• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

BHAARGAVA PURAAANAM - PART 1

1a. KAmanthan – 1


A honest merchant named Chithroopan lived in the city Kollam near Vindhya mountain. His wife Soluchana gave birth to a son KAmanthan who married Kudumbini at the right age. They got twelve children and their family had grown large.


After the demise of his parents KAmanthan became infatuated with women. He neglected his business and spent all his energy, time and money with lowly women of no virtue.


Kudumbini could not make him change his manners. The business ended in a heavy loss and there was no more income. Now KAmanthan started selling his property.

As long as he had money to pay, he was welcome in the houses of those women. The moment he became bankrupt the doors would be closed on his face.


Kudumbnini went to live with her mother since she could not stand the sight of her starving children. KAmanthan had lost all his assets and properties by now and he took to stealing, mugging and looting the virtue of innocent girls and young women.


The citizens complained to the king about this horrible man. The king promptly banished him to the forest. He met some more thieves and thugs in the forest and became an expert in his chosen career as a full fledged thief.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3


3#6a. பராசக்தி

கூறினாள் பராசக்தி பதில்களை நாரதா!
கூறுவேன் உனக்கு அவற்றை நானும்!

“பரமசிவனும் நானும் ஒன்றே ஆவோம்;
பிரமை அடைந்தவர் காண்பர் வேறுபாடு.

ஏகமே வா த்வதீயம்’ ஆவது எங்கனம்?
ஏகமாக உள்ளது த்விதீயம் ஆவது எப்படி?

கண்ணாடிகளின் நடுவே வைத்த ஜோதி
இரண்டாகத் தெரிவது போலவே தான்.

எல்லாவற்றையும் அழிக்கும் காலத்தில்
எல்லாவற்றையும் கடந்து நிற்கும் என் உரு.

புருஷனோ, ஸ்தரீயோ, அலியோ அல்ல நான்!
பேதங்களாகப் பரிமளிப்பேன் படைப்பின் போது.

பயன் தருவேன் பேதங்களின் செயல் புரிந்து.
இயங்காது என்னிடமிருந்து பிரிந்த எதுவும்.

எல்லாப் பொருட்களும் நானே என்றறிவாய்
உள்ளேன் பல்வேறு சக்திகளின் ரூபமாக.

நீரில் குளிர்ச்சியாக! நெருப்பில் வெப்பமாக!
சூரியனின் ஒளியாக! நிலவின் குளுமையாக!

பலஹீனனைக் கூறுவார் சக்திஹீனன் என்று
பயந்தவனைக் கூறுவார் அசக்தன் என்று.

சக்தியின்றி செயல் புரிய இயலாது எவராலும்!
சக்தி அளித்துச் செயல் புரிய வைப்பவள் நானே.

நீர் அனைத்தையும் அருந்துவேன் விரும்பினால்,
நெருப்பை அணைப்பேன், காற்றை நிறுத்துவேன்!

மண்ணைக் காண்கையில் தெரியாது பானை!
மண்ணைக் காணாவிட்டால் தெரியும் பானை!

படைப்பைக் கண்டால் தெரியாது பரம்பொருள்.
படைப்புத் தெரியாது பரம்பொருள் தெரிந்தால்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#6a. Paraa Shakti

"Narada! Devi replied to all my questions and I will tell you all the answers given by her” Brahma told Narada.

Devi said, “I and Siva are one and the same. Those who are deluded think of us two different entities.
How does Ekame vaa dwitheeyam happen?

It is just like placing a lamp in between two mirrors. One lamp will now appear like two different lamps.

I am neither a woman, nor a man nor an eunuch. Only during creation I assume the various differences. Anything separated from me can’t function. I am there in everything seen in this world.


I exhibit myself as different forms of energy in different things. I am the coldness in water, I am the hotness in the fire, I am the light energy of the Sun and the coolness of the moon.


A person devoid of energy is called bala-heenan and a person in fear is called as a asakthan. Nothing can be done by anybody without using some form of energy.


I am the one who gives the various forms of energy to get things done. If I wish to, I can soak up all the water in the oceans. I can stop the flow of the wind and destroy the all destroying fire.

When you see the mud used in making A pot, you miss seeing the pot. When you see the pot you miss seeing the mud used making it.

In the same way, when you see the creation you can’t see God and when you can see God you can’t see the creation.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2d. சித்தாந்தம் (2)

வெண்ணிலாவை நோக்கும் சகோரப் பறவை எனக்
கண்டாள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியின் திருமுகத்தை!

விளங்கியது நெற்றியின் நடுவில் சந்தனத் திலகம்;
துலங்கியது அதன் நடுவில் குங்குமம், கஸ்தூரி.

வளைந்த கூந்தலில் புரண்டன மலர் மாலைகள்;
விளைந்த முத்துக்கள், நவமணி அலங்கரித்தன.

பூரித்த உருவத்தினால் பதிக்கு இனியவள் - தோற்று
ஓரம் போகும் யானையும், அன்னமும் நடையழகில்!

சிருங்கார ரசமே உருவாகி வந்த ஒரு பெண் அவள்;
சிருஷ்டித் தொழிலுக்கு தலைவர் கிருஷ்ணமூர்த்தி!

