அள்ளி அள்ளித் தர,

நூற்றுக் கணக்கில் வால் நட்சத்திரங்கள் போலவும்,

ஊற்றுப் பெருகுவது போலவும், ஒளிர் நிறங்களிலே,

சுற்றும் வட்ட வடிவங்களாகவும், அடுக்கடுக்காகவும்,

சற்றும் அலுக்காது, வெளிச்ச மழையைப் பொழிய,

உயர்ந்து அருகிலிருந்த கட்டிடத்தின் கண்ணாடிகளில்,

உயந்த பிரதிபிம்பங்களாக, பல வண்ணங்கள் மிளிர,

பாலத்தின் அருகே செல்லும் T ரயில் வண்டிகள்,

பாலத்தை அதிர வைக்கும் ஒலியோடு சென்றிட,

ஒவ்வொரு வெடிகளின் சுற்று முடிந்ததும், அங்கே

ஒவ்வொருவரும் பலத்த கரகோஷம் எழுப்பி மகிழ,

கண் கொட்ட மனம் இன்றி, அரும் காட்சி கண்ட பின்,

கண் அயர இனிய இல்லம் திரும்ப விழைந்தோம்!

:clap2: . . :car: . . தொடரும் ...............



 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 29

சிறிதும் சுத்தம் பற்றிய அக்கறை இல்லாத பலரும்,
சிதறும் பிளாஸ்டிக் பாட்டில்களையும், உணவை

எடுத்துவந்த பொட்டலப் பேப்பர்களையும், அங்கு

எடுத்துப் போட்டுவிட்டு, ஜாலியாக நடந்து செல்ல,

நம் நாட்டில், ஆடிப் பெருக்கில், சென்னை பீச்சில்,

நம் மக்கள் செய்யும் லூட்டிகள், நினைவு வந்தன!


ரயில் நிலையத்தில் அடர்ந்த கூட்டமாக, ஜனம்;
ரயில் ஏற டிக்கட் கிடையாது, அன்றைய தினம்.

ஒவ்வொரு ரயிலையும், பாதிவரை நிரப்பிவிட,
ஒவ்வொரு 'செட்'டாகப் போலீஸ் அனுப்பினர்.

ரயில் இருக்கைகள் முழுதும் நிறைந்துவிட்டால்,
ரயிலினுள் அடுத்த ஸ்டேஷனில் ஏற முடியாதே!

அடிப்பிரதக்ஷிணம் செல்லுவதுபோல் எல்லோரும்,
அடிமேல் அடியாக நகர்ந்து சென்றோம். தலையில்

சுதந்திரப் பெண்ணின் கிரீடம்போல வைத்த சிலர்,
சுதந்திரமாக வந்தனர், பெருமை முகத்தில் மலர.

மின்னும் வளையங்களைக் கழுத்திலும், கைகளிலும்
இன்னும் சிலர் அணிந்து, சிரித்தபடியே உலவினர்.

மிகவும் காமெடி என்னவென்றால், கல்லூரிப் பெண்கள்,
மிகவும் சின்னக் குழந்தைகளின் Pacifier போல வடிவில்

மிட்டாய்களை வாங்கி, வாயில் வைத்து உறிஞ்சியபடி
'மிட்டாய் வாய்' அழகிகளாகக் கூட்டத்தில் கலந்தனர்!

pacifier.jpg


கிடைத்தது எட்டாவது ரயிலில், எங்களுக்கு அமர இடம்;

அடைந்தோம் நள்ளிரவில் Alewife ஸ்டேஷன். மீண்டும்

அடர்ந்த போக்குவரத்து நெரிசல்; ஒன்றன் பின் ஒன்றாக,
தொடர்ந்த வாகனங்களாகச் சாலையில் பல வண்டிகள்.

அரைமணி நேரம் ஊர்ந்து, பெரிய சாலைகள் கடந்தோம்;
ஒரு மணி முன்னிரவில், இனிய இல்லம் அடைந்தோம்.

:baby: . :flock: தொடரும் ...................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 30

மறுநாள் மகனுக்கு அலுவல்கள் அதிகம் இருக்க,
மருத்துவமனைக்கு ரயிலில் போகச் சொன்னான்!

எனக்கோ அங்கிருந்து வரும் வழிதான் தெரியும்;
எனக்குப் போகும் வழியைக் காட்டச் சொன்னேன்!

305394060kMgkxK_ph.jpg


தன் காரை Alewife ஸ்டேஷனில் நிறுத்திய பின்னர்,

என்னை முன்னே செல்லுமாறு எம் மகன் சொல்ல,

நானே 'கார்டு தேய்த்து', தடைக் கதவைத் தாண்டி,
நானே ஒரு ரயிலினுள் ஏறி அமர்ந்துகொண்டேன்.

வழிகாட்டும் போர்டுகளின் துணையால் சென்று,
அழகாக என்னவரின் அறையை அடைய, சிறிது

தைரியம் வந்தது; மறுநாள் நான் தனியாக வரும்
தைரியம் வந்ததாகச் சொன்னேன்; மகிழ்ந்தான்!

ஆக்சிஜன் குழாய் இல்லாமல், அன்று உடலிலே
ஆக்சிஜன் சரியான அளவு தொடர்ந்தது. இப்போது

உள்ளது chest tube மட்டுமே! அதையும் எடுத்தால்,
இல்லம் செல்ல அனுமதி கிடைக்குமே! அதையே

எதிர்பார்த்து, இறையை வேண்டியபடி இருந்தோம்.
எதிர்பார்த்த செய்தி வந்தது, அன்று இரவிலேயே!

அடுத்த நாள் X ray நன்கு இருந்தால் போதுமாம்; பின்
எடுத்துவிடலாம் அந்த chest tube ஐ என உரைத்தனர்.

எல்லா Extra fittings ஐயும் கழற்றினால்தான், 'நான்
நல்லா இருக்கேன்!' என என்னவர் சொல்லுவார்?

எப்படியோ ஒருவாரம் வேகமாக ஓடிவிட, நாங்கள்
எப்படியும் இரு நாட்களில் இல்லம் செல்ல வேண்டும்!

:pray: . . தொடரும் ......................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 31

ஒருநாள் வழி காட்டிவிட்டதால், மதிய உணவுடன்,
மறுநாள் நானே ரயில் ஏறி MGH க்கு வந்துவிட்டேன்.

சிறிது நேரத்திலேயே ஒரு பெண் மருத்துவர் வந்து,
மதிய நேரம் குழாயை எடுக்கலாம் என்று சொல்ல,

இனிய இல்லம் செல்லும் எண்ணம் வந்து, மனமும்
மதிய வேளைக்காகக் காத்திருக்கத் தொடங்கியது!

மூச்சுப் பயிற்சி பழகுவது மிக நன்மையாகும்; நமது
மூச்சை அடக்க நேரும் சமயங்களில், நன்கு உதவும்.

சென்ற அமெரிக்க விஜயத்தின்போது, Denver zoo
சென்ற சமயம், சில கூண்டுகளைத் தாண்டித் தப்ப,

இந்தப் பயிற்சியே உதவியது, எனக்கு. இப்போதும்
இந்தப் பயிற்சியே என்னவருக்கு உதவ வருகிறது!

மதியம் மீண்டும் அதே பெண் மருத்துவர் வந்தார்;
அதிகம் வலிக்காதிருக்க, ஆழ்ந்த மூச்சு இழுக்க

ஒரு சிறு பயிற்சி அளித்த பின்பு, ஆழ்ந்த மூச்சை
ஒவ்வொரு முறை இழுத்து வெளிவிடும்போதும்,

சிறு சிறு பகுதியாக Chest tube ஐ எடுத்துவிட்டார்;
சிறு அளவு வலியும் இல்லாது செய்துவிட்டார்.

இழுத்து ஒட்டும் 'எலாஸ்டிக் பிளாஸ்டர்' ஒன்றை
எடுத்து ஒட்டி, ஒரு தையலும் இல்லாது முடித்தார்.

மருத்துவத் துறை முன்னேற்றம் மிக அதிசயம்தான்;
கருத்துடன் செய்வோரிடம், வலியின்றித் தப்பலாம்.

மறுநாள் காலை ஒரு X ray பார்த்தபின், நாங்கள்
திரும்பலாம் எங்கள் இல்லம் என்று உரைத்தனர்.

:peace: . தொடரும் .....................

