• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#22e. DEVI'S WORSHIP

"What are the rules for Devi worship? How does she save people from falling into the dark deep pits of hell? Sage NAradA asked NArAyaNa and he replied thus:

"Devi should be worshiped to escape being punished in the Hell. Starting on the first day after New Moon, the daily offerings as prescribed must by prepared and offered to Devi first and then presented to worthy brahmins.

This must go on until the full moon day on which a homam must be performed.
The homam done on the full moon day completes the vratam and yields all the desired results.


One must go to the madhuka tree on the third day of Sukla pasha every month and offer the monthly nivedanam as prescribed. One must imagine that Devi resides in that tree. this should continue for one full year to complete the vratam.
 
8#22f . தேவி துதி

"தாமரை இதழ்த் திருவிழியாளே நமஸ்காரம்!
தாங்குகின்றாய் உலகனைத்தையும் நமஸ்காரம்!

மஹேஸ்வரி! மஹாதேவி! மங்கள மூர்த்தினி!
பரமேஸ்வரி! பாப நாசினி! பரதேவதை நீயே!

பிரஜா உற்பத்தினி நீ ! பிரம்ம ஸ்வரூபிணி நீ !
மத மூட்டுபவள்! மத உன்மத்தினி! மானகம்யா!

மஹோன்னதம் ஆனவளே! முனித் த்யாயே !
மஹத்துவத்துடன் உலவுகிறாய் ஆதவன் வீதியில்!

அறிந்துள்ளாய் அனைத்தையும் நன்றாக - நீ
அறியாமல் நிகழ முடியாது எதுவும் எங்கும்!

இணையானவள் நீ பிரளயகால மேகங்களுக்கு!
பணிகின்றனர் சுராசுரர் மோஹம் நீங்குவதற்கு!

யமலோகப் பாவங்களை அழிப்பவளே - அந்த
யமலோக பயத்தை பூஜ்ஜியமாக ஆக்குபவளே!

யமனுக்கே அரசியே! யமனையே தண்டிப்பவளே!
யாகத்துக்கு உரியவளே! உனக்கு நமஸ்காரம்!

சம பாவனை கொண்டவள் நீ! சர்வேஸ்வரி!
சர்வ சங்க விவர்ஜிதை நீ! சங்க நாசகாரி நீ!

விருப்பு வடிவானவள் நீ ! கருணைக் கடல் நீ !
விரும்பும் வடிவானவள் நீ! காமாக்ஷி! மீனாக்ஷி!

மர்ம பேதினி! மாதுர்ய ரூபிணி! மதுர ஸ்வர பூஜிதா!
மஹா மந்த்ரவதி! மந்த்ர கம்யா! மந்த்ர ப்ரியங்கரி!

வசிக்கின்றாய் மனிதர்களின் இருதயங்களில்!
வசிக்கின்றாய் பால் வழியும் பல தருக்களில்!

துக்த வல்லியில் வசிப்பவளே! தயாபரி
தாக்ஷண்ய வடிவே! சர்வக்ஞ வல்லபி!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
8#22f. Devi's stuti

"MangalA, VaishNavee, MAyA, KAla-rAtri, DuratyayA, MahAmAyA, MAtangi, KAli, KamalavAsini, S'ivA, SahasracharaNA, and Sarva mangalaroopiNi are the twelve names of Devi. One name for each of the 12 months must be recited with devotion.

One must sing stotrAs to the MAhes'vari, in that Madhooka tree, thus:

You are lotus-eyed; obeisance to You!

You are JagaddhAtri (the Upholdress of the Universe) I bow down to Thee;

You are Mahes’vari, MahADevi, and MahAmangaLaroopiNi,
(Thou art the great Devi, and You do great good to everyone).
You destroy the sins, You give the final liberation.

You are Parames’vari, You are the World's Mother and You are of the nature of the Highest BrahmA.

You are MadadAtri (the giver of Mada, the Supreme rapture of excessive delight),

You are maddened with Mada the (Excessive Joy);

You can be reached when You are given proper veneration;

You are the the Highest. You are Intelligent; You are meditated upon by the Munis; You dwell in the Sun. You are the Lord of the several Lokas (worlds);

You are endowed with the Highest Knowledge;

You are of the color of clouds at the time of PraLaya (the Universal Dissolution).

You are worshiped by the Gods and the Asuras for the destruction of the Great Moha.

So Great Victory to Thee!

You are the Rescuer of one from the abode of Death;

You are worshiped by Yama, You are elder to Yama, You are the Controller of Yama You are worshiped by all. Obeisance to you!

You are impartial; You control all; You are unattached; You destroy the people’s worldly attachments;

You are The One to whom all look for the fulfillment of their desires;

You are the Compassion Incarnate. You are, worshiped by the names :
KAmAkshi, MeenAkshi, Marma bhedini, MAdhooryaroopas’Alini;

You are worshiped with the PraNava Om prefixed to all the Stotras and the Mantras.

You are of the nature of the Seed MAyA ; You can be realized by repeating the mantra You can be pleased by the deep concentration (NididyAsana) on you.

