• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

நிஜ வாழ்வின் ஹீரோக்கள்! .............
ஆண்களுக்கு நிகராகப் படிக்கும் பெண்களும், இந்த மாணவர், இளைஞர்களில் அடங்குவர்.

அவர்களை நிஜ வாழ்வின் ஹீரோயின்கள் என்று சொல்லலாமே! :thumb:
 
வாழ்வை அனுபவிப்பவர்!

எங்கள் உறவில் ஒரு பிரக்ருதி உள்ளார். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தம் அவருடையது! தன்னுடைய

வேலைகளை மட்டும் சரியாகச் செய்துகொள்வார்... மற்றவர் பற்றி துளிக் கூட அக்கறை இல்லாத மனிதர்! எங்கள்

தந்தை SKP என்று ஒரு வகை மனிதர்கள் உள்ளார் என்பார். சுய காரியப் புலி என்பதே அது! இவர் உச்சி முதல்

உள்ளங்கால் வரை அந்த வகையேதான்.



மற்றவர்கள் தினசரி வேலைகள் பற்றிக் கவலைப் படாது, போகும் வீடுகளில் எல்லாமே தன் தினசரி வேலைகளே

முதன்மை என்பார். தனக்கே முதல் மரியாதை எதிர்பார்ப்பார்! ஒரு முறை, உடல் நலமில்லாத தன் சித்தி மகனைப்

பார்க்கிறேன் பேர்வழி என்று வந்து, அவர்கள் வீட்டில் தங்கினார். ஐந்து மணிக் காபி, எட்டு மணி டிபன், பதினோரு

மணி மோர், ஒரு மணிச் சாப்பாடு என்று லிஸ்ட் நீண்டுகொண்டே போக, அந்த இல்லத்தரசி பரிதவித்துவிட்டார்,

முழு நேர உதவியை நாடும் கணவனையும் வைத்துக்கொண்டு!



சிறு வயது முதலே அதிருஷ்ட ஆட்டங்களில் ஈடுபாடு... அதில் 'குதிரை'யும் அடக்கம்! எண்பது வயதிலும்

கோவாவுக்கும், மலேசியாவுக்கும் சென்று சூதாட்டத்தில் 'ஒரு கை' பார்ப்பார்! இரு மகன்கள் வசதியாக வாழ்ந்தும்,

அவர்களுடன் வாழ இவருக்குப் பிடிக்காது. ஒரு பைசா கூட அவர்களுக்கு வைக்காமல் செலவு செய்வேன் என்றும்

பிரகடனம் செய்வார். ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள சீனியர் இல்லத்தில், காலம் கழிக்கின்றார்.



தன் மனைவியை மிக நன்றாக கவனித்துக் கொண்டதை, மெச்சத்தான் வேண்டும்! படுத்த படுக்கையாக் இருந்த

அவருக்கு, ஐந்து ஆண்டுகள், வேலையாளின் உதவியுடன் ராஜ வைத்தியம் செய்தார். தனியாளாக ஆன பின்பும்,

தனிமையே பிடிக்கிறது! பிள்ளைகளைப் பிடிக்காவிட்டாலும் மனைவியை உயர்வாக எண்ணினாரே... அதுவே

மேலானது. கல்யாண வயதில் நடிகை காஞ்சனா மாதிரி பெண் தேடி, அதில் தேர்வாகிக் கிடைத்த பெண் அல்லவா

அவர்?



இவரைப் போலவும் வாழ முடியுமோ என்று நான் வியந்த மனிதர், இவர்தான்; ஐயமே இல்லை!

:decision: . . :confused:
 

கறிவேப்பிலை க்குபவர்கள்!