 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 32

அனைத்துக் குழாய்ச் செருகல்களும் உடலிலிருந்து
எடுத்துப் போட்டபின், மனதில் நிம்மதியும் வந்தது!

மறுநாளும் ரயிலில் ஏறி, மருத்துவமனை அடைந்து,
மருத்துவர் வரவிற்குக் காத்துக்கொண்டு இருந்தேன்.

அன்று, அங்கு வந்து பத்து நாட்கள் பறந்துவிட்டன;
என்றும் கால தேவன், நிற்காமல்தானே ஓடுவான்?

எக்ஸ் ரே பரிசோதனை முடிந்து, நலமே எனக் கூறி,
எங்கள் இனிய இல்லம் செல்ல அனுமதி கிடைக்க,

மகனுக்குத் தொலைபேசி, விவரம் சொல்ல, அவன்
அகம் மகிழ்ந்து, MGH க்கு விரைந்து வந்துவிட்டான்.

எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு, விடை பெற்று,
எல்லோருடைய நல்வாழ்த்தும் பெற்றோம், அன்று.

ஒரு சில படிவங்களில் கையெழுத்து வாங்கியபின்,
ஒரு சக்கர நாற்காலியில் அமர்த்தி, என்னவரைக்

காரின் அருகில் கொண்டுவந்து விட, முன் சீட்டில்
ஏறி, நிம்மதிப் பெருமூச்சுடன் அமர்ந்துகொண்டார்.

எங்கள் இனிய இல்லம் அடைந்ததில், அன்றுபோல
எங்கள் மனம் என்றுமே மகிழவில்லை எனலாம்!

சாய்வு நிலையில் அமைக்க ஏதுவான ஒரு கட்டில்,
ஓய்வு நன்கு எடுக்கவும், உறங்கவும் ஏற்பாடானது.

043.JPG


ஆறு வாரங்கள் ஓய்வில், உடல் தேறும் என்பதால்,

ஆறு வாரங்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம்.

நன்கு உடல் நலம் திரும்ப வேண்டுமென, நாங்கள்
ஒன்று சேர்ந்து, இறையை வேண்டி வணங்கினோம்!

:pray: . தொடரும் ....................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 33

அந்த வார விடுமுறையில் மகனின் நண்பன்,
வந்து பார்ப்பதாகச் சொன்னான். அவன்தான்

சென்ற முறை, 'இரண்டாம் மகனின் அறிமுகம்'
என்று அழைத்து, பின் அதை ரத்து செய்தவன்!

அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இப்போது;
அதன் அண்ணனுடன் சேர்ந்து, மிக லூட்டிதான்!

இரு பிள்ளைகளுக்கும் உணவு கொடுத்த பின்பு,
திருமதி சகிதம் வீட்டிலிருந்து புறப்பட, இரவு

ஒன்பது மணி ஆகிவிட, முக்கால் மணி ஓட்டி,
ஒன்பதேமுக்காலுக்கு வந்து சேர்ந்தனர்! இரு

விஷமக்காரக் கண்ணன்கள்; பயங்கரச் சத்தம்!
விஷமத்தை அண்ணன் ஆரம்பிக்க, அதையே

தானும் கர்ம சிரத்தையாகத் தம்பியும் தொடர,
நானும் மற்றவருடன் சேர்ந்து சிரித்து மகிழ,

இரவு போலவே தெரியவில்லை; அவர்களின்
வரவு, நல்லதொரு மாற்றமாகவே இருந்தது.

பரஸ்பரம் க்ஷேம நலன்கள் விசாரித்தோம்;
வரும் மாதம் அவளின் அப்பா வருகிறாராம்.

தம் வீட்டிற்குக் கட்டாயம் எங்களை வருமாறு,
தம் மனப்பூர்வமாக அன்பு அழைப்பு விடுத்தனர்.

'நல்லிரவு' உரைத்து, விடைபெற்றனர்; அவர்கள்
நள்ளிரவில்தான் இனிய இல்லம் சேர முடியும்!

:bump2: . . :car: தொடரும் .................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 34

அமர்ந்து குளிக்க, உயரமான வழுக்காத ஸ்டூல்;

குனிந்து நிமிராது சோப் தேய்க்க, ஒரு ஸ்பாஞ்ச்.

