• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1N. THE OTHER DEVIS (3)

PratishtA Devi (Goddess of Fame and Celebrity) is the wife of PuNya Deva (God of Merit). She gives merits to persons in accordance to their devotion to Her. Were it not for Her, all the persons would roam around like dead persons - even while they were living.

Keerti Devi (Goddess of Fame) is the wife of Sukarma ( God of Good works). She herself a Siddha and all the people honour Her with great reverence. Were it not for Her, all the persons in this world would have been dead, devoid of any fame and without leaving behind a good name.

KriyA Devi (Goddess of Work, Efforts and Action) is the wife of “Udyoga”
(God of Enthusiasm). All honor Her greatly. Were it not for Her, the people would not have any rules regulating what they do.

Falsehood is the wife of Adharma (God of Unrighteousness). She is honored greatly by all the cheats of this world. Were she not liked by them, then all the cheats would become extinct and the world would be rid of them.

She was not visible to anybody in the Satya Yuga. Her subtle form became visible in the TretA Yuga. When the DvApara Yuga came, She became half developed. And at last when the Kali Yuga came, She is fully developed. With her wicked brother Deceitfulness, She roams around from house to house in Kali Yuga.

Peace and Modesty are both the wives of the God of good behavior. Were they not existent, all in this
world would have turned out deluded and mad.

Intelligence, Genius and Fortitude, these three are the wives of GnAna (God of Knowledge). But for these Devis, every one would become stupid and insane.


 
64 THIRU VILAIYAADALGAL

63a. “வாதப் போருக்குக் தயாரா?”

# 63 (a). “வாதப் போருக்குக் தயாரா?”

சம்பந்தரிடம் இறைஞ்சினர் அரசியாரும்,
நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் பிரானும்;
“நாட்டை இருளாக்கிய சமணத்தை இந்த
நாட்டை விட்டே நீர் விரட்ட வேண்டும்”.

“ஆலவாய் அழகனின் கருத்தையும்
அறிந்து கொள்ளுவது உசிதம் ஆகும்;”
பொற்றாமரைக் குளத்தில் நீராடி - அரன்
நற்றாள் பணிந்தார் திருஞானசம்பந்தர்;

“வருந்தியும், வாடியும், தவம் செய்தும்,
வஞ்சகர்களாகத் திரிய முடிவது எப்படி?
இம்மையும், மறுமையும் இல்லை என
நம்மைக் குழப்பிவிடுவது எதற்காக?

வேள்விகளை வேடிக்கை செய்கின்றனர்,
வேதங்களைப் பேதப்படுத்துகின்றனர்;
தண்டனிட்டு வேண்டிக் கொள்ளுகின்றேன்,
தண்டித்து சமணத்தை ஒடுக்க வேண்டும்.”

“வாதப் போருக்கு அழையும் சமணரை,
வேதத்தை பழிப்பவர் தோற்பது உறுதி.
வாதப் போரில் தோற்ற சமணர்கள்
வேதனைப் பட்டுத் தம் உயிர் துறப்பார். ”

அரசியும், அமைச்சரும் அரசனை அணுகி,
“அரன் அருளால் நல்ல உடல் நலம் பெற்றீர்.
சமணக் காட்டை அழித்து ஒழித்தால் தான் ,
நம் சைவம் மீண்டும் தழைத்து ஓங்கும்.”

வாதப் போருக்கு வழங்கினான் அனுமதி,
வேதப் பொருளின் வலிமை உணர்ந்தவன்;
இடியுண்ட நாகம் போல் நடுங்கினர் சமணர்,
திடீரென்று வந்த வாதப்போர் அழைப்பினால்.

குடும்பத்தில் ஒரே குழப்பம் நிலவியது,
கடுப்பில் இருந்தனர் அத்தனை பேரும் ;
“சிறு பயலிடம் நீர் தோற்றுக் குளித்தீர்,
அருகனின் புகழையே அழித்து விட்டீர்.

நம் முயற்சியால் வளர்ந்த சமணம்,
நம் கண் முன்பே அழிந்து போவதா?
சாம்பல் பூசித் திரிவார்கள் மக்கள்;
பாம்பணி நாதனைப் பணிவார்கள்!”

“போக வேண்டாம்!” என்று தடுத்தும்,
ஏக மனத்துடன் குழுமினர் சமணர்,
கோபம் தலைக்கு மேல் ஏறக் குடும்பம்
சாபம் இட்டுத் தன் கோபம் தீர்ந்தது.

கேடு வரும் பின்னே! மதி
கெட்டு வரும் முன்னே!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

# 63 (A). “ARE YOU READY FOR A DEBATE?”

The queen and the chief minister requested Sambandhar to drive away Jainism from their country.
Sambandhar wanted to know the opinion of lord Siva.He took a holy dip in the lotus pond and worshiped Siva.

“The Jain do severe penance and undergo severe physical troubles. At the same time they roam around scheming against other people.


They proclaim there is no life now or later. They confuse everyone. They make fun of Veda and Yaga. They must be punished and the spread of Jainism must be checked.”


Siva’s asareeri said,” Invite them for a debate. They will be defeated in the debate and be impaled to death.""

The queen and the chief minister told the king, “You became well with the grace of Siva and Sambandhar. We must revive Saivism. Let us have a debate between the Jain gurus and Sambandhar.

The king who had realized the greatness of Siva agreed readily. The Jain gurus did nit expect the change in the mind of the king.They shivered in fear secretly. Their family members turned violent,

“You were defeated by a young boy - a mere child. You have destroyed the fame of our religion. Now it will wither in front of our own eyes. The people will return to Saivism. They will smear the holy ash on their body and worship the god wearing poisonous snakes.”


They tried stop the gurus from participating in the debate but they would not listen to sense. They all assembled and started plotting against Sambandhar!
 