மனிதர்களில் பல குணங்கள் கொண்டவர்களில், இவர்கள் கொஞ்சம் விநோதமானவர்கள்; ஜாக்கிரதையாகப் பழக

வேண்டியவர்கள்! உதவி ஒன்று செய்வதற்குள், நாம் இல்லாவிட்டால் உலகமே அவர்களுக்கு இருண்டுவிடும்

என்னும் அளவுக்குப் பேசி, புகழ் மாலை சூட்டுவார்கள். உன்னை விட்டால் கதி இல்லை என்பார்கள். நாமும்

அசடுகள் போல, அவர்கள் கேட்பதற்கு முன்னே, உதவிக் கரம் நீட்டிச் செல்லுவோம். ஆயிரங்களிலும்,

கோடிகளிலும் நன்றி பாராட்டுவார்கள். தனக்கு வேண்டிய வேலைகள் நல்ல விதமாக முடிந்தவுடன், நாம் ஆவது

'சமையலில் கறிவேப்பிலை '... ருசிக்கு வேண்டி இடும் அதுதான், முதலில் பலரால் ஒதுக்கி ஓரமாக வைக்கப்படும்!

இவர்களும் உலகில் நாம் இருப்பதையே கண்டுகொள்ள மாட்டார்கள்.



ஒன்று சொல்லிக் கேட்டுள்ளேன்! 'Be happy if people take you for granted!' அதாவது நாம் உதவி செய்வோம் என்று

பூரண நம்பிக்கையை நாம் ஏற்படுத்துகிறோமே! அதுவே உலகில் பெரிய சாதனை அல்லவா? 'புகழ்ச்சிக்கு

மயங்காதே', என்று நம் மனம் ஒருபுறம் அறிவுறுத்தினாலும், புகழ்ச்சிக்கு மயங்காதவர் யார்?



நாம் பிறந்தது பிறருக்கு உதவவே என்று ஒரு வகை மனிதர். உலகம் இருப்பதே தனக்கு உதவத்தான் என்று ஒரு
வகை மனிதர். இதில் முதல் வகையாக இருப்பதையே நான் விரும்புகிறேன்! :grouphug:
 
Last edited:
raji,

re your post #203

i had an uncle whose principle guideline in life was 'self before everythin else'

the man used to proudly proclaim this!!
 

Sorry dear Anandi! When I corrected the spelling (கறிவேப்பிலை), the 'like' you had given vanished..... Raji Ram :ohwell:


 
பச்சை, நீலம், மஞ்சள் ...

மனித குணங்களுக்கு வண்ணம் சொல்லுவது போலவே, எழுத்திற்கும், பேச்சிற்கும், திரைப் படங்களுக்கும்

வண்ணம் உண்டு! கொச்சையாக இலைமறை காய்மறை விஷயங்கள் பேசுவோரை / எழுதுவோரைப் 'பச்சையாக'ப்

பேசுகிறார் / எழுதுகிறார் என்று நிறம் சொல்வதுண்டு. அதேபோல இருட்டறை விஷயங்களை வெளிச்சம் போட்டுக்

காட்டும் திரைப் படங்களுக்குக் கொடுக்கும் வண்ணம் 'நீலம்'. கிசு கிசுக்களைப் பரபரப்பாக்கி, தரம் தாழ்ந்து எழுதும்

பத்திகைகள் பெறும் வண்ணம் 'மஞ்சள்'. இதே நிறம்தான் பணமெல்லாம் இழந்தவர் கொடுக்கும் 'நோட்டீசின்'

நிறமும் ஆகும்.



இதனை ஏன் எழுதுகிறேன்? நகைச்சுவையாகப் பேசுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, பச்சையாகப் பேச

ஆரம்பிப்போரிடம் நாம் பழகுவது எப்படி என எண்ணியதன் விளைவு! மீண்டும் 'குளிர் காயும் தீ' தான் நினைவு

வருகிறது! நண்பர், பச்சைப் பேச்சாளராக மாறிவிட்டால்? தீயை விட்டுக் கொஞ்சம் விலகுவதுபோல, நாமும்

கொஞ்சம் விலகி இருக்க வேண்டும். நம் நண்பர்களைக் கொண்டுதான் நம்மையும் உலகம் எடை போடும். எனவே,

இவ்வகை மனிதர்களிடம் மிகவும் ஒட்டாது, எல்லை காத்தால், தொல்லைகள் வாழ்வில் வராது இருக்கும்!



