• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

64 THIRU VILAIYAADALGAL

# 64 (a). மூன்று சாட்சிகள்.

தனவான் வணிகன் வாழ்ந்து இருந்தது,
மனம் மகிழும் காவிரிப்பூம் பட்டிணத்தில்;

எல்லாம் இருந்தும் ஒரு குறை இருந்தது,
செல்லம் கொஞ்ச ஒரு குழந்தை இல்லை.

இல்லாளுடன் நற்பணிகள் செய்தான்,
நல்ல மகள் ஒருத்தி வந்து பிறந்தாள்;

வணிகனின் தங்கை மகன் ஒருவன்
வாழ்ந்து வந்தான் மதுராபுரியில்.

“முறை மாப்பிள்ளைக்கே தன் மகளை,
முறைப்படி மணம் செய்விக்கவேண்டும்.

திருமணம் ஆகிவிட்டது மருமகனுக்கு;
ஒரு பாதகமும் இல்லை அதனால்!

சொந்தம் விட்டுப் போகக் கூடாது,
பந்தம் விலகக் கூடாது!” என்பான்.

திடீரென இறந்துவிட்டான் வணிகன்,
உடன் இறந்தாள் கற்புடைய மனைவி.

ஒரே நாளில் யாருமே இல்லாத
ஓர் அனாதையாகி விட்டாள் மகள்;

நண்பர்கள் ஓலை அனுப்பினர் அவனுக்கு,
அன்புடன் அவளை ஆதரிக்க வேண்டி!

மாமன் மறைவுக்கு வருந்திய அவன்,
மாமன் இல்லம் சென்று உதவினான்.

மதுரையில் திருமணம் செய்வதாக
முதியவர்கள் முன்பு முடிவானது.

பொன்னும் பொருளும், பிறவும்
முன்னம் மதுரைக்கு அனுப்பினான்;

நடைப்பயணம் தொடங்கினர் அவர்கள்,
நாள் ஒன்றுக்கு ஒன்றரைக் காத தூரம்.

திருப் புறம்பியம் என்னும் ஸ்தலத்தில்,
இரவு தங்கினர் வழியில் ஒருநாள்;

திருக்கிணற்று நீரில் நீராடினான்,
திருக்கோவிலில் லிங்க தரிசனம்;

அன்னம் உண்டது வன்னி மரத்தடியில்,
அண்ணல் கோவில்படியே தலையணை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

64 (A). THE THREE WITNESSES.

A rich merchant lived in Kaavirip poom pattinam. He had everything a person could desire but not a child. He and his wife did many good karmas and as a result a very pious daughter was born to them.

The merchant had a nephew living in Madurai. He wanted to marry his daughter to him- even though he was already married. In those days, rich men used to have more than one wife.


Suddenly the merchant died. His wife also died along with him. The poor girl became an orphan. The friends of the family sent a message to the nephew and requested him to marry the girl.

He came there immediately and consoled her. They decided to get married as soon as they reached Madurai. All her earthly belongings were sent to Madurai and they too left by walk.


One night they stayed in Thiruppurambiam for the night. The nephew took bath in the well water, worshiped the Sivalingam, ate food under a Vanni tree and slept using the stepping stone of the temple as his pillow.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#4a. புவனேஸ்வரி

“நமஸ்கரிப்போம் தேவியை அருகில் சென்று
நாம் மூவரும்!” என்றார் விஷ்ணு மூர்த்தி.

சக்தி பீடத்தின் அருகே சென்றது விமானம்;
சக்தி பீடத்திலிருந்து எழுந்து வந்தாள் தேவி.

ஆண்களின் அண்மையால் நாணமுற்றாள்;
பெண்களாக மாற்றிவிட்டாள் மூவரையும்!

அதிசயமான ஆடை ஆபரணங்களுடன்
அழகிகளாகி விட்டனர் மும்மூர்த்திகள்.

"கலக்கம் இன்றிச் சென்றோம் அருகே,
கருணை பொழிந்தது கண் பார்வை!

தோழியர் புடை சூழ்ந்திருந்தனர் தேவியை;
தோழியர் உடைகள் பலவேறு நிறங்களில்!

இசைவாகச் செய்தனர் பணிவிடைகள்;
இசைத்தனர் இன்னிசை, ஆடினர் நடனம்.

நமஸ்கரித்தோம் அழகிய திருப் பாதங்களை;
நவரத்தினம் பதித்திருந்த பொற் பாதுகைகளை.

நகங்கள் பிரகாசித்தன கண்ணாடியைப் போல!
நகங்களின் நடுவே கண்டோம் அற்புதங்களை!

