• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

முதல் மழலை (தொடர்ச்சி)

இந்தக் குறும்பு மழலை,' தம்பிப் பாப்பாவை ரொம்பப் பிடிக்கும்!' என்று சொல்லிக்கொண்டு

இருந்தாலும், மனது ஓரத்தில் பொறாமை முளை விடும்! முன்பெல்லாம்

குழந்தைகளுக்குத் தூளி கட்டுவார்கள், புடவையில்தான் நிறைய வீடுகளில். ஆனால்

அம்மா, புதிய ஐடியாவாக, வெள்ளை காடா துணியில் லுங்கிபோலத் தைத்து, இரண்டு

தூளிகள் தயாரித்தார். ஒவ்வொரு முறையும், முடிச்சுப் போட அவசியம் இல்லை;

எளிதாக மாற்றிவிடலாம், குழந்தை நனைத்துவிட்டால்! மூன்று வயது நெருங்கும்

சமயத்திலும், முதல் மழலைக்கு ஆசை வந்தது, தூளியில் தூங்க! அவன் குட்டிப்

பாப்பாவாக இருந்தபோது, அப்படித்தான் தூங்கினான் என்றெல்லாம் சமாதானம்

சொல்லியும், நச்சரிப்புத் தாங்கமுடியவில்லை. 56' ஸ்பெஷல் துணி வாங்கி இவனுக்கும்

ஒரு தூளி தயார் ஆனது! தானே படுத்துக் கொண்டு, தானே ஆட்டிக் கொண்டு (தரையில்

கால் எட்டுமே!) தூங்குவான். சின்னவனைப் பார்க்க வருபவர்களுக்கு, இந்த இரட்டைத்

தூளிகள் விநோதமாக இருக்கும்!


அப்பா, தினம் ஆங்கிலச் செய்தி கேட்பார். இவனுக்கும் அதே போலப் படிக்க ஆசை!

ஹிந்து பேப்பரைத் தலைகீழாக வைத்துக்கொண்டு, தனக்குத் தெரிந்த ஆங்கிலச்

சொற்களை எல்லாம் எடுத்து விடுவான், செய்தி வாசிக்கும் 'ராகம்' மாறாமலே!

அவனுடைய admirer 'சேந்துகிணத்து அம்மா' வந்து பார்த்தவுடனே சொல்லுவார், 'புள்ள

எத்தினி ஜோரா இங்குலீசு படிக்குது! இவிக அப்ப(ன்) பாத்தா சந்தோசப்படு(ம்)' என்று.

அவனுடைய vocabulary யில், எங்கள் மாமாவின் பெயர் மற்றும் டெலிபோன் நம்பர்

எல்லாம் வருவதை அந்த 'அம்மா' கவனிக்கவே மாட்டார்! ஒரு முறை அவன்

வார்த்தைகள் எல்லாம் முடிந்து போகும் நிலையில், 'ராகம்' முடியாததால், கடைசியாக

'மழை and பழம்' என்று படித்து முடித்தான்! அன்றைய best காமெடி அதுதான்!


அப்பா, தன் வயலினை எடுத்து வாசிப்பானோ என்ற பயத்தில், இவனுக்கு எட்டாமல், bow வை

எடுத்து மேசை மேலே வைத்துவிட, இவன் உடனே ஓடிப்போய் காய்கறிக் கூடையிலிருந்த

முருங்கைக்காயைக் கொண்டுவந்து bow ஆக்கி இழுக்க ஆரம்பித்துவிட்டான்!


என் பின்னாலேயே அலைவானே; சினிமாவுக்குச் சென்றால், புகை நாத்தம் குழந்தைக்குத்

தாங்காதே என்று, நானும் தங்கையும் சினிமாவுக்கு இவன் தூங்கும் சமயம் escape

ஆனோம்! தூங்கி எழுந்தவுடன், முகாரி ராகம் ஆரம்பித்துவிட்டான், என்னைக் காணாமல்.