You can be reached by all men through their minds

You do things that are pleasing to the MahA Deva.

You dwell in the trees As’vattha, Peepul, Neem, Mango, Kapittha , and Jujube.

You are the Palm tree, Arka, Karira and Ksheera trees.

You reside in Dugdha valli(the milky juice of plants);

You are the Compassion Incarnate; and fit to show mercy.

You are sincerity and kindness;You are the Consort of the Omniscient.

So Victory to Thee!

 
8#22g. பலஸ்ருதி

தினம் தேவிக்கு உகந்த இந்தத் துதியினை
மனம் நிறைந்த பக்தியுடன் ஓதுபவர்களுக்கு

ஏற்படாது பிறவிப் பிணியும், அதனால் பயமும்!
ஏற்படாது பகைவர்களால் துன்பமும், துயரமும்!

சித்திக்கும் சதுர் வித புருஷார்த்தங்களும்
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பவை.

சித்திக்கும் வேதியருக்கு வேதச் செல்வம்
சித்திக்கும் க்ஷத்திரியருக்கு வீரச் செல்வம்

சித்திக்கும் வைசியருக்குப் பொருட்செல்வம்
சித்திக்கும் சூத்திரருக்கு சுகமான ஒரு வாழ்வு

சிரார்த்த காலத்தில் விருப்புடன் ஓதினால்
சிறப்படைவர் பித்ருக்கள், முன்னோர்கள்.

பக்தியுடன் தேவியை வழிபடுகின்றவன்
முக்தி அடைகின்றான் தேவியிடம் சேர்ந்து!

விளையும் இக வாழ்வில் காமிய பலன்கள்.
அழியும் அறிந்தும் அறியாதும் செய்த பாவம்.

நல்லறிவினைத் தரும் இறுதி காலத்திலும்;
நல்ல நினைவைத் தரும் இறுதி காலத்திலும்.

பூஜிக்கப் படுவான் தேவியின் பக்தன் - தேவியைப்
பூஜிக்கும் பிற பக்தர்களால், தேவியைப் போலவே!

உண்டாகும் பொன், பொருள், புகழ், பெருமை!
துண்டாகும் நரக பயமும், ஜனன மரண பயமும்!

நோயற்ற வாழ்வு வாழ்வர் தேவியின் பக்தர்கள்;
குறைவற்ற செல்வம் பெற்று அவனியில் இனிதாக!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

இத்துடன் தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் முற்றுப் பெற்றது.
 
8#22g. Phala sruti

After the worship, if a person recites this stotra, he derives all sorts merits. He who recites this Stotra daily, becomes free from of all sorts of diseases, pains and passions.

He who wants to possess wealth, gets wealth; He who wants Dharma, gets Dharma; He who wants KAma, gets the objects he desires; He who wants Moksha gets total liberation or Moksha.

The Brahmin who recites this becomes Vedavit, one who knows the Vedas; The Kshatriya gets the victory; The Vais’ya gets wealth and the S’oodra gets happiness.

If this Stotra is read with devotion and attention, the Pitris get ever lasting satisfaction, until the time of universal dissolution.

He goes to the Devi's Loka, who worships Devi with devotion. When the Devi is thus worshiped, all his desires are fulfilled and all his sins are destroyed. His mind becomes free, fearless, pure and the worshiper himself is respected and worshiped everywhere.

His fear of going into hell is destroyed by the Grace of the Devi; He does not fear anything even in his dreams. By the Grace of MahA MAyA, his sons and his grandsons, his riches and the grains multiply. He lives a healthy long life on the earth with neither fear nor worry.

If this Stotra is read with devotion and attention, the Pitris get ever lasting satisfaction, until the time of universal dissolution.

He goes to the Devi's Loka, who worships Devi with devotion. When the Devi is thus worshiped, all his desires are fulfilled and all his sins are destroyed. His mind becomes free, fearless, pure and the worshiper himself is respected and worshiped everywhere.

His fear of going into hell is destroyed by the Grace of the Devi; He does not fear anything even in his dreams. By the Grace of MahA MAyA, his sons and his grandsons, his riches and the grains multiply. He lives a healthy long life on the earth with neither fear nor worry.

The eighth skanda of Devi Bhaagavatam gets completed with this.

 
Something/ Someone was urging me to complete the Eighth Skanda today itself.

So I have posted the last three poems in Skanda 8 along with their English Translation today.

The Ninth Skanda will be launched tomorrow by the divine grace of MahA DEvi and MahA DEvA. :hail:
 
64 thiru viLaiyaadalgaL

59c. குதிரைகள் வந்தன!

அச்வ சாஸ்திர லக்ஷணங்கள் பெருந்திய
அச்வக் கூட்டதைக் கண்டதும் மக்கள்,
சொல்ல ஒண்ணாத வியப்படைந்தனர்.
செல்லுவதை ஆர்வத்துடன் நோக்கினர்.

குதிரைகளின் கனைப்பு, வாத்திய முழக்கம்,
குதிரை வீரர்களின் ஆரவாரம் எல்லாம்
கலந்து ஒலித்தது அன்று ஆலவாயில்,
காத தூரத்தில் பரிகள் இருக்கும்போதே !

பல நிறம் கொண்ட ஏழு கடல்கள் போலப்
பல நிறம் கொண்ட புரவிகளின் கடல்!
“பொங்கி எழுந்து வருவது காணீர்!
எங்கும் காணக் கிட்டாத பரிகளின் கூட்டம்!”

உடல் பூரித்தான் மன்னன் அப்போதே!
விடச் செய்தான் சிறையிலிருந்து அவரை.
பரிசுகள், பட்டாடைகள், முத்து மாலைகள்!
பரிகளின் வரவை எதிர் நோக்கி இருந்தான்.

அலகிலா விளையாட்டுடையவன் மீண்டும்
காலம் தாழ்த்தினான்; வந்து சேரவில்லை.
மீண்டும் தண்டனை வாதவூராருக்கு
தண்டலார் கைகளில் மாற்றி மாற்றி.

எக்காள ஒலிகளால் ஊரே நிறைந்தது!
அக்குளம்பு ஒலிகளும், தூசும் பரவின.
குதிரைகளின் வரவு உறுதியான பின்னர்
மதி மந்திரிக்கு மீண்டும் விடுதலை.

உயர்ந்த சாதிக் குதிரைகளைக் கண்டு
மயங்கி விட்டான் மன்னன் அரிமர்தனன்
எத்தனை எழில்! எத்தனை கம்பீரம்!
எத்தனை உயரம்! எத்தனை திறமை!

“யார் இவர்களின் தலைவன் அறிவீரா?”
“யான் அறிகிலேன் மன்னர் மன்னா!”
“யானே தலைவன்!” என முன்வரவில்லை
யாவரையும் மயக்கும் அந்தப் பேரழகன்!

“எம் பரிகளின் சிறப்பினைக் காண்பீர்!”
தம் வேதப்பரியின்மேல் ஆரோஹணித்து,
மல்ல, மயூர, வானர கதிகளையும்
வல்லி, சரகதிகள், விசித்திர நடைகள்

நடாத்திக் காட்டி அசத்தினர் பிரான்.
நடாத்திக் காட்டின சிவ கணங்களும்.
பரிவேடத்தில் இருந்த நரிகளை அவ்வாறே!
பரவசம் அடைந்தனர் பார்வையாளர்கள்!

“யார் உங்கள் தலைவன் கூறுங்கள்!”
“யானே தலைவன்!” என முன் வந்தான்.
சிவ சேவகனைக் கண்டதும் மெய் மறந்து
சிவ அஞ்சலி செய்தான் அரிமர்தனன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


 
64 THIRU VILAIYAADALGAL

59 (C). THE ARRIVAL OF THE HORSES.

The people were amazed to see to such a large group of horses – each of which was sturdy and strong. They watched with interest as the horses trotted by.

The neighing of the horses, their foot steps, the conversation among their riders, the sound of the blowing horns and beating of drums could be heard in Madurai, even when the horses were miles away.


It was as if the seven seas in different hues had risen up together. The king became joyous. He ordered his minister to be released from the prison. He presented him with silk, jewels and gold.


The horses did not arrive as per plan. Siva delayed the delivery of the horse. The king threw his minister in prison again.


Again the sound of the horses was heard. The cloud of dust filled the city. When the arrival of the horses was confirmed, the minister was released again.


The king was very pleased with those horses.They appeared so sturdy so strong, so tall and so talented.

“Who is the leader of this group?” the king demanded to know. “I do not know sire!” replied the minister. Siva did not come froward claiming to be the leader.


Instead he invited the king to watch the show of talent and training imparted to the horses. He made his horse run, walk an trot in various styles. All the Siva Ganaas did the same with their horses.


“Who is the leader?”Siva came forward.”It is I!” At the sight of the disguised Siva, the king forgot himself and did anjali to him.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#10b. ஞான திருஷ்டி

அறிந்தான் தக்ஷகன் கஸ்யபன் மகிமையை!
முறிப்பானோ விஷத்தைத் தன் மந்திரத்தால்?

“மன்னனைக் காப்பாற்ற மட்டுமே வந்தாய் என
மனமார நம்பிவிட முடியவில்லை என்னால்!

உண்மையைக் கூறு ஒளிக்காமல் என்னிடம்,
மன்னனைக் காப்பதால் என்ன லாபம் உனக்கு?

ஆதாயம் இல்லாமல் செட்டி ஒருவன் பாயும்
ஆற்றோடு போக மாட்டான் அறிவேன் நான்.

சும்மா ஆடாது சோழியன் குடுமி – என்னிடம்
சொல்லு உனக்கு இதனால் என்ன ஆதாயம்?”

“மன்னனைப் பிழைக்க வைத்தால் எனக்குப்
பொன், பொருள், பரிசுகள் கிடைக்குமே!” என

'பொருளாசை கொண்ட வெறும் மனிதன் இவன்!
அருளாசை கொண்ட பெரும் புனிதனல்ல இவன்!'

