• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#13b. “Who will rule the country?”

Yudaajit was the grandfather of Satrujit. He was Leelavathy’s father and the king of Ujjayini. Veera Senan was the grand father of Sudarsanan. He was Queen Manorama’s father and the king of Kalinga. Both arrived in Ayodhyaa with their respective armies – ready for a showdown!


Both wanted their own grandson to become the successor to King Dhruva Sindhu. Yudaajit argued, “The younger prince cannot supersede the elder prince to become the new king”

Veera Senan put forward his side of the argument.” The son of the queen will be the natural and legal heir – not the son of the other wife.”

Yudaajit said, “I know your ulterior motive. You want to make an innocent boy the king so that you can loot the wealth of this country” The ministers were afraid of a mutiny in the kingdom with the people diving among themselves to support one of the two princes. The army was afraid that a war was imminent.


Each of the grandfathers swore to make his own grand child as the new king. This was the opportune moment for which the people who love to create disturbance in the country, the enemies, the thieves and the hunters had been waiting for. They entered the country to loot its wealth using the disharmony.

But both the grand fathers forgot their differences in opinion, joined hands to fight their common enemies. The enemies were vanquished and thrown out of Ayodhya by their joint effort.
 
DEVI BHAAGAVATAM- SKANDA 9

9#7b. விஷ்ணுவும், லக்ஷ்மியும்

விஷ்ணுபிரான் கூறினார் லக்ஷ்மி தேவியிடம்,
"விருப்பமும் நிறைவேறும், வாக்கும் தவறாது!

ஒரு கலையினால் நதியாவாள் சரஸ்வதி தேவி !
பிற கலைகளால் அடைவாள் பிரமனை, என்னை !

அடைவாள் பூமியை பகீரதியாக கங்கை - பின்பு
தடையின்றிச் சேருவாள் சிவனை, என்னை!

உருவெடுப்பாய் நீ பாரதத்தில் உன் கலைகளால்
பெருகும் பத்மாவதி நதியாக, துளசிச் செடியாக!

கழிய வேண்டும் ஐயாயிரம் ஆண்டுகள் பிறகு
கலியுகத்தில் என்னிடம் வந்து சேருவதற்கு.

உண்டாகும் நதிகளுக்குப் பாவம் பாவிகளால்!
துண்டாடும் அதை நீராடும் பக்தர்கள் ஸ்பசரிம்.

மந்திரங்களை உச்சரிக்கும் பக்தர்களின் ஸ்பரிசம்
விந்தையாக அழித்து விடும் பாவக் குவியலை!

புனிதத் தலம் என் பக்தர்கள் வாழும் இடம்,
புனிதம் அடையும் அவர்கள் தொழும் நதிகள்.

எத்தகைய பாவம் செய்தவனும் தொலைப்பான்
மொத்தமாக அத்தனையும் பக்தன் தரிசனத்தால்!"என

" எந்த பக்தரைத் தரிசித்தால் பாவனம் அடைவோம்?
எந்த பக்தரின் பாதத் தூளி பாவனம் அடைவிக்கும்?

அடையாளம் காண்பது எப்படி அந்த உத்தமரை?
அடைவது பாவனம் எப்படி?" என்றாள் லக்ஷ்மி

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி .
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#7b. Lakshmi and VishNu

Hari told Lakshmi, "I will keep my own word and I will also act as you have suggested. Let Saraswati go with one of her amsams to form the river. Let her go to Brahma with one half of her glory and remain with me here in Vaikuntham with her full glory.

GangA will have to go with one of her amsams to BhArata Varsha - to form a river and purify the three worlds. She will be assisted eagerly by Bhagiratha. She can remain in one of her amsams on the matted hair of Chandra S'ekhara. And she can remain with me here in Vaikuntham in her full glory.

O Lakshmi! You can become the PadmAvati river and the Tulasi tree. After five thousand years of Kali Yuga, your curse will expire. Again you all will come to My abode.

Saints who worship my mantra will perform their ablutions in your water. They will free you by their holy touch and sight from all the sins accumulated by washing the sinners. It is the 'Darshan' and the 'Sparshan' of my devotees that make all the places of pilgrimage holy.”

Lakshmi asked now," What are the characteristics of your Bhaktas whose sight and touch destroy instantly the five great sins (pancha mahA pAtakAs)?

The Lord smiled and began to speak about the secret marks of the great BhaktAs.


 
BHAARAGAVA PURAANAM - PART 1

#9d. பிணி நீங்கியது-4

மன்மதனைப் போல் மாறியவனைக் கண்டு
இன்ப அதிர்ச்சி அடைந்தனர் நகர மக்கள்.

ஆடை ஆபரணங்களை அள்ளித் தந்தனர்;
சோடை போகவில்லை அவர்கள் வாழ்வு.

வேதியர் ஒருவர் எதிர்ப்பட்டார் வீதியில்!
பாதம் பணிந்தனர் கமலையும், தக்கனும்.

ஆசிகள் வழங்கினார் அவ் வேதியர் – உப
தேசித்தார் ஷடாக்ஷர மந்திரத்தையும்.

ஆனைமுகனை மனத்தில் நிறுத்தினான்;
ஏனைய நினைவலைகளை நிறுத்தினான்.

விக்னராஜன் தரிசனம் தந்தார் அவனுக்கு
முத்கல முனிவரின் வடிவினை எடுத்து.

“வேண்டியதை கேள்!” என்று வரம் தர.
வேழமுக வேந்தனிடம் சிறுவன் தக்கன்.

வேண்டினான் சகல சௌபாக்கியத்தை,
வேறுபாடு இன்றித் தன் மக்களுக்கு.

ஆனைமுகனாகவே தோன்றினார் பின்.
அன்புடன் அவர் வழுத்தினார் தக்கனை

“முத்கல முனிவர் முழு அருள் பெற்றவர்.
அற்புதம் நிகழ்ந்து நீ குணம் அடைந்தாய்

குறை என்பதே இல்லை இனி உனக்கு
நிறைவேறும் உன் தேவைகள் அவரால்.”

தக்கன் சென்றான் முத்கலரைத் தேடியே.
தன் கண்ணீரால் கழுவினான் கால்களை!

தன் கதையினை உரைத்தான் தக்கன்
தனக்கு வினாயகர் காட்சி தந்ததுவரை.

“நீயே என்னிலும் பாக்கியசாலி மகனே!
நாயேனுக்குக் கிட்டவில்லையே தரிசனம்!

அவன் அருள்தரும் உனக்கு இன்பம்;
ஆதவன் முன் பனியாகும் உன் துன்பம்.”

ஏகாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார்
ஏங்கித் தேடிய தாயுடன் திரும்பினான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARAGAVA PURAANAM - PART 1

#9d. The miraculous cure – 4


The people of KuNdinapuram got a pleasant shock from these events. They developed a new affection to the boy and offered him and his mother clothes and ornaments. They got enough food to eat. Their life improved after the miraculous cure.

One day they met a Brahmin on the road. They paid obeisance to the man and got his blessings. He did upadEsam of the shatAkshara mantra to Dakshan.

The boy established VignEswar in is mind and stopped all the other thoughts until VignEswar appeared to him as Mudgala rushi. He was offered any boon and he chose to ask ashta aiswaryam for all the folks.

Now VignEswar appeared as himself and blessed Dakshan. “You will get all your desires fulfilled by the rushi’s grace.”

Dakshan went looking for the sage Mudgala. He fell on his feet and washed it with his tears. He related to the rushi his story right up to VignEswara’s dharshan and sought his blessing.

The rushi was thrilled to hear that Dakshan actually had the dharshan of lord VignEswar which he himself had not seen till that day. He taught the boy EkAksharam and blessed him.

Kamala got worried that her son was not to be seen anywhere. She guessed that he must have gone to the sage Mudgala. She too came there looking for him. They went back with the rushi’s blessings.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#14a. உரிமைப் போராட்டம்

ஒற்றுமையாக வென்றனர் பொது எதிரிகளை;
வேற்றுமையுடன் பொருதனர் அரசுரிமைக்கு!

வாதம் மாறியது சொற்போராக; விற்போராக!
யுதாஜித் தயாரானான் வெற்றிக் கொடியுடன்.

போரை விரும்பவில்லை வீரசேனன் – எனினும்
வேறு வழியின்றி நுழைந்தான் போர்க்களத்தில்.

கடும் போர் நடந்தது இருவரின் படைகளிடையே.
முடிவில் மடிந்தான் வீரசேனன் போர்க்களத்தில்.

தலைவன் இல்லாத வீரர்கள் என்ன செய்வர்?
தலை தெறிக்க ஓடினர் தம்மைக் காத்துக் கொள்ள.

பதறினாள் மனோரமை செய்தி அறிந்து;
சிதறி ஓடிவிட்டது படை போர்க்களத்தில்!

‘தந்தையைக் கொன்றவன் தனயனைக் கொன்றால்?
எந்த இழிச்செயலையும் செய்ய வல்லவன் அவன்!

தர்மத்தைத் தள்ளி வைத்து விடுவான் அவன்
தயை என்றால் என்ன விலை என்று கேட்பான்.

சக்களத்தியைப் பற்றிக் கூறவே வேண்டாம்!
சக்களத்திகள் செய்யாத கொடுமைகளா?

சாகரனின் தாய்க்கு விஷம் தந்தவள் சக்களத்தி.
ராமனைக் காட்டுக்கு அனுப்பியவள் சக்களத்தி.

யாரும் இல்லாத அநாதை ஆகிவிட்டேன் நான்!
வேறிடம் சென்றாவது என் மகனைக் காப்பேன்!’

நம்பிக்கைக்கு உரிய அமைச்சரிடம் கேட்டாள்.
“வம்புச் சண்டையில் தப்பிப் பிழைத்து எப்படி?”

“காட்டுக்கவது, காசிக்காவது சென்று விடுங்கள்!
காசியில் உள்ளான் என் மாமன் சுபாஹு!

பாதுகாப்பு அளிப்பான் உங்கள் இருவருக்கும்;
பார்க்கச் செல்வதாகச் சொல்லுங்கள் யுதாஜித்தை!

தேரில் ஏறிச் சென்று விடுங்கள் அதன் பின்.
தேரின் பாதையை மாற்றி விடுங்கள் அதன் பின்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#14a. The struggle for the throne

The two grandfathers won their common enemies united but they fought among themselves for the sake of the throne. Their argument became a war of words and then a real war with bows and arrows.

Yuthaajit was confident of winning in the war. Veerasenan did not want to fight but had little choice. A terrible war was fought and Veerasenan got killed by Yuthaajit. His army ran away in confusion since it lost its leader and the king.


Manorama was steeped in sorrow and fear on hearing this. ‘My father has been killed and his army vanquished. Yuthaajit is a mean king and will do anything for the sake of the throne. He has killed my father! What if he kills my son also? He is capable of any mean act and is merciless in is behaviour.


I need not elaborate on the wickedness of the step mothers. Sagaran’s mother was poisoned by his stepmother. Rama was sent to the forest by his stepmother. I am a helpless woman now. i must make haste and escape in order to save my son!’


She consulted a trustworthy minister. He told her.” Oh Queen! Escape and go to either to the forest or to Kaasi. My uncle Subhaahu lives in Kaasi. He will offer protection to you and the prince. Go out in a chariot under the pretext of visiting king Yuthaajit and once you have gone out, change the course of your chariot!"

The loyal minister advised the queen thus!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#7c. பக்தர்கள் பெருமை

"மறைந்துள்ளது வேதங்களில் பக்தர் குறிப்பு - இது
மறைந்து இருக்க வேண்டும் ரஹசியமாகவே!

அடையக் கூடாது இது துர்மார்க்கர் செவிகளை;
உடையக் கூடாது இந்தப் பரம வேத ரஹசியம்.

சத் புருஷன் ஆகிவிடுவான் ஓருவன் - செவிகளில்
உத்தமமான மந்திரம் குருமுகமாக விழும் போது.

குலம், கோத்திரம் எதுவாக இருந்த போதிலும்
நலம் பெறும் நூறு தலை முறை பக்தியினால்!

பக்தியுடன் திகழும் எந்தப் பிறவியும் - ஜீவன்
முக்தி அடையும்; சென்று சேரும் பரம பதம்.

தேவன் ஆவான் தூய பக்தன் ஒவ்வொருவனும்;
தேவை இல்லை அவனுக்கு சுவர்க்க போகங்கள்.

உள்ளனர் பல நல்ல பக்தர்கள் பாரத வர்ஷத்தில்;
கள்ளமில்லா இதயத்துடன் வருகின்றனர் வலம்.

தூய்மைப் படுத்துவர் தாம் வாழும் இடங்களை
தூய முக்தி பெறுவார் வாழ்ந்து முடிந்த பின்னர்!

விளக்கினார் மூன்று தேவியருக்கும் விஷ்ணு
விலகினர் தேவியர் கடமையை நிறைவேற்றிட.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#7c. The greatness of bhaktAs.

"The marks of the great Bhaktas are all mentioned secretly in VedAs and PurANAs. They sanctify; destroy sins, give happiness, devotion and the final liberation. They are never to be disclosed to deceitful persons but to be kept hidden from them always!

All the Vedas declare him to be holy - in whose ears the mantras are pronounced by his Guru. One hundred generations backwards of my BhkatA become liberated at once and reach my highest abode.

My BhaktA is full of devotion to Me, he always repeats My glories and performs actions according to My directions. He listens with all his heart to My leelAs and on hearing these he dances with ecstasy.

His voice gets choked,
tears flow incessantly from his eyes, and he loses consciousness of the external world.
My BhaktAs do not long for happiness nor for liberation nor for immortality! They just want to do service to Me and they are solely intent on doing this.

My Bhaktas roam in BhArata Varsha - eager to listen to My glories and happy to recite them to the others. They purify the world and ultimately reach My abode, the best among all sacred places."

Then the three Devis GangA, Saraswati and Lakshmi went away to obey the orders of Sri Hari, Who went back to His own abode.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#10a. வல்லாளன்-1

சிந்து தேசத்தில் ஒரு வைசியன் கல்யாண்;
இந்துமதி அவன் அழகிய இளம் மனைவி.

இல்லறம் இனிக்கத் தோன்றினான் மகன்
வல்லாளன் என்னும் துறு துறு பாலகன்.

சீரும், சிறப்புமாக வளர்ந்தவனுக்கு ஊர்
சிறார்கள் அனைவரும் நல்ல நண்பர்கள்.

விளையாடுவர் ஒரு தோப்பில் வந்து கூடி,
விளையாட்டும் விநாயகர் ஆராதனையே.

பாறை ஒன்று கிடந்தது அந்தத் தோப்பில்,
பாறையில் கண்டனர் விநாயகர் வடிவை.

பாறையே ஆனது விநாயகர் சிலையாக!
பாறைக்கு நடந்தது பூஜைகள், ஆராதனை!

நன்னீ ராட்டினர்; பூ மாலைகள் சூட்டினர்.
நிவேதனம் செய்து, பாமாலை சூட்டினர்.

ஆராதனை அளவு கடந்தது ஒரு நாள்;
அமைத்தனர் ஓலைப் பந்தல் ஒன்றை.

தோரணம் கட்டித் தூய்மை செய்தனர்;
வாரணமுகனுக்கு ஆராதனை, பூஜை!

இடம், பொருள், ஏவல்களை மறந்தனர்!
இல்லம் செல்லவில்லை உணவருந்த!

“உணவு உண்ணாமல் என்ன விளையாட்டு?
உறவையே மறந்து விடுவரோ சிறுவர்கள்?”

கோபம் தலைக்கேறியது பெற்றோர்களுக்கு!
கோபத்துடன் கூச்சலிட்டனர் கல்யாணிடம்!

“ஊரார் பகை வந்ததே இந்தச் சிறுவனால்;
உருப்படாத அவனை ஒருகை பார்ப்பேன்!”

தடியை உருவி ருத்திரன் ஆகிவிட்டான்;
அடி வாங்க விரும்பவில்லை சிறார்கள்.

சிட்டெனப் பறந்து ஓடி மறைந்தனர்;
திட்டு வாங்க நின்றவன் வல்லாளன்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#10a. VallALan – 1

KalyAN was a Vaisyan living in Sindhu DEsh. His pretty wife
was Indhumathi. They were blessed with a very smart son whom they named as VallALan. The boy was extremely pious and friendly. So the whole village loved him and all the children were his friends.


They used to meet and play in a garden. The play itself was the pooja of VinAyaka. There was a stone in which they could imagine the figure of VinAyaka.

So they made it their vigraha. They did abhishekham, ArAdhanai and pooja. They offered NivEdhanam, flower garlands and sang VinAyaka’s praise.


One day they forgot themselves in their play. They cleaned the place, decorated it with thoraN. They did abhishekham, pooja and spent the whole day there.

None of them went home to eat lunch. The parents of all the children got anxious and worried. They went to KalyAN’s house and shouted that his son was ruining their sons.


KalyAN became very angry. He fumed and fretted that because of the irresponsible behavior of his son, his own name was drawn in the mud.


He took a big stick and was determined to teach his son a fine lesson. When the boys saw him approach like Rudra himself with the stick, they all ran away leaving VallALan all alone to face his angry father.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#14b. பரத்வாஜர்

“யுதாஜித்தைக் காணச் செல்கின்றேன்!” என்றாள்.
ரதத்தில் ஏறினாள் மகன், தாதியுடன் மனோரமை.

விரைந்தாள் போர்க்களத்துக்கு மிகவும் ரகசியமாக;
கரைந்தாள் சோகத்தில் தந்தையின் உடலைக் கண்டு.

வனத்தில் செல்கையில் வந்தது கள்வர் கூட்டம்
அனைத்தையும் அக்கூட்டம் பறித்துக் கொண்டது.

“உயிரோடு விட்டார்களே புண்ணியசாலிகள்!”
துயரோடு விரைந்தாள் கங்கைநதிக் கரைக்கு.

அடைந்தனர் படகில் ஏறித் திரிகூட மலையை;
அடைந்தனர் அங்கே பரத்வாஜரின் ஆசிரமத்தை.

“யார் அம்மா நீ? ஏன் வந்தாய் வனத்துக்கு?
யாருடைய மனைவி நீ! கூறு விவரங்களை!”

அழுத கண்ணீரால் கழுவினாள் பதங்களை!
தொழுத தாதிப் பெண் கூறினாள் சரிதத்தை!

“சூரிய வம்சத்து துருவசிந்துவின் ராணி;
பேர் மனோரமை; கலிங்கத்து இளவரசி.

பட்டத்து ராணி இவள்; சக்களத்தி பெயர் லீலாவதி;
வேட்டையாடிய மன்னனைக் கொன்றது ஒரு சிங்கம்!

பட்டம் கட்ட வேண்டுமாம் சக்களத்தி மகனுக்கு!
பாட்டன்கள் இருவரும் மோதினர் யுத்தத்தில்;

மடிந்து போனார் இவள் தந்தை போரில்!
துணிந்து தப்பித்தோம் இளவரசனுடன்.”

கனிவுடன் கேட்டார் முனிவர் அவள் கதையை.
மனம் இறங்கினார் அவள் நிர்கதியை எண்ணி!

“தங்கியிருக்கலாம் ஆசிரமத்தில் அச்சமின்றி!
இங்கிருக்கும் வரை இல்லை எந்த ஆபத்தும்!”

பர்ணசாலையில் வாழ்ந்து வந்தனர் அமைதியாக;
வர்ணமயமான அரசவாழ்வு தொலைந்து போனது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#14b. Sage Bharatwaaj


Manorama told the palace guards that she wanted to visit King YuthAjit. She got into a chariot with her son Sudharshan, a trusted maid servant and a body guard. The group went to the battle field secretly. She broke down on seeing the dead body of her father King Veerasenan.


Then they hurried from there into the jungle. A group thieves stopped them and took away everything they had with them. The group was happy to be left alive and kicking. They reached the banks of River Ganges and took a boat. They reached Trikoota parvtham and went to the ashram of sage BharatwAj.


Manorama wept bitter tears in self pity. The sage was moved by her tears and asked about the cause of her sorrow. The maid servant who was accompanying the queen told the sage the life history of the queen


“This is Queen Manorama, the wife of King Dhruvasindhu of Soorya vamsam. She is also the princess of Kalinga and the daughter of King Veerasenan. She is the queen on the throne. The other wife of the king is Queen Leelaavati. A ferocious lion killed king Dhruvasindhu when he went on a hunting expedition.


The other Queen Leelaavati’s father wants to crown his grandson Sathrujit. In the war between the two grandfathers, Veerasenan the king of kalinga got killed. We ran away from the palace in order to save the life of the prince Sudharshan”

The heart of the sage Bharatwaj melted with pity on hearing her story. He assured her of her safety and told her, “Oh Queen! You may stay here in my ashram without any fear. No harm will befall on you and your son, when you are under my protection”


Manorama and her son Sudharshan lived a simple and humble live in the ashram – even though they had none of the kingly comforts there.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#7d. பாவங்களின் பட்டியல்

பெண் வதை, பசு வதை, பிராமண வதை,
பெண்டாளுவது தன் குருபத்தினியையே!

நன்றி மறத்தல், சந்தியா வந்தனம் செய்யாமை,
நாஸ்திகம் பேசுதல், ஏகாதசி விரதம் விடுதல்;

கத்தியால் கொலைகள் செய்து பிழைத்தல்,
கத்தியைக் காட்டி அச்சுறுத்திப் பிழைத்தல்,

நம்பிக்கை துரோகம், எருதின் மீது ஏறுதல்;
நண்பனைக் கொலை செய்தல், பொய் சாட்சி

புதைத்த செல்வதைத் திருடிச் செல்லுதல்;
புத்தியில்லாமல் வீண் எதிர் வாதம் செய்தல்;

ஏளனம் செய்தல், பரஸ்த்ரீ கமனம் இவை
ஏராளமான பாவங்களில் முக்கியமான சில!

பெண் வதை, பசு வதை, பிராமண வதை,
பெண்டாளுவது தன் குருபத்தினியையே!

நன்றி மறத்தல், சந்தியா வந்தனம் செய்யாமை,
நாஸ்திகம் பேசுதல், ஏகாதசி விரதம் விடுதல்;

கத்தியால் கொலைகள் செய்து பிழைத்தல்,
கத்தியைக் காட்டி அச்சுறுத்திப் பிழைத்தல்,

நம்பிக்கை துரோகம், எருதின் மீது ஏறுதல்;
நண்பனைக் கொலை செய்தல், பொய் சாட்சி

புதைத்த செல்வதைத் திருடிச் செல்லுதல்
புத்தியில்லாமல் வீண் எதிர் வாதம் செய்தல்.

ஏளனம் செய்தல், பர ஸ்த்ரீ கமனம் இவை
ஏராளமான பாவங்களில் முக்கியமான சில!

பாவிகளின் பட்டியல்.

கற்பை விலை பேசும் பெண்ணின் மகன்;
கற்பை விலை பேசும் பெண்ணின் கணவன்;

கீழோனுக்கு உணவு சமைப்பவன் மேலும்
கீழோன் சமைத்த உணவை உண்பவன்;

கூலிக்கு ஆசைப்பட்டு பூஜை செய்பவன்,
குடும்பத்தைப் பேணாது புறக்கணிப்பவன்;

தீக்ஷை பெறாதவன்; சொத்தை அபகரிப்பவன்;
திராக்ஷை ரசம் விற்பனை செய்பவன், துஷ்டன்;

திரண்ட பெண்ணை பணத்துக்காக விற்பவன்,
இறைவனிடம் சிறிதளவும் பக்தி இல்லாதவன்;

தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவன்;
தன்னிலும் உயர்ந்த மனிதரை இகழ்பவன்;

அறிவு இன்றி அரச மரத்தை அழிப்பவன்;
பரிவு இன்றி இறை பக்தரைப் பழிப்பவன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#7d. The list of sins and sinners

1. The murderer of a woman, or a cow, or a BrAhmin;

2. The treacherous and ungrateful person;

3. He who enjoys the wife of his Guru;

4. Those not observing the vow of EkAdasi;

5. Those not performing SandhyAs;

6. Those who are NAstikas (atheists);

7. The murderers;

8. Those who live using their swords;

9. The royal officials;

10. The beggars in a village;

11. BrAhmaNAs who deal in bullocks;

12. The traitors;

13. Those who meddle with their friends;

14. Those who give false evidence;

15. Those that steal properties;

16. Those who are foul-mouthed;

17. The husband and sons of an unchaste woman;

18. The BrAhmin who cooks for SoodrAs;

18. BrAhmins who eats food cooked by inferior order;

19. Those who are not initiated by their Gurus;

20. Those persons who do not maintain their fathers,

mothers, brothers, wives, sons, daughters, sisters, the

blind, friends, the families of the Gurus, the fathers-

in-law, the mothers-in-law ;

21. Those that cut the As'vattha trees;

22. Those that slander devotees;

23. Those who steal Deva's articles;

24. Those who steal the BrAhmana's articles;

25. Those that sell lac, iron, and daughters;

26. Those who commit MahA PAtakas;

27. Those that burn the SoodrA's dead bodies;

28. Those who speak very highly of themselves;

29. Those who speak ill of persons much superior to them;

30. Those who do pooja only for the sake of money.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#10b. வல்லாளன்-2

“நீயும் கெட்டுக் கெடுக்கின்றாய் பிறரையும்!
தாயும், நானும் தலை குனிந்தோம் இன்று.

ஊர்ப்பகைத் தேடி வந்து சேர்ந்தது பார்!
யார் யார் வாயில் விழுந்தோம் என்று!”

தலை மயிரைப் பற்றி உலுக்கினான்; மகன்
பொலபொலவென்று கண்ணீர் விடும்படி

ஓங்கி அறைந்தான் அவன் கன்னத்தில்!
அங்கு கண்ட காட்சியால் சினம் கூடியது!

“திருவிழாக் கொண்டாடினோம் அப்பா!”என
“திருவிழா ஒரு கேடா உங்களுக்கு?” என்று

தோரணங்களைப் பிடுங்கி வீசி எறிந்தான்!
வாரணப் பாறையை வயலில் வீசினான்.

துடி துடித்துப் போனான் மகன் வல்லாளன்,
“எடுத்து வாருங்கள் வாரணப் பாறையை!

தெய்வ நிந்தனை செய்வது தவறு!” என
“தெய்வம் வந்து உதவுகிறதா பார்ப்போம்!”

விளாசினான் கல்யாண் தன் கைத்தடியால்;
விம்மி அழும் மகனைக் கட்டினான் மரத்தில்.

விடு விடு என்று வீடு நோக்கிச் சென்றான்.
“வினாயகரை எண்ணி அழுதான் சிறுவன்;

உடல் முழுவதும் ரணங்கள் ரத்தம் வழிய,
உதவி செய்வதற்கு யாரும் இல்லாமல்!

'தன்னை அடித்தது கூடத் துயர் தரவில்லை;
தன் இறைவனை வீசி எறிந்து விட்டாரே!

தெய்வத்தைப் பழித்தோர் வாழ்ந்ததில்லை!
தெய்வம் தரும் தண்டனை குற்றங்களுக்கு!

அன்றே கொல்வான் அரசன் ஆயினும்
நின்று கொல்லும் அன்றோ தெய்வம்?'

கட்டுப்பட்ட நிலையிலேயே நின்று அவன்
கண்ணீர் விட்டு அழுதான் கடவுளுக்காக!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - PART 1

10b. VallALan – 2


“You are ruining all the other children! I and your mother were put to shame by your behavior. The whole village is against us now – all because of your irresponsible behavior.”


KalyAN scolded his son and shook him by his hair. He slapped the boy so hard that tears flowed freely from his son’s eyes.

The decorations and thoraN made him more angry than before. The boy spoke while sobbing and crying, “We celebrated a special puja today!”


KalyAN cursed the boy and threw away the stone which was his GanEsh vigraham. He pulled off the thOraN and ruined the whole place.


VallALan cried and prayed him to put back the vigraham. KalyAN was mad with anger. He said, “Let us see whether your god comes to your help now!”

He beat his son black and blue and tied him up to a tree. He returned home leaving the boy hurt, bleeding and crying for help tied to a tree.


VallALan did not feel sad for getting beaten but that his god and puja were ridiculed and ruined made him more hurt and angry.

He said to himself that whoever insults God must get punished for his wrong behavior. He shed bitter tears of sorrow for his dear god more than for himself.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#15a. சத்ருஜித்

திரும்பினான் யுதாஜித் வெற்றியுடன் அயோத்தி;
விரும்பினான் இளவரசன் சுதர்சனனை அழித்திட!

காணவில்லை அரசியுட ன் சுதர்சனனை – கரை
காணவில்லை வெடித்துக் கிளம்பிய சீற்றமும்!

தேடினார்கள் எண் திசைகளிலும் ஒற்றர்கள்;
ஓடியவர்கள் சென்ற திசை தெரியவில்லை.

முடி சூட்டினான் தன் பேரன் சத்ருஜித்துக்கு;
குடிமக்கள் வருந்தினர் சுதர்சனனை எண்ணி.

சத்ருஜித் வயதில் மூத்தவன் என்பதால்
சத்ரு பயம் இருந்து வரும் எப்போதும்.

பொறுப்பை அளித்தான் அமைச்சர்களுக்கு.
திரும்பினான் தனது உஜ்ஜயினி நகருக்கு.

தெரியவந்தது சுதர்சனன் ஒளிந்துள்ள இடம்
பரத்துவாஜரின் ஆசிரமம் என்கின்ற உண்மை.

போட்டிக்காரனால் நிலவும் என்றும் அபாயம் !
போட்டிக்காரனை விலக்குவதே நல்ல உபாயம்!

சேனையுடன் சென்றான் பரத்துவாஜரின் ஆசிரமம்
சேனையுடன் சென்றான் வேடராஜன் துர்த்தரிகன்.

செய்தியறிந்த மனோரமை நடு நடுங்கினாள்;
செய்வதறியாமல் முனிவரைச் சரணடைந்தாள்.

“தந்தையைக் கொன்ற பாவி இங்கு வருகிறான்;
எந்தத் தீமையும் செய்யத் தயங்க மாட்டான்!

எப்படிக் காப்பீர் எங்களை அவனிடமிருந்து?
எப்படி எதிர்கொள்வீர் அவன் சேனையை? ”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#15a. Satrujit

Yudaajit returned to Ayodhya victoriously. He wanted to put an end to Prince Sudarsanan. When he learned that Queen Manorama had escaped with her son, his anger knew no bounds.

He sent out spies in every direction but they could not trace the queen and the crown prince. He made his own grandson Sathrujit the new king. He distributed the responsibility of ruling the kingdom to the ministers and went back to his country Ujjayini.


Later on he learned that Sudarsanan and Manorama had taken refuge at the ashram of sage Bharatwaj. He sent out an army along with the king of hunters called Durtharigan.


Manorama trembled with fear when she heard this news. She took refuge at the feet of sage Bharatwaaj and asked him, “How are you going to save us from the wicked king sire? How are you going to deal with the army sent out by Yudaajit?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8a. வருங்கால நிலை

பாரதி ஆனாள் சரஸ்வதி பாரதத்துக்கு வந்ததால்!
பிரம்மாணி ஆனாள் பிரம்மன் பத்தினியானதால்!

ஆனாள் வாணியாக வாக் தேவதையானதால்;
ஆனாள் சரஸ்வதியாக அக்னி வர்ணத்தினால்.

பாகீரதி ஆனாள் பகீரதன் கொணர்ந்த கங்கை;
பாகீரதியைத் தலையில் தாங்கினார் சிவன்.

பத்மாவதி நதியானாள் மஹாலக்ஷ்மி தேவி;
உத்தமர் தர்மத்வஜனின் மகளும் ஆனாள்.

தூய துளசி விருக்ஷமும் ஆனாள் லக்ஷ்மி.
தொடரும் இது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு!

அடைவர் வைகுண்டத்தை மீண்டும் சென்று
அடையும் நாசம் அத்தனை தீர்த்தங்களும்!

மிஞ்சும் பிருந்தாவனமும் காசியும் மட்டும்!
மிஞ்சாது எந்த விதமான சத் கர்மங்களும்!

மறைந்து விடும் வேத காரியங்கள் எல்லாம்;
மறைந்து விடும் தேவர், தெய்வ காரியங்கள்.

மறைந்து போய்விடும் புண்ணிய காரியங்கள் ;
மறைந்து போய் விடும் விரதம், தவம். உபவாசம்;

வேடதாரிகள் ஆகிவிடுவர் ஆசார சீலர்கள்;
கோணல்வாதிகள் ஆகிவிடுவர் ஆசார சீலர்;

நடக்கும் பூஜைகள் துளசி இல்லாமல்!
நிறையும் உலகம் துஷ்ட முரடர்களால்!

பித்துப் பிடித்து அலைவர் அலங்காரத்தில்
சொத்தை ஆள்வர்; பெண்களிடம் வீழ்வர்!

மனம் போலச் செய்து கொள்வர் திருமணம்
மனம் போல அனுபவிப்பர் பல பெண்களை

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
[h=2]9#8a. The Kali prabhAvam (1)
[/h]
A part of Saraswati descended as a river in BhArata Varsha. She is named as BhArati. She is called BrAhmi because she is dear to BrahmA. She is called VANI as She presides over Speech. The river Saraswati is a very sacred Teertha. She is like the burning fire to the fuel of sins, of sinners.

Through the curse of Saraswati, GangA also assumed the form of a river in her amsam. She was brought down to this earth at the request of Bhageerata. Hence she is called BhAgeerati.

While GangA rushed down to the earth S'iva broke her fall with the matted coils on His head - as requested by the Mother Earth.

Lakshmi came down to earth through the curse of Saraswati as the river PadmAvati in one of her amsams . But She remained in full with Hari. Lakshmi appeared also in Her other part as the well-known daughter Tulasee of the king Dharmadhvaja in India.

Last of all, she turned into the Tulasee tree, purifying the whole world. After remaining for five thousand years of Kali, all them will quit being rivers and return to Hari. A
ll the Teerthas except KAsi and BindrAvan will go along with them to Vaikuntha.At the end of ten thousand years of Kali, S'rAddhas, TarpaNas and all the rites and ceremonies dictated by the Vedas will cease. The worship of Gods, the recitation of their praises, their names will become extinct. The Vedas with their Angas will no longer be heard of.

All will be addicted to the VAmAchArA rituals. They will speak falsehood and be deceitful. Worship will be without the holy Tulasee leaves. Almost all will be deceitful, cruel, vain, egoistic, thievish and mischievous.

Men and women would enjoy carnal pleasures like animals . No fear will exist in marriage ties. Properties will be only of those that will make them and will not be passed on to one's santhathis


 
BHAARGAVA PURAANAM - PART 1

#10c. வல்லாளன்-3

“உயிர் வாழ்வதில் பயன் இல்லை இனிமேல்.
உயிரை விட்டுவிடுகின்றேன் நான் இன்றே!”

மூச்சை அடக்கி முரட்டுத்தனமாக நின்றவன்
முன்னே தோன்றினான் ஓர் அழகிய சிறுவன்.

கட்டுக்கள் கழன்று விழுந்தன தாமாகவே!
கொட்டிய ரத்தம் நின்று ரணம் மறைந்தது!

அழகிய சிறுவன் பழகிய வேழமுகன் தான்!
தொழுதான் ஓடிச் சென்று; விழுந்தான் காலில்.

“உன் பக்தியை மெச்சினேன் வல்லாளா!
என்னை அவமதித்தவர் அடைவர் தண்டனை!

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என;
வினயத்துடன் வேண்டினான் அச் சிறுவன்.

“கல் ஒன்றில் உம்மை வணங்கினோம் – அக்
கல்லில் நீர் என்றும் குடியிருக்க வேண்டும்!”

வீராவேசமாக வீட்டுக்குச் சென்ற கல்யாண்
விரைவில் இழந்தான் கட்புலன், செவிப்புலன்.

வாய் பேசாமல் ஆனது வழி நடக்கையில்!
நோய் பரவியது அவன் உடல் முழுவதும்.

“மகன் என்ன கதியில் வருவனோ?” என்று
திகிலுடன் காத்திருந்தாள் தாய் இந்துமதி.

இந்த நிலையில் கல்யாணைக் கண்டதும்
நொந்து நூலாகிவிட்டாள் மனைவி இந்துமதி.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதால்
ஆண்டவன் தந்தானோ இந்த தண்டனையை?”

மகனுக்காகக் கண்ணீர் விடுவாளா - அல்லது
மகனைப் பகைத்துக் கொண்டவனுக்காகவா?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - PART 1

10c. VallALan – 3

“There is no point in remaining alive any more!” VallALan decided to give up his life and held his breath completely. A very beautiful and young boy appeared in front of him.

All the knots tying VallALan to the tree came off loose and he was free to move! He knew that the boy cold be none other than VignEswara himself. He ran to the boy and flung himself at his feet.


The boy (VinAyaka) spoke to him, “Do not worry VallALan! The wrong doer will get his due punishment! I am very happy with your bhakti. Tell me what you want!”


VallALan said, “We have felt your presence in that stone all along. You must reside in it all the time and make it your vigraha. ” VignEswar agreed to this request and disappeared.


KalyAN marched homewards in terrible anger. But on the way he suddenly became blind, deaf and dumb. Wounds appeared all over his body and started bleeding. He reached his home with great difficulty.

Indhumati was worrying about the sad plight of her son. Now she was completely shocked to see her husband’s plight. 'What had happened to her son? What has happened to her husband?' She did not know what to do!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#15b. மனோரமையின் மனக்கவலை

முனிவரிடம் கூறினாள் மனோரமை – தன்
மனத்தை வாட்டி வதைத்த அச்சங்களை!

“பாண்டவர்கள் இருந்தனர் வன வாசத்தில்.
பாஞ்சாலி இருந்தாள் ரிஷி பத்தினிகளுடன்.

முனிவர் செய்திடுவர் வேத பாராயணம்
முனி பத்தினிகள் காப்பர் பாஞ்சாலியை.

வேட்டைக்குச் சென்றிருந்தனர் பாண்டவர்கள்;
வேந்தன் சைந்தவன் வந்தான் சேனைகளுடன்.

வேத கோஷம் கேட்டு வணங்கினான் முனிவரை.
வேதியர்களிடம் கூறினான் தான் ஜயத்ரதன் என.

வேந்தனைக் காண வந்தனர் ரிஷிபத்தினிகள்;
வேந்தன் கண்டான் பாஞ்சாலியை ஆவலுடன்.

“இனிய பெண் இவள் யார்?” என வினவினான்
முனிவர் கூறினர் திரௌபதியின் விவரங்களை.

“பாஞ்சால நாட்டின் இளவரசி பாஞ்சாலி.
பாண்டவர்களுடன் தங்கியுள்ளாள் இங்கே.

பாஞ்சாலியை நெருங்கினான் ஜயத்ரதன்;
பலாத்காரம் செய்திடவும் முற்பட்டான்!

ஐவரின் மனைவிக்கே அந்த கதியென்றால்
எவரும் இல்லாத என் கதி என்ன ஆகும்?

பகைவன் வந்தால் தடுத்திட வேண்டும்!
நகை முகத்துடன் வரவேற்க வேண்டாம்.

ஆண் எந்தப் பாதகத்துக்கும் துணிவான்!
மண், பெண், பொன் ஆசையில்லாதவன் யார்?

பெண்ணைக் காக்க உள்ள வழி ஒன்றே – ஆணைப்
பெண்ணிடம் நெருங்கிச் செல்ல விடவே கூடாது”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#15b. Manorama’s fear

Queen Manorama spoke to the sage BharatwAj about the fears ripping her mind. “PANdavAs were in vanavAsam. PAnchAli lived under the care of the rish patnis. The rishis would do Veda pArAyaNam all the time.


One day the PANdavAs had gone out to hunt for food. The king Jayadradan went by the ashram. He heard the Vedha gosham and went to pay his repect to the sages. He introduced himself to them as King Jayadradan.


All the rishi patnis wanted to see the king and came there. PAnchAli was among them. Jayadrathan asked the details about her – the most beautiful woman in that group. The rushis told him that she was the princess of PAnchAla Desam and the wife of PANdavAs.

Jayadradan got infatuated with Panchali, went near her and tried to misbehave with her, in the presence of everyone. If this is the fate of the wife of five valorous men, what will be my fate since I have no one to protect me?


You must stop the army of the enemies. You must not let them approach me. There is no man who does not covet land, gold and women.” Queen Manorama requested the sage thus.
 

Latest ads

Back
Top