என்ன சமாதானம் சொல்லியும் அடங்காது, கடைசியில், அப்பா வேலை முடித்து வீடு

வந்தவுடன், காரில் இவனையும் எடுத்துக்கொண்டு அம்மா தியேட்டருக்கு வந்தார். அந்த

இருட்டிலும் என்னைக் கண்டுபிடித்தது மழலை! 'அதா, சித்தி' என்றவுடன், அம்மா

கோபத்துடன், 'என்ன அட்டகாசம் பண்ணறான்! இந்தா, வைச்சுக்கோ உன் பிள்ளையை!'

என்று சொல்லி மடியில் வைக்க, இரண்டு கண்களிலும் குளமாகக் கண்ணீருடன், 'ஏண்டா

என்ன விட்டூட்டு வந்த?!' என்று கேட்டது மழலை!


ஒருமுறை தன் அப்பாவைப் 'போடா' என்று சொல்ல, உடனே நாங்கள், 'அப்பாவை

வாங்கோ போங்கோ ன்னு சொல்லணும் கண்ணா' என்றதும், 'போடாங்கோ!' என்றது மழலை!


இனிக்கும் பல நினைவுகளைப் பகிர்ந்ததில் எனக்கு மிக ஆனந்தமே, இன்று! :dance:

 
தூளிப் பழக்கம் தொடர்ந்தது
பள்ளிக்குக் செல்லும் போதும்.

பள்ளி முடிந்து வந்ததும்
தள்ளிப் பையை எறிந்து,

தூளியில் படுத்து ஆடுவான்
அவ்வளவு homesick ஆம் அவன்!

Curtain Rod இல் குட்டித் தூளி!
சிலிங் ஹூக்கில் பெரிய தூளி!

வெகு நாள் தொடர்ந்து இது!
வேடிக்கை பேசும் இரண்டும்

தூளியை வழித்துக் கொண்டு,
முகத்தை வெளியில் காட்டி!

 
Dear Kunjuppu Sir,

Thanks for sharing your experiences. Good idea for a good night's sleep, for the baby and the parents!

But, elders in India will not allow to feed the baby with thick milk, fearing, it will not digest easily!

Raji Ram

raji, even now i have a tough time selling this logic. i dont know why, but folks think babies are helpless.

those little buggers are strong as ox, but put on those cute helpless cuddly looks, to get all the love affection cuddling and squeezing.

a heavy night feed works good for everyone. which is why, here at the 3rd month formula food is given. and people say they have 'good' babies who sleep through the night.

i had 'good' babies from week 2. :)
 
அன்புள்ள நண்பர்களுக்கு,

சிறு இடைவேளைக்குப் பின் வண்ண மனிதர் தொடருவர்!

நட்புடன்,
ராஜி ராம் :typing:
 
செந்தமிழ் அன்பன்!

அவன் பெயர் தெரியவில்லை! நேற்று சந்தித்த இளைஞன் அவன். சினிமாவில்

என்னென்னவோ முகங்களைக் கண்டபின், எனக்குத் தோன்றியது, ஏன்

இவனைப் போன்ற நல்ல முகங்களை, சினிமாவில் காண முடிவதில்லை,

என்று! சிங்காரச் சென்னையிலிருந்து நாங்கள் பயணித்த BA விமானத்தில்

பணி செய்பவன். மற்றவர்கள் எல்லோரும் நுனி நாக்கு ஆங்கிலத்தில்,

எல்லோரிடமும் போலிப் பணிவுடன் பேசும்போது, இவன் மட்டும்

செந்தமிழில், தமிழ் முகங்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தது,

புதுமையாக இருந்தது! தாய் மொழியைக் கேட்டாலே, ஒரு உற்சாகம்

வருமல்லவா! ஒரு முறை sugar substitute கேட்டதால், மறுமுறை

காபியுடன், கேட்காமலேயே நினைவாக இரு பாக்கெட்டுகள் தந்தான்.

இறங்கும்போது, அவன் தமிழ் பேசக் கேட்டதில் மிகவும் சந்தோஷம் என்று

சொல்லி, வாழ்த்திவிட்டு வந்தேன்! பெரிய சிரிப்புடன், அதையும் ஏற்றான்!


பின் குறிப்பு: ஆனால், அந்தப் பிள்ளை, எல்லோருடைய 'சாப்பிட்டுவிட்டுப்

போட்ட' தட்டுக்களைத் தூக்கிச் செல்லும்போது, எங்கோ மனதில் ஒரு

நெருடல் வந்தது..... அவன் மட்டும் White collar வேலையில் இருந்தால்

அவன் பெற்றோர் எத்தனை சந்தோஷப்படுவார்கள், என்று! அவன்

தலையில் 'சுழி' இவ்வளவுதான்!

:ballchain:
 
raji,

When do you use ‘van’ as opposed to ‘avar’? in your posts. What is the criteria?

I ask this, because, here in toronto, we have a 24 hour sri lankan tamil radio (cmr 101.3 fm radio – also you can hear it on the web).

The radio has the most delightful disk jockeys. I have always enjoyed sri lankan tamil, since growing up with mayilvahanam in the 1950s radio Ceylon.

The cfm folks interview a lot of folks – from single digit age to 80s. it is always the respectful ‘neengaL’, irrespective of age.

I find that only Indian tamils use avan and ivan. We tambram, have built even more hierarchical respect with the use of such words.

How many of us have seen, an 8 year old, addressing a 60 year old servant with their first name? even MK, to most of my relatives, is avan.

Why is it that?

re this BA flight attendant...


What is wrong with flight attendant job on BA? During our last flight london chennai, one such, was a palghat iyer girl. Worked two round trips back to back a month. For this period of 6 days, her mil from kalpathi came to babysit the two young children.

her male colleague, also a brahmin, had a full time job – his own business. To him, this was fun and a chance to get away. During his days off in london, sometimes, he skipped a flight, so that he could visit the continent.

Raji, I think we need to get away from our prejudices, re working with our hands. It has cost our tambram community a lot. In terms of opportunities. I have a relative who is a jeweller in the usa. He came there, dumped his phd, picked up his life long interest in creating jewels. Took courses. Build a lab. And sells to select customers.
 
Dear Kunjuppu Sir,

Thanks for your long reply! I felt bad Sir, when that guy was picking up

the plates with left over food! I can never consider this a good job, even

if you say that I have prejudice!


And, I would like to mention about the way our people kept the aircraft,

scattering paper napkins and food particles all over the floor... Even the

toilets did not have dry floor! Too bad! We always take an anti diarrheal

tablet just before boarding the international flight, to avoid using the

toilet for a longer period! Added advantage is that there won't be much

appetite, on board!!


We call youngsters and people we don't like as 'avan'. We have seen in

Gounders' families everyone calls even the kids as 'avar'. They think that

the kid will talk the same way to others, with respect!

:kev:
 
Dear Kunjuppu Sir,

Thanks for your long reply! I felt bad Sir, when that guy was picking up

the plates with left over food! I can never consider this a good job, even

if you say that I have prejudice!


And, I would like to mention about the way our people kept the aircraft,

scattering paper napkins and food particles all over the floor... Even the

toilets did not have dry floor! Too bad! We always take an anti diarrheal

tablet just before boarding the international flight, to avoid using the

toilet for a longer period! Added advantage is that there won't be much

appetite, on board!!


We call youngsters and people we don't like as 'avan'. We have seen in

Gounders' families everyone calls even the kids as 'avar'. They think that

the kid will talk the same way to others, with respect!

:kev:

dearest raji,

thank you for your kind reply. only after i penned it, it struck me, that i might have writeen a rude note. i just came back to edit it, and hey presto, you have replid. and that too a very kind reply. thank you again.

your answer just hit the right tempo. it was never my intention to pry. just a query on the use of the language. tht is all.

re flt attendant job and white collar stuff: let us disagree. OK?.