தேவி பாகவதம் - மூன்றாம் ஸ்கந்தம்

3# 1. ஜனமேஜயனின் ஐயங்கள்

“பிரமாண்ட உற்பத்தி நிகழ்ந்தது எவ்வாறு?
பிரமன், விஷ்ணு, சிவன் சச்சிதானந்தர்களா?

உட்பட்டவர்களா காலத்தின் தத்துவத்துக்கு?
உடல் தத்துவம் சப்த தாதுக்களால் ஆனதா?

சுகம், துக்கம் என்ற லயிப்புகள் உள்ளனவா?
போகம், ஆயுள், லீலை, இடம் எவை எவை?

எதிலிருந்து தோன்றியது பிரம்மாண்டம்?
எதிலிருந்து தோன்றினான் பிரம்ம தேவன்?

மூல கர்த்தா ஒருவரா? அன்றிப் பலரா?
சர்வ சக்தியுடையவர் மும்மூர்த்திகளா?

சூரியன், இந்திரன், வருணன், வாயுவா?
சோமன், அக்கினி, குபேரன், விநாயகனா?

பராசக்தியா? பவானியா? மாயையா?
பரம் பொருள் என்பது உண்மையில் என்ன?

வேதம் கூறும் பரம்பொருள் தேஜோ மயமானது!
வேத புருஷனுக்கு ஆயிரமாயிரம் உடலுறுப்புகள்!

பிரகிருதியோ, புருஷனோ கர்த்தா என்கின்றனர்
பிறர் கூற்றை மறுத்துப் பேசும் சில முனிவர்கள்!

தருகின்றன சத்தியமும், தர்மமும் துன்பங்கள்!
தருகிறது அதர்மமும் அளவில்லாத துன்பங்கள்!

அனைவருக்கும் துன்பம் தான் வரும் எனில்
அதர்மம், தர்மம் என்ற பாகுபாடுகள் எதற்கு?

அலை மோதுகின்றன ஐயங்கள் மனத்தில்!
அமைதி தருவீர்! ஐயங்களைப் போக்குவீர்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#1. Janamejayan’s doubts

“How was the Universe created? Are the Trinity personifications of sat chit and aanandaa? Are they subjected to the Time scale and Timi limitations?

Are their bodies made up of the seven elements like ours? Do they feel pleasures and pains as we do? What are their places, leelaas, life spans and enjoyments?

From what was Brahma created? From what was the Universe created??
Who is the main creator? Is the main creator one or many? Are the Trinity all powerful?

Or is it the Sun or Indra or Varuna or Vaayu or the Moon god , or Agni or Kubera or Vinayaka or Bhavaani or Paraashakti or Maayaa who is the all powerful god?

Does The HiraNya garban has a luminous body and thousands of eyes, ears, heads and hands? Is the creator Prakruti or Purushaa?

How is Dharma different from Adharma? Dharma and Satyam cause many difficulties. So also Adharma creates many problems.

If sorrow is the surest thing everyone is to get in life, why do we need the bifurcation as Dharma and Adharma?

My mind is riddled with these doubts. Please explain to me all these and put my mind at ease of holy Vyaasa rushi!”

King Janamejayan put forward to VyAsA the many doubts riddling his mind!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1p. பிற தேவியர்கள் (4)

காந்தி ஆவாள் தரும பத்தினி - ஆதாரம்
காந்தி பிரபஞ்ச வடிவான பரமாத்மாவுக்கு

மதி பத்தினி சோபா ஒளி உருவம் ஆனவள்
மதிக்கப் படுகின்றாள் பெண்ணாக, தானியமாக.

ருத்திர பத்தினியர் காலாக்னி தேவி, நித்ரா தேவி
மொத்த உலகத்தையும் வசப்படுத்த வல்லவர்கள்.

காலத்தின் பத்தினியர் ஆவர் இம்மூவர்.
காலத்தின் பத்தினிகள் பகல், இரவு, சந்தி.

காலத்தைக் கணிக்க இயலாது பிரமனால்
கால பத்தினிகள் இவர்களின் உதவியின்றி.

லோப பத்தினியர் ஆவர் பசியும், தாகமும்;
லோகத்தை வாட்டுவர் ஜனங்களைப் பீடித்து!

பிரபையும், தாஹிகையும் தேஜசின் பத்தினிகள்;
பிரமனும் படைக்க இயலான் இவர்கள் இன்றேல்!

கால கன்னியும், ஜரையும் ஜுர பத்தினியர்;
நிலவும் உலகில் கலகம் இவர்கள் இன்றேல்.

தந்தரையும், ப்ரீதியும் புத்திரிகள் நித்திரைக்கு
தந்தரையும், ப்ரீதியும் பத்தினிகள் சுகத்துக்கு.

வியாபித்துள்ளனர் இருவரும் எங்கெங்கும்;
வியாமோஹத்தில் ஆழ்த்துவர் எல்லோரையும்!

சிரத்தையும், பக்தியும் வைராக்கிய பத்தினியர்;
நிறைந்திருப்பர் இருவரும் ஜீவன் முக்தரிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

THE OTHER DEVIS (4)

KAnti is the wife of Dharma Deva. She is of the nature of Beauty and is very charming. Were it not for Her, ParamAtmA would not get any place to rest. This Devi is of the nature of splendor and loveliness. She is respected, worshiped and revered by everyone everywhere.

NidrA Devi and KAlAgni Devi are the wives of Rudra Deva.
All the Jeevas spend all their nights with NidrA Devi. KAlAgni is the universal conflagration at the break-up or dissolution of the world.

The Night, The Day and The SandhyA Kaalam are the three wives of KAla (Time). Even the Creator would not be able to reckon time without their help.

Hunger and thirst are the wives of Lobha (Covetousness). They are extremely powerful and can affect and afflict every living creature in the universe.

Splendor and The Ability to burn are the wives of Tejas (Fire). Without these, the Lord of the world could never have created and established order in this universe.

