• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

soa என்று type செய்தால் 'ஸொஅ' என்று வரும்
அதில் இறுதி 'அ' வை அழித்துவிட வேண்டும்.
மிக்க நன்றி சகோதரி! :)

மீண்டும் முயன்றபோது.............
soe என்று தட்டெழுதினால் '
ஸொஎ' என வருகின்றது! அதையும் உபயோகிக்கலாம்! :decision: . . :thumb:
 
Last edited:

டியூப் லைட்டும், பல்பும்!


இது என்ன புதுமையான தலைப்பு என்ற யோசனையா? சொல்லுகிறேன்.



என் இசை குருநாதர் மூன்று வித அறிவுகள் பற்றிக் கூறுவார். முதலாவது, கற்பூர புத்தி. சொன்னவுடன் புரிந்துகொள்ளும்

அறிவு; இரண்டாவது, விறகு புத்தி. பற்றிக்கொள்ளக் கொஞ்சம் முயலவேண்டும். அதுவே, கொஞ்சம் முயன்றால்

தெரிந்துகொள்ளும் அறிவு; மூன்றாவது, வாழைமட்டை புத்தி. எத்தனை பற்றவைக்க முயன்றாலும் தோல்விதான்!

இரண்டாவது, மூன்றாவது வகைகளுக்குச் செல்லப் பெயர்கள் வைத்துள்ளார், மாணவ மணிகள்! கொஞ்ச நேரம்

மின்னிவிட்டு எரியும் ட்யூப்லைட் இரண்டாம் வகையாம்; போட்டு வெகு நேரம் ஆன பின், மெதுவாக வெளிச்சம் தரும்

சோடியம் பல்ப், மூன்றாம் வகையாம். ஏதோ, கொஞ்ச நேரம் சென்றால் எரியும் என்றேனும் ஒப்புக்கொள்கிறார்களே!

அதுவரை சந்தோஷம்.



சில சங்கங்களில் கூடும் நண்பர்களில், சிலர் எப்போதும் நக்கல் செய்தபடியே இருப்பார்கள். சில
பல்புகளுக்குத் தன்னைச்

சீண்டினாலும் தெரியாது; மீண்டும் மீண்டும் அந்தச் சீண்டுபவரிடமே சென்று மாட்டிக்கொண்டு,
வமானப்படுவார்கள்.

மற்ற நண்பர்களுக்குத் தெரிவது அவருக்கத் தெரியாமலே போவது வினோதமாக இருக்கும். மிகவும் பரிதாபமான நிலையே

அது. அது போன்ற சமயங்களில், ஏதேனும் ஒரு நண்பரேனும் அவரைத் தனியே அழைத்துச் சென்று நிலைமையைப்

புரியவைப்பது நலம் தரும். எல்லோரின் எதிரிலும் சொல்லி அவரை மேலும் அவமானப்படவைப்பதைத் தவிர்க்க

வேண்டும்.



நான் சில தடவைகள், சில நண்பர்களைக் காப்பாற்றியுள்ளேன்!
:thumb:


 

இடி ராஜாக்களும் ராணிகளும்!



இவர்களைக் கண்டு இவர்களின் கொடுமைகளைத் தாங்க விருப்பமா? வைகுண்ட ஏகாதசி முடிந்தவுடன் வரும்

சனிக்கிழமை திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசியுங்கள்! க்யூவில் நிற்கும்போது, அது நகராமல் இருக்கும் சமயமும்,

இடித்துக் கொண்டே நிற்பது இவர்களின் வழக்கம். ஒரு நூலிழை தள்ளி நின்றால் பிடிக்காதோ என்னவோ! முதுகில் இருமித்

தள்ளுவார்கள் சிலர், வாயை மறைக்கக் கைக்குட்டையே வைக்காமல்! அதிர்வேட்டுத் தும்மல் போட்டு, நம் தலையில்

'ஸ்ப்ரே' செய்வார்கள் சிலர். தன் கைத்தைடியை
க் குத்திக் குத்திச் சத்தம் எழுப்பி, நம் காலைப் பதம் பார்க்க விழைவார்கள்

சிலர். என் பின்னே நின்ற பெண்மணி (!) வித்தியாசமானவள்! தன் இடது கையால் என் இடுப்பை உந்திக்கொண்டே, அவள்

போலீஸ் தொப்பையால் என்னை இடித்துத் தள்ளினாள்! நான் கார்ட்டூனில் வருவதுபோல் வில் போல முன்னே

வளைந்தால், அந்த இடத்தையும் தன் தொப்பையால் நிரப்ப முயன்றாள்! இத்தனையும் சகித்து நின்றபோது, தன் காலில்

வளர்த்தி வைத்திருந்த ஈட்டி போன்ற நகங்களால், என் குதிகால்களைப் பதம் பார்த்தாள்! இனி சமாளிப்பதே கடினமென்ற

நிலை எனக்கு சில நொடிகளிலேயே வந்துவிட, அவளை முன்னே செல்லச் சொன்னேன். முன்னேற அவளின் 'டெக்னிக்'

இதுதான் போல! அடுத்து வந்த மொட்டை மனிதன், தன் கைகளைத் தூக்கி அருகில் உள்ள கம்பியில் வைத்து, துர்மணம்

பரப்பி, மூக்கைப் பொத்திக்கொள்ள வைத்தான்! நரகத்தைத் தாண்டித்தான் வைகுண்டம் செல்ல வேண்டுமோ என்னவோ!



ஆறு அடிக்கு மேல் உயரம்; நூறு கிலோவுக்கும் மேல் எடை என்று நூற்றுக் கணக்கில் இடி ராஜாக்கள், கொஞ்சம் குறைந்த

அளவுகளில் இடி ராணிகள் கர்ப்பக் கிரஹத்து நுழை வாயிலில் எங்களை இடித்து நசுக்க, அந்த ஏழுமலையானின் தயவால்

உடற் சேதம் இல்லாமல் தரிசனம் கண்டு வந்தோம்! நல்ல வேளையாக இறைவனின் அருகாமை வரை பக்த கோடிகளை

விடவில்லை! இல்லையென்றால், அங்கு இருக்கும் 'செக்யூரிட்டி' மனித, மனிதிகளின் உந்தலையும் எங்கள் நொந்த உடம்பு

அனுபவித்திருக்கும். ஆண்டவன் தயவால் தப்பித்தோம்!



இடிக்காமல் செல்லும் வழக்கத்தை என்றேனும் நம்மவர்கள் கற்றுக் கொள்ளுவார்களா? மிகவும் சந்தேகமே. ஏனென்றால், காலி பஸ் வந்தால்கூட, நிற்கும் ஐந்து பேர்கள் இடித்துக் கொண்டுதானே ஏறுவதுதானே வழக்கம்! :bump2:
 
God EXISTS since we come back home safe and sound in one piece-without catching the umpteen infections we are exposed to while in the queue.
Thank God for HIS grace! :hail: :hail:
 
God EXISTS since we come back home safe and sound in one piece-without catching the umpteen infections we are exposed to while in the queue. Thank God for HIS grace! :hail: :hail:[/QUOTE}

True... It is God's grace that safeguards us from these 'idi rAjAs and rANis'. My sister-in-law who uses a walking stick,

has had dharshan of Lord Parthasarathy at Triplicane on Vaikunta ekAdhasi day, braving the long Q for nearly five hours.

She came back safe and sound too! :thumb:
 

எல்லாம் அறிந்தவர் போல....



சிலர் எல்லாம் அறிந்த மேதாவி போல நமக்கு உதவ வருவார்கள்; அவர்களின் உதவி கிடைக்கும்போதுதான், நாம்

அவர்களின் நிஜமான இயலாமையை அறிவோம்!



'திருப்பதியில் பிறந்து வளர்ந்தவன் நான்', என்று பெருமையாகச் 'செப்பிக்'கொண்டு வந்தார், என்னவரின் முன்நாள் நண்பர்!

