• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#9a. The snake bite.

Sage Brugu’s son was sage Chyavan. He married Sukanya the daughter of king Charyaati. Ruru was the grandson of Chyvana. He fell in love with Menaka’s daughter.

Their wedding was duly arranged by the elders of both the sides. But before the marriage can take place a tragic incident took place.

The bride stamped on a sleeping serpent and it bit her to her death. The bridegroom Ruru was shattered to see his lovely bride dead before they could wed.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#21e. நரகங்கள் (24 -28)

24. சூலப்ரோதம்

தீங்கு செய்யதவர்களைக் கொல்பவர்கள்,
தாங்களே தற்கொலை செய்து கொள்பவர்;

சூலப் புரோத நரகத்தில் தள்ளப்படுவர்!
சூலத்தின் மீது குத்திக் கோர்க்கப் படுவர்!

பறவைகளால் கொத்தப் பட்டுத் துன்புறுவர்
பரிதவிப்பர் தம் பாவங்களை எண்ணி எண்ணி.

25. தந்த சூகம்

துஷ்ட ஜந்துக்களும் விஷப் பூச்சிகளும் சேர்ந்து
இஷ்டம் போலக் கடிக்கும் இந்த நரக வாசிகளை!

26. வடோதரம்

மலை முழைகளில் கூடுகளில் வசிக்கின்ற,
வளைகளிலும், பள்ளங்களிலும்,வசிக்கின்ற,

பிராணிகளைத் துன்புறுத்துபவர்கள் சேர்ந்து
பிராணாவஸ்தை அனுபவிக்கும் நரகம் இது!

புகையாலும், விஷத்தாலும், நெருப்பாலும்,
மலை முழை போன்ற நரகத்தில் துன்புறுவர்!

27. பர்யாவர்த்தனகம்

லோப குணம் கொண்ட தீயவர்கள் துன்புறுவர்
பர்யாவர்த்தனகம் என்னும் நரகத்தில் வீழ்ந்து.

கயிற்றினால் கட்டி இறுக்குவர் இவர்களை
மயிர் கூச்செறிந்து அவயவங்கள் வாடும்படி!

28. சூசி முகம்

செல்வதால் கர்வம் கொண்டவர்கள் மற்றும்;
செலவு வைப்பவரிடம் முகத்தைக் சுளிப்பவர்;

பணத்தைப் புதைத்துப் பூதம் போலக் காப்பவர்
கணம் ஓய்வின்றித் துன்புறும் நரகம் சூசிமுகம்.

பணத்தைப் புதைத்துப் பூதம் போலக் காப்பவர்
கணம் ஓய்வின்றித் துன்புறும் நரகம் சூசிமுகம்.

பாவ பேதங்களுக்கும் கிடைக்கும் தகுந்தவாறு
நரக பேதங்கள், வேதனை பேதங்கள் அறிவாய்!

தேவியைப் பூஜிப்பவர் அடைவதில்லை நரகம்!
தேவி கரையேற்றி விடுவாள் சம்சாரத்திலிருந்து!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

24. Soolaprota Hell

Those who kill the innocent people, ignorant people, those who have done no harm at all mercilessly, they are thrown into Soolaprota Naraka and are pierced by S’oolAs.

They are overcome by hunger and thirst. Herons and cranes peck at them with their sharp beaks. Tormented in this manner they remember all their sins done in their previous lives.

25. Dandas'ooka Hell

Those who follow stray paths and trouble the other beings as the serpents do, they fall into the Dandas'ooka hell. Here worms with five faces and seven faces come from all sides and eat them as a fierce serpent devours a mouse.

26. AvaTarodha hell

Those who confine other persons in dark holes, a dark room or a dark cave are confined to similar dark caves, filled with poison, fire and smoke and made to suffer.

27. ParYavartanaka Hell

When a Brahmin householder, casts a hateful glance on a guest who comes to his house in a proper time is sent to this hell. Herons with thunderbolt-like-beaks, the crows, other birds like fierce vultures come and peck the eyes of that person.

28. Soochimukha Hell

When person becomes too haughty with the vanity caused by his riches; when he doubts his own guru, when his heart withers while thinking about his expenditure, when he is always unhappy, when he hoards up money ; he is sent to Soochimukha Naraka and pierced all over his body with pins.

The sinful persons thus suffer in a hundred thousand punishments in hell. All these are painful and tormenting. The virtuous persons go to the several spheres where happiness and pleasures reign.

The worship of the Devi in her Gross Form and of Her VirAt swaroopam is the Chief Dharma of all the persons. By worshiping the Devi, the persons do not have to go to the hell. She helps the person in crossing the ocean of transmigration of existence

 
64 THIRU VILAIYAADALGAL

58c. எல்லாம் அவன் செயல்!

58 (c). எல்லாம் அவன் செயல்!

மாணிக்க வாசகர் ஞான பூஜை புரிந்து
மாணவர்களின் ஆகமங்கள் கேட்பார்.
மாணிக்கவாசகரின் மணிப்பாடல்களை
மாணவர்களும் மற்றவர்களும் கேட்பர்.