ரோஜாச் செடி போன்ற அழகிய பூச் செடிகளை வளர்ப்பதுதான் கடினம். களை எங்கு வேண்டுமானாலும்

முளைக்கும். களையவேண்டிய அதற்குத் தண்ணீர் விடும் அவசியமும் இருக்காது! நல்ல விஷயங்களில் திறமை

பெறுவதுதான் கடினம். அவற்றைப் பெற முயலுவோம்! தரம் தாழ்ந்தவை மனதில் புகாமல் இருக்க, மனக் கட்டுப்பாடு

பெறுவோம்! நல்ல விஷயங்கள் பகிர்வோரின் நட்பை வளர்த்து, வாழ்வில் மேன்மை அடைவோம்!


:grouphug: . :thumb:
 
இரு துருவங்கள்...

எல்லா குணங்களுக்கும் நேர் எதிர் இருப்பது, வாழ்வில் நாம் காண்பது! இதில் ஒரு வகை பற்றிய கண்ணோட்டமே

இது. எல்லோரும் அழகாகப் பிறப்பதில்லை; அப்படிப் பிறந்தால் அழகன் / அழகி என்று யாரைப் புகழ முடியும்? அக

அழகுதான் மேன்மை என்று எல்லோருமே அறிந்தாலும், 'கண்ணுக்கு லட்சணமாக' இருப்பதையே மனிதர்

விரும்புவர்.



உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே நிறத்தில் அணிந்து அசத்தும் அலங்காரப் பிரியர்கள் இருந்த காலனியில்,

இன்னொரு எதிர் துருவமாக ஒரு பெண்மணி. இருந்தார். மெத்தப் படித்த அவருக்கு, தம் உடை பற்றிய சிந்தனையே

கிடையாது! நீலப் புடவைக்குப் பச்சை நிறச் சோளி என்பதுபோலவே தேர்வு செய்வார். அவரைக் கண்டால் நான்

ஆச்சரியப்படுவேன்! 'இப்படிக்கூட ஒரு பெண் இருக்க முடியுமா?', என்று.



யாரோ ஒரு மாமி சொன்னார், ஐம்பது வயதுக்கு மேல் கண் மை இடக்கூடாதாம்! யார் வைத்த சட்டமோ? யாம்

அறியோம் பராபரமே! இசை உலகில் கொடிகட்டிப் பறந்த, பாரத் ரத்னா. திருமதி M. S. சுப்புலட்சுமி அவர்கள், முதிய

வயதிலும், படிய வாரி, பூ வைத்து, வரிசைப் பொட்டுக்கள் இட்டு, கண்மை இட்டு, மின்னும் வைரங்கள் காதிலும்

மூக்கிலும் ஜொலிக்க, இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியதை ரசிக்காதவர் யார்? அதீதமான ஒப்பனைகள்தான் 'காமெடி'

போல மாறுமே தவிர, சாதாரண ஒப்பனைகள் அழகைக் கூட்டவே செய்யும்.



பெரிய திரை சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் மேக்கப் அணிவது அவசியம். இப்போது யதார்த்தம் என்ற பெயரில்

மேக்கப் இல்லாத முகங்களை வைத்து அச்சுறுத்தும் பல திரைப் படங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன!

எண்ணெய்க் கத்திரிக்காய் போல, எண்ணெய் வழியும் முகத்தை யார்தான் பார்த்து ரசிக்க முடியும்?



கல்யாண வீட்டிற்கு, கசங்கிய சேலையில் செல்வதும், துக்க வீட்டிற்கு பட்டுடையில் செல்வதும் உலகம் ஒத்துக்

கொள்ளாத விஷயங்கள். இடம், பொருள், ஏவல் என்பதையும் அறிந்து உடுத்துதல் அவசியம்.



அதிகமான ஒப்பனை செய்து, அசாதாரணமாக இருப்பதைத் தவிர்ப்போம். ஒப்பனையை வெறுத்து ஒதுக்காதும்

இருப்போம். இரு துருவங்களுக்கும் இடையே, சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் எளிய ஒப்பனைகள் செய்வோம்!

:first:
 
Dear B.K. Sir,

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. சுனாமி போல, பேரலை வீசும் ஒரு 'நூலை'ப் படித்ததால் எழுந்த எண்ணங்களே இவை!


