• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


சிம்லா மக்களுக்கு 'தில்' அதிகம்! மலை ஓரமாகவே

ஜம் என்று நிற்கின்றன, சிறிய பெரிய சீருந்துகள் பல!

IMG_4841.JPG
 

இந்திராகாந்தி மருத்துவமனை மிகப் பெரியது.

IGMC_SHIMLA.jpg


Photo courtesy: Google images
 
hi RR madam,
shimla was summer capital of viceroys.....british rulers well developed this city....nice boarding schools are famous....nice

education centre too.....if u visit kullu/manali ....very nice scenic places...but the problem single roads....very dangerous

roads....many hair pin bends...i visited shimla many times.....i was staying near kalka...main road between chandigarh

and shimla....i used to visiit every weekends.....now its same situation like uttarakand situation.....a lot of buildings

and deforestation......many hotels cater for tourists.....even himachal state also in the himalayan range......toy train

journey is very nice from kalka to shimla...i travelled many times like our ooty train....
 

Dear TBS Sir,

H P has banned the plastic trash but I found quite a lot of dirty places filled with plastic trash. The place where our bus was parked

had hundreds of empty plastic water bottles and bags! We had to walk very carefully not to step on them and slide down hill! :fear:

The beauty of the mountain is lost by the cropping up of several buildings in different colours! Trees are destroyed. It is very sad! :sad:
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 10


பேருந்து சிம்லாவை எட்டிட, அழகிய பல விடுதிகள்
சிறந்து விளங்கிட, நரிக் கதைபோல மலை மேலே

வளைந்து வளைந்து சென்றிட, சோர்ந்து போனோம்!
களைத்துப் போன எங்களை விடுதி அருகில் இறக்கி,

இன்னொரு சின்னச் சீருந்திலே ஏற்றினார் வழிகாட்டி!
இன்னும் சில நிமிடப் பயணத்தில் வந்தது எம் விடுதி!

நிம்மதிப் பெருமூச்சுடன் எமது அறைகளில் செக்-இன்;
நித்திரா தேவியை ஆவலுடன் நாடினோம் கணத்தில்!

குளிர் சாதனம் தேவை இல்லாத சிம்லா; இரவு மழை!
குளிர் இதமாகத்தான் இருந்தது கோடைக் காலத்தால்.

குரங்குகளின் சேட்டைகள் அதிகம் என உஷார் செய்து,
திறக்க வேண்டாம் ஜன்னல்களை என்றார் வழிகாட்டி!

தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளதால், துவைக்கக் கூடாது!
வென்னீர் வரவு எப்போதும் உள்ளதால் மிக வசதிதான்!

காலைச் சிற்றுண்டி இரு வகைகள்; சுவையான தேனீர்!
வேளைக்குக் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ந்தோம்!

குதிரை சவாரி செய்து மலையுச்சியை எட்டிட, நாங்கள்
Kufri என்ற இடத்தை அரை மணியிலே அடைந்தோம்!

மலை மீது கட்டிடங்கள் எம் கண்களில் பட்டன; அவை
பசை போட்டு ஒட்டியது போலத் தோற்றம் அளித்தன!

பாதைகள் அனைத்துமே குறுகலாக இருப்பதால், அப்
பாதைகளின் ஓரத்திலிருந்து வீடுகள் இறங்குகின்றன!

மொட்டை மாடியில் காரை வைத்துவிட்டு, படியிறங்கி
எட்டுகின்றார் இல்லத்தின் மற்ற அறைகளையெல்லாம்!

தொடரும் .......................
 

மலை மீது கட்டிடங்கள் எம் கண்களில் பட்டன; அவை
பசை போட்டு ஒட்டியது போலத் தோற்றம் அளித்தன!

IMG_4846.JPG
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 11


குதிரைகள் பல பாதையிலே சென்றன; அவைதான்
Kufri யின் உச்சிக்கு மனிதரை ஏற்றிச் செல்லுமாம்!

மணிவிழா ஆகும் வரை குதிரையேற்றம் அறியாது,
துணிவோடு அன்று ஏற விழைய, பயமும் நிறைய,

என்னவருக்கும் எனக்கும் இரு அழகிய குதிரைகளை,
சின்னவன் ஒருவன் கொண்டு வந்தான், ஏறிக்கொள்ள!

முன்னூற்று எண்பது ரூபாய் ஒருவரின் சவாரிக்கு! நாம்
முன்னூற்று அறுபத்தைந்து நாளுமா செல்ல முடியும்!