சிருஷ்டியை விரும்பிச் செய்தார் தேவியோடு சம்போகம்
சிருஷ்டி ஸ்தானத்தில் பிரமனின் ஒருநாள் பொழுதளவு.

சிரமம் அடைந்தார் தொடர்ந்த சம்போகத்தால் - ஒரு
சுப வேளையில் வெளிப்பட்டது தேவியிடம் அவர் வீர்யம்

சிரமப்பட்டால் தேவியும் அந்த வீரியத்தின் தேஜசால்;
சிரமத்தால் வெளிவந்தன பெரு மூச்சும், வியர்வையும்.

கிரகித்துக் கொண்டது பெருகிய வியர்வையை பூவுலகு;
பரவிய பெருமூச்சு ஆனது பிராணிகள் ஜீவிக்க ஆதாரம்.

உற்பத்தியானாள் வாயுவின் பத்தினி இடப்புறத்தில்;
உற்பத்தியாயினர் ஐந்து புத்திரர்கள் அவளிடமிருந்து.

பஞ்சப் பிராணன்கள் என்ற பெயர் பெற்றனர் ஐவரும்,
பிராண, அபான, வியான, உதான, சமான வாயுக்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAGAVATAM - SKANDA 9

9#2d. Pancha prANAs

His Devi's eyes began to drink with joy the moon beams from the face of Sri KrishnA just as the mythical Chakora bird does.

On Her forehead there was the mark of red vermillion; over that was the dot of white sandal paste and over that was placed the dot of musk.

Her wavy hair was decorated with MAlati garlands. Her neck was decorated with gem studded ornaments and jewels. She was always amorous towards Her husband.

Her face looked as if ten million moons had risen all at once! Her gait humiliated those of a swan and an elephant.

Krishna and Prakruti Devi indulged in prolonged amorous sports so that Brahma’s one celestial day passed away in that sport. The Father of the Universe, then became tired and impregnated her in an auspicious moment.

Devi was also very tired and began to perspire and breathe very heavily. Her perspiration turned into water and flooded the whole universe! Her breath turned into air and became the life of all beings.

The female that sprung from the left side of VAyu became his wife and out of their contact were born their five sons called as Pancha prAnAs. They were named as PrANa, ApAna,
SamAna, UdAna and VyAna.

These five sons of VAyu are the five vital VAyus of all the living beings.


 
BHAARGAVA PURAANAM - PART 1

#1b. காமந்தன்-2

காட்டில் கண்டான் அந்தணன் ஒருவனை!
கடிமணம் புரிந்திருந்த புது மணமகனை.

கிங்கரன் போல வழிமறித்தவனைக் கண்டு
சங்கடத்துடன் காலில் விழுந்து வணங்கி,

“அனைத்துப் பொருளையும் தருவேன் நான்
மனைவி காத்திருப்பாள் உயிர்ப் பிச்சை தா!”

காமந்தன் காதில் விழவில்லை எதுவுமே!
கவர்ந்தான் பொருளை அவனைக் கொன்று.

பற்றியது அவனை பிரம்மஹத்தி உடனே!
பற்றின முற்றிய தீவினைப் பயன்களும்!

வியாதிகள் விளைந்தன, உதவுபவர் இல்லை;
விட்டு வந்த மனைவி வந்தாள் நினைவுக்கு!

தூது அனுப்பினான் தன் தோழன் ஒருவனை,
“எதாவது கூறி அவளை வரச் செய் என்னிடம்!”

“நாடு கடத்தப் பட்டவர்களுக்கு உதவுவது
கேடு விளைவிக்கும் அரசன் சினந்தால்!”

கணவன் தன்னைக் கை கழுவியது போல
கணவனைக் கை கழுவினாள் குடும்பினி.

மனைவியே வெறுத்து ஒதுக்கிய பிறகு
மதி தெளிந்தது கள்வன் காமந்தனுக்கு.

எண்ணி வருந்தினான் தன் பாவங்களை!
எண்ணி நாணினான் தன் செயல்களை!

முடிவு நெருங்குவதை உணர்ந்த அவன்
முற்றிலும் துறந்தான் தன் ஆசைகளை.

பரிஹாரம் செய்யவும் தயார் ஆனால்
பரிஹாரம் என்னவோ தெரியவில்லை.

நொந்த உள்ளத்துடன் வாடியவனிடம்
வந்து சேர்ந்தான் ஓர் ஏழை அந்தணன்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1

1. b. KAmanthan – 2

One day KAmanthan saw a Brahmin pass by in the forest. He was newly married and was hurrying to get home to his young wife. He got scared when he was stopped by KAmanthan. He offered to give away all his belongings in return for sparing him alive.

But KAmanthan killed him mercilessly and took away all his belongings. The terrible Brahmahaththi dosham afflicted him immediately. The evil deeds done by him over the years bore fruits and afflicted him along with Brahmahaththi. He became a very sick man. There was no one to help him or take care of him.


He remembered his wife Kudumbini. He sent a messenger begging her to come and join with him. Kudumbini got scared since helping a banished person was considered as treason and was punishable by the king. She disowned him completely, just as he had done her years ago.

KAmanthan became wise after the events. He felt sorry for his heinous crimes. He felt ashamed for his wicked deeds. He gave up the desires for wealth and women.


