• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

விஷமத்தின் தம்பி!

அண்ணன் விஷமம் செய்யும் அளவு இல்லாவிட்டாலும், இவன்

விஷமத்துக்கும் பஞ்சமே இல்லை! அது தொடர்ந்தது, அவன்

கல்லூரி நாட்கள் வரையில்....



வட்ட நிலவு போன்ற முகத்தில், கார்முகில் போல அடர்ந்த சுருண்ட

அலைபாயும் கேசம்; தங்க நிறம்; கொழுக் மொழுக். இதைவிட

என்ன வேண்டும் அவனைச் செல்லம் கொஞ்ச? இனிய சிரிப்புடன்

எல்லோரிடமும் செல்லுவான். அவனை பள்ளிக்கு அனுப்ப

இஷ்டமே இல்லை, சித்திக்கு. அ
தனால் வீட்டிலேயே ஒரு ஆசானை

நியமித்தார், பிள்ளையின் படிப்புக்கு. நாலு வயது மழலைதான்

அவன். ஆசானோ ஒரு சோனிப் பிச்சான்! அவரின் வயது

ஐம்பதுகளில் இருந்தாலும், மிகவும் நடுங்குவார், அவனைக் கண்டு!

ஐந்து நாட்கள் பாடம் எடுக்க வேண்டும்... ஆனால், இவனுக்கு

விளையாட நாள் முழுதும் வேண்டும்! ஒரு ஐடியா பண்ணுவான்.

சித்தி ஆசானை வரவேற்றுவிட்டு, அவருக்குக் காபி கலக்க உள்ளே

செல்லுவதுதான் தாமதம்... இவன் ஆசானின் கழுத்தில் கிடுக்கிப்

பிடி போட்டதுபோல அமர்ந்து, 'இன்னைக்கு எனக்கு வயத்து

வலின்னு சொல்லிட்டுப் போங்கோ!' என்று மிரட்டல் விடுப்பான்.

ஆசான் அப்போதே அம்பேல்! சித்தி தரும் காபியை அருந்திவிட்டு,

மழலை சொன்னதைச் சொல்லிவிட்டு, 'ஜூட்' விடுவார் அவர்

வீட்டுக்கு!
சித்திக்குச் சில முறை சந்தேகம் வரும், ஆசானுக்கு

'அல்சர்' தொல்லையோ என்று!



ஏழு வயதில் பள்ளியில் சேர்த்தனர், மூன்றாம் வகுப்பில். பின்னர்,

அப்பாவுடன் சென்று வேறு பள்ளியில் படிக்கத் தொடங்கினான்.

அண்ணன் அளவு கடின உழைப்புக் கிடையாது! விளையாட்டுப்

பிள்ளை. அண்ணன் தொடர்ந்து முதல் 'ரேங்க்' வாங்க, இவன்

அதைப்பற்றிக் கவலையே படமாட்டான். அவன் வாங்குவதுதான்

மார்க். அவனுடைய அப்பா பலமுறை வெளியூர் செல்லுவதால்,

சித்திதான் மார்க் ஷீட்டில் கையொப்பம் இடுவார். இவன் தன்

மிரட்டலால் அதை வாங்கிவிடுவான்! கல்லூரி சேர்ந்தபின், இன்னும்

மோசம். தனக்கென ஒரு chemistry lab வைத்திருப்பான். அதில்

சென்று hydrogen sulphide கொஞ்சம் தயாரித்து, அதை முகரச்

செய்வேன் என்று பயமுறுத்துவான்! அழுகிய முட்டை போல

'மணக்கும்' அதைக் கண்டவுடனே, சித்தியின் கையொப்பம்

கிடைத்துவிடும்.



மருத்துவப் படிப்பில் கடைசி ஆண்டு, மருத்துவமனையில் வேலை

செய்யவேண்டும். டெலிவரி வார்டில் போய், OP வார்டுக்குச்

செல்லுவதாகச் சொல்லி, OP வார்டில் டெலிவரி வார்டுக்குச்

செல்லுவதாகச் சொல்லி, ஐயா கூலாக வீட்டில் வந்து தூங்குவார்!



படிப்பு முடித்தபின், மிகப் பொறுப்புள்ள மருத்துவராக மாறியதால்,

இந்திய ஜனத்தொகை அதிகரித்தபடியே இருக்கிறது!

:baby: . . :baby: . . :baby:



 
சக்தியின் ஒரு அவதாரம்....

பெண்களை சக்தியின் வடிவாகச் சொல்லுவது வழக்கம். அந்த

சக்தியின் வடிவிலே, காளியும் அடக்கம் அல்லவா? எங்கள்

விசாகை காலனியில் அப்படி ஒரு அவதார புருஷி இருந்தார்! தினம்

சண்டை ஏதேனும் போடாவிட்டால், தூக்கம் வராது. ஒரு terrorist

கணக்காய் உலவிய அவரிடம், எல்லோரும் கொஞ்சம் தள்ளி

நின்றே பேசுவார்கள்! அவர் அதை மரியாதை என்றும் பறை

சாற்றிக்கொள்வார். தெலுங்கு அவரின் தாய் மொழி; எனவே அவரின்

* #
* # * # * # வார்த்தைகளில் ஒன்றுமே புரியாது எனக்கு. அதுவும்

வசதிதானே! என்னிடம் கொஞ்சம் கருணை உண்டு. ஏனெனில்

எங்கள் ஆபீசர் club இன் பல்சுவை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார்.

அந்த சமயம் நான் அவருக்கு ஊக்கம் தருவது வழக்கம்! அவரின்

சுபாவத்தைச் சொல்லிவிட்டேன்....



நாங்கள் சிலர் சேர்ந்துகொண்டு விசாகை டவுன் செல்லும் வழியில்

புதிய காலனி அமைத்து, வீடுகள் வாங்க முயன்றோம். என்னவரும்

அதில் ஒரு உறுப்பினர். வீடு நம்பர் கொடுக்கும் விஷயத்தில்

எல்லோரும் ஒருமனதாக 'லாட்டரி' முறையை ஏற்கச் சொல்ல,

நானும் அவரும் பக்கத்து வீட்டுக்காரிகள் ஆனோம்! என்

நண்பிகளில் 'துக்கம் விசாரிக்க' வாராதவர்களே இல்லை! அந்த

ஐயோ பாவம் விமர்சனங்களால் நானும் கொஞ்சம் ஆடித்தான்

போனேன். அவரிடம் சென்று, அவர் என் அடுத்த வீட்டில் வருவது

எனக்கு சந்தோஷமே என்று நடுக்கத்தை மறைத்துக் கொண்டு

சொன்னேன். பாவம்! அங்கு நான் தங்கிய சுமார் ஒன்பது

மாதங்களில், நல்ல விதமாகவே என்னிடம் பழகினார். சில வீடுகள்,

வாங்கியவுடன் நம்மை ஊரை விட்டுத் துரத்தும் என்பார் என்னவரின்

அன்னை. அதேபோல வீடுதான் அதுபோல! எங்களைச் சிங்காரச்

சென்னைக்குத் துரத்திவிட்டது, விரைவிலேயே!



ஒரு நாள், சண்டைக்கு ஆள் கிடைக்காத அ. வீ. காரி அம்மையார்,

தெருவில் போகும் ஏதோ சிறுவனை அழைத்து, தன் தோட்டப்

புல்லைப் பிடுங்கச் சொன்னார். அவன் தெரியாத வேலை என்றான்.

ஆனாலும் தெரிந்தவரை செய்யச் சொல்லி, உணவும் அளிப்பதாக

உறுதி அளித்தார். உணவை வேண்டிய ஏழை அவன், ஒப்புக்கொண்டு

வேலை ஆரம்பிக்க, இவரது 'அர்ச்சனையும்' ஆரம்பித்தது. பசி

வந்தால் பத்தும் பறக்கும், அல்லவா? அவன் வாய்மூடி மௌனியாக

வேலையைத் தெரிந்தவரை முடித்தான். அவனுக்கு உணவு அளித்த

பின்னும் அர்ச்சனை ஓயவில்லை! சாதத்தை இறைத்தான் என்றும்,

வாயைத் திறந்து சாப்பிடுகிறான் என்றும் பல குறைகள் சொல்லி,

பின் ஒருவழியாக அவனை அனுப்பிவைத்தார்!



சிங்காரச் சென்னை வந்தேனோ; பிழைத்தேனோ! நீண்ட நாட்கள்

அவரின் தோழியாக இருப்பது பகீரதப் பிரயத்தனமே என நான்

அறிவேனே!

:bump2:
 
சிக்கனத்தின் சிகரம்!

திடீரென எங்கள் ஊர்க் கோவில் நினைவு வருகிறது! சனிக்

கிழமைகளில், எங்கள் பாட்டு அங்கு கேட்கும். கிருஷ்ணரும்,

ஹனுமாரும் என இரு சன்னதிகள் உண்டு. ஹனுமத் ஜெயந்தி

அன்று சிறப்பு விருந்து உண்டு! ஸ்வாமி பிரசாதம் ஆனதால்,

எங்களைக் கோவிலில் சாப்பிடச் சொல்லுவார், அம்மா. அந்தக்

கோவிலில் பெண்களை சமைக்க விடமாட்டார்கள். சுத்தக்

குறைவாம்! ஆண்களே ஈரத் துண்டுடன் 'மடி' சமையல்

செய்வார்கள்.