:)

still friends, i hope....
 
இரண்டாம் மழலை...

இதுவும் VR mam தந்ததுதான்! முதல் ஐந்து மாதங்களில் என்னதான்

தெரியும் அவனுக்கு? அவன் வந்த சமயம்தான், முதல் மழலை

என்னிடம் அதிகம் 'ஈஷி'க்கொண்டது. பின் என் திருமணம் முடிந்து,

விசாகை சென்றதும், இரு சகோதரிகள் வீடுகளும் ஒரே காலனியில்

அமைந்துவிட, சின்னவன் என்னவருடனும் சேர்ந்து ஈஷிக்கொண்டான்!

ஒருநாள், சுடுதண்ணீர் 'geyser' கண்டதும், அதில் தெரியும் light க்கு

ஆசைப்பட்டு, அதில் போய் நின்று, உடுப்புக்களை நனைத்துக்

கொண்டான். பின் என்ன? என்னவரின் 4 ஆம் நம்பர் பனியன் ஒன்றை

சின்னதாகத் தைத்து மாட்டிவிட்டேன்! அதைப் போட்டுக்கொண்டு

அவன் சந்தோஷித்தது , இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது!

'தித்தப்பா', 'தித்தி' என்று மழலையில் அழகாக ராகத்துடன் அழைத்து,

விளையாடுவான். தினமும் அண்ணாவின் பள்ளி முடிந்ததும்

எங்களிடம் வந்துவிடுவார்கள் இருவருமே. இவன்தான் கணக்கு

வாய்ப்பாடுகளை 'சார் சார்' பாட்டு என்று சொன்னவன்! (டூ ஒன்ஸ் ஆர்

டூ என்பது டூ ஒன் 'சார்' டூ ஆனது!) எங்கள் வாரிசு சீமாவிடம்

கொள்ளைப் பிரியம் உண்டு, இரு சகோதரர்களுக்கும். சீமாவுக்கு

உட்காரத் தெரிந்ததும், மூன்று சக்கர சைக்கிளில் பின்னால்

இருக்கையில் வைத்து, ஓட்ட விரும்புவார்கள். இந்த மூவர் 'செட்'

மிகவும் நெருக்கமானது. சீமாவுக்கு ஐந்து வயது ஆனபோது, நாங்கள்

சிங்காரச் சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். அக்கா குடும்பம்

விசாகையில்.


சில ஆண்டுகளுக்குப் பின், பெரியவன் சென்னை IIT சேர்ந்தபோது,

சின்னவன் 10 ஆம் வகுப்பு; அத்துடன் 'அண்ணா sick'! எனவே, + 2

படிக்க, சென்னை வந்தான். சீமா படித்த பள்ளியில் நுழைவுத் தேர்வு

எழுதி, முதலாவதாக வந்து, ஒரே இரவில், பள்ளியில் popular ஆனான்!

பெயரும் C V ராமன்! கணக்கில் மூவரும் ஒற்றுமையாய் நேசம்

காட்ட, பெரியவன் சின்னவர்களுக்கு வழிகாட்ட, நல்ல படிப்புக்கு இது

உதவிற்று! மூவரும் IITans . மூவரும் இன்று US இல்!

:grouphug:
 

மூன்றாம் மழலை....


வேறு யார்? என் தவப் புதல்வன்தான். Well behaved child. சில

மாதங்கள் உள்ளபோதே, சாப்பாடு தந்தால் வாய் திறப்பான்; நிறையக்

குழந்தைகளுக்குக் கதை சொல்லி distract செய்ய வேண்டுமே!

(அதற்காகவே எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு, இவனுக்கு

ஊட்டிவிட விழைவார்கள்!)


அதிகம் குறும்பு கிடையாது. சொன்னபடி கேட்பான். அக்கா

குழந்தைகளுடன் ஒட்டுதல் அதிகம். நான் புதுக் கவிதையாக எழுதிய

மழலைப் பேச்சுக்களில் பல இவன் சொன்னதே. இறங்கோ plane;

Capital dog; பால் விட்டு அம்மா அடுப்புத் துடைப்பது; திருடன்

கண்ணில் போட்ட மிளகாய்ப் பொடிக்கு எண்ணெய் ஊற்றினாயா? ......

இத்யாதி.


இரண்டு வயது மழலையாக இருந்தபோது, நான் ஏதோ பாட்டை 'ஹம்'

செய்தபடிச் செல்ல, பின்னாலேயே இவன் ஸ்வரம் சொல்லிக்கொண்டு

வருகிறான்! என் தங்கை கண்டுபிடித்த பின்னரே தெரியவந்தது,

இவனது ஸ்வர ஞானம். அதனால்தான் நான் உறுதியாகச் சொல்லுவேன்,

ஸ்வர ஞானம் மட்டும் ரத்தத்தில் ஊறுவது! அதைப் படித்து அறிய,

மிகவும் பிரயத்தனப்படவேண்டும்!


ஒரு முறை, ஆனைமலை தாத்தா, பாட்டி வீட்டில் இருக்க விரும்பி,

எங்களைப் பிரிந்து சென்றான். சிறு வயது. ஜுரம் வந்துவிட்டது. அப்பா

மருந்து கொடுத்தபின், 'அம்மாக்குச் சொல்லிடலாம்', என்றதும்,

'சரியானப்பறம் சொன்னாப் போதும் தாத்தா! அம்மா இல்லைனா

தூங்கவே மாட்டா!' என்று இவன் பதில் சொல்ல, அப்பா அசந்து

போனாராம்!


தன் cousins சேர்க்கையால், அவர்களைப் போலவே நன்கு படித்து,

இன்று, பாஸ்டனில் ஒரு மென்பொருள் கம்பெனியில், உயர் பதவி

வகிக்கின்றான். ஈன்ற பொழுதில், இது பெரிய உவப்பு அல்லவா?

:dance:

குறிப்பு: இவனுக்குத் திருமணம் செய்த அனுபவங்களை, 'எண்ண

அலைகள்' நூலில், 'கல்யாண வைபோகமே' என்ற தலைப்பில்

எழுதியுள்ளேன்! நண்பர்கள் அறிவார்கள்!!

 
Dear Raji,

I have posted the photo of these awesome threesome in my album!

You have not seen it yet :(

You will find it in my profile page

You can also see yourself as you were in 1966.

I am sure you won't object to the posting since you are sooooo young in it!!

V.R akka
 
Dear sis,

Saw the album... Photos do not come in the PC frame!

Needs :roll:............ Anyway, cool effort!

Raji

PS: I would not have posted any of my photos in my album, anyway!
:shocked:
 
Dear Raji,

We are similar in many respects and yet differ in some respects.

I did not post the photos of Raj and family since he objected.

Sine Rupa and Ramesh posted the photos they have NO objections.

But I don't need permission to post our childhood photos! Do I?

with best wishes,
V.R.Akka.
 
Dear Sis,

I said, I would not have posted my photos in my album!

Yes... We differ in a few ways! I never said you have to ask my permission!

Raji :typing:
 
For the sake of those who wish to see the album -unseen by me-

I am getting it posted in the in Member's gallery

where anyone can see it without logging in!
 
Last edited:
Dear Sis!

You can not expect all the people who read the thread, to view the album!

It is impossible. We should be happy that we have friends to read our threads! Everyone won't have time to interact and view, whatever we present here!!

My humble opinion!! :decision:

Raji
 
Last edited:
எக்கணமும் சிக்கனம்!

நடராஜன் என்று ஒரு பெயிண்டர். எங்கள் சென்னை காலனியில்

பிரபலம். சிக்கனத்தின் மறு வடிவம்தான் அவர். ஒல்லியான தேகம்.