He was a changed man now. He wanted to do parihAram for his sins, but no one wished to have anything to do with him. When he was feeling hopeless, a poor Brahmin came to him seeking help.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#6b. மூன்று தேவியர்

“புன்முறுவல் முகமும், வெண்ணிற ஆடையும்,
பொன்னாபரணங்களும், ரஜோகுணமும் கொண்ட,

மஹாதேவியின் அம்சத்தைக் கொண்டுள்ள
மஹாசரஸ்வதி ஆவாள் பிரமன் துணைவி!

நான்கு வித பீஜங்களைக் கொண்டு படைப்பாய்;
முன்னுள்ள ஸ்வபாவ குணங்களை அறிவாய்;

கால, கர்ம குணங்களை நியமிப்பாய் பிரம்மனே!
லிங்காலிங்க பாகங்களுடன் படைப்பாய் இனி!”

மஹாலக்ஷ்மியை அளித்தாள் விஷ்ணுவுக்கு!
“மஹாலக்ஷ்மியோடு மகிழ்கையில் ரஜோகுணம்;

சத்துவ குணமே பிரதானம் உனக்கு விஷ்ணுவே!
சாதுக்களைக் காக்க நீ அவதரிப்பாய் உலகினில்! ”

தமோ குணம் பிரதானம் ஆனது ருத்திரனுக்கு;
துணைவியாக்கினாள் தேவி மகா காளியை!

“யாகங்களை அமைக்கிறேன் உங்களுக்காக;
யாகங்கள் செய்வர் மூன்று வர்ணத்தவர்கள்.

அவிர்பாகத்தை ஏற்பீர் அவர்களிடமிருந்து;
அவிர்பாகம் ஆகும் உங்களுக்குக்கு உணவு!

பிரபாவம் முக்குணங்கள் மூவருக்கும் என்றாலும்
பிரதானம் எக்குணம் தொழிலுக்கு ஏற்றதோ அதுவே ”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#6b. The three consorts

Devi spoke to Brahma,” This Devi with a smiling countenance, dressed in white silk, decorated with golden ornaments and with Rajo guNam is Mahaa Saraswati – your consort.
Create srushti from all the four types of the seeds. Learn the earlier swabhaavam of the jivaas and allot their Time, Duty and Temperament accordingly. Create them with or without the linga body parts.”

Devi gave Mahaa Lakshmi to Mahaa VishNu and told him, “You will have Rajo guNam only when you indulge with Lakshmi Devi. Satva guNam is your main guNam and you will take many births in the world to save the sadhu and saints from the evil mongers”

Devi gave Tamo guNam to Rudran and made Mahaa Kaali as his consort. She then said. “I will prescribe yaagas to be performed by the three varNaas. They will offer havisu in the yaagaa. It will be our food henceforth.

All the three of you will a have a blend of all the three guNaas but the important one will be that particular guNam which will help you in performing your job well.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2e. சித்தாந்தம் (3)

தோன்றினாள் வருணனின் இடப்பக்கம் தேவி;
தோன்றியவள் வருணனின் தேவி வாருணானி.

சித்சக்தி ஜொலித்தாள் தேஜஸுடன் - இருந்தாள்
சித்சக்தி சிவ ரூப கிருஷ்ணபிரானின் பிராணனாக!

வசித்து வந்தாள் சிவரூப கிருஷ்ணனின் மார்பில்
வசித்தாள் சுகமாக நூறு மன்வந்திரம் வரையில்!

பெற்றாள் பொன்னைப் போன்ற ஒரு முட்டையை !
பெற்றதும் வீசி எறிந்தாள் பிரம்மாண்ட கோள நீரில்!

கோபம் கொண்டார் சிவரூப கிருஷ்ணமூர்த்தி இதனால்;
சாபம் தந்தார் இரக்கமற்ற செயலுக்குத் தண்டனையாக!

" நீயும் உன் அம்சமாகத் தோன்றும் தேவ ஸ்த்ரீக்களும்
நித்திய யுவதியாவீர் குழந்தைப் பேறு என்பதே இன்றி!"

தோன்றினாள் தேவகன்னிகை அதி வேகமாகத்
தேவியின் நாவின் நுனியில் இருந்து அப்போது.

கொண்டிருந்தாள் வெண்மையான அழகிய உருவம்;
பூண்டிருந்தாள் இரத்தின ஆபரணங்கள்; மாலைகள்!

கையில் வீணையும், சுவடிகளும் கொண்ட தேவி
கைவரப் பெற்றிருந்தாள் சகல சாஸ்திரங்களையும்.

பிரிந்தாள் தேவி சில காலம் கழிந்த பின்னர்
மறுபடி இரண்டு மிக அழகிய தேவியர்களாக.

தோன்றினாள் ஸ்ரீ ராதா தேவி வலப் பக்கத்திலிருந்து;
தோன்றினாள் லக்ஷ்மி தேவி இடப் பக்கத்திலிருந்து.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2e. Siddhaantam - 3

Varuna Deva became the presiding deity of the water that came out from Devi's perspiration. A Devi appeared out of Varuna Deva's left side. She became VaruNA's wife called VaruNAni Devi.

The pregnant Prakruti Devi lived on Sri Krishnamurti's chest for one hundred manvantarAs. The S’akti, of the nature of knowledge of remained pregnant for one hundred manvantaras. Her body became effulgent with Brahma-teja.

