• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


ஒரு சிறப்புப் பயணம்...
3


மலைப் பாதைப் பயணம் சுகமாக இருக்க, நல்ல

அலைகள் போலக் குளிர்ந்த காற்று வீச, எங்கள்

குட்டிக் கண்ணம்மா அக் குளிரை அனுபவித்து,
சுட்டித்தனங்களை நிறுத்தி, உறங்கிப் போனாள்.

டிசம்பர் மாதத்தில் பாஸ்டன் நகரில் பிறந்தவள்;
டிசம்பர் பனியிலும் போர்வை போர்த்தாதவள்!

காதுகளை மூடி, அந்தக் குளிர் தந்த நடுக்கத்தை
மெதுவாக விரட்டும் முயற்சியில் ஈடுபட்டேன்!

நிலவு மேலே எழுந்து வர, அது வானத்தில் ஒரு
அழகுப் போட்டுப் போல அருமையாய் விளங்க,

பள்ளத்தாக்கில் தெரியும் ஓங்கி உயர் மரங்களின்
கொள்ளை அழகை ரசித்தபடி, திருமலையானின்

திருக்கோவில் அருகே சென்று, காஞ்சி மடத்தா
ர்
அருமையாய் அமை
த்திருக்கும் விடுதி அறைகள்

இரண்டு எடுத்து, சில மணித்துளிகள் இளைப்பாறி,
திரண்டு வரும் பக்தர் கூட்டம் பசியாறும், சிறந்த

உணவகம் சென்று, சிற்றுண்டியால் தெம்பு பெற்று,
கணமும் தாமதியாமல் தரிசனத்திற்குச் செல்ல,

மதி மந்திரி மீண்டும் திருமலைக்கும் வந்து, ஒரு
சதி மந்திரி ஆனதால், தரிசனமே கிட்டவில்லை!

தரிசன வேளை மந்திரிக்கே என அறிவித்து, பிறர்
தரிசனம் அனைத்தையும் தடை செய்துவிட்டனர்!

:roll:தொடரும்...............

 
Some people say that this portion of Thirumala resembles Lord Balaji's profile.

DSCN7983.JPG
 
That is a snap taken by me. Now clearer views published by others!

tirupathi-hills.jpg


tirupati2.jpg


balaji1.jpg


Ok Sir??

Pictures taken from Sri. Ramanan's blog. He got these by e-mail... :)
 
awesome raji!!

now even my mandu mooLai can figure this out.

i owe you one. promise to go through the recent posts in this thread, and do some archair travelling :)

you are good lady...fondly..:)
 
We saw this view of the mountain, when we went in the road towards Kalahasthi, to get the permit to enter AP.

The minister's visit made us wait for a long time on that road and I could not resist taking a snap, since I too got an email

long back about this view. Unfortunately, the electric wires are disturbing the good view, though!
 
ஒரு சிறப்புப் பயணம்... 4

காஞ்சி மடத்தினரின் விருந்தினர் மாளிகை; அதில்

காஞ்சி சங்கராச்சார்யார்கள் ஆசி அளிப்பது போல

பத்தடி உயர அளவில் உள்ள அழகான பெரிய படம்.
அத்தனை நல்ல படம் கண்டதும், அதையும் 'க்ளிக்'!

பெண்ணரசியின் பெற்றோர் காலை வந்து சேர்ந்திட,
கண்ணம்மாவை அழைத்துக்கொண்டு, அருகிலுள்ள

முடி காணிக்கை செலுத்துகிற இடத்திற்கு, நாங்கள்
முதல் குழுவாகச் சென்றோம். டிக்கட் பத்து ரூபாய்!

சின்ன அரை ப்ளேடை அத்துடன் இணைத்துத் தர,
திண்ணமாகத் தெரிந்தது எய்ட்ஸின் பயமுறுத்தல்!

தாய் மாமன் மடியின் அமர வைத்ததும், நாவிதர்
தாய் மாமன் வகை என்று ரூபாய் ஐம்பது பெற்று,

'பிய்யம், பப்பு, நூனி உந்தா?' என மாடலாட, அவர்
செய்யும் பணிக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் என்று

எங்களிடம் கேட்பதை, தெலுங்கு அறிந்த நான் கூற,
என்னவர் நூறு ரூபாயை எடுத்து நீட்ட, நாவிதரோ

இன்னும் சேர்த்துக் கொடுக்கச் சொல்லி, எங்களை
இன்னும் ஒரு நூறு ரூபாய் தர வைத்தார்! அவரின்

உடன் பணி புரியும் பெண்ணுக்கு ஒரு நூறு! ஆனால்,
உள்ளே சென்றதும் கண்ணில் படும் அறிவிப்பு இது!

