• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

உலகம் சிறியது!

உலகம் சிறியது என்பது அடிக்கடி எல்லோராலும் சொல்லப்படுவதே! நான் சில தடவைகள்

இதை உணர்ந்துள்ளேன்.


நேற்று ஒரு அனுபவம் கிடைத்தது! ஒரு பூஜைக்காக, என் உறவினர் வீட்டுக்குச்

சென்றபோது, அங்கு ஒரு பெண் (நாற்பது வயது போலத் தோற்றம்) எல்லோரிடமும்

சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தாள். ஒரு மாமியிடம் தன் ஊர் மதுரை என்றவுடன்,

எனக்கு ஆர்வம் வந்தது. என்னவரின் மாவட்டம் ஆயிற்றே! ஏற்கனவே அவளிடம் நான்

பேசி இருந்தாலும், மீண்டும் சென்று, மதுரை நகரமா அல்லது ஏதேனும் சுற்றியுள்ள ஊரா,

என்று விசாரித்தேன்! அவள் பதில் சொல்லாமல், என் ஊர் மதுரையா என்று கேள்விக்

கணையைத் தொடுத்தாள். என்னவரின் ஊர் தென்கரை என்றவுடன், கண்களில் ஒரு

மின்னல் தோன்றி மறைய, யார் வீடு என்று மீண்டும் கேட்டாள். கோபால் மாமா வீடு

என்றவுடன், அமைதியாகச் சிரித்து, 'உங்கள் எதிர் வீடு என் தாத்தாவுடையது!' என்றாள்.

ஆஹா! திரை இசை மேதை T R மகாலிங்கத்தின் பேத்தியா இவள்! அப்போது பொறி

தட்டியது.... முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க

சிறுமியை அவர்கள் வீட்டில் பார்த்துள்ளேன், இதே பெரிய கண்களுடன், என்று! ஆம்...

அதே கண்கள்.


'கண்டனன் சீதையைக் கண்களால்' என்று கம்பர் எழுதியது நினைவில் வந்தது! இதற்கு

எங்கள் ஆசிரியர் அமுதன் அருமையாக விளக்கம் அளிப்பார். 'அனுமன் தன் கண்களால்

சீதா தேவியைக் கண்டான்', என்ற பொருள் தோன்றினாலும், இன்னொரு

விஞ்ஞானபூர்வமான உண்மையும் உள்ளதாம். பிறக்கும் நாளிலேயே ஒருவரின்

கண்களின் அளவு நிர்ணயிக்கப்படும்! மற்ற அங்கங்கள் வயதுடன் வளர, கண்கள்

மட்டும் அதே அளவுதான் இருக்குமாம். சீதா தேவி, தலைவனைப் பிரிந்த சோகத்தால்,

புழுதி படிந்த மேனியுடன், உடல் இளைத்துத் துரும்பாகி, அடையாளம் தெரியாது

போய்விட, கண்கள் மட்டும் அதே அளவு இருந்தனவாம்! அந்தக் கண்களை வைத்து,

இவளே சீதா தேவி என அனுமன் அறிந்தாராம்!


:blah: தொடரும்.....
 
கண்களா காரணம்?

உடல் இளைத்து, காடுபோலத் தலை முடி வளர்ந்து, அம்மாவே கண்டுபிடிக்க முடியாதபடி

உருமாறியிருந்த அப்பாவை, அவரின் கண்களை வைத்துத்தான் பாட்டி அடையாளம் கண்டாரோ? :noidea:
 
dear raji,

even the usa government believes only eyes are the firmest and only assured method of identification.

recently we applied and got approved for 'nexus' card. this lets canadian passport holders to travel to usa without the normal manual questions. you just insert your card, peek into the machine, which matches your eye print with what is on record, and hey presto, you can enter god's own country, hassle free and bypass all the queues. :)

re burma experience. when i was growing up, one of my neighbours was an army doctor retired. every morning he has to take a bath and put viboothi and do sandhy. when the japanese overran his camp, all from his camp were taken prisoners and sent to camps in burma. only he was let go free, because the japanese thought he was a yogi. :)

with just his dhoti and melveshti, he trekked through burma and assam before being picked up by the army again. extraordinary story.
 
Dear Sir,

Thank you for your reply to my posts! You seem to thoroughly enjoy the thread!

I too wrote about my eldest uncle who was considered as a Yogi Ji when he traveled in trains in India,

sporting a long white beard and hair like Prof Dumbledore of Harry Potter story!

Here, Prof D'dore:

AlbusDumbledore.jpg


Regards,
Raji Ram :thumb:
 
Last edited:
உலகம் சிறியது! (தொடர்ச்சி)

கல்லூரியில் படிக்கும்போது, ஸ்நேகலதா என்று ஒரு நண்பி இருப்பாள். வளைந்து

ஆடுவதில் வல்லவள். நாங்கள் அவளுக்கு வைத்த செல்லப் பெயர் Snake! காரணப்

பெயர்தான்...


சென்னைக்கு வந்த புதிதில், ஆழ்வார்பேட்டையில் குடித்தனம். பக்கத்து ஷாப்பிங் இடம்

LUZ corner தான். அங்கு புதிய கடை ஒன்றில், வினோதமான பெயர்ப்பலகை கண்டேன்!

Snack விற்கும் கடையில் அதற்கு Snake என்று எழுதி இருந்ததைப் பார்த்ததும், எனக்கு

சிரிப்புடன், என் நண்பியின் நினைவும் வந்தது! என்ன ஆச்சர்யம்! எனக்கு நேர் எதிரில்

வருகிறாள் அதே Snake; ஐந்து கிலோ எடை கூடி, இன்னும் வெண்மை நிறம் கூடி,

வருகிறாள்! ஏதோ அவசரம். என்னைப் பார்க்கவில்லை. நானா விடுவேன்! அவள்

என்னைத் தாண்ட எத்தனிக்கும்போது, செல்லமாக ஒரு தட்டுத் தட்ட, கோபம் பொங்க

முறைக்கத் தொடங்க ஆரம்பித்தவள், என்னைத் தெரிந்துகொண்டு, சிரிக்க ஆரம்பித்தாள்!

'டேய்! (அப்படித்தான் அழைப்பாள்) மெட்ராஸிலயா இருக்க?' என்று கேட்டாள். பரஸ்பரம்

க்ஷேம நலம் விசாரித்துக்கொண்டோம். விலாசங்களைப் பரிமாறிக்கொண்டு, பிரிந்தோம்!

அவ்வளவே! அவளுடைய வேலை அவளுக்கு; என்னுடையது எனக்கு. காலம் ஓடுகிறது!

இந்த இருபத்தியெட்டு ஆண்டுகளில், அதன் பின் நாங்கள் சந்திக்கவே இல்லை!


சில மாதங்களுக்குப் பின், Luz வழியாக பஸ்ஸில் வரும்போது, Snake ஐ எண்ணியபடியே

வந்தேன்! திடீரெனப் பக்கத்து சீட்டில் ஒரு மாமி வந்து அமர்ந்தாள்! சும்மாச் சிரித்து

வைப்போமே என்று முகம் பார்த்தால், கல்யாணி! என் முதுகலை வகுப்புத் தோழி! அவள்

மட்டும், திருமணமானபின் படிக்க வந்ததால், நாங்கள் எல்லோரும் அவளைக் கிண்டல்

செய்வோம்! ஏதாவது தெரியாமல் விழித்தால், 'என்னப்பா! இன்னைக்கு சாம்பாரிலே உப்பு

அதிகம் போட்டு, திட்டு வாங்கின டென்ஷனா?' என்றெல்லாம் அவளைக் கலாய்ப்போம்!

அவளிடமும் அரட்டை அடித்து, விலாசம் பரிமாறிக் கொண்டதுதான் மிச்சம்! இன்னும்

சந்திக்கவே இல்லை!


ஏனோ, பெண்களுக்குத் திருமணம் ஆனபின், பழைய நட்புக்கள் விட்டுப் போகின்றன!

நண்பர் வட்டமே கணவனைச் சார்ந்த நண்பர் வட்டமாக மாறிவிடுகிறது! ஆனால்,

சென்னையிலேயே படித்துச் சென்னையிலேயே வாழும் பெண்கள் பலர், தன்

நண்பிகளிடம் தொடர்பு வைத்துக் கொள்ளுவது, மிகவும் சந்தோஷமான விஷயம்!