பிரம்மாண்டம், அஷ்ட திக்பாலகர்கள்,
பிரம்மன் ஆதி தேவர்கள், அப்ஸரஸ்கள்

அசுரர், கந்தர்வர், மஹரிஷிகள்,
அஸ்வினி குமாரர்கள், சித்தர், நாகர்,

அஷ்ட வசுக்கள், மலைகள், கடல்கள்,
சத்யலோகம், வைகுண்டம், கைலாசம்,

மலர்ந்த தாமரையை, என்னை, நாரணனை,
மது கைடபர் போன்றவற்றைக் கண்டோம்

பாங்கியர் என்று அங்கிருந்த தோழியர்
எங்களுடன் மிகவும் நெருங்கிப் பழகினர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#4a. Bhuvaneswari

Vishnu said, “Let us go near Devi and pay our respect.” The vimaanam went near Shakti peetam. Devi got up from her peetam.

She felt shy by the proximity of the three male gods – The Trinity – and immediately changed them into young women.
The Trinity got turned into three beautiful women wearing suitable dresses and ornaments.

Now the Trinity went near to Devi without feeling ill at ease. She showered her grace through her glance. The maidens attending on Devi were dressed in various hues. They served her with care. They played sweet music and also danced gracefully.

The Trinity worshiped Devi’s feet. Devi was wearing gold slippers decorated with the nine precious gems. Her toe nails shone like clean mirrors. The trinity saw many wonders in those toe nails of Devi.


They saw The Universe, Ashta dik paalaka, Devas, Apsaras, asuraa, gandarvaa, rusis, Aswini devataas, Siddhas, Naagaas, Ashtavasus, mountains, oceans, Vaikuntam, Sathya lokam, Kailaasam, the lotus on which Brahma sits, Brahma, Vishnu Madhu and Kaitaban.


The attendants of Devi thought that the Trinity – now turned into women – were real women and moved with them very close.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2a . ஐந்து பிரகிருதிகள்

நாரதன் வினவினான் நாரணனிடம் இதனை
"கூறுவீர் பராசக்தி சிருஷ்டியை முன்னிட்டு!

எப்படித் தோற்றம் எடுத்தாள் முதன் முதலில்?
எப்படிப் பிரிந்தாள் ஐந்து தேவிகளாக அதன் பின்?

அவதாரம், தியானம், பூஜை, கவசம், பிரார்த்தனை,
துதி, செல்வம், சுகம், மங்களம் என்பவைகள் எவை?"என.

"பரமாத்மா நித்தியமானவர் அறிவாய் நாரதா !
பரபிரும்மத்தில் ஒளிரும் பிரக்ருதி நித்தியம்!

தாமரையில் ஒளிரும் பிரகாசம் போலவும்,
நெருப்பில் வீசும் வெப்பக் கதிர் போலவும்;

சூரியனில் வெளிப்படும் வெய்யில் போலவும்
பிரகிருதி வெளிப்படும் பிரும்மத்திலிருந்து.

பொன் இன்றி உருவாகாது ஆபரணங்கள்;
மண் இன்றி உருவாகாது சட்டி பானைகள்.

பிரகிருதி இன்றி உருவாகாது பிரபஞ்சம்.
பிரபஞ்சம் பரபிரும்மனால் என்றறிவாய்!

சக்தியின் சம்பந்தத்தால் ஆகின்றான் சக்திமான்!
சக்தி ஆகும் ஐஸ்வர்யம், பராக்கிரமம் இரண்டுமே.

'பக' என்பது ஞானம், சம்பத்து, யசஸ், வலிமை;
'பக' வடிவான சக்தியே பகவதி எனப்படுவாள்.

பகவதியுடன் இருக்கும் பரமாத்மா பகவான்!
பரமாத்மா, பரபிரும்மம், பகவான் எனப்படுவார்.

வைஷ்ணவர் கருத்து மாறுபடும் முற்றிலும்;
வைஷ்ணவர் கருத்தைக் கேள் நீ இப்போது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2a. Pancha Prakrutis

"Why was the Moola Prakruti or Aadhi Sakti created before the creation of the world?" How did She get divided into five DEvees? I wish to hear all this in great detail.

Please describe their auspicious births, methods of worship, their meditation, their stotras, Kavachas, glory and power in detail." NArada requested NArAyanA.

NArAyana replied, “The Moola Prakruti is of the nature of MAyA of Para Brahman and is an eternal! Atman and Prakruti are in inseparable from each other just as a Lotus is from its splendor, Fire is from its burning capacity and the Sun is from its rays!

A goldsmith cannot make gold ornaments without gold. A potter cannot make earthen pots without mud. Aatman cannot do any work without the help of the all powerful Prakruti.

'Sa' indicates Prosperity and 'kti' denotes Strength. Since DEvi bestows of these two, she is named as Sakti.

'Bhaga' indicates knowledge, prosperity, wealth and fame. She is called 'Bhagavati' - since she has all these powers. Aatman who is always in union with 'Bhagavati' is called 'BhagavAn'.

The BhagavAn is sometimes with form; and sometimes without form. When Prakruti is latent, God is without any form; with Prakruti manifests, God is with a form.

The Yogis always think of the Luminous Form of the Formless BhagavAn and declare Him to be all blissful Para Brahma, the God.

Though He is invisible, He is the Witness of all, Omniscient, the Cause of all, the Giver of everything and of every form.

But the VaishNavas do not think so.

