• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

BHAARGAVA PURAANAM - PART 1

#5a. விஸ்வரூபம்

பிரளயத்தின் போது பன்னிரு ஆதித்யர்கள்
பிரபஞ்சத்தைத் தகித்தனர் உஷ்ணத்தால்!

மழையின்றி வரண்டது உலகு அனைத்தும்;
பிழைப்பது அரிதாகியது உயிரினங்களுக்கு.

அதீத உஷ்ணம் தாக்கவே ஆதிசேஷன் தன்
ஆயிரம் வாய்களால் கக்கினான் விஷாக்னி.

பன்னிரு ஆதித்யர்களும் பஸ்பமாயினர்!
அண்ட சராசரங்களும் அழிந்து ஒழிந்தன!

மேகத் திரளை உண்டாக்கியது அவ்வெப்பம்.
மேகத் திரள் வர்ஷித்தது கன மழையினை.

பொழிந்தது கன மழை நூறு ஆண்டுகள்.
பெருகிய வெள்ளத்தில் முழுகியது உலகம்!

மும்மூர்த்திகள் ஒன்றாக ஐக்கியமாகிவிட
மூவுலகங்களிலும் நிலவியது சூன்யம்!

பரம்பொருளாகத் தோன்றினார் விநாயகர்;
படைத்தார் மும்மூர்த்திகளை விநாயகர்.

தங்களைப் படைத்த பரம்பொருளை அறிய
தம்மால் இயன்றவரை தேடினர் மூவரும்.

அரும் தவம் செய்தனர் ஓராயிரம் ஆண்டுகள்;
அரியகாட்சி அளித்தார் விநாயகர் பெருமான்.

கோடி சூரியரின் பிரகாசம் ஒளிர்ந்திட
முடியில் நவரத்ன கிரீடம் ஒளிர்ந்திட

நெற்றியில் திலகம்; காதில் குண்டலம்;
பற்றிய ஆயுதங்கள்; வளைந்த துதிக்கை;

கொன்றை மாலை; பொன்னணிகள் மின்ன;
அண்ணல் தோன்றினார் அவர்கள் முன்பு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
5a. Vigneswara’s Viswaroopam.

During the praLaya (Dissolution), the twelve Athithyas burned down the whole world. Rains failed and the heat became too intense to be borne.

AdisEshan could not bear the heat and spat out poisonous fumes through all his one thousand mouths.


The heat and the poisonous fumes destroyed the whole world and the twelve Sooryas turned to ash. The intense heat produced dense rain clouds.


These clouds rained down heavily for one hundred years. The world was flooded. The trimoorthis merged into one. There was nothing to be seen anywhere in all the three worlds.

VignEswara appeared as the parabrahman. He created the trimoorthis. They wished to know their creator and did penance for one thousand years.

Pleased with their penance VignEswar appeared in front of them.

He had the brilliance on a ten million Suns shining together. He wore a crown studded with the nava ratnas.

His forehead was adorned by a thilakam and his ears with kundalam. He held his weapons in his hands and his trunk appeared bent. Flower garlands and gold ornaments shone on his chest.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#10a. தேவதத்தன்

கோசல தேசத்து அந்தணன் தேவதத்தன்
ஆசைப் பட்டான் புத்திரப் பேறு வேண்டி.

உத்தமமான யாகசாலையில் செய்தான்
புத்திரகாமேஷ்டி தமஸா நதிக்கரையில்.

சாம கானம் செய்தார் கோபில முனிவர்;
சாம கானம் செய்பவது மிகவும் கடினம்.

மூச்சை அடக்கிச் செய்ய வேண்டும் கானம்;
மூச்சை விட்டு ஸ்வர பங்கமாக இசைத்தார்.

கோபிலரின் சாம கானம் கேட்ட தேவதத்தன்
கோபித்துக் கொண்டான் அவர் மூடத்தனத்தை.

கோபம் பொது சொத்தாயிற்றே எல்லோருக்கும்!
கோபம் கொண்டார் கோபில முனிவர் இப்போது!

“மூச்சை அடக்குவது எவருக்கும் இயலாதது;
மூச்சு விட்டதற்கு மூடன் என்றாய் என்னை!

மகா மூடனாகவும், பிறவி ஊமையாகவும்,
மகா முரடனாகவும் பிறப்பான் உன் மகன்!” என

“பிள்ளைப்பேறு வேண்டி யாகம் செய்கையில்
பிள்ளையைச் சபித்து வருத்தம் தந்தீரே நீர்!

மூட மகனால் விளையும் பயன் தான் என்ன?
மூட மகன் விலக்கப் படுவான் விலங்கு போல.

வேதம் பயில இயலாது ஊமைப் பிள்ளையால்!
வேதம் பயலாத அந்தணனை எவர் மதிப்பார்?

ஊமை அந்தணன் உரியவன் ஆவான் உழவுக்கு;
உரியவன் ஆகான் அவன் எந்தத் தருமத்துக்கும்.

மூடனுக்குத் தரலாகாது தானம் என்பார்கள்.
அடைவர் நரகம் தானம் தருபவர் பெறுபவர்.

புத்திரன் இல்லாத சோகம் குறைவு தான்.
புத்திரன் ஊமையானால் சோகம் அதிகம்!” என

அழுதான் சாபநிவாரணம் கேட்டு தேவதத்தன்!
விழுந்தான் கோபிலர் பாதங்களில் தேவதத்தன்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#10. Devadattan

A Brahmin named Devadattan, who lived in Kosala Desam, wished for a worthy son. He performed Putra Kaameshti yaagam on the banks of river Tamasaa.


Sage Kopila was singing the Saama Vedam. It is very difficult to sing the Saama Gaanam, since it requires perfect breath control. Kopilar did his best but Devadattan was not happy with his singing – with breaths taken in between.


He chided Kopilar for this defective singing and called hima a fool. Now Kopilar got annoyed with this ill treatment. He cursed Devadattan in a fit of anger,

” Nobody can control his breath completely. You called me a fool for breathing in between the rendition of Saama Vedam. The son born to you will be a perfect fool and dumb in addition to being a fool”

Devadattan felt sorry and said, “I was performing this yaaga for begetting a good son and you have cursed the unborn baby so harshly. What is the use of getting a fool for a son? What is the use of a dumb son who will be unfit to learn Vedas?

What respect will the boy get after he grows up – if he has not learned Vedas? He will be avoided in all karmas and daanams. He will be fit only for woRking in the fields.


My sorrow of not having a son appears small in comparison to the sorrow of begetting a son who will be a dumb fool! Please forgive me and give my son a saapa nivaaraNam.”

Devadattan fell at the feet of Kopilar, washed them with his tears and begged for a saapa vimochanam for his unborn son.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#3c. சிருஷ்டி (3)

"அசையாத பக்தி அருள்வீர் எனக்குத் தந்தையே
இசைவான உம் மலரடிகள் மீது என்றென்றும்!

பக்தியுள்ளவன் வாழ்வான் ஜீவன் முக்தனாக!
பக்தியற்றவன் வாழ்வான் நடைப்பிணமாக!

பயன் தராது பக்தி இல்லாத ஒருவனுக்கு
தியானம். தவம், ஜபம், பூஜைகள் எதுவும்.

விரதம், யாகம், யக்ஞம் மற்றும் சிறந்த
தீர்த்த யாத்திரைகள் க்ஷேத்திராடனங்கள்!"

அருளினார் விராட் புருஷனுக்கு மகிழ்வுடன்
கிருஷ்ணமூர்த்தி பற்பல மேன்மைகளையும்.

"எண்ணற்ற காலம் வாழ்வாய் என் போலவே!
எண்ணற்ற பிரம்மாக்களுக்குப் பிரபுவாக இரு!.

பிரமன் தோன்றுவான் உன்னிடமிருந்து;
பிரமன் படைப்பான் பல பிரபஞ்சங்களை.

ருத்திரர்கள் தோன்றுவர் பிரமன் நெற்றியில்;
ருத்திரர்கள் பதினொருவர் ஆவர் சிவரூபிகள்.

சங்கரிப்பார் பிரபஞ்சங்களை காலாக்னி ருத்திரர்;
அவதரிப்பார் காக்கும் கடவுள் எந்தன் அம்சமாக!

மறவாதே என்னை, உன் அன்னையை என்றும்!
குறையாது உன் பெருமை மேன்மைகள் என்றும்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#3C. SRUSHTI (3)

VirAt Purusha said to Sri KrishNa, "I have got no desires whatsoever dear father! Please grant me pure and undiminished Bhakti towards your lotus feet.

In this world your bhakta is the Jeevanmukta - one who is liberated whilst living! He who is devoid of Bhakti to you is dead while living.

What is the use of the Japam, asceticism, sacrifice, worship, vrata, fasting, going to sacred places of pilgrimages and other virtuous acts if one does not have any bhakti towards Sri Krishna?

Vain is his life who is devoid of any devotion to you dear father, under Whose Grace he has obtained his life and whom he does not now pay homage to and worship."

“O dear Child! May you remain as fresh as ever like I do. You will not have any fall even if innumerable Brahmas pass away.
May you divide yourself into smaller parts and turn into smaller VirAts one for every universe. Brahma will spring from your navel and will create the cosmos.

From the forehead of Brahma will spring eleven Rudras for the destruction of this creation. But they will all be parts of S’iva. The Rudra named KAlAgni, of these eleven Rudras, will be the destroyer of all this Vis’vas (cosmos).

Besides Brahma, from each of your sub-divisions, A VishNu will emerge as the God who protects creation. He will be my amsam.

You will always be full of Bhakti towards Me and no sooner you meditate on Me, you will be able to see My lovely form.
Remember me and your mother. Your greatness will never diminish on any accord!"Sri krishNa blessed his child the ViRat Purusha and went back to Goloka.



 
BHAARGAVA PURAANAM - PART 1.

#5b. விக்ன விநாயகர்

“எங்களைப் படைத்த காரணம் கூறுங்கள்!
தங்களிடம் குன்றாத பக்தியைத் தாருங்கள்!” என

“பிரளயத்தால் அழிந்திட்ட உலகங்களைப்
படைக்கவேண்டும் முன் போலவே நீங்கள்!

வேதங்களுடன் உதவியுடன் படைப்பீர்
லோகங்களை நீங்கள் பிரம்ம தேவரே!