When one hundred manvantaras passed away, that Beautiful Devi gave birth to a Golden Egg. That egg was the repository of the whole universe.

The Prakriti Devi became very unhappy to see an egg and out of anger, threw that within the water collected in the center of the Universe.

Krishna became angry on seeing this and cursed the Devi thus "You have forsaken out of anger this son just born of you! I curse you that you as well as all the godly women who appear from you will be deprived of having any children and you will remain for ever constant in your youth."

While Krishna was thus cursing, suddenly a beautiful Devi came out from the tongue of the beloved Devi of Krishna

She was white in color. Her dresses were all white, in her hands there were lute and book and all Her body was decorated with ornaments made of gems and jewels. She was Saraswati Devi - the Presiding Deity of all the S’Astras.

Some time later Moola Prakruti the Beloved Devi Of Sri Krishna further divided into two parts. Out of Her left portion came KamalA (Lakshmi Devi) and out of Her right portion came RAdhika


 
BHAARGAVA PURAANAM - PART 1.

#1c. காமந்தன்-3

“வறுமையில் வாடுகின்றோம் நாங்கள்!
சிறு உதவியேனும் செய்ய வேண்டும் நீர்!”

பரிஹாரம் செய்ய அவகாசம் வந்தது!
பெருமகிழ்ச்சி கொண்டான் காமந்தன்

பொன்னும், மணியும் அள்ளித் தந்தான்;
இன்னும் பிறரை அனுப்பச் சொன்னான்.

மகிழ்ச்சிக் கடலில் திளைத்த அந்தணன்
நெகிழ்ச்சியுடன் கூறியவற்றைக் கேட்டு

வந்தனர் அநேகர் காமந்தனை நாடி!
நொந்தனர் அவர்கள் அவனைக் கண்டு!

“அந்தப் புதுவள்ளல் நீதானா கள்வா!
இந்தச் செல்வம் நீ ஈட்டியது எப்படி?

மங்கலம் இழந்த பெண்டிர் எத்தனை?
தங்கள் உயிர் தந்த மனிதர் எத்தனை?

நீ என்று அறியாமல் வந்துள்ள எமது
தீ வினை நீங்கச் செய்வது எங்கனம்?”

“மாறி விட்டேன் உள்ளம் நான் என்று
கூறுவதை நீர் நம்பத் தான் வேண்டும்!”

“மெய் கூறுவதானால் செய்வாய் இதனை!
ஐயன் விநாயகன் கோவில் அடைந்தது பாழ்!

குறைவின்றி ஆலயத்தைச் சீரமைத்துக்
குறைப்பாய் நீ உன் பாவச் சுமைகளை!”

சிற்பிகள் குழுமினர் சீரமைக்கும் பணியில்;
சிறந்த நந்தவனம் மலர்களைச் சொரிந்தது!

தாமரைக் குளம் தோன்றித் திகழ்ந்தது!
தாழ்வில்லாத குடமுழுக்கும் நிகழ்ந்தது.

திருவிழாக்கள் நடந்தன தொடர்ந்து;
திருப்பணிகள் அளித்தன திருப்தியை.

காமந்தனின் காலம் முடிந்து போனது.
காலனிடம் இருந்தது பாவப் பட்டியல்.

ஆலயப் பணியினால் செய்த பாவங்கள்
ஆலைவாய்க் கரும்பென அழிந்து ஒழிய;

புண்ணியப் பயனை முதலில் விரும்பி;
கண்ணியப் பிறவி எடுத்தான் காமந்தன்.

தேவநகரில் சௌராஷ்டிரத்தில் சென்று
சோமகாந்தன் என்னும் இளவரசானான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1.

1c. KAmanthan – 3

“We are suffering due to dire poverty. You must help me sir!” the Brahmin begged KAmanthan, who was overwhelmed that he got an opportunity to do parihAram for his sins.


He presented the poor man with gold and precious gems. He also made a request,”Please send to me more people who are in need of money and wealth!”

Those who heard the story of the Brahmin rushed to the forest. When they met KAmanthan they became very angry. “So you are the new do-gooder we see. How did you earn all this money? How many women were made widows by you?

How many men lost their lives in your hand? We would have never come to you had we known that it was you! How on earth will we absolve our sins incurred by coming to meet you?”


KAmanthan swore that he had mended his ways and they had to trust his words.


The group of men told him thus: “If what you say is true, then perform this task. The Ganesh temple is in ruins. Restore it to its original glory. Revive the pooja, Aradhana and festivals as before. At least part of your sins will be deleted by this good karma.”


KAmanthan brought all the experts in Aagama sAshtra. The sculptors got to work. Soon the temple was renovated and restored to perfection.


The garden was laden with colorful fragrant flowers. The lotus pond was an added attraction. Kumba abhishekam was performed as prescribed by the sAshtra. Festivals followed and puja was resumed.


KAmanthan’s days on earth came to an end. Yama had the long list of all his sins. But the renovation of the Ganesh temple had cancelled out most of his sins.


He was asked by Yama.”Do you want to enjoy the puNya of your good deeds first or the pApa of your bad deeds?”


KAmanthan wished to enjoy the puNya earned first. So he was born as the crown prince SomakAnthan in Devanagar in SourAshtrA.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#6c. தத்துவங்கள்

“எல்லாவற்றையும் நான் அழிக்கும் போது
என்னிடத்தில் ஒடுங்குவீர் நீங்கள் மூவரும்.