தன் பக்தித் தளையில் சிக்கியவர்களின்
பொன்னையும், பொருளையும் பறிப்பான்;
பக்தியை மட்டும் விட்டுக் கொள்ளையடித்து
முக்தி அளித்து மகிழ்விப்பான் ஈசன்.

“நீ செய்ய வேண்டிய நற்பணிகள் இங்கு
நிரம்ப உண்டு என்று நீயே அறிவாய்!
சில காலம் இங்கேயே தங்கியிருந்து
பல மங்கலப் பணிகளைச் செய்வாய்!”

சொன்னவர் எங்கோ மறைந்து விட்டார்.
கன்றைப் பிரிந்த பசுவானார் மணிவாசகர்.
அத்தனைப் பிரிந்த துயர் தாளமாட்டாமல்
பித்தனாக ஆகிவிட்டார் மணிவாசகர்.

கோவிலில் இருந்து வெளியே வந்தார்;
“கோவலனிடம் மீண்டு செல்லுங்கள்!
ஆடி மாதத்தில் அழகிய குதிரைகள்
கடல்துறை வரும் என்று சொல்லுங்கள்!”

குதிரைகள் வாங்கக் கொண்டு சென்றார்
மதுரையிலிருந்து பொன் பொருள்களை;
திருப்பெருந்துறையிலேயே செலவழித்தார்
திருப்பணிகள், திருவிழாக்கள், அடியவர்க்கு!

ஆடி மாதமும் வந்துவிட்டது - ஆனால்
அந்நிய நாட்டுக் குதிரைகள் வரவில்லை!
ஓலை அனுப்பினான் மன்னன் மந்திரிக்கு,
“வேலை முடிந்து விட்டதா?” என்று கேட்டு.

மாணிக்க வாசகர் மனம் கலங்கினார்;
மனம் கவர்ந்த கள்வனிடம் முறையிட்டார்.
“குதிரைகள் வரும் என்று ஓலை எழுதி
மதுரை மன்னனுக்கு பதில் அனுப்புவாய்!”

இனிய கனவொன்று கண்டு மகிழ்ந்தார்
மணி வாசகர் அன்று உறங்குகையில்.
“நல்ல குதிரைகளை வாங்கிக் கொண்டு
நாமே மதுரை வருவோம்! நீ முன் செல்!”

மதுரை திரும்பினார் மாணிக்க வாசகர்;
எதிர் நோக்கிக் காத்திருந்தான் மன்னன்.
குதிரைக் கூட்டத்தையும் வீரர்களையும்!
பதில் உரைத்தார் மந்திரியார் இவ்வாறு.

“குதிரைகள் வந்து கொண்டே உள்ளன!
மதிப்புக்கு உரிய துரகபதி ஆகிவிடுவீர்.”
மீண்டும் சோமசுந்தரரிடம் முறையிட்டார்;
மீண்டும் தேற்றியது அரனின் ஓர் அசரீரி.

நடந்தவற்றை அறிந்தனர் குடும்பத்தினர்.
மடத்தனத்தைக் குற்றம், குறை கூறினர்.
“அடுத்து அரசன் என் செய்வானோ?” என்று!
“விடுங்கள் கவலை! எல்லாம் அவன் செயல்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYADALGAL

58 (C). EVERYTHING IS DONE BY SIVA.

MANikkavAsagar would listen to the AgamAs read by the students.The others would listen to MaNivAsagar’s songs.

God has this strange quality. He would loot all the earthly possessions of his devotees except his bakthi, and then he will bestow on them mukthi.


“You have many more duties to perform. Stay here and do them.” Siva told MaNivAsagar and went away.


MaNivAsagar became as forlorn as a cow separated from its calf. The separation was too much for him and he became like a mad man.


He came out of the temple and told his soldiers, “Go back to our king. Horses will arrive in the month of Aadi. I will come with the horses.”


MaNivAsagar spent all the money in various religious activities. The month of Aadi had come, but not the horses. King sent a message to his minister,

“Have you purchased the horses for our army?”

MaNivAsagar did not know what to do. The asareeri told him to write back saying that the hoses would arrive in due time.


That night Siva appeared in ManivAsagar’s dream. “I will bring the horses myself. You may go back to Madurai.”


MaNivAsagar returned to Madurai. The king was eagerly awaiting the arrival of the horses.The minister told him again that the horses would arrive soon. Again he got anxious and Siva’s asareeri assured him and told him not to worry.


His family members got worried fearing the consequences of the king’s wrath. MaNivAsagar said that everything was done by Siva Himself and there was no need to worry.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#9b. உயிர் பெற்றாள்

உயிர் வாழ்வதில் அகன்றது விருப்பம்!
உயிர்ப்பிக்க முடியுமா தன் காதலியை?

தூய்மை அடைந்தான் ஆற்றில் குளித்து!
கையில் அள்ளி எடுத்தான் ஆற்று நீரை.

“விதிக்கப்பட்ட கர்மங்கள் அனைத்தையும்
விதிகளை மீறாமல் நான் புரிந்திருந்தால்

எழுந்திருக்கட்டும் மணப்பெண் உயிருடன்!
எழாவிட்டால் உயிர் தரியேன் நானும் இனி!”

இஷ்ட தெய்வங்களை மனதில் எண்ணிக்
கஷ்டம் தீரப் பிரார்த்தனை செய்தான் ருரு.

ருருவிடம் கூறினான் வந்த காலதூதன்,
“திருமணம் புரிவில்லை துயர் அடைய!

மணப்பாய் வேறு ஒரு அழகியை – அன்றேல்
தொலைப்பாய் வேதனையில் உன் வாழ்வை!”

“வேறு பெண்ணை மணப்பதாக இல்லை – நான்
கூறுவது சத்தியம்! சிறிதும் பொய் இல்லை.

உயிர் பிழைத்த அவள் எழுந்தால் தான் நான்
உயிர் தரிப்பேன்! கொண்டு போ என்னையும்!”

தீவிர அன்பைக் கண்ட கால தூதன் – துயர்
தீரும் வழி ஒன்றை உரைத்தான் ருருவுக்கு.

“வழங்குவாய் உன் ஆயுளில் பாதியை அவளுக்கு
வழங்குவேன் அவளுக்கு புனர் ஜன்மம் வாதாடி”

சற்றும் தயங்கவில்லை மணமகன் ருரு!
தத்தம் செய்தான் தன் ஆயுளில் பாதியை!

யத்தனம் செய்ய வந்தான் விசுவா வசு – தன்
புத்திரியைப் பிழைக்க வைக்க வேண்டும் என.

விசுவா வசு, ருருவுடன், காலதூதனும்
விரைந்தான் தர்மராஜனைக் காண்பதற்கு.

ஆதியோடு அந்தமாக உரைத்தான் விவரங்களை.
வேதியர் பெண்ணை பிழைப்பிக்க வேண்டினான்.

எழுந்தாள் மணப்பெண் மீண்டும் உயிருடன்;
வாழ்ந்தாள் இன்பமாக ருருவுடன் நெடுநாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#9b. The Resurrection

Ruru felt that there was no point in his living any longer. Was there any chance of bringing her back to life? He wanted to try that also.

He bathed in the river and took a handful of river water. He spoke with sincerity, “If I had performed all my prescribed duties with devotion and faith, let my bride come back to life. Otherwise I will give up my life too!” He prayed to all his favorite Gods.

The kinkara felt sorry for Ruru and told him,”You have not married the girl yet. Why do you feel so sad? Marry another girl and live happily. Do not ruin your life for the sake of this girl”

But Ruru was firm. He said,”I will not even think of marrying another girl. I will live if this girl lives. Otherwise you may take me also along with her.”

Kinkara told a suggestion, “If you can give her half of your lifespan she can be brought back to life.” Ruru did not hesitate even for a moment. He give away half of his lifespan to his bride to be.

Meantime Viswa vasu arrived there in order to try to save his daughter’s life. The kinkara took Ruru and Viswa Vasu to Dharmarajan. He explained the happenings to and begged Dharmaraajn to spare the life of the bride to be.

The girl was resurrected and lived happily with Ruru whom she married as originally planned.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#24a. திதி பூஜை

1. பிரதமை ........நெய்....................பிணி நீக்கம்

2. த்விதீயை ......சர்க்கரை.............ஆயுள் பெருக்கம்

3. த்ரிதீயை......... பால்..................சகல துக்க நிவாரணம்

4. சதுர்த்தி........... பக்ஷணம் .........விக்ன நிவர்த்தி

5. பஞ்சமி............ வாழைப் பழம்....புத்தி சூக்ஷ்மம்

6. சஷ்டி................தேன்.................உடல் ஒளி

7. சப்தமி.............வெல்லம்... .......சோக நிவர்த்தி

8. அஷ்டமி..........தேங்காய் ..........தாப நிவர்த்தி.

9. நவமி................நெற்பொறி.........இவ்வுலக சுகம்

10. தசமி................கருப்பு எள் ........யமலோக பய நிவர்த்தி

11. ஏகாதசி............தயிர்..................தேவியின் ஆதிக்கம்

12. துவாதசி..........அவல் ..............தேவியிடம் ஆனந்தம்

13. திரயோதசி......கடலை .............சந்ததி விருத்தி

14. சதுர்த்தசி.........சத்துமா.............சிவன் அருளைப் பெறுவது

15. பௌர்ணமி......பாயசம்.............பிதுர்க்களைக் கரை எற்றுதல்
/ அமாவாசை
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#22a. TITHI POOJA

When one worships, with due rites and ceremonies Supreme mother Devi, She Herself removes all the terrible dangers and difficulties.

On Prateepa Tithi (the first day after the Full or New Moon) one should worship Devi by offering rice with ghee (clarified butter) to become completely free from any disease.

On the second day (Dwiteeya Tithi), one must offer to the Mother of the Universe sugar in order to live for long time on earth.

On the third day (Triteeya Tithi) Milk must be offered to Devi in order to become
free from all troubles and problems.


On the fourth day (Chaturti Tithi) the worshiper must offer a cake of flour to the Devi so that all the obstacles are removed from his path.

