64 THIRU VILAIYAADALGAL
61d. அடியவர் பெருமை.
# 61 (d). அடியவர் பெருமை.
வந்தியின் கூலி ஆளாக வேலைக்கு
வந்துபோனவன் உண்மையில் யார்?
மன்னன் மிகவும் மருண்டு விட்டான்;
உண்மையை அறிய வேண்டும் உடனே!
கூடை மண்ணை மட்டுமே கொட்டி
உடைப்பை அடைத்துவிட்டான் அவன்!
கரையையும் உயர்த்திவிட்டான் – பின்
கண்ணிலிருந்து மறைந்தும் விட்டான்.
மந்திரியை அனுப்பினான் மன்னன்,
வந்தியைத் தன்னிடம் அழைத்து வர.
“என்ன துயருக்கு அறிகுறியோ இது?”
என்றே அஞ்சினாள் வந்திக் கிழவி.
வானிலிருந்து இறங்கியது ஒரு விமானம்,
வந்தியை அமர்த்திச் சென்றது மேலே!
பூ மழை பெய்தது! இன்னிசை ஒலித்தது!
பூவுலகு நீத்து சிவலோகம் சென்றாள் வந்தி.
வியப்பின் விளிம்பிற்கே போய்விட்டான்
மயக்கும் காட்சிகளைக் கண்ட மன்னன்.
அளித்தது மனஅமைதியை அரன் அசரீரி.
தெளிவாக உண்மைகளை எடுத்துக் கூறி.
“அறவழியில் நீ ஈட்டிய பொன் பொருளை,
அறச் செயல்களுக்கே தந்தார் வாதவூரார்.
பக்தியுடன் தொண்டு செய்தவன் வேண்டியது
முக்தி ஒன்றே அன்றி வேறெதுவும் இல்லை.
துன்பம் இழைத்தாய் எம் அன்பருக்கு!
துன்பம் துடைப்பதற்கே நாம் செய்தோம்
நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி
பாரினில் நடத்தினோம் ஒரு நாடகம்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
61d. அடியவர் பெருமை.
# 61 (d). அடியவர் பெருமை.
வந்தியின் கூலி ஆளாக வேலைக்கு
வந்துபோனவன் உண்மையில் யார்?
மன்னன் மிகவும் மருண்டு விட்டான்;
உண்மையை அறிய வேண்டும் உடனே!
கூடை மண்ணை மட்டுமே கொட்டி
உடைப்பை அடைத்துவிட்டான் அவன்!
கரையையும் உயர்த்திவிட்டான் – பின்
கண்ணிலிருந்து மறைந்தும் விட்டான்.
மந்திரியை அனுப்பினான் மன்னன்,
வந்தியைத் தன்னிடம் அழைத்து வர.
“என்ன துயருக்கு அறிகுறியோ இது?”
என்றே அஞ்சினாள் வந்திக் கிழவி.
வானிலிருந்து இறங்கியது ஒரு விமானம்,
வந்தியை அமர்த்திச் சென்றது மேலே!
பூ மழை பெய்தது! இன்னிசை ஒலித்தது!
பூவுலகு நீத்து சிவலோகம் சென்றாள் வந்தி.
வியப்பின் விளிம்பிற்கே போய்விட்டான்
மயக்கும் காட்சிகளைக் கண்ட மன்னன்.
அளித்தது மனஅமைதியை அரன் அசரீரி.
தெளிவாக உண்மைகளை எடுத்துக் கூறி.
“அறவழியில் நீ ஈட்டிய பொன் பொருளை,
அறச் செயல்களுக்கே தந்தார் வாதவூரார்.
பக்தியுடன் தொண்டு செய்தவன் வேண்டியது
முக்தி ஒன்றே அன்றி வேறெதுவும் இல்லை.
துன்பம் இழைத்தாய் எம் அன்பருக்கு!
துன்பம் துடைப்பதற்கே நாம் செய்தோம்
நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி
பாரினில் நடத்தினோம் ஒரு நாடகம்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.