குணங்களோடு இணையும் போது நான் சகுணை;
குணங்களினின்று வேறுபட்டால் நான் நிற்குணை.

குணங்கள் உதிப்பதற்கும் காரணம் நானே
குணங்கள் ஒடுங்குவதற்கும் காரணம் நானே.

மஹத் தத்துவம் மூல காரணம் தத்துவங்களுக்கு!
மஹத் தத்துவத்துக்கு மூல காரணம் நான் ஆவேன்.

முதன் முதலில் தோன்றியது மஹத் தத்துவம்;
முதன்மையான புத்தி தத்துவமும் இதுவேயாம்.

அஹங்காரம் தோன்றியது மஹத்திலிருந்து.
அஹங்காரம் தோற்றுவித்தது முக்குணங்களை

சத்துவ அஹங்காரத்தில் தோன்றியவை நான்கு;
புத்தி, சித்தம், மனம், அஹங்காரம் என்ற நான்கு.

ராஜஸ அஹங்காரத்தில் தோன்றியவை பத்து;
ஞான இந்திரியம் ஐந்து; கர்ம இந்திரியம் ஐந்து.

தாமஸ அஹங்காரத்தில் தோன்றியவை பத்து;
தன்மாத்திரைகள் ஐந்து; பஞ்ச பூதங்கள் ஐந்து .

பரமசிவன் காரியமோ, காரணமோ இல்லை
பரமசிவன் நிறைந்துள்ளான் நிர்குணனாக.

காரணமாக ஆகும்போது நான் சகுணை;
இதயத்தில் உறையும் போது நிற்குணை.

தியானிக்கத் தகுந்தவர்கள் சிவனும், நானுமே!
தியானித்தால் சித்திக்கும் சகல காரியங்களும் ”

சன்னதியை விட்டு வெளியேறினோம் மூவரும்;
சடுதியில் மாறினோம் முன்போல ஆண்களாக!

மறைந்து விட்டனர் தேவி, விமானம், த்வீபம்!
இருந்தோம் நாங்கள் முன்போல அதே இடத்தில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#6b. The Tatvas

Devi continued talking to The Trinity, “When I destroy everything, you three will merge with me once again. When I exhibit the three guNaas, I am called a SaguNai (one who is associated with the guNas). When I do not have any attributes I becoma a NirguNai. (one devoid of all attributes).


I am the cause of the unfolding of the three guNas. I am the cause of folding them and making them disappear. All the Tatvas are born out of Mahat Tatvam. The Mahat Tatvam is born out of me. Mahat Tatvam is the one which appears first. It is also called as Buddhi Tatva.


Ahankaaram is born out of Mahat Tatvam. Ahankaaram gives rise to the three guNas… Satvam, Rajas and Tamas.


Satva Ahankaaram gives rise to the four antahkaranams namely Buddhi, Chiththam Manas and Ahankaaram.


Raajasa Ahankaaram gives rise to the ten faculties namely the five gnaana indriyaas (organs of knowlege) and the five karma indriyaas (organs of action).


Taamasa Ahankaram gives rise to ten factors. The pancha boothas (The five elements) and the pancha thanmaatraas (sparsam, sabdam, roopam, rasam and gandham)

Siva is neither the cause nor the effect of these. He is a nirguNan pervading everywhere – all the time.


When I reside in the heart of the jiva, I am the NirguNai. When I become the cause of the creation, I am the SaguNai. Only Siva and I are worthy of being meditated upon. The one who meditates on us will achieve everything he seeks.”


The Trinity left her sannadi and were changed to their previous selves from being young women. The dweepam, vimaanam and Devi vanished and they were left sanding in the same place where Vishnu had conquered the wicked Madhu and Kaitaban.
 
DEVI BHAGAVATAM - SKANDA 9

9#2f. சித்தாந்தம் (4)

பிரிந்தார் சிவரூப கிருஷ்ண மூர்த்தியும் அது போலவே!
பிரிந்தார் இரு கரங்கள், நாற்கரங்கள் கொண்டவர்களாக!

வலப்புறம் தோன்றினான் இரு கரங்கள் கொண்டவன்;
இடப்புறம் தோன்றினான் நாற்கரங்கள் கொண்டவன்.

பத்தினிகள் ஆயினர் நாராயணுக்கு தேவியர்;
உத்தம வைகுண்டம் சென்றனர் அனைவரும்.

பிறக்கவில்லை பிள்ளைகள் தேவியருக்கு - நாரணன்
உருவாக்கினான் தனக்குச் முற்றிலும் சமமானவரை.

கொண்டிருந்தனர் அனைவரும் நான்கு கரங்கள்;
கொண்டிருந்தனர் சம தேஜஸ், உருவம், குணம்.

உண்டாக்கினாள் லக்ஷ்மி தேவியும் அது போன்றே
உடலிலிருந்து கோடி, கோடி தேவ கன்னியர்களை.

தோன்றினர் கோகுலத்தில் கோப குமாரர்கள்
கோகுலக் கண்ணனின் ரோம கூபத்திருந்து.

சமம் உருவம், பருவம், தேஜஸ், வலிமையில்!
சம ஆயினர் அவன் மீது கொண்ட அன்பினால்!