யோகத்தால் நீங்கள் ரட்சிப்பீர் திருமாலே!
யோகப்படி நீங்கள் சம்ஹரிப்பீர் ருத்திரரே!”என

“புகலுங்கள் எவ்வாறு புரிவது எம் பணியை”என
“புவனங்கள் அனைத்தும் உள்ளன என்னுள்!” என்று

துதிக்கையினால் வாரி விழுங்கிவிட்டார்
துதித்து நின்ற மும்மூர்த்திகளை விநாயகர்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் அங்கு
கண்டு அதிசயித்தனர் மும்மூர்த்திகள் நின்று!

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றை
நடத்தினர் அங்கே இருந்த மும்மூர்த்திகள்.

கயிலையில் வீற்றிருந்தான் பரமேஸ்வரன்;
பயின்றார் அறிதுயில் பாற்கடலில் திருமால்;

வேதங்களின் நாயகனான பிரம்மதேவன்,
தேவ மாதர்கள், தேவர்கள், திக்பாலகர்கள்,

மலைகள், நதிகள், கடல்கள், காடுகள்,
மனிதர், விலங்குகள், சித்தர், முனிவர்!

மறைந்தது காட்சி கண்களில் இருந்து;
மறைந்தது அத்துடன் வெளியேறும் வழி!

துதிக்கை வழியாக வந்தார் பிரமதேவன்;
செவிகள் வழியே வந்தனர் மாலும், சிவனும்.

“முக்குணத்துடன் முத்தொழில் புரிவீர்!”
வக்கிரதுண்டர் செப்பிப் பின் மறைந்தார்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1

5b. Vigna VinAyaka

“Why were we created? What is our job? Please bless us with undiminished bhakti towards you!” The trimoorthis prostrated to VignEsh.

“The creation has been destroyed by PraLaya. You must create, sustain and destroy the jiva as before. Brahma! you will be in charge of creation. Vishnu! you will protect the people. Rudra! you will be in charge of destroying jiva according on its merits.”


“But we do not know how to go about our job!” they spoke in unison.


“You will learn everything by watching the worlds inside my belly.” VignEsh lifted up the trimoorthis and swallowed them whole.


The trimoorthis saw the entire creation inside the belly. Siva was sitting on Mount Kailash. VishNu was sleeping on the snake bed in the ocean of milk. Brahma was seated on a lotus flower. The place was swarming with DEva, apsaras, dikpAlakas, mountains, rivers, oceans, animals, sidhdha and rushi.

Suddenly the vision disappeared. So also the way to come out of the belly. Brahma came out of the trunk. Siva and Vishnu came out of the ears.


“Perform these three tasks assigned to you with three guNas given to you.” VignEsh spoke to them and disappeared.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#10b. உதத்தியன்

கருணை பிறந்தது தேவதத்தன் கண்ணீரால்;
பெரியோர் சினம் விரைந்து மறையுமல்லவா?

“மறைந்துவிட்டது உன் மேல் வந்த கோபம்,
குறையுடன் பிறப்பான் உன் மகன் எனினும்

நிறைவடைந்து விடுவான் விரைவில் அவன்;
மறையும் மூடத்தனம்; மலரும் அறிவுத்திறன்!”

மகிழ்ந்தான் தேவதத்தன் இது கேட்டு;
நிகழ்த்தினான் யாகத்தைத் தொடர்ந்து.

ரோஹிணி என்ற மனைவி கருவுற்றாள்
ரோஹிணி நக்ஷத்திரத்தில் வந்தான் மகன்!

உதத்தியன் என்ற நாமகரணம் செய்தனர்;
உபநயனம் நடத்தினர் எட்டாவது வயதில்.

கற்கமுடியவில்லை மந்திரங்களை அவனால்!
கற்பிக்க முயன்றனர் பன்னிரண்டு ஆண்டுகள்!

ஏளனம் செய்தனர் மக்கள் மூடன் என்று;
கேவலமாக நடத்தினர் அவன் பெற்றோர்.

நிந்தித்தனர் மகனைப் பலவாறாக இகழ்ந்து!
சிந்தித்தான் மகன் “தேவையா இது எனக்கு?”

வெளியேறிவிட்டன வைராக்கியத்துடன்!
வனம் சென்று அமைத்தான் ஓர் ஆசிரமம்.

வாழ்ந்து வந்தான் காய் கனிகளை உண்டு!
வாய்மையே ஆனது அவனுடைய விரதம்.

சத்தியம் பேசவேண்டும் என்ற விரதம்
சத்திய விரதன் என்ற பெயரைத் தந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#10b. Udatthiyan

Kopilar was moved with pity on Devadattan. The anger of great men vanishes fast. He told Devadattan,” I am not angry with you any more. Your son will be born with defects but they will get rectified soon and he will become both intelligent and famous.”

Devadattan was happy to hear this and completed the yaagaa as per the rules. One of his wives named RohiNi became pregnant and delivered a son under the star RohiNi. The boy was named as Udatthiyan. Upanayanam was performed when he had completed seven year. But the boy was unable to speak or learn anything properly.


Even after being trained for twelve years, he could not learn anything. People poked fun at him and called him as a dunce. His own parents lost patience with him and ill treated him.

