• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

நல்ல அம்மா?

சமீபத்தில் ஒரு NRI அம்மாவைச் சந்தித்தேன். ஒரு சின்ன மகன் உண்டு அவளுக்கு. இங்கு உள்ள தம்பதியர், சரி

சமமாகப் பிள்ளை வளர்ப்பில் பங்கு எடுத்துத்தான் பார்த்துள்ளேன். இவள் ஒரு புது வகை. ஒரு நொடி கூட மகனை

விட்டுப் பிரிய மாட்டாள். குழந்தை, தன் தந்தையிடமே இருக்க மாட்டான்! அவளோ, தான்தான் அவனைப் பார்த்துக்

கொள்ளுவது போலவும், மற்றவர்களுக்கு (தன் கணவன் உட்பட) ஒன்றுமே தெரியாது என்கிற பந்தாவில் நடப்பாள்!

பெறும் குரலில் பேசிக்கொண்டும், சொல்லும் எல்லாவற்றையும் பலமுறை திருப்பித் திருப்பிச் சொல்லியும், வீட்டில்

உள்ள மற்றவர்களை வெறுப்பேற்றுவாள். அவளின் வாதம் என்னவென்றால், பலமுறை சொன்னால்தான்

குழந்தைக்குப் புரியுமாம். யாரேனும் குழந்தையிடம் கொஞ்ச வந்தால், உடனே அவன் சிணுங்குவான். உடனே இவள்

ஆஜர்! 'என்னடா செல்லமே' என்று ஆரம்பித்துச் சுய புராணம் பாடுவாள். தன்னை விட்டு ஒரு நொடிக்கூட, மகன்

போகமாட்டானாம். யாரிடமும் பேச மாட்டானாம்..... இன்ன பிற!

கணினியில் எதையேனும் போட்டுவிட்டால், அதையே அவன் பார்ப்பான். சாப்பிடக் கணினி; விளையாடக் கணினி

என்று அந்த சின்னத் திரையையே பார்க்கிறானே, தவிர யாரிடமும் பழகுவதே இல்லை!

எல்லோரிடமும் பழக விடும் தாய் சிறந்தவளா? இல்லை இவளா?

:decision:

raji,

this ends up with what we call 'oedipus complex' - oedipus was a greek mythology character,who ended up falling in love with his mother.

i shudder when i see this type of mother son relationship. in such cases, the father is a mild mannered man, who is probably cowed down by the woman.

these sons turnout to be ammaiyotti guys, and are a disaster to marry. many relations of mine, would not marry their daughters to a family with only one child son, for fear of this oedipus type of relationship, for in our arranged marriages, we do not know of such, till after the fact.

so, the girls' parents say, they are just 'protecting' their daughters.

i really dont know what to make of such moms!! there are a few in toronto too!!
 
இப்படியும் ஒரு நட்பா?

வலை நட்பைப் பற்றிச் சில முறை எழுதினாலும், மீண்டும் ஒரு எண்ண அலை வருகிறது! சமீபத்தில் இந்த Forum

இல் திடீரென, ஒரு புது ரசிகர்; உங்கள் கவிதைகள் எங்கிருந்து கிடைத்தன என்று கேள்வி! 'என்னடா இது? நாம்

எழுதியதைத்தானே இலக்கியப் பகுதியில் போட வேண்டும்? ஏன் இப்படி ஒரு சந்தேகம்' என்று தோன்றியும்,

என்னுடைய படைப்புக்களே என்று பதில் அளித்தேன். மீண்டும், ஒரு கவிதையில் வந்த எழுத்துப் பிழையைச் சுட்டிக்

காட்டி, ஒரு வரிப் பின்னூட்டம். அதற்கும் பதிலளித்தேன். அதற்குள் தெரிந்தது, அந்த நண்பர் நாற்பது வயதை

நெருங்கும் மணமாகாத வாலிபர் என்று! பின் வந்தது என் வயது பற்றிய கேள்வி! ஓஹோ... நமக்கு 'செட்' ஆகுமோ

என்று தேடுவது புரிந்தது. வயதைப் பெண்மணிகளிடமும், சம்பளத்தை ஆண்களிடமும் கேட்கவே கூடாது என்று

குறிப்பிட்டு, 'உங்கள் வயதில் எனக்கு அக்கா மகன் இருக்கிறான்' என்று பதில் அளித்தேன்.. அத்துடன் ஆள் அம்பேல்!

நிஜமான ஆர்வத்துடன் படித்துப் பாராட்டுபவரே, நல்ல நண்பர். மேற்கண்டதுபோல உள்ள 'தேடல்' அரசர்களை எந்த
வகையில் சேர்த்தலாம்? :fish2:

குறிப்பு:

Forum என்று தமிழாக்கம் செய்யத் தட்டெழுதினால், கிடைப்பது 'போரும்'!
அதுதான் பலமுறை இந்த இணையதளத்தில் சொற்போர் வருகிறதோ? :fencing:

raji,

i dont know wheter age difference between the sexes matter any more, even when the woman is older.

i know a tambram woman who married someone 17 years younger to her.

also i know quite a few, who are a year or two older than their hubbies, in my age group - these must have been the sirens of the yester years, netting younger tambram boys.

whatever it takes. stopped noticing such things long ago.

in your case, mr raji might have a chuckle or two, at the thought of an ardent admirer with ulterior motives chasing his wife :)
 
raji,

this ends up with what we call 'oedipus complex' - ........................

many relations of mine, would not marry their daughters to a family with only one child son, for fear of this oedipus type of relationship, for in our arranged marriages, we do not know of such, till after the fact.

Dear Sir,

No generalization please..... My son is a single child and he is one of the best husbands in the world!! :thumb:

Regards.........
 
தனக்கு ஒரு நியாயம்...

எங்கள் நெருங்கிய உறவில் ஒரு பெண்மணி. தன் வேலைகளைச் சாதிப்பதில் கெட்டிக்காரி. மற்றவர்கள் பற்றின

கவலையே கிடையாது. தான், தன் கணவன், தன் மகன், மகள் ஆகியோர் மட்டும் நலமாக இருக்க விழைபவள்!

யானையை வாரா வாரம் கூப்பிட்டு, தன் வீட்டில் எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கச் செய்வாள். அவளுக்கென்று

ஒரு யானைப் பாகனும் சிங்காரச் சென்னையில் உண்டு!

திருமண வயதை மகன் அடைந்தும், பெண் பார்க்காமலே காலம் தாட்டினாள். காரணம், மகள் மனம் உடையுமாம்,

அண்ணன் அண்ணியின் சந்தோஷம் கண்டு! ஒரு வழியாக மகளுக்கு மணம் முடித்தாள். அண்ணனுக்கு வழி

பிறக்கும் என்று நாங்கள் நினைத்தபோது, மகளின் வாழ்வு 'செட்டில்' ஆன பின்னர், மகனின் கல்யாணம் என்றாள்!

அதுதான் கல்யாணம் முடிந்ததே என்று நாங்கள் வியந்தபோது, அதிரடியாகச் சொன்னாள் ஒரு விஷயம்! மருமகன்,

தன் தந்தை தாயைப் பிரிந்தால்தான் 'செட்டில்' என்று அர்த்தம் என்றாள்! அதேபோலச் செய்யவும் முனைந்து,

வென்றாள்.

மருமகன் தன் பெற்றோரை ஒதுக்கியபின், மகனுக்கும் மணம் முடித்தாள். இப்போது நியாயம் மாறிவிட்டது! ஆம்...

மருமகள் தன் வீட்டிற்குச் செல்லக் கூடாது. தன் மகனும் அவளின் பெற்றோருடன் தொடர்பு கொள்ளக் கூடாது...

இன்ன பிற! ஒரு முறை, அவள் பெற்றோரைக் காணச் சென்றாள். அதன்பின் கதை மாறிவிட்டது. மருமகள் மீது

அபாண்டமாகப் பழி சுமத்த ஆரம்பித்தாள். மகன் தன் அலுவலக வேலையாக, சில மாதங்கள் வெளிநாடு சென்றது,

மிக வசதியாகிவிட்டது. தினமும் தொலைபேசி மூலம் மருமகளைப் பற்றிக் குற்றப் பத்திரிக்கை படித்தாள். சொந்த

புத்தி இல்லாத மகன்! அதை எல்லாம் நம்பி, இந்தியா வந்தவுடன், மனைவியைப் பிரிந்து போகச் சொன்னான். வெளி

நாட்டில் இருந்த காரணத்தால், தானே மருமகளை அவள் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியதை, தனக்கு உதவாமல்

போனதாகச் சொல்லி, மகன் மனதை மாற்றியதால் வந்த விளைவுதான் இது. நாங்கள் அனைவரும் அவள் செய்வது

தவறு என்று சுட்டிக் காட்டியதால், அவள் எங்களையும் ஒதுக்கிவிட்டாள். மெத்தப் படித்த, நல்ல பெயர் உடைய

அவள் கணவன், அவளின் ஆதிக்கத்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதுதான் மிக ஆச்சரியமான விஷயம்!