தோன்றினர் ராதையின் ரோம கூபத்திலிருந்து
கோகுலத்தில் கோபிகைகள் ராதைக்கு சமமாக.

பணி புரிந்தனர் ராதைக்கு அதிகப் பிரியத்துடன்!
அணிமணிகள் பூண்டிருந்தனர் ராதை போலவே!

நித்திய யுவதிகளாக இருந்தனர் இவர்கள்;
நித்திய கன்னிகளாக இருந்தனர் இவர்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2f. Sidhdhantham (4)

Sri Krishna also divided Himself into two parts. From his right side appeared a Devan with two hands and from his left side appeared a Devan with four hands.

Then Sri Krishna told the Goddess Speech, “O Devi! You accompany NArAyaNan (the four-handed Devan) to become his wife”.

Then he spoke to RAdhA, “You are a sensitive and proud lady. So I will let you be my wife so that it will do you good”. Sri Krishna told Lakshmi Devi to become the wife of the four-handed NArAyaNan.

NArAyaNan went to Vaikuntam with Lakshmi Devi and Saraswati Devi. Both these Devis did bear any children as per Krishnamoorthy's curse.

From the body of NArAyaNa emerged all his attendants, all of them were four-handed. They were all equal to Him in their appearance, in merit; in spirit and in age. From the body of KamalA emerged millions of female attendants all equal to Her in every aspect.

Then arose innumerable Gopas (cow-herds) from the hair follicles of Sri Krishna. They were all equal to the Lord of Goloka in form, GuNAs, power and age; they were all dear to Him as if they were His life.

From the hair follicles of RAdhikA came out the Gopa KanyAs (cow-shepherdess). They were all equal to RAdhA and all were Her attendants and were sweet-speaking. Their bodies were all decorated with ornaments of jewels, and their youth was constant since they never bore any children.

 
BhaargavA puraaNam - part 1

# 2. சோமகாந்தன்

சென்று பிறந்தான் காமந்தன் தேவநகரில்;
சௌராஷ்டிர இளவரசன் சோமகாந்தனாக.

ஸுதன்மையை மணந்து நல்லாட்சி புரிய;
ஸுதன்மை ஈன்றாள் மகன் ஏமகண்டனை.

பூர்வ ஜன்ம பாவங்கள் பீடித்தன அரசனை
தீர்க்க முடியாத குஷ்டநோய் பரவியது.

வைத்தியம் பலனளிக்கவில்லை சற்றும்!
வைத்தியம் தொலைக்காதே பாவங்களை!

முற்றியது வியாதி; மாறியது முக அழகு!
மறைந்தது பிரகாசம்; நிறைந்தது விகாரம்!

“மகனை மன்னனாக்கிச் செல்வேன் வனம்”
மன்னன் உரைத்தான் மந்திரிசபையில் இதை.

“முற் பிறப்பில் செய்த தீவினைப பயன் இது.
மற்றவர் அருவருக்க அரசாட்சி செய்யேன்!

தக்க வயதை அடைந்துள்ளான் ஏமகண்டன்.
மிக்க மகிழ்வுடன் அவனை வழி நடத்துவீர்!”

ஸுதன்மை பிரிய விரும்பவில்லை அவனை.
முதன்மை அளித்தாள் கணவன் விருப்பத்திற்கு.

“பெண்ணின் இடம் கணவனுடன் தான்!” என்றாள்.
கண்ணனைய மைந்தனும் தடுத்தான் பெற்றோரை.

நீதி நெறிகள் நன்கு அறிந்திருந்த சோமகாந்தன்,
மீதி நாட்களை வனத்தில் கழிக்க விரும்பினான்.

சூட்டினான் மகுடம் மண்ணுலகம் வியக்கும்படி!
தீட்டினான் மகன் ஏமகண்டனை ஒரு வைரமாக!

கானகம் செல்கையில் தொடர்ந்தனர் ஜனங்கள்;
காரணம் கூறித் தடுத்தான் அரசன் அவர்களை.

சுபலன், ஞான கம்மியன் இரு மதிமந்திரிகள்
சுலபத்தில் அனுப்ப முடியவில்லை அவர்களை.

அரசனும், அரசியும் சென்றனர் வனம் நோக்கி.
அமைச்சர்கள் உதவிடப் பின் தொடர்ந்தனர்.

விரைவில் தந்தையின் நோய் குணமடைய
விநாயகனைத் தொழுதான் ஏமகண்டன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART1

2. SOma KAnthan

KAmanthan was born in Devanagar as SOma KAnthan – the prince of SourAshtrA. He married Sudhanmai after attaining age and ruled his kingdom well. He was blessed with a beautiful and worthy son HEmakantan.

All went on well until his punya got exhausted. When the effects of his paapa took over things changed drastically. He developed leprosy.


It was incurable since it was the effect of the sins he had committed as KAmanthan in his previous birth. His face got disfigured. His tejas vanished. He became unsightly and repulsive.


He decided that it was time to crown his son as the new king and go to the forest to spend the rest of his life in solitude. He spoke of his decision in his Sabha.


“My disease is the result of my bad karmaas of the previous birth. I know I am unsightly and repulsive. Yet all of you continue to treat me with the same respect and love as before. It is time that HEmakantan is made the new king so that I can go to VAnaprastha. ”



Sudhanmai refused to part company with him. She said tat the place of every woman was by the side of her husband.