“தருவேன் அள்ளி அள்ளி இப்போதே உனக்கு
அரசன் தருவதைவிட அதிகப் பொன் பொருள்!

திரும்பிச் செல்லலாம் நீ உன் இல்லத்துக்கு!
விரும்பி அளிக்கலாம் உன் சுற்றத்தினருக்கு!”

ஆலோசித்தான் கஸ்யபன் பின் விளைவுகளை;
அளவில்லாத செல்வம் கிடைக்கும் உறுதியாக.

மன்னனைப் பிழைக்க வைத்தால் கிடைக்கும்
மண்ணுலகு உள்ள வரையில் பெயரும் புகழும்.

கைவிடக் கூடாது நாட்டு மன்னனின் நலனை;
கைவிடக் கூடாது நாட்டு மக்களின் நலனை.

“தீரும் மரணமா இது அன்றித் தீரா மரணமா?”
தீர ஆராய்ந்தான் தன் ஞான திருஷ்டியில்!

ஞாலம் ஆளும் மன்னன் பிழைப்பது அரிது என
ஞான திருஷ்டியில் தெரிந்தது மிகத் தெளிவாக.

“தருவதாகச் சொன்ன தனத்தைத் தா!” என்று கேட்டுப்
பெரும் பொன் பொருளைப் பெற்றான் தக்ஷகனிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 

2#10b. Divya Dhrushti

Takshakan realized the power of Kasypan now. He asked Kasyapan,”It is hard to believe that you had come only to save the king’s life. What do you stand to gain by saving the king’s life. I know there must be an ulterior motive for you action. Be frank and tell me the truth”

Kasyapan told Takshakan, “I am sure the king will shower rich gifts on me if I save his life.” Takshakan realized that Kasyapan was driven by his needs and greed and not by the noble thought of saving the king’s life.

“I can give you far more richer gifts than the king can. You may take them and go back home. You may share the wealth with your friends kin and kith and live happily!” Now Takshakan tempted the greedy and needy Kasyapan openly.

Kasyapan thought for some time. ‘I must save the king for the sake of the citizens. I am sure to get rich gifts either from the king or from Takshakan. But if I save the king my name will etched in the history of mankind for eternity.’

But he also studied the future of the king Pareekshit with his divya dhrushti. He found out that there was no way in which the king’s life could really be saved.

Kasyapan was a practical man and accepted the riches given to him by Takshakan and decided to go back home – without meeting Pareekshit.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1a. பஞ்ச சக்திகள்

நாராயணன் கூறினான் நாரத முனிவனிடம்
"நாம் வணங்கும் பஞ்ச சக்திகள் இவர் ஐவர்.

துர்கா தேவி, ராதா தேவி, லக்ஷ்மி தேவி,
சரஸ்வதி தேவி, சாவித்திரி தேவி என்பவர்!"

நாரதன் வினவினான் நாராயணனிடம்,
"கூறுவீர் அவர்கள் யார் யார் என்பதை!

கூறுவீர்கள் அவர்கள் இலக்கணத்தையும்,
யாரால் உண்டாக்கப் பட்டவர்கள் என்றும்!

எதனால் பஞ்ச சக்தியர் என்ற பெயர்?
என்ன சிறப்பு பஞ்ச பிரகிருதிகளுக்கு?

வரலாற்றைக் கூறுங்கள் சக்தியர் பற்றி!
வழிபடும் முறைகளையும் கூறுங்கள்!

குணச் சிறப்புக்களையும் கூறுங்கள்!
வணக்கத்துக்குரிய தலங்கள் எவை?"என

"ப்ரக்ருதிகள் ஆவர் ஐந்து சக்திகள்
கூற இயலாத பெருமைகள் கொண்டு.

கூறுவேன் என்னால் இயன்ற அளவுக்கு
கூற இயலாத சக்தியரின் பெருமையை.

'ப்ர' இது எழுச்சி, 'க்ருதி' இது சிருஷ்டி;
'ப்ரக்ருதி' ஆகும் 'சிருஷ்டியின் எழுச்சி'!

சிருஷ்டியால் மனவெழுச்சி எனலாம்
சிருஷ்டியின் எழுச்சி என்று கூறலாம்.

'ப்ர' ஸத்துவம், 'க்ரு' ராஜசம், 'தி' தாமசம்;
' ப்ர' ஆதி; சிருஷ்டிக்கு முந்தியது எனலாம்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1a. Pancha Prakrutis

NArAyaNan told NAradan, "These are the Pancha Prakrutis we worship namely DurgA Devi, RadhA Devi, Lakshmi Devi, Saraswati Devi and SAvitri Devi."

NAradan asked NArAyaNan,"Please tell me who these five Devis are, define their qualities, who has created them, how they got these names, what is their greatness, what is their history, how to worship them and the holy places devoted to them, in great detail."

NArAyaNan replied,"Pancha Prakrutis are the Five Devis. It is impossible to relate their greatness in full. I will expatiate to my best capacity.