DSCN8016.JPG


தொடரும்..........................


 
பத்தடி உயர அளவில் உள்ள அழகான பெரிய படம்.
அத்தனை நல்ல படம் கண்டதும், அதையும் 'க்ளிக்'!

DSCN8024.JPG
 
ஒரு சிறப்புப் பயணம்... 5

இதுதான் இந்தியா! ஹமாரா பாரத் மஹான்! ஆம்!

இதுபோன்ற பிடுங்கல்களை யார் தடுக்க முடியும்?

பொறுமையாக, காயப்படுத்தாது, அழும் குழந்தைக்கு,
அருமையான திருப்பதி மொட்டை போட்டதே போதும்!

ஒரு ஸ்ப்ரே அடித்து, எரிச்சல் தெரியாமல் செய்தவுடன்,
விரைவாய்க் குட்டிக் கண்ணம்மா சமாதானம் ஆனாள்!

சுத்தமாகக் குளித்து, புத்துடை மாற்றி, தலையில் நல்ல
சுத்தமான சந்தனக் குழம்பு தேய்த்து, திருமலையானின்

தரிசனத்துக்கு அனைவரும் ஆவலுடன் புறப்பட, அங்கு
தரிசனம் காண அலை கடல் போல கூட்டம் கண்டோம்!

NRI என்பதால் மகன், மருமகள் 300 ௦௦ ரூபாய் வரிசையில்;
பெண்ணரசியின் அம்மா, தம்பி, குழந்தையுடன் போக

அதே சிறப்பு வரிசை, டிக்கட் செலவும் கூட இல்லாமல்!
இதே போல எந்த வரிசையும் எங்களுக்குக் கிடையாது!

அறுபது ஆண்டுதான் சீனியர் வயது என நண்பர் சொல்ல,
ஒரு வயது அதிகம் பள்ளியில் தந்த எங்கள் தாத்தாவை

நன்றியுடன் நினைத்து மகிழ, அது சீனியர் வரிசையைச்
சென்று அடைந்ததும், புஷ்வாணம் ஆகியது! ஏனெனில்,

சீனியர் வயது அறுபத்தைந்து; நானும் சம்பந்தி மாமாவும்
சீனியர் ஆகாத தள்ளுபடி கேஸ்கள்! எனவே, எல்லோரும்

முன்னூறு ரூபாய் டிக்கட் வாங்கும் பொது வரிசையிலே,
முண்டியடித்து முன்னேறும் மனிதக் கடலில் கலந்தோம்!

:bump2: தொடரும்.................

 
ஒரு சிறப்புப் பயணம்... 6

பக்த கோடிகளுக்கு இப்பொழுது மரியாதைதான்!
சக்தி தரும் பாலைச் சூடாக, பேப்பர் கப்புகளிலே,

வரிசைகள் நிற்கும் கம்பிகளின் ஊடே தருகிறார்;

பரிசாக எண்ணி பக்தர்கள் அருந்தி, தெம்பாகிறார்!

ஐந்து நொடிகள் நகர்ந்தால், வரிசை நின்றுவிடும்;
பத்து நிமிடம் கழித்து மீண்டும் மெதுவாக நகரும்!

ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது அப்போது
ஏனோ என் நினைவில் வந்து நிழலாடியது! அங்கே

கம்பிகளை எண்ணிக்கொண்டு, ஒவ்வொன்றுக்கும்
நம்பும் கோவிந்தனின் நாமம் சொல்லி நடந்தாலே,

பல்லாயிரம் நாமங்கள் ஜபித்துவிடலாம்! அதுவே
பல்வேறு நினைவுகளை மனதிலிருந்து அகற்றும்!

இடிக்காமல் நடக்க நம்மவர் பலருக்குப் பிடிக்காது!
இடி ராஜாக்கள், ராணிகள் பலர் எங்கள் வரிசையில்!