HEmaknatan tried to persuade them to stay on with him but failed. HEmakantan was crowned as the king in a grand celebration. The king taught him everything he needed to know to rule well.


When the king and queen left for the forest the citizens of his country followed them. The king convinced them that their place was in the country and their job was to support and help the new king to rule well.


Everyone except two of his loyal ministers went back. Supalan and GnAnagamyan refused to part company with the king and queen. They wanted to be with them always and continue to serve them in the forest.


They all reached the forest. HEmakantan prayed to lord Vinayaka that his father’s disease should get cured soon.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#7a. தத்துவ விளக்கம் (1)

நாரதன் கேட்டான் மேலும் ஐயங்கள்
நான்முகன் ஆகிய தன் தந்தையிடம்.

“நிர்குணை ஆன சக்தி எத்தகையவள்?
நிர்குணன் ஆன புருஷன் எத்தகையவன்?

அறிந்தவர் யாரேனும் உண்டோ – கண்டு
அனுபவித்தவர் யாரேனும் உண்டோ?

ஸ்வேத த்வீபதில் கடும் தவம் செய்தும்
சிவனும், சக்தியுமே தந்தனர் தரிசனம்!”என

“நிர்குணை நம் கண்ணுக்குப் புலப்படாதது
நிர்குணனை அறிய முடியும் ஞானத்தினால்.

வியாபித்துள்ளனர் அனைத்திலும் சிவசக்தி!
இயங்காது உலகில் எதுவும் சிவசக்தியின்றி!

தியானிக்க வேண்டும் இவர்களை தேஹத்தில்!
தியானிக்கவேண்டும் தேஹத்தை ஆலயமாக!

குணங்களுக்கு அப்பாற்பட்ட நிர்குணனை
குணங்களுள்ள ஜீவனால் அறிய இயலாது!

அஹங்காரத்தின் வசப்பட்டவை முக்குணங்கள்;
அஹங்காரத்துக்கு அப்பாற்பட்டவன் பரம்பொருள்.

அஹங்காரம் முற்றிலும் அழிந்தால் மட்டுமே
அதற்கு அப்பாற்பட்ட பரமனைக் காணலாம்.

சூக்ஷ்ம ரூபத்தை உணர முடியும் ஞானத்தால்!
ஞான யோகம் உணர்விக்கும் பரம்பொருளை!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி,
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#7a. Explanation of Tatva (1)

Brahma was asked some more questions by his son Narada! “Sire! Please tell me more about the NirguNai Shakti and the NirguNan Sivan. Has anyone ever seen them or known them?

Even when I did penance in Sweta dweepam, I got dharshan only of Siva and Shakti and not the NirguNai and NirguNan”


Brahma replied to Narada, “NirguNai can not bee seen. NirguNai and NirguNan are to be realized by gnaanam and not the sense organs. They pervade in everything in creation.
Nothing can happen without their presence and involvement.


We must meditate on them in our body – considering it as a temple for the Siva Shakti. The jeeva who is guna-mayan
( filled with a combination of the three guNaas) can not realize the NirguNan (ONE devoid of the three guNaas).


The three guNaas are born out of ahankaaram but NirguNan is beyond ahankaaram. Only when the ahankaaram is completely destroyed, we can realize the Para Brahman or NirguNan who is beyond the ahankaaram and three guNaas.


Their sookshma form can be realized by gnaanam but cannot be seen by the indriyaas. “
 
Devi bhaagavatam - skanda 9

9#2. சித்தாந்தம் (5)

கிருஷ்ண சக்தி ஆவாள் நாராயணியாக,
விஷ்ணு மாயை, ஈசானி, துர்க்கையாக!

வசப்படுத்தி இருப்பாள் கிருஷ்ணனின் புத்தியை;
வலம் வருவாள் தேவியரின் மூலப் பிரகிருதியாக.

வலம் வருவாள் தேவியரின் பீஜ ரூபமாக;
வலம் வருவாள் உருக்கிய பொன் போல!

வலம் வருவாள் உதிக்கும் ஆதவன் நிறத்துடன்!
வலம் வருவாள் முக்கண்கள், புன்னகையுடன்!

ஆயிரம் கரங்களில் மின்னும் ஆயிரம் ஆயுதம்;
தூய ஆடை, ஆபரணம், மாலைகள் அணிவாள்!

தோன்றுவர் பெண்கள் தேவியின் அம்சம், கலையில்;
தோன்றுவர் மோஹிக்கச் செய்யும் அழகிய வடிவில்.

விருப்பங்களை நிறைவேற்றுவாள் விரும்பியபடி;
தருவாள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்து பக்தியை உலகுக்கு!

தருவாள் மோக்ஷத்தை முமுக்ஷுக்களுக்கு;
தருவாள் சுக ஜீவனத்தைச் சுக வாசிகளுக்கு.

சுவர்க்கத்தில் இவளே சுவர்க்க லக்ஷ்மி!
கிருஹத்தில் இவளே கிருஹ லக்ஷ்மி !

தபஸ்விகள்கள் தவம்; அரசனின் செல்வம்;
சூரியனின் சுட்டெரிக்கும் வெய்யில் இவளே!

அக்கினியின் தகிக்கும் வெப்ப சக்தி இவள்;
சந்திரனின் குளிர்ந்த நிலவொளியும் இவள்.