இனிய இல்லத்தில் செய்த இந்த மாற்றங்களால்,
எளிதில் என்னவர் தன் வேலைகளைச் செய்தார்.

புதிய Lap top வாங்கி, எங்களுக்கெனத் தந்துவிட,
இனிய இசைப் பாடல்கள் பல கேட்க முடிந்தது!

'இன்டர்நெட்' இருப்பது எத்துணை சிறப்பானது!
'இன்டர்நேஷனல்' தொடர்புக்குத் தேவையானது!

நம் அறையில் இருந்துகொண்டு உலகம் முழுதும்,
நாம் தொடர்புகொள்ள, ஒரு Lap top இருக்கின்றது!

அன்பு கொண்ட அனைவரிடமும், Skype வழியாக,
அன்றாடம் பேசினோம்; அருகாமை உணர்ந்தோம்.

என்னவரின் தங்கையின் கணவர், West Virginia வில்
தன்னிகரில்லா மருத்துவர்களில் ஒருவர். அந்தத்

தம்பதியர், எங்களைக் காண வேண்டி, இரு நாட்கள்,
தங்கள் வேலைகளை ஒதுக்கி, இங்கே வந்தனர்.

தீர்ந்துபோன வலி மாத்திரைகளை வாங்க, ஒரு
தேர்ந்த மருத்துவரின் பரிந்துரை தேவை! அதனை

அவர் தர, நாங்கள் வாங்கி வைத்தோம். நம்மூரில்
நம்மவர், மருந்தகங்களில் எதையும் வாங்கலாம்.

இந்த நாட்டில் அவ்வாறு வாங்கவே முடியாதாம்!
எந்த மருந்துக்கும், பரிந்துரைச் சீட்டு வேண்டுமாம்!

மருந்துக்கு அடிமையாவதை இது தடுத்தாலும், நம்
மருந்துக்கு கொஞ்சம் அலைவதுபோல இருந்தது!

:bolt:தொடரும் ......................
 
Dear Kunjuppu Sir,

We can buy only very basic pain pills from the medical shops in the US. Even Brufen, which is available in plenty

in India needs doctor's prescription, here! The lady physiotherapist told us that her sister visited India recently and

when her husband got sick, he was given treatment immediately. They were amazed by the medical facilities in India!

Just visit a doctor and get the medicine.... as simple as that! :sick: => :painkiller: => :dance:

Raji Ram
 
dear raji,

the medical establishment is a big closed racket in the usa, i think. it is also the same in canada, but not so controlling like in the usa.

even the simplest of drugs, they make it 'prescription only'. the medicine might cost 1 dollar, but the service charge is 12 dollars. the pharmacists union is too strong and there is no chance of it ever getting loosened.

the pharcists say that it is for your own protection, and if not controlled, people will abuse these drugs. people who want to abuse drugs, they get them in plenty here, with our without the benefit of the pharmacists and the doctors.

in the usa, medicine is profit making unit just like any other industry. i do hope your insurance folks all coughed up the money nice and neat. i am not sure that because your husband was a victim, and this was a pure unadulterated accident, (as opposed to having this as a pre existing condition), everything will be covered. even then, it may be good for you to hire a lawyer.

the law field is another set of expensive power centre, but agaqin you cannot do without them, especially if you are going to have post operative needs. they willl help you get money for further care and treatment, which otherwise you will not get (the lawyers know the loopholes and which corner of the room has the dirt that needs to be swept).

once again, best wishes for a complete recovery of your hubby. we never win in these cases. there are numerous expenses which occur, which we dont even keep track. we dont have to seek trouble sometimes; sometimes trouble seeks us. what to do!!
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 35

தபால் துறை ஊழியர்களின் காரில் (!) மட்டும்,
தபால் போட எளிதாக இருக்குமாறு அமைப்பு.

இடப்புறம் மற்றவரின் Steering wheel இருக்கும்;
வலப்புறம் இவர்கள் வண்டிகளில் இருக்கும்.

US_Postal_Van.jpg


வண்டிகளை வலப்புறம் ஓட்டும் நாடானதால்,

வண்டியிலிருந்து இறங்காமலே, தபால்களைப்

பெட்டிகளில் இட்டு, மூடிச் செல்வார்கள்; நமது
பெட்டியில் இருந்து, பின்னர் நாம் எடுக்கலாம்.

தபால்காரராகப் பிறந்தாலும் இந்த நாட்டிலே
தபால்காரராகப் பிறக்க வேண்டும், என்றேன்!

பெண்கள் பலர் இந்தப் பணியில் இருக்கிறார்;
தங்கள் பணியைச் செவ்வனே செய்கின்றார்.

சில நாட்கள் மட்டும் வாரத்தில் பணி புரியவும்,
சிலர் தேர்வு செய்துகொள்கிறார், இந்நாட்டில்.

குழந்தைக் காப்பகங்கள் அதிக செலவு; எனவே
குழந்தையை மூன்றுநாள் மட்டும் அதில் விட்டு,

மற்ற நாட்களில், தாமே கவனித்துக்கொள்ளப்
பெற்ற தாய்கள் முடிவு செய்வார்கள், என்றனர்!

இவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லும்போது,
இவர்களும் முழுநேர வேலையே செய்வார்கள்!

வேலையை விட்டுவிட்டால், சில ஆண்டுகளில்,
வேலை மீண்டும் கிடைப்பது கடினம் ஆகுமாம்!

பொருளாதாரச் சீர்கேடு எல்லா நாட்டினரையும்,
பொருள் சம்பாதிக்க வழிகளை நாட வைக்கிறது!

:fish2: . தொடரும் ...........................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 36

பத்துப் பிள்ளைகள் பெற்ற மகராசி, பெரியம்மா!
சொத்து தனக்கு அவர்களே, என்றும் கூறுவார்!

அவர்களில் ஒருவர் Dr. ரங்கன், Ph.D (Bio-Chem);
அவரின் ஆராய்ச்சி மிகவும் அதிசயமானது. தம்

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு,
பெரும் உதவி தரும் ஒரு மருந்து தயாரிப்பதில்,

பன்னிரண்டு ஆண்டு ஆராய்ச்சி செய்து, அதைத்
தன் வாழ்வின் சாதனையாக்க முனைபவர், அவர்!

முனைவர் என்று Ph D களை தமிழில் கூறுவார்;
'முனையும் முனைவர் இவரே' என்றும் கூறலாம்!

மருந்தாக அங்கீகாரம், மாத்திரை பெறவில்லை;
இருந்தாலும் அதை 'வைட்டமின்' போல விற்று,

பலரிடம் பாராட்டும் பெற்றுள்ளார்; எங்களிடம்
பல ஆண்டுகளாகப் பாசத்துடன் பழகுபவர்; எம்

மகனிடம் மட்டும் தெரிவித்து, Philly யில், அவரின்
மகனிடம் வேலைகளைப் பார்க்க விட்டுவிட்டு,

பறந்து எங்களைக் காண வந்தார்; அவருடைய
சிறந்த பண்பு எங்கள் அனைவரையும் கவர்ந்தது!

சில மணி நேரங்களை எங்களுடன் கழித்தபின்,
சில இசை DVD களையும் ரசிக்கத் தந்துவிட்டு,

மாலையில் திரும்பிவிட்டார், மீண்டும் அவரது
வேலையில் ஈடுபாட்டுடன் மூழ்கிவிட. அவரின்

ஆச்சரியம் தந்த வருகை, எங்கள் இருவருக்கும்,
ஆச்சரியத்துடன் பெருமகிழ்ச்சி கொடுத்தது நிஜம்!

:couch2: . தொடரும் ....................

His website: http://www.kibowbiotech.com/

 
raji re your post #441,

part time jobs are sought after and available in the west, for many reasons - there is always a shortage of labour being the prime reason. also most of the part timers are temporary workers, who do not get any benefits - medical pension or otherwise. employers prefer to have two part timers do the same job, as one permanent worker.

there are people in canada, who have spent their entire work life with 3 or 4 part time jobs concurrently.

this is the dark side to the concept of part time.

on the other hand, it is a great avenue of relief for housewives with young babies - to leave them care of the hubby in the evening or weekend, and get out for some socializing and money earning.

for teenagers, it is a great way to enter the work force, acquire a work ethic, and supplement their rather 'extravagant' tastes. :)
 
.........
for teenagers, it is a great way to enter the work force, acquire a work ethic, and supplement their rather 'extravagant' tastes. :)
Dear Sir,

This is a correct observation about teenagers! But, I have seen Indian students who come to the US without aid

for studies, work in the supermarkets to earn a few bucks for their basic needs! How long can the parents in India

convert rupees to dollars (nearly 45 fold) and send to their children here? Really pathetic....

