கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 42
இந்தக் கதை முடியவில்லை! இன்னொரு குஞ்சு,
சொந்தமான எதையோ தொலைத்தது போன்று,
கரையை அடைந்து, மேலும் கீழும் அலைந்திட,
விரைவில் ஒரு 'கிளிக்' செய்யலாமெனச் செல்ல,
ஓரிடத்தில் நிற்காமல், அதுவும் பரபரக்க, நான்
ஓடும் அதைப் படமெடுக்க, 'Sports mode' வைத்து,
படம் எடுத்தும், Focus ஆகவில்லை! அது அந்த
இடம் முழுதும் தேடிய பின்பு, மீண்டும் சென்று,
நீரில் புகுந்து, தனது கூட்டத்துடன் கலந்துவிட்டு,
நீச்சல் வீரன் போன்று , சாகசங்கள் பல செய்தது!
வெள்ளை நிறப் பூக்கள், கரை முழுதும் மனதை,
கொள்ளை கொண்டன! என் மனம் கவர்ந்த அது
என்னவென்று அறியாத நான், அருகில் செல்ல,
என்னை எம் பெண்ணரசி தடுத்து நிறுத்தினாள்!
பாரில் மூச்சுத் திணறலை, சிலருக்கு ஏற்படுத்தும்
பார்த்தீனியம் செடி என்று அறிந்து, நடுங்கினேன்!
கொடிய அந்தச் செடிக்கு, ஆண்டவன் அழகான
வடிவில் பூக்களைத் தந்துள்ளான்! விஷமுள்ள
நல்ல பாம்பும், வழுவழுப்பான, கண் பறிக்கும்
நல்ல வடிவினால் நம்மை மயக்கவில்லையா?
எண்ணத்தில் எழுந்தது, இதுபோன்று மனிதரில்,
எண்ணம் தீதாக, வடிவு அழகாக உள்ளனரே, என!
எட்டரை மணிக்கு, நிறைந்து பரவியது இருட்டு;
எட்டினோம் இனிய இல்லம், உடனே புறப்பட்டு!
:car: . தொடரும் ........................