Death and Old age are the daughters of the KAla, and the dear wives of JvarA ( The disease). But for these two Devis, confusion will prevail in all the creation.

The TandrA (Drowsiness, Lassitude) and Preeti (Satisfaction) are the daughters of NidrA devi (Sleep). They are the dear wives of Sukha (Pleasure). They are present everywhere in every living thing in this world.

S’raddhA (Faith) and Bhakti (Devotion) are the wives of VairAgyam (Dispassion). With the help of these two Devis, all the persons can become liberated even while living and become the Jeevan MuktAs.


 
64 THIRU VILAIYAADALGAL

63b. அனல், புனல் வாதங்கள். (1)

# 63. (b). அனல், புனல் வாதங்கள்.

தீய கனவுகள் கண்டன குடும்பங்கள்,
தீய சகுனங்கள் கண்டனர் சமணர்கள்;
தீமையை விரும்பிய தீயவர் குழு,
தீமையை எண்ணி அஞ்சவில்லை.

“மன்னன் சொற்படியே நாம் செல்வோம்,
சம்பந்தனை வாதப் போரில் வெல்வோம்;”
சமணர்கள் மன்னனைக் காணச் செல்ல,
சம்பந்தரும் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

அரன் அருள் பெற்ற திரு ஞானசம்பந்தர்,
அரசன் அளித்த அரியணையில் அமர்ந்து;
அரச மரியாதையால் அவையில் சிறந்த
உதய சூரியனைப் போல் ஒளி வீசினார்.

சமணக் குரவர்களின் அசூயையோ எனில்,
கணத்துக்குக் கணம் பெருகி வளரலாயிற்று.
பால சூரியனை நிகர்த்த ஞான சம்பந்தரை,
கோப சூரியர்களாக மாறி முறைத்தனர்.

“காக்கை அமரப் பனம் பழம் விழும்,
காக்கைக்கு அதில் என்ன பெருமை?
தானே வந்தது அரசனின் ஜுரம்;
தானே தணிந்தது அரசனின் ஜுரம்!

மருத்து அல்ல உன் கைச் சாம்பல்;
மந்திரம் அல்ல உன் வாய்ச் சொற்கள்.
எல்லாம் நீயே செய்ததாக எண்ணிப்
பொல்லாத செருக்கு அடையாதே!

அனல் வாதத்துக்குத் தயாரா நீ?
அது உறுதி செய்யும் வென்றவரை,
பச்சை ஓலையில் மந்திரம் எழுதி,
பற்றி எரியும் நெருப்பில் இடுவோம்.

பசுமை மாறாது வென்ற ஓலை,
பொசுங்கிப்போனது தோற்ற ஓலை;
சிவபதிகளில் செய்யலாகாது இதை,
சிவன் நடுநிலையாளன் அல்லவே!

ஊருக்கு வெளியே நம் அனல் வாதம்;
ஊர்மக்கள் அனைவர் முன்னிலையில்;
தோற்றவர் வென்றருக்கு அடிமை,
குற்றேவல் செய்து வாழ வேண்டும்.”

அரசனும் சம்பந்தரும் ஒப்புதல் தர,
விரைந்து வெளியேறினர் குரவர்.
மதுரைக்குக் கிழக்கே ஆழ் குழியில்
கதகதக்கும், நெருப்பை வளர்த்தனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

63 (b). The ordeals by fire and water.


The families of the gurus had inauspicious dreams. The gurus themselves saw many bad omens. But they were undaunted by silly sentiments.


“We will go for debate as required and try to win over that boy!” Sambandhar also arrived there at the same time. He was offered a throne by the king. The gifted boy shone like the rising sun – seated on the throne.


The Jain gurus were annoyed to see the glory of the young boy and spoke to him very rudely.
“Often a palm fruit drops down from the tree when a crow sits on it. It is merely a coincidence. The crow should not take the credit of plucking the fruit.

The king developed a high fever all of a sudden. He got well equally dramatically. Why do you take the credit for that? Your holy ash is not a medicine. Your words are not mantras. Do not feel proud that you have performed miracle!

Are you ready for an ordeal with fire? We will write our mantras in green palm leaves and drop them in roaring fire. The leaf which remains fresh wins and the one which gets burnt is defeated.


We can’t have this in any of the Siva kshethrams. Siva is not neutral . We will have the ordeal outside the city in the presence of all the citizens. The loser becomes the slave of the winner for life”


The king and Sambandhar gave their consent. The Jain gurus left in huff to the eastern side of the city. They dug a deep pit and tended a roaring fire in it. They were impatient to get over with the ordeal and wanted to win at any cost.
 
Devi bhaagavatam - skanda 3

3# 2. பிரமனின் பதில்

வியாசர் கூறினர் ஜனமேஜயனிடம்,
“விளக்கம் கேட்டேன் நான் நாரதரிடம்.

நாரதர் கூறினார் பிரமனிடம் கேட்டதாக;
நாரதரிடம் கூறினாராம் தந்தை பிரமன்,

“இந்தக் கேள்விக்கு விடையை அறிவது
பந்த பாசம் உள்ளவர்களுக்கு இயலாது!

சாத்தியம் ஆகாது பற்றுடையவனுக்கு!
சாத்தியம் ஆகும் பற்றைத் துறந்தால்!

நாசம் அடைந்தது சிருஷ்டி பிரளயத்தில்;
நான் ( பிரமன்) மட்டுமே இருந்தேன்!

சூரியன், சந்திரன், எதுவுமே இல்லை!
மலை, மடு, செடி, கொடிகள் இல்லை!

'எப்படி யாரிடமிருந்து உற்பத்தி ஆனேன்?
எவர் காக்கின்றார் என்னை ஜலத்திலிருந்து?

ஆதாரம் எது பொங்கும் கடல் நீருக்கு?
ஆதாரம் எது என் தாமரை மலருக்கு?

