• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#17c. அரசன் அறிவுரை

சுயம்வரவிழா ஏற்பாடுகள் செய்தான் சுபாஹு;
சபா மண்டபங்களை நிர்மாணித்தனர் சிற்பிகள்.

தோரணங்கள், ஆசனங்கள், அலங்காரம் என
ஏராளமாகச் செலவிட்டான் திரவியங்களை.

தன்னிடம் கேளாமலேயே தந்தை ஏற்பாடுகளைத்
தன்னிச்சையாகச் செய்வது கண்டாள் சசிகலை.

அந்தரங்கத் தோழியை அழைத்தாள் சசிகலை
தன் அந்தரங்கத்தை உணர்த்தினாள் அவளுக்கு.

“வரித்துவிட்டேன் சுதர்சனனை மணளனாக
புரியேன் திருமணம் வேறு ஒரு அரசனோடு!

அறிவிப்பாய் என் உள்மனக் கருத்தினை
அரசன் அரசியர் உணரும்படி!” என்றாள்.

“தேவி ஆணையிட்டாள் கனவில் வந்து
தேவி பக்தன் அவனையே மணக்குமாறு.”

தக்க தருணம் நோக்கி இருந்தாள் தோழி;
மிக்க கவனமாக எடுத்து உரைத்தாள்.

மனநிலையை அறிந்த அரசி – மகளின்
மனநிலையை அறிவித்தாள் அரசனுக்கு.

“அறியாத சிறுமி நம் மகள் சசிகலை – ஏதும்
தெரியாமல் பேசுகின்றாள் வாழ்வைப் பற்றி!

கூறியவள் அவள் என்பதால் தோழியும்
கூறுகிறாள் இவற்றை உனக்கு விரிவாக.

பெரிது படுத்தி இதை நீயும் என்னிடம்
பரிந்து உரைக்கின்றாய் அல்லவா ராணி?

தன்னந் தனியனாகக் காடாள்கிறான் சுதர்சனன்
தருவேனா பெண்ணை ஏதும் இல்லாதவனுக்கு?

வருவார்கள் அத்தனை தேசத்து அரசர்களும்!
வரிக்கட்டும் சிறந்த ஒருவனைக் கணவனாக!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#17c. The king’s advice

King Subaahu attended to the arrangements of the swayamvaram of Princess Sasikala. No expenses were spared in constructing the wedding hall, the decorations and the gem studded seats for the kings who would be the guests.

Sasikala watched the arrangements being made without consulting her first. She spoke to her dearest friend and told her.

“I have chosen to marry Sudarsanan. I can’t marry anyone else. Devi also told me to wed Sudrsanan – her ardent devotee. Please speak to the king and queen and make them understand my true feelings”

The friend waited for the most opportune moment and spoke to the queen. The queen conveyed the true feelings of their daughter to the king. The king laughed at this argument and told his queen,

“Our daughter is very innocent and ignorant of the worldly proceedings. Since these were the words of the princess, her friend had conveyed all this to you with utmost sincerity.

You are exaggerating the trivial matter to me. Talk to our daughter and tell her to select one the many worthy kings who will be attending the swyamavaram.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#9c. வசுதா தேவி துதி

"வெள்ளைத் தாமரை நிறத்தவளே!
களங்க மில்லா நிலவு முகத்தவளே!

சந்தனம் பூசிய அங்கம் உடையவளே!
இரத்தின அணிமணிகள் பூண்டவளே!

கர்ப்பத்தில் ரத்தினங்களை உடையவளே!
அக்னி தூயதாக்கிய ஆடை அணிந்தவளே!

ஜலத்தை தியானத்தாலும் அளிப்பவளே!
ஜலத்தின் ஸ்வரூபமாக இனிப்பவளே !

ஜலத்துக்கு ஆதாரமாக இருப்பவளே!
ஜலத்தைப் போல் தூய்மை தருபவளே!

யக்ஞ வராஹ ரூபியின் பத்தினியே!
யாவற்றிலும் வெற்றியை அளிப்பவளே!

நலன்களுக்கு ஆதாரம் ஆனவளே!
நல்ல பல சக்திகள் உடையவளே!

சகல விருப்பங்களை அளிப்பவளே!
சகல புண்ணிய வடிவம் ஆனவளே!

பயிர்களுக்கு இருப்பிடம் நீயே!
பயிர்களின் உருவானவள் நீயே!

எல்லாப் பொருட்களின் வடிவானவளே!
எல்லா சுகத்தையும் அள்ளி அளிப்பவளே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

பயன்

பிறப்பான் காலையில் துதிப்பவன்
பிற்பாடு மன்னனாக, பலசாலியாக!

நீங்கும் பூதானம் வாங்கிய பாவம்!
தாங்கும் பூதானம் தந்த புண்ணியம்!

பூமியைக் கவர்தல், கிணறு வெட்டுதல்,
பூமிமேல் எரியும் தீபத்தை வைத்தல்;

பூமியின் மேல் இந்திரியத்தை விடுதல்;
பூமிக்கு இழைத்த பாவங்கள் நீங்கும்!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#9c. Vasudha Devi stuti

"O Giver of Victory! Holder of water! Consort of Vishnu's Incarnation as a boar! Bestow victory on me.

You are the Auspicious One! You are the Store-house of everything good. You are the personification of all auspiciousness! You are the Source of all goodness.

Please bestow on us our welfare! Bestow on us all things that are good and auspicious in this world.
O Devi Earth! Give me the fruits that I desire.


You are everything which has merits. You are the Seed of all religious merits. You are the receptacle of all religious merits. You are the home of all religious persons.


You are the Store-house of all grains and corns. You give us the grains, take them away and again give them to us. You are everything to the land lords.You are the best source of happiness and the best refuge.

This hymn yields great religious merits. He becomes a powerful leader who recites this stotra early in the morning. Men acquire merits similar to giving away lands as gifts.

People become freed of their sins like
digging a well without permission on another well, aggression of lands, releasing semen on earth and placing lamps on the earth.


 
BHAARGAVA PURAANAM - PART 1

#12c. ருக்மாங்கதன்-3

“உங்கள் நடத்தை வெகு விசித்திரம் தாயே!
உங்களுக்குத் தெரியாத சாஸ்திரங்களா?”

“பிற பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதே!
பிற பெண்களிடம் இச்சை கொள்ளாதே!

சாஸ்திரம் கூறுவது இவையே மன்னா!
சாஸ்திரம் பொருந்தாது நம் விஷயத்தில்.

இச்சை கொண்டது நான்! நீயல்லவே!
இன்பத்தை விழைவது நான்! நீயல்லவே!”

அருகில் நெருங்கினாள் அவள் அவனிடம்.
நெருப்புப் பட்டது போல விலகினான் அவன்.

“நான் மக்களுக்கு வழி காட்டும் அரசன்!
நான் கற்புகரசி ஒருத்தியின் கணவன்!”

“சயனவேளையில் சாஸ்திரம் பேசுவதா?
பயனற்ற வார்த்தைகள் எதற்கு மன்னா!”

அரசனை வலிந்து தழுவினாள் அவள்.
அரசன் அவளைப் பிடித்து உந்தினான்.

“மோகத்தால் அறிவிழந்து விட்டாய் நீ!
காமத்தால் கண் இழந்து விட்டாய் நீ!

முனி பத்தினி என்பதால் உயிர் தப்பினாய்
இனியும் செய்யதே இதுபோல் எவரிடமும்”

வேகமாக வெளியேறினான் ருக்மாங்கதன்.
கோபமாகச் சபித்தாள் அரசனை முகுந்தை,

“பெண்ணே விரும்பி அழைத்தும் கூடக்
கண் மூடிச் செல்லும் நீயும் ஓர் ஆடவனா?

கெடுத்தாய் கற்பை, என் ஆவலைத் தூண்டி!
கெடட்டும் உன் வடிவம் வெண்குஷ்டத்தால்!

பெண்களை மயக்கிடும் உன் சுந்தர ரூபம்
பெண்கள் வெறுக்கும்படி மாறி விடட்டும்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - SKANDA 9

12c. RukmAngathan – 3

“Your behavior is very strange oh lady! Surely you know the sAsthrAs!” the king RukmAngathan told the rushi patni Mukundai.

“Do not desire women other than your wife. Do not look at the women other than your wife! This is what sAsthram tells us. But in our case sAsthram does not hold good. It is I who has the desire, not you! It is I who seeks pleasure not you!

Mukundi came closer to the king. He jumped back as if he had touched a live coal. “I am the king of a country. I should be a living example to my citizens. I am married to a virtuous woman already.”

“Who wants to listen to these lectures instead of pure enjoyment? Stop talking about useless things!” Mukundai embraced him forcefully.

The king pushed her away and spoke in anger,” you have lost your sense due to desire. You are blinded by your passion. You are still alive since you are a rushi patni. Never behave in this manner with anyone else in the future” The king left the place angrily.

Mukundai cursed him thus,” Even when a beautiful woman begs you to take her, you leave the place closing your eyes. Are you a real man?

You have disturbed my peace of mind and made me lose my virtue. May your beautiful form be ruined by leucoderma. May your figure which disturbs the minds of women become hideous and unsightly!”
 
3#18a. சுயம்வரம் (1)

சுபாஹுவின் சொற்களைக் கேட்ட அரசியார்
சசிகலையை அழைத்துக் கூறினார் அறிவுரை.

“விருப்பத்தை அறிந்தோம் உன் தோழியிடமிருந்து;
வருத்தத்தை அடைந்தோம் அதைச் செவிமடுத்து!

நாடு, நகரத்தை இழந்து விட்டவன் சுதர்சனன்;
நல்ல வாழ்க்கையினையும் இழந்து விட்டவன்.

பந்து, மித்திரர்களால் கைவிடப் பட்டவன்;
பரி, கரி, படை, ஆயுதங்கள் இல்லாதவன்.

வசிக்கின்றான் வனத்தில் ஆசிரமத்தில்,
வாழ்கின்றான் கனிகளை உட்கொண்டு.

கணவனாக வருபவனுக்கு வேண்டும்
கண்ணே! உன்னை மணக்கும் தகுதிகள்.

உள்ளனர் பல மன்னர்கள் அறிவு, அழகு,
ஆள், அம்பு, சேனை செல்வாக்குகளுடன்.

சுதர்சனனின் சகோதரன் சத்ருஜீத் உள்ளான்.
அதர்மம் ஆகும் நாடோடியை நீ நாடுவது.

சுதர்சனனை அழிக்கத் துடிக்கின்றான் யுதாஜித்
சுதர்சனனுக்கு உண்டு ஒரு பிராண ஆபத்து!”

கண்ணீர் அருவி பெருகியது சசிகலையிடம்,
அன்னையிடம் கூறினாள் தன் நியாயத்தை.

“மாறாது மனம் யார் என்ன கூறிய போதிலும்;
கூறினாள் அன்னை பராசக்தி அவனை மணந்திட.

வளர்த்துவிட்டேன் என் மானசீகக் காதலை;
வரித்து விட்டேன் அவரை என் கணவனாக!

மாறாது என் மனம் என்று நம்புங்கள்;
மறுக்காதீர்கள் என் விருப்பத்துக்கு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#18a. The Swayamvaram (1)

The queen listened to the words of the king Subaahu and then spoke to her daughter with great concern. “My dear child! Your father and I came to know of your wishes through your friend. We became very sad on hearing them.


Sudarsanan has lost his kingdom. He does not live a decent kingly life. He has been forsaken by his friends and relatives. He lives in an ashram and eats the raw fruits and roots .The man who marries you must be suitable for you my dear.


There are many kings who are good looking, intelligent, rule over vast kingdoms and posess powerful armies. You may marry even Sudarsanan’s step brother Satrujit. Wishing to marry a pauper living with the hermits in the forest is not correct.”

Sasikala’s tears flowed copiously. She said her side of the argument to her mother.”I will not change my mind despite the many reasons put forward by you and the king my father.

I have cherished my secret love for Sudarsanan. I have chosen him as my husband when Devi told me to marry him. Please understand my feelings and do not stand against my wishes dear mother!”
 
Devi bhaagavatam - skanda 9

9#10. பலாபலன்கள்

சிவலோகம் சேருவான் நல்ல வேதியனுக்குச்
சிறிதளவேனும் நிலம் தானம் செய்கின்றவன்.

அநியாயமாக நிலத்தை அபகரிப்பவன் - நரகத்தை
அடைவான் சூரியன், சந்திரன் உள்ள வரையில்.