On the fifth day (Panchami Tithi), the worshiper must offer plantain fruits to the Devi in order to get sharp intelligence.

On the sixth day (Shasti Tithi), the worshiper must offer honey to the Devi in order to get a beautiful or handsome body.

On the seventh day (Saptami Tithi), a nivedana made of rice and jaggery must be offered to Devi in order to become free from all the mental sorrows.

On the eighth day (Astami Tithi), if one offers a coconut, one is freed from remorse.

On the ninth day (Navami Titi), one who offers puffed paddy (LAj) to Devi, will have his happiness increased both in this world and in the next.

On the tenth day (Dasami Tithi), one who offers to the Devi black Til becomes free from the fear of death.

On the eleventh tithi, (EkAdas’i Tithi) one who offers curd to the Devi wins the favor of Devi.

If on the twelfth day (DwAdasi Tithi) , one who offers to the Devi well parched and flattened rice (chuduva) becomes a favorite of the Devi.

If, on the thirteenth day (Thrayodasi Tithi ) one who offers to the Bhagavati lentils and whole grains gets good progeny.

If, on the fourteenth day (Chaturdasi Tithi), one who offers to Devi the flour of fried barley or other grains (S’aktu) he becomes a favorite of Lord S’iva.

If on the Full Moon day, or New Moon day one offers to the Devi PAyasa, then one’s Pitris are uplifted to the higher regions.


 
64 THIRU VILAIYAADALGAL

59a. அரனும், அரசனும்.

# 59 நரியைப் பரி ஆக்கியது.

# 59 (a ). அரனும், அரசனும்.

“குதிரைகள் எங்கே?” என அடுத்தநாள்
மதுரை மன்னன் மணிவாசகரைக் கேட்க,
அரனின் அசரீரியை நம்பிக் கூறினார்,
“அரசே மூன்று நாட்களில் வந்துவிடும்!”

“குதிரைக் கூடத்தைப் பெரிதாக்குவோம்.
குதிரைகளுக்கு புதிய நீர்க்குளங்களும்!
குதிரைகள் வரவைக் கொண்டாடுவோம்.
மதுரை நகரின் நன்கு அலங்கரிப்போம்.”

மூன்று நாட்கள் உருண்டோடிவிட்டன.
நான்காவது நாளும் வந்து விட்டது!
மன்னனின் பொறுமை எல்லை மீறியது.
“இன்னமும் குதிரைகள் வரவில்லையே!

எத்தனை பொன் கொண்டு சென்றான்?
அத்தனை பொன்னை என்ன செய்தான்?
என்று என் குதிரைகள் வந்து சேரும்?
என்றாவது வருமா வராதா? தெரியாது!”

எதுவுமே தெரிவிக்காமல் செய்யும்
புதிய வணிக முறை பிடிக்கவில்லை!
பொன்னைக் கவர்ந்த கள்வனை தண்டித்து
பொன்னை மீட்டுத் தாரும் தண்டலாரே!”

தண்டலார் வினவினார் மந்திரியிடம்,
“பொன்னை எப்போது திருப்புவீர்?”
இல்லாத பொன்னைத் திருப்புவது எப்படி?
சொல்லவில்லை மந்திரியார் பதில்.

தண்டலார் தண்டனைகளை ஈசன்
தொண்டருக்கு அளிக்கத் துவங்கினார்.
பாரமான கற்களை மேல் ஏற்றிவைத்து ,
கோரமான தண்டனையை அளித்தார்.

பாரத்தால் பரிதவிக்கவில்லை அவர்.
பரமன் அருள் வந்து துணை நின்றது.
பாரம் அனைத்தையும் பரமன் தாங்கிட
யாரும் கண்டிராத விந்தை நிகழ்ந்தது.

“இது என்ன மாயம்?” என்று மயங்கியவர்
இன்னும் கடுமையான தண்டனை தந்தார்.
கை கால்களைக் கிட்டிபோட்டு நெரித்தார்.
பைந்தமிழ் மணிவாசகர் துவளவில்லை.

சிவமயமாக இருந்தவரை இக்கொடிய
சித்திரவதைகள் துன்புறுத்த வில்லை.
இருண்ட சிறையில் தள்ளினார் அவரை.
இரவு முழுவதும் தொல்லைகள் செய்தார்.

விடியும் நேரம் விரைந்து நெருங்கியது.
படிக்கும் பாடல்களும், வேத கோஷமும்,
திருப்பள்ளி எழுச்சியும், சங்கொலியும்,
திரும்பவும் ஈசனிடம் மன்றாட வைத்தன.

“உன் மேல் அன்பு பூண்டது ஒரு தவறா?
உனக்குத் தொண்டுகள் புரிந்தது தவறா?
உனக்கே பொன்னைச் செலவு செய்தேன்!
எனக்கு ஏன் இந்தச் சித்திரவதைகள் ?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

# 59 . FOXES BECAME HORSES.

# 59 (a). THE TORTURE TREATMENT.


The very next morning, the king demanded the chief minister, “When will my horses arrive?” The minister replied that the horses are expected within the next three days.


Meanwhile they had to expand the horse sheds and dig new wells and ponds. The city should be decorated to receive the horses.

All these arrangements kept the king busy for the next three days. On the fourth day the king lost his patience completely.


No one knew how much gold was taken away from the treasury. No one knew how it was spent. No one knew when or whether the horses would arrive! What kind of a business dealing was this?


He called the master torturer and told him to start his treatments and make sure that the king’s gold was returned in full.


The torturer asked the minister, “When will you repay king’s gold?” The minister did not reply. He was wondering how he could return the gold that had already been spent!


Heavy stones were place on his body. But Siva bore the load and spared the minister of the suffering. The onlookers were wonder struck by this.


His arms and legs were crushed with pincers. Nothing affected him as he was in deep meditation on Lord Siva.


He was locked in a dark cell and the torture continued. Soon it was dawn. The sound of songs, Vedas and thiruppalli ezhuchi mingled. The minister cried out,


“Is it wrong to love Siva? Is it wrong to serve Siva? Why are these punishments given to me?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#9c. பாதுகாப்புக் கோட்டை

மாண்டு மீண்ட காரிகையின் கதையைக் கூறி
மாண்டு போகாதிருக்கத் தேடினான் ஓருபாயம்.

மதியமைச்சருடன் விவாதித்தான் பரீக்ஷித்
மணி, மந்திரம், மருந்து முதலியவை பற்றி.

ஏழு மதில்களோடு கூடிய கோட்டையில்
எழுந்தருளினான் தன் அமைச்சர்களோடு.

ஆட்சி செய்தான் அங்கிருந்தே அந்த நாட்களில்,
வீழ்ச்சியை அறியாத நல்ல கட்டுக் காவலுடன்.

கொடிய சாபத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்குக்
குடியேறிவிட்டான் பாதுகாப்பு வளையத்தில்!

விஷ மருந்து வல்லுனர்கள் இருந்தனர் – கடும்
விஷத்தை வீரியம் இழக்கச் செய்ய வல்லவர்.

உப்பரிகைக்கு உண்டு தப்பில்லாத காவல்;
ஒப்பற்ற மதயானை கோட்டைக்குக் காவல்.

மந்திரிகள் குழாம் மன்னனைச் சூழ்ந்திருக்க;
மந்திரி குமாரர்கள் புரிந்தனர் அரிய காவல்.

அந்தணன் கஸ்யபன் ஒரு வேதபண்டிதன்
மந்திர வித்தைகளில் சிறந்த வல்லுனன்.

விஷத்தை முறிக்கும் விஷயம் அறிந்தவன்;
தக்ஷகனின் திறமைக்கு ஒரு சவாலானவன்.

பொன் பொருளில் ஆசை மிகுந்தவன் – அவன்
மன்னனிடம் வந்தான் திறமையைக் காட்டிட.

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#9c. The circles of protection

The story of Ruru and his wife gave king Pareekshit some reassurance that poison by a snake bite can be handled properly with proper planning.

He discussed the matter with his wise ministers. The three options were treatment with magical Gems, mantras and medicines.

A fort with seven protective walls was made ready. The king lived there with his ministers. The guards were put on alert. The experts in poisons were present with the king.

They had vast knowledge to nullify the effects of poison and save the life of the person bitten by the snake. A huge elephant stood guarding the main entrance to the fort.

The minsters were around the king while their sons were in charge of the guarding duty of the fort. Kasyapan was a Vedic pundit well versed in the treatment of poisonous bites.

He was as greedy as he was knowledgeable. He decided to make himself available to the king Pareekshit when the snake bit him – so that he could save the king and get huge wealth in return for his timely service.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#22b.வார பூஜை


கிழமையும், நிவேதனப் பொருட்களும்

1. ஞாயிறு...........பாயஸான்னம்

2. திங்கள்.............பால்

3. செவ்வாய்........வாழைப் பழம்

4. புதன்................வெண்ணெய்

5. வியாழன்.........சர்க்கரை

6. வெள்ளி............வெள்ளைச் சர்க்கரை

7. சனி....................பசு நெய்
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#22b.The days of the week and their offerings

On Sunday, it is a rule to give an offering of PAyasam
(a food prepared of rice, milk, and sugar).

On Monday, it is a rule to give an offering of milk;

On Tuesday,
it is a rule to give an offering of plantain fruits;

On Wednesday,
it is a rule to give an offering of fresh butter;

On Thursday,
it is a rule to give an offering of jaggery or sugar candy,

On Friday,
it is a rule to give an offering of white sugar,

and on Saturday, it is a rule to offer the clarified butter of cow’s milk

 
Last edited:
8#22c. நட்சத்திர பூஜை


நட்சத்திரமும், நிவேதனப் பொருளும்

1. அஸ்வினி.......நெய்

2. பரணி................எள்

3. கார்த்திகை.......சர்க்கரை

4. ரோஹிணி .......தயிர்

5. மிருகசீர்ஷம் .....பால்

6. திருவாதிரை..... கிலாடம்

7. புனர் பூசம்... .....தயிர் ஏடு

8. பூசம்...................மோதகம்

9. ஆயில்யம்.........பேணி

10. மகம்................நெய்ப் பாலேடு

11. பூரம்.................கம்சாரம்

12. உத்திரம்...........ஆல இலைப் பூரி

13. ஹஸ்தம்.........நெய் வெல்லம் ஹல்வா

14. சித்திரை...........வடை

15. சுவாதி..............தாமரை ரசகம்

16. விசாகம்...........பூர்ணயம்

17. அனுஷம்... .....மது சூரணம்

18. கேட்டை..........வெல்லம்

19 மூலம்................அவல்

20. பூராடம்..............திராக்ஷை

21. உத்திராடம்.. ....பேரீச்சை

22. திருவோணம்... ராசகம்

23. அவிட்டம்..........அப்பம்

24. சதயம்.................நவநீதம்

25. பூரட்டாதி ...........பயிறு

26. உத்திரட்டாதி... ..மோதகம்

27. ரேவதி................ மாதுளம் பழம்
 
Last edited:
8#22c. Nakshatra pooja

The following are the Naivedyas given on each of the 27 Nakshattras, starting from As’vini:--

1. Clarified butter (ghee),

2. Sesamum (Til),

3. Sugar,

4. Curd,

5. Milk,

6. KilAtak (MAlAi of milk),

7. Dadhikoorchi (MAlAi of Curd),

8. Modaka (a kind of sweetmeat, a confection)

9. PheNikA

10. GhritaMaNdaka

11. A sweet meat of wheat flour and gur,

12. Vatapattra,

13. Ghritapura (Ghior),

14. Vataka

15. Kharjura juice (of the date palm),

16. PoorNayam (a sweet meat of Gur and gram),

17. Honey S'oorNa

18. Gur

19. Prithuka,

20. Grapes,

21. Date palms,

22. ChArakAs

23.Apoopa,

24. Navaneeta (fresh butter),

25. Mudga,

26. Modaka, and

27. MAtulinga
 
8#22d. மாத பூஜை

1. சித்திரை..........ஐந்து வித உணவுப் பொருட்கள்

2. வைகாசி..........வெல்லம்

3. ஆனி ................தேன்

4. ஆடி...................வெண்ணெய்

5. ஆவணி............தயிர்

6. புரட்டாசி..........சர்க்கரை

7. ஐப்பசி...............பரமான்னம்

8. கார்த்திகை......பால்

9. மார்கழி............பேணி

10. தை..................தயிரேடு

11. மாசி................பசு நெய்

12. பங்குனி..........தேங்காய்
 
Last edited:
8#22d. Nivedana in the 12 months

1. Pancha KAdya (five kinds of food) in Chaitra

2.The Gur, in the month of Vais’Akh;

3. The honey, in Jyaishtha;

4. The fresh butter, in AshAdha;

5. The curd, in S'rAvaNa;

6. The S’arkarA, in BhAdra;

7. The PAyas’a, in Aas'vin;

8. The pure milk, in KArtik;

9. The PheNee, in AgrahAyaNa;

10. The Dadhi KoorcheekA in Pausha;

11. The clarified butter of cow’s milk, in MAgha, and

12. The cocoanut offerings, in the month of PhAlguna.

These are twelve offerings to be given to Devi in the twelve months respectively.

 
64 THIRU VILAIYAADALGAL

59b. மாயப் பரிகள்.

# 59 (b). மாயப் பரிகள்.
தொண்டன் அழுகுரல் கேட்டுவிரைந்தான்;
தண்டனைகளைத் தவிர்க்க விழைந்தான்;
சிவ கணங்களைத் தன்னிடம் அழைத்தான்;
சிறந்த திட்டம் ஒன்று சிவன் இழைத்தான்.

“காடு மேடுகளில் அலைந்து திரிவீர்!
ஓடும் நரிகளைப் பற்றிக் கொணர்வீர்.
மாற்றிவிடுவீர் அவற்றைப் பரிகளாக!
மாறிவிடுவீர் நீங்களும் பரி வீரர்களாக!

ஆடி மாதம் ஓடியே போய் விட்டது!
தேடிய பரிகளைத் தர வேண்டியதே!
யாமும் ஒரு பரி சேவகனாக உருமாறி
யாத்திரையில் பங்கெடுத்து வருவோம்!”

நரிகளைத் திரட்டி ஓரிடம் சேர்த்தனர்;
பரிகளாக அவற்றை மாற்றி அமைத்தனர்.
உருமாறிப் பரி வீரர்கள் ஆயினர் கணங்கள்;
உரு மாற்றிய பரிகளின் மேல் அமர்ந்தனர்.

ஆடைகள், பல்வகை ஆபரணங்கள், மேலும்
ஆயுதங்கள் பலவற்றை மிடுக்குடன் ஏந்தி
குதிரை வீரனாகவே உரு மாறிவிட்டான்;
மதுரை சோம சுந்தரேஸ்வரப் பெருமான்.