மடிக் காரியம் சரிதான்! ஆனால், பரிமாறும்போது, நெய்யையும்,

ரசத்தையும் தவிர, மீதி எல்லா பதார்த்தங்களும், கையாலே

பரிமாறுவார்கள்! என்ன செய்வது? அது ஸ்வாமி பிரசாதம்; எனவே

நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை! நம்பிக்கைதானே

வா
ழ்க்கை!



கோவில் பூசாரி ராம ராவ் 'ஸ்பெஷல்', பஞ்சாமிர்தம் போடுவது!

பாத்திரத்திலிருந்து கையால் எடுத்து, பிழிவார் நம் இலையில்,

ஜிலேபி பிழிவதுபோல! அதுபோன்ற பரிமாறுதலை, எங்கும் காண

முடியாது! இன்னொரு ஸ்பெஷல், சுப்பராவ். துக்கிணியூண்டு நெய்

கிண்ணத்தை வைத்துக்கொண்டு, நூறு பேருக்கும் நெய் போடுவார்;

கிண்ணத்தில் முக்கால் பாகம் மீதி இருக்கும்! இது எப்படி என்று

ஆராய்ச்சி செய்தான், என் அண்ணன்! பின், தன் கண்டுபிடிப்பை

எங்களிடம் பகிர்ந்தான். அதாவது, உருக்கிய நெய்யை

உயரத்திலிருந்து ஊற்றிவிட்டு, அது இலையில் விழும் முன்பே,

மீண்டும் ஸ்பூனில் பிடித்துவிடுவாராம்; படு வேகமான action ஆக

இருப்பதால், யாருக்குமே தெரியாதாம்! இது எப்படி இருக்கு? சூப்பர்

ஐடியா அல்லவா?



எது எப்படியோ! அந்தப் பிரசாதச் சாப்பாடு, என்றும் எங்களை நல்ல

நிலையில் வைக்கிறது!


:hungry: . . . :first:
 
ஒற்றைப் பிள்ளை!

பெரிய மாமா, மாமிக்கு ஒற்றைப் பிள்ளை. அவன் சித்தியின்

விஷமக்காரக் கண்ணனுடன் சேர்ந்தால், மாமிக்கு 'டென்ஷன்'

ஏறிவிடும்! அவனும் அப்படியே ஆவான் என்ற பயம்தான்! மாமி

வேலை செய்யும் மருத்துவமனையில் இரவு shift உண்டு; வாரம்

இருமுறை. அந்த நாட்களுக்கு வேண்டி, அவன் தவம் கிடப்பான்.

ஏனெனில், அந்த விஷமத்துடன் இரவு பத்து மணிவரை கொட்டம்

அடிக்கலாம். மாமிதான் எட்டு மணிக்குப் புறப்பட்டுவிடுவாரே!

அவன் அப்படிச் செய்வான் என்று அறிந்த மாமி, அவனை

கொசுவலைக்குள் படுக்க வைத்து, சுற்றிலும் 'டக்' செய்துவிட்டுப்

போவார். அவர் போனதுதான் தாமதம்; அவன் ஒரு ஓரத்தில்

கொசுவலையைத் திறந்து, வெளியேறிவிடுவான். பின் லூட்டிதான்.

மாமாவின் முழு ஆதரவு அவனுக்கு உண்டு. என்னவானாலும், தன்

தங்கையின் பிள்ளைகளிடம்தானே விளையாடுகிறான், என்பதால்!

விளையாட்டு ஓய்ந்ததும், மாமி 'டக்' செய்தது போலவே மாமா

செய்துவிடுவார். இது மாமி அறியாத ரகசியமாகவே இருந்தது!



ஞாயிற்றுக் கிழமைகளில், அவனது எண்ணெய் ஸ்நானம்..........

திருவிழாபோல நடத்துவார், மாமி. கால் லிட்டர் நல்லெண்ணையை

குறுமிளகு இட்டுக் காய்ச்சி, அதை இளம் சூட்டுடன் உடலெங்கும்

மசாஜ் செய்து, ஊற வைத்து, ஒரு அண்டா நிறைய வெந்நீர் போட்டு,

அதில் அவனைக் குளிக்க வைப்பார்! குளித்து வந்ததும், அவன்

நிஜமாகவே சிவப்பாக இருப்பான்; அவன் மீது ஆவி பறக்கும்! 'நல்ல

வேளை! நம்ம அம்மா இப்படியெல்லாம் செய்யாமல் இருக்கிறாரே',

என்று நாங்கள் சொல்லிக்கொள்வோம்.