கடைசியாக மருமகளை விவாகரத்து செய்ய வைத்தாள்.

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மருமகள் மறுமணம் புரிந்து ஒரு குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள்,

இன்று. இந்த மாமியாரிடமே மாட்டிக் கொண்டு உழன்று இருந்தால், சிரிப்பு என்பதற்கே அர்த்தம் புரியாத பேதையாக

மாறியிருப்பாள். பிழைத்தாள்!

:peace:
 
இப்படியும் ஒரு நட்பா?

வலை நட்பைப் பற்றிச் சில முறை எழுதினாலும், மீண்டும் ஒரு எண்ண அலை வருகிறது! சமீபத்தில் இந்த Forum

இல் திடீரென, ஒரு புது ரசிகர்; உங்கள் கவிதைகள் எங்கிருந்து கிடைத்தன என்று கேள்வி! 'என்னடா இது? நாம்

எழுதியதைத்தானே இலக்கியப் பகுதியில் போட வேண்டும்? ஏன் இப்படி ஒரு சந்தேகம்' என்று தோன்றியும்,

என்னுடைய படைப்புக்களே என்று பதில் அளித்தேன். மீண்டும், ஒரு கவிதையில் வந்த எழுத்துப் பிழையைச் சுட்டிக்

காட்டி, ஒரு வரிப் பின்னூட்டம். அதற்கும் பதிலளித்தேன். அதற்குள் தெரிந்தது, அந்த நண்பர் நாற்பது வயதை

நெருங்கும் மணமாகாத வாலிபர் என்று! பின் வந்தது என் வயது பற்றிய கேள்வி! ஓஹோ... நமக்கு 'செட்' ஆகுமோ

என்று தேடுவது புரிந்தது. வயதைப் பெண்மணிகளிடமும், சம்பளத்தை ஆண்களிடமும் கேட்கவே கூடாது என்று

குறிப்பிட்டு, 'உங்கள் வயதில் எனக்கு அக்கா மகன் இருக்கிறான்' என்று பதில் அளித்தேன்.. அத்துடன் ஆள் அம்பேல்!

நிஜமான ஆர்வத்துடன் படித்துப் பாராட்டுபவரே, நல்ல நண்பர். மேற்கண்டதுபோல உள்ள 'தேடல்' அரசர்களை எந்த
வகையில் சேர்த்தலாம்? :fish2:

குறிப்பு:

Forum என்று தமிழாக்கம் செய்யத் தட்டெழுதினால், கிடைப்பது 'போரும்'!
அதுதான் பலமுறை இந்த இணையதளத்தில் சொற்போர் வருகிறதோ? :fencing:
[/QUOTE
Very true dear Raji Madam...it is very difficult to identify and understand a person initially.. May be after few interaction only we will come to know the real nature of a person. for the same above said reason, I have kept friendship till the professional level. But a friend whom I can trust, I can pour my heart out, I can speak fearlessly... no one. my childhood friend is still my best friend, but she is in another place.. when I feel like talking to her, I just call her and have a long chat. after her, there is no true friend.... Please correct me if I am wrong. This is from my experience. with love and respects... Anandi
 
Dear Anandi,

A true friend is a boon to us on earth. The one who consoles us in difficult times and feels happy on our success is a

true friend. That friend does not spread the secrets we share with him / her to others. But in real life, we find persons

who feel happy on our failures and 'act' as if they are also worried! That is why I wrote the first sentence!!

Best wishes,
Raji Ram :grouphug:

mami
narration was good, but typical brahmin style.
i hope u can script in general narration also,
ok coming to the point in this episode who is vanna manidhar, that doctor who did not announce prize to ur son
or ur husband who sacrified a good cinema...
i think the cute who never anything u did was colourful (vanna vanna kuzhandhai)

however, pse continue....
 
mami
narration was good, but typical brahmin style....

Thanks for your comment! When I write something which contains our dialogues, it has to be in brahmin language...
We talk like that, since we are brahmins... thats it. BTW, why don't you sign your post? :typing:
 
அடக்கி ஆள்பவர்கள்...