என் பின்னால் இருப்பவள், என் இடுப்பைக் கையால்
முன்னே உந்தியபடி, தனது போலீஸ் தொப்பையால்

மேலும் என்னை இடித்துத் தள்ள, நான் முன்புறம்
மேலும் வளைய, அவள் விடாது தள்ள, அதன் பின்

ஈட்டி போன்ற தன் கால் நகங்களால், என் குதிகாலை
நெட்டித் தள்ளிப் பதம் பார்க்க, தோற்றுப் போனேன்!

அவளின் கொடுமைகள் தாங்காது,சில நொடிகளில்
அவள் முன்னே செல்லுவதற்கு வழியை விட்டேன்!

முன்னேறும் வழிகளில் இதுவும் ஒரு புது வழியோ?
முன் நிற்கின்ற நபரைத் துன்புறுத்தி வருத்துவதோ?

:ballchain: தொடரும் .....................

 
ஒரு சிறப்புப் பயணம்... 7

டிக்கட் வாங்கும் இடத்திற்குச் செல்லவே, இந்த
இக்கட்டான சூழ்நிலையில், நாலரை மணி நேரம்!

எத்தனையோ முறை அணிந்த உடையை உடுத்தி,

எத்தனைப் போல, நம் தலைமேல் தம் கைகளால்

கம்பியைப் பிடித்து, பிராணாயாமம் செய்துவிட,

நம்மை பலாத்காரம் செய்திடுவார்
அங்கே சிலர்!

கைத்தடியால் ஓசை எழுப்பி, அருகே நிற்போரின்

கால்களைத் தட்டி, நடுங்க வைப்பார் வேறு சிலர்!

ம்சை அரசர்கள், அரசிகளைக் கடந்து சென்று,
இன்னும் பல படிகள் ஏறி, இறங்கி, கால்கள் தளர,

ஐந்து மணி அளவில், ஒரு காப்பிக் கடை அருகே

வந்து திறக்க, சுட்டிக் காப்பியால் தெம்பானோம்!

ஆறு மணிக்கு வைகுண்ட வாசலை எட்டினோம்!

வேறு சில வரிசைகளும் அங்கே இணைந்துவிட,

என்னவரின் கைகளை கெட்டியாகப் பற்றியபடி

முன்னேறினேன், பற்பல இடிகளைத் தாங்கியபடி!

இறைவனின் அருகாமைவரை விடாததே நலம்;

சிறைக் கைதியை உந்துவது போல, காவலர்கள்

ஆண், பெண் பேதமின்றி, ஜருகு, ஜருகு என்றபடி,

மென்மைத் தன்மையே இன்றித் தள்ளுவார்களே!

அதிலிருந்து தப்பித்தோம்; பிரகாச ரூபனாகவும்,

அமைதியே உருவானவனாகவும் ஏழுமலையான்!

இரு நொடிகள் தரிசனத்திலும், மனம் முழுவதும்

ஒரு பரவசம் நிறைந்து, உலகத்தை மறக்கிறோம்!

:hail:

தொடரும்.......................


 
ஒரு சிறப்புப் பயணம்... 8

மனம் முழுதும் நொடிகளில் பரவசம் பெறத்தான்,
தினம் கடல் போல மக்கள் வெள்ளம் வருகின்றது!

இந்த ஆனந்த தரிசனம் வேண்டியே, எல்லோரும்
எந்த ஊராய் இருந்தாலும், ஓடோடி வருகின்றார்!

அத்தனை கஷ்டங்களும், தரிசனம் பார்த்தவுடன்
சித்து வேலை போலவே மாயமாய் மறைந்தது!

வெளிப் பிரகாரத்தில், கூட்டத்துடன் இடிபடாமல்,
வெளியேறினோம், பிறகு பாலாஜியின் அன்னை

சன்னதியை தரிசித்து, கோபுர தரிசனமும் செய்து,
சின்ன தொன்னையிலே பிரசாதம் பெற்று, அதில்

கொஞ்சம் பசியாறி, உண்டியலில் காணிக்கையை
நெஞ்சம் குளிர சமர்ப்பித்து, வெளியே வந்தோம்!

இரண்டு லட்டுக்கள் ஒவ்வொருவருக்கும் தருவார்;
திரண்ட வரிசையில் நின்று, நண்பர் வாங்கி வந்தார்!

சரியான ஏற்பாடுகள் செய்யாது எம்மை வருத்தியது,
சரியாகப் படவில்லை அவருக்கே, என நினைத்தேன்!

விரைவாய் நடந்து, வண்டியைக் கண்டுபிடித்து, எம்
அறைகளுக்கு வந்து, இரண்டு மணிக்கே தரிசனம்

பெற்று, உணவு உண்டு, அறைகளில் ஓய்வெடுக்கும்
பேறு பெற்ற, மற்ற நால்வரையும் எழுப்பி, அறையில்

இறைந்து கிடந்த பொருட்களை அள்ளிப் பெட்டியில்
நிறைத்து, செக் அவுட் செய்ய வந்ததும், அங்குள்ளவர்

திருப்பதி சென்று உணவு உண்ணுமாறு அறிவுறுத்த,
திருப்பதி சென்று, மீண்டும் நிறுத்தம் வேண்டாம் என

அங்கேயே சிற்றுண்டி முடிக்க, அன்று அழகிய நிலவு
பாங்காக முழு வடிவை எட்டியிருப்பதைக் கண்டேன்!

:car: ... தொடரும்..............

 

ஒரு சிறப்புப் பயணம்...
9


சென்னைக்குத் திரும்பும் முன், அலர்மேல்மங்கா
சன்னதி தரிசித்து அருள் பெற வேண்டுமல்லவா?

சில நிமிடங்களில் சிற்றுண்டி சாப்பிட்டு, உடனே
பல வளைவுகள் கொண்ட இறங்கும் பாதையிலே,

படு விரைவாக ஓட்டுனர் திருப்பங்களில் செல்ல,
சடுதியில் வந்தது வயிற்றில் பட்டாம்பூச்சி! ஏன்

திருமலையில் உணவு உண்ண வேண்டாம் என்று
அறிவுறுத்தினர் என்று அப்போதுதான் புரிந்தது!

கொண்டை ஊசி வளைவுகளில் திருப்பும்போது,
தொண்டையில் வர எத்தனித்தது உண்ட உணவு!

ஒன்பது மணிக்குத் திருப்பதி அடைய, 'பங்க்சர்'
உள்ளது வண்டியின் சக்கரத்தில் என்று அறிந்து,

நண்பரின் மருமகன் அதை சரி செய்யச் சொல்லி,
தன் காரில் அழைத்துச் சென்றான் கோவில் காண.

சினிமா உச்ச கட்டக் காட்சிபோல, ஐந்து நிமிடம்
இனி உள்ளது தரிசனம் செய்ய என்ற நேரத்திலே,

ஓட்டமும் நடையுமாக குட்டிக் கண்ணம்மாவுடன்
ஓடிச் சென்று தரிசித்தோம், அலங்கார அன்னையை!

நன்கு தரிசனம் முடித்து, பங்க்சர் சரி செய்யப்பட்டு
நன்கு இருக்கும் சக்கரம் உள்ள வண்டியில் ஏறிச்

சிங்காரச் சென்னை வந்தடைந்தோம் ஒரு மணிக்கு,
எங்கும் புகழ் சிறக்கும் திருமலையானை தரிசித்து!

வேண்டுதல் நிறைவேற்றி, இனிய இல்லம் சேர்ந்து,
வேண்டும் மன நிறைவு பெற்றோம், இறையருளால்!

வாழ்க ஏழுமலையானின் புகழ்! :hail:

 
hi RR,
when i visit chennai/india trip for vaccation....Thirupathi is always in my list.....i book through TTDC for thirupati...for last ten years...
i never had any problem....same day trip ....most convenent.....affordable....with tiffin/lunch and 2 laddus included....i planned
again 2012 trip through TTDC in march this year too....
 
Dear TBS Sir,

We have gone by TTDC tour and also by Balaji tours. Had dharshan in 3 / 4 hours. Once we had a VIP dharshan at night 10.30,

arranged by a friend of my brother in law. It was a memorable one. Wrote about it in this thread also, earlier. This time the friend

we chose was a wrong guide and the day was Saturday! We had to adjust to so many persons and so were forced to choose that

day! I have decided NOT to visit Tirupathi during week ends.

Regards............

 
Last edited:
hi RR,
there is no weekends trip for TTDC....i heard that even some peak week days....they curtailed the trip....its better for planning/time management required for Thirupathi trip...generally my india trip for three weeks only...my vacations for three weeks....still i manage
thirupathi trip last ten years without break...whenever i step into india...i try to visit thirupathi....becos its my kuladeivam...i never
miss to visit.....thanks to balaji.....
 
Thanks for the info. TBS sir! I take this opportunity to invite you to visit us when you come to Chennai.