அவனுக்கு அளவுக்கு அதிகம் சேவை செய்து, கடன் பட

வைத்துவிட்டார் போல! இப்பொழுது, நடமாட முடியாத நிலையில்,

சுற்றத்தை விட்டு வெகு தொலைவில், வெனிசுலா நாட்டில்,

தனிமையில் தவிக்கும் மாமிக்கு, அவன்தான் முழு ஆதரவு!

மருத்துவத் துறையிலும் சரி; சுற்றத்தை அரவணைத்த விதத்திலும்

சரி; சராசரி மங்கையரை மிஞ்சி மிக்க அன்பு காட்டிய மாமி, இந்தப்

பிறவியிலேயே, அவனிடம் சேவைகளைத் திரும்பப் பெறுகின்றாரோ?


கலிகாலக் கடன்களை, அந்தந்தப் பிறவியிலேயே அடைக்க வேண்டுமோ?

அறியேன்!
:noidea:
 
கனிவின் வடிவங்கள்...

சிங்காரச் சென்னையில் மருத்துவமனைகளில் உறவினர்களைப் பார்க்கப் போகும்போது, கடித்துக் குதறும் சில

நர்ஸ்களைப் பார்த்துள்ளேன்! ரத்தச் சிவப்பையே அவர்கள் நிறமாகக் கொள்ளலாம். கண்ணும் சிவக்கும்;

வார்த்தைகளில் கனலின் சிவப்பு இருக்கும்; அவை அடிக்கும் அடியில் நம் இதயத்தில் ரத்தம் வடிந்து சிவக்கும்!



பாஸ்டனில் இரு மருத்துவமனைகளைப் பார்க்கும் பேறு(?) மூன்றாம் முறை கடல் கடந்தபோது கிடைத்தது.

கனிவின் மறு வடிவங்களாக எல்லா மருத்துவர்களும், உதவியாளர்களும்! ஒன்றும் இயலாது படுத்த நோயாளிகள்

என்னதான் செய்ய முடியும்? இயற்கை உபாதைகளைத் தீர்க்கவும், ஒருவரின் உதவியை நாடும் நிலையில் சிலர்...

கொஞ்சமும் அருவருப்பைக் காட்டாது, 'ஹனி, டார்லிங், ஸ்வீட் ஹார்ட்' என்றெல்லாம் அன்பான குரலில் அழைத்து,

உதவும் அவர்களைக் கடவுளுக்கு அடுத்தபடியாகவே நினைக்கிறேன். நாம் துயரம் அடைந்த நேரம் பார்த்து, இன்னும்

மனத்தைக் காயப்படுத்துவார் சிலர்; அவர்களுக்கு இந்த வகை மனிதர்களே மனித நேயம் கற்பிக்க வேண்டும்!

மனிதக் கழிவுகளை எடுத்துச் செல்லும்போதுகூட, சிறிதும் முகம் சுளிக்காது, எப்படி அவர்களால் சிரிக்க

முடிகிறது? 'அந்த' வேலை முடித்ததும், 'Good job' என்று பாராட்டு வேறு! இத்தனைக்கும் நர்ஸ் பணிக்கு மிகவும்

குறைந்த ஊதியமே இங்கு கிடப்பதாக எம் மகன் கூறினான்.




நாம் யாருக்காவது உதவி புரிந்தால், நமக்கு உதவ வேறு யாரையேனும் அனுப்புவான், எல்லாம் வல்ல இறைவன் ....

இது சத்தியம்.

:help: ... :angel:
 
இது சத்தியம்.

''.....[நாம் யாருக்காவது உதவி புரிந்தால், நமக்கு உதவ வேறு யாரையேனும் அனுப்புவான், எல்லாம் வல்ல இறைவன் ....

இது சத்தியம்.

உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி
 
Last edited:
கொம்பு சீவுதல்!

