Raji Ram
Active member
சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 2
சிற்றுண்டி வண்டியைத் தள்ளி இருவர் வந்திட,
உற்ற நேரத்தில் பசியாற்றுகிறாரே என எண்ணி
ஆசையுடன் மூடியைத் திறந்து பார்த்திட, அதில்
ஆறிப்போன இட்லியும், கொஞ்சம் உப்புமாவும்!
அந்த இட்லியை நாய் கூடத் தின்னாது! சிவப்பாக
அதன் மீது இருந்தது ருசியிலா மிளகாய்ப்பொடி!
வெண்ணெயும் ஒரு சிறு BUN - ம் கூட இருந்ததே
என்னைப் பசியிலிருந்து அன்று காப்பாற்றியது!
'க்ரீம்' பொடி கலந்த டீயும் ருசியில்லை! ஆனால்
கொஞ்சம் பழத் துண்டுகள் நாவிற்கு ருசித்தன!
தலை நகர் மீது வட்டமடித்துப் பறந்த விமானம்;
தரை தட்டி இறங்கியது; மனமும் நிம்மதியானது!
'பணிக்கர் டிராவல்ஸ்' அலுவலகம் செல்ல, அங்கு
பணிவுடன் வரவேற்றனர்; பின்னர் அருகிலிருந்த
விடுதிக்குச் சென்று, அறையில் செக் - இன் செய்து,
சடுதியில் புறப்பட்டோம் அக்ஷர்தாம் பார்த்து வர!
அருகில் இருந்தது மெட்ரோ ரயில்; அதில் பயணம்;
விரைவில் சேர்ந்தோம் அக்ஷர்தாம் நிலையத்தை!
சூரிய பகவான் கரிசனையின்றி தகித்திட, அருகில்
சீரிய ஓட்டத்துடன் இருந்தன சைக்கிள் ரிக்ஷாக்கள்!
இருபது ரூபாய் செலவு; அக்ஷர்தாம் நுழைவாயில்;
இரு நிமிடங்களில் உள்ளே செல்ல, போர்டுகளில்
எழுதியுள்ளது, 'காமரா, செல்போன், குடை, கைப்பை
எதுவுமே எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு', என்று!
:nono:
தொடரும் ......................