Udatthiyan decided that enough was enough and went away from home with vairaagyam.
He went to a forest nearby and erected a small hut there. He lived in it eating the fruits and roots. His only vratham was never to tell a lie and this earned him the name Satya Vrathan.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#3d. சிருஷ்டி (4)

கூறினார் பரமாத்மா பிரம்ம தேவனிடம் பின்பு
"பிறப்பாய் விராட்புருஷனின் நாபிக் கமலத்தில்!

தொடங்குவாய் படைப்புத் தொழிலை முறையாக!
தோன்றுவீர்கள் ருத்திரர்களே பிரமன் நெற்றியில்!"

தோன்றினார் மகாவிராட் புருஷனிடம்
சின்ன விராட் புருஷன் அவர் அம்சமாக.

தோன்றினார் கரியவராக, இளையவராக,
பொன்னிற ஆடை அணிந்து, புன்னகை தவழ.

சயனக் கோலத்தில் நீரில் காட்சி தந்தார்;
ஜனித்தது ஓர் அழகிய தாமரை நாபியில்!

தோன்றினான் நாபிக் கமலத்தில் பிரம்மன்!
குழம்பினான் லக்ஷம் யுகங்கள் மதிமயங்கி!

தியானித்துப் பகவானை நெடுந்தவம் செய்து
தயாராகி விட்டான் தன் படைப்புத் தொழிலுக்கு !

தோன்றினர் பிரம்மனிடம் மானச புத்திரர்கள்;
தோன்றினர் பிரம்மனிடம் ஏகாதச ருத்திரர்கள்!

தோன்றினார் விஷ்ணு விராட்டின் இடப்பக்கம்.
தோன்றியது சிருஷ்டி பிரம்ம தேவனிடமிருந்து.

தோன்றின உலகங்கள், தோன்றின உயிர்கள்;
தோன்றின காணப்படும் வஸ்துக்கள் எல்லாம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#3d. Srushti (4)

Before going back to His own abode in Goloka, Sri Krishna spoke to Brahma and S’ankara:

“O Brahma! Go quickly and be born from the navel of each of the smaller VirAts that will appear from Great VirAt.

O MahAdeva! Go and be born from the forehead of each Brahma in every universe as the EkAdasa Rudras for the purpose of the destruction of the creation. Perform the proper austerities for a long, long time. "

Having said this, Sri KrishNa, the Lord of the Universe remained silent. BrahmA and S’iva, bowed to the Lord, went to perform their own duties.

The great VirAt who lay floating in the waters of the BrahmANda sphere, created from every pore a smaller version of ViaAt Purusha.

Brahma took his birth in His navel. He traveled inside the stem of the lotus for one lakh yugas to find out who was offering him support? But he could not find out the place whence the lotus or its stem had sprung up.

Then he came back to his former seat and began to meditate on the lotus feet of Sri Krishna.

In his meditation, he first saw the small ViRAt and then the endless great VirAt lying on the watery bed.

From the mind of Brahma were born S’anaka and his three brothers and then from his forehead eleven Rudras sprang.

Then from the left side of that small VirAt lying on waters, the Preserver of the Universe - VishNu, came. He went to S’vetadweepa, where he remained.

Then Brahma began creating this Universe, moveable and non-moveable, composed of three worlds, heaven, earth and PAtALa, in the navel of that small VirAt Purusha.


Thus from each pore of great VirAt each universe sprung! Each universe has its own VirAt, Brahma, Vishnu, RudrAs, Sanaka and others.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#6a. பிரமனின் தவம்

வக்கிர துண்டர் தம்மைப் பணித்தபடி பிரமன்
வகை வகையான உயிர்களைப் படைத்தார்;

நினைத்தபடி அமையவேயில்லை எதுவுமே!
அனைத்திலும் மலிந்தன குற்றம் குறைகள்!

உருவாகின அவைகள் விகார வடிவங்களுடன்;
வேறுபட்டு நின்றன பிரமன் ஆணையிலிருந்து!

இடையூறுகளால் தடைபட்டது அச்சிருஷ்டி;
தடைகளைத் தகர்க்கும் வழி தெரியவில்லை!

துதித்தார் துதிக்கையானை தியானத்தில்;
பதித்தார் தாமரைத் திருவடிகளை நெஞ்சில்!

மெய் சிலிர்க்கும் அக் காட்சியைக் கண்டு
மெய்ப்புளகம் அடைந்தார் பிரம்ம தேவன்!

பரந்து விரிந்த கிடந்தது நீலக் கடல்;
பரப்பின் மீது சிறு சிறு வெள்ளலைகள்;

மெல்ல அசைந்தது மிதந்து வந்த இலை;
மெல்லிலையின் மீதொரு பாலகன் சயனம்;

தொட்டு எழுப்பினார் அந்த பாலகனை!
தொடர்ந்து கண்டதோ கரிமுக நாதனை!

“படைப்புத் தொழிலைத் தந்தீர் ஐயனே!
தடைகள் தொடர்ந்து வரக் காரணம் என்ன?

நினைத்தபடி அமையவில்லை சிருஷ்டி!”
கனத்த மனத்துடன் விண்ணப்பித்தார் பிரமன்.

