DEVI BHAAGAVATAM - SKANDA 3
3#7b. தத்துவ விளக்கம் (2)
“சத்துவ, ராஜச, தாமசம் பற்றிக் கூறுவீர் தந்தையே,
சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறும்படியாக!”
“சக்திகள் மூன்று வகைப்படும் அறிவாய் நாரதா!
சக்திகள், குணங்கள் நெருங்கிய தொடர்புடையன;
ஞான சக்தி, கிரியா சக்தி, திரவிய சக்தி முறையே
சத்துவ, ராஜச, தாமச குணங்களின் வசப்பட்டவை.
தோன்றின தாமச அஹங்காரத்திலிருந்து – பஞ்ச
தன்மாத்திரைகள் சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம்!
தோன்றியது ஆகாசம் சப்த குணத்தின் விரிவாக!
தோன்றியது வாயு ஸ்பர்ச குணத்தின் விரிவாக!
தோன்றியது அக்னி ரூப குணத்தின் விரிவாக! .
தோன்றியது ஜலம் ரஸ குணத்தின் விரிவாக!
தோன்றியது ப்ருத்வீ கந்த குணத்தின் விரிவாக!
தோன்றின இவை பத்து தாமஸ அஹங்காரத்தில்.
கிரியா சக்தி ராஜஸ அஹங்காரத்தின் வசப்பட்டது.
கர்மேந்த்ரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து,
பிராண வாயு ஐந்து என்று பதினைந்தின் படைப்பும்! .
கிரியா சக்தி உபாதானம் அதன் வடிவங்களுக்கு!
ஞான சக்தி ஸத்துவ அஹங்கார வசப்பட்டது;
ஞான சக்தியின் வடிவங்கள் அந்தக்கரணங்கள்!
மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ஞானவடிவானவை.
மலரும் சிருஷ்டி பஞ்ச பூதங்களின் பஞ்சீகரணத்துடன்.
ஜீவன்களைப் படைக்கும் தொழில் செய்வேன் நான்;
ஜீவன்களைக் காக்கும் தொழில் செய்வார் விஷ்ணு.
எண்பத்து நான்கு லக்ஷம் பேதங்கள் ஜீவன்களில்.
எண்ணிப் பார்த்தாலும் விளங்குவது கடினம்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
1. பஞ்ச தன்மாத்திரைகள்;
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம்
2. பஞ்ச பூதங்கள்:
ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், ப்ருத்வீ
3. கர்மேந்திரியங்கள் ஐந்து:
கரம், பாதம், வாய், மல ஜல துவாரங்கள்.
4. ஞானேந்த்ரியங்கள் ஐந்து:
கண், செவி, மூக்கு, நாக்கு, தோல்.
5. பஞ்சப் பிராணங்கள்:
பிராண, அபான, ஸமான, உதான, வியான வாயுக்கள்
6. அந்தக் கரணங்கள் நான்கு:
மனம், புத்தி, சித்தம், அஹங்காரம்
7. பஞ்ச பூதங்களின் பஞ்சீகரணம்:
பஞ்ச பூதங்களை வேறு வேறு விகிதத்தில் கலந்து சிருஷ்டியைத் தொடங்குவது