நல்ல நட்பு வாழ்க! :grouphug: . . . :thumb:


தொடரும்..............
 
Dear Sir,



Raji Ram :thumb:

dear raji,

just a kutty favour,

when you address 'dear sir', i am left guessing.

as to whom you are directing the msg. in fact, it takes a little of arrogance, to ensure, that it is in fact to moi that the post is meant.

to avoid confusion, and also ensure to keep my senses intact,

can you please do either: 'reply with quote' or address this to kunjuppu (i am no sir to you. just your cyber companion in this journey. in this forum. ok?)

thank you :)
 
dear raji,

just a kutty favour,..........

I address 'Dear Sir' because you are the only person replying to my posts!

You know Sir! I like to give respect and take respect....... High Funda, Is it not? :high5:

Anyway, I shall quote a line hereafter!

Regards
Raji Ram

PS: (important part of a lady's letter!!)
I was thinking, in case we happen to meet you in Canada, you and Mrs. K will offer us a cup of coffee!!! :tea:
 

I address 'Dear Sir' because you are the only person replying to my posts!

You know Sir! I like to give respect and take respect....... High Funda, Is it not? :high5:

Anyway, I shall quote a line hereafter!

Regards
Raji Ram

PS: (important part of a lady's letter!!)
I was thinking, in case we happen to meet you in Canada, you and Mrs. K will offer us a cup of coffee!!! :tea:

dear raji,

if you happen to come to toronto, please let me know, as much in advance, as is possible. i cannot speak for the missus, though she usually goes along with whatever i do.

i would simply love to have you over, for more than a coffee. after 31 years, i think, the wife boss will be there too :)

well here is a real story:

during the second world war, when london was being bombarded by nazi bombs, a london england family, who had relatives in vancouver, wanted to send their kids to canada for safety's sake.

they sent a cable to the relatives, 'children arriving by ss.xyzship' in halifax at such and such date. pls arrange to pick them up'.

pat came the reply: 'pick them up yourself. you are closer to them than us'.

dear raji, just to reiterate a point. this is a vast country. the easternmost ports halifax or st.john's newfoundland are closer to europe, than the western extremes which overlook the pacific ocean.

i hope you are indeed visiting toronto?
 
................
i hope you are indeed visiting toronto?
No plans sir! Just kidding, since you said cyber companion!

Plans are to be in Boston for nearly 5 months from mid June, to play with darling grand daughter!

Please do let us know if you visit Boston!

Regards.........
 
Talking about cable message, I too remember a funny incident.

A new car by name 'Padmini' was released and my B I L had booked a new car with a new color!

When he came to our village with my sister on vacation, a telegram was received which read:

'Padmini delivered. For your information'. And our post master being our family friend was

wondering who that girl was, since he knew all our names!
 
உலகம் சிறியது! (தொடர்ச்சி)

மகன் I I T சென்று படிக்க ஆரம்பித்ததும், என் சங்கீத வகுப்புக்களை அதிகமாக்கினேன்.

நேரம் நல்ல விதமாகச் சென்றது! சினிமா பார்க்க, தியேட்டர் செல்லுவது மிக அபூர்வம்!

சில நல்ல படங்களை T V இல் பார்ப்போம். அவ்வளவே. மற்றபடி, கல்யாண

வரவேற்புகள் நிறையச் செல்ல வேண்டியிருக்கும்! சென்னை மிகப் பெரிய நகரமல்லவா!


எங்கள் மகன், கடைசி வருடம் B Tech படிக்கும் சமயம்; என்னவரின் நண்பரின்

மகனுக்குத் திருமணம். வந்த பத்திரிகையில் Fabiola என்று மணமகனின் அம்மாவின்

பெயர் அச்சாகி இருந்தது! இது மிக அரிய பெயரல்லவா? ஒருவேளை என்னுடன்

இளங்கலை வகுப்பில் படித்த தோழிதானோ? அதற்குள் மகனுக்குத் திருமண வயது வர

'சான்ஸ்' இருக்கிறதே! ஏனென்றால், அவள் முதல் ஆண்டு படிக்கும்போதே, திருமணம்

செய்துவிட்டார்கள்! இறுதி ஆண்டுப் பரீட்சையின்போது அவள் முழு மாதக் கர்ப்பிணி! மிக

சிரமப்பட்டு எழுதினாள்.


இந்த எண்ணத்துடனே வரவேற்புக்குச் சென்றேன், என்னவருடன். திருப்பதிக் கூட்டம்

தோற்றுவிடும்! அப்படி ஒரு நெருக்கடி. 'அனகோண்டா' பாம்புபோல க்யூ நீண்டு, வளைந்து

நின்றது. நாங்களும் சென்று நின்றோம், வரிசையில். தூரத்தில் சின்ன பொம்மைகள்

போலவே மணமகன், மணமகள், அவர்களின் பெற்றோர்! என் கண்கள், என் தோழிதானா

அங்கு நிற்கிறாள் என்று தேடி அலைபாய்ந்தன. ஆனால் சரியாகத் தெரியவில்லை.

அருகில் செல்லச் செல்ல, எனக்குள் ஆனந்தம் பரவியது! அட, இவள் என் Fabi யேதான்!

உள்ளம் உற்சாகத்தில் துள்ளியதுடன், எப்போது நாங்கள் மேடையில் ஏறுவோமா என்றும்

ஏங்கியது. இதோ! நானும் என்னவரும் மேடையில், பரிசுப் பெட்டியுடன்! என் Fabi

ஓடிவந்து, என்னிடம் பேசுவாள் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்! காற்றுப் போன பலூன்

போல என் முகம் சுருங்கியதை நான் உணர்ந்தேன். யாரையோ பார்ப்பதுபோல புதிதாக

என்னைப் பார்த்தாள்! எனக்குள் உற்சாகத்தை சிரமப்பட்டு நிரப்பிக்கொண்டு, 'Fabi!

நான்தான் ராஜி', என்றேன். 'ஓ! ஞாபகம் இருக்கே' என்று மட்டும் சொல்லிவிட்டு வேறு

யாரிடமோ பேச நகர்ந்தாள்! நானும் விடவில்லை. அவளுடைய கணவரிடம், 'நீங்கள்

என்னவரின் தோழர்; உங்கள் மனைவி என் தோழி' என்றேன். 'அப்படியா' என்று

சுவாரசியமே இல்லாமல் பதில் வந்தது! பத்திரிகை வந்த நாள் முதல், என் தோழியா

அவள் என்று எண்ணி இருந்து, தோழி என்று அறிந்ததும் மனது மகிழ்ந்து, நிறையப் பேச

விழைந்து, என்ன பயன்? அவர்களிடமிருந்து ஒரு உற்சாக வரவேற்பும் இல்லையே!

ஒருவேளை, மிகப் பெரும் பணம் சேர்ந்துவிட்டால், பழைய நட்பும் மறந்து போகுமோ?


உலகம் சிறிதுதான்; சில மனிதர்களின் இதயமும்கூட!

:pout:
 
நெஞ்சில் ஈரம்!

சுற்றமாக இருந்து பழகினால்தான், நம்மிடம் பாசம் காட்டுவார்கள் என்பது கிடையாது!

பாசத்தை யார் வேண்டுமானாலும் காட்டுவார்கள், அவர்களின் நெஞ்சில் ஈரம் இருந்தால்!


P U C மற்றும் இளங்கலை முதல் இரண்டு ஆண்டுகளில், V R mam எங்கள் கல்லூரியில்

ஆசிரியையாகப் பணி புரிந்தார். அதனால் எனக்குச் சில நன்மைகள்! பச்சைப் பாசி பிடித்த

பெரிய நீர்த் தொட்டியிலிருந்து, பக்கெட்டில் மொண்டு, குளியலறை சென்று குளிக்கும்

கஷ்டமெல்லாம் எனக்கு அறவே கிடையாது! நான் பாட்டுக்கு நேரே அக்காவின்

குளியலறைக்குச் சென்றுவிடுவேன். எங்கள் ஆயா அம்மா தண்ணீர் நிரப்பி வைப்பாள், அதில்

உள்ள சின்னத் தொட்டியில். என்னிடமும் கொள்ளைப் பிரியம் காட்டுவாள். 'கண்ணு,

இன்னமும் தண்ணீ(ர்) வேணாச் சொல்லு. கொண்டுவந்து தாரே(ன்)' என்று அன்புடன்

சொல்லுவாள். எனக்கு அதிருஷ்டம்தான் அந்த மூன்று ஆண்டுகளும். அக்கா திருமணம்

ஆகிப் போன பின், என் தங்கை இளங்கலை வகுப்பிலே சேர, நான் மூன்றாம் ஆண்டு

மாணவி ஆனேன்! நான் சீனியர் ஆக இருந்ததால், அவளுக்கு 'ராகிங்' பிரச்சனை மட்டும்

இருக்கவில்லை! மற்றபடி, இருவருக்குமே பச்சைத் தொட்டித் தண்ணீர்தான் உபயோகத்திற்கு!