தாமரைக்குக் கீழே இருக்க விடுமே பூமி!'
தாண்டிச் சென்றேன் நீரைப் பல ஆண்டுகள்.

“தவம் செய்!” என்றது விண்ணில் அசரீரி!
தவம் செய்தேன் நான் ஆயிரம் ஆண்டுகள்!

“சிருஷ்டியைத் துவக்கு!” என்றது அசரீரி!
சிருஷ்டிப்பது எப்படி என உன்னுகையில்

நெருங்கினர் மது, கைடபர் வெறியோடு;
இறங்கினேன் மலர்த் தண்டைப் பற்றியபடி.

கண்டேன் விஷ்ணுவை யோக நித்திரையில்!
கண்டேன் தேவியை நித்திரா ரூபிணியாக!

தியானித்தேன் தேவியை நித்திரை நீக்கிட;
திருமேனி நீங்கி, ஜொலித்தாள் வானத்தில்!

போரிட்டார் விஷ்ணு - மது, கைடபருடன்;
போர் தொடர்ந்தது ஐயாயிரம் ஆண்டுகள்!

இருந்தோம் நானும், விஷ்ணுவும் மட்டுமே.
இடையில் தோன்றினார் பின்னர் ருத்திரர்.

“முத்தொழில் தொடங்குங்கள் மூவரும்!” தேவி என,
“முத்தொழில் தொடங்கத் தேவை சக்தி!” என்றோம்

முத்து, மணி, இரத்தின விமானம் வந்தது!
மூவரும் அமர்ந்தோம் தேவி ஆணைப்படி.

“இன்று காட்டுவேன் அற்புதங்களை உமக்கு!”
இயக்கினாள் விமானத்தை வானத்தில் தேவி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#2. Brahma’s reply

Sage Vyaasaa replied to King Janamejayan thus. “I had asked the same questions to Narada. He said that he had asked the very same questions to Brahma and this was the reply Brahma gave to Narada and Narada gave to me!

“The answers to these questions can not be understood by anyone in the samsaara bandham or worldly bondage. He who is free from desires may understand these answers.

During the praLayam (dissolution) the creation was destroyed completely. I, Brahma,was all by myself sitting on a lotus flower in the paraLaya jalam.

There was neither Sun nor moon and neither day nor night. There was neither land, nor mountains, nor pits, nor plants nor trees.


I (Brahma) started wondering how I came into existence? Who had created me and who was protecting me from the praLaya jalam? The lotus flower was supporting me. The water was supporting the lotus flower but what was supporting the water?

There must be land below the water surface. I caught hold of the lotus stem and kept descending in order to find the earth which was supporting the water.


An asareeri told me, “Do penance!” I did penance for one thousand years sitting on the lotus flower. “Start the creation!” was the next command given by the asareeri.

What, when, where and how was I supposed to create? I was confused and at that time, the two mighty asuraas Madhu and Kaitaban came challenging me to fight with them.


I descended into the water to save myself from them and saw VishNu in Yoga nidraa. Devi was pervading on him as Nidraa Devi. I prayed to Devi to wake up Vishnu from his Yoga nidraa. Devi listened to my prayers and left Vishnu. She shone in the sky brightly.

Vishnu got up and fought with Madhu and Kaitaban for five thousand years. He finally managed to kill the two mighty asuras. Only I and Vishnu existed at that time; later Rudran appeared and we became The Trinity.


The next command by the asareeri was, “The trinity may now start the Creation, Ordinance and Destruction respectively.”


We replied to the voice, “We need power to do the allotted tasks!”

Devi appeared in vimaanam studded with pearls and precious gems. She commanded us to board the vimmanan and told us, “I am going to show you some wonderful things today”


She operated the vimaanam in the sky to an unknown destination.
 
A request to the readers of this thread. :pray2:

Due to the constraints of writing poetry some points may not be explicit when you read it first.

So please read the translation of the poem in English before or after reading the poem.

If I can spare time to write and type them surely you too can spare a few minute to read them! :)

 
DEVI BHAAGAVATAM - SKANDA 9.

(The list of other Devis is posted only in English to give the correct pronunciation of those names)

9#1q. THE OTHER DEVIS (5)


1). Aditi Devi............... The Mother of the Gods,

2). Surabhi...................The mother of cows;

3). Diti Devi..................The mother of the Daityas;

4). Kadru......................The mother of the NAgas (serpents);

5). VinatA.....................The mother of BIRDS.

6). RohiNi....................The wife of the Moon,

7). SamjgnA.................The wife of the Sun;

8). S’ataroopA..............The wife of Manu;

9). S’achi......................The wife of Indra;

10). TArA........................The wife of Brihaspati;

11). Arundhati.................The wife of Vasishta;

12). AnasooyA................ The wife of Atri;

13). Devahooti.................The wife of Kardama;

14). Prasooti....................The wife of Daksha;

15). MenakA....................The mind born daughter of the Pitris

16). LopAmudrA................The wife of Agasthya

17). Kunti..........................The wife of Kubera,

18). BindhyAvali.................The wife of King Bali;

19). Yojana GandhA.......... The chaste mother of VyAsa,

20). Usha............................The daughter of BANA;

21). ChitralekhA..................Usha's companion and friend

22). ReNukA...................... The mother of Paras’urAma;

23). RohiNi..........................The mother of BalarAma,

Damayanti, Yas’odA, Devaki, GAndhAri, Draupadi, S’aivyA, Satyavati, the mother of RAdhA, Mandodari, Kaus’alyA, SubhadrA, Revati, SatyabhAmA, KALindi, LaksmaNA, JAmbavati, NAgnajiti, MitrabindA, LakshaNa, RukmiNi, SeetA, the Laksmî incarnate,
PrabhAvati, BhAnumati, the Sati MAyAvati, KAli, Sati DurgA and many other ladies are the parts of Prakriti.