(Pra + kruti) means the ('rise of' + 'srushti'). It can also mean the Power that existed prior to srushti. 'Pra' is SAtvic in nature, 'kru' is RAjasic in nature and 'ti' is TAmasic in nature."
 
64 THIRU VILAIYAADALGAL

# 59(d). கயிறுகள் மாறின.

“உம் பொன் பொருள் தந்தார் இவர்
எம்மிடம் இக்குதிரைப் படைக்காக.
சர்வ லக்ஷணங்களும் பொருந்திய
அபூர்வ குதிரைப்படை இதோ தயார்.

இன்று கயிற்றை மாற்றிக் கொண்டால்,
இவை உம்முடையவை ஆகிவிடும்.
நாளை என்ன நிகழ்ந்த போதிலும்
நமக்குள்ளே எந்த வழக்கும் இல்லை!”

புரவி வாணிகம் நடப்பது இங்ஙனமே.
புவியாளும் மன்னன் ஒப்புதல் தந்தான்.
புரவி இலக்கணத்தை விளக்கினார் பிரான்
புரவிகளின் வகைகளும், இயல்புகளும்;

போரிடும் தன்மையை விவரித்தார்.
நாடுகள் எவற்றிலிருந்து வந்துள்ளன;
எந்தக் குதிரைகள் எந்த நாட்டிலிருந்து;
அந்தக் குதிரைகளைத் தனியே காட்டினார்.

நாடுகளின் சிறப்பைப் பட்டியல் இட்டார்.
நானா குதிரைகளின் உடலில் சுழிகள்,
சுழிகளின் உண்மைப் பலன்கள், பயன்கள்;
தெளிவாக எடுத்து இயம்பினார் பிரான்.

சீரிய பரிகளுக்குச் சிறந்த அலங்காரம்!
சிலம்புகள், சதங்கைகள், கிண்கிணிகள்,
சந்தனம், குங்குமம், தூப தீபங்கள்,
எந்தக் குறையையும் வைக்கவில்லை!

“வழுதி வாழ்க!” என்று வாழ்த்தினார்.
வழுதி கயிற்றைப் பெற்றுக் கொண்டான்.
வேதப்பரி ஒன்றைத் தவிர அங்கிருந்த
மாயப் பரிகள் எல்லாம் கை மாறின.

மன்னனிடம் பரிகளைப் பெற்றுக் கொண்டு
அன்புடன் பந்தியில் சேர்த்தனர் சேவகர்கள்;
மன்னன் அளித்த தூய வெண் பட்டை
அன்புடன் அணிந்தார் திருமுடியில்.

மற்ற சேவகர்களுக்குப் பட்டாடைகள்
மற்ற அழகிய நிறங்களில் அளித்தான்;
கொற்றவனிடம் விடைபெற்று மறைந்தனர்.
மற்றவர் தங்கள் இல்லம் திரும்பினர்.

வாதவூராருக்குச் சிறந்த பாராட்டுக்கள்;
"போதும்! போதும்!" என்னும்படிப் பரிசுகள்.
அரன் கூறி மகிழ்ந்தான் அன்னையிடம்,
நரிகள் பரிகளாக மாறிய விந்தையை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYADALGAL

59 (D). HANDING OVER THE HORSES.

“I was paid handsomely in gold by your loyal minister for these horses. The moment I hand them over, our business finishes. Whatever may happen tomorrow, there will be no dispute between the two of us!”

Usually this was how the horse trading was done. So the king agreed to it.


Siva went on to explain the the types of horses, their characteristics, nature, talents, how well they would fight, from which countries they had been imported etc.


He went on elaborate the greatness of each of those countries. He spoke about the colors and circle marks on the bodies of the horses and their interpretations.


Each horse was decorated with anklets, kinkini, silver bells, sandal paste and kumkum. They were shown deepam and dhoopam also.


Siva shouted, “Long live the king!”. All the horses except the one Siva rode on, had changed hands. Siva wore the pure white silk cloth given by the king on his head. The other SivagaNas received rich silk in various hues.


They all took leave of the king and went back. The citizens were happy to witness these happenings and returned home. The minster was honored and showered with more gifts.


Siva had an enjoyable time relating to his Devi of how the wild cunning foxes were transformed into handsome horses.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#10c. முனிவர்களின் கனிகள்


நாகசம் நகரை நிர்மாணித்திருந்தான் பரீக்ஷித்;
நாகத்திடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள.

“கோட்டையின் உப்பரிகையில் வசிக்கின்றானாம்;
சோடை போகாத காவல் நடுவே வசிக்கின்றானாம்.

ஜாக்கிரதையாக இருக்கின்றானாம் நாள் முழுதும்!”
ஜனங்கள் பேசக் கேட்டு இதை அறிந்தான் தக்ஷகன்.

“பாண்டவர் வம்சத்தில் தோன்றியது இல்லை
பரீக்ஷித் போன்ற சிறந்த ஒரு அரசன் இதுவரை.