ஏதோ சாப்பாட்டில் கோளாறு ஆகிவிட, வந்தது மஞ்சள் காமாலை நோய்! உடல்

இளைத்து, தலைமுடி கொட்டி, ஆளே உருமாறி வந்து சேர்ந்தேன் ஹாஸ்டலுக்கு, இரு

வாரங்களுக்குப் பின். அம்மா, சமையல் செய்பவர்களிடம் சென்று, எனக்குக் காரம்,

எண்ணெய் அதிகம் இல்லாத சாப்பாடு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்குள்ள

ராமையா என்பவரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கும்; இன்னொருவர் கண்களைக்

கண்டாலே கிலி பிடிக்கும்! ஆனால், இருவரும் எத்தனை அன்புடன் எனக்கு உணவு

செய்து தந்தார்கள் தெரியுமா? எனக்கு வேண்டி ஒரு கிண்ணத்தில் தயிர் உறையவைத்து,

எண்ணையே விடாமல் ஊத்தப்பம் செய்து, காரம் இல்லாமல் காய்கறிகளையும் தனியே

எடுத்து வைப்பார்கள்! அவர்களின் அன்பில் உண்மையாகவே திக்குமுக்காடினேன்! தம்

குழந்தையைக் கவனிப்பதுபோலவே என்னையும் கவனித்தார்கள். இரண்டே மாதங்களில்

உடல் தேறியது. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் செய்த இந்த உதவியை, நான் வாழ்நாள்

முழுதும் மறக்க முடியாது!


ஆண்டவன் அவர்களுக்கு எல்லா நலமும் கொடுத்திருப்பான்!

:angel: . . . :hail:
 
நாம் யாரிடம் எல்லாம் அன்பு காட்டுகின்றோமோ
நம்மிடம் அவர்களும் அன்பு காட்டுவார்கள் என்பது

எத்தனை உண்மையான வார்த்தைகள்!
எத்தனை தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!
 
Ref: Post # 137

Mess - இல் இருந்த அவர்கள் இருவருக்கும் ஒரு உதவிகூட நான் செய்தது கிடையாது!

சந்திக்கும்போது ஒரு புன்னைகை + 'சௌக்கியமா அண்ணே?' என்ற விசாரிப்பு; அவ்வளவே!

அவர்களின் கருணை நிறைந்த நெஞ்சே எனக்கு உதவக் காரணம்! :angel:
 
அவர்களையும் மனிதர்களாகப்

பார்த்த முதல் பெண்மணியின்

ஒரு சகோதரியாக இருந்ததும்

ஒரு காரணமாகி இருக்கலாம்!
 
I thought my 'jilebi' smile did the trick .... :target:

Note: I was a little serious while giving a veena concert at Trichy sabha. The organiser told me

the trick to keep the concert lively..... ''Give your 'jilebi' smile now and then''!! :thumb:
 
raji,

jilebi smile?

lots of teeth. i used to have a relation who had about 60 teeth. we use to call her smile jilebi smile. whenever she opened her mouth, we could see multiple rows, and invariable, the mouth could hold them in comfort, and the teeth would spill out, giving the semblance of a smile. much like the the loops of the jilebi. :)
 

பல் வரிசை என்பதில் ஒரு pun உண்டு!

பல் வரிசை, பல் வரிசை = பல் வரிசைகள், பல வரிசைகள்! (Jilebi??)

பல்லைப் பற்றி இன்னொரு காமெடி இதோ:

முன் ஒரு விளம்பரம் வரும் - 'அழகிய பெண்ணே, சிரித்திடும் முன்னே' என்று!