In fact every girl and a woman is a part of Prakruti.
 
64 THIRU VILAIYAADALGAL

# 63 (c). அனல், புனல் வாதங்கள்.

எட்டாயிரம் சமணக் குரவர் தயார்.
பத்தாயிரம் அடியவர்கள் புடைசூழ,

சம்பந்தர் பிரானும் வந்து சேர்ந்தார்;
அன்பர்கள் கூட்டம் அலை மோதியது!

தமக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம்
தமது ஓலைகளில் எழுதினர் குரவர்;

அத்தனை ஓலைகளையும் நெருப்பில் இட,
மொத்தமாக எரியுண்டன அத்தனையும்!

ஞானப் பால் அளித்துக் காத்த அன்னை,
ஞாலம் போற்றும் உமையின் பெயருடைய,

“போகமார்ந்த பூண் முலையாள்” பாடலை
மோகம் இன்றித் தீயில் எறிந்தார் அடியார்.

என்ன விந்தை இது? என்ன மகிமை இது?
சொன்ன பாடல் ஓலை கருகவே இல்லை!

பசுமை மாறாமல் திகழ்ந்தது அது,
பொசுக்கிடும் செந்தழல் குழியில்!

சுவடியை எடுத்துப் பாடல் கட்டில்
சேர்த்துக் கொண்டார் ஞானசம்பந்தர்.

சுற்றி இருந்த மற்றவர் நகைப்பால்,
பற்றிக் கொண்டு வந்தது குரவருக்கு!

“அனல் வாதத்தில் தோற்றால் என்ன?
புனல் வாதம் செய்வோம் நாம்.

நீருடன் செல்லும் ஓலை தோற்றது!
நீரை எதிர்த்து நீந்துவது வென்றது!

தொண்டு புரிந்து வாழவேண்டும்,
தோற்றவர் வென்றவருக்கு அடிமை!”

” தொண்டு புரிய உள்ளனர் பலர்,
தோற்றவர் கழு ஏறச் சம்மதமா?”என

சமணக் குரவர்கள் சம்மதித்தனர்;
அமைச்சர் பிரான் நாடினார் தச்சரை,

சூல வடிவில் தயார் செய்தார்கள்,
நீள மரங்களில் பல்லாயிரம் கழுக்கள்.

“இப்போதேனும் மனம் மாறிவிடுங்கள்!
இப்போதே அப்பனின் தாள் பற்றுங்கள்.”

ஒப்புக் கொள்ள மறுத்தனர் சமணர்கள்,
“ஓடி ஒளிவது எங்கள் வழக்கமல்ல!”

“உமது அழிவு அல்ல எங்கள் நோக்கம்,
உமது மதத்தை நீக்குவது மட்டுமே!

உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம்.
உயிர் பிழையுங்கள் அரன் அடி பற்றி.”

எள்ளி நகையாடினார்கள் குரவர்கள்,
பிள்ளை ஞானசம்பந்தரைக் கேலிபேசி;

“அனல் வாதத்தில் வென்ற பின்னும்
புனல் வாதத்துக்கு நீர் அஞ்சுவதேன்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

63 (C). THE ORDEAL BE FIRE AND WATER (2)


Eight thousand Jain gurus were ready. Sambandhar arrived with his ten thousand disciples. The citizens of Madurai were there too.


The Jain gurus wrote all the mantraas known to them and dropped them in the fire. Every single leaf got burnt to ash.


As a three year old boy, Sambandhar had praised Uma Devi after drinking the divine milk from her hands. He threw into fire the palm leaf on which that song was inscribed.


The palm leaf did not get charred but remained as fresh as it was before. Sambandhar took out the palm leaf and saved it with his other songs.


The gathering laughed mockingly. The Jain gurus became very angry. “You might have won the ordeal by fire but that is not the end. We will have the ordeal by water.


We will throw our palm leaf manuscripts in water. The leaf which goes along with the water is defeated. The one which swims against the current is wins.The loser must become the slave of the winner and serve him life long.”

“I have enough people to serve me. The loser must agree to be impaled!"

The Jain gurus agreed to this. The minister got thousands of strong sharp wooden 'kazhu maram' made with the help of the carpenters immediately.


Sambandhar told the Jain gurus, “It is not too late even now. You may till live by caching hold of Siva’s lotus feet.”


The gurus said arrogantly, “We don’t run away from challenges.”


Sambandhar said, “Our aim is merely to revive our religion and not to put you to death.”


Now the gurus laughed at Sambandhar, “Are you afraid that you may lose in the ordeal by water?”
 
DEVI BHAGAVATAM - SKANDA 3

3#3a. அற்புதக் காட்சிகள்

மனோ வேகத்தில் விரைந்தது விமானம்;
மனதை மயக்கும் இடங்களை அடைந்தது.

நிலம், சோலைகள், மலைகள், நதிகள்,
மலர்கள், காய்கள், கனிகள், பறவைகள்,

கேணிகள், குளங்கள், நகரங்கள், மாளிகைகள்,
ஆண்கள், பெண்கள், அரசர்களைக் கண்டோம்.

வெள்ளம் நிரம்பியிருந்த இடத்தில் – இந்த
விந்தை சிருஷ்டியைக் கண்டு வியந்தோம்.

புன்னகைத்தாள் தேவி அந்தரத்தில் நின்று;
இன்னமும் தொடர்ந்தது விமானப் பயணம்.

விரைந்த விமானம் அடைந்தது ஓரிடத்தை!
வியப்பில் ஆழ்த்தின அங்கிருந்த காட்சிகள்.

நந்தவனம், ஐராவதம், காமதேனு, பாரிஜாதம்
நடனமாடும் அப்ஸரஸ்கள். பாடும் கந்தர்வர்,

வித்யாதரர், யக்ஷர், இந்திரன், இந்திராணி,
வருணன், குபேரன், அக்னி, சூரியன், யமன்!