Your native place is my BIL's place! :)
 

கடற்கரையில் ஒரு மாலை நேரம்!

கடற்காற்று வாங்கி மகிழ, மாலை வேளை
கடற்கரையில் கூடுவர், கோடை நாட்களில்.

திரைப்படம் செல்லச் செலவு ஆகாய அளவு;
விரயம் செய்யாமல் பணம் சேமித்திடவும்,

இது நல்ல உபாயம், சிங்காரச் சென்னையிலே
பொதுமக்களுக்கு! நாங்களும் பொதுமக்களே!

இனிய மாலை வேளை, சென்று அடைந்தோம்,
இதுவரையில் காணாத ஒரு பெரிய கடற்கரை.

பட்டாணி, சுண்டல், முறுக்கு டப்பாக்களுடன்,
சிட்டாகப் பறக்கும் சிறுவர்களும், சோளத்தை

அனலில் இட்டு, சுடச்சுடத் தரவும், மாங்காயை
அழகில் சிறந்த பிறை வடிவங்களாகத் தரவும்,

பெரிய கண்ணாடிக் குடுவையில், மெத்தென்ற
சிறிய குச்சிகள் போன்ற சோன்பப்டி விற்கவும்,

வட்ட இயந்திரத்தில், சிவப்பு நிறச் சர்க்கரையை,
சுற்ற வைத்து, பஞ்சு மிட்டாய்ப் பந்துகள் தரவும்,

காற்றாடி சுற்ற,
பலூன்கள் மிதக்க, குழந்தைகள்
ஏற்றமுடன் விளையாட விற்று வருவதும்தான்

இதுவரை நான் கண்டுள்ளேன்! ஆனால், இங்கு
இதுவரை காணாத புதியவை பற்பல கண்டேன்!

ஜோசியம் பார்க்க, கோலுடன் சுற்றும் பெண்கள்!
ஜோராக அரசியல் தலைவர்களின் பெயர்களில்

பஜ்ஜிக் கடைகள்! 'பலூன் சுட்டால் பரிசு' என்று
பலரைச் சுண்டி இழுத்திடும், பலூன் பலகைகள்!

வித விதமான மீன் வறுவல்கள்; அது பரப்பிடும்
வித விதமான துர்மணங்கள்! வளையல்களை

வரிசைகளில் அடுக்கி, மனம் மயக்கும் கடைகள்.
துரிதமாக உணவு செய்யும், கையேந்தி பவன்கள்!

'சென்னையில் இத்தனை வகைக் கார்களுண்டா?'
என்று அதிசயிக்க வைத்திடும், ஒரு மைல் நீள

'பார்க்கிங்' இடங்களை நிறைத்திடும் வண்டிகள்;
பார்க்கப் பார்க்க இன்னும் பல்வேறு புதுமைகள்!

ஒன்று மட்டும் நன்கு புரிந்தது! இன்னும் ஆண்டு
ஒன்று போனால், கடற்கரையில் நடக்க இயலாது!

:bump2: . . . :lol:
 
hi RR madam,
i just visited chennai/ thirupathi trip...i reached USA yesterday after three weeks vacation....chennai beaches full of cars/ 2 wheelers.i just cant walk in beaches....little ok with thiruvanmiyur beach....just unimaginable in marina/beasant nagar on weekends...
thirupathi trip was ok ....ttdc conducted tour....so fine with me....chennai metro another head ache in anna saalai.....
 
Hi TBS Sir,

Happy to note that you had a comfortable trip to Tirupathi.

Now, you will understand my write-up about the beach, better!!

Regards........ :)
 
கவின் மலையாள தேசத்தில் பயணம் - 1

இறை அருளால் வந்திடும், இரு குடும்பங்கள்

நிறைவான மகிழ்ச்சி பெறும் திருமணங்கள்!

என் சித்தப்பா மகள், அன்பு பொழியும் தங்கை,
தன் மகனின் திருமணத்திற்கு அழைக்க, நான்

சொந்த பந்தங்களைக் கண்டு, கூடி மகிழ்ந்திட
வந்த எண்ணத்தால், சென்றேன் ஒரு பயணம்!

கோடைக் கால ஆரம்பத்தில், சுட்டு எரித்திடச்
சோடை போகாது ஆதவன் முயல்வதால், என்

பயணம் ஏற்பாடானது, குளிர் வசதியுடன் நல்ல
சயனம் செய்ய ஏதுவான ஏ.சி ரயில் பெட்டியில்!