இதயம் தடக் தடக் என்று துடிப்பது காதில் கேட்க, ஒரு
இதமான புன்னகையை மிக சிரமத்துடன் வரவழைத்து,

இடது காலைக் வளைந்த கம்பியில் விட்டுத் தாவிட,
வலது கால் மேலெழும்பிட, குதிரை மீது நானும் அமர,

என்னவர் மிக எளிதாக ஏறிவிட்டார்; உயரம் மிக வசதி!
சின்னவன் 'ஹை! ஹை!' எனக் கத்தி, இரு கயிறுகளை

அம்போ என்று விட்டுவிட்டுப் பின்னாலே சென்றான்!
'அய்யோ' என்ற எனது அலறல் அங்கு எதிரொலித்திட,

எதிரே வந்த ஒரு குதிரை, என்னைத் தாண்டும் போது,
எதிர்பாராத் தருணத்தில் என் இடது முட்டிலே உரசிட,

மிரண்ட நான் மீண்டும் அலறினேன்; என்னவரோ cool!
மிரண்டு என் குதிரை ஓடிவிடுமோ என்றும் பயந்தேன்!

ஒல்லிக் குதிரை ஓடுமா என்ன? மெதுவாகவே நடந்தது!
தள்ளிச் செல்லாது என்னவருடைய ஷூவை முகர்ந்தது!

தன் முகத்தை ஷூவில் தேய்த்தபடி நின்றுவிட்டது! அட!
தன் வேலையை இந்தக் குதிரை முடிக்குமா இல்லையா?

தொடரும் ....................... :hug:

 
குதிரைகள் பல பாதையிலே சென்றன; அவைதான்
Kufri யின் உச்சிக்கு மனிதரை ஏற்றிச் செல்லுமாம்!

IMG_4853.JPG

 

Dear TBS Sir,

H P has banned the plastic trash but I found quite a lot of dirty places filled with plastic trash. The place where our bus was parked

had hundreds of empty plastic water bottles and bags! We had to walk very carefully not to step on them and slide down hill! :fear:

The beauty of the mountain is lost by the cropping up of several buildings in different colours! Trees are destroyed. It is very sad! :sad:


Raji Madam

our Grand Children are now in Chennai due to Summer Holidays here in US; whenever they visit beaches, they see lot of plastic and other types trash thrown every where in the sand;
They asked me" thatha, why people throw all these every where?" for which i do not have any answer.

our youngest Grandson, has even written a poem on these and after he return to US, i will post his poem here !!
 

Dear P J Sir,

Long back my chithappa was scolding 'the Indians' for making a mess where ever they go, for a long time.

His little daughter who was listening with rapt attention finally asked him, 'appA! nAma ellAm yAruppA?' :dizzy:

P.S: Awaiting your grandson's poem! :D
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 12


'செல்லக் குதிரையே! கொஞ்சம் நடை பயில்வாயா?
செல்லம் கொஞ்சிக்கொண்டு இங்கேயே நிற்பாயா?'

எங்கள் குதிரைகளின் எஜமானச் சிறுவன், மெதுவாக
எங்கள் பின்னிருந்து அவற்றிடம் ஏதோ சொன்னதும்,

'களக்'- 'களக்' என்று தம் குளம்புகள் ஒலியை எழுப்ப,
களமிறங்கின கனைத்தபடி, மலை ஏறும் பணிக்காக!

முந்தைய இரவு முழுதும் மழை பொழிந்து கொட்டிட,
விந்தையாக வளைந்த பாதையில் கற்களிடையிலே

சேறு நிரம்பிக் குழம்பிக் கிடக்க, பயணமும் கடினமே
வேறு வழியில்லாத குதிரைகளுக்கு! மனம் கனத்தது!

நான் கனத்து இருப்பேனோ குதிரைக்கு? நானறியேன்!
என்னை விடக் கனமானவர்களும் ஏறிச் சென்றனரே!

முதல் குதிரை மீது என்னவர்; அதனைத் தொடர்ந்தது
முன் ஜென்ம நண்பனைப்போல் நான் அமர்ந்த குதிரை!

என்னவர் ஏறிய குதிரை என்னதான் தின்றதோ அன்று!
அதன் பின்புறமிருந்து ஓயாது வெளியேறியது காற்று!

அத்துடனே நில்லாது நம்பர் இரண்டையும் செய்தது!
அது உடையிலே படாதிருக்கப் படாத பாடுபட்டேன்!

சமமாகச் சென்ற பாதை, குறுகலான ஏற்றமாக மாற,
இதமான குதிரையின் நடை நொண்டுவது போல ஆக,

பயமும் அதிகரித்தது; அட்ரினலின் அதிகம் பாய்ந்தது!
பயத்தில் இரு கைகளும் சிறு கைப்பிடியைப் பற்றின!

காமராவில் படம் எடுக்கலாமென எண்ணமே இல்லை!
காமராவை எடுக்க இன்னும் இரு கைகள் வேண்டுமே!

:fear:

தொடரும் ......................


 

I did not have the courage to open my handbag to take out my camera! Both my hands were holding tightly

to the small iron ring fixed to the saddle of the horse, so that I won't slip down and have a great fall!! Hence

a picture of the route uphill from Google images! The roads are not muddy as it was on the day we went uphill. :cool:

4499729382_146b5a62e6.jpg


Source: Daytrip to Fagu and Kufri
 
Raji Madam

As our Grand children never saw any thrash on the roads or in public places here in US , they were really wondering why people are not using dust bin to throw the waste; your grand daughter when she grows up will ask you the same question when she visits Chennai.
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 13


பையில் காமரா; குடி நீர்; குளிருக்கு ஒரு ஸ்வெட்டர்;

கையில் இரும்புப் பிடிப்பு; மலை ஏற்றமும் ஆரம்பம்!

சேறு வாரித் தெளித்திட, கால் சட்டையெல்லாம் பாழ்!
வேறு வழியில்லை; மேலே ஏறித்தான் தீரவேண்டும்!

அப்போது, 'இன்னும் எத்தனை தூரம் உள்ளது? என்று
தப்பில்லாத ஹிந்தியில் நான் வினவ, அச் சிறுவன்,

'இப்போதுதானே ஆரம்பித்துள்ளது!' என்று உரைத்திட,
தப்பாது வேண்டினேன் சக்தி வினாயகனை, எங்களைக்

கீழே தள்ளாது உச்சி வரை குதிரைகள் கொண்டு விட!
மேலே செல்லும் போது, திடீரென நான் ஏறிய குதிரை

தன் பின் பகுதியைக் கீழே வளைத்து நிற்க, பயத்திலே
நான் சறுக்குவேனோ என்று இன்னும் அலறியவுடன்,

'madam! gOdA go toilet!' என, தானறிந்த ஆங்கிலத்தில்
உடன் என்னிடம் சொன்னான், விஷமக்காரச் சிறுவன்!

உச்சியை அடைந்ததும் அவன் பெயர், செல் நம்பர்களை
நிச்சயம் தருமாறு வழிகாட்டி அச் சிறுவனிடம் கூறியும்,

அவன் பெயரையும், செல் போன் நம்பரையும் தராமலே
தன் இரு குதிரைகளுடன் உடனே சென்றுவிட்டான் கீழே!

பாறைகள் நிறைந்து கிடந்த அவ்விடத்தில், மழையால்
சேறும் படர்ந்து இருக்க, காலணிகளெல்லாம் வழுக்கின!

மலை ஏறுபவர்கள் கையில் குச்சி ஒன்று ஊன்றுவாரே?
மலைப் பாறை வழுக்கும்போதுதான் ஏனெனப் புரிந்தது!

ஊன்று கோல் இல்லாததால், எங்கள் யாருக்குமே அன்று
மூன்று கால் கிடையாது! பயந்தபடி நடை பயின்றோம்!

தொடரும் .....................................

 

பாறைகள் நிறைந்து கிடந்த அவ்விடத்தில், மழையால்

சேறும் படர்ந்து இருக்க, காலணிகளெல்லாம் வழுக்கின!

IMG_4874.JPG
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 14


மக்கள் இறங்கியதும், குதிரைகளைச் சில நொடிகளில்
அக்கறையுடன் கீழே கொண்டு சென்றனர் காப்பாளர்கள்!

அடுத்த குழு மக்களை இங்கே கொண்டுவர வேண்டுமே!
கொடுத்த சில நொடிகள் மட்டும் குதிரைகளுக்கு ஓய்வு!

ஒரு குதிரை திடீரென்று சறுக்கி விழுந்தது; ஆனாலும்,
மறு கணம் எழுந்து நடக்கத் துவங்கியது, கடமைக்காக.

சரியான உணவு கிடைக்காதோ குதிரைகளுக்கு? அவை
சரியான போனிகள் போல் இல்லை! சரியான சோனிகள்!

தன் காப்பாளனின் கட்டளை இல்லாது நடப்பது இல்லை!
தன் கடமையை மட்டும் செய்யும் கர்ம யோகிகள் அவை!

நெஞ்சில் தைரிய லக்ஷ்மியை நிலை நிறுத்தி, இருவரும்
அஞ்சாது நடக்க
த் துவங்கினோம். அங்கே பார்க்கிறோம்

அழகாகச் சிங்காரிக்கப்பட்டு நிற்கும் Yak கள் சில. அவை
பழகாத மனிதர்கள் உலவியும், சந்தோஷமே இல்லாது

சோகமாக நிற்பது போல எனக்குத் தோன்றியது ஏனோ?
வேகமான வியாபாரம் புகைப்படக் கலைஞர் சகிதமாக!

யாக் மீது அமர்ந்து நாமே புகைப்படம் எடுக்க 30 ரூபாய்.
யாக் மீது அமர, அவர்கள் புகைப்படம் எடுக்க அதிகம்!

குட்டிச் சிறுவன் ஒருவன் துப்பாக்கியைப் பற்றியவாறு,
சுட்டிப் பயலாகப் போஸ் கொடுக்க, நானும் படமெடுக்க,

புதிய என் ஈடுபாட்டுக்கு zoom வசதியுடன், எளிமையான
புதிய காமராவை எனக்களித்த மகனை வாழ்த்தினேன்!

வீர விளையாட்டு
இரண்டு உள்ளன என்று கூறக் கேட்டு,

ஏற ஆரம்பித்தோம் கற்கள் நிரம்பிக் கிடந்த பாதையிலே!

:D

தொடரும் .......................


 

Latest posts

Latest ads

Back
Top