அவளை அழகாகச் சிரிக்க வைக்க, ஒரு பல் வைத்தியர் தரும் விளம்பரமே அது!

:help: . . :becky:

 
raji,

another way to say it is, பொண்ணுக்கு வாயெல்லாம் பல்

another favourite expression in my family is பொண்ணு மூக்கும் முழியுமா இருக்கா; euphemism for roman nose and owlish eyes ;)
 

வீணைகளின் தந்தை!


அவரை அப்படித்தான் சொல்லவேண்டும்! யார் தெரியுமா? திருச்சி திரு. ராம்ஜி அவர்கள்.

வீணைத் தயாரிப்பில் முதன்மை வகித்த மேதை அவர். நான் இளம் வீணைக்

கலைஞராகத் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தால் தேர்வு பெற்றவுடன், (1976 )

திருச்சி, கரூர் இரு ஊர்களின் சபாக்களில் கச்சேரி செய்ய வாய்ப்புத் தந்தனர். திருச்சி

சென்றவுடன், அந்த சபா காரியதரிசி, அன்பான வரவேற்பு அளித்து, திரு ராம்ஜியைச்

சந்திக்க ஏற்பாடு செய்தார். ராம்ஜி அவர்கள் மணி விழா ஆண்டை எட்ட இருந்தாலும்,

இளமை மனத்துடன் உற்சாகமாகப் பேசி, தன் வீணை factory - ஐ சுற்றிக் காட்டினார்.

எத்தனை வடிவங்கள், எத்தனை அளவுகளில் வீணைகள்; பார்க்கும் இடமெல்லாம்

கலைவாணியின் அம்சமே தெரிந்தது. குட்டித் தம்பூரா, வெளியூர்களுக்கு எடுத்துச் செல்ல

எளிதாக இருக்க, தயாரித்திருந்தார். இருபத்தி இரண்டு ஸ்ருதிகளைத் துல்லியமாக செட்

செய்து ஒரு அரிய வாத்தியம் வைத்திருந்தார். ஒரு octave விலேயே இருபத்தியிரண்டு

வித்யாசமான ஸ்வரங்களைக் கேட்டதும், புல்லரித்துவிட்டது எல்லோருக்கும்!


அவர் சொன்ன ஒரு விஷயம் விநோதமாக இருந்தது! பிரபலமான வீணை வித்வான்

யாரேனும் அந்த ஊரில் கச்சேரி செய்தால், மறு தினம் அவர் கடையில் கூட்டம்

அலைமோதுமாம்! பல குழந்தைகளின் பெற்றோர், வீணை வாங்க வந்து, மொய்த்து

விடுவார்களாம்! இவர் யாருக்குமே வீணையை விற்க மாட்டாராம். பத்து நாட்கள் கழித்து

வந்து சந்திக்கச் சொல்லி அனுப்பிவிடுவாராம்! பத்து நாட்களுக்குப் பிறகு, பத்துப் பேர்கூட

விசாரிக்க வரமாட்டார்களாம்! தன் குழந்தைகளைப் போலப் பேணி, கருத்துடன்

தயாரிக்கும் வீணைகளை, வாசிக்காத வீடுகளில் கொடுத்து, பரண் மீது ஏற்றாமல்

இருக்கவே, அவ்வாறு செய்வதாகக் கூறினர். உயர்ந்த கொள்கை கொண்ட, அற்புதமான

மனிதர் அவர்!

:first:
 
முதல் மழலை!

V R mam தந்தார் எங்கள் வீட்டு முதல் மழலையை! தலை 'நிற்க' ஆரம்பித்த மூன்று மாதம்

முதலே, தன் தனித் தன்மையைக் காட்டிய மழலை அது! அப்பா மருத்துவப் பணி முடித்து,

வீட்டிற்கு வந்து குளித்தவுடன், அவனைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும்! ஒரு நாள்,

நோயாளி ஒருவர் வீட்டுக்கே வந்துவிட, அவரை கவனிக்க அப்பா சென்றார்; அன்று

முழுதும், அந்த மழலை அப்பாவை நேருக்கு நேர் பார்க்கவில்லை! அவ்வளவு கோபமாம்!

ஐந்து மாதம் வரை எங்களிடம் விளையாடிய பின், தன் அப்பாவுடன் ஹைதராபாத்

சென்றுவிட்டான்.