குட்டிக் கண்ணம்மாவின் முடி காணிக்கை தரும்போது, தானே வந்து முன் நின்று உதவுவதாக வாக்களித்தார். அவர் பேச்சு

வாக்கில், தன் பேரனுக்கு முடி இறக்கியபோது, தரிசனம் செய்ய முடியவில்லை என்று கூறியதுமே, எனக்கு சந்தேகப் பேய்

வந்து தொற்றிக் கொண்டது!



எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன் என்று சொன்னவர், எங்களுடன் பயணம் செய்தார். 'தரிசன டிக்கட் வாங்கினீர்களா?'

எனக் கேட்டால், 'அங்கே சென்று வாங்கலாம்', என்றார். 'அறைகள் பதிவு ஆகிவிட்டதா?', எனக் கேட்டால், 'அங்கே சென்று

பதிவு செய்யலாமே', என்றார். போகும் வழியில், சுங்க வரி செலுத்தும் இடத்தைக் கூட, ஒரு டாக்சி டிரைவரிடம் கேட்க

வேண்டி வந்தது! ஆஹா.... இந்த மனிதருக்கு ஒன்றுமே தெரியாது போல இருக்கிறதே என்று மனம் சஞ்சலப்பட்டது,

எனக்கு!
ஒரு வழியாகத் திருப்பதி வந்து சேர்ந்தோம்.



தன் அக்கா மகனின் கடை என்று கூறி ஒரு பெரிய கடையில் நிறுத்தி, சுட்டிக் காப்பி வாங்கித் தந்தபின், தன் மருமகனையும்

வண்டியில் ஏற்றிக் கொண்டு, திருமலை நோக்கிப் பயணம் செய்யச் சொன்னார். நல்ல வேளை! அந்தப் பையனின் தயவால்

காஞ்சி மடத்து விருந்தினர் மாளிகையில் தங்கும் அறைகள் கிடைத்தன. அதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. மதியம்

ஒரு மணிக்கு, சிங்காரச் சென்னயிலிருந்து புறப்பட்டவர்கள், இரவு எட்டு மணிக்கு அறைகளை அடைந்தோம்!



சிற்றுண்டி உண்ட பின், தரிசனம் செய்ய என்னையும், என்னவரையும் அழைத்துக் கொண்டு சென்றவர், வழியில் கார்கள் பல

நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்து, கூட்டம் அதிகம் என்று சொல்லி, மீண்டும் அறைக்கே அழைத்து வந்தார்! தரிசனம்

நாளை செய்யலாமே என்றார்.



மறுநாள் முடி இறக்கும் வேண்டுதல் நிறைவேறிய பின், மகனையும், பெண்ணரசியையும் N R I எனச் சிறப்புக் Q வில்

சேர்த்தான், அந்த அக்கா மகன். குழந்தையுடன் வந்தவர்கள் என்று, பெண்ணரசியின் அம்மாவும், தம்பியும் குழந்தையுடன்

சிறப்புக் Q வில் சென்றனர். நானும், என்னவரும், பெண்ணரசியின் அப்பாவும், பாட்டியும், அந்த நண்பரும் என்று ஐவர்

சீனியர் Q வில் செல்ல எனக்கு வயது போதாததால், முன்னூறு ரூபாய் வரிசையில் நின்று, நொந்து, நூலாகிப் போய், ஏழு

மணி நேரம் அல்லாடி, தரிசனம் முடித்தோம்! அந்த நண்பரை ஒன்றும் சொல்லவும் வழியில்லையே! அந்தத்

திருமலையானின் சக்தியால், முழு உருவமாக, உடல் சேதம் இல்லாது வெளி வந்தோம்.



இந்த எல்லாம் அறிந்தவர் போல 'போஸ்' கொடுப்பவர்கள், இன்னும் எத்தனை பேர் இந்தப் பரந்த உலகிலே! :noidea:



 
Last edited:

எல்லா நாட்டிலும் இருப்பார்கள்!



என்னவரின் தூய பண்பை முதலாக்கி, ஏமாற்றிய மரத்தச்சன் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்! இதோ, எங்கள்

மகன் இரக்க சுபாவத்தால் ஏமாந்த சம்பவம்...



ஃபிலடெல்பியா சென்று திரும்பும் வழி. ஒரு உணவகத்தில் நிறுத்தினோம் இளைப்பாறவும், உண்ணவும்.

வெளியேறும் சமயத்தில், பதட்டமாக ஒரு பெண் (எந்த நாட்டினளோ, தெரியவில்லை) மகனை நோக்கி வந்தாள்.

அருகில் நிற்கும் பெண்ணரசியின் பக்கமே திரும்பாமல், மகனிடமே பேசினாள். தன் கார் ரிப்பேர் ஆகி

நின்றுவிட்டதாகவும், போன் செய்து கேட்டதில், அறுபது டாலர்கள் செலவாகும் என்று ஒரு மெக்கானிக்

கூறியதாகவும், தன்னிடம் இருபது டாலர்களே உள்ளதாகவும் சொல்லி, மீதிப் பணத்தைத் தந்து உதவுமாறு

கேட்டாள்; மகனின் விலாசத்திற்கு, செக்கை மறுநாளே அனுப்புவதாக வாக்களித்தாள். ஒரு நொடி கூட

யோசிக்காமல், உதவும் மனப்பான்மை கொண்ட மகன், பணத்தையும், தன் விசிடிங் கார்டையும் கொடுத்தான்.

இந்தக் காட்சியை நானும், என்னவரும் காரிலிருந்துதான் பார்த்தோம்.



எங்கள் கார் புறப்பட்டதும், நின்றுபோனதாகச் சொன்ன அவளின் காரில் ஏறி, அவள் வேகமாகச் சென்றுவிட்டாள்!

அப்போதே தெரிந்தது அவள் ஒரு ஏமாற்றுக்காரி என்று! அனாலும், நீண்ட தூரம் செல்ல முடியாத நிலைமைதானோ

என்னவோ என்று மகன் சமாதனம் சொன்னான். பணம் வந்துவிடும் என்றான். ஆனால், இன்றுவரை அது வரவே

இல்லை! நாற்பது டாலர் என்பது அந்த ஊரில் அதிகப் பணம்தான்!



பெண்ணரசியின் அனுமதியின்றி இனி தானம் செய்யாதே என்று கூறினேன்! இதற்குத்தான் நம்மவர்கள் ஒரு

சொட்டு நீர் விட்டு, தானம் செய்யும்
அதிகாரத்தை, விசேஷங்களின்போது, பெண்களிடம் தருகின்றார்களோ? :thumb:

 

இன்றைய இளைஞர்!


எங்கள் இனிய இல்லத்திற்கு திடீரென என்னவரின் தம்பியின் மகன் வந்தான். பெற்றோர் கிராமத்தில் இருப்பதால்,

தானே சமைத்துச் சாப்பிடுகிறான். இரவு உணவை எங்களுடன் உண்ணுமாறு கூறி, உடனே ஏற்பாடும் செய்தேன்.

அந்த நேரம், ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வளைகுடா நாட்டில் வசிக்கும் என்னவரின் தங்கை மகள்

பேசினாள். அன்பான அக்காவிடம் நிறைய நிமிடங்கள் பேசியவன், எங்கள் இல்லத்தில் அவன் இருப்பதைச்

சொல்லவே இல்லை! என்னவரிடம் தன் செல் போனைக் கொடுத்துப் பேசச் சொல்லுவான் என்று நான் நினைத்தேன்;

ஆனால் அது நடக்கவே இல்லை! இதனிடையில் இணைப்பும் துண்டித்தது. மீண்டும் அவள் அழைத்து, தன் மகளிடம்

அவனைப் பேசச் சொன்னாள். இதுபோல அரை மணி நேரம் சென்றுவிட, இனிய இரவு அவர்களுக்குச் சொல்லி,

இணைப்பைத் துண்டித்தான்! எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். இதுவே எனக்கு வந்த தொலைபேசி அழைப்பாக

இருந்தால், இல்லத்தில் உள்ள அனைவரிடமும் பேசச் சொல்லி இருப்பேன். இந்தத் தலைமுறை மிகவும்

மாறித்தான் போய்விட்டது!