மதுரை வாசிகள், 'கொம்பு சீவுதல்' என்ற சொற்களை அடிக்கடி உபயோகிப்பார்கள். என்னவரிடம் அதன் அர்த்தம்

கேட்டேன்! நிஜமாக எனக்குப் புரியவில்லை; ஆனால் மாட்டின் கொம்பு சீவுவது அல்ல என்பதை மட்டும்

அனுமானித்தேன். அவர் கூறிய விளக்கம் இதோ: மனிதர்களில், மற்றவரிடம் வாக்குவாதம் செய்ய

விருப்பப்படுவோர் சிலர் இருப்பார். இவர்களின் நிறத்தை நான் அறியேன்! யோசித்துக் கண்டுபிடிக்கலாமோ

என்னமோ? அவர்களிடம், சண்டைக்கான காரணத்தை மிக நட்புடனும், ஆதங்கத்துடனும் கேட்பதுபோலப் பாவனை

செய்து ,சுற்றத்தில் சிலர் இன்னும் வெறுப்பை வளர்த்துவிடுவார்களாம்! மாட்டுக்குக் கொம்பு சீவி அதை முரடாக

மாற்றுவது, ஜல்லிக்கட்டில் வழக்கம்; அது போலத்தான் இதுவும். இவர்களும் நம்பிக் கொண்டு, இன்னும்

வாக்குவாதம் செய்ய விழைவார்களாம். மாட்டுக்குத் தன்னை வேடிக்கை பார்க்கவே, கொம்பு சீவி விடுகிறார்கள்

என்று தெரியாது; அதுபோலவே இவர்கள், மற்றவர்களின் வம்பு கேட்கும் சுபாவத்தைத் தாம் வளர்ப்பதை

அறியாமலேயே, இன்னும் சண்டையைப் பெரிதாக்குவார்களாம்! நான் நினைத்தேன், சண்டைக் கோழிகளும்

இதுபோலத்தானே உசுப்பி விடப்படுகின்றன. அவை ஒன்றை ஒன்று தாக்கி, காயப்படுத்தி, கொல்லுவதை

அறியாமல்தானே, தன் இனத்தோடு மோதுகின்றன!



இவ்வுலகில், நாம் 'கொம்பு சீவும்' மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல், நம்மைக்

காட்சிப் பொருளாக வைத்து, அவர்கள் நேரம் இனிதே போக்குவார்கள்! எச்சரிக்கை!!

:gossip: . . .
:drama:
 
Dear Raji Madam,
So wonderfully written.. I am improving in reading Tamil little faster than before.... Eyes are for seeing the world around us..but how will we use our eyes and the brain combination... to see the world in its true colour.. it is entirely in our hands.. right Madam??? Love- Anandi
 
Dear Anandi,

Thanks for your feed back. Happy to note that you are able to read Tamil faster than before!

Yes.... Making our life happy or miserable is only in our hands. My d.h always says: 'Happiness is within yourself'.

Let us be cautious when we find new friends. That is the message I tried to convey in that post. :grouphug:

Best wishes,
Raji Ram
 
புலம்பும் ஜீவன்கள்!

தான் உலகில் அவதரித்ததே (!) கஷ்டங்களை அனுபவிக்கத்தான் என்பதுபோல, சிலர் எப்போதும் புலம்புவர்!

அத்துடன் நில்லாமல், நம் கவலைகளைத் தெரியாமல் கொஞ்சம் பகிர்ந்தால், அதை பூதாகாரமாக்கி எல்லோரிடமும்

சொல்லி மகிழ்வர்! புலம்புவதற்காகவே உலவும் இவர்களை மாற்றவே முடியாது. தன் மனத்தை Depression ஐ

நோக்கித் தள்ளுவது இல்லாமல், நமக்கும் அதை வாரி வழங்க முயலுவார்கள்!


என்னுடைய சிறந்த நண்பியைக் கொடுமையான நோய் தாக்கியபோது, அவளின் உடல் நிலை மிகவும் மோசமாகி,

அழகையே இழந்துவிட்டாள். நான் சென்று அவள் மனதுக்கு Boost கொடுத்து, விரைவில் அவள் தன் பாட்டுப்

பயிற்சியை என்னிடம் தொடரலாம் என்றும் சொன்னேன். அப்போது அவள் கூறிய செய்தியால் அதிர்ந்தேன்! எங்கள்

இருவரின் இன்னொரு நண்பி வந்தபோது, அவள் அழகெல்லாம் போய்விட்டாதாகவும், எத்தனை நாள் உலகில் அவள்

இருப்பாளோ என்பதுபோலவும் பேசி அழ வைத்துவிட்டாளாம்! நான் சென்றது அவளுக்கு மன உற்சாகத்தைக்

கொடுத்ததாகச் சொல்லி மகிழ்ந்தாள்.



ஒரு கோப்பையில் பாதி அளவு டீயை நம்மிடம் கொடுத்தால், நமக்கு அரை கோப்பை டீ கிடைத்ததற்கு

மகிழவேண்டும். பாதிதானே கிடைத்தது என்று வருந்தினால், டீ குடித்த பயனும்கூடக் கிடைக்காது.