கலகலவென்று நகைத்தார் கரிமுக நாதன்,
“பலப் பல தடைகள் வந்ததன் காரணம்

என்னை நினைவில் கொள்ளது செருக்குடன்
உன்னை நீயே படைப்பாளியாக எண்ணியதே!

ஏகக்ஷரத்தை ஏகாக்ரமாய் சிந்தித்தால் விலகிப்
போகாத தடை ஏதும் இல்லை என்று அறிவாய்!”

பன்னிரண்டு ஆண்டுகள் தாமரை மலர் மீது
ஒன்றிய கருத்துடன் தவம் செய்தான் பிரமன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1.

6a. Brahma’s penance.


Brahma started the creation as ordained by GaNapathy. But none of them turned out to be what he had planned. They were defective and weird looking. They disobeyed their creator. The srushti suffered because Brahma did not know how to set right the creation.

Brahma contemplated on GaNapathy in DhyAnam with focused attention. He saw a vision which was enthralling. The blue sea was seen with white waves on it surface.

A leaf was seen floating on its surface. A beautiful child was sleeping on it. Brahma woke that child up from slumber and the child was now none other than GaNapathy himself.

Brahma told him, “You ordered me to create. But none of my creations are satisfactory. They are all defective, ugly looking and disobedient! What shall I do?”

GaNapathy laughed loudly and replied, ” All the things were ruined because you forgot me and imagined yourself to be the real creator. Remember the EkAksharam with devotion and start the srushti again.”

Brahma did penance on a lotus flower for twelve long years.
 
devi bhaagavatam - skanda 3

3#10c. சத்தியவிரதன்

வேதம் அறியவில்லை உதத்தியன்;
தேவரை தியானிக்க அறியவில்லை;

தவமோ, தியானமோ செய்யவில்லை;
ஜபமோ, பூஜையோ செய்யவில்லை.

பல் துலக்குவான்; தேய்த்துக் குளிப்பான்;
பகல் வேளையில் உண்பான் கனிகளை.

உறங்குவான் இரவில் மரக் கட்டையாக;
உரைப்பதில்லை பொய் எந்த விதத்திலும்.

சிந்தித்தான் தன் வாழ்க்கையைப் பற்றி;
நொந்தான் மனம் அது வீணாவது பற்றி .

“பிறந்தேன் நற்பயனால் அந்தணனாக;
பிறவி வீணாகின்றது வன வாசத்தில்!

பசு பால் கொடாமல் வீணாவது போல!
பழமரம் கனி தராமல் வீணாவது போல!

என்ன பாவம் செய்தேன் முற்பிறவியில்?
என்ன செய்ய வேண்டும் பாவங்கள் தீர?

பதில் கிடைக்கவில்லை வினாக்களுக்கு;
பதினான்கு ஆண்டுகள் ஓடியே விட்டன.

வேடனின் அம்பு தைத்த பன்றி ஒன்று,
வீழ்ந்தது அவன் காலடியில் ஓடி வந்து.

ஊதிரம் வழியும் உடலைக் கண்டு
உடல் நடுங்கிடக் கூச்சல் இட்டான்!

வந்தது "ஹ்ரூ! ஹ்ரூ!" என்ற த்வனி!
வாய் பேச இயலாதவனின் கூச்சல்!

பூர்வ ஜன்மத்தின் புண்ணியமோ அன்றிப்
பார்வதி தேவியின் அருளோ அறியோம்

ஒலித்தது ஊமையின் கூச்சலில் – தேவியின்
ஸ்ரீவித்யா மந்திர பீஜாக்ஷரத்தின் உச்சரிப்பு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM- SKANDA

33#10c. Satya Vrathan

Udattiyan did know the Vedaas nor did he know how to do meditation or do penance. He would cleanse his body thoroughly everyday. He would eat the fruits and roots during the day time and sleep like log at night time. He would never utter a lie in any manner.

He thought a lot about his life. ‘I am born as a brahmin due to my good fortune. But my life is being wasted in this vana vaasam.

It is as useless as a cow that does not give milk. It is as useless as a tree that does not bear fruits. What are my sins ? How can I come out of them?’ He asked these questions but he could not find their answers.


Fourteen years had rolled on. One day a pig hurt by the arrow shot by a hunter came running and fell at his feet. Satya Vrathan got frightened when he saw its body drenched in fresh blood and screamed in terror.

It was a strange sound “Hroo! Hroo!” as he was a dumb man unable to speak clearly. By the grace of Devi this strange sound resembled the Beejaakshara of Sree Vidhya mantra of Devi.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#4a. சரஸ்வதி (1)

எந்த சக்தியின் பூஜைகள் நடக்கின்றன?
எந்த சக்தி துதிக்கப் படுகிறாள் உலகில்?

என்னென்ன வரங்கள் வழங்கப் பட்டன?
எவை பக்தர்களின் சரிதங்கள் கூறுவீர்!"

நாரணன் வினவினான் நாராயணனிடம்,
நாரதனுக்கு விளக்கினான் நாராயணன்.

"பரப்ரும்ம வடிவானவர் கிருஷ்ணமூர்த்தி;
பத்தினி ஆவாள் ஸ்ரீ ராதா தேவி அவருக்கு.

பிரத்தியக்ஷம் ஆனாள் சரஸ்வதி தேவி
பிரிய பத்தினி ராதாதேவி முகத்திலிருந்து.