எல்லோரும் ஒன்றுகூடிப் பேசி மகிழ்வதே சிறப்பு என்பதை இந்தத் தலைமுறை உணருமா? :noidea:


 
Raji, this world is more selfish than before, one thing I have learned in life is never give too much power to anyone and also never expect anyone to treat you the way you treat them, you may be the nicest person, but the world does not perceive it like that.. Swartham is the only manthra today.. I have seen it time and time again.. I know our children may be an exception.. Like your son who is generous, don't worry, just be proud of his wonderful quality, I am sure with that experience, he will learn..
 
dear raji,

re your post #333, thank you.

i will watch for this one now. otherwise i too would have been taken, like your son.

if mrs K was around, not a single penny would have changed hands, for the lady is sharp.

yes, there are all types of swindlers in this world.

btw, i have a few shares in taj mahal, which is going cheap...would you be interested ?

:)
 
......... if mrs K was around, not a single penny would have changed hands, for the lady is sharp.
மாமிகள் ஜாக்கிரதையாக இருந்தால் என்ன சொல்லுவார்கள் தெரியுமா சார்?

மாமா ரொம்ப ரொம்ப நல்லவர்; மாமிதான்............. !! I have heard this comment several times. :)
 
very true raji. mrs K always accuses me of getting the 'good name' with the kids and others, while she is portrayed as the bitch.

she says this is because, i often keep quiet, while she openly expresses herself :)

another instance where silence is golden eh?

மாமிகள் ஜாக்கிரதையாக இருந்தால் என்ன சொல்லுவார்கள் தெரியுமா சார்?

மாமா ரொம்ப ரொம்ப நல்லவர்; மாமிதான்............. !! I have heard this comment several times. :)
 

என்றும் மதிப்பு!


சாக்லேட் தந்து, ஒரு மாத வகுப்புக்களை ஓசியில் பெற்றுச் சென்றாள் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெறப்

படிக்கும் என் மாணவி! ஆனால் அதற்கு நேர் மாறானவள் என்னுடைய முதல் மாணவி. மென்மையான பேச்சு;

சிரித்த முகம்; பணிவு மாறாத குணம். இவள் என்னிடம் வீணை பயிலத்தான் வந்தாள். கல்லூரிப் படிப்பை

முடித்துவிட்டதால், இனி திருமணம் ஏற்பாடுகள் ஆரம்பம் ஆகும் என்று எண்ணிய நான், அவளின் இனிய குரலைக்

கேட்டதும், வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ளச் சொன்னேன். அவள்தான் வாய்பாட்டுக் கற்பிக்கும் ஆர்வத்தையும்

என்னுள் தூண்டியவள் எனலாம். கேட்டவுடன் பாடிவிடும் திறமை இருந்ததாலும், நல்ல ஞாபக சக்தி இருந்ததாலும்,

ஸ்வர ஞானம் நான் எதிர்பார்த்த அளவு இல்லாவிடினும், வேகமாகக் கற்றுக்கொண்டாள். மூன்று ஆண்டுகளில்

திருமணம் ஆகி, சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டாள். நிறைய மாணவிகளுக்கு சங்கீதம் கற்பிக்கிறாள். இந்த

இருபது ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டு விடுமுறையில் சென்னைக்கு வரும்போதும், சிறப்புப் பரிசுகள் வாங்கி

வருவாள். புதிய பாட்டுக்கள் கற்றுக்கொண்டு, இரட்டிப்பு Fees தருவாள். சிங்கப்பூரில் நிறையக் கிடைக்கிறது

என்பாள்.



இன்று வரை அன்பு மாறாமல் இருக்கும் அவள், என் முதல் மாணவி மட்டுமல்ல; முதன்மை குணமுள்ள
மாணவியும்தான்! :first:

 
Dear raji,

This reminded of another thread, maybe in this forum or maybe in the Hindu.

During the recent music season, there was gripe among some, about the new set of dance teachers. Apparently these are girls, still in their twenties, having had an arangetram, and who feel qualified enough to teach the art to others. The gripe among established teachers, was that these new graduates, were cannibalizing their potential clients and hence livelihood. Though no one could come up with any suggestion to prevent this.