நிஷ்டையில் இருந்த முனிவரை அநாவசியமாகக்
கஷ்டப் படுத்தினான் கழுத்தில் பாம்பைப் போட்டு.

எப்படி நுழைவது காவலை மீறிக் கோட்டையில்?”
எண்ணினான் தக்ஷகன் தான் செய்ய வேண்டியதை.

ஆணையிட்டான் தன் இனத்து சர்ப்பங்களிடம்,
அருந்தவ முனிவர்களின் உருவில் வருமாறு.

“சுவையும், மணமும் உள்ள கனிகளை ஏந்திச்
சமர்பிக்க வாருங்கள் மன்னன் பரீக்ஷித்துக்கு!”

கிருமி ரூபத்தில் பிரவேசித்தான் தக்ஷகன்
இருப்பதிலேயே பெரிய, அழகிய கனியில்.

பழங்களுடன் சென்றனர் கபட முனிவர்கள்;
பரீக்ஷித் பதுங்கியிருந்த காவல் கோட்டைக்கு.

“அபிமன்யு குமாரன் நம் நாட்டு மன்னன் அன்றோ?
அபிமந்திரித்துக் கொண்டு வந்துள்ளோம் கனிகளை!

அரசனைக் காக்கும் அற்புதக் கனிகள் இவை!
அளிக்க வேண்டும் அரசனிடம் இவற்றை!” என

நாகர்கள் முனிவர்கள் வேடம் தரித்துக் கொண்டு
காவலர்களை விடாமல் தொல்லை செய்தனர்.

“உள்ளே அனுமதியாவிட்டாலும் பரவாயில்லை.
உள்ளே அனுப்பி விடுங்கள் மந்திரித்த கனிகளை!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#10c. The unusual fruits

King Pareekshit had prepared a well protected fort to save himself from the curse of the sage’s angry son. He lived in the top floor of the fort – under tight security arrangements. Everyone around him was on guard for spotting anything unusual.

Takshakan learned these from the citizens of Pareekshit. It was true that Pareekshit was one of the greatest kings in the dynasty of PaaNdu.

But he had incurred sin and had been cursed by the sage’s son for his irresponsible behavior. He had thrown a dead snake on the sage’s neck as if it were a garland.

Takshakan wondered how to enter the palace unseen by the guards to fulfill the curse. He ordered the snakes of his race – who had the rare power of assuming any form and figure – to disguise themselves as holy rushis.

They were ordered to bring a baskets full of luscious looking delicious rare fruits. Then Takshakan entered into the best fruit in the form a worm.

The serpents disguised as sages went to the fort of the king and pleaded to be allowed to enter inside to meet the king and hand over to him the basket of fruits personally.

“We have chanted mantra and made these fruits powerful to save the king from all dangers. Please hand over these to the king. We do not mind even if we are not allowed to enter the fort but these fruits must be given to the king!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1b. பஞ்ச ப்ரக்ருதியர்.

ஐந்து வித ப்ரக்ருதியான சக்தி தேவி பிரமத்துடன்
ஐக்கியம் ஆகும் போது சிற்சக்தியாக ஆகிவிடுவாள்.

விளங்குவாள் சக்தி தேவி சிருஷ்டியின் போது
வலப் புறம் ஆணாக; இடப் புறம் பெண்ணாக!

தோற்றம் இரண்டு உருவங்கள் என்றாலும் - இருவரும்
தோன்றுவர் அக்னியில் உஷ்ணம் போல ஒன்றாகவே!

நித்தியமானது அந்த சக்தி, அழிவில்லாதது அந்த சக்தி,
சத்தியமானது அந்த சக்தி, பிரம்ம ஸ்வரூபமானது அது.

சர்வம் பிரம்ம மயம் என்று உணர வேண்டும் - எனினும்
சிருஷ்டியின் போது இரண்டு உருவாகத் தோன்ற விரும்பி

மூலப் ப்ரக்ருதி என்ற பெண் வடிவாகிய ஈஸ்வரி
சீலம் மிக்க சிவரூப ஆணுருவைத் தோற்றுவித்துத்

தன்னியல்பாக இரண்டாகப் பிரிந்து தோன்றினாள்!
தோன்றினர் ஐவர் மூல ப்ரக்ருதியின் ஏவலினால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1b. Pancha Prakrutis

Devi who exhibits as the Pancha Prakrutis will become the chit shakti (intelligence) of BrahmaN when she is merged with him inseparably.

During the creation Devi would exhibit a male form in the right side of her body and a female form in the left side of her body. These may appear as two different forms - they but coexist as inseparably as the heat and Agni.

That shakti is the permanent one, the indestructible one, the eternal truth and is in fact Brahman in itself. "Sarvam Brahma mayam!"

Devi wants to appear as two separate forms during srushti and she created the male form in her right half of the body.

The other Panch Prakrutis were created by Moola Prakruti from her own self.

 
64 THIRU VILAIYAADALGAL

60a. பரியை நரியாக்கியது.