திருவடியில் ஒளிர்ந்தன வீரக்கழல்கள்;
திருக்கரத்தில் ஒளிர்ந்தது ஞானவாள்;
ஆடை அலங்காரம், நவமணி ஆபரணம்,
அழகிய நெற்றில் துலங்கிய திருநீறு.

ஏறி வந்ததோ திவ்ய வேதப்பரி மேல்!
பாரினில் யாருமே இதுவரை கண்டிராதது.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும்
புருஷார்த்தங்களே அதன் நான்கு கால்கள்.

கர்ம கண்டம், ஞான காண்டம் என்னும்
இரு காண்டங்களே அதன் இரு செவிகள்.
இரண்டு கண்களும் ஞானக் கருவிகள் !
பரஞானம் மற்றும் அபரஞானம் என.

விதியே வேதப்பரியின் முகம் ஆனது.
விதிவிலக்கே வேதப்பரியின் வால் ஆனது.
ஆகமங்கள் அதன் அழகிய புற அணிகள்;
ஓம் என்ற பிரணவமே அதன் கடிவாளம்!

பிரமனின் முகமே அதன் இருப்பிடம்.
பிரமிக்க வைத்த கால் குளம்பொலியில்
அதி சௌம்மியமகப் பொருந்தி ஒலித்தன
பதினெட்டு வகையான இசைக்கருவிகள்.

மாயப் பரிக்கூட்டம் சென்றது மேற்கே.
தூய வேதப்பரி ஆனது நடுநாயகம்.
அலைகடல் பொங்கியதொரு ஆரவாரம்.
மலைகள் அதிரும் வண்ணம் கோலாகலம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

59 (B). THE MAGICAL HORSES.

Siva decided that it was time to play another divine prank to save his devotee from the tortures he was being subjected to.

He ordered his Siva GaNAs,” Go and round up all the foxes you see. Change them into sturdy horses. You too become the horse riders.


The AashAda mAsam is over. It is time to hand over the horses to the king. I too will become a horse rider and go with you”.


All the foxes were rounded up in a place. They were changed into sturdy horses with every aswalakshaNa.


The Siva GaNAs changed into strong and smart horsemen, dressed in the proper clothes and carrying the proper arms.


Siva transformed himself into a handsome soldier. The anklets worn by the brave men adorned his ankles. The sword of wisdom glittered in his hand. His forehead was smeared with viboothi. He wore rich clothes and gold ornaments.

He rode the Vedas transformed into a horse.The four Purushaarthaas namely Dharma, Artha, Kaama and Moksha formed its four legs.


Karma Kaanda and Gnaana Kaanda were its two ears. Para Gnaanam and Apara gnaanam were its two eyes. Vidhi was its face. Agamaas were its ornaments. PraNava was its reins.


It lived in Brahma’s face. The trotting sound made by the horse was the sound of eighteen different musical instruments played in unison.


All the magical horses traveled west wards. The Veda turned horse was in the center of the group. The noise made by the group was like the roar of an ocean and made the mountains tremble.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#9c. பாதுகாப்புக் கோட்டை

மாண்டு மீண்ட காரிகையின் கதையைக் கூறி
மாண்டு போகாதிருக்கத் தேடினான் ஓருபாயம்.

மதியமைச்சருடன் விவாதித்தான் பரீக்ஷித்
மணி, மந்திரம், மருந்து முதலியவை பற்றி.

ஏழு மதில்களோடு கூடிய கோட்டையில்
எழுந்தருளினான் தன் அமைச்சர்களோடு.

ஆட்சி செய்தான் அங்கிருந்தே அந்த நாட்களில்,
வீழ்ச்சியை அறியாத நல்ல கட்டுக் காவலுடன்.

கொடிய சாபத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்குக்
குடியேறிவிட்டான் பாதுகாப்பு வளையத்தில்!

விஷ மருந்து வல்லுனர்கள் இருந்தனர் – கடும்
விஷத்தை வீரியம் இழக்கச் செய்ய வல்லவர்.

உப்பரிகைக்கு உண்டு தப்பில்லாத காவல்;
ஒப்பற்ற மதயானை கோட்டைக்குக் காவல்.

மந்திரிகள் குழாம் மன்னனைச் சூழ்ந்திருக்க;
மந்திரி குமாரர்கள் புரிந்தனர் அரிய காவல்.

அந்தணன் கஸ்யபன் ஒரு வேதபண்டிதன்
மந்திர வித்தைகளில் சிறந்த வல்லுனன்.

விஷத்தை முறிக்கும் விஷயம் அறிந்தவன்;
தக்ஷகனின் திறமைக்கு ஒரு சவாலானவன்.

பொன் பொருளில் ஆசை மிகுந்தவன் – அவன்
மன்னனிடம் வந்தான் திறமையைக் காட்டிட.

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAGAVATAM - SKANDA 2

2#10a. மந்திர ஜபம்

கஸ்யபன் வந்து கொண்டிருந்தான் வீதியில்;
கனவிலும் கிட்டாத பொருளைப் பெறுவதற்கு!

சர்ப்ப ராஜன் தக்ஷகன் வந்தான் அதே வீதியில்;
சாபத்தை நிறைவேற்றிட, அந்தணன் வடிவில்!