Your student in singpo reminds of this one, and I am not casting aspirations on her tutoring skills or music knowledge. That is not my aim here.

Mine is more an observation, that the norm now appears to be, that if I know levels 1 to 4, I should also be able to teach the same to others, while learning level 5 .. or something along those lines. Such were not, I think, about 40 years ago, when my sister’s violin teacher, komalavalli srinivasan, who though took lessons, was already an established AIR grade vidwan and a violinist of some repute. One excelled, before they taught. Though not always..and here is a story to highlight that.

My high school headmaster also subbed as the 3rd language French teacher. He used to literally ‘mug’ a portion of the lesson for the day, to last 20 minutes. Bang on the dot of the 20th minute, the peon used to come ostensibly for HM to answer an important phone call. HM used to come 10 minutes later, all mugged up for the remaining of the class. It was not before long, that we found out this trick, and caused us no amount of glee, to see, this ‘instant’ learning and ‘instant’ transfer of just acquired knowledge. :)

Just some disconnected thoughts. That’s all.

Thank you.
 
Dear Sir,

What you have observed is true. My Guru used to mention humorously about this type of teaching. You must be aware of the

initial training in Carnatic music (viz) SaraLi varisai, Janta varisai etc. Now read this conversation as told by my Guru:

மாணவன்: குருவே! என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ!


குரு: எதுக்கப்பா?

மாணவன்: நான் சங்கீதம் கற்றுத்தரப் போறேன்!

குரு: நீ இப்பத்தானே சரளி வரிசை முடிச்சு, ஜண்ட வரிசைக்கு வந்திருக்கே!

மாணவன்: ஜண்ட வரிசைக்கு வந்தூட்டேனே! அதனால சரளி வரிசை சொல்லித் தரப்போறேன்!

 
Dear Sir,

What you have observed is true. My Guru used to mention humorously about this type of teaching. You must be aware of the

initial training in Carnatic music (viz) SaraLi varisai, Janta varisai etc. Now read this conversation as told by my Guru:

மாணவன்: குருவே! என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ!


குரு: எதுக்கப்பா?

மாணவன்: நான் சங்கீதம் கற்றுத்தரப் போறேன்!

குரு: நீ இப்பத்தானே சரளி வரிசை முடிச்சு, ஜண்ட வரிசைக்கு வந்திருக்கே!

மாணவன்: ஜண்ட வரிசைக்கு வந்தூட்டேனே! அதனால சரளி வரிசை சொல்லித் தரப்போறேன்!


dear raji,

i have both sides in my family.

i have name brand artiste cousins, who would be scraping the bowls, had it not been for family support (financially).

and then there are girls still in their twenties, who have dance students numbering about 50+. this particular girl, had her arangetram at 19, spent two more years learning.

she lives in a mid middle class neighbourhood bordering mylapore, and spread word in her area, that dance classes started at 10 (!) rupees a month. she is very smart, and increases the tuition by the month till about 150 is reached. those not interested drop out, and others are hooked. great business model.

such that, she has 4 asisstants, and to top it, for her student's arangetram, she called her old dance teacher to preside :) the whole family admires her entrepreneurship, but judging from the outside gossips, there is lots of envy.
 

தலை இருக்க வால் ஆடாது!



எல்லோரும் அடிக்கடி சொல்லும் சொற்களே இவை! இது நிஜம்தான். அந்தத் தலையும் பலம் மிக்கதாக இருந்தால்,

பிரச்சனைகளே தலை தூக்காது. ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.



என் தமக்கையர் இருவருக்கும், எங்கள் இல்லத்திலேயேதான் திருமணம் நடந்தது. எனக்குப் பார்த்த இடத்தில்,

பிள்ளை வீட்டார் நிறையப்பேர் இருந்ததால், புதிதாகக் கட்டியிருந்த இரு திருமண மண்டபங்களையும் அப்பா

ஏற்பாடு செய்துவிட்டார். கொஞ்சம் சின்னது, மணமகன் வீட்டார் தங்குவதற்கு; பெரியது திருமணம் நடத்துவதற்கு.