செருப்பு நன்றாகக் கிடைக்கவில்லை என்று அலட்டுபவர்கள், காலில்லாமல் நடப்பவனைக் கண்டு, தன் உயர்வை

உணரவேண்டும்! எப்போதும் ஆண்டவன் நமக்கு அளித்த நல்லவை மட்டுமே எண்ணிக் கொண்டு, அதற்கு

ஆண்டவனுக்கு நன்றி கூறிக்கொண்டு, பிறர் துயரங்களை வேறு சிலரிடம் பரப்பி அதில் மகிழாமல் எல்லோரும்

வாழ்ந்தால், உலகமே வேறு விதமாக இருக்குமே!

:decision: . . . :hail: . . . :angel:

 
Wow !!! Raji Madam... just fantastic... marvelous.. no words to explain the realistic thought you have given.. just marvelous.. if people around the world started changing them self a bit for the well being of self, the world will become a heaven.. Here all expect a change from the other person, but they won't bend a bit... change should come from with in.. Love- Anandi
 
Thank your dear Anandi. I am happy to note that you like all my posts!
I always wish to say: தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்...
:yo:
 
Very true Dear Raji Madam; there is no born writer here. Family tradition, family circumstances, or association with famous writers can help a person in selecting the same field to a certain extent. But a normal person can also make it to the dais with a flavor to write, with an empathized heart for the society and the surroundings. If one can convert one’s own imagination and feelings in to words, those will be the real masterpieces in writing. Just need a heart to understand the feelings and emotions of others and need a pair of patient ears to listen to others. The more we observe what is happening around, we can convert it into words, in a simple way. I do it this way Raji madam, I listen and observe, then try to convert them as characters and make it into stories, it is in Malayalam, it is more easy for me to write in Malayalam. The right feelings and words will flow instantly. This is just about me only, about the simple writing skill of Anandi. Your thoughts, your words touch the heart. All can understand. Writer should be reader friendly. All can read, enjoy and get the message. The day I started reading your articles, this is the first impression I got from it. It touches the heart straight. Oh! I have written so much today. It is only with you I can speak my heart out. So, I just went on. Sorry… Love- Anandi
 
Thank your dear Anandi for your reply and compliments! I started writing regularly since we visited the US in 2003!
It goes on and on... So far so good. Got a lot of friends too!
:grouphug:
 
மனிதரின் மறுபக்கம்!

மனிதர்கள் நூறு சதம் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருக்க மாட்டார்கள். வள்ளுவம் உரைப்பதே,

குணத்தையும் குற்றத்தையும் நாடி ஆராய்ந்து, அதில் மிகையைக் கொள்ளவேண்டும் என்பதுதானே! நண்பர் வட்டம்

சேர்க்கும்போது, கவனம் மிகத் தேவையே. நம்முடன் ஒரு வகையில் பழகும் சிலர், வேறு சூழலில் மிகவும்

வேறுபாடுடன் நடப்பார்கள்! ரசமாகப் பேசுபவர்கள், விரசமாகச் சிலரிடம் பேசுவார்கள்! நம்மைப் பொறுத்தவரை

நல்லவராக இருப்பதே போதும் என்று கொள்ள வேண்டும். தீ, சுடும் தன்மையுடன் இருப்பினும், அதுவும் குளிர் காய

உதவுகின்றதே! நண்பருடன் பழகுவதிலும் அதுபோன்ற கவனம் வேண்டும். நட்புடன் நாம் உதவும்போது, சிலர் நன்றி

பாராட்டவே மாட்டார்கள். அதையும் விட்டுத் தள்ளப் பழக வேண்டும்! எதிர்பார்ப்புத்தானே ஏமாற்றம் தருகின்றது?

நம் எதிர்பார்ப்புகளைக் குறைத்தாலே, ஏமாற்றமும் குறையும்.


இக்காலத்தில் வலை வழி நட்புப் பெருகுகின்றது. இந்த நட்பும் நமக்குத் தீங்கு தராதிருக்க, எச்சரிக்கை வேண்டும்!

:director:
 
மனிதரின் மறுபக்கம்!