மீண்டும் வருகை, அவன் தம்பி பிறந்த சமயம். நான் படிப்பு முடித்து வீட்டில் இருந்ததால்,

என்னிடமே ஒட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவான். மூன்று வயதுகூட நிரம்பாத

அவனை, play school அனுப்ப ஆசைப்பட்டோம்! கிராமத்தில் அது புதிதாக முளை விட்ட

பள்ளி. நான்தான் அவனை அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தேன்! மூன்று மணி நேரம்

ஆனதும், மீண்டும் சென்று கூட்டி வந்தேன். மறுநாளே தகராறு ஆரம்பம்! பள்ளியில்

கொடுத்த முப்பது puzzle விளையாட்டையும், முதல் நாளே முடித்துவிட்டு, வேறு puzzle

கொண்டுவரச்சொல்லி டீச்சரிடம் அடம் பிடிக்கிறான்! பழையவற்றை மீண்டும்

விளையாட bore அடிக்கிறதாம்! டீச்சரால் சமாளிக்க முடியாமல், இவனுக்குப் பாடம்

சொல்லித்தர என்னால் முடியாது என்று ஓடிவிட்டாள்! ஆக, பள்ளி செல்லும் படலம் ஒரே

நாளில் முடிந்தது!


விஷமக்காரக் கண்ணன்தான் அவன். ஸ்வாமிக்கு அருகில் உள்ள பஞ்சபாத்திரத்

தண்ணீரில் ஒரு கலவை செய்வான்! பவழமல்லி, குங்குமம், விபூதி அத்துடன் odomas!

அவனைப் பொறுத்தவரை அதுதான் 'சர்வ ரோஹ நிவாரணி'. 'இதைக் குடி! எல்லாம்

சரியாப் போகும்!' என்பான்; நாங்களோ, 'இதக் குடிச்சா ஆளே போயிடும்!' என்று கூறிச்

சிரித்துவிட்டு ஓடுவோம், அவனிடமிருந்து தப்பிக்க. மிகவும் பிடித்த விளையாட்டு

சாதனம், எங்கள் அப்பாவின் instrument box! ஒரு வளைந்த தையல் போடும் ஊசியை,

அவன் கையில் படாதிருக்க, அப்பா எடுத்து ஒளித்து வைத்தார். உடனே அதை

கண்டுபிடித்து, பெட்டியில் வைக்குமாறு கலாட்டா செய்துவிட்டான்!


இன்று அரிசோனாவில் கல்லூரிப் பேராசிரியர்; அன்பு மனைவி; அழகுப் பெட்டகமாக ஒரு

பெண் குழந்தை. இன்று வரை என்னிடம் வைத்த அன்பு துளிகூட மாறவில்லை!

:dance:
 
raji,

you hit on another vanished tradition ie spending 6 months at mother's home after delivery.

the girl used to land soon after seemandham, and from then on get pampered till childbirth and till 6 months. it used to be the delight of chithis to take care of the baby and build the bonds.

i am still very close to my chithi.

my wife was and is, still the favourite chithi to her neice.

back to present 28 years ago.

our first son. both mom asked if they need to come to canada. i shook my head. my wife shook her head. we managed on our own, and today i feel, i got the best of the experiences.

the little tots are amazingly strong. unless deliberately done, they do not get into much harm.

baby rearing is fun work if you can manage it properly. since i was the 'sort of boss', i looked clinically as to why babies cry - hungry, wet or sickness.

re sickness, can't do much except give tlc.

i figured i could manage the other two better. soon after the son came home from the hospital, i found that mommy milk flowed through quickly and the guy needed feeding every two hours, tiring out the wife.

checked out around. the next day, 10 pm night, fixed a strong dose of formula milk and fed him. changed him. the guy slept like a charm till 4 am. 6 hours of beauty sleep, all that the wife needed.

we followed the same formula with the later ones.

even now, i tell young parents my formula. but not many takers though :) people appear to be very scared to make any changes to the baby routine and feel that weaning away from mommy milk is a no-no. my son weaned only 18 months later, but night food was formula food, from week 2.
 
Last edited:
Dear Sis! Thanks for registering your 'LIKE'

'குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்' :baby: . . . :clap2:
 

Latest posts

Latest ads

Back
Top