விரைந்தது விமானம் வேறு ஒரு இடத்துக்கு.
விந்தைகளைக் காட்டினாள் விண்ணில் தேவி.

பிரம்ம லோகம், பிரம்ம சபை, பிரம்ம தேவன்!
பிரமிப்பு அடங்கும் முன் அடைந்தோம் கயிலை

சிவபெருமான், விநாயகர், ஷண்முகன் சகிதம்!
சிவ கணங்கள் நந்தி, முனிவர்கள், தேவர்கள்,

விரைந்த விமானம் அடைந்தது வைகுந்தம்;
விரும்பும் பொருட்கள் இருந்தன அங்கு.

விஷ்ணு பிரான் நீலமேக ஷ்யாமளனாக,
வெண் சாமரம் வீசும் லக்ஷ்மி தேவியுடன்!

விரைந்தது விமானம் வைகுந்தம் விடுத்து;
திருப்பாற்கடல் சென்றது ஒரே நொடியில்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATA - SKANDA 3

3#3a. The wonderful sights

The vimaanam sped fast and reached a lovely place. We saw land, gardens, mountains, rivers, flowers, vegetables, fruits, birds, wells, caves, cities, palaces, the common people and kings.


Earlier the place was completely flooded and yet we saw all these features now. Devi smiled standing in the sky without any support. The journey continued.


We reached a place and saw beautiful gardens, the paarijaatam tree, the four tusked white elephant Airaavatam, Kaamadhenu as well as apsaras dancing and gandharvas singing. Indra and Indraani were surrounded by the Yaksha, Kinnara, Varuna, Kubera, Agni, Vaayu, Sooriya and Yama.


Now the vimanam sped fast to another place. We saw Brahma lokam, Brahma sabha and Brahma Devan. The next minute were seeing Kailash with Lord Siva, Vinayaka and Subrahmanya. We saw the Shiva ganas, We saw the Nandhi, rushis and Devas.


Now the vimaanam had reached Vaikuntam. Everything anyone desires was there. Vishnu was the neela megha shyaamamLan. Lakshmi Devi was fanning him with the chaamaram.

Now the vimaanam sped fast leaving Vaikuntam behind and reached the ocean of milk.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#1r. பெண்ணினம்

பிரபஞ்சத்தில் உள்ள பெண்கள் அனைவரும்
பிரகிருதியின் கலையம்சத்தில் தோன்றியவர்.

பெண்ணை அவமதிப்பது பிரகிருதியை அவமதிப்பது!
பெண் விடும் கண்ணீர் மாறும் கொல்லும் படையாக.

மங்கலப்பெண்டிருக்கு, எட்டு வயது கன்னியருக்கு,
மங்கலப் பொருட்கள் தந்து வணங்கிட வேண்டும்.

சமம் ஆகும் இவர்களை இங்ஙனம் வணங்குவது
சர்வேஸ்வரி தேவியை உபசரித்து வழிபடுவதற்கு.

நற்குணங்களும், நன்னடத்தையும் கொண்டவர்
கற்புக்கரசிகள் ஆவர்; உத்தமப் பெண்கள் ஆவர்.

தோன்றியுள்ளனர் பிரகிருதியின் சத்துவாம்சமாக.
இன்பமாக இல்லப் பணிகளைச் செய்யும் இனியவர்!

மத்திம ஸ்த்ரீக்கள் ரஜோ குணம் மிகுந்தவர்கள்;
உத்தம சுக போகங்களை நாடும் சுயநலவாதிகள்.

அதம ஸ்த்ரீக்கள் தாமச குணம் மிகுந்தவர்கள்;
ஏதேதோ குலங்களில் பிறந்தவர்கள் இவர்கள்.

துர்குணங்கள் மலிந்து மிகுந்தவர்கள் இவர்கள்;
ஆர்வம் வம்பு தும்புகளில்; யாருக்கும் அடங்கார்!

நடத்தை கெட்ட அத்தனை பெண்களும் அதமர்.
குடியைக் கெடுக்கும் அத்தனை பேரும் அதமர்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM- SKNADA 9

9#r. The female gender

All the creatures belonging to the female gender, everywhere in the Universe, form parts of Prakruti. So to insult any woman is to insult the Prakruti Devi herself.

If one worships a chaste Brahmin woman, who has her husband and son living, by presenting her with new clothes, ornaments, and sandal paste, that person actually worships Prakruti Devi.

If any Vipra worships a virgin girl, eight years old, with clothes, ornaments and sandal paste, he too has worshiped the Prakruti Devi.

The best, the mediocre, and worst women have all sprung from Prakruti Devi. Those women that are sprung from her Sattva GuNa are all very good, soft natured and chaste.

Those that are sprung from her Rajo GuNa are the mediocre women very much attached to worldly enjoyments and carnal pleasures and who are always self centered.

Those that are sprung from Tamo GuNa are recognized as the worst type of women. They are cheats and ruin their families. They are fond of their own free ways and are extremely quarrelsome.

Such women become prostitutes in this world and ApsarAs in the Heavens. The Hermaphrodites are parts of Prakriti but they too are born out of Tamo GuNas.


 
64 THIRU VILAIYAADALGAL


63d. தோல்வி, கழு ஏற்றம்

# 63 (d). தோல்வி, கழு ஏற்றம்

வேகமாக வாதத்தில் வெல்ல விரும்பி ,
வேகவதியின் வேகத்தைக் குறைத்தனர்.

மந்திரங்கள் எழுதிய பல ஓலைகள்,
நீந்தின மீண்டும் வைகைநதி நீரில்.

“வேதம் கூறும் நித்திய வஸ்துவும்,
வேதம் கூறும் சத்திய வஸ்துவும்,

சிவன் என்பது உண்மையானால்,
அவன் அருளால் எதிர் நீச்சல் இடு!”