விரும்பினாள் தோன்றினவுடனே சரஸ்வதி
கிருஷ்ணமூர்த்தியைக் கணவனாக அடைய.

அனைத்தும் அறிவார் கிருஷ்ணமூர்த்தி - அவள்
நினைத்ததையும் அறிந்து கொண்டார் சடுதியில்.

" உள்ளான் ஸ்ரீமன் நாராயணன் என் அம்சபூதமாக!
உள்ளான் அழகு, இளமை, நற்குணங்கள் பொருந்தி!

சமம் ஆவான் அவன் தேஜஸில், சக்தியில் எனக்கு!
சமம் ஆவான் எழிலில் ஒரு கோடி மன்மதர்களுக்கு!

தனியன் அல்லேன் நான்; உள்ளேன் என் ராதையுடன் !
இனியவள்! என் பிராணனுக்கு அதிஷ்டான தேவதை!

அடக்க முடியும் என்னால் எல்லோரையும் - ஆனால்
அடக்க முடியாது என்னால் என் ராதையை மட்டும்!

லக்ஷ்மி உள்ளாள் நாராயணனிடம் - எனினும்
லக்ஷ்மி உள்ளம் நிறைந்தவள் நற்பண்புகளால்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#4b. Saraswati (1)

Narada asked NArAyana," Which Devis are being worshiped in the world? What were the boons given by them ? Who were their bhaktAs who benefited by their boons? Please tell me all these in great detail."

"The amorous Devi Saraswati sprang from the end of the lips of RAdhA Devi. As soon as she appeared, she desired to marry Sri KrishNa himself. Sri KrishNa who could read people's minds knew it instantly and addressed Her thus:

"O Chaste Devi! NArAyaNa is born from My amsam; He is young. He is good looking with attractive features.
He is endowed with all my qualifications. He is very much like Me.

He knows the amorous sentiments of women and He fulfills their desires. Ten million Cupids are present in him.

If you desire to marry and remain with Me, that will not be do any good to you. Since RAdhA is with Me and She is more powerful than you.

If a man be stronger than another, he can rescue one who takes his shelter. But if he himself is weaker, how can he protect his dependent from others?

Though I am the Lord of all, and I can rule over everyone, I cannot control RAdhA. She is equal to me in power, in her beauty and in merits. She is equal to Me in every respect.

Again it will be impossible for Me to leave her since She is the presiding Deity of My life. How can anyone relinquish his own life?

Please go to NArAyaNa in Vaikuntha. You will get your desires fulfilled there. You will get for your husband the Lord of Vaikuntha and you will live in peace and happiness.

Lakshmi Devi is residing there. Like you she is also not under the control of lust, anger, greed, delusion and vanity.

She is equal to you in beauty, qualities, and power. So you will live with her in great delight. You both will be loved and treated equally by the Lord of Vaikuntha."

 
BHAARGAVA PURAAANAM - PART 1

#6b. சித்தியும், புத்தியும்

பன்னிரண்டு ஆண்டுகள் செய்தவத்தால்
கண்முன் கண்டான் கரிமுகக் கடவுளை.

“கர்வம் கொண்டு படைத்த காரணத்தால்
சர்வமும் சரிவர அமையவில்ல ஐயனே!

இட்ட பணியை நான் நன்கு புரிவதற்கு
கிட்ட வேண்டும் தங்கள் அன்பும் ஆசியும்!”

கோரிய வரத்தை அளித்தார் விநாயகர்;
கூறினார் “என் இரு சக்திகளை வணங்கு!”

ஞானம், கிரியை என்ற அவர் இரு சக்திகள்;
தானம் தந்தன சித்தியையும், புத்தியையும்.

சித்தி, புத்தியுடன் விநாயகரைத் தொழுது
சிருஷ்டியைத் துவங்கினான் பிரம தேவன்.

ஏழு மைந்தர்களைப் படைத்தான் முதலில்,
எழுவரும் தவம் செய்யச் சென்றுவிடவே;

எழுவரைப் படைத்தான் மீண்டும் பிரமன்,
எழுவரும் கானகம் நோக்கிச் செல்லவே;

சனகாதியர் நால்வரைப் படைத்தான்
ஞானவடிவான முனிகுமாரர் அவர்கள்.

நாரதரைத் தோற்றுவித்தான் பிரமன்,
நாரணநாமமே ஆனது வாழ்வின் பயன்.

படைத்தார் பிறகு நான்கு வர்ணத்தாரை
பாதம், தொடை, புஜம், வாய் இவற்றால்.

சந்திரன் சிந்தையிலிருந்து தோன்ற;
இந்திரன் முகத்திலிருந்து தோன்ற;

கதிரவன் தோன்றியது கண்களிலிருந்து;
காற்றுத் தோன்றியது நாசிகளில் இருந்து;

விண்ணுலகு தோன்றியது திருமுடியில்;
மண்ணுலகு தோன்றியது திருவடியில்;

அத்தனை உலகங்களையும் உயிர்களையும்
நினைத்தபடி தோற்றுவித்தான் பிரமதேவன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1.