எந்த ஏணியும் இவர் ஏறும்போது உடையாது!! சரியான 'எஸ்டிமேட்'

சொல்லி, தானே 'பெயிண்ட்' டப்பாக்களை வாங்கி வருவார். இவர்

நாணயத்துக்கு ஒரு சிறு நிகழ்வைச் சொல்லுகிறேன். நாலாயிரம்

ரூபாய் இவர் கேட்டபோது, நான் எழுதி வைக்காமல் மூவாயிரம்

கொடுத்ததாக நினைத்துக்கொண்டேன். மறுநாள் மூவாயிரத்தி

ஐநூறு பில் தொகையைக் கண்டு, ஐநூறு ரூபாய் நோட்டைக்

கொண்டுபோய்க் கொடுக்க, அவர் ஒரு ஐநூறு ரூபாயை நீட்டி, முன்

தினம் நாலாயிரம் வாங்கியதாக நினைவுபடுத்தினார். மற்றவர்

காசுக்கு ஆசைப் படாத அந்த ஏழையை என்னால் மறக்கவே

முடியாது! எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் வண்ணம்

தீட்டிய பின், மீதி எல்லா வண்ணங்களையும் ஒன்றாக ஊற்றி, ஒரு

grey நிறத்தை வரவைத்து, தான் உபயோகித்த வண்ணம் சிந்திய

'ஸ்டூல்'களை எல்லாமே புதிது போலச் செய்துவிடுவார்.

அதற்கெனத் தனியாகக் கூலியும் கேட்க மாட்டார். அவரின்

மறைவுக்குப் பின் வேறு யாருமே அவரைப்போல இன்று வரை

கிடைக்கவில்லை!



உழைப்பே உயர்வு என்னும் அவர் கொள்கை மிகவும் உயர்ந்ததே! :clap2:
 
Last edited:
விஷமக்காரக் கண்ணன்!

கண்ணனின் விஷமங்களைக் கதைகளில்தான் படித்துள்ளோம்!

இவன் நிஜமான விஷமக்காரன். பெயரும் கண்ணனின் இன்னொரு

பெயரே! எங்கள் சித்தியின் சீமந்த புத்திரன். அவனுக்கு ஒரு தம்பி

உண்டு. இந்த இருவரும், எங்கள் பெரிய மாமா வீட்டில் சில

ஆண்டுகள் தங்கி, பள்ளியில் படித்தனர். அவர்களின் அப்பாவுக்கு

மிலிடரி மருத்துவர் வேலை; அதனால் கடும் குளிர் பிரதேசங்களில்

உள்ளபோது, குழந்தைகளை உடன் வைத்துக்கொள்ளக் கடினம்.

இவர்களும், எங்கள் மாமாவின் ஒற்றைப் பிள்ளையும், 'சுப்பர்'

சைஸில் இருப்பார்கள்! என் அண்ணாவோ, ஒல்லி மாஸ்டர்!