# 60 (a). பரியை நரியாக்கியது.

மங்கல வாத்தியங்கள் நன்கு முழங்கின;
மங்கல மங்கையர் எதிரே வந்தனர்;
பரிசுகளுடனும், வரிசைகளுடனும்,
பரிபூர்ண பக்தியுடன் சென்றார் இல்லம்.

“நான் விரும்பியபடியே அரசன் அளித்த
பொன்னும் பொருளும் அரன் பணிக்கே!
அத்தன் அருளால் மன்னனுக்கு எத்தனை
உத்தம ஜாதிக் குதிரைகள் கிடைத்துள்ளன!

அரன் திருவடியை மறவேன் எந்நாளும்;
தவம் ஒன்றே சிறந்த வாழ்க்கை நெறி!”
பக்தி என்னும் பேரின்பத்தில் திளைத்து
முக்தி பெறுவதையே விழைந்தார் அவர்.

காலைப் பொழுது மாறி மாலை ஆயிற்று.
மாலை மயங்கியதும் இரவு ஆயிற்று.
பரிகள் எல்லாம் முன்போலவே – காட்டு
நரிகளாகவே மாறிப் போய்விட்டன.

நரிகளுக்கு அன்று நல்ல விருந்து;
பரிகளைக் கடித்துக் குதறலாயின.
பெருகும் உதிரத்தை விரும்பிப் பருகின.
பொருது குடலைச் சுவைக்கலாயின.

குதிரைகளின் கனைப்பொலி, காலடிகள்,
உதிரம் சிந்தும் குதிரைகளின் ஓலம்,
நரிக் கூட்டங்கள் ஊளை இடும் ஒலி,
உறக்கம் கலைந்தது காவலர்களுக்கு.

தப்பிச் செல்லலானது நரிக் கூட்டம்!
அப்போதே ஓடின அனைத்து வீதிகளிலும்!
வளர்ப்புப் பிராணிகளைத் தின்று தீர்த்தன!
வளர்ப்புப் பறவைகளும் தப்பவில்லை!

வேத கோஷமும், தேவகீதமும் கேட்கும்
மதுரையில் ஊளைகளும், ஓலங்களுமா?
காவலர்கள் அஞ்சியபடி சென்று இதைக்
கோவலனிடம் விண்ணப்பித்தனர்.

பரிகளைக் கண்டு மகிழ்ந்த மன்னன்
நரிகளைக் கேட்டு சீற்றம் அடைந்தான்;
வஞ்சித்துவிட்ட வாதவூரான் மீது மீண்டும்
வெஞ்சினம் கொண்டு வெறுப்படைந்தான்.

கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும்,
ஓட்டம் பிடித்தன காட்டுக்குள் நரிகள்!
நடந்தது எதுவுமே அறியாத அடியார்,
கடமை உணர்வுடன் சென்றார் மன்னிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

60 (A). HORSES BECAME FOXES.


The auspicious musical instruments were played. Women appeared in the front carrying the eight auspicious articles.


Maanikka vaasagar went home leaded with gifts and praises. “I have the satisfaction that all the gold taken from the King’s treasury was spent on Siva and devotees. At the same time, Siva has delivered a group of strong horses to the satisfaction of the king. I will never forget the lord’s lotus feet. Tapas is the only right way to live.”


He wanted to immerse himself in Siva bakthi and attain mukthi. The day rolled on and it became night time. All the horses now got transformed back into foxes as before.


They had a royal feast on the royal horses. They drank the fresh blood gushing from those horses and ate their flesh. The old and sickly horses tried to fight off the foxes, but in vain.


The mixed sound of the horses neighing, struggling and crying in pain along with the howling of the foxes woke up the entire city.


The foxes escaped when the stable doors were opened. They ran through all the streets of the city eating the domestic animals and birds.

The city famous for its Vedic chanting and divine music was filled with cries of pain and howling. The soldiers were shivering with fear when they reported the matter to the king.


The king who was happy to see the horse was now angered by the reports of the foxes. He was terribly angry with the minister for having played such a mean trick. The foxes ran away to the jungle when the city gate was opened.

Unaware of all these happenings, the pious minister went to meet the king the first thing next morning.
 
2#10d. சாபம் பலித்தது

மன்னனிடம் சென்று கூறினர் காவலர்கள்
மன்னன் நம்பி விட்டான் கபட ரிஷிகளை.

“கனிகளைப் பெற்றுக் கொண்டு வாருங்கள்.
முனிவரிடம் நாளை வருமாறு கூறுங்கள்.

வந்தனத்தைத் தெரிவியுங்கள் அவர்களிடம்
எந்த உதவி தேவை அறிந்து கொள்ளுங்கள்”

‘வந்த காரியம் இனிதே முடிந்தது!’ என்று
சொந்த இடம் திரும்பினர் கபட ரிஷிகள்.

கொண்டு வந்தனர் மன்னனிடம் பழங்களை;
கண்டதில்லை யாரும் அத்தகைய பழங்களை!