Regards,
Raji Ram :ranger:
 
Dear raji,

Pray look upon this note of mine as an observation and definitely not a critique of your awesome posts.

re கல்யாண வீட்டிற்கு, கசங்கிய சேலையில் செல்வதும், துக்க வீட்டிற்கு பட்டுடையில் செல்வதும் உலகம் ஒத்துக் கொள்ளாத விஷயங்கள். இடம், பொருள், ஏவல் என்பதையும் அறிந்து உடுத்துதல் அவசியம்

Let me tell you a story. We have a friend a pattar, who was married to a hindu lady from Trinidad.

The Trinidad hindus, are casteless, and also much westernized. It was sad when the lady passed away, and she had no son to do the last rites.

The grown up daughter was there, and she was dressed up to the hilt, like the way the westerners are ie decent but formally dressed when they attend a funeral.

Unlike us.

So at the funeral there were two distinct groups, one well dressed west Indian hindus, and the rest tambrams who looked like alangolam.

Norms change according to where we live, and I suspect, in another generation or two, my descendents would have erased the Brahmin out of their consciousness, and would probably behave more like the casteless hindus out of india.

Such is life. Or death, for that matter.

i do agree, that movies made, with starts having no make up, does look odd. maybe because we areused to the makeup all our lives ?
 
Last edited:
Dear Kunjuppu Sir,

I would like to mention my ideas which differ from the usual 'brahmin' custom, here. As we all know, when our people

go for any condolence, they go without taking bath! I just hate that idea, right from my young age. Why not have a

bath, dress up neatly in a simple attire and then go for the condolence? Never in my life so far, have I gone to any

such place without my morning bath and prayers. Some of our customs are weird, so to say!

Is it a way to save water..... skipping two baths in the morning? :faint:

Regards,
Raji Ram
 
குழந்தைத்தனம்?

பல சினிமாக்களில் குழந்தை போலவே பேசிப் பழகும் கதாநாயகிகள் வருவது வழக்கம்! 'யானை! முட்டு, முட்டு!'

என்று சொல்லிக் குழந்தை விளையாட்டு விளையாடுவதுபோல ஒரு கதாநாயகி, பார்த்த பெரியவர்களை எல்லாம்

முட்டி, விளையாடுவதை ஒரு சினிமாவில் கண்டு எரிச்சல் அடைந்தவள் நான்! குழந்தை போலக் கள்ளம் இல்லாத

உள்ளம் மிகவும் போற்றப் படவேண்டிய குணம்! ஆனால், குழந்தைத்தனமாக வளைய வாழ்ந்தால், எங்கோ ஒரு NUT

கழன்றுவிட்டாதோ என்று ஐயம் வருவது இயல்புதானே?



எங்கள் நெருங்கிய சொந்தத்தில் ஒரு உயர்ந்த பணியில் இருக்கும் NRI க்கு மணம் செய்த பெண், 'பெண் பார்க்கும்

படலத்தில்' அதிகம் பேசவே இல்லை! அமைதியான அந்தப் பையனுக்கு ஏற்ற ஜோடியே என்றுதான் நாங்கள்

எண்ணினோம்! திருமணம் ஆன பின், அந்தப் பெண் குழந்தை போலச் செய்யும் லூட்டிகள் கொஞ்சம் முகம்

சுளிக்கவே வைக்கின்றன! 'நான் பாவம்!' என்று அடிக்கடி சொல்லியபடியே உலவுவாள்; அடிக்கடி 'ஐயோ' அன்று

அலறுவாள்; காலை 'டப், டப்' என்று ஓசை வருமாறு தட்டியபடி ஓடுவாள்; தாவித் தாவி குதிப்பாள்; சிணுங்கியபடியே

பேசுவாள்..... இன்று ஒரு குழந்தைக்குத் தாய்! அவள் கணவன் அவளை ஒன்றுமே சொல்லுவதில்லை. அப்படி

இருக்கும்போது நாம் எப்படி அவளை நளினமாகப் பழக வைக்க முடியும்?



அவள் மகன் பெரியவனாகி அம்மாவை மாற்றுவானோ? நம்புகிறேன்! நம்பிக்கைதானே வாழ்க்கை?

:juggle: . . . :thumb:
 
குழந்தைத்தனம்?

பல சினிமாக்களில் குழந்தை போலவே பேசிப் பழகும் கதாநாயகிகள் வருவது வழக்கம்! 'யானை! முட்டு, முட்டு!'

என்று சொல்லிக் குழந்தை விளையாட்டு விளையாடுவதுபோல ஒரு கதாநாயகி, பார்த்த பெரியவர்களை எல்லாம்

முட்டி, விளையாடுவதை ஒரு சினிமாவில் கண்டு எரிச்சல் அடைந்தவள் நான்! குழந்தை போலக் கள்ளம் இல்லாத

உள்ளம் மிகவும் போற்றப் படவேண்டிய குணம்! ஆனால், குழந்தைத்தனமாக வளைய வாழ்ந்தால், எங்கோ ஒரு NUT

கழன்றுவிட்டாதோ என்று ஐயம் வருவது இயல்புதானே?



எங்கள் நெருங்கிய சொந்தத்தில் ஒரு உயர்ந்த பணியில் இருக்கும் NRI க்கு மணம் செய்த பெண், 'பெண் பார்க்கும்

படலத்தில்' அதிகம் பேசவே இல்லை! அமைதியான அந்தப் பையனுக்கு ஏற்ற ஜோடியே என்றுதான் நாங்கள்

எண்ணினோம்! திருமணம் ஆன பின், அந்தப் பெண் குழந்தை போலச் செய்யும் லூட்டிகள் கொஞ்சம் முகம்

சுளிக்கவே வைக்கின்றன! 'நான் பாவம்!' என்று அடிக்கடி சொல்லியபடியே உலவுவாள்; அடிக்கடி 'ஐயோ' அன்று

அலறுவாள்; காலை 'டப், டப்' என்று ஓசை வருமாறு தட்டியபடி ஓடுவாள்; தாவித் தாவி குதிப்பாள்; சிணுங்கியபடியே

பேசுவாள்..... இன்று ஒரு குழந்தைக்குத் தாய்! அவள் கணவன் அவளை ஒன்றுமே சொல்லுவதில்லை. அப்படி

இருக்கும்போது நாம் எப்படி அவளை நளினமாகப் பழக வைக்க முடியும்?



அவள் மகன் பெரியவனாகி அம்மாவை மாற்றுவானோ? நம்புகிறேன்! நம்பிக்கைதானே வாழ்க்கை?

:juggle: . . . :thumb:


raji,

this is a disaster for the poor guy! imagine his disappointment to get such a wife. did nobody know about the girl? did not anyone make enquiries?

what type of parents does he have, who lead him into a trap like this?

are these the type, that once married, consider it their fate and stick with it.

i have a friend like that. 32 years of unhappy marriage. destroyed life. both his. and hers, as he takes his revenge on her little by little. what a disaster!!

another one, a relative, bit the bullet. divorced the nincompoop wife, and married again. this time a widow with a daughter. atleast found peace. after 12 years of unhappiness.

oh God!!
 
Dear Kunjuppu Sir,

I would like to mention my ideas which differ from the usual 'brahmin' custom, here. As we all know, when our people

go for any condolence, they go without taking bath! I just hate that idea, right from my young age. Why not have a

bath, dress up neatly in a simple attire and then go for the condolence? Never in my life so far, have I gone to any

such place without my morning bath and prayers. Some of our customs are weird, so to say!

Is it a way to save water..... skipping two baths in the morning? :faint:

Regards,
Raji Ram

dear raji,

i think we have a strong sense of ritual impurity.

in our home we call it pelai or theendal, depending on the situation. this has nothing to do with body cleanliness.

it is all in the mind, i think, dear lady. no?
 
..............
i think we have a strong sense of ritual impurity.............
Dear Sir,

When a person dies of some contagious disease, the house in which the body is kept will be infectious too! That is

why, the whole house is cleaned with water, soon after the last journey of that person and people who visit the house

for 10 days take bath after conveying their condolence. On the 10th day, when the 'theetu' is gone, all the cloths are

washed to bring back cleanliness in the house. That part of the custom is OK with me! But to go without the

morning bath to the grieving house is something I can never agree to!