இரு பெரும் வகைகளாக மனிதரைப் பிரிக்கலாம். ஒன்று அடக்குபவர்கள்; இன்னொன்று அடங்குபவர்கள்!

இவர்களின்றி அவர்கள் இல்லை என்று இரு வகையினருக்குமே சொல்லலாம்! பெற்றோர் பிள்ளையை அடக்குவது

அவன் விடலைப் பருவம் எட்டும் வரை மட்டும் இருந்தால் நல்லது. கணவன் மனைவியை அடக்குவதும், மனைவி

கணவனை அடக்குவதும் ஆரம்பித்தால், என்றுமே ஓயாது! மகனுக்குத் திருமணம் முடிந்த பின்னும் தன்னை மட்டும்

தாங்க வேண்டும் என்று அன்னை எண்ணும்போதுதான் விவகாரமே ஆரம்பிக்கும். மகாபாரதத்தில் ஒரு காட்சி

தொலைகாட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளேன். திரௌபதியை, பாண்டவர்கள் தங்கள் தாய்க்கு அறிமுகம் செய்யும்

பொழுது, தன் கொத்துச் சாவியை தாய் மருமகளிடம் கொடுத்து, இனி அந்த வீட்டின் மதிப்பு குறையாமல் அவளே

பாதுகாக்க வேண்டும் என்பாள். இது, நிஜக் கதையில் வந்ததா இல்லையா என்பது நான் அறியேன்! ஆனாலும், இந்தக்

காட்சி எனக்கு மிகவும் பிடித்தது! தன் வாழ்நாள் காலம் முழுதும், மகன் தன்னையே மிகவும் மதிக்க வேண்டும் என்று

எண்ணி, வீட்டுப் பொறுப்புக்கள் முழுதும் அன்னையே வைத்துக் கொண்டால், அடுத்த தலைமுறை அவற்றை

எப்போது அறிந்துகொள்வதாம்? பழையன கழிதலும், புதியன புகுதலும் நடந்தாலே உலகம் சிறக்கும். என்றென்றும்

தானே ஆளவேண்டும் என எண்ணாது, புதிய தலைமுறைக்கு முடிவுகள் எடுக்கும் அதிகாரம் வழங்கினால், பழைய

தலைமுறைக்கு என்றும் இன்பமே!

அடக்கி ஆள எண்ணாது, கூடி வாழப் பழகுவோம்! :grouphug:

நிஜமா இந்தக் கொஞ்சல்?

அமெரிக்கரின் பழக்கம், எல்லோரையும் கொஞ்சுவது! Honey என்றும் Sweet heart என்றும் Darling என்றும்

எல்லோரையும் அழைப்பதுவே வழக்கம். இந்தியாவிலிருந்து வருவோர், நம் வீட்டில் ஏன் நம்மை இவ்வாறெல்லாம்

அழைப்பதில்லை என்று புலம்புவர்! என்னைப் பொறுத்தவரை, இது நிஜமான கொஞ்சலே கிடையாது. அவர்களின்

பழக்கம்.... அவ்வளவுதான்!

வெளி இடங்களிலும், கூச்சமே இன்றி காதலர்கள் முத்தப் பரிமாற்றம் செய்வதை, எத்தனை முறை காண்கிறோம்.

இதுபோல இந்தியாவில் காணும் சமயம், நமக்குக் கூசுவது நிஜம் அல்லவா? ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு

கலாச்சாரம் இருக்கும். நம் கலாச்சாரத்தையே நாம் பின்பற்ற வேண்டும்.

Be a Roman in Rome என்பார்கள். அதுபோல, இங்கு வந்த இந்தியர்களின் உடை மாறிவிடுகிறது. ஆனாலும்,

கலாச்சரம் 90% இந்தியக் கலாச்சாரம்தான். தெய்வ பக்தி உள்ளவர்கள் கோவிலுக்குச் செல்வது, இங்கும்

தொடருகிறது. முன்பே எழுதியுள்ளேன், கோவிலிலும் ஜீன்ஸ் - டிஷர்ட்டில் மாமிகளும் வருவதை! உடைதான்

மாறுகிறதே தவிர, பக்தி மாறுவதில்லை! மிகவும் சிறந்த குணமே இது என்ற மன நிறைவு எனக்கு.

:peace:
 
கல்யாணமாம் கல்யாணம்!