“அருமையாக மணம் வீசும் இந்தக் கனிகளை
ஆளுக்கொன்றாகப் புசிப்போம் அனைவரும்”

பெரிய கனியை எடுத்துப் பிளந்தான் மன்னன்;
கரிய கண்களுடன் இருந்தது ஒரு சிவந்த புழு!

“அஸ்தமன காலம் நெருங்கி விட்டபடியால்
அச்சம் தேவையில்லை இனி விஷம் பற்றி!”

புழுவாக இருந்த தக்ஷகனை எடுத்துத் தன்
கழுத்தில் வைத்துக் கொண்டான் பரீக்ஷித்!

சுயவுருவெடுத்துக் கொண்டான் தக்ஷகன்;
தயக்கம் இன்றிக் கடித்தான் பரீக்ஷித்தை!
.
“ஓ” வென்று அலறினர் அருகில் இருந்தவர்!
ஓடிச் சென்றுவிட்டான் ஆகாய மார்க்கமாக!

காலனைக் கண்டது போல அஞ்சி ஒதுங்கினர்
கோவலனைக் கொன்று விட்டுச் சென்றவனை!

முனி குமாரன் கவிஜாதன் தந்த சாபத்தைக்
கனி மூலம் நிறைவேற்றி விட்டான் தக்ஷகன்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Devi Bhaagavatm - skanda 2

2#10d. The curse got fulfilled

The guards of the fort went to the king and told him about the rushis. Pareekshit believed that they were indeed his well wishers.

He told the guards, “Give those sages my regards. Find out what they want from me. Tell them to come again tomorrow. Bring that basket of fruits to me.”

The serpents disguised as sages were more than happy when the basket of fruits was taken to the king They returned to their abode happily – having fulfilled their mission successfully.

Pareekshit was happy to see the luscious and delicious fruits in the basket. He told his ministers, “Let us all share and eat these lovely fruits while are still fresh!”

He took the largest fruit in which Takshakan had entered and split it into two. He saw in it a small red worm with big black eyes.

He said to himself, “Now that the sunset is nearing fast, there need be no more fear about the curse and the poison!”

He took the worm from the fruit and placed it on his neck playfully. Now Takshakan assumed his real form and bit Pareekshit mercilessly. The ministers were shocked beyond words and started screaming their heads off.

Takshakan went away fast after his mission was fulfilled. Those who faced him took off in terror – as if they had seen Yama, the god of death.

The curse given by Kavijaathan was fulfilled by Takshakan through the clever use of the fruits.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1c. துர்க்கா தேவி

தோன்றினாள் அன்னை துர்க்கா தேவி
தன்னை வணங்குபவருக்கு அருளிட!

பிரியமானவள் இவள் சிவ பெருமானுக்கு;
பிறவி தந்தாள் இவள் விக்ன விநாயகனுக்கு.

பிரம்ம ஸ்வரூபிணி; விஷ்ணு மாயை இவள்;
பிரம்மனுக்கும், பிறருக்கும் தெய்வம் இவள்;

நிறைந்துள்ளாள் எங்கெங்கும் நீக்கமற - தருவாள்
குறைவின்றி பக்தர்கள் வாழ்வில் மேன்மைகளை!

சுகம், மங்களம், புகழ், மேன்மையை அளிப்பாள்
துக்கம், அசுபம், பிற பீடைகளை இவள் அழிப்பாள்.

காப்பாள் பலஹீனர்களையும் அசக்தர்களையும்;
கருவூலம் தேஜஸ், பலம், தைரியம் இவற்றுக்கு.

திகழ்வாள் பலவேறு குணங்களின் வடிவாக!
திருமறைகள் உரைக்கின்ற வடிவங்கள் சில;

அறிவு, உறக்கம், பசி, தாகம், ஒளி மற்றும்
பொறாமை, கவனம், கருணை, நாணம், பிரமை

லக்ஷ்மி, துஷ்டி, தைரியம், மாயை என்று பல
லக்ஷணங்களாகத் திகழ்பவள் துர்க்கா தேவி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1c. DURGGA DEVI

The Mother of Ganesha and the consort of Lord SivA - Durga Devi is the first and foremost among the pancha prakrutis. She is the most auspicious. She is NArAyaNi and VishNu mAyA. She is of the nature of poorNa Brahman.

This eternal, all auspicious Durga Devi is the Presiding Deity of all the other Devas. She worshiped and praised by all the DEvAs, Gods, Munis, and Manus.

When Durga Devi is pleased, she destroys all the sorrows, pains and troubles of her devotees who have taken refuge in Her.

She gives them Dharma, name, fame, bliss, happiness and the final Liberation! She is Omnipotent and is worshiped by all the Siddha PurushAs.

This Great Devi exhibits herself in many forms as the intelligence, sleep, hunger, thirst, shadow, drowsiness, fatigue, kindness, memory, caste, forbearance, errors, peace, beauty, and consciousness, contentment, nourishment, prosperity, and fortitude.

She is sung in the Vedas as MahA MAyA, of the nature of the Universe. In reality, She is the S’akti of the whole Universe and the S’akti of Brahman.


 

Latest posts

Latest ads

Back
Top