64 THIRU VILAIYAADALGAL
60b. தண்டனை, விடுதலை
# 60 (b). தண்டனை, விடுதலை
வாதவூரான் ஒரு மாயக் கள்வன்;
ஏதும் அறியாதவன் போன்ற எத்தன்;
பொன்னையும், பொருளையும் கவர்ந்தான்,
இன்னமும் பல தொல்லைகள் தந்தான்!
பரிகள் என்று வாங்கி வந்தவை
நரிகளாக மாறியது என்ன மாயம்?
என்ன தண்டனை தந்தாலும் அது
சின்ன தண்டனையே அவனுக்கு!
“வாரும் வாரும் திருவாதவூராரே!
யாருமே உம்போல் இருந்ததில்லை.
ராஜாங்க காரியங்களைத் தாங்கள்
ராஜவிசுவாசத்தோடு செய்கின்றீர்!”
“குற்றம் ஏதும் நிகழ்ந்ததா மன்னா?
சற்றும் எனக்குப் புரியவில்லையே!”
“குற்றம் என்ன என்பதை அறியீரா?
சுற்றம் பழிக்கும் செயல் செய்தீரே!
பரிகள் நடு இரவில் நரிகள் ஆயின!
பரிகளின் குடலைப் பிடுங்கித் தின்றன!
ஊளையிட்டு ஊரெங்கும் உலவின!
வளர்ப்புப் பிராணிகளைத் தின்றன!
பாசாங்கு இனிமேல் பலிக்காது இங்கே.
மோசம் செய்தீர் அந்தண குலத்தவர் நீர்!
என்ன தண்டனை தந்தாலும் தகும்
பொன்னைத் திரும்பத் தரும்வரை.”
காலதூதர் போன்ற தண்டலார் - மனம்
போல தண்டனை தரத் தொடங்கினார்.
உச்சி வெய்யிலில் நிறுத்தி வைத்தார்.
உச்சந் தலையில் கல்லை வைத்தார்.
சிவனை நினைத்து தியானித்தவாறே
நிலத்தில் விழுந்து அவனை விளித்தார்!
மணி வாசகரைக் காக்க விரும்பினான்
பணி அணிநாதன் பிறை சூடும் பிரான்.
வைகை ஆற்றில் வெள்ளம் பொங்கியது!
கைவைக்க இடம் இல்லாமல் பரவியது!
நதியின் கரைகள் உடைந்து போயின.
நதியில் மிதந்தன மரங்கள் வேருடன்.
பச்சைப் பயிரை வைகை விழுங்கியது!
அச்சம் தரும் அழிவுகளைச் செய்தது!
மதிலைத் தாண்டி நகரில் நுழைந்து,
மக்கள் இல்லங்களை நாசம் செய்தது.
நரிகளால் ஏற்பட்ட துன்பம் போதாதா?
பெருகும் வைகையும் துணை போகலாமா?
அரன் திருவிளையாடல்களில் ஒன்றோ?
அரசன் செங்கோல் வளைந்து விட்டதோ?
தண்டலார் தண்டனை தருவதை மறந்து,
தன் உடமைகளைக் காக்க விரைந்தார்.
விடுதலை பெற்றார் வாதவூரார் – ஆயினும்
விடவில்லை சிவ தியானத்தைச் சற்றும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
60b. தண்டனை, விடுதலை
# 60 (b). தண்டனை, விடுதலை
வாதவூரான் ஒரு மாயக் கள்வன்;
ஏதும் அறியாதவன் போன்ற எத்தன்;
பொன்னையும், பொருளையும் கவர்ந்தான்,
இன்னமும் பல தொல்லைகள் தந்தான்!
பரிகள் என்று வாங்கி வந்தவை
நரிகளாக மாறியது என்ன மாயம்?
என்ன தண்டனை தந்தாலும் அது
சின்ன தண்டனையே அவனுக்கு!
“வாரும் வாரும் திருவாதவூராரே!
யாருமே உம்போல் இருந்ததில்லை.
ராஜாங்க காரியங்களைத் தாங்கள்
ராஜவிசுவாசத்தோடு செய்கின்றீர்!”
“குற்றம் ஏதும் நிகழ்ந்ததா மன்னா?
சற்றும் எனக்குப் புரியவில்லையே!”
“குற்றம் என்ன என்பதை அறியீரா?
சுற்றம் பழிக்கும் செயல் செய்தீரே!
பரிகள் நடு இரவில் நரிகள் ஆயின!
பரிகளின் குடலைப் பிடுங்கித் தின்றன!
ஊளையிட்டு ஊரெங்கும் உலவின!
வளர்ப்புப் பிராணிகளைத் தின்றன!
பாசாங்கு இனிமேல் பலிக்காது இங்கே.
மோசம் செய்தீர் அந்தண குலத்தவர் நீர்!
என்ன தண்டனை தந்தாலும் தகும்
பொன்னைத் திரும்பத் தரும்வரை.”
காலதூதர் போன்ற தண்டலார் - மனம்
போல தண்டனை தரத் தொடங்கினார்.
உச்சி வெய்யிலில் நிறுத்தி வைத்தார்.
உச்சந் தலையில் கல்லை வைத்தார்.
சிவனை நினைத்து தியானித்தவாறே
நிலத்தில் விழுந்து அவனை விளித்தார்!
மணி வாசகரைக் காக்க விரும்பினான்
பணி அணிநாதன் பிறை சூடும் பிரான்.
வைகை ஆற்றில் வெள்ளம் பொங்கியது!
கைவைக்க இடம் இல்லாமல் பரவியது!
நதியின் கரைகள் உடைந்து போயின.
நதியில் மிதந்தன மரங்கள் வேருடன்.
பச்சைப் பயிரை வைகை விழுங்கியது!
அச்சம் தரும் அழிவுகளைச் செய்தது!
மதிலைத் தாண்டி நகரில் நுழைந்து,
மக்கள் இல்லங்களை நாசம் செய்தது.
நரிகளால் ஏற்பட்ட துன்பம் போதாதா?
பெருகும் வைகையும் துணை போகலாமா?
அரன் திருவிளையாடல்களில் ஒன்றோ?
அரசன் செங்கோல் வளைந்து விட்டதோ?
தண்டலார் தண்டனை தருவதை மறந்து,
தன் உடமைகளைக் காக்க விரைந்தார்.
விடுதலை பெற்றார் வாதவூரார் – ஆயினும்
விடவில்லை சிவ தியானத்தைச் சற்றும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.