முன் காலத்தில், பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைப்பார்கள். இந்நாளில், compatibility என்ற சொல் படாத

பாடு படுகிறது! அதே போல இன்னொன்று wave length!! இதையெல்லாம் பார்த்து, கேட்டு, தெளிந்து, பழகிய

பின்னரே கல்யாணமாம்! இதில் வெளிநாட்டில் மாப்பிள்ளையோ, பெண்ணோ அமைந்தால், இன்னும் பெரும்பாடு!

அவர்களை சந்திக்க வைத்து, சம்மதம் பெற்று, விடுமுறை கிடைத்து, கல்யாணம் செய்வதற்குள், இந்தியாவில்

பெற்றோருக்கு விவாகரத்து ஆகுமளவு சண்டைகள் பெருகிவிடும்!

ஒரு புதுவிதக் கல்யாணம் + விவாகரத்தைக் கேளுங்கள்! இந்த இணையதளத்தில் யாருக்காவது சொந்தமாகவோ,

நட்பாகவோ இருக்க வாய்ப்பு உண்டு! எனக்கு நண்பியின் வட்டம்தான். 'எஞ்சினீரிங்' பட்டம் பெற்ற பெண்ணுக்கு,

அமெரிக்க மாப்பிள்ளை நிச்சயம் செய்தார்கள். இவளும், மேற்படிப்புப் படிக்க வேண்டும், அவன் செலவில் டிக்கட்

வாங்கவேண்டும் ... இன்னபிற கண்டிஷன்களுடன், சம்மதித்தாள். மாப்பிள்ளை வீடு 'ஆமாம் சாமி' போட்டதுடன்,

'ரெஜிஸ்டர்' செய்துவிட்டால் 'விசா' எளிதாகக் கிடைக்கும் என்று நம்பினார்கள். இருவரும் 'ரெஜிஸ்டர்'

செய்துகொண்டு, 'மற்ற' விஷயங்கள் பாரம்பரியத் திருமணம் ஆன பிறகு என்று சொல்லிவிட, மாப்பிள்ளை லீவில்

மீண்டும் வந்து மணம் செய்துகொள்வதாகக் கூறி, US சென்றான். அவனுக்கு லீவு கிடைக்கும் முன்னே,

பெண்ணுக்கு ஆஸ்ட்ரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது; வந்தது வம்பு! படிக்க வேண்டும் என்று

சொன்ன பெண், வேலைக்குப் போய்விட்டாள். மாப்பிள்ளை கதி, அதோகதிதான்! அவள் இருக்கும் ஊருக்கு, அவன்

வந்து வேலை தேடிக்கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் விவாகரத்தாம்! இது எப்படி இருக்கு? யார்

சொல்லியும் கேளாமல், பெண் பிடிவாதம் பிடிக்க, விவாகரத்து கோரப்பட்டது! ஒரு நாள் கூட உடன் வாழாமல்,

விவாகரத்து செய்ய சட்டம் இடம் கொடுக்கிறதே... இடம் கொடுத்தால், மடம் பிடிக்க மாட்டார்களா, என்ன!

அவ்வை ஷண்முகி படத்தில் ஒரு காட்சி வரும். வாயில் விரல் போடும் மகளைக் கண்டு, ஹீரோ 'பல்லு தெத்துப்

பல்லு ஆகும்! அப்புறம் எவனுமே உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டான்' என்று சொல்ல, அந்தச் சிறுமி ஒரு போடு

போடுவாள்! 'கல்யாணம் ஆகலைனா, டைவோர்
ஸும் ஆகாது!' ஏனோ இந்தக் காட்சி நினைவு வருகிறது.

:drama:
 
வெண்டைக்காயில் விளக்கெண்ணை!

வெண்டைக்காய் எத்தனை கொழகொழப்பு என்று தெரியும்; அதில் விளக்கெண்ணையை ஊற்றினால்,

என்ன ஆகும்? அதே போலச் சிலர் பேசுவார்கள். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே நமக்குத்

தெரியாது! சொல்லும் கருத்தை நேரடியாகச் சொல்லவும் தெரியாது, அவர்களுக்கு. இதில் இன்னும் விசேஷம்

என்னவென்றால், நாம் எப்போது மிக அவசர வேலையாக வெளியே செல்லுகிறோமோ, அந்த நேரம் வந்து

ராவித் தள்ளுவார்கள்.