ஒருமுறை அண்ணாவை ஒரு கூடையில் வைத்து மூடிவிட்டு, ஒரு

கல்லைத் தூக்கி கிணற்றில் போட்டுவிட்டு, மூன்று 'சுப்பர்'களும்

ஓடிவிட்டன. சத்தம் கேட்டு, கொல்லைப்புறம் வந்த அன்னை, ஓடும்

பிள்ளைகளுடன் தன் பிள்ளையை மட்டும் காணாமல், ஒருவேளை

கிணற்றில் விழுந்துவிட்டானோ என்று பதறினார். அவன் பெயரை

அழைத்தும் பதில் இல்லை; கிணற்றில் வருகின்றது, வட்டமாய்

அலை! வீடு முழுதும் திமிலோகப்பட, மாமா தீ அணைப்புப் படைக்கு

போன் செய்ய, அவர்கள் வாசலில் வந்து நிற்கும் நேரம், கூடையில்

அசைவு கண்ட மாமி, அதில் அண்ணனைக் கண்டுபிடித்தார்! தீ

அணைப்பு வீரர்கள் 'ஸ்டயிலாக' உள்ளே வர, குழந்தை கிடைத்தான்

என்று சொல்ல, கோபம் அவர்களின் தலைக்கேற, எங்கள் பாட்டி

வந்து அவர்களுக்கு ஜில்லென்று மோர் கலந்து உபசரித்து,

சாந்தப்படுத்தினார். அவர்கள் சென்ற பின், 'ஏன் பெயரைக்

கூப்பிட்டதும் பதில் சொல்லலை' என்று கேட்க, 'அவா மூணு

பேரும், சத்தம் போடாதேன்னு சொன்னாளே!' என்றான் அவன்.



ந்த நாட்களில், வீட்டு வாசலில் மாட்டைக் கொண்டுவந்து கட்டி,

'கறந்த பால்' சூட்டுடன் கொடுக்கும் பால்காரர்கள் உண்டு,

கோவையில். அந்தப் பசுமாட்டுக்கு, இந்த விஷமக்காரன்,

வேப்பிலையை வைக்கோலுக்குள் மறைத்து வைத்துக்

கொடுத்துவிட்டான்! மறுநாள் பால் கசக்கிறது! அதன்பின்

மெதுவாகத் தன் சேஷ்டையைச் சொல்லி, திட்டும் வாங்கி
னான்!


திடீரென்று மயில் வளர்க்க ஆசை வந்தது, அவனுக்கு! கோவை

பாஷையில் 'ஓரியாடி', ஒரு மயிலை வாங்கிக்கொண்டான். நன்றாக

வளையவந்த அது, சில மாதங்களுக்குப் பின், இறந்துபோனது!

மாமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நல்ல ஆரோக்கியமான பறவை

அல்லவா, என்று வியக்க, இந்த விஷமம் சொல்லியது, 'சில

பறவைகள் உணவை சீக்கரமே digest செய்ய, கல்லைச்

சாப்பிட்டும் - ன்னு டீச்சர் சொன்னா! அதை test பண்ணிப் பாத்தேன், மாமா!'



'Rugby ' விளையாட்டுத்தான் அவர்களுக்குப் பிடிக்கும்! எங்களை

எல்லாம் சட்னி செய்ய நல்ல சந்தர்ப்பங்கள் வருமல்லவா? நாங்கள்

நொண்டி விளையாட்டுக்கே கூப்பிட்டு, அவர்களை வெறுப்பேற்றுவோம்.



எப்படியானாலும், சிறு வயதின் இனிய தருணங்கள் அவை!

:bounce:
 
raji,

your post #171 is hilarious. btw what is 'சீமந்த புத்திரன்'?

in the early 20th century, there was a budding british female writer richmal crompton. she too had a newphew like the kannan here. just recording all his activities, gave birth to so many 'William' books.

i used to read them over and over when i was growing up. just a few years ago, i saw all of the William books on display at landmark books in nungambakkam.

YESSS, i bought the whole set, and still read those on thsoe gloomy days.

characters like kannan are a gift to this world.
 
Last edited:
Strange Sir, that you don't know the meaning of seemantha puthran!!

Seemantham is performed when a woman carries her first baby.

Hence the first baby is known as seemantha puthran / puthri!!
:baby:

PS: Your post needs to be :censored: by Praveen!
:der:
 
raji,

i checked around. we pattars do not use the term சீமந்த புத்திரன்.

we go only as far as மூத்த புள்ளை. hope you dont find anything 'strange' in that. you should know, that we iyers are spread across different parts of tamil nadu and kerala and there are terms that are familiar with one group, which others dont know.

so why did you find my ignorance of சீமந்த புத்திரன் so strange. if you dont want me to read and comment your posts, just say so. i will avoid coming here. thank you.
 
You are welcome Sir, to interact in this thread. You make it lively!

Since seemantham is a common word used, I wondered... Thats all! :cool:

Nothing to get upset!
 

Latest posts

Latest ads

Back
Top