• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

IMG_4772.JPG
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 7


சுயமாகவே பல ஏரிகள் தோன்றி இருக்க, இங்குள்ள
ஸுக்னா ஏரி செயற்கையாக உருவக்கப்பட்டதாகும்!

ஷிவாலிக் மலையிலிருந்து வரும் மழை நீர் வடிந்து
ஸுக்னா ஏரியை நிரப்புகிறது. மிக அழகிய நீர்ப்பரப்பு!

இதன் தூய்மையைக் காக்க, மோட்டர் படகுகள் ஏதும்
இந்த ஏரியிலே செல்லுவது இல்லை! வித விதமான

பெடல் படகுகள் உள்ளன; இருவர், நால்வர், அறுவர்
பெடல் செய்து செல்ல வடிவமைத்து இருக்கின்றார்.

பறவைகள் பல இங்கே உலவிடும் எனினும், அன்று
சிறகுகள் விரித்து மகிழ்ந்தன சைபீரிய வாத்துக்கள்!

கூட்டமாகக் கூடுவதில் ஆனந்தித்தன; மழை காண
ஏக்கமாக இருந்தது போல, குரலெழுப்பிக் களித்தன!

இந்த ஏரியில் சூரிய அஸ்தமனம் மிக விசேஷமாம்!
இந்த அழகை நாங்கள் பார்க்க இயலாதது வருத்தமே!

நீல வண்ண நீர், ஆதவன் மறையும் பொழுதில், அடர்
நீல வண்ணமாக மாறி, முடிவில் வயலெட் ஆகுமாம்!

சூரிய ஒளியின் சித்து விளையாட்டை, Grand Canyon
சூரிய அஸ்தமனத்தில் பார்த்தது நினைவில் வந்தது!

இயற்கை அன்னையின் வடிவங்கள் பிரமிப்புத் தரும்;
இயன்ற அளவு நாம் ரசிப்பது நமக்கு மன நலம் தரும்!

ஷிம்லா நோக்கிப் பயணம் தொடர்ந்தோம்; வழியில்
சிலிர்க்க வைக்கும் பள்ளத்தாக்குகளைக் கண்டோம்!

ஏழு மலைகளைத் தாண்டுவதாக வழிகாட்டி சொல்ல,
ஏழுமலை வாசனும் அக்கணமே நினைவில் வந்தான்!

தொடரும் ................................ :car:

 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 8

இயற்கை அன்னையின் பிரமிக்க வைத்திடும் அழகு,

இயற்கையாகக் கொட்டிக் கிடக்கிறது இமயத்திலே!

அடர் சிவப்பு, ஆரஞ்சு நிறங்களில் மரத்தின் இலைகள்
படர்ந்திடக் கண்டோம் குருக்ஷேத்திரத்தில்! இங்கோ,

நீண்ட நெடிய மரங்கள் சாய்வான மலைப் பகுதியில்,
நீண்டு உயர்ந்து செங்குத்தாகச் செல்ல, பலவிதமான

பச்சை நிறங்கள் எங்கு நோக்கினும் விரிந்து பரவிட,
இச்சை மேலிடும் இங்கேயே இருக்க வேண்டுமென!

பூக்கள் அதிகம் காணவில்லை. சில இடங்களில் சில
பூக்கள் தென்பட, இருந்தன குட்டைக் கள்ளிகள் சில!

உயர்ந்தவை தேவதரு மரங்கள்என்றார் வழிகாட்டி.
உயர் தேவலோகம்போல அங்கு மேகங்கள் சூழ்ந்தன!

கருமேகக் கூட்டம் சூழ்ந்து வர, கொஞ்சம் பயந்தோம்
பெரு மழை பரவி வந்து வழியில் கொட்டுமோ என்று!

என்னதான் புது உபகரணங்கள் உலகில் இருந்தாலும்,
என்ன எண்ணுவாள் இயற்கையன்னை என்றறியோம்!

நினைத்த மாத்திரத்தில் மழை வந்து கொட்டுவதால்,
நனைந்து போகும் நாம் போகும் பாதைகள் எல்லாம்!

ஆதவன் மலைகளைத் தொடும் முன்பே இதமாகிட,
ஆவலுடன் அந்தக் காட்சியைச் சிறைப் பிடித்தேன்!

மாலை ஏழு மணிக்குப் பின் இருள் பரவ, ஓட்டுனர்
சாலைகளில் அனாயாசமாக ஓட்டினார் பேருந்தை!

பல இடங்களில் வேலிகளே கிடையாது! கொஞ்சம்
நிலை தடுமாறினாலும் அதல பாதாளமே நம் கதி!

:fear:

தொடரும் ........................

 

அடர் சிவப்பு, ஆரஞ்சு நிறங்களில் மரத்தின் இலைகள்

படர்ந்திடக் கண்டோம் குருக்ஷேத்திரத்தில்! ...........

IMG_4730.JPG
 

ஆதவன் மலைகளைத் தொடும் முன்பே இதமாகிட,

ஆவலுடன் அந்தக் காட்சியைச் சிறைப் பிடித்தேன்!

IMG_4839.JPG
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 9


மலைக் காற்று மேலே வீசாவிடினும், பேருந்தினுள்
அலையாக வந்து மோதிய ஏ சி காற்றும், வயிற்றில்

நிறைந்த உணவும், உண்ட மயக்கத்தை ஏற்படுத்த,
அரைகுறைத் தூக்கத்தில் அனைவரும் இருந்தோம்!

இரவு பத்து மணி; கார் ஒன்று பாதை ஓரத்தில்; அதை
இலகுவாகத் தாண்ட முயன்ற சமயம், எம் பேருந்தின்

முன் சக்கரம் பாதாளத்தின் மிக அருகில் சென்றுவிட,
உடன் sudden brake
ட, நாங்கள் அனைவரும் துள்ள,

வழிகாட்டி மிகத் தைரியமாக கீழே இறங்கி, ஓட்டுனர்
வழி மாறிக் கீழே பேருந்தை உருட்டாமல் காப்பாற்றி,

மெதுவாகப் பின்னே செல்ல வைத்து, இதயத் துடிப்பை
மெதுவாக இறக்கிவிட, வந்த உறக்கம் ஓடிப் போனது!

இவ்வளவு ஓரத்தில் கார்களையெல்லாம் நிறுத்திவிட
எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? ஏதேனும் ஒரு

வண்டி மிக லேசாகத் தட்டினாலும், பாதாளத்தில்தான்
உருண்டு செல்லும், வேலிகள் இல்லாத காரணத்தால்!

சிம்லா மக்களுக்கு 'தில்' அதிகம்! மலை ஓரமாகவே
ஜம் என்று நிற்கின்றன, சிறிய பெரிய சீருந்துகள் பல!

இந்த மலையில் ஜனங்கள் மிகவும் குறைவாகத்தான்
வந்து வாழ்வார்கள் என்று எண்ணியிருந்தது தவறே!

இந்திராகாந்தி மருத்துவமனை மிகப் பெரியது. நமது
இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்களும் உண்டு!

சுற்றுலா வரும் பயணிகளுக்கென பற்பல விடுதிகள்
சுற்றிலும் இருப்பதும் ஒரு பெரும் வியாபாரமாகும்!

தொடரும் ......................

 

Latest posts

Latest ads

Back
Top