 
64 THIRU VILAIYAADALGAL

# 64 (b). சம்பந்தரின் சம்பந்தம்.

அண்ணல் கோவில்படி தலையணையாக
அயர்ந்து உறங்கிய அந்த மருமகனை,
விஷ நாகம் ஒன்று வீணே தீண்டிவிட,
விஷம் தலைக்கேறி மாண்டு போனான்.

செய்வது அறியாமல் அழுதனர்,
ஐயன் அருள் வேண்டித் தொழுதனர்;
“மணம் கூட முடியவில்லை, அதற்குள்!”
மனம் உடைந்து அழுதாள் அவள்.

கலவர ஒலிகளைக் கேட்டு விரைந்தார்,
தலத்தில் தங்கி இருந்த ஞானசம்பந்தர்;
கண்களின் அமுதப் பார்வையால் அந்தப்
பெண்ணின் கண்ணீரைத் துடைத்தார் அவர்.

உறங்கி எழுபவன் போல் எழுந்தான்,
பிறவியை மீண்டும் பெற்ற மருமகன்;
“சீலவதி இவள் கரம் பற்றுவாய் உடனே!
கால தாமதம் வீணே செய்வது எதற்கு?”என

"பெரியவர் சாட்சியின்றி எங்கேனும் ஒரு
திருமணம் நிகழ முடியுமா கூறுங்கள்?
இங்கு நான் இவளை மணந்துகொண்டால்,
எங்கள் மணத்துக்கு யார் சாட்சி?” என்றான்.

“வன்னி மரமும், இந்தத் தண்ணீர்க் கிணறும்,
அண்ணலின் லிங்கமும் ஆகும் சாட்சிகள்! .
பெண்ணின் துயரைத் துடைத்து அருள்வாய்!
கன்னியை மணம் புரிந்து கொள்ளுவாய்!”என

சொன்னபடியே செய்தான் அந்த மருமகன்,
அன்னப் பேடையும் ஆனந்தம் அடைந்தாள்,
மதுரையை அடைந்தனர் புது மணமக்கள்,
புதுமண வாழ்வைத் தொடங்கினர் அவர்கள்.

மூத்த மனைவியும் ஏற்றாள் இவளை,
முத்துப் போன்ற மகன் பிறந்தான்;
வணிகம் நடந்தது நல்ல முறையில்,
வாழ்வே இன்பமானது அவர்களுக்கு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

64 (B). ASSOCIATION WITH SAMBANDHAR.


When the nephew was fast asleep, a cobra bit him and he died. The girl felt as if struck by a bolt from the blue. They were to be married soon. In the middle of the night and in the middle of nowhere, they could do nothing but pray for mercy and cry.


Thiru gnaana sambandhar was halting nearby. He heard the cries of despair and reached there. He gazed at the young man and prayed for Siva’s divine grace. The man got up as if from deep sleep. The group became joyous.


Gnaana sambandhar listened to their story and advised the man to marry the girl then and there. Good acts should not be delayed unnecessarily. The man said, “I can’t marry her without any witnesses”

Gnaana sambandhar replied,” This Siva lingam, this vanni tree and this well of water will be your three witnesses.”


The man agreed and their marriage took place. The first wife accepted the second one without much fuss. So they started a happy life. Business was good. Soon a healthy son was born to them. The young girl lived happily like Lakshmi Devi.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#4b. விஷ்ணுவின் துதி

“நமஸ்காரம் தேவி! உனக்கு நமஸ்காரம்!
நமஸ்காரம் மூலப்பிரகிருதியான உனக்கு!

நமஸ்காரம் சிருஷ்டியின் காரணமாகிய உனக்கு!
நமஸ்காரம் மனோபீஷ்டத்தைத் தரும் உனக்கு!

நமஸ்காரம் எல்லாவற்றிலும் கலந்துள்ள உனக்கு!
நமஸ்காரம் இதயத் தாமரையில் வசிக்கும் உனக்கு!

உன்னிடம் உள்ளன உலகங்கள் யாவையும்!
உன்னிடம் உள்ளன சிருஷ்டி, ஸ்திதி, லயம்!

உன் திருவுருவம் ஆனந்தம் தருவதற்கு!
உன் பிரபாவம் மகிழ்ச்சியைத் தருவதற்கு!

உன் ஒளியால் ஒளிர்கின்றது உலகம்,
உன்னால் அடைய முடியும் எதையும்!

நிறைந்துள்ளாய் அனைத்துப் பொருட்களிலும்!
நினைத்திருந்தோம் மும்மூர்த்திகள் யாமென்று.

காட்டினாய் மூவுலகங்களை, மும்மூர்த்திகளை!
நடத்துகின்றாய் முத்தொழில் உன் இச்சைப் படி!

சுதந்திரமாக எதையும் செய்வதற்குச் சிறிதும்
சக்தியற்றவர் என்று உணர்ந்து கொண்டோம்.

மேதினியை பூமித் தாய் தாங்குவது உன்னால்!
ஆதவன் விண்ணில் ஒளிர்வது உன் சக்தியால்!