“வாழ்க அந்தணர்” என்ற பாடலை
ஏட்டில் எழுதி நதிநீரில் இட்டார்;

சமணர்கள் ஓலையை நீருடன் செல்ல,
சம்பந்தர் ஓலை எதிர்நீச்சல் இட்டது!

பூ மாரி பெய்தது! ஆரவாரம் ஒலித்தது.
பா ஓலை ஒருகாத தூரம் எதிர்நீச்சல்!

“நாங்கள் தோற்றோம், நீ வென்றாய்!
தாங்களே தம் தோல்வியை ஏற்றனர்.

“உய்யுங்கள் நீங்கள் இப்போதேனும்,
ஐயன் திருவடிகளைப் பற்றுங்கள்!”

” விடுவதற்குத் தயார் எம் உயிரை.
விடமாட்டோம் எங்கள் மதத்தினை!”

தாமே விரும்பிக் கழு ஏறினர் சிலர்;
தாமே விரும்பி நீறு அணிந்தனர் சிலர்,

இரண்டையும் செய்யாத சமணர்களை,
விரட்டிப் பிடித்துக் கழு ஏற்றினர் மக்கள்.

எதிர்நீச்சல் போட்ட ஏடு எங்கே?
புதிராகக் காததூரத்தில் மறைந்தது.

“வன்னியும் மத்தமும்” பதிகம் பாட,
வளர்ந்தது லிங்கம் வில்வமரத்தடியில்.

லிங்கத்தை வலம் வந்தார் சம்பந்தர்,
லிங்கத்தினின்றும் தோன்றினார் மறையவர்;

“குமரனைப் போலவே உள்ளாய் பிள்ளாய்!
குமரன் என் இனிய, இளைய மகன்!” அவரே

திரு நீறு இட்டு விட்டார்- வாழ்த்தினார்
“திருத்தலம் தோறும் சென்று பாடுவாய்!”

ஓலையைத் திருப்பித் தந்துவிட்டு-பின்னர்
வேலை முடிந்தது என மறைந்தருளினார்.

பொற்கோவில் அமைத்தான் மன்னன்,
பொன்னார் மேனியனின் சுயம்புவுக்கு.

திருமண்டபம், கோபுரம், மதில் , வீதி,
திருவேடகம் ஆனது அத் திருத்தலம்.

சம்பந்தருடன் தங்கினான் மன்னன்,
சமயப் பணிகள் செய்தான் ஓராண்டு!

நீங்கினான் மும்மலம் சிவனைப் பூஜித்து,
தாங்கினான் நெஞ்சில் அரன் திருவடிகள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

63 (D). DEFEATED AND IMPALED.

The gurus wished to put an end to the contest soon. They reduced the speed of the Vegavathi river. They threw in water the palm leaves with their mantras written on them.

Sambandhar wrote the poem starting with “Vaazga andanar.” He swore to God,”If it is true that Siva is the sathya and nithya vasthu as proclaimed by the Vedas, let this leaf swim against the current!”


Sambandhar’s palm leaf swam against the current while all the others were swept away by the river. Flowers rained.
There was great jubilation. The gurus accepted their defeat.

Sambandhar told them, “Even now you may live by worshiping Siva”.
But they were too proud and haughty to do so. Most of them climbed on to the kazhumaram by themselves . Some others were forced to climb, by the crowd.

The palm leaf went a long distance and disappeared!. Sambandhar sang a pathigam, “Vanniyum maththamun.” A swayambu lingam grew under the vilva vrukshasm.


Sambandhar went round the lingam. An old brahmin appeared from the lingam and told Sambandhar, ”You look just like my lovely younger son!”


He applied viboothi on the boy’s forehead. “You must go round and sing the praise of God.” He returned the palm leaf and disappeared.

The king built a beautiful temple for the swayambu, with mandapam, gopuram, high walls and surrounding streets. The place assumed the name Thiruvedagam.


The king stayed with sambandhar for one year and rendered many services. He got rid of the three doshaas of a jivan. He enshrined Siva in the temple of his heart.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#3b. மணி த்வீபம்

இருந்தது ஒரு தீவு கடலின் நடுவே;
இருந்தன பழ மரங்கள், மலர்க் கொடிகள்;

பாடின குயில்கள், ஆடின மயில்கள் – ஒரு
பஞ்சணைக் கட்டில் சோலையின் நடுவே!

இரத்தின வேலைப்பாடுகள் நிறைந்தது;
சித்திரப்பூ வேலைப்பாடுகள் மஞ்சத்தில்!

வானவில்லாக வளைந்திருந்தது விதானம்;
வனப்புடன் அமர்ந்தாள் ஸ்ரீபீடத்தில் தேவி.

ஆடைகள் சிவப்பு, அதரங்களும் சிவப்பு,
அகன்ற கண்கள் சிவப்பு, சந்தனப் பூச்சுடன்

கூடி மின்னல்கள் ஒளிர்வது போலவும்,
கோடி லக்ஷ்மிகளின் சுப மங்கலத்துடன்;

புதுமை, இனிமை, வளமை, இளமை
பூரிக்கும் அழகுடன் மிளிர்கின்ற தேவி!

தாடகம் மின்னும் செவிகள், ஆபரணங்கள்;
தாமரை மொட்டு தனங்கள், தாமரை முகம்,

கம்பீரமாக தேவி ஸ்ரீ சக்கரத்தில் அமர;
கன்னிகள், பக்ஷிகள் புடைசூழ்ந்திருக்க;

“யார் இந்த பெண்?” மூவரும் சிந்திக்க – விஷ்ணு
யார் என்று கண்டறிந்தார் தன் ஞானதிருஷ்டியில்

‘எங்கும் நிறைந்திருப்பவள் இவள் – உலகில்
எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள் இவள்.