கஸ்யபனைக் கேட்டான் வயோதிக அந்தணன்,
“வாஸ்தவமாக எங்கே எதற்குச் செல்கின்றீகள்?”

“செல்கிறேன் நான் பரீக்ஷித் மன்னனிடம் நேராக;
சொல்கிறார்கள் விஷப் பாம்பினால் மரணமாம்!

விஷத்தை முறிக்கும் மந்திர சக்தியால் – அவனை
விஷம் தாக்காமல் காப்பாற்றப் போகிறேன் நான்.”

“அந்தண வடிவில் சர்ப்பராஜன் தக்ஷகன் நானே;
விந்தையான விஷம் முறிக்கும் சக்தி உள்ளதோ?

விரும்புகின்றேன் கவிஜாதனின் சாபம் பலித்திட!.
திரும்பிவிடு இப்போதே உன் இருப்பிடத்துக்கு!”

“கவிஜாதன் சாபம் இட்டிருந்தாலும் சரியே! நீ
புவியாளும் மன்னனை கடித்தாலும் சரியே!

மன்னனைப் பிழைக்க வைக்கப் போகிறேன்!
ஒன்றும் செய்யாது உன் அச்சுறுத்தல் என்னை!”

கோபம் வந்து விட்டது தக்ஷகனுக்கு இதுகேட்டு;
“சாபத்தை முறிப்பதாகச் சவால் விடுகின்றாயா?

எரிக்கின்றேன் அந்த ஆல மரத்தை இப்போதே!
நிரூபிப்பாய் உன் சக்தியை அதை உயிர்ப்பித்து!”

சவாலுக்குத் தயார் என்றான் கஸ்யபன்;
சவாலின் முதல் பகுதி நிறைவேறியது!

சாம்பல் ஆகிவிட்டது ஆலமரம் விஷத்தால்!
சாம்பலைத் திரட்டினான் கஸ்யபன் ஒன்றாக.

ஜலத்தை மந்திரித்துச் சாம்பலில் தெளிக்க
ஜால வித்தையாக மரம் தழைத்து நின்றது!

‘கப்பும், கிளையுமாக நிற்கின்ற அந்த மரம்
அப்போது எரிந்து சாம்பலான ஆலமரமா?’

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#10a. Mantra Japam

Kasyapan was walking on the street – dreaming about the huge wealth he was about to earn from King Pareekshit.

Takshakan the serpent who was destined to bite the king was also walking on the same street in the form an old Brahmin.

The old brahmin asked Kasyapan, “May I know where to and why you are traveling sir?”

Kasyapan replied, “I am on my way to meet the king Pareekshit. I am told that the king will die soon due to a snake bite. I have the power to nullify the deadliest poison. I am going to save the king. “

Takshakan told Kasyapan now. “I am the snake Takshakan going to fulfill the curse of sage Kavijaathan. If you have the power to nulllify the poison, you had better go back to your home. The curse should take effect”

“I don’t care about the curse laid by Kavijaathan nor about you – if you are indeed the Takshakan you claim to be. I will save the king’s life at all costs.” Kasyapan was firm in his reply.

Takshakan got angry with the confidence and courage of Kasyapan. He challenged kasyapan,”I shall burn this huge banyan tree to ahses. If you can, bring back the tree to its present state and prove your power of resurrection to me”

Takshakan burned the tree to ash with his deadly poison. Kasyapan gathered all the ash carefully. He took some water, chanted a mantra and sprinkled the water on the ash.

Lo and behold! The tree stood as gloriously as it had been. No one would believe that it was the same tree which got burned to ash a few minutes ago!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#22e. தேவி வழிபாடு

"தேவி வழிபாட்டின் விதிமுறைகள் எவை?
தேவி காப்பது எங்கனம் நரகக் குழியிலிருந்து?"

நாரணனை வினவினான் நாரத முனிவன்
நாரணன் விளக்கினான் நாரத முனிவனுக்கு.

"ஆராதனை செய்திட வேண்டும் தேவியை
தாளாத நரக வேதனையிலிருந்து தப்புவதற்கு.

வளர் பிறை தொடங்கி பௌர்ணமி வரையில்
தளராமல் செய்யவேண்டும் தேவி பூஜையை.

அந்த அந்தத் திதிகளின் நிவேதனம் செய்து
அந்தணருக்கு அளிக்க வேண்டும் தானமாக.

பூரணையில் செய்திட வேண்டும் ஹோமம்;
பூரணை ஹோமம் போக்கிடும் துக்கங்களை.

செல்ல வேண்டும் இலுப்பை மரத்தடிக்கு
சுக்கில பக்ஷ திருதியையில் மாதம் தோறும்.

செய்யவேண்டும் மாத பூஜையின் நிவேதனத்தை;
எண்ண வேண்டும் பராசக்தி மரத்தில் உறைவதாக.

விரதம் பூர்த்தி அடையும் தேவி பூஜையால்
விருப்பங்கள் நிறைவேறி விடும் உறுதியாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Last edited:

Latest posts

Latest ads

Back
Top