குளிர் வசதிப் பெட்டிகளிலே உலவி வருகின்ற
குளிர் விட்டுப்போன எலிகள் பற்றி, சமீபத்தில்

ஒரு செய்தி படித்ததால் கொஞ்சம் பயந்தேன்!
ஒரு அழுக்குமே இன்றிப் பெட்டி சுத்தமேதான்!

சுத்தம் சுகம் தரும்; இரவில் உறங்கிவிடலாம்
சத்தம் ஏ.சி பெட்டியில் வராது என்பதால்! என்

எண்ணம் தவறாகும் என அப்போது தெரியாது!
எதிரில் அமர்ந்தார் ஒரு நடு வயதுப் பெண்மணி.

தன் அலைபேசியில் பேசி முடித்தபின், அதிலே
தான் விரும்பும் 'கேம்'களை விளையாடினார்!

பிறகு ஏறினர் இளம் தம்பதியர்; இரு மகன்கள்.
பிறகு தெரிந்தது இரு மகன்களும் வால்கள் என!

அம்மா ஒய்யாரமாக அமர்ந்து, வர இதழ் படிக்க,
'அச்சா! அச்சா!' என்று ஓயாமல படுத்திய பின்பு,

எல்லாத் தலையணைகளையும் தாமே எடுத்து,
நல்ல தூக்கம் போட வால் பையன்கள் முயல,

நான் கேட்ட பின், தலையணை ஒன்று கிடைக்க,
நானும் நாடினேன், நித்திரா தேவியின் தயவை!

தொடரும்................
:sleep:

 

கவின் மலையாள தேசத்தில் பயணம் - 2

ரயிலில் குளிர் வசதிப் பெட்டிக்குள் சத்தமே
எளிதில் வராது என்றே எண்ணியிருந்தேன்!

தாண்டிச் செல்லும் ரயில்களின் தட தட ஒலி,
தாண்ட இயலாது கண்ணாடி ஜன்னல் வழியே!

ஆனால் ரயில் ஓட்டுனர் படு கில்லாடி! தானே
போனால் போதுமே என என்ஜினை விட்டார்!

எஞ்சின் தானே தண்டவாளத்தில் ஓட முயல,
எஞ்சின் இழுக்கும் பெட்டிகள் ஆடி, ஒரு மாவு

சல்லடை போலப் பயணிகள் மேலும் கீழுமாக
சலித்து எடுக்க, தடக் - தடக் ஓசை பெருகி வர,

தண்டவாளம் உரைபடும் சப்த ஜாலங்கள் பல,
தாண்டி வந்தன, ரயிலின் அடியிலே இருந்து!

பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தேன் என,
பிள்ளைகளின் அம்மா புலம்பும்போது, அப்பா

சிரித்தபடிச் சொல்லுவார், 'நீயா வளர்த்தாய்?
சின்னதிலிருந்து அவர்களே வளர்ந்தார்' என!

'நீயா ஒட்டினாய்? ரயில் தானே ஓடியது' என்று
நேரே சென்று ரயில் ஓட்டுனரிடம் கூறலாமே!

இந்த எண்ணம் என் மனத்தில் நிழலாட, ஏதோ
வந்த தூக்கம் போதுமே என்று எண்ணியிருக்க,

நடு இரவில், ஏசி யை மீறி வியர்வை பெருகிட,
அது ஏனோ என்று நான் சுற்றிலும் நோட்டமிட,

புண்ணியவாளன் எவனோ, மின் விசிறி ஓடாது
நின்று போக, சுவிட்ச்சை அணைத்திருந்தான்!

எழுந்து அதைப் போட்டதும், கொஞ்சம் காற்று
எழுந்து வர, மீண்டும் உறங்கிட முயன்றேன்!

தொடரும்...............
:wave:

 
கவின் மலையாள தேசத்தில் பயணம் - 3

விடியலில் அழகிய கேரள தேசத்திலே ரயில்!

விழிகளில் பட்டன பசுமையும், தென்னையும்!

சின்னக் குளங்களும், பெரிய ஏரிகளும் இங்கே
சின்ன நீர்த் தட்டுப்பாடும் இல்லாது செய்திடும்.

சரியான நேரத்தில் திருச்சூரை அடைந்த பின்,
எளிதான வேலைதான் தங்கை வீடு செல்வது!