இரு மண்டபங்களுக்கும் இடையே அரைக் கிலோமீட்டர் தூரம் இருந்ததால், இரண்டு கார்களையும் ஏற்பாடு

செய்திருந்தார், பிள்ளை வீட்டாரை அழைத்துச் செல்ல. பிள்ளை வீட்டாரின் 'விரதம்', சின்ன மண்டபத்தில்

முடிந்தபின், பெரிய மண்டபத்துக்கு அழைத்து வர, கார்கள் தயாராக இருக்க, ஒரு முக்கிய நபரை, வண்டி ஓட்டுனர்,

'வந்து வண்டிலே ஏற மாட்டீர்களா?' என்று குரலை உயர்த்திக் கேட்டுவிட, வந்தது அந்த நபருக்குக் கோபம்! துர்வாச

முனி போலக் கோபத்தில் குதித்து, 'மதிப்புக் காட்டாத டிரைவர் உள்ள வீட்டில் சாப்பிட மாட்டேன்', என்று ரகளை

செய்ய ஆரம்பிக்க, என்னவரின் தந்தை சொன்னார், ஒரே வாக்கியம்! 'சாப்பிட இஷ்டம் இல்லாதவர்கள், ஊருக்குத்

திரும்பிப் போகலாம்!' தலை வலுவானதாக இருந்ததால், வால் அடங்கிப் போனது. பின் எந்த விதப் பிரச்சனையும்

இல்லாமல், திருமணம் நடந்தது!



சில ஆண்டுகள், என்னிடம், 'கல்யாணத்தைத் தவிர உங்கள் ஊரில் எல்லாம் நன்றாக இருந்தது!' என்று நக்கலா
ச்

சொல்லி வந்த அந்த நபர், சிங்காரச் சென்னை வந்த பின், நான் அவர்களுக்குச் செய்த உதவிகளைப் பார்த்தபின்,

மிகவும் மதிப்புக் காட்ட ஆரம்பித்துவிட்டார்!



நல்ல பெயர் எடுக்க எத்தனை ஆண்டுகள் ஆகின்றன, தெரியுமா? :angel:


 
Dear madam,

very nice experience told in a form of good story. I hope this may fetch you some prize If the same is published in Ananda vikatan or kumudam else it can be converted in to a tamil tv serial. Try..

regards,

S. Ramanathan

S. Ramanathan
 
Dear Sir,

The incidents written here have happened in my life. Just wish to share it with my forum friends.

Getting into media needs lot of recommendations! Thanks for your feed back.

Regards..........
 
புதிய உதவியாளர்கள்!

'வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்', என்ற வாசகமே உணர்த்தும், இவை இரண்டும் செய்வது எவ்வளவு

கடினம் என்று! முன் நாளில், என்னதான் சண்டையும் சச்சரவும் இருந்தாலும், ஒரு கல்யாணம் வந்துவிட்டால், எங்கிருந்தோ

சொந்த பந்தம் வந்து கூடும், உதவி செய்வதற்கு. நட்புடன் உள்ளூர் மாமிகள் பலர், முறுக்கு சுற்றவும், மற்ற பக்ஷணங்கள்

செய்யவும், ஓடி வந்து உதவுவார்கள். வீட்டின் பின் கட்டில், புதிய கொடி அடுப்பு வைத்து, அதில் சீர் பக்ஷணங்கள்

செய்யப்படும். முறுக்கில், மாப்பிள்ளை பெண்ணின் பெயர்களைக் கூட எழுதுவார்கள்! ஆனால், தீப்பெட்டி போல,

அபார்ட்மென்ட்டில் வசிக்கும் இந்தக் காலத்தில், என்ன செய்ய முடியும்? நாலு பேர் வந்தாலும், திணறும் நிலைதான் இன்று!

இதனால்தான் 'புதிய உதவியாளர்கள்' உருவெடுத்தார்கள். 'கல்யாணக் காண்ட்ராக்டர்கள்!' A to Z நாங்கள் செய்வோம் என்று

கூறுவார்கள். இது நிஜம்தான்.