மனிதர்கள் நூறு சதம் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருக்க மாட்டார்கள். வள்ளுவம் உரைப்பதே,

குணத்தையும் குற்றத்தையும் நாடி ஆராய்ந்து, அதில் மிகையைக் கொள்ளவேண்டும் என்பதுதானே! நண்பர் வட்டம்

சேர்க்கும்போது, கவனம் மிகத் தேவையே. நம்முடன் ஒரு வகையில் பழகும் சிலர், வேறு சூழலில் மிகவும்

வேறுபாடுடன் நடப்பார்கள்! ரசமாகப் பேசுபவர்கள், விரசமாகச் சிலரிடம் பேசுவார்கள்! நம்மைப் பொறுத்தவரை

நல்லவராக இருப்பதே போதும் என்று கொள்ள வேண்டும். தீ, சுடும் தன்மையுடன் இருப்பினும், அதுவும் குளிர் காய

உதவுகின்றதே! நண்பருடன் பழகுவதிலும் அதுபோன்ற கவனம் வேண்டும். நட்புடன் நாம் உதவும்போது, சிலர் நன்றி

பாராட்டவே மாட்டார்கள். அதையும் விட்டுத் தள்ளப் பழக வேண்டும்! எதிர்பார்ப்புத்தானே ஏமாற்றம் தருகின்றது?

நம் எதிர்பார்ப்புகளைக் குறைத்தாலே, ஏமாற்றமும் குறையும்.


இக்காலத்தில் வலை வழி நட்புப் பெருகுகின்றது. இந்த நட்பும் நமக்குத் தீங்கு தராதிருக்க, எச்சரிக்கை வேண்டும்!

:director:
[FONT=&quot]Very true Raji Madam, but sometimes we do expect same kind of affection; support and a shoulder to cry on when are depressed and alone... But, that time when we get dejection and cool response that breaks the heart. When we do something, we expect the same that's a human nature. But as you have written, I also have learned the hard lesson and decided" don't expect anything from any one." just do your duty, if you wish you give, you do and that's it. Forget it... As per their true nature they will perform. When there is no one... "God will be there always" then what is the need of a Human support" Trust in God. Love Anandi[/FONT]
 
இனிய சுமைகள்!


நம் பெற்றோர்களை நிர்ணயிப்பது நம் கையில் இல்லை! அதனால், நம் சுற்றமும் நம் பிறப்பால்

நிர்ணயிக்கப்படுகிறது. நண்பர் வட்டத்தை மட்டுமே நாம் தேர்வு செய்ய முடியும். சுற்றமும், நட்பும் வாழ்வின் முக்கிய

அங்கங்களாகும். அவற்றை விட்டு விலகவும் முடியாது!


வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், வெவ்வேறு கடமைகள் நமக்கு வரும். மிகச் சிறு வயதில், விளையாட்டைத் தவிர

வேறு ஒன்றும் அறிய வேண்டாம்! பள்ளிப் பருவம் முதல், கடமைகள் தொடங்கிவிடும். கற்பவை கற்றல் முதல்

கடமையாகும், அந்தப் பருவத்தில். அதைச் சுமையாக நினைத்து, விளையாட்டை முதன்மையாகக் கொண்டால்,

வாழ்வு என்ன ஆகும்? கல்லூரிப் படிப்பு முடியும் வரையில், படிப்புத்தான் 'முதல் மரியாதை' பெறவேண்டும்.



பணியில் அமர்ந்த பின், அதைச் சுமையாகக் கருதுவது மடமை. திருமணம் முடிந்தால், சுமைகளும் கூடிவிடும்!

வாழ்க்கைத்துணையை, பெற்றோரை, சுற்றத்தை, நட்பை என்று எல்லோரையும் தாங்கி நிற்கும் தூணாகச்

செயல்படும் நேரம் அது. நிஜமான இந்தப் பணிகளை மறந்து, இன்டர்நெட் வலை மாயத்தில் சிக்கி, வாழ்வில் சலிப்பு

அடைபவர்கள் இன்று அதிகரித்தபடி இருக்கின்றார். முன்னுரிமை வழங்கப் படவேண்டியது, நிஜ வாழ்வின்

உறவுகளே என்று அறிதல் நலம். நிஜமான சுற்றத்தை விட்டு விலகி, நிழலான பந்தத்தை நம்புவது, கானல் நீரை

உண்மையென நம்பும் பாலைவனவாசியின் நிலையே! நம் கடமைகளை மன மகிழ்வுடன் செய்தால், இனிய வாழ்வு

மலர்ந்து, தொடரும் அல்லவா?



எதற்கு முன்னுரிமை என அறிந்து, வாழ்வில் சிறப்போம்!


:decision: . . .
:first:
 
மனிதரின் மறுபக்கம்!
....................
இக்காலத்தில் வலை வழி நட்புப் பெருகுகின்றது. இந்த நட்பும் நமக்குத் தீங்கு தராதிருக்க, எச்சரிக்கை வேண்டும்!

இந்த இணையதளத்தில் நல்ல தமிழ் எழுதும் ஒருவரான நம் 'அனாமிகா' எழுதி,

'நிலாச்சாரலில்' வெளிவந்த கவிதை இது. நான் எழுதிய வரிகளுக்கு, இன்னும்

அர்த்தம் கொடுக்கும் இந்தக் கவிதை! அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

ராஜி ராம்



[TD="colspan: 2, align: left"]

[TD="class: tdarkgray11n"] தொழில்நுட்ப முன்னேற்றம்..