Regards,
Raji Ram
 
Dear Sir,

When a person dies of some contagious disease, the house in which the body is kept will be infectious too! That is

why, the whole house is cleaned with water, soon after the last journey of that person and people who visit the house

for 10 days take bath after conveying their condolence. On the 10th day, when the 'theetu' is gone, all the cloths are

washed to bring back cleanliness in the house. That part of the custom is OK with me! But to go without the

morning bath to the grieving house is something I can never agree to!

Regards,
Raji Ram

raji,

i can understand that. but i am talking the concept of ritual impurity.

it is a concept unique to us brahmins. it is all in the mind.

do you take a bath after visiting a house of death? do you feel the need to.

when i was young, i used to take a bath after a visit to the barbers. my anglo indian friends did not. even now, i do, even though i come out dusted clean. my children dont feel the need to and i have not encouraged them with the concept of ritual impurity ie a barber is a of a caste who if he touches you, one should take a bath.

we used to cloak this fact, sometimes, saying that it is for 'hygiene' reasons, but i learned about the untouchability part much later in life.
 
Last edited:
Dear Kunjuppu Sir,

Talking of untouchables, I am reminded of one incident, while I was in college. I was travelling by town bus to come

home for holidays from my hostel. One SC woman came and sat near me, and I just kept quiet though she was

shabby and stinky! You know what happened later on? One more SC came and stood in the bus though three can sit

in that seat and we were only two! She told the conductor who asked her to sit that 'paapaaththis can tolerate that

SC but she was one step more than her caste wise!! How is that?


Re. rituals... now a days the removing of thirumaangalyam is done silently by the widow, on the 10th mid night in

brahmin community. I know one NB friend who was tortured by her M I L to do all the so called 'rituals' of their

community, right from making her have head bath in the crowd of widowed ladies, wiping her kumkum, breaking her

glass bangles, tearing her blouse etc as we see even now in a few Tamil movies. I got so much upset and could not

sleep for a few nights! I find brahmins are more understanding now a days.


I do have a bath after a condolence visit, if it happens to be within 10 days. Not after that period.


Regards,
Raji Ram
 
அன்னப் பறவை போல...

அன்னப் பறவை மனிதர்கள்... யாரென்று பார்ப்போம்! பாலையும், நீரையும் கலந்து வைத்தால், அதில் பாலை மட்டும்

வடிகட்டிக் குடிக்குமாம், அன்னப்பறவை. இது மெய்யோ, பொய்யோ நான் அறியேன். எத்தனையோ ஆண்டுகளாகக்

கூறப்படும் விஷயம் இது. இதே போன்ற குணம் உடையவர்கள்தான் அன்னப் பறவை மனிதர்கள்! உலகம் நல்லதும்,

அல்லதும் நிறைந்து விளங்கும் இடம். அதில் நல்லவை நாடித் தேடி அறிந்து சிறப்பது பெருமை அல்லவா?



மனதை திசை திருப்பப் பல்வேறு விஷயங்கள் நிறைந்த உலகில், பெற்றோரின் கடமை இன்னும் கடினம் ஆகின்றது.

வாரிசுகள் தீயவை நாடாது பாதுகாப்பது மிகக் கடினம். சின்ன வயதில் 'என் அம்மா அப்பா சொன்னார்கள்' என்னும்

குழந்தைகள், பள்ளியில் சேர்ந்தவுடன் 'என் ஆசிரியர்கள் சொன்னார்கள்' என்றும், விடலைப் பருவத்தில் 'என்

நண்பர்கள் சொன்னார்கள்' என்றும் சொல்லி, முடிவாகக் கல்லூரி எட்டும்போது, 'நான் சொல்கிறேன்' என்பார்!

பெற்றோர் நல்வழியில் வாழ்வைச் செலுத்தினால்தான், குழந்தைகளும் நல்வழிப்படும். எதைச் செய்ய வேண்டும்

என்பதைத் தேர்வு செய்யும் நல்லறிவை, இள வயதிலேயே புகுத்த வேண்டும். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில்

வளையாது!' அல்லவா?


அன்னப் பறவை மனிதர்களைக் கண்டு, நாமும் அவர்களைப் பின்பற்றுவோம்! :peace:
 
நல்ல அம்மா?