நித்தியை என்பவள் நீ ஒருத்தி மட்டுமே!
சத்தியமாகக் காலவசப்பட்டவர் மற்றவர்!

நீயே அறிவாளியின் அறிவு! நீயே பலவானின் பலம்!
நீயே கீர்த்திமானின் கீர்த்தி! நீயே தனவானின் தனம்!

நீயே போகியின் ஆனந்தம்! நீயே யோகியின் தவம்!
நீயே முமுக்ஷுவின் மோக்ஷம்! நீயே ரிஷியின் தவம்!

நீயே மந்திர ஸ்வரூபிணி! நீயே பிரம்ம காயத்ரி !
நீயே தருவாய் ஜீவ பாவமும், சிவ பாவமும்!

நீயே படைப்பவள், நீயே விடுதலை கொடுப்பவள்.
நீயே இச்சாசக்தி, நீயே ஞானசக்தி, நீயே க்ரியாசக்தி!

அகண்ட ஞானத்தைத் தருவாய் தேவி!”
அன்புடன் துதித்தார் விஷ்ணு மூர்த்தி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#4b. Vishnu’s sthuthi

“Namskaar Oh Devi! Namaskaar to you! You are the moola prakruti -The Mother Nature! You are the srushti kartaa -The creator. You fulfill our desires. You are present in everything seen.


You reside in the hearts of all jeevaa. All the worlds reside in you. You control the srushti, sthiti and layam – the creation, sustenance and destruction. Your roopam gives us happiness and your grace gives us satisfaction.


The world shines with your luminescence. Only you can achieve anything. We thought we were The Trinity. But you showed us the three worlds and The Trinity living in them.


You have the freedom to do things the way you want to. No one else has that freedom of choice. The world is supported by your strength. The Sun shines with your energy. You are the only permanent being. Everything and everyone else is under the influence of the Time Factor.


You are the intellect of the intelligent, the strength of the strong, the fame of the famous and the riches of the rich. You are the pleasures enjoyed by the worldly people and the penance performed by the yogi. You are the liberation of the mumukshu and the tapas of the tapasvi.

You are the mantra swaroopini. You are the Brahma Gaayatri. You give people the jeeva bhaava and the Siva bhaava. You are the one who creates and binds us bondage. You are the one who liberates us from the bondage.

You are the ichcha shakti, gnaana shakti and kriyaa shakti. Give us the complete knowledge and wisdom oh Devi!” Vishnu prayed to Devi.
 
DEVI BHAAGAVATAK - SKANDA 9

9#2b. வைஷ்ணவர்கள் கருத்து

தேஜோ மண்டலத்தில் உள்ளது - பிரம்ம
தேஜஸ் உள்ள ஓர் உன்னதமான வஸ்து.

இயங்கிகிறது அது முழு சுதந்திரத்துடன்;
இயங்குகிறது முற்றிலும் தன்னிச்சையாக!

அனைத்து உருவங்களுக்கும் காரணம் இதுவே!
அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் இதுவே!

கவருகின்ற அழகிய உருவம் கொண்டது இது!
கபடம், சூது, வாது இல்லாக் குழவி போன்றது!

நீருண்ட கார்மேகத்தின் வர்ணம் கொண்டது;
மலர்ந்த தாமரை இதழ்க் கண்கள் கொண்டது!

முத்துப் பல் வரிசைகள் இரண்டு கொண்டது
முல்லை, பீலி மின்னும் கேசம் கொண்டது.

நேராக, உயர்ந்து, நீண்ட நாசியை உடையது;
நேசர்களுக்கு அருளும் புன்னகை உடையது!

அணியும் உருக்கிய பொன்னிற ஆடையை;
அமையும் அழகிய கரத்தில் புல்லாங்குழல்.

ஜொலிக்கும் ரத்தினம் இழைத்த ஆபரணம்!
ஜெயிக்கும் காண்பவரைப் பட்டு பீதாம்பரம்!

ஆதாரம் அனைத்து உலகங்களுக்கும் இதுவே!
ஆதாரம் அனைவரின் சக்தி, பராக்கிரமத்துக்கு!

நித்தியமான பரம்பொருள் என்பதுவும் இதுவே.
சித்தியாக, சித்தேசமாக, சித்திகாரமானது இதுவே.

அகற்றும் ஜனன, மரண, வியாதி பயங்களை
அகண்ட பரிபூரண சச்சிதானந்தமயமான இது!

பரம்பொருள், பரமாத்மா, பரப்பிரம்மம் போன்ற
பெயர்களில் அறியப்படும் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி.

'கிருஷ்' என்பது சிறந்த பரப்பிரம்ம பக்தி பாவம்;
'ண' என்பது சரணாகதி அடைந்த தாஸ பாவம்.

'கிருஷ்ண' என்பது வழங்கும் இவ்விரண்டையும்;
'கிருஷ்ண' என்பது இனிக்கும் கேட்கும் செவிகளில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2b. Vaishnava concept

From where can fire, strength and energy come without a fiery, strong, energetic Person emitting them from behind?