சில சமயங்களில் பணத் தேவை அவர்களுக்கு வரும். இத்தனை காசு வேண்டும் என்று நேரடியாகக் கேட்காமல்,

முன்பு நாம் உதவி செய்த மற்ற சிலருக்கு எவ்வளவு கொடுத்தோம், அவர்கள் எத்தனை நாட்களில் திருப்பித்

தந்தார்கள், என்பதுபோலப் பல கேள்விகள் கேட்டு, நம் பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள். கடைசியில்,

நாமே யோசித்து, அவர்களுக்கு உதவ வேண்டிவரும்!

உலகம் பலவிதம்; இவர்களும் அதில் ஒருவிதம்!
:dizzy:
 
நல்லவை நினைப்பவர்...

எல்லோர் வாழ்விலும் நல்லவை, அல்லவை இரண்டுமே வரும். நல்லதை மட்டும் நினைத்து வாழ்ந்தால், வாழ்வு

இனிக்கும்; அல்லவை எண்ணி நொந்துகொண்டே இருந்தால், வாழ்வே சலித்துவிடும். நாட்கள் பறப்பது போலத்

தெரிந்தால், வாழ்வில் சுவை இருக்கும். நாட்கள் இழுவைகளாக இருந்தால் அவலம் பெருகும்!

ஆறடி உயரத்தில் நல்ல கொழுத்த சரீரத்துடன், வந்த அந்தப் பெண்மணிதான் என்னவரின் Physical Therapist...

கண்களில் மை; உதட்டில் சிவப்புச் சாயம்; இவை இல்லாத பெண்கள் US இல் குறைவு. இந்நாட்டு நாகரீகம் மாறாத

உடையும், மேக்கப்பும் என வந்து, அழைப்பு மணி அடித்தார். அவருடன் பார்த்தால், நான் 'லில்லிபுட்'தான்!

என்னவரின் முழுப் பெயரைச் சொல்லக் கஷ்டப்பட்டு, 'ராம் - என்று அழைக்கிறேனே?' என்றார். எங்களுக்கும்

சந்தோஷமே; அவரையும் அறியாமல் 'ராம ஜபம்' செய்வாரே! ஒரு மணி நேரத்தில் ஐம்பது முறைகள் பெயர் சொல்லி

அழைத்தார். தன் உருவம் பற்றிக் கவலையே படவில்லை; தான் விவாகரத்து ஆன பெண்மணி என்பதையும்

சகஜமாகச் சொல்லி, தன் முன்நாள் கணவரின் நல்ல வழக்கங்கள் பற்றி மட்டுமே பேசினார்! சின்னச் சின்ன

விஷயங்களுக்கும் சந்தோஷப்பட்டார்! நான் வீட்டில் அணியும் 'குஷன்' செருப்பை, கார்பெட்டில் வைக்கவே

மாட்டேன். அது மரத் தரைக்கு மட்டுமே. அதைக் கண்டு, 'எனக்கும் இந்த வழக்கம் இல்லாமல் போனதே' என்று

கூறினார். உடற்பயிற்சி வகுப்பில் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி, நம்மிடமும் கேட்டு, சுவாரசியமாகச் செய்தார்.

எங்கள் whale watch புகைப்படங்கள், விடியோக்களைப் பார்த்து ரசித்தார். எல்லோரிடமும் காணும் நல்லவை

மட்டுமே பேசினார். மிக உயர்ந்த பெண்மணி.

இவரிடம் கற்க வேண்டிய விஷயம்: நல்லவை நினைப்போம்; அல்லவை மற
ப்போம்!

:decision: . . . :peace:
 
Last edited:

தன்னை அளவுகோல் ஆக்குபவர்!

தான் மட்டுமே உலகில் சிறந்தவர்; மற்றவர் வாழ்வதே வீண் என்பதுபோலச் சிலர் நடப்பார்கள். எந்தச் சின்ன

விஷயமாயினும், தனக்குத்தான் தெரியும் என்று தாமே தம்மை உயர்த்திப் பேசுவார்கள். தனக்குத் தெரிந்தது

எல்லோருக்கும் தெரிய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இவர்கள்தானே மனிதரின் அளவுகோல்! இவர்களின்

இன்னொரு விசேஷம் என்னவென்றால், தன்னைப் புகழ்ந்து பேசுபவர்களை மட்டுமே இவர்களுக்குப் பிடிக்கும்.