Raji Ram
 
Dear Sir,

This is a correct observation about teenagers! But, I have seen Indian students who come to the US without aid

for studies, work in the supermarkets to earn a few bucks for their basic needs! How long can the parents in India

convert rupees to dollars (nearly 45 fold) and send to their children here? Really pathetic....

Raji Ram

raji,

it is not pathetic. this is admirable, i think. we need to look at this with a different lense.

many of these students come from middle class families, with parents taking heavy loans to fulfil their ambitions. or they do not have enough marks or brand name universities to qualify for financial aid.

these children have so much sense of responsibility for their parents, their own sense of duty, ambition, and above all an immense drive. the usa is a land of opportunity for anyone who is willing to work. and work hard. there is reward. immediately.

they not only have to study and get high marks, in order to maintain whatever financial assistance that they get from the university, but also to maintain their sense of self worth, and give them a heads up for eventual job hunting in the usa. the latter is a huge mountain to climb - not only due to the alien culture, but also their precarious visa situation and nowadays dearth of once plenty jobs.

maybe you are looking at all this from your experience - an outstanding iit graduate son, whose entire tuition fees and living expense all paid for by the university. but that is not the lot of all the students. it makes all types to make up the world and a great undergraduate degree is not necessarily an end in itself.

so, i think, in my eyes, those indian students, who handle a study life, along with working parttime, and having an active social life, are heroes and heroines. i have a few in my family, who out of a sense of pride and self determination, made it a point, even with rich parents in india, to shun the money from the parents and become self sustaining within 2 to 3 months.

let the give you the case of one neice: about 4 years ago. she had an eee degree from srm college. she got admission to a u.s. university. dad paid the first term tuition + gave her money to live. within the first month, she moved to an apt with 4 other girls, got a part time job, and was able to pay tuition fees from 2nd term onwards, pay for a visit home, and have some left over. today she is employed in google in sfo.

so, dear raji, i would request you to reconsider your judgement, that these are 'pathetic'. these are far from 'pathetic' i think. it is more our own handicapped views that views them such.

raji, as you yourself have indicated, there is a high respect and valuation, for the dignity of labour here. no matter what the job is, it is respected, and never considered menial, or a sole propriety of a single caste or race. truly an upwardly mobile society for the hard working.

thank you.
 
Last edited:
It is true Sir, that I see the other children from my point of view! As you say, the students who have high aim in life,

struggle in a foreign land and support themselves within a few month's time are the real heroes and heroines on earth!

Even one of our (means my DH's) cousin's son delayed his submission of project for his master's degree for a few

months since job opportunity was lean at that time. Now he has a good job and has brought his parents to stay with

him for a couple of months in Virginia!

Hats off to those hard working folks! :yo:
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 37

பயிற்சிகளால் உடல் சகஜ நிலைக்கு வர,
பயிற்சி தருவோர் பலரும் பெண்களே.

வாரம் இருமுறை வீட்டில் பயிற்சியைத்
தரும் Physiotherapist இருவர் ஏற்பாடு ஆக,

தினம் செய்யும் வேலைகளின் பட்டியலை
இனம் கண்டுகொண்டதுபோல இருந்தது.

எங்கள் அடுத்த வீட்டில், பஞ்சாபி குடும்பம்;
எங்கள் பிள்ளைகளிடம் அன்பு காட்டுவர்.

நாங்கள் இங்கு வருவதைப் பெண்ணரசி
அவர்கள் வீட்டில் சொல்லி இருக்கிறாள்.

இந்திய மருந்து ஒன்று கிண்டுவதற்கு, நான்
இந்தியாவிலிருந்து அவர்களுக்கு வேண்டி

எடுத்து வந்தது, கால் கிலோ பெருங்காயம்;
அடுத்த சந்திப்பில், நன்றி பல கூறினார்கள்!

சில சமயங்களில், சாப்பிடுவதற்கு,அவர்கள்
சில உணவு வகைகளைத் தருவது வழக்கம்.