He who shines in the center of this fiery sphere is the Para Brahma; He is the Fiery Person; He is higher than the Highest; He has All Free Will; He is All Form; He is the Cause of all causes and His Form is Very Beautiful.

He is Young; He looks very peaceful and He is loved by all. He is the Highest; His Blue Body shines like new rain-clouds. His two eyes put to shame the autumn lotuses during mid-day; His exquisite rows of teeth are like two rows of perfect pearls!

The peacock feather on His crown; the MAlati flower garland on His neck.; His exceedingly beautiful straight nose ; the sweet smile on His lips enchant everyone. There is none like Him in showing favor to the Bhaktas.

He wears yellow silk in the color of molten gold and a flute is seen on His hands. His body is decorated with gem-studded jewels. He is the Sole Refuge of this whole Universe; He is omnipotent and omnipresent.

He is Himself a Siddha Purusha and bestows Siddhis on the others. He removes the fears of birth, death, old age, illness and sorrows. The life span of Brahma is just a twinkling of His eye.

The word 'Krish' denotes Bhakti and the letter 'Na' signifies devotion to His service. So He is the one who Bestows Bhakti and devotion to His service.

Again 'Krish' denotes everything and 'Na' signifies the root. So it is He Who is the Root and the Creator of everything here.


 
64 THIRU VILAIYAADALGAL

64c. குடுமிபிடிச் சண்டை.

மூத்தவள் மகன்கள் மிகக் கொடியவர்கள்;
முழுமனதோடு ஏற்கவில்லை இளையவனை;
வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும்,
வளரலாயின அடிக்கடி அம் மக்கள் இடையே.

சிறுவர்களின் சண்டை சிறிது நேரமே!
பெரியவர்கள் நுழைந்தால் பெரிதாகும்,
சிறுவர் பூசலில் அன்னையர் நுழைந்ததால்,
பெரும் புயலில் சென்று நின்றது அது!

“நீ யார்? எந்த ஊர்? என்ன குலம்?
நீலி நீ ஒரு காமக் கிழத்தி அல்லவா?
என் திருமணத்துக்கு அக்னி சாட்சி.
உன் திருமணத்துக்கு யார் சாட்சி?”

“சம்பந்தர் பெருமானின் ஆணைப்படி
எங்கள் திருமணம் நடந்தது உண்மை;
திருப்புறம்பியத்தில் உள்ள கிணறும்,
சிவலிங்கமும், வன்னி மரமும் சாட்சி.”

“நல்ல சாட்சிகள் வைத்துள்ளாய் நீ!
நாப் பேச இயலாத மூன்று பொருட்கள்!
இங்கு வந்து நிரூபிக்கச் சொல்லுவாய்
அங்கு இருக்கும் உன் சாட்சிகளை!”

எள்ளி நகையாடினாள் மூத்தவள்,
உள்ளம் குமுறினாள் இளையவள்;
“கள்ளம் இல்லா என் வாழ்க்கைக்குக்
களங்கம் கற்பிக்கின்றாள் சிவனே!

தாய், தந்தை என யாரும் இல்லை!
சேய் எனக்கு நீயே ஒரு கதி ஆவாய்.
மாமனாக வந்து வழக்கு உரைத்தாயே!
மாமன் மகள் என்னையும் காப்பாற்று!”

பொற்றாமரைக் குளத்தில் நீராடினாள்,
நற்றாள் மலர்களைப் பணிந்தாள்;
வன்னியும், கிணறும், சிவலிங்கமும் – என்
இன்னுயிர் காத்திட இங்கு வரவேண்டும்.”

பெருமான் அருளால் அவை மூன்றும்,
திருக்கோவிலுக்கு வடகிழக்கு திசையில்,
உடனே முளைத்து நின்றன அங்கே!
அடைந்தனர் வியப்பு அவற்றைக் கண்டவர்.

நிந்தனை செய்தனர் மூத்த மனைவியை !
வந்தனை செய்தனர் இளைய மனைவியை!
“நிந்திக்க வேண்டாம் நீங்கள் இவர்களை!
சிந்திப்பீர்கள் இவர்கள் செய்த நன்மையை!

கற்பின் திறத்தை உலகறியச் செய்த ஒரு
பொற்புடைய மங்கை இவரே அன்றோ?
தாயற்ற எனக்குத் தாயும் இனி இவரே!
தங்கையான எனக்குத் தமக்கையும் கூட !”

பொறாமை மறைந்து பொறுமை வளர்ந்தது;
திருந்திய மகன்கள் விரும்பினர் தம்பியை;
பெருவாழ்வு வாழ்ந்தான் வணிகப் பெருமகன்;
திருமகள் போலத் திகழ்ந்தாள் இளையவள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

ஆலவாய்க் காண்டம் முற்றுப் பெற்றது.

அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் முற்றின.
 
64 THIRU VILAIYAADALGAL

64 (C). THE SHOWDOWN BETWEEN THE WIVES.

The sons of the first wife were perverted. They disliked the younger wife’s son. There would be occasional quarrels and disputes among them.