சமீபத்தில் ஒரு NRI அம்மாவைச் சந்தித்தேன். ஒரு சின்ன மகன் உண்டு அவளுக்கு. இங்கு உள்ள தம்பதியர், சரி

சமமாகப் பிள்ளை வளர்ப்பில் பங்கு எடுத்துத்தான் பார்த்துள்ளேன். இவள் ஒரு புது வகை. ஒரு நொடி கூட மகனை

விட்டுப் பிரிய மாட்டாள். குழந்தை, தன் தந்தையிடமே இருக்க மாட்டான்! அவளோ, தான்தான் அவனைப் பார்த்துக்

கொள்ளுவது போலவும், மற்றவர்களுக்கு (தன் கணவன் உட்பட) ஒன்றுமே தெரியாது என்கிற பந்தாவில் நடப்பாள்!

பெறும் குரலில் பேசிக்கொண்டும், சொல்லும் எல்லாவற்றையும் பலமுறை திருப்பித் திருப்பிச் சொல்லியும், வீட்டில்

உள்ள மற்றவர்களை வெறுப்பேற்றுவாள். அவளின் வாதம் என்னவென்றால், பலமுறை சொன்னால்தான்

குழந்தைக்குப் புரியுமாம். யாரேனும் குழந்தையிடம் கொஞ்ச வந்தால், உடனே அவன் சிணுங்குவான். உடனே இவள்

ஆஜர்! 'என்னடா செல்லமே' என்று ஆரம்பித்துச் சுய புராணம் பாடுவாள். தன்னை விட்டு ஒரு நொடிக்கூட, மகன்

போகமாட்டானாம். யாரிடமும் பேச மாட்டானாம்..... இன்ன பிற!


கணினியில் எதையேனும் போட்டுவிட்டால், அதையே அவன் பார்ப்பான். சாப்பிடக் கணினி; விளையாடக் கணினி

என்று அந்த சின்னத் திரையையே பார்க்கிறானே, தவிர யாரிடமும் பழகுவதே இல்லை!


எல்லோரிடமும் பழக விடும் தாய் சிறந்தவளா? இல்லை இவளா?

:decision:
 
இப்படியும் ஒரு நட்பா?

வலை நட்பைப் பற்றிச் சில முறை எழுதினாலும், மீண்டும் ஒரு எண்ண அலை வருகிறது! சமீபத்தில் இந்த Forum

இல் திடீரென, ஒரு புது ரசிகர்; உங்கள் கவிதைகள் எங்கிருந்து கிடைத்தன என்று கேள்வி! 'என்னடா இது? நாம்

எழுதியதைத்தானே இலக்கியப் பகுதியில் போட வேண்டும்? ஏன் இப்படி ஒரு சந்தேகம்' என்று தோன்றியும்,

என்னுடைய படைப்புக்களே என்று பதில் அளித்தேன். மீண்டும், ஒரு கவிதையில் வந்த எழுத்துப் பிழையைச் சுட்டிக்

காட்டி, ஒரு வரிப் பின்னூட்டம். அதற்கும் பதிலளித்தேன். அதற்குள் தெரிந்தது, அந்த நண்பர் நாற்பது வயதை

நெருங்கும் மணமாகாத வாலிபர் என்று! பின் வந்தது என் வயது பற்றிய கேள்வி! ஓஹோ... நமக்கு 'செட்' ஆகுமோ

என்று தேடுவது புரிந்தது. வயதைப் பெண்மணிகளிடமும், சம்பளத்தை ஆண்களிடமும் கேட்கவே கூடாது என்று

குறிப்பிட்டு, 'உங்கள் வயதில் எனக்கு அக்கா மகன் இருக்கிறான்' என்று பதில் அளித்தேன்.. அத்துடன் ஆள் அம்பேல்!



நிஜமான ஆர்வத்துடன் படித்துப் பாராட்டுபவரே, நல்ல நண்பர். மேற்கண்டதுபோல உள்ள 'தேடல்' அரசர்களை எந்த
வகையில் சேர்த்தலாம்? :fish2:



குறிப்பு:

Forum என்று தமிழாக்கம் செய்யத் தட்டெழுதினால், கிடைப்பது 'போரும்'!
அதுதான் பலமுறை இந்த இணையதளத்தில் சொற்போர் வருகிறதோ? :fencing:
 

Latest posts

Latest ads

Back
Top