6b. Sidhdhi and Budhdhi


After twelve long years of penance, Brahma got the dharshan of VignEswar. “I got conceited as the creator and all my creations turned out to be defective. To perform my duty well please bless me with your grace!”


VignEswar blessed Brahma as desired by him. He said. “Pray to my JnAna shakti and KriyA shakti and seek their blessings also!”


JnAna shakti and KriyA shakthi blessed Brahma with Siddhi and Buddhi. Brahma prayed to VinAyaka along with Siddhi and Biddhi and started his srushti once again.


He created seven sons and all the seven promptly left to do penance. He created seven more sons who followed the path of their elder brothers.


Brahma now created Sanakan and his three brothers. They were Brahma gnaanis by birth. Narada was created next. He made chanting Naaraayana namam his life’s sole purpose.


Brahma now created the four varnaas namely Brahmin, Kshatriya, Vaisya and Shudra from his mouth, shoulders, thighs and feet.


The moon was born out of his mind. The Sun was born out of his eyes. VAyu was born out of his nose and Indran out of his face.

Swargga appeared from his head and the earth from his feet. Al the worlds and the jivas were created out of Brahma’s own body as desired by him.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#10d. ஸ்ரீ வித்யா

பன்றி ஓடி ஒளிந்து கொண்டது ஒரு புதரில்;
பன்றியைத் துரத்தி வந்தான் அந்த வேடன்.

சத்திய விரதனிடம் கேட்டான் வேடன்,
“ரத்தம் சிந்த ஓடி வந்த பன்றி எங்கே?

வேட்டையாடுவது என் குலத் தொழில்;
காட்டு விலங்குகள் எங்கள் உணவு!

வாடுகிறது என் குடும்பம் பசியினால்!
தேடுகின்றேன் அடிபட்ட பன்றியை நான்!

உணவுக்கும் எமக்கும் நடுவே உள்ளீர் நீர்!
உண்மை கூறும் அந்த பன்றி எங்கே?” என,

பன்றி பதுங்கியுள்ள இடத்தைக் கட்டினால்
பன்றிக்கு ஹிம்சை! வேடனுக்கு அஹிம்சை!

‘சத்தியம், அசத்தியம் என்ன வேறுபாடு?’
சத்திய விரதன் சிந்தித்தான் தீவிரமாக

‘ஹிம்சை தரும் உயிர்களுக்குத் துன்பம்.
ஹிம்சை தருவது சத்தியம் ஆக முடியாது!

அஹிம்சை தரும் உயிர்களுக்கு நன்மை!.
அஹிம்சை சத்தியம் ஆகிவிடும் அதனால்!

செய்யக் கூடாது ஹிம்சை பன்றிக்கு!
சொல்லக் கூடாது பொய் வேடனிடம்!’.

முன் போலவே மீண்டும் கூச்சலிட்டான்
பன்றி பதுங்கி இருந்த புதர் அருகே சென்று. .

தோன்றினாள் ஸ்ரீ வித்யா தேவி அங்கே!
தோன்றியது ஞானம் ஊமைப் பாமரனிடம்!

கண நேரத்தில் ஆகிவிட்டான் கவிராஜனாக!
கண நேரத்தில் ஆகிவிட்டான் வித்துவானாக!

பேசும் திறனும் தோன்றிவிட்டது அவனுள்!
ஆசு கவி பாடினான் அழகிய வடமொழியில்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#10d. Sree Vidhyaa Devi

The bleeding pig took to its heels and ran into a bush nearby to hide itself. A hunter came running after the pig and asked Satya Vrathan, “Did you see a bleeding pig come running this way?


Hunting is my profession. The wild animals form our staple food. My family is starving. I must take that pig to my family. Now you are standing in between my family and its food. Please tell me where the pig is hiding”


Satya Vrathan thought deeply. ‘If I show the hiding place of the pig, I will do good to the hunter but bad to the pig. What is the difference between satyam and asatyam? How are they related to himsa and ahimsa?


Himsa gives sorrow to the jeevan. So it can’t be satyam. Ahimsa gives joy to the jeevan. So it should be the satyam.’


He did not want to show either the hiding place of the pig to the hunter or utter a lie to the hunter. He stood near the bush in which the pig was hiding and made the same strange sound “Hroo! Hroo!” once again.

Lo and behold! Sree Vidhyaa Devi appeared near that bush – pleased with his utterance of her beejaakshara mantram. She blessed Satya Vrathan with complete knowledge and power of speech in an instant.


Satya Vrathan now became a pundit and a poet. He could speak well and sing Devi’s praise extempore without any preparation. He sang a beautiful verse in the brilliant Sanskrit language now.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#4b. சரஸ்வதி தேவி (2)

"பூஜிக்கப்படுவாய் மாசி மாத சுக்ல பஞ்சமியில்;
பூஜிக்கப்பார்கள் கல்வியைத் தொடங்குபவர்கள்.

ஆவாஹனம் செய்வார்கள் உன்னைப் புத்தகங்களில் ;
ஆராதனை செய்வார்கள் உன்னைப் போற்றித் துதித்து!"

சென்றாள் ஸ்ரீ வைகுண்டம் சரஸ்வதி தேவி!
வென்றாள் மனுக்கள், மனிதர்கள், தேவர்கள்,

முனிவர், வசுக்கள், மும்மூர்த்தியர், யோகியர்
சித்தர், நாகர், கந்தர்வர், அரக்கர் மனங்களை.