யாராவது அவர்கள் தவறு செய்வதைச் சுட்டிக் காட்டினால், பொல்லாத கோபமும் வந்துவிடும்! தன்னுடைய

'ஜால்ராக்களை' மட்டும் மிகவும் சிலாகித்துப் பேசுவார்கள். இவர்களுக்குத் தெரியாது, தம்மைப் புகழ்வோர்,

ஏதேனும் ஆதாயத்திற்காகவே அப்படிச் செய்கிறார்கள் என்று! இன்னொரு கஷ்டமும் இவர்களுக்கு வரும். ஆதாயம்

ஆனதும் மறையும் ஜால்ராக் கூட்டத்தால், நொந்துபோவார்கள்!

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு. நாம் என்னதான் கற்றுச் சிறந்தாலும், மற்றவர்களும் சிறந்தவர்களே

என்று ஒப்புக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணிவான குணம் தரும் புகழுக்கு இணையே

கிடையாது! :angel:
 
Dear Raji,
I just came to see this column, Ungaludaya vaakugal ponnaana vaakugal.. enjoyed it very much.. good luck..
love
bushu :-)
 
Dear Bushu,

As always... nice to get your feed back and 'likes'. Wish to say
தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்!

Best wishes,
Raji
 
Dear Bushu,

As always... nice to get your feed back and 'likes'. Wish to say
தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்!

Best wishes,
Raji

Dear Raji,

Ungal varthaigalai paddika ennakku aanandham, :-) and your suggestions for me is very much appreciated.. thanks! once again..
Best to you too.

Bushu :-)
 
கல்யாணமாம் கல்யாணம்!

முன் காலத்தில், பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைப்பார்கள். இந்நாளில், compatibility என்ற சொல் படாத

பாடு படுகிறது! அதே போல இன்னொன்று wave length!! இதையெல்லாம் பார்த்து, கேட்டு, தெளிந்து, பழகிய

பின்னரே கல்யாணமாம்! இதில் வெளிநாட்டில் மாப்பிள்ளையோ, பெண்ணோ அமைந்தால், இன்னும் பெரும்பாடு!

அவர்களை சந்திக்க வைத்து, சம்மதம் பெற்று, விடுமுறை கிடைத்து, கல்யாணம் செய்வதற்குள், இந்தியாவில்

பெற்றோருக்கு விவாகரத்து ஆகுமளவு சண்டைகள் பெருகிவிடும்!

ஒரு புதுவிதக் கல்யாணம் + விவாகரத்தைக் கேளுங்கள்! இந்த இணையதளத்தில் யாருக்காவது சொந்தமாகவோ,

நட்பாகவோ இருக்க வாய்ப்பு உண்டு! எனக்கு நண்பியின் வட்டம்தான். 'எஞ்சினீரிங்' பட்டம் பெற்ற பெண்ணுக்கு,

அமெரிக்க மாப்பிள்ளை நிச்சயம் செய்தார்கள். இவளும், மேற்படிப்புப் படிக்க வேண்டும், அவன் செலவில் டிக்கட்

வாங்கவேண்டும் ... இன்னபிற கண்டிஷன்களுடன், சம்மதித்தாள். மாப்பிள்ளை வீடு 'ஆமாம் சாமி' போட்டதுடன்,

'ரெஜிஸ்டர்' செய்துவிட்டால் 'விசா' எளிதாகக் கிடைக்கும் என்று நம்பினார்கள். இருவரும் 'ரெஜிஸ்டர்'

செய்துகொண்டு, 'மற்ற' விஷயங்கள் பாரம்பரியத் திருமணம் ஆன பிறகு என்று சொல்லிவிட, மாப்பிள்ளை லீவில்

மீண்டும் வந்து மணம் செய்துகொள்வதாகக் கூறி, US சென்றான். அவனுக்கு லீவு கிடைக்கும் முன்னே,

பெண்ணுக்கு ஆஸ்ட்ரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது; வந்தது வம்பு! படிக்க வேண்டும் என்று

சொன்ன பெண், வேலைக்குப் போய்விட்டாள். மாப்பிள்ளை கதி, அதோகதிதான்! அவள் இருக்கும் ஊருக்கு, அவன்

வந்து வேலை தேடிக்கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் விவாகரத்தாம்! இது எப்படி இருக்கு? யார்

சொல்லியும் கேளாமல், பெண் பிடிவாதம் பிடிக்க, விவாகரத்து கோரப்பட்டது! ஒரு நாள் கூட உடன் வாழாமல்,

விவாகரத்து செய்ய சட்டம் இடம் கொடுக்கிறதே... இடம் கொடுத்தால், மடம் பிடிக்க மாட்டார்களா, என்ன!