அழைத்துச் செல்ல யாராவது வந்துவிட்டால்,
அவர்களைக் காண்பதே பேரின்பம் அல்லவா?

சென்ற பயணக் கவிதைகளில் கூறியுள்ளேன்
சென்ற சில ஆலயங்களைப் பற்றி! அதனால்

இந்த முறை சென்ற புதிய ஆலயங்கள் பற்றி
இந்தப் பக்கங்களில் எழுதிட விழைகின்றேன்!

பரிகாரங்கள் செய்வதில் முன்னோடிகள்தான்,
அரிதான வழிகள் கூறிடும் கேரளாக்காரர்கள்!

பல குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர், இங்கு
பல விஷ்ணு மாயா கோவில்களை! ஒவ்வொரு

குடும்பமும், தம் கோவிலைப் பராமரித்து, தம்
குடும்பத்தைச் செய்வினையிலிருந்து காக்கும்!

பெரிய இடங்களை வளைத்துப் போட்டு, மிகப்
பெரிய கோவில்களைக் கட்டி இருக்கிறார்கள்!

எருமை வாஹனம் கோவில் முகப்பில் இருக்க,
வளமை தெரிகிறது கோவில்களின் அமைப்பில்!

லட்சங்களில் செலவு செய்து கட்டிய இவற்றின்
லட்சியம், தொல்லைகளே வந்திடாது காப்பதே!

செய்வினை வைத்துக் குடும்பங்களை அழிப்பது,
சர்வ சகஜமாக நடப்பது, மிரளவே வைக்கிறது!

இனி விஷ்ணு மாயாவின் கதையைச் சொல்லி,
இந்தப் பக்கங்களைத் தொடர விழைகின்றேன்!

தொடரும் ................... :blah:

 

கவின் மலையாள தேசத்தில் பயணம் - 4


கிருஷ்ணனின் அவதாரக் கதையில் வரும்

விஷ்ணு மாயா என்ற ஏழாவது மகள் பற்றி

அறிவேன்; இந்த விஷ்ணு மாயாவின் கதை
அறியேன்! இவர் பெயர் 'சாத்தான்' என்றனர்!

சிவ பெருமான் மோகினியிடம் மயங்கியது,
அவனியோர் அறிவார்! இக் கதையில், சிவன்

காட்டில் வேட்டைக்குச் சென்றபோது, அந்தக்
காட்டில் வசிக்கும் ஒரு பழங்குடிப் பெண்ணின்

இனிய கானத்தில் மயங்கி, அவளது அழகிலும்
மனதைப் பறிகொடுத்தார்! ஆனால் அவளோ

சக்தியிடம் மாறாத அன்பு கொண்டு, உயர்ந்த
பக்தியுடன் விளங்கினாள். தன் நிலைமையை

இறைவியிடம் சொல்லி வேதனைப்பட்டதும்,
இறைவி அவள் வடிவிலே சிவனைச் சேர்ந்திட,

அவதரித்த மகன்தான் இந்தச் சாத்தான்! அவன்
அந்தப் பழங்குடிப் பெண்ணைத் தாயாக எண்ணி,

எருமை வாகனத்தில் உலா வந்தானாம். பின்பு,
அருமைப் பெற்றோர் பற்றி அறிந்து, கயிலாயம்

செல்ல, நந்தி தேவன் தடுக்க, தன் மாயையால்
நல்ல அழகனாக விஷ்ணு வடிவம் எடுத்ததும்,

நந்தி தேவன் வழி விட, சிவனும் அகம் மகிழ்ந்து
அந்த நேரம் 'விஷ்ணு மாயா' எனப் பெயரிட்டார்!

விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரமும் கட்டுப்படும்,
விஷ்ணு மாயாவின் கட்டளைக்கு! இதனாலே

அரக்கர்களை அவர் வதம் செய்தார். துஷ்டரை
அழிக்கும் சக்தி கொண்டதால், கேரள பக்தர்கள்,

தமக்குச் செய்வினை செய்வோரை எதிர்த்திட,
தமக்கு உருவாக்குகின்றார், குடும்பக் கோவில்!

அவர்கள் குடும்பம் வழிபடுவது மட்டுமல்லாது,

அவர்களின் நண்பர்களும் அங்கே வழிபடுவார்!

:hail: தொடரும் .............


 

Latest posts

Latest ads

Back
Top