The children would fight quickly and also patch up quickly. When the elders enter into their quarrels, they get blown out of proportions and become permanent issues.


The mothers took the sides of their sons and the quarrel escalated. The first wife asked the second wife,
“Who are you? Where do you come from? What are your caste and creed?

After all you are my husband’s lover. I am the one who is legally wedded to him. We married with Agni as the witness. Who is the witness for your wedding?”

The younger wife replied, “We got married in the presence of Thirugnaana Sambandhar. The Sivalingam, the well and the tree at Thiruppurambiyam are the three witnesses for our wedding!”

“How very convenient! None of them could speak nor move about. Prove the truth in your words by making them appear as the witnesses”


The elder wife laughed at the younger one and ridiculed her.
The pious and the straight forward wife got hurt deeply.

“I have not done anything immoral, but I am being projected as an opportunist. I have no one to take up my side and argue on my behalf.

God! You had appeared as the maternal uncle of a helpless child and restored his property to him. You must prove the truth in my words or I have no other choice than to end my life.”

She took a dip in the lotus pond and prayed to Siva, “You are my father and my mother. Produce the three witnesses to prove the truth in my words”.


Lo and behold! The three immovable witnesses appeared in the north eastern side of the temple immediately! The onlookers were wonder struck.


Now everyone scolded the elder wife and praised the younger wife. The younger wife intervened and told them,” Please do not scold her. She has made my truthfulness known to the world. To me she is like a mother. To me she is an elder sister”


The elder wive was shaken by the magnanimity of this young woman. They both became the best friends after that. The sons too loved one another. The business roared and the family lived happily.


The Thiru Aalavaaik kaandam ends here.


The sixty four divine pranks of lord Siva get completed here.
 
65. நூற்பயன்.

திங்களணி திருவால வாயெம் மண்ண
ற்றிருவிளையாட் டிவையன்பு செய்து கேட்போர்

சங்கநிதி பதுமநிதி செல்வ மோங்கித்
தகமைதரு மகப்பெறுவர் பகையை வெல்வர்

மங்கலநன் மணம்பெறுவர் பிணிவந்தெய்தார்
வாழ்நாளு நனிபெறுவர் வானாடெய்திப்

புங்கவரா யங்குள்ள போக மூழ்கிப்
புண்ணியராய்ச் சிவனடிக் கீழ் நண்ணி வாழ்வார்.

திருஆலவாய் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளின் திரு விளையாடல்களை அன்புடன் வழிபட்டுக் கேட்பவர்கள் சங்க நிதியும், பதும நிதியும் பெற்று குபேர சம்பத்துடன் வாழ்வார்கள்.

நல்ல மங்கலப்பெண்ணுடன் திருமணம் நடக்கும். அறிவுள்ள புத்திரர்களைப் பெறுவார்கள். பகை வெல்லுவார்கள். நோய் அணுகாது.

பூரண ஆயுள் பெற்று நீண்டு வாழ்வார்கள். பின் சுவர்க்கம் சென்று அடைவர். சிவன் திருவடி நிழலில் பொருந்தி பேரின்பத்தில் திளைத்து இருப்பர்.

ஓம் நம: சிவாய சிவாய நம ஓம்.
ஓம் நம: சிவாய சிவாய நம ஓம்.
ஓம் நம: சிவாய சிவாய நம ஓம்.
 
# 65. The auspicious effects of this puraanam.


The person who listens to these stories of the 64 divine pranks of Lord Soma Sundara of Madurai, will be blessed with Kubera sampathu.

He will get a good wife and intelligent children. He will conquer his enemies. He will not be afflicted by any diseases.



He will live along life with poorna aayush. He will merge in the lotus feet of lord Siva for eternity.
 
66. ஆசிரியர் வரலாறு

# 66 . ஆசிரியர் வரலாறு

பரஞ்ஜோதி முனிவர் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சோழ நாட்டில் உள்ள திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் பிறந்தவர்.

தந்தை மீனாட்சி சுந்தர தேசிகர். சைவ வேளாள மரபைச் சேந்தவர்.
இளவயதிலேயே தமிழ், வடமொழிகளில் புலமை பெற்றவர். இவர் ஒரு துறவி.

பல சிவஸ்தலங்களை தரிசித்து மதுரையை அடைந்தார். அங்கு மீனாட்சி அம்மையையும், சோமசுந்தரப் பெருமானையும் வழிபட்டு வந்தார்.

ஒரு நாள் கனவில் மீனாட்சி அம்மை தோன்றி சிவபெருமான் மதுரையில் புரிந்த திருவிளையாடல்களைப் பாடுமாறு பணித்தார். இந்நூல் சொக்கநாதர் சந்நிதியில் புலவர்கள் முன்பு அரங்கேற்றப்பட்டது.
 
66. About the author.

Paranjothi munivar was born in Vedaaranyam about 350 years ago. His father was Meenakshi Sundara Desikar.


Paranjothi was well versed both in Tamil and Sanskrit. He was a sanyaasi. He traveled visiting all the Siva kshethraas.