அவ்வை ஷண்முகி படத்தில் ஒரு காட்சி வரும். வாயில் விரல் போடும் மகளைக் கண்டு, ஹீரோ 'பல்லு தெத்துப்

பல்லு ஆகும்! அப்புறம் எவனுமே உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டான்' என்று சொல்ல, அந்தச் சிறுமி ஒரு போடு

போடுவாள்! 'கல்யாணம் ஆகலைனா, டைவோர்
ஸும் ஆகாது!' ஏனோ இந்தக் காட்சி நினைவு வருகிறது.

:drama:

This is not the first time I have read something like this.. one of our family friends brother did go through something like this nearly 20 years ago.. this young man was married and before the wedding the girl's condition was that she wants to support her family, and would continue to work and this man had no problem.. in about a four months they came to know that his father was diagnosed with cancer, so the treatment started and the oldest DIL and his mother began to care for him.. Now our friend had two children and while he was at work, his wife the oldest DIL had to take care of their activities.. so the young married man approached his wife and said, could you please quit for a few months, this time is crucial and since Manni and mom are taking care of father among other things would you please quit and go back to work, once things have settled a bit..

Imm this girl was outraged, and she said to him, YOU agreed to my condition and no way I am going to quit for your family's sake and she applied for divorce and also aborted her fetus and walked out of his life, JUST LIKE THAT.. this young man was so shocked and a person who is very affectionate and loving, certainly did not deserve this.. he just became like a zombi.. I am not sure what happened to him later in life, but I was shocked at the whole thing because how could her parents allow such a thing.. anyway, who are we to judge, but today I was reminded of that story.. just felt sad.
 
Days are changing fast, Bushu! I have heard of a girl who rejected a proposal just because, when she went out with

the boy, he bought her a coca cola instead of Fanta, which was her choice. If the incident you have written has

happened 20 years back......... I really pity the young men of present generation!
:tsk:
 
raji, bush,

we believe what we want to believe. even if it challenges our intelligence and common sense.

this is my take on both of your notes.

if you dont mind me saying so, both of you who are related or friends before this forum happened, have common stories of boys in your family, you feel, were done wrong.

ofcourse, you have heard the adage, that there is no smoke without fire. and also, no one else knows, what happens inside the 4 walls of a house, atleast the full story.

take the story of the girl who preferred fanta over coke, and who held it against the guy for rejecting him. is this not so absurd, that it is not even believable?

tomorrow, you might hear, a girl who was looking for jockey lines visible from the pants, but instead found komanam lines, and hence rejected the guy as paththaam pasali. or reverse, the guy did not find panty lines in her outfit, and figured that she was not wearing any panties (too hot to trot and hence reject) or wearing thongs (more hot to trot and hence reject).

the gist of what i am trying to say, is that while, what you post, as arrogantly insensitive behaviour of our girls, and being of the same gender, and probably made to sing, your hair pulled, your teeth checked, as marks of verification in your own 'ponn pararkkal padalam', one would have normally expected a more sympathetic view to the situation of our girls today.

you might or might not have read, about the namboodri youngsters of kerala, picking brides from orphanages. the one advantage being that there is no one on the girls' family to influence them, they can 'mould' these girls into respectablly proper namboodri priests' wives. atleast it is their hope, and from the market sample of past cases, the success rate is high enough or the desperation is higher enough, for these guys to venture into waters hitherto unwaded.

how come you guys do not investigate as to alternate options for unmarried guys in your sutrum and soozh, instead of constantly harping on the unreasonable acts of the girls. it seems to me that these girls are akin to the moon, which can be only howled at, but never possessed.

also, i realize, that perhaps, you folks are intrinsically against suggesting or promoting inter caste or outside of tambram marriages, even though your sons or nephews/nieces may have indulged in the same. which should not be ok, for if ic marriages are good for you, it should be good enough for other folks in this forum who are pushing the wrong side of 30s, with no prospective bride in site.

some positive suggestion to unclog a bottleneck is most welcome, from veteran mothers like you folks :)
 
Latest ads

Back
Top