அறிய முடியாதவள் அற்ப அறிவினால்!
அறிய முடிந்தவள் யோக நிஷ்டையால்!

வேதங்களின் தாய், கருணைக் கடல்,
ஆதி காரணி, சர்வேச்வரி, மகாதேவி!

தன்னுள் பிரபஞ்சத்தை ஒடுக்குபவள்;
தன் அம்சங்கள் புடை சூழ இருப்பவள்;

மூல பிரகிருதி இவளே! மகாமாயை இவளே!
ஆலிலை பாலகனின் அன்னையும் இவளே!’

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#3b. MaNi dweepam

There was an island in the Ocean Of Milk. There were trees laden with many fruits and creepers laden with fragrant flowers, in that island.


Peacocks were dancing and cuckoos were singing. There was a cot studded with gem stones and a bed with elaborate floral embroidery work on it – right in the middle of the garden. The canopy of the cot was shaped like a lovely rainbow.


Devi sat on a peetam. She was dressed in red silk. Her lips were red and her wide beautiful eyes were red too! She had sandal wood paste smeared on her body. She dazzled like many lightnings shining together. She was as auspicious as ten million Lakshmi Devis put together.


She had a rare beauty, bubbling youth, charm and grace. Ornament thaadagam shone in her ears and she was decorated with gold many ornaments in her body. Her breasts were like the lotus buds and her face was like a lotus flower in full bloom. Several young maidens and birds surrounded her.


The Trinity looked at the Devi and started wondering, “Who can this Devi be?” Vishnu found out her identity using his gnaana dhrushti!

“This is the Devi who resides everywhere and in everything. She supports everything that exists in the universe. She can not be realized through the intellect. She can be realized by the yoga saadhana.


She is the mother of the Vedas. She is an ocean of mercy. She is the cause of the creations. She is the one who is really all powerful. She is the supreme Goddess.

She can hide the entire creation within herself. She is surrounded by her own faculties and amsams. When I was an infant floating on the praLaya jalam on a Bunyan leaf, she was my mother.”
 
Devi bhaagavatam - skanda 9

9#1s. தேவி வழிபாடு

இயல்பானதே இங்கு தேவி வழிபாடு - தேவியால்
இழந்த அரசுரிமையைப் பெற்றான் சுரத மன்னன்.

ஸ்ரீ ராமன் வணங்கினான் பராசக்தி தேவியை,
சீதையை மீட்கவும், ராவணனை வெல்லவும்.

தாக்ஷாயணியாகப் பிறந்தாள் தேவி தக்ஷனுக்கு.
தாக்ஷண்யம் இன்றி அழித்தாள் தக்ஷ யாகத்தை.

இகழ்ந்தவர்களுக்கு அளித்தாள் தண்டனை!
புகழுக்காக உடலைத் துறந்தாள் தாக்ஷாயணி!

பிறந்தாள் தன் அம்சங்களுடன் உலகில் வந்து;
சிறந்தாள் சிவபெருமானை மீண்டும் மணந்து!

தோன்றினாள் துர்க்கையிலிருந்து லக்ஷ்மி.
மங்களன் தொழுதான்; மற்றவர் தொழுதனர்.

அஸ்வபதி வணகினான் சாவித்திரி தேவியை;
அனைவரும் வணங்கினர் சாவித்திரி தேவியை!

வாணி தோன்றியதும் வணங்கினான் பிரமன்;
வாணியை வணங்கினர் தேவர், முனிவர், மனிதர்.

ராதையைத் தொழுதான் ஸ்ரீ கிருஷ்ணபிரான்,
ராச மண்டலத்தில் கார்த்திகை பௌர்ணமியில்!

வணங்கினர் கோபர், கோபியர், பசுவினங்கள்.
வணங்கினர் அதன் பின்னர் தேவர், முனிவர்.

கிராமங்களில் கிராம தேவதையின் வழிபாடு;
நகரங்களில் நகர தேவதையின் வழிபாடு;

வனங்களில் வனதேவதையின் வழிபாடு;
எனப்படுபவை அனைத்தும் தேவி வழிபாடே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

In BhArata Varsha, Devi worship is very common. King Suratha worshiped the Moola Prakruti DurgA, the Destroyer of all the evils.

S’ri RAma Chandra worshiped Devi when he wanted to kill RAvaNa. Her worship exists in all the three worlds.

She was first born as the daughter of Daksha. She got destroyed the Daityas and DAnavas, on hearing the abusive words uttered against Lord Siva, at the Yagna by Her father.

She gave up Her body and took birth in the womb of MenakA. She married Siva once again.

Lakshmi Devi came out of DurgA. Mangala RAja, the King Mars first worshiped Her. Since then both men and Deva began to worship Her.

The King As’vapati first worshiped SAvitri Devi; and since then the Devas, Munis, all began to worship Her.

When the Devi Saravasti was born, the BhagavAn BrahmA first worshiped Her. Munis, Devas all began
to worship Her.

On the full moon night of the month of KArtik, S’rî KrishNa worshiped Devi RAdhA within the RAsa MaNdalam, in the region Goloka.

All the Gopas (cow-herds), Gopis, all the boys, girls, Surabhi, the queen of the race of the cows, and the other cows worshiped Her.

After BrahmA, the other Devas and the Munis, everyone began to worship S’ri RAdhA with devotion and incense, light and various other offerings.

On earth She was first worshiped by Suyajna, in the sacred field of BhAratvarsha - under the direction of BhagavAn MahAdEva.

Subsequently, under the command of the BhagavAn S’rî KrishNa, the inhabitants of the three worlds began to worship Her.

The Munis worship Devi RAdhA with great devotion, with incense, flowers and various other offerings worship always the Devi RAdhA.

In the villages we have the village Deities, in the forests we have the forest Deities and in the cities we have the city Deities.
 

Latest posts

Latest ads

Back
Top