When he was in Madurai, Meenakshi Devi appeared in his dream and bade him sing the glories of the 64 divine pranks played by Lord Siva in Madurai.

This work was released in the presence of many poets in the sannadhi of Chokkanaathar.


Om nama: sivaaya sivaaya nama: Om.
Om nama: sivaaya sivaaya nama: Om.
Om nama: sivaaya sivaaya nama: Om.
 
Devi bhaagavatam - skanda 3

3# 5. ருத்திரனின் துதி

துதித்து முடித்து விஷ்ணு பரவசம் அடையத்
துதிக்கத் தொடங்கினார் தேவியை ருத்திரர்.

“சங்கற்பத்தினால் தோற்றினாய் அயன் அரியை;
சற்குணத்தின் ரூபமாகிய நீ என்னையும் கூட!

நீயே ஆவாய் பஞ்ச பூதங்களின் உருவம்;
நீயே ஆவாய் அந்தக் கரணங்களின் உருவம்;

அலங்காரம் செய்து கொள்பவள் நீயே!
ஆனந்தத்தை அனுபவிப்பவள் நீயே!

உலகை படைப்பது உனக்கு விளையாட்டே.
உலகின் சிருஷ்டியும் உனது கற்பனையே!

தந்தாய் பாத தரிசனம் பெண்களாக மாற்றி;
தரவில்லை அருவருப்புப் பெண்ணின் உடல்.

உபதேசிப்பாய் நவாக்ஷர மந்திரத்தை எனக்கு!
ஜபித்தேன் முன்பு, மறந்து விட்டேன் இப்போது ”

உபதேசித்தாள் நவாக்ஷரத்தை ருத்திரனுக்கு
ஜபித்தார் நிஷ்டையில் பரமாத்ம ரூபத்தில்.

தேவியைத் துதித்துப் பூஜித்தான் பிரமனும்;
“வேதம் கூறுகிறது ‘ஏகமேவாத்வீதீயம்’ என.

அந்தத் தன்மை உடையவர் நீயா? சிவனா?
இருவரும் ஏகமா த்வீதீயமா உண்மை கூறு!

அறியேன் நான் நீ ஸ்திரீயா புருஷனா என.
அறிவு தந்து உதவுவாய் எனக்கு!” என்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
3#5. Rudran’s sthuthi

After Vishnu finished praising Devi, Rudran started praising her. “You created Brahma, Vishnu and me just by your will and wish. You exist in the form of the pancha boothaas – the Five elements. You are the anthak karanans .

You are the one who gets decorated whenever anyone gets decorated . You are the one who enjoys all the pleasures – whenever anyone enjoys a pleasure.

The creation of the world is a child’s play for you. The creation of the world is purely out of your imagination. You changed us into women and gave your paada dharshan.

But I do not find the body of a woman repulsive. I want to know the Navaakshara mantra. I used to do japam of it previously but now I have forgotten it completely.”

Devi did the upadesam of Navaakshara mantra to Rudran. He did japam of it . Brahma praised Devi now.

“Vedaas say ‘Ekame vaa dwitheeyam!” Is it you or Siva who has this quality? I do not know whether you two are one and the same or two different beings! Tell me the truth, are you a female or a male please enlighten me with true knowledge oh Devi!”

Please Note:

Pancha Bootha means the 5 elements … Earth, Water, Fire, Air and Space.

In VEdAntic literature, this antahkaraṇa (internal organ) is organized into four parts:

AhamkAra (ego) :–
identifies the Atman (self) with the body as ‘I’

Buddhi (intellect) :–
controls decision making

Manas (mind) :–
controls sankalpa (will or resolution)

Chitta (memory) :–
deals with remembering and forgetting
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2c. வைஷ்ணவ சித்தாந்தம்

சிருஷ்டிக்க வேண்டும் என்ற இச்சை கொண்டு
சிவ ரூபமான பரபிரம்மம் பூண்டான் சங்கற்பம்.

இச்சையின் அம்சம் ஆகும் காலத் தத்துவம்
சிச் சக்தியை சிச்சக்தியால் சிருஷ்டித்தான் முதலில்

இச்சா மயமான இந்த இச்சா சக்தியால்
இரண்டு உருவம் ஏற்றார் சிவ பிரம்மம்.

வலிமையான ஆண் உருவம் வலப் பக்கத்தில்
மெல்லிடைப் பெண் உருவம் இடப் பக்கத்தில்

காமத்தைத் தூண்டியது அந்த அழகிய பெண்ணுருவம்
காமத்தோடு நோக்கியது ஆணுருவம் பெண்ணுருவை.

தாமரை மலர் போன்ற அழகிய தளிர் மேனியில்
காமத்தைப் பெருக்கும் சந்திரமண்டல பிருஷ்டம்!

வாழை மரம் நாணமுறும் வழுக்கும் தொடை;
வில்வப் பழத்தைப் பழிக்கும் இளம் ஸ்தனம்;

நளினமாக அசையும் மெல்லிய சிற்றிடை;
ஒளி வீசி மனம் கவரும் அழகிய வனப்பு;

சாந்தமான வடிவம், புன்னகை பூத்த முகம்;
காந்த விழி கடைக்கண் பார்வை கொண்டு !