இந்த அன்புப் பரிமாற்றத்தால், ஒரு காமெடி
அந்த வாரம் நடந்ததைச் சொல்ல வேண்டும்!

வெய்யில் காலமென்று, பெண்ணரசி எனக்கு
பையில் கொள்ளாத வகையில், பெரியதொரு

தர்பூசணி வாங்கி வந்தாள்; நானும் அவளும்
தர்பூசணியைப் பாடுபாட்டுத் தீர்க்க முயன்று

தீர்க்கமான முடிவு செய்தோம், தர்பூசணியைப்
பார்க்கவே கூடாது சில நாட்கள், என! மறுநாள்,

பஞ்சாபி மாமி, ஆவலுடன் ஒரு தட்டை எடுத்து,
கொஞ்சியபடி உள்ளே வர, அதிலும் தர்பூசணி!


watermelon1.jpg


:bump2: .
தொடரும் ...............
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 38


இந்தியர் பலர் இந்நாட்டில் வாழ்வதால், பல
இந்தியக் கோவில்களைக் கட்டியுள்ளார்கள்.

எங்கள் வீட்டின் அருகில் சாயிபாபா கோவில்;
தங்கள் வீடுகளில் பிரசாதம் செய்துகொண்டு

கோவிலில் கொடுத்து, ஆரத்தி முடிந்த பிறகு,
ஆவலாய் உள்ள பக்தர்களுக்கு வழங்குவர்.

மகன் ஒருநாள் சீக்கிரமாக வீடு திரும்பி வர,
அவன் அழைத்துச் சென்றான், தரிசனத்திற்கு.

சங்கடஹர சதுர்த்தி அன்று; எனவே வீட்டிலே
சக்கரைப் பொங்கல் தயாரித்தாள், பெண்ணரசி.

பெரிய Tin foil பெட்டியில், சூடாக அதை வைத்து,
உரிய நேரத்திலே, அக் கோவிலை அடைந்தோம்.

மாலை ஏழு மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்;
மாலைகள் சாற்றியுள்ளனர், சாய்பாபா சிலைக்கு.

DSCN6238.JPG


சின்ன ஒரு மேடை அழகாக அமைத்து, சிவனின்

சின்ன லிங்கத்தை நடுவிலே நிறுத்தி, அழகான

ஒரு விநாயகர் விக்ரஹத்தை அருகில் இருத்தி,
சிறு அளவு லிங்கங்களையும் சுற்றிலும் அடுக்கி,

அர்ச்சகர் அபிஷகத்தை ஆரம்பித்தார்; ருத்ர ஜபம்
அர்ச்சகரின் கணீர் குரலில், அறையை நிரப்பிவிட,

நம் நாட்டுப் பரம்பரை உடையில் சிலர் வர, இங்கு
நம் நாட்டிலிருந்து குடி பெயர்ந்த மாமிகள் பலர்

ஜீன்ஸ் - T ஷர்ட் அணிந்து வர, சில இளம் பெண்கள்
ஜீன்ஸ் உடையை மறந்து, சுடிதாரில் உலவ, அங்கு

உடையைப் பற்றிய கவலை இல்லாது, பக்திக்கு
உரிய மரியாதை கொடுத்த பலரைப் பார்த்தேன்!

ஒவ்வொரு குடும்பத்தாரும் அபிஷேகம் செய்திட,
ஒவ்வொரு வெள்ளிச் சொம்புப் பாலைத் தந்தனர்.

மன நிறைவான வைபவமாக நிகழ்ச்சி நடந்தது;
மன நிறைவுடன் நாங்களும் இல்லம் வந்தோம்!


:pray2: . தொடரும் ..................
 
சின்ன ஒரு மேடை அழகாக அமைத்து, சிவனின்
சின்ன லிங்கத்தை நடுவிலே நிறுத்தி, அழகான

ஒரு விநாயகர் விக்ரஹத்தை அருகில் இருத்தி,
சிறு அளவு லிங்கங்களையும் சுற்றிலும் அடுக்கி,

அர்ச்சகர் அபிஷகத்தை ஆரம்பித்தார்....

DSCN6233.JPG




 

Latest posts

Latest ads

Back
Top