பூஜிக்க வேண்டும் மாசி மாத சுக்ல பஞ்சமியில்;
பூஜிக்க வேண்டும் வித்யாரம்ப நாட்காலையில்.

பால், நவநீதம், கட்டித் தயிர், வெண் பொரி, லட்டு,
வெல்லம், வெல்லப் பாகு, கரும்பு, கருப்பஞ்சாறு ,

வெள்ளை தானிய அக்ஷதை, மது, சர்க்கரை,
வெண் பொங்கல், மோதகம், வெண் சந்தனம்,

வெண்ணிற மலர்கள், வெண்ணிறப் பழங்கள்
வெண்ணிற ஆடைகள், வெண்ணிற ஆபரணங்கள்;

சங்கு ஆபரணங்கள், முத்து ஆபரணங்கள் - முக்கிய
பங்கு வகிக்க வேண்டும் சரஸ்வதியின் பூஜைகளில்.

செய்ய வேண்டும் சரஸ்வதி தேவியின் தியானம்
செப்ப வேண்டும் சரஸ்வதி தேவியின் கவசம்.

குருமுகமாகப் பெற வேண்டும் இக் கவசத்தை;
குருவைப் பணிந்து வணங்கி உபதேசமாக!

சித்திக்கும் மந்திரம் ஐந்து லக்ஷம் முறை ஜபித்தால்;
சித்திக்கும் சரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம்.

உண்டாகும் தேவ குருவுக்கு இணையான மேன்மை;
உண்டாகும் வாக்சாதுர்யமும், கவிதையில் திறமையும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#4b. SARASWATI DEVI (2)

"On the fifth day of the bright fortnight of the month of MAgha, every year, the day when the learning is commenced, a great festival will be held.

Men, Manus, Devas, Munis, Vasus, Yogis, NAgas, Siddhas, Gandarvas and Rakshasas will perform your worship with devotion.

They will invoke you on books and then meditate and then worship and sing hymns to you. The learned should recite your Stotras during worship. Thus the worship of the Eternal Devi is made extant in the three worlds.

The devotee should control his senses, concentrate his mind and take his bath. Then he is to perform his daily duties and then meditate the Devi Saraswati and invoke Her. He must again read the DhyAnam and then worship with the sixteen upachAras.

Fresh butter, curd, thickened milk, puffed rice , sweetmeats Til Laddu , sugar cane, sugarcane juice, nice molasses, honey, svastik, sugar, rice, modak, veN pongal, ParamAnna with ghee, nectar like sweetmeats, cocoanut, cocoanut water, ripe plantains, Bel fruit, the jujube fruit, and other appropriate white purified fruits of the season and peculiar to the place are to be offered in the PoojA.

White flowers , white sandal paste, new white clothes, conch shell, garlands of white flowers, white necklaces, and beautiful pearl ornaments are to be given to the Devi.


 
BHAARGAVA PURAANAM - PART 1

#7a. திருமணக் கோலம்-1

“புத்திரிகளாக வந்து பிறக்கவேண்டும்!”
புத்தி, சித்தியாரை இறைஞ்சினார் பிரமன்.

வந்து பிறந்தனர் இருவரும் குமாரிகளாக;
வளர்ந்து விட்டனர் அழகிய குமரிகளாக!

“அற்புதப் பெண்களை மணம் செய்வேன்
கற்பகக் கடவுள் விக்ன விநாயகருக்கு!”

நான்முகனின் உள்ளக் கருத்தை அறிந்த
நாரதர் சென்றார் விரைந்து கைலாசம்.

“தங்கள் கிருபையைப் பெற்ற நான்முகன்
தங்கள் சக்திகளான கிரியை, ஞானத்தை

புத்திரிகளாகப் பிறக்கப் பிரார்த்திக்கப்
புத்தியும், சித்தியும் வந்து பிறந்தனர்.

விருப்பம் கொண்டனர் தங்கள் மேல்!
திருமணம் புரிவீர் அவ்விரு கன்னியரை!”

செந்தாமரைப் பாதம், செம்பவள விரல்கள்;
அழகிய குதிகால், அம்பறாத்துணி கணைக்கால்;

வாழைத் தண்டுத் தொடை, மத யானை நிதம்பம்;
ஆலிலை போல் வயிறு, தென்னங்குரும்பை தனம்;

கொடி போன்ற இடை, சங்கைப் பழித்த கழுத்து;
கொவ்வை நிற இதழ்கள், முத்துச் சரப் பற்கள்;

மீன்கள் நாணும் விழிகள், அழகிய விற்புருவங்கள்;
முகில் வண்ணக் கூந்தல், வட்ட நிலா முகம் என

லக்ஷணங்கள் பொருந்திய இரு பெண்களையும்
மணக்கத் தம் இணக்கம் தந்தார் கற்பகக் கடவுள்!

சித்தி, புத்தியிடம் விவரித்தார் நாரதர்,
விக்கின விநாயகனின் பெருமைகளை.

நான்முகனிடம் சென்றும் உரைத்தார்,
தான் கணபதியிடம் கூறிய செய்திகளை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 

Latest ads

Back
Top