இப்படியும் பெற்றோர்!
இந்தியாவிலிருந்து பெற்றோர்களை அமெரிக்க வாழ் பிள்ளைகள், தன் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள
அழைத்துக்கொள்வது வழக்கம். முதலில் அவளின் பெற்றோர்; பின்னர் அவனின் பெற்றோர். முடிந்தால், இதுவே
தொடரும், இன்னொரு முறையும்! ஆனால், அமெரிக்காவிலேயே, அதுவும் அடுத்த தெருவிலேயே வாழும் ஒரு
வினோதமான பெற்றோரைப் பற்றிச் சொல்லுகிறேன்!
அவர் ஒரு பெரிய அணு ஆராய்ச்சி நிலையத்தில் உயர் அதிகாரி. அவரின் மனைவி சரியான இல்லக் கிழத்தி!
அதாவது, வீட்டைப் பராமரித்து, வேலைக்குச் செல்லாத பெண். ஒரே மகன். தமிழ் மிக அழகாகப் பேசும் அவர்களின்
மகனுக்கு, தமிழ் 'கிலோ - இல்லை இல்லை - பவுண்டு என்ன விலை?' (குறிப்பு: அமெரிக்காவில் கணக்கில்
புலிகள் - பத்திலிருந்து எட்டைக் கழிக்க, மிஷினைத் தேடும் பல 'ராமானுஜர்'கள் - இருந்தும், இன்னும் இன்ச், அடி,
கெஜம், பர்லாங், மைல் என்றும், அவுன்ஸ், காலன் என்றும், பவுண்ட் என்றும் படுத்துகின்றார்கள்! மெட்ரிக் முறை
'சுன்னம்'. அதாவது கிடையாது!) அவனும் முனைவர் (PhD ) பட்டம் வாங்கி, அணு ஆராய்ச்சி நிலையத்திலேயே
வேலை பாக்கின்றான். I I T யில் படித்து, இரட்டை M S வாங்கிய பெண்ணை, மகனுக்குத் திருமணம் செய்து
வைத்தார்கள். எங்கள் சொந்ததில்தான்! கல்யாணமும் விநோதமாக நடந்தது. சீர் பக்ஷணம் - மூச்! நகைகள்
வேண்டாம்- இஷ்டம் இருந்தால் கொடுக்கலாம். ஆரிய சமாஜ் முறைப்படி, ஒரு மணி நேரக் கல்யாணம்; அதற்கு
மணமகன் வட இந்தியா 'குர்தா' செட் தான் அணிவான்; மணமகளுக்கும் ஆறு கெஜம் புடவைதான்; மடிசார் கட்டு
வேண்டாம். கல்யாணத்திற்கு, இரு பக்கத்தினரும், இருபத்தி ஐந்து பேருக்குமேல் வரக்கூடாது; மாலை வரவேற்புக்கு
பெண்ணின் இஷ்டப்படி எத்தனை பேரையும் அழைக்கலாம்; ஆனால் திருமணத் தம்பதியருக்கு மாலைகள்
வேண்டாம்; அவர்கள் அழைக்கும் பதினாறு சங்கீத வித்வான்கள் ஒவ்வொருவருக்கும் மாலையும், சால்வையும்
வாங்கி அணிவித்து, கௌரவிக்க வேண்டும்! எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டோம், சந்தோஷமாக.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தம்பதியருக்கு அழகிய ஆண் மகன் பிறக்க, மீண்டும் வந்தது, கண்டிஷன்!
பெற்றோர்களின் பொறுப்பே பிள்ளை வளர்ப்பு; அதனால், அவர்களே பிள்ளையை எப்படி வேண்டுமானாலும்
வளர்க்க வேண்டும். தங்களின் பொறுப்பு, தம் பிள்ளையை வளர்த்ததுடன் முடிந்தது! இதுதான் அவர்களின்
கொள்கையாம். இந்தப் பெண்ணின் அம்மா, மிக உடல் நலம் குன்றி இருப்பவர். பெண்ணின் அப்பாதான்
குழந்தைபோல அவளைப் பார்த்துக் கொள்கிறார். அவர்களால் அமெரிக்க செல்வது பற்றி நினைக்கவே முடியாது!
அதனால், குழந்தை Day care இல் விட்டு இருவரும் பணிக்குச் செல்கிறார்கள்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியும், இல்லத்தரசியும் இவ்வாறு செய்வது எனக்கு மிகவும் அதிசயமாக
இருக்கிறது! இப்படியும் பெற்றோரா? :ballchain: