• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8b. வருங்கால நிலை (2)

ஆவர் அடிமைகள் ஆடவர் பெண்டிருக்கு;
ஆடவரை தண்டிப்பர் வீட்டில் பெண்டிர்!

ஆவாள் மனைவியே வீட்டின் எஜமானி;
ஆவான் கணவன் வீட்டின் பணியாள்!

தந்தை ஊழியம் புரிவான் பிள்ளைக்கு!
பந்துகளுடன் இராது ஓட்டோ உறவோ!

பந்தாடுவார் கணவனை மனம் போல் - மனைவி
பந்துக்கள், மித்திரர், சம்பந்தம் உடையவர்கள்!

தன்னிச்சையாக செயல்புரிய இயலாது
தன் மனைவி பேச்சை மீறிக் கணவனால்!

நான்கு வர்ணத்தவர் செய்யார் தம் தொழிலை!
நான்கு வர்ணத்தவர் செய்வர் பிறர் தொழிலை!

கீழோருக்குப் பணிபுரிவர் மூன்று வர்ணத்தவர்;
தாழ்ந்த தொழில் செய்து வருந்துவர் உடலால்!

அழிந்தொழியும் சந்தியா வந்தனம் முதலியன;
அழிந்தொழியும் யக்ஞசூத்திரம் முதலியன;

இருக்காது பூமியில் பயிர்! மரங்களில் பழம்!
பெண்களிடம் பிள்ளைகள்! பசுவிடம் பால்!

பாலில் வெண்ணை! தம்பதியினரிடம் அன்பு!
இல்லறத்தில் நல்லறம்! அரசரிடம் நற்பண்பு!

வரி செலுத்த இயலாது பொது மக்களால்!
வற்றி விடும் நதிகள், குளங்கள், ஏரிகள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

P.S:

I AM APPALLED BY THESE DIRE PREDICTIONS WHICH ARE 100%

ACCURATE!!! NOBODY CAN DESCRIBE OUR PRESENT DAYS BETTER

THAN THIS!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8b. Kali PrabhAvam (2)

Husbands will be obedient to their wives. Unchaste women can be found in every house. Wives will rebuke and chide their husbands with harsh words.

The wife will be the mistress of house and her husband will stand before her with folded arms. Fathers-in-law and mothers-in-law will become the servants of the household.

The wife's brothers and friends will manage the household affairs. But there will be no friendship with one's own kin and kith who will slowly become total strangers.

Without the consent of the wife, the master of the house will be unable to do anything. The divisions of caste and varNAs will disappear completely. The Brahmins will cease even to have the holy threads on their bodies.

The three varnAs will become the slaves of fourth varNa and serve them as his cooks and men servants. Truth will perish and falsehood flourish.

Earth will not yield any grains; trees will not yield any fruits and women will not bear any children. The cows will not yield milk and the milk will not yield butter and ghee.

The affection between husband and wife will die out. The King will not wield any power; the subjects will be over burdened with taxes. The perennial rivers, the petty streams, lakes and ponds will all dry up.


 
BHAARGAVA PURAANAM - PART 1

#10d. வல்லாளன்-4

“மகன் கதி என்ன ஆயிற்றோ?” என்று
மகனைத் தேடி ஓடினாள் தோப்புக்கு.

மற்ற பெண்களும் ஓடினர் தொடர்ந்து
குற்ற உணர்ச்சி வாட்டி வதைத்ததால்.

வாரணக் கடவுளின் பாறை நின்றது
சீராகச் சாத்திய பூ மாலைகளுடன்!

எப்படி மறைந்தன அடிபட்ட ரணங்கள்?
எங்கும் ரத்தச் சுவடு கூட இல்லையே!

கட்டி அணைத்துக் கண்ணீர் விட்டாள்
கட்டிய கணவனுக்கும் பெற்ற மகனுக்கும்.

“தவறான பாதையில் செல்லும் மகனை
தவறாகுமோ ஒரு தகப்பன் கண்டிப்பது?

சிறிய பிழைக்கு பெரிய தண்டனையா?
சிறுவன் உன்னால் இதை மாற்ற முடியும்!

உன் தந்தையின் துயர்களைத் துடைக்க
உன்னால் மட்டுமே முடியும் மகனே!”என

“தாயும் தந்தையும் ஆவார் இறைவனே!
மாயையே மற்ற உறவுகள் அனைத்தும்.

அபச்சாரம் அளித்தது கொடிய தண்டனை!
அடுத்த பிறவியிலும் தொடரும் தண்டனை!

கமலையாகப் பிறந்து வல்லவராஜனின்
கர்நாடக அரசனின் ராணி ஆகிவிடுவாய்.

தவறு இழைத்த தந்தை உன் மகன் ஆகித்
தவிப்பார் முப்பெரும் உடற்குறைகளால்.

கானகம் ஏகுவீர்! கடுந்துயர் அடைவீர்!!
கணக்குத் தீர்ந்ததும் நிலைமை மாறும்.

முத்கல முனிவரின் அருளால் மாறி விடும்
மூவகைக் குறைகளும் உடல் ரணங்களும்!”

தாய் அழைத்தும் செல்லவில்லை இல்லம்;
தாய் அனைய விநாயகர் தந்தார் விமானம்.

பொன் விமானத்தில் ஏறி கண நாதனிடம்
சென்றான் குழந்தை வல்லாளப் பெருமான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
BHAARGAVA PURAANAM - PART 1

10d. VallALan – 4


“What is the condition of my son?” Indumati ran to the garden to find out. All the other women followed her – since they were troubled by the pangs of their conscience.


The stone which was the vigraha of VignEswara was back in it place with all the flower garlands as before. There was no wound or blood on the body of the boy. He appeared more beautiful than before.


Indumati hugged him and shed copious tears. She told her son,” Your father was trying to correct your irresponsible behavior. Every father does it and it is not wrong. Should he be so severely punished for this ? You can talk to your God and reduce the severity of the punishment of your father. Only you can do it son!”


The boy replied,”God is the father and mother for every one of us. All the other relationships are not real. They are effects of MaAyAa.

My father got punished for his apachAram. The punishment will continue in his next birth also. You will be born as Kamala and marry VallavarAjan, the king of Karnataka to become his queen.


My father will be born as your son Dakshan with three major defects and bleeding wounds all over his body. You will be banished to the forest.

You will suffer a lot. When the effects of his evil deeds get exhausted, things will change to the better. He will get cured by the grace of Mudgala rushi.”


VallALan refused to go home with his mother Indumati. Later he was sent a vimaanam by Ganapthy. He was escorted to Lord GanEsa by His attendants.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#15c. மஹாபலி

தொடர்ந்து பேசினாள் மனோரமை – தனக்கு
இடம் அளித்திருந்த பரத்வாஜ முனிவரிடம்.

“விரோசன மன்னன் பிரஹலாதனின் மகன்;
விரோசனின் மகன் மஹாபலிச் சக்கரவர்த்தி.

பெருமை பெற்றவன், கொடை வள்ளல்;
தரும சீலன், பூ மண்டலத்தின் சக்கரவர்த்தி.

தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் செய்தான்;
தொடங்கினான் நூறாவது யாகம் புரிவதற்கு.

பகைமை இல்லை விஷ்ணுவுக்கு பலி மேல்;
பாழ் செய்தது ஏன் பலியின் யாகத்தினை?

குறு வடிவம் எடுத்துச் சென்றார் யாகசாலைக்கு.
தருமாறு கோரினார் தன் காலால் மூன்றடி மண்.

பெருவடிவால் அளந்தார் விண்ணை; மண்ணை!
திருவடியால் அனுப்பினார் பலியைப் பாதாளம்!

கள்ளத்தனம் செய்தார் விஷ்ணு பிரான்!
கள்ளத்தனம் செய்யாதவர் யார் உளர்?

பேராசை மிகுந்தவன் மன்னன் யுதாஜித்!
பேதை என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!”

வந்து விட்டான் ஆசிரமத்துக்கு யுதாஜித் – அங்கு
வரவில்லை மனோரமை எனச் சாதித்தார் பரத்வாஜர்.

“நீரே அவளை அனுப்புகின்றீரா? வலிமையால்
நானே அவளைக் கவர்ந்து செல்லவா?” என்றான்.

“வசிஷ்டரின் பசுவை விஸ்வாமித்திரர் செய்தாற்போல்
வலிமை இருந்தால் கவர்ந்து செல்!” என்றார் முனிவர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#15c. Mahaa Bali

Manorama continued talking to sage Bharatwaaj, who had given protection to her son Sudarshan and herself. “Virochanan was the son of Prahlaad. Virochanan’s valorous son was Mahaa Bali. He was as famous as he was valorous. He was a great king known for his generosity and good nature.


He had performed ninety nine yagnaas. When he started to perform his hundredth yagnaa, Vishnu went to him as Vaamana to spoil the yagna.

Vishnu had no enmity towards Bali and yet he ruined the yaagam by unfair means. He went to the yaaga saalaa as a young brahmachaari begging for three feet of land, measured with his own feet.


He grew up to the heavens and measured the heaven and the earth with his two steps. With the third step he pushed Mahaa Bali to Paataala logam. He played a trick to achieve his aim.

Who does not cheat in order to get what he wants? Yudaajit is a greedy king. Please do not forsake me oh sire!” She pleaded to sage Bharatwaaj.


Yudaajit reached sage Bharatwaaj’s ashram demanding that queen Manorama and her son prince Sudarsanan be handed over to him immediately. Sage Bharatwaaj swore that the queen and the prince were not there.

Then Yudaajit gave an ultimatum and said, “Will you hand over them to me or shall I capture them with my own might?”

The sage was unruffled and replied. “If it is within your power, you may capture them just as Viswaamitra captured Sage Vasishta’s cow!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8c. வருங்கால நிலை (3)

திரிவர் மனிதர் தர்மநெறிகள் எதுவும் இன்றி;
அரிது லக்ஷத்தில் ஒருவன் நல்லவனாவது!

கெட்ட நடத்தை கொண்டிருப்பர் அனைவரும்;
கெட்ட உருவம் கொண்டிருப்பர் அனைவரும்.

நஷ்டமாகும் கிராமங்களும், நகரங்களும்.
நஷ்டமாகும் வீடுகளும், ஊயிரினங்களும்.

பயிர் செய்வர் எரிகளிலும், குளங்களிலும்.
உயர் குலத்தவர் தாழ்வடைந்து விடுவர்!

அதிகரிப்பர் தீயவர், சூதாடிகள், பொய்யர்;
அற்பர்கள் ஆகி விடுவர் செல்வந்தர்கள்.

நாஸ்திகனாக ஆகிவிடுவான் ஆஸ்திகன்;
நகரவாசி ஆகிவிடுவான் கொடியவனாக!

குள்ளமாக இருப்பர் ஆண்களும், பெண்களும்,
குன்றிவிடும் ஆயுள் ஆண்கள் பெண்களுக்கு.

ருது அடைவாள் பெண் எட்டு வயதிலேயே!
வரும் கிழத்தனம் வயது முதிரும் முன்பே!

கன்னிகளை விற்பர் நான்கு வர்ணத்தவரும்;
அன்னையாவது அறிதாகும் பெண்களுக்கு.

வீட்டுப் பெண்கள் ஈட்டி வரும் பொருளில்
நாட்டம் கொண்டு அலைவர் ஆண் மக்கள்.

விற்பனை ஆகும் விபச்சாரம் அமோகமாக!
விற்பனை ஆகும் இறைவனின் நாமம் கூட!

தானம் கொடுப்பர் பெயர் புகழ் பெற்றிட - பின்பு
தானத்தைப் பறிப்பர் கொடுத்தவரிடமிருந்தே!

ஆலயங்கள், அந்தணர்கள், ஆசிரியர்கள்
அலமந்து நிற்பர் செல்வதைப் பறிகொடுத்து!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
இறைவன் இருக்கின்றானா இல்லையா என்று :decision:

இன்றும் நம்பாமல் ஆராய்ச்சி செய்கின்றோம்! l:susicious:


ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே கண்களால்

மெய்யாகக் கண்டது போல விவரித்தது எப்படி??? :wacko:
 
VISION is what helps man to see things in the past / present / future!

Obviously and shockingly VISION does NOT depend on the physical eyes!!!

It is emotional experience which only the elite and elevated people can experience!

As for the others the eyes are used ONLY for reading / watching forbidden things!!!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8C. Kali PrabhAvam (3)

The Four VarNAs will be devoid of justice and virtue. One person in one lakh persons may be virtuous. Men, women, boys and girls will be ugly and deformed. They will utter foul words and make vile sounds.

Some villages and towns will be completely deserted by men and women. In some others a few cottages with a few inhabitants will be seen. Villages and towns will become jungles and jungles will become filled with men
.

The river beds and lake bottoms will become dry owing to the failing of rains. Crops will be cultivated there also. The great families will become very low in status. The whole earth will be filled with liars, cheats and hypocrites.

The rich will become poor and those who are devoted to the Gods will be atheists. The towns folk will have no trace of mercy and will be filled with jealousy.

In the Kali age, males and females will be dwarfish stature, diseased, short lived and lack virility. Their hair will turn grey while they are very young. They will feel very old by the time they become twenty years of age.

The girls will attain puberty at eight years and become pregnant very early. They will deliver every year and become old by the time they are sixteen years of age. Some lucky women will have their husbands and children. Otherwise most of the women will be barren and childless.

The four VarNAs will sell their daughters. The paramours of the mothers, wives, son's wives, daughters, and sisters will be the source of support to them. Persons will make gifts for name and fame and ultimately will take back what they had made as gifts.

The gifts given to the Gods, Brahmins and Teachers may be taken back leaving them helpless and sad!



 
BHAARGAVA PURAANAM - PART 1

#11a. அரசு பரிசு-1

முத்கல முனிவர் ஆசியுடன் சென்றனர்
தக்கனும் கமலையும் கௌண்டின்யபுரம்;

நந்தவனம் ஒன்று தென்பட்டது அழகாக;
தந்தியின் ஆலயம் தடாகத்தின் கரையில்;

தகுந்த இடம் இதுவே என்று உணர்ந்தான்;
மிகுந்த பக்தியுடன் ஏகாக்ஷரம் ஜபித்தான்.

உருண்டு ஓடின பன்னிரண்டு ஆண்டுகள்!
இருபது நாள் ஆலயத்தில் கணேச பூஜை!

அருமையான கனவு ஒன்று தோன்றியது,
இருபத்தி ஓராம் நாள் பக்தன் தக்கனுக்கு.

ரத்தினங்களும், பட்டாடையும் அணிந்து
உத்தம யானை ஒன்று நடந்தது வீதியில்!

உயரத் தூக்கிய அதன் துதிக்கையில்
ஊஞ்சலாடியது அழகிய மலர் மாலை!

மந்திரிகள், பிரதானிகள், பின்தொடர
விந்தை புரிந்தது கனவில் வந்த யானை;

நேராகத் தயங்காமல் அவன் அருகே வந்தது
சீராக மாலையை தக்கனுக்கு அணிவித்தது!

கனவில் எழுந்த கரவொலி ஓசையில்
கனவு கலைந்து எழுந்தான் தக்கன்.

நனவு போலவே தோன்றியது கனவா?
நம்பவே முடியவில்லை அது கனவு என.

கமலையிடம் தன் கனவினைக் கூறக்
“கவலை தீரும் நேரம் வந்தது கண்ணே!

பொய்க்காது விநாயகரின் அருள் வாக்கு
மெய்யன்போடு துதிப்பவர்களுக்கு” என்றாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - PART 1

11a. The gift of kingdom – 1


Kamala and Dakshan went to KouNdinya puram with the the blessings of Mudgala rushi. They saw a serene and peaceful garden. On the bank of the pond in it was a temple dedicated to Lord GanEsa. Dakshan felt that it was the right spot to do his penance.


He started chanting EkAksharam with full devotion. Twelve years rolled by. He performed pooja in the temple for another twenty days. On the twenty first day he had a wonderful dream.


A huge elephant decorated in silk and gem studded ornaments was walking down the street. It held high a beautiful flower garland in it trunk. It was followed by the ministers and other important persons.

It walked straight to Dakshan and put the garland around his neck. Everyone following the elephant applauded. The noise of the applause woke him up and Dakshan could not believe that it was just a dream. It looked and felt so real!


He woke up his mother and told her of his strange dream. She was happy and told him, “You are going to get the gift of kingdom. VinAyaka’s blessings will never fail for one who is sincerely devoted to him”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#16a. காமதேனு

புத்தி வரவில்லை இதைக் கேட்டதும் யுதாஜித்துக்கு.
யுக்தியை ஆராய்ந்தான் மனோரமையைக் கவர்ந்திட.

அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்தான் – “முனிவர்
அமைதியாக ஒப்படைக்கமாட்டார் அவ்விருவரையும்.

பலவந்தமாகக் கவர்ந்து செல்ல வேண்டும் நாம்
பலவீனமான எதிரி இருப்பதும் கூட ஆபத்து.

அநாதை இளவரசன் சுதர்சனனை ஒழித்தால்
அனாயாசமாக அரசாள்வான் என் சத்ருஜித்!”

அறிந்து கொண்டனர் அமைச்சர்கள் – அரசன்
அறிந்திலன் விசுவாமித்திர முனிவரின் கதையை.

அளவற்ற ஆத்மபலம் பெற்றவர்கள் முனிவர்கள்.
விளக்கினர் இதை யுதாஜித்துக்கு விளங்கும்படி.

“பூர்வத்தில் விசுவாமித்திரர் மிகப் பெரிய வேந்தன்;
ஆர்வத்துடன் அடைந்தார் வசிஷ்டரின் ஆசிரமத்தை.

விருந்து அளித்தார் வசிஷ்டர் மன்னனின் சேனைக்கு,
விரும்பிய உணவைக் காமதேனுவின் உதவியுடன்!

கண்டதை கைக் கொள்வது மன்னருக்கு எளிது!
வேண்டும் காமதேனுப் பசு தனக்கே இனிமேல்!

“ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன் வசிஷ்டரே!
அற்புதக் காமதேனுவுக்கு ஈடாக உமக்கு நான்!”

“ஹோம யாகங்களுக்கு உதவிடும் பசு இது!
காமதேனுவைப் பிரிய சம்மதியேன் நான்!”

“ஆயிரம் பசுக்கள் போதாதோ உமக்கு?
ஆயிரம் ஆயிரம் பசுக்களைத் தருவேன்!

தந்துவிடுங்கள் காமதேனுவை எனக்கு – நான்
இந்தப் பசு இன்றிச் செல்லேன் இங்கிருந்து”

“மனப் பூர்வமாகத் தரவே மாட்டேன் பசுவை;
முடிந்தால் முனைந்து கவர்ந்துசெல் மன்னா!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#16a. Kaamadhenu


King Yudaajit did not understand the significance of this statement. He planned a scheme to get hold of Manorama and Sudarsanan, with the help of his ministers. He told them,


“It appears that sage Bharatwaaj will not hand over the queen and her son. We must capture them using our power. The enemy may appear to be weak, small and insignificant but all the same, we have to get rid of him as soon as possible. With Sudarsanan out of his way, my grandson Satrujit will be free from dangers” King Yudajit told his ministers.

His ministers understood that their king was ignorant about the tussle between Viswaamitra also called as Kousika and Vasishta. They knew the spiritual strength of the sages and rushis. They explained the strory of Viswaamitra to Yudaajit.


Viswaamitra was a great king before he became a sage. He visited the ashram of Vasishta along with his army. Vasishta gave him and his men a warm welcome. With the help of Kaamadhenu, he fed the army a sumptuous feast.

Viswaamitra wanted to posses the divine cow Kaamadhenu for his own use. He was ready to give one thousand cows in exchange for Kaamadhenu but Vasishta would not part with his cow.


Now Viswaamitra offered a thousand times thousand cows in exchange. Yet Vasishta refused his offer. Viswaamitra told Vasishta “Either you part with your cow willingly or I will have to take it away by sheer force”


Vasishta told Kousika, “If possible you may take away the cow by using your force, Oh King!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8d. வருங்கால நிலை (4)

கூடுவர் வீட்டுப் பெண்டிரை பேதமின்றி ஆண்கள் - விட்டு
விடுவர் பெருந்தன்மையோடு தன் பெற்ற தாயை மட்டும்!

வரைமுறை இருக்காது இவனுக்கு இவள் மனைவி என.
வரைமுறை இருக்காது இவளுக்கு இவன் கணவன் என.

செய்வர் களவு, கொலைகள் நான்கு வர்ணத்தவர்களும்;
மெய்யாகவே இராது பேதம் நன்கு வர்ணத்தவர்களிடம் .

போதை தரும் பானங்கள் விற்பனையாகும் அமோகமாக
போதை அடைவர் கடை நிலை மகளிரைக் கூடிக் குலவி!

அமாவாசை இரவிலும் உண்பர் அன்னம் வழக்கம்போல.
அநாயாசமாகக் கைவிடுவர் நன்மை தரும் கர்மங்களை.

அழிந்து விடும் நான்கு ஆசிரமங்களின் வரை முறைகள்.
அழிந்து விடும் அவற்றுக்கு விதிப்பட்டுள்ள நியமங்கள்.

ஆகிவிடுவார் மிலேச்சர்களாக நான்கு வர்ணத்தவரும்;
ஆகிவிடும் வெறும் ஒரு கையளவு உயரமாக மரங்கள்.

ஆகிவிடுவார் மனிதர்கள் வெறும் கட்டை விரல் உயரம் .
அழிப்பார் கல்கி மிலேச்சர்களை மூன்றே இரவுகளில்!

திரிவர் கள்வர்கள் ஆள்பவர்களிடம் அச்சம் இன்றி;
பொழியும் கனமழை ஆறு நாட்கள் இடைவிடாது!

அழித்துவிடும் கனமழை சிருஷ்டி முழுவதையும்!
உதித்து உலரச் செய்வர் பன்னிரண்டு ஆதித்யர்கள்.

முடிந்துவிடும் கலி யுகம் இந்த நிகழ்வுடன்;
தொடரும் அதன் பிறகு கிருத யுகம் பிறந்து.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
HOW DID THEY FORECAST TODAY'S SITUATION SO LONG LONG AGO? :dizzy:

LIBERATION FROM BONDAGE OF MARRIAGE!

LIBERTY TO DROWN IN INTOXICATING LIQUORS!

LIBERTY OT EAT THE NISHIDDHA PATHAARTHAM!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8d. Kali PrabhAvam (4)


Some men will abuse their own daughters, some others their mothers-in-law, some men will abuse the wives of their sons, some others their own sisters, some men will abuse the mothers of their co-wives, some others their brother's wives.

In every house, those who are prohibited to be mixed with will be mixed with indiscriminately by the men - excepting one's own mother. In Kali Yuga it will not matter who is whose wife or who is whose husband! There will be no surety that such and such a property belongs to such and such a man.

All men will become liars, licentious in their behavior, thieves, envious of the wives of the other men, and murderers of men. They will live by selling lac, iron and other things prohibited by the SAstras.

Brahmins will go to unchaste lowly women and not observe AmAvAsya NishipAlana. Their holy threads will be cast away. SandhyA Vandanam and the other rules laid for personal cleanliness and all the good practices will disappear altogether.

There will be no distinction of food or of wombs or of the four Ashrama, or of persons. All will turn out to be Mlechchas. The whole world will be filled with Mlechchas. The trees will become just one hand high and the men will become of the size of a thumb.

Then BhagavAn NArAyaNa will incarnate as Kalki. Mounted on a mighty horse and wielding a sword with a long blade, he will free the world of the Mlechchas in just three nights. Then he will disappear from the face of the Earth.

Earth will be without any ruler and become filled with fearless robbers. There will be incessant rain, for six nights and the whole earth will be deluged. All the men, all the houses, and all the trees will be washed away.

After this the Twelve Suns will rise simultaneously and by their brilliant rays all the water will get dried up and the earth will become leveled once again.

Thus the dreadful Kali will pass away when the Satya Yuga will return.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#11b. அரசு பரிசு-2

சந்திரசேனன் கௌண்டிண்யபுர அரசன்.
சந்ததி இல்லாமல் இறந்தான் அரசன்

அரசன் இலா நாடு கணவன் இலா வீடு!
அரசுக் கட்டில் ஏற ஒரு வாரிசு தேவை.

ஈமக் கடன்களை முடித்த அமைச்சர்கள்
தாமதமின்றிச் சென்றனர் அரசியிடம்,

“துக்கத்தில் ஆழ்ந்துள்ளீர்கள் தாயே!
துக்கத்தில் பங்கு கொள்கிறது நாடு!

அரசனின் வாரிசைத் தேர்வு செய்ய
அரசியின் அனுமதி வேண்டும்!” என

“நீங்கள் அறியாததை நான் அறிவேனா?
நீங்களே செய்யுங்கள் சாத்திரப்படி!” என,

“பட்டத்து யானையை அலங்கரிப்போம்
திட்டப்படி மாலையை அளித்திடுவோம்!

அரசுப் பதவிக்கு தகுந்தவனைத் தேடி
அரசனின் யானை பூ மாலை இடும்”

கணித்தனர் நல்ல நாளும், பொழுதும்.
பணித்தனர் பட்டத்து யானையிடம்,

“ஊர் முழுவதும் சென்று நீ தேடுவாய்!
யார் புது அரசனோ மாலை போடுவாய்!”

ஊர் மக்கள் அனைவரும் அன்று வீதியில்
“யார் அதிர்ஷ்டசாலி?” அறிய வேண்டுமே!

யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை!
நேராகச் சென்றது விநாயகர் ஆலயம்.

தக்கனைக் கண்டதுமே நெருங்கியது
மிக்க ஆதரவுடன் இட்டது மாலையை.

மண்டியிட்டுப் பிளிறி மகிழ்ந்தது யானை
மண்ணை ஆள மகாராஜன் கிடைத்ததால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - PART 1

11b. The gift of kingdom


ChandrasEnan was the king of KoundiNya puram. He had no heir to rule the kingdom after him. He had died on that day. A nation must have a ruler. After the cremation and rituals, the ministers went and met the queen. They sought her permission to find a new king.


When she gave her consent, the king’s royal elephant was entrusted with the task of finding the new king to the country. The elephant was decorated in silks and with precious ornaments.


An auspicious day and time were selected. A flower garland was given to the elephant. It had to locate a person who would be crowned the new king.


The whole population was on the road – wishing to know whom the elephant would select. The royal elephant did not stop to look at any one. It marched straight to the temple of Vinayaka.

The moment it saw Dakshan, it put the garland around his neck, bowed before him and trumpeted triumphantly. It appeared to be happy that its mission was competed successfully.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#16b. விஸ்வாமித்திரர்

பலவான்களாகிய தானைத் தலைவரைப் பணித்தான்,
“பலவந்தமாகக் கவர்ந்து செல்லுங்கள் பசுவை” என்று.

தெய்வப் பசு என்று தெரியவில்லை வீரர்களுக்கு.
கையால் பற்றி இழுக்கத் தொடங்கினர் பசுவை.

நடுங்கியது காமதேனுவின் உடல் அச்சத்தால்;
நடுங்கியது காமதேனுவின் குரல் அச்சத்தால்.

“என்னைக் கைவிட்டு விடாதீர்கள் தவமுனிவரே!”என
“உன்னைக் கைவிட முடியுமா கூறு காமதேனுவே!

உபசாரம் செய்தேன் விருந்துணவு படைத்து!
அபசாரம் செய்கின்றான் பிரதி உபகாரமாக!

உன்னால் காத்துக் கொள்ள முடியும் உன்னை!
உன்னால் முடியாதது எது என்று கூறு!” என்றார்.

அச்சம் நீங்கிக் காமதேனு ஹூங்காரமிட – ஓர்
அச்சம் தரும் படை தோன்றியது அதனிடமிருந்து.

ஆயுதம் ஏந்திய அந்தப் படை வீரர்கள்
பாய்ந்தனர் அரசனின் படையினர் மீது.

உணர்ந்தான் கௌசிகன் புஜ வலிமையை விட
உண்மையில் தவ வலிமை சிறந்தது என்பதை.

திரும்பிச் செல்லவில்லை தன் நாட்டுக்கு.
விரும்பினான் பிரம்மன் தேஜசைப் பெற.

கடும் தவம் புரிந்தான் நெடுங்காலம்
அடைந்தான் இறுதியில் தவவலிமை.

முனிவரைப் பகைப்பது இனிமை பயக்காது
முனிவரின் கோபம் விளைவிக்கும் சாபம்.

"பொன், பொருள், இல்லாத வெறும் சிறுவன்
மண்ணாளும் வாய்ப்பில்லை அன்றோ அரசே!

பலவீனமான சிறுவனை பகையாளி என்று
பலி கொடுப்பது ஆண்மையற்ற செயல்!”

ஏற்றான் அமைச்சர்களின் ஆலோசனையை.
போற்றி விடை பெற்றான் பரத்வாஜரிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#16b. ViswAamitra

King Kousika ordered his army men to take away the cow KAmadhenu by force. Those men dd not know that it was a divine cow and applied sheer force and tried to take it away.

KAmadhenu got terrified and spoke to the sage Vasishta in a trembling voice, “Oh sage! Please protect me. Do not forsake me!”


Vasishta replied, “How can I forsake you KAmadhenu? I did a service to the king by feeding him and his army. He is returning the favor in this ungrateful manner. I am sure you have the power to protect yourself. You can do anything you want to do. You know that”


KAmadhenu overcame it fear and did a loud hoonkAram. A terrible army of soldiers emerged from the cow. These soldiers were armed and brave. They fought the army of King Kousika and defeated them.