தாமரையின் காந்தியும் மணமும் இவள்;
சர்வ சக்தி வடிவாக உள்ளவள் தேவியே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#2g. SIDDHAANTAM - 5

Vishnu MAyA is NArAyaNi; She is EesAni; She is the Sakti of everyone; She is the Presiding Deity of KrishNA's intelligence From Her emerged many other Devîs. She is Moola Prakruti and She is Eeswari. No shortfalls or inefficiencies are present in Her.

She is the Tejas. She is of the nature of the three GunAs. Her color is that of molten gold; Her luster looks as if ten millions of Suns have simultaneously risen in the sky.

She looks gracious with sweet smile on Her lips, Her hands are one thousand in number. Various weapons are held in each of Her thousand hands. The dresses of the three-eyed Devi are bright and purified by Fire. She is decorated with ornaments all of jewels.

All the women who shine like the precious jewels have sprung from Her parts and the parts of her parts . They enchant the whole world by the power of Her MAyA. She bestows all the wealth that a householder wants; She bestows Krishna Bhakti to his devotees and Vaishnava Bkahti to VaishNavas.

She gives final liberation to those that want such and gives happiness to those that want happiness. She is the Laksmî of the Heavens; as well She is the Laksmi of every household.

She is the Tapas of the ascetics, the beauty of the kingdoms of the kings, the burning power of fire, the brilliancy of the Sun, the tender beauty of the Moon, the lovely beauty of the lotus and the shakti of Sri Krishna the highest self.

The Self, the world all are powerful by Her S’akti; without Her everything would be a dreary dead mass.


 
BHAARGAVA PURAANAM - PART 1

#3a. பிரம்மஹத்தி-1

சோமகாந்தன் அடைந்தான் அழகிய சோலையை.
தாமதித்துச் சிறிது களைப்பாற விரும்பினான்.

அமைச்சர்கள் சென்றனர் உணவு சேகரித்திட.
அமைதியாக அரசன் கண்ணயர அரசி கண்டாள்

குளத்தில் நீர் மொண்டுசெல்ல வந்த சிறுவனை;
குடியிருந்தது அவன் முகத்தில் பிரம்ம தேஜஸ்!

துஷ்ட மிருகங்கள் திரியும் கொடிய வனத்தில்
கஷ்டம் இன்றி சஞ்சரிக்கும் இக் குழந்தை யார்?

அன்புடன் அரசி அருகில் அழைத்து வினவ
பண்புடன் பதில் தந்தான் பச்சிளம் பாலகன்.

“சிறந்த பிருகுமுனியின் அருமைக் குமாரன்
சிவனன் என் பெயர்; புலோமை என் தாய்!

கொடிய வனவிலங்குகள் திரிந்த போதிலும்
அடைவதில்லை அவை ஆசிரம எல்லையை!”

தன் கண்ணீர்க் கதையை அரசி உரைக்க
அன்புடன் ஆறுதல் கூறி விடை பெற்றான்.

இல்லம் சேர்ந்த உடனேயே பெற்றோரிடம்
சொல்லலானான் அரசியின் விருத்தாந்தம்.

“ஆசிரம எல்லையை அடைந்த அதிதிகளை
நேசத்துடன் நாம் போற்ற வேண்டும் “என்றிட

வந்தனர் அரசன், அரசி, இரு அமைச்சர்கள்;
தந்தனர் வந்தனம் தவசீலர் முனிவருக்கு!

யோகசக்தியினால் கண்டறிந்தார் பிருகு
ரோகம் ஏற்பட்ட காரண காரியங்களை.

“முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன்கள்
முற்றுப் பெறும் காலம் கனிந்தது மன்னா!

களைப்புத் தீர இளைப்பாறுங்கள் நீங்கள்
கவலை வேண்டாம் இனி இந்நோய் பற்றி!”

பழங்களைப் புசித்துப் பசியும் தீர்ந்தனர்;
படுத்து உறங்கிக் களைப்பும் நீங்கினர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAAGAVA PURAANAM - PART 1

3a. Meeting sage Brugu

The King and his group reached a nanda vanam. He wanted to rest for a while before continuing the journey. The king slept undisturbed. The minsters went off to find some food.

The queen who was sitting beside the king and saw a young boy who had come to carry water home. She was stuck by the ease with which he strolled in the jungle infested with wild animals and also by the Brahma tejas shining on his young face. She spoke to him kindly and asked about him.

The boy replied with reverence, “I am the son of rushi Brugu and my mother is Pulomai. My name is Sivanan. The wild animals living here will never dare to come near our ashram.”


The queen related her sad story and the reason why they were there. The boy consoled her and went back home. He told his parents about the queen and the king and their sad plight.


The sage said, “When they have reached our ashram the are our guests. We must treat them with due respect. Please go and bring them here dear son!


The king, queen and the ministers arrived there. They paid obeisance to the great sage. The sage found out through his yoga sakti the cause of the leprosy.

He spoke to the king, “Do not worry oh king! The disease which is the effect of the sins of the previous birth will come to an end very soon. So do not waste your time worrying about it any more. Please eat these fruits and take rest . We will see what can be done tomorrow.”


For the first time the group felt relieved. They ate the fruits and slept well that night.
 

Latest posts

Latest ads

Back
Top