கல்யாணச் சடங்குகள் அனைத்தும் இவர்களுக்கு அத்துப்படி! மங்கல வாத்தியம் ஏற்பாடு முதல், திருமண வைபவத்திற்கு

வேண்டிய அனைத்தையும் இவர்களே கவனிப்பார்கள். பணக் கத்தை மட்டும் தயார் செய்தால் போதும்! காலையில் மங்கல

ஸ்நானத்திற்கு எண்ணெய், ஷாம்பூ தருவது முதல், பக்ஷணம் கொடுத்து உறவினர்களை அனுப்பும் வரை, தேவையான

எல்லாமே, கவலைப்படாமல் பெண் விட்டார் முடிக்கலாம்.



மேடை மீது அதிகம் உறவினர் செல்வதில்லை; 'கௌரி கல்யாண வைபோகமே' என்றுகூடப் பாடுவதில்லை! எல்லாமே

இயந்திர கதியில் செய்யப்படுகின்றன. நேற்று நான் சென்ற திருமணத்தில், பூ + அக்ஷதையைக் குட்டிச் சுருக்குப் பையில்

இட்டு, அனைவருக்கும் தந்தார்கள்! அதற்கு எத்தனை பணம் வசூலிக்கப்பட்டதோ, அறியேன்! வரவேற்பில், இன்ஸ்டன்ட்

மெஹந்தி, Portrait வரைதல் என்ற கவுன்ட்டர்கள் இன்றைய ஃபாஷன்! இதுபோலப் புதிய சேர்க்கைகளால், இருபது லக்ஷங்கள்

செலவு என்பது சர்வ சகஜமாகப் போய்விட்டது.



பெற்றோரின் கஷ்டங்களை நினைத்தேனும், புதுமணத் தம்பதியர், சண்டை போடாமல், இணைந்து இனிது வாழ்ந்தால்,
எல்லோருக்கும் நலமே! :peace:
 
இந்த இணையதளத்தில் ஏற்பட்ட சில 'சுனாமி'களின் விளைவு.... திரு. குஞ்சுப்பு அவர்கள் விலகிவிட்டார்.

என் எழுத்துக்களை ஊக்குவித்து, வாழ்த்தும் நண்பர்களில் ஒருவர் அவர்; மீண்டும் வருகை தந்தால், மகிழ்வேன்.

என் அனுபவங்களுக்கு இணையாக, அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களைத் தவறாமல் எழுதியவரும் அவரே!

அவருக்கு என் நன்றி உரித்தாகுக. :)
 
இந்தியப் பண்பாடு.

அமெரிக்காவுக்குச் சென்ற பின், ஜாதி, மத, மொழி வேறுபாடுகளை மீறி, இந்தியரின் ஒற்றுமை இருக்கின்றது.

மகன் வீடு வாங்கிய காலனியில், இரண்டு இந்தியக் குடும்பங்கள் உள்ளன. அடுத்த வீட்டில் பஞ்சாபியர்; அடுத்த

தெருவில் குஜராத்தியர். இரு குடும்ப நபர்களும், மகனின் குடும்பத்துடன் மிகுந்த நட்புப் பாராட்டுவர். சில சமயம்,

பேச்சுக் கச்சேரிகள், அவர்கள் ஹிந்தியில் பேச, நாங்கள் ஆங்கிலத்தில் பேச என்று மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

எந்த ஸ்பெஷல் உணவு தயாரித்தாலும், பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளுவார்கள். நம்முடைய வத்தக் குழம்பும்,

சாம்பாரும்தான் அவர்களின் Favorite ஆகும். பெண்ணரசி அடிக்கடி அவர்களுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பாள்.

அவர்களும், இவளைத் தங்கள் மகள் போலவே பாவித்து, அன்புடன் அவர்களின் ஸ்பெஷல்களைத் தருவார்கள்.



இந்தியாவில் வாழும், 'கண்டுகொள்ளாமல்' இருக்கும் சில உடன் பிறப்புக்கள், இவர்களைப் பார்த்து, அன்பு செலுத்தக்
கற்றுக்கொள்ளலாம்!
:grouphug:
 

Latest posts

Latest ads

Back
Top