Kousika realized the power of penance and decided to earn as much of it as he wanted to. He did not go back to his kingdom but went instead to do penance.

After many disturbances and distractions he finally achieved Brahma tejas by his penance. So do not underestimate the power of the sages looking so humble and simple.”


YudAjit listened to the words of wisdom of his ministers. He took leave of sage BharatwAj and returned to his country.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8e. வருங்கால நிலை (5)

கிருத யுகம் பிறக்கும் சத்வகுண மயமாக;
தருமங்கள் நடைபெறும் முழுமையாக!

உத்தமர்கள் ஆவார்கள் எல்லா ஆடவரும்.
பத்தினிகள் ஆவார்கள் எல்லாப் பெண்டிரும் .

செங்கோல் ஓச்சுவர் நடுநிலை அரசர்கள்;
செம்மை நிலவும் செய்யும் செயல்களில்.

ஆவல் கொள்வர் வைசியர் வாணிபத்தில்;
ஆவல் கொள்வர் சூத்திரர் தம் கருமத்தில்.

பக்தி நிலவும் தேவியின் திருவடிகளுக்கு;
பக்தி நிலவும் தேவியின் மந்திரங்களுக்கு.

ஆராய்வர் ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராணங்களை.
அறநெறி நிலவும் முழுமை அடைந்ததாக!

முக்கால் பங்கு ஆகும் திரேதா யுகத்தில்;
அரைப் பங்கு ஆகும் துவாபர யுகத்தில்;

கால் பங்கு ஆகிவிடும் கலி யுகத்தில்!.
காலங்காலமாக நடப்பது இது போன்றே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#8e. End of Kali yuga

TapasyA and Sattva GuNA will prevail again. The BrAhmins will do TapasyA, they will be following Dharma and the Vedic concepts. The women will be chaste and religious in every house.

The wise and intelligent Kings will occupy the royal thrones. Because of their might, valor and devotion to Dharma good deeds will increase. The Vaisyas will again go on with their trades and the fourth VarNA will be virtuous, and serve the other three VarNAs.

All men and their families will have Bhakti towards the Devi. They will be initiated in Devi Mantras and meditate on the Devi. The knowledge of the Vedas, the Smritis and the PurANAS will spread.

No Adharma will exist and the Dharma will reign in its full glory. When the TretA Yuga comes, the Dharma will become three fourth in its original glory.

When DwApara Yuga comes Dharma will reduce to two-fourth of its original glory. When Kali begins Dharma will dwindle to one-fourth of its original glory.

When Kali will reign supreme, no Dharma will exist.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#11c. அரசு பரிசு-3

அமைச்சர்களும் வணங்கினர் பணிந்து;
“எமை கௌரவித்துப் பதவி ஏற்பீர்!” எனத்

தாயும் மகனும் அமர்ந்தனர் யானை மேல்!
பாயும் மகிழ்ச்சி வெள்ளம் தந்தது உற்சாகம்!

ஆரத்தி சுற்றிக் குதூகலித்தனர் நகர மக்கள்;
வரைந்தனர் வண்ணக் கோலங்கள் மகளிர்.

அரசி காத்திருந்தாள் அரண்மனை வாயிலில்.
அரசியைப் பணிந்தனர் தக்கனும், கமலையும்.

முடிவு செய்யப்பட்டது முடிசூட்டு வைபவம்;
முத்கல முனிவரை மறக்கவில்லை தக்கன்.

பல்லக்குச் சென்றது பரிவாரங்களுடன்;
பத்திரமாக முத்கலரை அழைத்துவர!

பூர்ண கும்பங்களுடன் எதிர் கொண்டான்
ஆர்வத்துடன் தொழுதான் அவரை தக்கன்.

“ஏகாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்தீர்!
ஏகாக்ர சிந்தையுடன் உருவேற்றி வந்தேன்.

இத்தனை பெரிய பாக்கியத்தின் காரணம்
உத்தம முனிவர் ஆகிய தாங்களே!” என;

நல்ல நேரத்தில் மணி முடி சூட்டினார்
நலம் விரும்பும் நல்ல முத்கல முனிவர்

கோலாகலம் பொங்கியது நாடெங்கும்
குதூகலித்தனர் கௌண்டின்யபுர மக்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 

Latest ads

Back
Top