பசுக்களின் மேய்ச்சல் பாதையைத் தடுப்பவன்;
பயிர் செய்து நீர் நிலைகளை அழிகின்றவன்;

வெட்டுபவன் அம்பின் முனையால் பூமியை;
விட்டவன் பூமியின் தனது வீரிய சுக்கிலத்தை;

கிணற்றை சிதிலமாக விடுபவன்-குளிக்கும் முன்
கிணற்றிலிருந்து ஐந்து பிடி மண்ணை வீசாதவன்;

பிண்டத்தைச் சிரார்த்தம் செய்யும் பூமியினில்
பண்டம் எதுவும் தராமல் இலவசமாக இடுபவன்;

பூமியின் மீது நேரடியாக தீபத்தை வைப்பவன்;
பூமியின் மீது நேராகப் புத்தகத்தை வைப்பவன்;

முத்து, ரத்தினங்கள், பொன், பிரதிமைகள்;
சங்கு, யந்திரம், மலர்கள், துளசி பத்திரங்கள்;

ஜபமாலை, மலர் மாலை; கற்பூரம்,கோரோசனை
சந்தனக் கட்டை, ருத்திராக்ஷம், தர்ப்பைப் புல்லை

ஆசனமில்லாமல் பூமி மீது நேரே வைப்பவன்;
யாக உஷ்ணத்தைப் பாலினால் தணிக்காதவன்;

பூகம்பம், கிரஹணத்தில் பூமியை வெட்டுபவன்
பூமிக்குத் துன்பம் தருகின்றவர்கள் இவர்கள்.

நரகத்தில் உழல்வர் நெடுங்காலம் துன்புற்று
நிலத்துக்குத் தாம் இழைத்த தீங்குகளுக்காக.

பிற பெயர்கள் ஆகும் பூமிக்கு கச்யபி, மேதினி
ப்ருத்வீ, விஸ்வம்பரை, அனந்தை முதலியன.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#10. The right and the wrong.


One who donates a piece of land to a worthy Brahmin will find a spot in Sivalokam.

One who grabs a piece of land which does not belong to him will suffer in the hell as long as the Sun and the Moon exist.

The list of people who hurt and commit sins against Mother Earth.
1. One who blocks the way of the cattle going for grazing;
2. One who cultivates on the riverbeds and the bottoms of lakes and ponds;
3. One who scratches the earth with the tip of his arrow;
4. One who releases his semen on the ground;
5. One allows a well to become dilapidated;
6. One who does not throw out five handfuls of soil from a well before taking bath in it;
7. One who throws the sraardha piNdam without paying the land owner any money;
8. One who places a lamp directly on the floor;
9. One who places books directly on the floor;
1O. One who places auspicious articles like pearls, gems, gold, god's images, conch, ynatra, flowers, thulsasee leaves, japamaalaa, flower garlands, camphor, Gorojana, sandal wood, rudraaksha, kusa grass etc directly on the ground;
11. One who does not sprinkle milk after completing the yaagaa to cool the earth;
12. One who digs the earth during earthquakes and eclipses.
All these sinners will land in the hell and suffer for long.

The other names of earth are Kasyapi, Pruthvee, Visvambara, Anantha Medhini etc.


 
BHAARGAVA PURAANAM - PART 1.

#12d. ருக்மாங்கதன்-4

முகுந்தையின் சாபம் பற்றியது அவனை!
முக அழகு மறைந்தது வெண்குஷ்டத்தால்!

“தர்ம சாஸ்திரங்கள் சொன்னது தவறா?
தர்ம சாஸ்திரப்படி நான் நடந்தது தவறா?

காமத்தால் நாணம் கெட்ட பெண் இட்ட
சாபத்தால் நான் தவிப்பது தருமமோ?

ஏகாக்ஷரத்தை மறந்ததில்லை நான்!
விகார ரூபத்துடன் வாழ்வது எங்கனம்?”

நாடு திரும்ப விரும்பவில்லை அரசன்;
காடு இடம் தந்தது ஒளிந்து கொள்வதற்கு!

அரசனைக் காணாமல் தேடிய வீரர்கள்
ஆதவன் மறைந்ததும் திரும்பினர் நாடு!

பொழுது புலர்ந்தது! மூழ்கித் தடாகத்தில்
தொழுதான் முழு முதற்கடவுளை அவன்.

ஏகாக்ஷரத்தை ஜபிக்கையில் கண்டான்
ஆகாயமார்க்கமாகச் செல்லும் நாரதரை.

“வீமராஜன் மகன் ருக்மாங்கதன் நான்.
வீணாகி விடும் போலிருக்கிறது வாழ்வு.”

மனம் கனிந்த நாரதர் இறங்கினார் அருகே;
மனம் உருகிடக் கூறினான் தன் கதையை,

வலம் வந்து வணங்கிய பின் ருக்மாங்கதன்.
நலம் விரும்பும் நாரதர் திவ்ய திருஷ்டியில்

கண்டார் மன்னன் கூறியது மெய்யென்று!
விண்டார் சாபவிமோசன மார்க்கத்தை.