சுகமான, சுத்தமான ஆடை அணிந்திருந்தாள்;
விகசித்தன அலங்கரித்த ரத்தின ஆபரணங்கள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2c. Vaishnava SiddhAntham

When He desired to create this Universe, there was nothing except Sri KrishnA. Impelled by KAla (The Time Factor) - His Own Creation - He became ready start his creation.

The Lord, who has total free Will, wished to and then divided Himself into two parts. His Left part becoming a female and His Right part becoming a male. Then Eternal male part looked at the female part with great love.


The female part on his left side was the Sole Receptacle to hold all the contents of love. It was very lovely to behold and resembled a beautiful lotus.

The loins of this woman defied the Moon; Her thighs made the plantain trees pale in comparison; Her breasts were firm and beautiful like the Bel fruits; Fragrant flowers were scattered on her head; Her middle part was very slender and very beautiful to behold!

Exceedingly lovely, very calm in her appearance with a sweet smile reigning on Her lips and loving sidelong glances. Her clothing were purified by fire and Her body was decorated with jewels studded with precious gems.

 
BhArgava PurANam - part 1.

ஒரு சிறு முன்னுரை

ப்ருகு முனிவர் உபதேசித்த பார்க்கவ புராணம் விநாயகரின் அவதார மகிமைகளைக் கூறுகின்றது. விநாயகர் புராணம் என்னும் பெயரில் வத்ஸஸோம தேவஷர்மா வெளியிட்டுள்ளார். கச்சியப்ப முனிவர் விநாயகர் புராணத்தைத் தமிழில் பாடி உள்ளார்

கைலாசபதி சிவன் நந்திக்கு உபதேசித்ததை அவர் சனத்குமாரருக்கு உபதேசித்தார். சனத்குமாரர் வியாசருக்கு உபதேசித்தவை பதினெட்டுப் புராணங்கள் ஆயின.

வேறு சில முனிவர்கள் பதினெட்டு உப புராணங்களை இயற்றி உள்ளனர். இவற்றில் முக்கியமானது பார்க்கவ புராணம். வியாசரிடமிருந்து ப்ருகு முனிவர் உபதேசம் பெற்றதால் இது அவர் பெயராலேயே பார்க்கவ புராணம் என்று அழைக்கப்படுகிறது.
 
About Ganesa

வாக்கு உண்டாம்: நல்ல மனமுண்டாம்: மாமலராள்
நோக்கு உண்டாம்: மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

பிடி அதன் உரு உமை கௌமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.
 
#1a. காமந்தன்-1

கொல்லம் நகரில் விந்திய மலைச் சாரலில்
நல்ல வணிகன் ஒருவன் சித்ரூபன் என்பான்.
அழகிய மனைவி சுலோசனை அவனுக்கு
அளித்தாள் காமந்தன் என்னும் மைந்தனை.

குடும்பினியை மணந்து இல்லறம் தூய்க்க
குடும்பம் பெருகியது, பன்னிரு பிள்ளைகள்!
தாயும் தந்தையும் மறைந்த பின்னர்
தகாத செயல்கள் செய்தான் காமந்தன்.

பெண் இன்பத்தில் நாட்டம் கொண்டான்
பெண்களைக் கூடிக்களித்து வந்தான்.
வணிகத்தைப் புறக்கணிக்கவே அவன்
வருமானம் குறைந்து நின்றே போனது.

தவிக்கும் மனைவியின் குமுறல்கள்
செவிடன் காதில் ஊதிய சங்கானது !
வருமானம் நின்றதும் காமந்தன் தன்
பெரும் சொத்துக்களை விற்கலானான்.

கையில் பணம் எனில் மெய்யில் இன்பம்;
கைப் பணம் தீர்ந்தால் அடைபடும் கதவு.
பட்டினிக் குழந்தைகளைப் பேணுவதற்கு
ஒட்டிக் கொண்டாள் தாயிடம் குடும்பினி.

கொஞ்சமும் அஞ்சாத காமந்தன் பின்னர்
பஞ்ச மாபாதகங்கள் துணிந்து செய்தான்.
சூது , களவு, வழிப்பறி, கொள்ளை மற்றும்
சூது வாதறியாப் பெண்களின் கற்பழிப்பு!

மன்னனிடம் முறை இட்டனர் மக்கள்
இன்னல்கள் தரும் இவனைப் பற்றி.
நாடு காக்க விரும்பிய அம் மன்னன்
நாடு கடத்தி விட்டான் காமந்தனை.

கள்வர்கள் தொடர்பு ஏற்பட்டது அங்கு.
களவும் கற்றுத் தேர்ந்துவிட்டான் அவன்.
காட்டு வழியே செல்பவரின் பொருளை
வாட்டம் இன்றிக் கொள்ளை அடித்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 

Latest posts

Latest ads

Back
Top