Raji Ram
Active member
பிள்ளை மனம் கல்லு!
இது எத்தனை உண்மையான வாசகம்! பெற்றோரின் அனுமதியின்றி, தனக்குப் பிடித்தவனை மணந்து வெளிநாடு
சென்றுவிட்டாள், ஒரு சாதுபோலத் தோற்றம் தரும் மங்கை. அவளின் அப்பா கோபத்தின் உச்சியிலிருந்து
இறங்காமல் இருக்க, அம்மாவோ பரிதவித்தாள். ஒரு முறை சென்று பெண்ணைப் பார்த்து வந்தால்தான் நிம்மதி
என்று நினைத்தாள். ஆனால், போகக் கணவனின் அனுமதி கிடைக்காது என்பது சர்வ நிச்சயம்! பேசா மடந்தையாக,
ஒரு விஷயமும் சொல்லாத மகளைக் காண, தன் மகனை அனுப்பத் தீர்மானித்தாள். அன்புடன், அவளுக்குப் பிடித்த
சில பொருட்களுடன், தங்கையைக் காண வெளி நாடு சென்றான், பெறும் பணச் செலவு செய்த மகன். உறவினர்
வீட்டில் தங்கிக் கொண்டு, மறுநாள் தங்கையைச் சந்திக்கச் சென்றான்.
திடீரெனத் தன் அண்ணனைக் கண்ட தங்கைக்கு, ஒரு சில நொடிகள் அவனை அடையாளம் தெரியவில்லை! அதன்
பின், சிரித்தபடி அருகில் வந்து பேசி, அவன் தந்த பொருட்களையும் வாங்கிக் கொண்டாள். ஆனால், தப்பித்
தவறிக்கூட, அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்கவே இல்லை!
இதைத்தான் கல் மனம் என்று சொல்லுகின்றாரோ? hwell: