• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

BHAARGAVA PURAANAM - PART 1

11 c. The gift of kingdom – 3


The ministers and courtiers knelt down to Dakshan and requested him to assume office as their new king immediately. Dakshan and Kamala sat on the royal elephant and went to the palace.


The citizens did AArthi to them all along the way. Women decorated the streets with beautiful and colorful floral designs.

The queen was waiting outside the palace to receive them. Dakshan and Kamala paid obeisance to the queen. The time of coronation was fixed immediately.

Dakshan did not forget his well wisher – Mudhgala sage. He sent a palanquin with some soldiers to escort the sage safely to the palace.

He received the sage Mudhgala with poorna kumbham and paid his respects. He told with deep gratitude to the sage,

“Sire! you taught me the ekaaksharam and I did japam as advised by you. This gift of kingdom is the fruit of your blessings and guidance.”


Mudhgala rushi crowned Dakshan at the auspicious hour as planned. The whole country celebrated the arrival of their young new king.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#16c. பீஜாக்ஷரம்

மனோரமை வாழ்ந்தாள் பரத்வாஜர் ஆசிரமத்தில்;
மகன் சுதர்சனனுக்கு ஆகிவிட்டது அகவை ஐந்து.

விளையாடும் முனிகுமாரன் அழைத்தான் உரக்க,
“ஏ க்லீபனே! இங்கு வா!’ என்று தன் நண்பனை.

'க்லீம்' என்பது தேவியின் காம பீஜாக்ஷரம்;
'க்லீம்' என்பதை உச்சரித்தான் சுதர்சனன் .

பூர்வ புண்ணியம் பெருகத் தொடங்கி விட்டது!
ஆர்வத்துடன் உச்சரித்தான் ஆறு ஆண்டுகள்!

உபநயனம் செய்வித்தார் பரத்வாஜர் – தானே
உபதேசித்தார் அனைத்து சாஸ்திரங்களையும்.

மந்திர பலத்தினால் விரைவாகக் கற்றான்;
எந்த சாஸ்திரத்தையும் எளிதாகக் கற்றான்!

தோன்றினாள் தேவி தன் கருட வாகனத்தில்;
தோன்றினாள் தேவி லக்ஷ்மியின் வடிவத்தில்.

சிவந்த நிறத்துடன், சிவந்த ஆடை அணிந்து,
சிவந்த ஆபரணங்களுடன் சிவந்த மலர்கள் சூட்டி.

தந்தாள் வில்லும் அம்புகளும் அவனுக்கு;
தந்தாள் வஜ்ஜிர கவசத்தையும் அவனுக்கு!

சென்றனர் காசி ராஜனின் தூதுவர் அவ்வழியே;
நின்றனர் தம்மை மறந்து, அவன் வடிவழகில்!

பூரண சந்திர முகம் கொண்ட இளவரசியிடம்
வர்ணித்தனர் தாம் கண்ட குமாரனைக் குறித்து.

காசி ராஜனின் மகள் கன்னி சசிகலை – அந்தக்
காமதேவனின் வர்ணனையில் மயங்கினாள்.

வரித்தாள் அவனைத் தன் கணவனாக;
தவித்தாள் மன்மத பாணங்கள் தாக்கியதால்!

தேவி தோன்றினாள் சசிகலையின் கனவில்;
தேவி கூறினாள், “சுதர்சனன் என் பக்தன்!

மணந்து கொள்வாய் நீ அவனை விரும்பி;
மனம் விரும்புவதையெல்லாம் அடைவாய்!”

மகிழ்ச்சிக் கடலில் மிதந்தாள் சசிகலை – கனவை
நெகிழ்ச்சியுடன் கூறினாள் உயிர்த் தோழியிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
3#16c. BheejAksharam

Queen Manorama and Prince Sudarsanan lived under the care of Sage BhatarwAj. The boy became five years old. One day when the sons of the rushis were playing, one of them called out loudly his friend “Hey Kleeba! Come here!”


The word appealed to Sudarsanan. 'Kleem' is the KAmaa Bheeja Aksharm of Devi. He kept repeating that beeja aksharam playfully. His poorva-janma-puNyam started growing fast. He kept chanting the mantra for six long years.

Sage BharatwAj performed his upanayanam and taught him all the sAstrAs. He learned them very easily and quickly due the effect of the manata japam.

One day Devi appeared before him in the form of Lakshmi Devi on her Garuda VAhanam. She was very fair and wore red silk, red flowers and red colored ornaments. She blessed the young prince Sudarsanan and presented him with a bow and arrows. She gave him a vajra kavacham (a diamond armor) to protect him.


The prince was a now a very handsome lad – well versed in all the sAstrAs and very devoted to Devi. The messengers of the King of KAsi passed by. They were duly impressed by the beauty and knowledge of the young prince in vanavAsam.

They went back and described about this handsome prince to their young princess Sasikala. She fell head over heels in love with the prince – whom she had yet set her eyes on.


Devi appeared in Sasikala’s dream and said, “Prince Sudarsanan is my ardent devotee. You will marry him and you will get everything you desire to have!"

Sasikala was happy with this dream and shared it with her closest friend with a great emotion.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8f . காலம்

நாட்கள் ஏழாகும் ஒரு வாரத்துக்கு;
திதிகள் பதினாறு ஒரு பக்ஷத்துக்கு.

அயனங்கள் இரண்டு; ருதுக்கள் ஆறு;
பக்ஷங்கள் இரண்டு; ஜாமங்கள் நான்கு!

நாட்கள் முப்பது ஆகும் ஒரு மாதம்;
பகல் இரவு சேர்ந்து ஆகும் ஒரு நாள்.

மனிதனின் ஓராண்டு தேவனின் ஒரு நாள்
மன்வந்தரம் 71 வேதயுகங்கள் சேர்ந்தது.

மன்வந்தரம் இந்திரனின் பதவிக் காலம்;
மன்வந்தரம் 28 சேர்ந்தது பிரமனின் நாள்.

பிரமனின் ஆயுள் இந்திரனிலும் அதிகம்;
பிரமனின் ஆயுட்காலம்108 ஆண்டுகள்.

பிரக்ருத பிரளயம் ஏற்படும் அப்போது;
பொழியும் கனமழை இடைவிடாமல்!

மறையும் பூமி வெள்ள நீருக்குள் மூழ்கி.
உறையும் அனைத்தும் சிதாத்மாவினில்.

தேவி கண்ணிமைக்கும் காலம் இதுவே.
தேவி சிருஷ்டிக்கும் காலமும் இதுவே !

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

There are seven days in a week, sixteen tithis in a paksha; twelve months and six seasons in a year. There are two fortnights (dark and bright) in a month and the two Ayanas (Northern and Southern) in a year.

One day consists of four Praharas and one night consists of four Praharas. A day and a night constitute one day. Thirty days make one month.

One day in the scale of the Devas is equal to one year in the scale of men. Three hundred and sixty human Yugas equal to one Deva Yuga. Seventy-one Deva Yugas make one Manvantara. The life span of Indra is one Manvantara.

Twenty-eight life spans of Indra are equal to one day of Brahma. One hundred and eight such years equal to the lifespan of BrahmA. When BrahmA dies, that is the PrAkrita Pralaya and the dissolution of Prakriti takes place.

The whole Universe is deluged by water! Everything will merge with Para BrahmA whose substance is truth and consciousness. Prakriti Devi also merges with Para BrahmA.

The fall of BrahmA and the dissolution of Prakriti is the PrAkrita Pralaya. The duration of this Pralaya is the time needed by Prakruti Devi for blinking her eyes. The cretion also takes place in the due order in the time needed by Devi to blink her eyes!

 
BHAARGAVA PURAANAM - PART 1

#11d. அரசு பரிசு-4

பட்டத்துயானை புதுஅரசனாக மாலை சூட்டி;
பல்லி நகர அரசன் வல்லவராஜனின் மகன்

தக்கனைத் தேர்வு செய்த செய்தி பரவியது
தீக்காற்றுப் போல திசை எங்கும் உடனேயே!

நல்வினைப் பயனைக் கேட்டறிந்த அரசன்
வல்லவராஜன் விரைந்தான் மகனைக் காண!

தக்கனும் எதிர் சென்றான் தாய் கமலையுடன்;
தக்க மரியாதைகள் அளித்து வரவேற்றான்.

விநாயகர் மேலும் கருணை பொழிந்தார்.
வீரசேன அரசன் கனவில் தோன்றினார்.

“கௌண்டின்யபுர மன்னன் தக்கனுக்கு
குமாரியை மணம் புரிந்து தருவாய்!” என;

கனவைக் கூறினான் மதி மந்திரிகளிடம்,
காலை எழுந்தவுடன் அரசன் வீரசேனன்.

தக்கனைப் பற்றி அறிந்து இருந்த அவர்களும்
“தக்க மணமகன் தக்கனே!” என்று கூறினர்.

சென்றான் வீரசேனன் கௌண்டின்யபுரம்;
செப்பினான் கனவை பெற்றோர்களுக்கு!

வல்லவராஜனும், கமலையும் மகிழ்ந்திட
நல்ல நாளில் நடந்தது அந்தத் திருமணம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1

11 d. The Gift of Kingdom – 4

The news that the royal elephant of KoundiNya puram, had selected as the new king Dakshan – the son of Vallava RAjan of Palli – spread like wildfire.

Vallava RAjan was very happy to learn about the good fortune of his son and wanted to meet him immediately. He went to KouNdinya puram


Dakshan along with his mother Kamala, received him with due honors. Vinayaka wanted to shower more grace on Dakshan. He appeared in the dream of king VeerasEnan and told him to get his daughter married to Dakshan.

King VeerasEnan told of his dreams to his ministers the next day morning. Everyone had heard about Dakshan and they all agreed that Dakshan as the right groom for the king’s daughter.


King VeerasEnen went to KoundiNya puram, met Dakshan’s parents and got their consent. The wedding between Dakshan and the daughter of VeerasEnan was duly performed on an auspicious day.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#16d. பொன்னும், மணியும்

அன்னை கேட்டாள், “ஏன் இத்தனை உற்சாகம்?”
அன்னையிடம் கூறவில்லை அற்புதக் கனவினை.

நந்தவனம் சென்றாள் தோழியர் குழுவுடன்;
நந்தவனத்தில் கொய்தனர் வண்ண மலர்களை.

அந்த வழியே விரைந்து சென்றான் அப்போது
அந்தணன் ஒருவன் எங்கிருந்தோ வந்தவன்.

“எந்த ஊரிலிருந்து வருகின்றீர்கள் ஐயா?”
சந்திரவதன சசிகலா அவனை வினவினாள்.

“வருகின்றேன் பரத்வாஜர் ஆசிரமத்திலிருந்து!”
இருந்தான் சுதர்சனன் அங்கு என்றறிவாள் அவள்.

தேவி கூறிய அழகனைப் பற்றி மேலும்
தெரிந்து கொள்ள விரும்பினாள் சசிகலா.

“ஆசிரமத்தில் உள்ள அதிசயத்தைக் கூறும்!” என,
“ஆசிரமத்தில் உள்ளது ஓர் அதிசயம் உண்மையே!

அஃறிணை அல்ல அந்த அதிசயம் தாயே!
உயர்திணை ஆவான் நம் போன்ற மனிதன்!

துருவ சிந்துவின் அருமை மகன் அவன்;
பருவ வயதினன்; சுதர்சனன் என்று பெயர்.

ராமனைப் போன்றே வீரம் செறிந்தவன்;
ராமனைப் போன்ற பொலிவு நிறைந்தவன்

கண்ட தும் காமுறுவர் ஆடவர், மகளிர்.
காணாத கண்கள் பயனற்ற மயில் கண்கள்.

சிலருக்குச் சிறந்திருக்கும் குண நலன்கள்;
சிலருக்குச் சிறந்திருக்கும் உருவ அழகு;

சிறந்துள்ளன உருவமும், குணமும் அவனுக்கு.
சிறந்துள்ளன உருவமும், குணமும் உனக்கும்.

ஒன்று சேர வேண்டும் நீங்கள் இருவரும்;
பொன்னும், மணியும் போல் பொலிவீர்கள்.

நாயகன் ஆக வேண்டும் அவனே உனக்கு;
நாயகி ஆக வேண்டும் நீயே அவனுக்கு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#16d. Gold and Diamond

The Queen, Sasikala’s mother, noticed the change in her daughter. She wanted to know what made her so happy on that day. But Sasikala did not reveal her unusual dream even to her mother.

Sasikala went to the flower garden with her friends. They were plucking the fragrant flowers. A Brahmin went by and Saikla asked him, “Where are you coming from sir?”

The Brahmin was coming from Sage Bharatwaaj’s ashram. Sasikala asked him, “Please tell me what is the most unusual thing in your ashram?”

The Brahmin replied to her, “Yes princess, we do have something very unusual in that ashram. It is not a thing but it is a human being.

He is Sudarsanan – the son of King Dhruva Sindhu. He is as handsome as Sri Rama himself. He is as valorous as Sri Rama himself.


Whosoever sets his or her eyes on him will be duly impressed by his port and presence. Those who have not seen him, live useless lives on the earth. Some people have excellent character and some others beauty and grace.

He has everything in him. He is handsome and good-natured. You too are pretty and good-natured. You must marry each other to make the most perfect pair on the earth, like a priceless diamond studded in solid gold.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8g. பரமாத்மா

பரமாத்மா ஆவார் அனைத்துக்கும் தெய்வம்;
பரமாத்மாவின் அம்சங்கள் தேவர், தெய்வம்!

மகாவிராட் புருஷனின் அம்சம் சின்ன விராட்;
மகா விராட் புருஷன் பரமாத்மாவின் அம்சம்.

தோன்றினார் பிரகிருதியிலி அர்த்த நாரீஸ்வரர்;
தோன்றினார் கோலோகத்தில் கிருஷ்ணமூர்த்தி.

தோன்றினார் வைகுண்டத்தில் நாராயணன்;
தோன்றிய அனைத்தும் பிரகிருதியின் உருவம்.

பிரகிருதிக்கு மேற்பட்டது பரப்ரஹ்மம் ஒன்றே!
பரப்ரஹ்மம் சத்யம், நித்யம் அநாதியானைது

மாறாத பக்திகொண்ட பிரகிருதியே பகவதி.
ஆறு குணங்களை உடையவன் மகாவிஷ்ணு

தவம் செய்தாள் துர்க்கா தேவி இமயத்தில்;
தவம் செய்தாள் சரஸ்வதி காந்தமாதனந்தில்;

தவம் செய்தாள் லக்ஷ்மி புஷ்கர க்ஷேத்திரத்தில்;
தவம் செய்தாள் சாவித்திரி மலைய மலையில்.

தவம் செய்தனர் மும்மூர்த்திகள் அன்று
தேவியைக் குறித்து நூறு மன்வந்தரம்.

சக்தி பெற்றனர் தத்தம் தொழிலைச் செய்திட;
யுக்தி கற்றனர் தத்தம் தொழிலைச் செய்திட.

தவம் செய்தார் கிருஷ்ணர் பத்து மன்வந்தரம்;
தவம் செய்தார் தருமர் பத்து மன்வந்தரம்.

தவம் அளித்தது தகுந்த மேன்மைகளை!
தவம் செய்த தேவியரின் ஸ்வரூபங்களை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
9#8g. Parabrahma

The supreme lord of the entire creation is the Para Brahma. His nature is of Existence, Consciousness and Bliss (Sath-Cith- Anandam). He is the highest among all Gods. All the other gods and Devas are his amsams.

From Para BrahmA appeared lord Ardha NAreeswara, Sri Krishna of Goloka, NArAyaNA of vaikunta and all the other gods.

All the things from the Highest, to the lowest originated from Prakriti. All the things born out of Prakriti are transient and will get destroyed.

Eternal Para BrahmA who is the source of all creation and who is completely free from the three guNAs is the only one beyond the power of Prakriti.

He is without UpAdhis and is beyond all conditioning factors and limitations such as Time, Space and Attributes. He is without any physical form. The forms He assumes are for showering His Grace on His devotees.

BrahmA born out of a lotus is able to create using His Power and Knowledge he earned by his harsh austerities. By His Tapas,

Siva has realized Para BrahmA and become the Lord of everyone. He is All-knowing. He is endowed with great Vibhootis. He is the seer of all, omnipresent, protects and bestows all prosperity.

The devotion and penance towards Para BrahmA has made Vishnu the Lord and protector of all jeevAs. MahAmAyA Prakriti Devi has become omnipotent and the Goddess of all by the power of her penance.

Devi SAvitri become the presiding Deity of the Vedas. She presides over all the branches of knowledge, since she worshiped the Prakriti Devi.

Lakshmi Devi became the presiding deity of wealth by worshiping The Moola Prakriti Devi. It is through the worship of Prakriti Devi - that RAdhA became the presiding Deity of KrishNA's PrANA.

The Devis other than the five Prakritis, derived superiority by praying to Moola Prakriti. Everyone reaps the fruits according to the tapasya performed by him or her.


Bhagavati DurgA practiced penance on the HimAlayAs for one thousand Deva years. Devi Sarasvati practiced penance on GandmAdana for one lakh Deva years.


Lakshmi Devi practiced penance in Pushkara Kshetra for one hundred Divine Yugas. Dev SAvitr worshiped Sakti for sixty thousand divine years in the Malaya mountain.


BrahmA, VishNu and Siva performed penance for one hundred Manvantara to get the power to do their duties. Sri Krishna practiced penance for ten Manvantaras to get his place in Goloka. Dharma Deva worshiped Sakti with devotion for ten Manvantaras.



 
BHAARGAVA PURAANAM - PART 1

#11e. வம்ச விருத்தி!

பிரகத்பானு பிறந்தான் தக்கன் மகனாக;
பிரகத்பானுவுக்குப் பிறந்தான் கட்கதரன்;

கபாலன் பிறந்தான் அந்தக் கட்கதரனுக்கு;
கபாலனுக்கு வந்து பிறந்தான் யதாகரன்;

வபுத்திரன் வந்து பிறந்தான் யதகரனுக்கு;
வபுத்திரனுக்குப் பிறந்தான் சித்திரசேனன்;

வீமன் வந்து பிறந்தான் சித்திரசேனனுக்கு;
வீமனுக்கு உரைத்தார் முனிவர் இவற்றை.

ஏகாக்ஷரம் உபதேசித்தார் விஸ்வாமித்திரர்;
“ஏக மனத்தோடு ஜபித்து நலம் பெறுவாய்!

அனுதினம் அன்போடு பூஜித்து வந்தால்
அனுக்ரஹத்தால் உருவாகும் வாரிசு!”

மன்னன் திரும்பும் நல்ல செய்தி கேட்டு,
மந்திரிகள் சென்று எதிர்கொண்டழைக்க;

நன்னாளில் சென்றான் வீமராஜன் தன்
முன்னோர்கள் நிர்மாணித்த ஆலயத்திற்கு.

அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தினான்.
ஜபிக்கத் தொடங்கினான் எகாக்ஷரத்தை.

அன்பனுக்கு அன்பனான ஆனைமுகன்
கண்முன் தோன்றியருளினார் அவனுக்கு

“வம்சம் விளங்க மகன் வேண்டும் ஐயனே!”
வம்சம் விளங்க அம்சமான மகன் ஒருவன்

உரிய காலத்தில் வந்து தோன்றினான்
அரசி சாருஹாசினியின் மணி வயிற்றில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1

11e. The family tree.

Dakshan was blessed with a son named BruhatbhAnu.

BruhatbhAnu was blessed with a son named Kadgadharan.


Kadgadharn was blessed with a son called KapAlan;


KapAlan was blessed with a son called YadAkaran.


YadAkaran was blessed with a son Vaputhran


Vaputhran was blessed with a son ChitrasEnan.


ChitrasEnan was blessed with King Beeman as his son.


ViswamithrA traced the family tree to king Beeman.


He then taught king Beeman EkAksharam.


“If you worship lord GanEsa with undivided attention, he will surely bless you!”


The king and Queen decided to return to their kingdom

The two ministers who were taking care of the kingdom were very happy to receive them back.

The king went to the GanEsa temple established by his ancestors. He performed abhishekha ArAdhanA.


He started chanting ekAksharam with devotion. VinAyaka was very pleased and appeared in front of the king.


The king wished for a worthy son. In due course of time the queen ChAruhAsini delivered a beautiful and strong baby boy who was named as RukmAngathan.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#17a. சசிகலையின் காதல்

அந்தணனின் பேச்சைக் கேட்ட பிறகு சசிகலை
அதிகக் காதல் கொண்டாள் அந்த சுதர்சனனிடம்.

இரவு நெருங்கவே சென்று விட்டான் அந்தணன்;
விரகம் கொண்ட சசிகலை உடல் வாட்டமுற்றாள்.

அந்தரங்கத் தோழியை அழைத்துச் சொன்னாள்,
“சுந்தர புருஷனைக் கண்டதில்லை கண்களால் நான்.

உருவகித்தேன் அந்தணன் வர்ணனையால் அவனை;
உணருகின்றேன் நேரில் கண்டது போலவே அவனை.

வருத்துகின்றன மன்மதனின் பாணங்கள் என் உடலை
வருத்துகின்றது அவன் பிரிவுத் துயர் என் உள்ளத்தை.

தவிக்கின்றேன் அவனுடன் கூடி மகிழ்ந்திட;
தகிக்கின்றது குளிர் நிலவொளி நெருப்பென.

எரிகின்றது உடலில் பூசிய சந்தனம் நஞ்சாக;
தெரிகின்றன மலர்மாலைகள் நச்சரவங்களாக.

தேடிச் செல்லலாம் அவன் இருக்கும் இடத்தை;
தடுக்கின்றன அச்சம், மடம், நாணம் போன்றவை.

தந்தை திருமணம் செய்து வைப்பாரா என்னை
அந்த சுகுமாரனுக்கு என்பதையும் அறியேன்!

நாடாளும் மன்னர்கள் பலர் இருக்கையில்
காடாளும் ஏகாங்கியுடன் என் திருமணமா?

மனத்தை இவனிடம் பறி கொடுத்து விட்டபின்
மணத்தைப் புரியமுடியுமா வேறு ஒருவனுடன்?”

தனியன், தனம், ஜனம் இல்லாதவன் சுதர்சனன்
எனினும் உருகினாள் சசிகலை அவனை எண்ணி.

அறியவில்லை சுதர்சனன் இது பற்றி சிறிதும்.
இருந்தான் தேவியின் தியானத்தில் எப்போதும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#17a. Sasikala in love.

Sasikala loved Sudarsanan all the more after listening to the brahmin coming from Sage Bharadwaaj’s ashram. The brahmin went away before the night fell. Sasikala felt the pangs of love for her unseen lover.


She spoke to her dearest friend. “I have not seen Sudrsanan but I feel I already know him very well. I want to be with him but I can’t. The arrows shot Cupid hurt me badly.


The cool moon light burns my skin like a roaring fire. The sandal paste applied to my body feels like a coating of deadly poison. The garlands made of fresh flowers appear like a cluster of poisonous snakes.

I can go looking for him but the feminine virtues stop me from doing that. Will my father the king agree to get me married to Sudarsanan?

I am not very sure. When there are so many worthy kings from whom I can select my husband, will my father allow my wedding with a prince living in the forest who has neither a country nor men nor riches ? I can’t lose my heart to a prince and marry another. ”


Sasikala was tortured by her pangs of love and her doubts about her future. Sudarsanan was completely unaware of all these and spent his entire time in meditating upon Devi wholeheartedly.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#9a. வசுதா தேவி

பூமி பிரளயத்தின்போது எங்கே ஒடுங்குகின்றது?
பூமியில் படைப்பு எங்கனம் தொடங்குகின்றது?"என

"மறைந்திருக்கும் பூமி பிரளயத்தின் போது!
மறுபடி வெளிப்படும் சிருஷ்டிக்கு முன்பு!

மறைந்திருக்கும் பூமி, மகா விராட்புருஷனின்
ரோம கூபம் தோறும் நிறைந்திருக்கும் நீரில்.

இரண்யாக்ஷன் ஒளித்து வைத்தான் பாதாளத்தில்;
வராஹ மூர்த்தி மீட்டு வந்தார் பூமியை வெளியே!

மனோஹர வடிவுடன் இருந்தாள் வசுதா தேவி;
மனதைப் பறி கொடுத்தார் தேவியிடம் விஷ்ணு.

சுயவுருவெடுத்துக் கூடிக் களித்தார் தேவியுடன்;
மயங்கி முயங்கினர் காம லீலைகளில் ஓராண்டு!

பிறந்தான் கடேசன் என்னும் அழகிய புத்திரன்;
பிறந்தது தெளிவு; மறைந்தது காம உணர்வு!

அன்புடன் அளித்தார் ஆடைகள், ஆபரணங்கள்;
அன்போடு தந்தார் தேவிக்கு மேலும் ஒரு வரம்.

"பூதேவி ! ஆகிவிட்டாய் நீயும் என் மனைவியாக!
ஸ்ரீ தேவிக்கு இணையான மேன்மை அடைவாய்!

ஆதாரம் ஆகிவிடுவாய் அனைத்துக்கும் நீயே!
ஆதரவோடு பூஜிப்பர் அனைவரும் உனையே!

பூஜிப்பர் வீடு கட்டும் முன்பு, குளம் வெட்டும் முன்பு;
பூஜிப்பர் உன்னை விவசாயம் தொடங்கும் முன்பு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#9a. Vasudha Devi

"Where does the earth reside during the praLaya?
How does the creation start on the earth after the pralaya?" Narada wanted these doubts to be clarified by NArAyaNa.

"The earth will be hidden under water during the praLaya and will be brought out again just before the creation. The earth will be hidden in the praLaya Jalam in the hair follicle of the MahA virAt purusha.

HiraNyAkshan hid the earth in pAtAlA. VarAha Moorthi brought her out of the water gently. Vasudha Devi - Mother Earth - was in a very beautiful female form and MahA VishNu fell in love with her. He assumed an equally attractive form and they made love for one long year.

A son named NarakAsuran was born to them and their infatuation came to an end. Lord Vishnu presented Vasudha Devi with many silks and ornaments. He gave her a special boon,

"Now you too have become one of my wives dear VasudhA Devi! May you become as great as Sri Devi is. You will be the supporter of everything and everyone in this creation.

Every one will worship you with devotion. You will be worshiped in a special manner before starting the construction work of a new house, or digging a pond or starting cultivation in a field."



 
BHAARGAVA PURAANAM - PART 1.

#12a. ருக்மாங்கதன்-1

கணபதியின் அருளால் தோன்றினான் ஒரு
குணவான் ஆகிய நல்ல மகன் வீமனுக்கு.

தக்க வயது அடைந்த ருக்மாங்கதனைக்
கற்க அழைத்துச் சென்றனர் கபிலரிடம்.

அன்போடு ஆசிரமத்தில் வைத்து கபிலர்
அனைத்து வித்தைகளையும் போதித்தார்.

வித்தியாப்பியாசம் முடிந்த பின்னர் அவர்
விநாயக ஏகாக்ஷரத்தையும் போதித்தார்.

கணபதியிடம் அளவற்ற பக்தி கொண்டு
குணவானாகத் திகழ்ந்தான் ருக்மாங்கதன்.

இளவரசனுக்குப் பட்டம் சூட்டி, வீமராஜன்
இலகுவான வாழ்க்கை வாழ விழைந்தான்.

நல்ல நாளில் நல்ல நேரத்தில் நடந்தது
நல்லவர்கள் மத்தியில் முடிசூட்டு விழா.

தந்தையையும் மிஞ்சி விட்டான் தனயன்!
எண்திசையும் பரவியது அவன் நற்பெயர்!

காட்டு விலங்குகள் தொல்லைகள் தந்தன
நாட்டு மக்களுக்குப் பலப்பல விதங்களில்.

கஷ்டம் தரும் துஷ்ட விலங்குகளைக் கொல்ல
இஷ்டத்துடன் சென்றான் அரசன் வேட்டைக்கு.

அமைச்சர்கள், வீரர்கள் அரசனுடன் சென்றிட
அமளி துமளிப் பட்டது வன வனாந்தரங்கள்!

உற்சாகம் அதிகரித்து விட்டது அரசனுக்கு;
ஊக்கத்துடன் கொன்றான் விலங்குகளை.

தன்னுடைய வீரர்களிடமிருந்து பிரிந்து
தனியாள் ஆகிவிட்டான் ருக்மாங்கதன்.

உச்சி வெய்யில் சுட்டு எரித்தது – அரசனின்
உடல் தளர்ந்தது அதிக நீர் வேட்கையால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - PART 1

12a. RukmAngathan – 1

Beema RAjan was soon blessed with a worthy son, by the grace of VinAyaka. The prince was named as RukmAngathan. He was taken to the sage Kapila’s aashram when he was ready for education and training.


Kapila taught him everything needed by a king and also the EkAksharam in addition. RukmAngathan was a devotee of Ganapathy and a prince of extraordinary good-nature.

Beema RAjan became old. He wished to crown his son as the new king and retire from his kingly duties. An auspicious muhoortham was fixed and RukmAngathan became the new king. He ruled well and wisely. Soon he became even more famous than his dear father Beema RAjan.

The wild animals started troubling the citizens. They had to be killed or chased away. King left with his ministers and soldiers on this mission. They all went on a hunting spree.


The king became very enthusiastic and went chasing the animals all by himself. Soon he got separated from the rest of the group.


The midday sun was scorching and the king RukmAngathan felt very week and tired due to intense thirst for water.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#17b. சுயம்வரம்

மஹாதேவி விஷ்ணுமாயை தோன்றினாள்
மஹாலக்ஷ்மியாக சுதர்சனனின் கனவினில்.

வந்தான் ச்ருங்கிபேரபுரத்து வேடராஜன்;
தந்தான் பல அரிய பெரிய பரிசுகளை.

திரவியங்கள், வீரக்கொடி – நான்கு
புரவிகள் பூட்டிய ரதம், பதாகைகள்.

ஆசிகள் தந்தனர் ஆசிரம முனிவர்கள்;
ஆசிகள் தந்தாள் பிரபஞ்ச மாயாதேவி.

“உதவ முன் வந்தான் வேடராஜன் இன்று.
உன் வசப்படும் உன் ரஜ்ஜியம் விரைவில்.”

மனோரமை மகிழ்ந்தாள் முனிவர் மொழிகளால்.
மஹா தபஸ்விகளின் வாக்குப் பொய்யாகுமா?

அந்த ரத்தத்தில் ஏறி சுதர்சனன் செல்கையில்,
மந்திர பலத்தால் ஒரு படையும் காட்சி தந்தது.

மந்திரத்தின் மஹிமையை உணர்ந்த சுதர்சனன்
முன்னிலும் அதிகமாக தேவியை தியானித்தான்.

மன்மத பாணங்களால் வருந்திய சசிகலையோ
முன்னிலும் அதிகமாக பிரேமித்தாள் அவனை.

மகளின் மாற்றத்தை உணர்ந்தான் சுபாஹு.
மகளின் சுயம்வரத்தை தானே நிச்சயித்தான்.

மண்ணுலக வேந்தர்களின் சுயம்வரம்
மூன்று வகைப் பட்டிருந்தன அப்போது.

மனத்தைக் கவர்ந்தவனை மணாளனாக
மணப்பெண் வரிப்பது இச்சா சுயம்வரம்.

பந்தயத்தில் வென்று மணமகளை மன்னன்
சொந்தம் ஆக்கிக் கொள்வது பந்தய சுயம்வரம்.

வீரத்தை நிலை நாட்டிக் கன்னியைக் கவர்வது
வீர சுயம்வரம் என்று பெயர் பெற்று இருந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#17b. Swayamvaram

Vishnu Maayaa appeared to Prince Sudarsanan as Lakshmi Devi. The chief of the hunters in Sringabera puram became a friend and gave several rich gifts to Sudarsanan such as a chariot with four horses, the flags and several other riches.

The sages gave him their blessings.They said, “The chief of the hunters has become your friend now. You will get back your father’s kingdom very soon”


Manorama became vary happy since the words spoken by the sages always proved to be true. Whenever Sudarsanan rode on the chariot he appeared to be surrounded by a big army of his own. He realized the effect of the Chanting of Devi’s mantra. He did Devi's mantra japam more sincerely than before.


Sasikala was suffering from the pangs of separation. Her father noticed the changes in her behavior and arranged for her swayamvarm. In those days swayavarams were of three different types.


In Ichchaa swayamvaram the bride chose her own husband from among the kings who had assembled. In the second type, the winner in the contest arranged by the parents of the princess, married her.

In the third type the bride was kidnapped by the prospective husband and he married her after defeating the opponents in a fight.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#9b. வசுதா தேவி (2)

"தாங்குவேன் அனைத்தையும் விளையாட்டாக!
தாங்க இயலாது சில விசேஷப் பொருட்களை !

முத்துச் சிப்பி, சிவலிங்கம், தேவியின் பிம்பம்,
புத்தகம், சங்கு, தீபம், விஷ்ணுவின் பிம்பம்,

யந்திரம், ஜபமாலை, துளசி, மலர் மாலை,
யக்ஞ சூத்திரம், மாணிக்கம், வைரம், பொன்;

சந்தனம், தீர்த்தம், குரோசனம் மற்றும்
சாலிக்ராமம் போன்ற உயரிய வஸ்துக்களை!

வைக்க வேண்டும் இவற்றை ஆசனங்களில்;
வைத்தால் வருந்துவேன் என் மீது நேரடியாக!"

வசுதா தேவி உரைத்தாள் விஷ்ணுவிடம்;
வசுதா தேவிக்கு வரம் அளித்தார் விஷ்ணு.

"ஆசனத்தின் மீது அரிய பொருட்களை வைக்காத
அறிவிலி சென்றடைவான் கால சூத்திர நரகத்தை!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVIBHAAGAVATAM - SKANDA 9

9#9b. VasudhA devi (2)

VasudhA Devi spoke to VishNu thus: “O Lord! By Thy command I will support easily on my back this whole world of moving and non-moving things. But there are certain auspicious articles which will hurt me - if placed directly on me!

Fine Pearls, small shells, SAlagrAm, Sivalingam, the images of the goddesses, conch-shells, deepams (lights), the Yantras, precious gems, diamonds, the sacred poonool or upanayana threads, flowers, books, the Tulasi leaves, the string of sacred beads (Japa mAlA), the garland of flowers, gold, camphor, GorochanA, Sandal and the holy theertam after washing the SAlagrAma stone.

I will not be able to bear these articles. I will suffer a lot in case these are placed on me directly.”

BhagavAn said : “O beautiful Devi! The fools who will place these auspicious articles on you directly will go to the KAlasootra Hell and be tormented for one hundred divine years!"

 
BHAARGAVA PURAANAM - PART 1

#12b. ருக்மாங்கதன்-2

முனிவரின் ஆசிரமம் தென்பட்டது அங்கு,
இனிய ஆசிரமம் முனிவர் கவியுடையது.

முனிவர் சென்றிருந்தார் சீடருடன் வெளியே
தனித்து இருந்தாள் முனிபத்தினி முகுந்தை.

உல்லாசமாக நந்தவனத்தில் இருந்தவளை
மெல்ல அணுகினான் ருக்மாங்கத அரசன்.

“தாயே! வீமராஜனின் புதல்வன் நான்;
தாகத்துக்கு தரவேண்டும் நல்ல குடிநீர்.

துஷ்ட மிருகங்களை வேட்டையாடினேன்!
கஷ்டம் தருகின்றன தாகமும், களைப்பும்.”

அத்தனை அழகான மனிதனை முகுந்தை
அதுவரை கண்டதில்லை வாழ்க்கையில்.

முனிவர் என்றாலே தாடியும், மீசையும்.
முனிவர் என்றாலே நகமும் மரவுரியும்.

நாணத்தைத் துறந்தாள் காம வயப்பட்டு!
தாபத்தைச் சொன்னாள் ஆணழகனிடம்.

ஆடைகள் நெகிழ, ஆசைத் தீ பெருக,
ஆடவர் மயங்க நின்றாள் முகுந்தை.

கண்களை மூடிக் கொண்டு கூறினான்,
“பெண்களில் உயர்ந்த நீங்கள் என் தாய்!

சோதிக்க வேண்டாம் தாயே என்னை!
பாதிப்பு அழித்துவிடும் இருவரையும்.

முனிவரின் மனைவியான தாங்கள் என்
இனிய தாயினும் மேலானவர் அம்மா!”

“என்னை ஒருமுறை ஏறிட்டுப் பார் நீ!
உன்னை சுகித்தாலன்றித் தீராது தாபம்!

சோதனை செய்யாதே மேலும் மேலும்,
வேதனை தாங்காது என் விரஹதாபம்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - PART 1

12 b. RukmAngathan – 2

RukmAngathan saw an ashram nearby. It belonged to Sage Kavi. He had gone out with his disciples. His wife Mukundai was all alone in the flower laden garden, in a merry mood.

The king approached her with great respect and introduced himself as the son of King Beema RAjan. He requested for a drink of cool refreshing water.


Mukundai had never cast her eyes on such a handsome, impressive and strong man before. She felt lust burning inside her a bonfire.

She invited him to enjoy her beauty and youth. She stood there with her dresses disheveled and in a manner no man can resist.


The king covered his eyes and spoke to her, “You are a rushi patni. So you are like a mother to me. The thing you are suggesting will destroy both of us. Please come to your senses”

But Mukundai was determined to possess him at any cost. She told him,”Just look at me once and try to say “No!” to my invitation. My desire for you will never be satisfied unless we enjoy together.”
 

Latest ads

Back
Top