தொலைத்தொடர்பு பரிமாற்றம்...
பார்ப்பவரிடமெல்லாம் கைபேசி...
செல்லுமிடமெல்லாம் செல்பேசி..

அக்கம்பக்க இருக்கைகளில்
அருகமர்ந்து பயணிக்கையில்,
அன்புப் பார்வையில் துவங்கி
அரட்டைக் கச்சேரிகள் - அன்று!

அவரவர் "பேசிகளில்"
அவரவர் பேச்சுச் சத்தம்;
அடுத்திருப்பது ஒரு ஜடமோ என
அவரவர் கூடுகளின் கவசம் - இன்று!!

எண்ணற்ற இணைய தோழமைகள் -
வார்த்தைப் பரிமாறல் தொடங்கி
வாக்கியப் பரிமாறல்...
உணர்ச்சிப் பரிமாறல் என..
கண்டிப்பாய் தினந்தோறும்
கடமையாய் நிறைவேறும்

ஆனாலும்....

ஆசையோடு செய்துவைத்த
உணவு பற்றி மனைவி...
தன் ஓவியக் கிறுக்கல்களின்
பெருமிதம் பற்றி மழலை...
உளமார உன் அரைமணி
உரையாடலுக்காய் பெற்றோர்..
தொலைபேசி விசாரிப்பில்
தொடரும் நட்பும், சுற்றமும்...

வலைத் தளமா? சிலந்தி
வலைத் தளமா?

முகமறியா தோழமைக்காய்
முத்தெடுக்க நீ குதித்தாய்..
மூழ்கியதை மறந்து விட்டாய்!
கரையினையும் துறந்துவிட்டாய்!

உன் அகம் அறிந்த முகங்களின்
ஆதங்கக் கவிதை இது!
சிந்தித்துப் பாருங்கள்!
சொன்ன சேதி புலனாகும்!

ஹேமமாலினி சுந்தரம் .

[/TD]
[/TD]

[TD="class: tdarkgray8b, width: 50%, align: center"]
[/TD]




 
நிஜ வாழ்வின் ஹீரோக்கள்!


வாழ்வில் சுகங்கள் எளிதாகக் கிடைப்பது நம் நல்வினைப் பயனே! வாழ்வில் இன்னல்களை அனுபவித்து, நல்ல நிலைக்கு

உயர்பவர்கள், மிகவும் போற்றப்படவேண்டியவர்கள். தம் லட்சியத்தை அடைய, கடின உழைப்பை மட்டுமே

மூலதனமாகக் கொண்ட உழைப்பாளிகளைப் போற்றவே, இந்தப் பக்கம்.



பள்ளியில் நன்றாகப் படித்து, மார்க் நிறையப் பெற்று, நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து, மேற்படிப்பை விழைவார்கள்

பல நடுத்தரக் குடும்ப மாணவர்கள். மேல்நாட்டில், மேற்படிப்புக்கு உதவித் தொகை எல்லோருக்கும் கிடைக்குமா? உதவித்

தொகை இல்லாதவர்கள், வங்கியில் லட்சக்கணக்கில் கையிருப்புக் காட்ட வேண்டும். சுற்றமும், நட்பும் உதவ இதை

நிறைவேற்றலாம், பெற்றோர். ஆனால், இந்தியப் பணத்திற்குப் பல மடங்குகளில் இருக்கும் வெளிநாட்டுப் பணச்

செலவுகளை, எத்தனை மாதங்கள்தான் பெற்றோர் அனுப்புவர்? இங்கு வந்து படிக்கும் மாணவ மணிகள், வாழ்வின்

உயர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு, பகுதி நேர வேலைகளைக் கண்டறிந்து, விடுமுறையிலும் வேலைகளுக்கு

விண்ணப்பித்து, பெற்றோரின் சுமையைச் சிறுவயதிலேயே குறைக்கின்றார்.



இதேபோல, எளிய வேலையில், குடும்ப பாரம் காரணமாகச் சேரும் இளைஞர் பலர், மேற்படிப்பை மாலை வேளைகளில்

தொடர்ந்து, உயர்ந்த பணியில் விரைவில் அமருவர். அவர்களும் மதிப்பிற்குரிய நன்மக்களே!



இவர்களே நிஜ வாழ்வின் ஹீரோக்கள் ஆவர்! :cheer2:
 

Latest posts

Latest ads

Back
Top