“கணபதி ஆலயம் உண்டு கந்தர்ப்ப நகரில்.
கணேச குண்டம் என்னும் தடாகமும் உண்டு.

தேவேந்திரன் அமைத்த கணேச மூர்த்தி அது.
தேவர்கள் வந்து தொழுதிடும் ஆலயம் அது.

தடாகத்தில் நீராடி ஐயனை நீ தொழுதால்
நொடியில் மறையும் உனது கொடிய நோய்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - PART 1

12d. Rukmaangathan – 4


The curse laid by Mukundai affected RukmAngathan immediately. His port and presence disappeared and his face became unsightly due to leukoderma.


“Are the dharma sAsthraas wrong? Did I act wrong by obeying the rules laid by them? Is it right that I should suffer thus – cursed by a woman who had lost her mind due to her lust?
I never forgot the name of Sri GanEsa even once! How can I face my family and citizens with this face and figure?”


He did not want to return to his palace. The dense forest gave him ample hiding place. The soldiers searched for him everywhere and returned to their homes after the sun had set.


Early next morning RukmAngathan took a dip in the pond and was worshiping lord GanEsa in his mind. He looked up and saw Dev rushi NArada traveling in the sky.


He said in a pathetic voice, “I am Beema RAjan’s son. It appears as though my life will be wasted uselessly!”
NArada took pity on him and came down to him.

RukmAngathan paid obeisance to him and told his miserable tale. NArada knew it was true by his divya-drushti. He advised the king about the sApa-vimOchanam.


“There is a GanEsa temple in the city on Kandharppam. There is a pond called GanEsa theertham in front of the temple. Take dip in the theertham and worship the moorthi there. You will surely get cured of this hideous disease. The temple was built by Indra himself. All the Devas visit the temple and worship GanEsa”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#18b. சுயம்வரம் (2)

மஹாதேவி விஷ்ணுமாயை தோன்றினாள்
மஹாலக்ஷ்மியாக சுதர்சனனின் கனவினில்.

வந்தான் ச்ருங்கிபேரபுரத்து வேடராஜன்;
தந்தான் பல அரிய பெரிய பரிசுகளை.

திரவியங்கள், வீரக்கொடி – நான்கு
புரவிகள் பூட்டிய ரதம், பதாகைகள்.

ஆசிகள் தந்தனர் ஆசிரம முனிவர்கள்;
ஆசிகள் தந்தாள் பிரபஞ்ச மாயாதேவி.

“உதவ முன் வந்தான் வேடராஜன் இன்று.
உன் வசப்படும் உன் ரஜ்ஜியம் விரைவில்.”

மனோரமை மகிழ்ந்தாள் முனிவர் மொழிகளால்.
மஹா தபஸ்விகளின் வாக்குப் பொய்யாகுமா?

அந்த ரத்தத்தில் ஏறி சுதர்சனன் செல்கையில்,
மந்திர பலத்தால் ஒரு படையும் காட்சி தந்தது.

மந்திரத்தின் மஹிமையை உணர்ந்த சுதர்சனன்
முன்னிலும் அதிகமாக தேவியை தியானித்தான்.

மன்மத பாணங்களால் வருந்திய சசிகலையோ
முன்னிலும் அதிகமாக பிரேமித்தாள் அவனை.

மகளின் மாற்றத்தை உணர்ந்தான் சுபாஹு.
மகளின் சுயம்வரத்தை தானே நிச்சயித்தான்.

மண்ணுலக வேந்தர்களின் சுயம்வரம்
மூன்று வகைப் பட்டிருந்தன அப்போது.

மனத்தைக் கவர்ந்தவனை மணாளனாக
மணப்பெண் வரிப்பது இச்சா சுயம்வரம்.

பந்தயத்தில் வென்று மணமகளை மன்னன்
சொந்தம் ஆக்கிக் கொள்வது பந்தய சுயம்வரம்.

வீரத்தை நிலை நாட்டிக் கன்னிகையைக் கவருவது
வீர சுயம்வரம் என்று பெயர் பெற்று இருந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

7#18b. The Swayamvaram (2)

Vishnu Maayaa appeared to Prince Sudarsanan as Lakshmi Devi. The chief of the hunters in Sringabera puram became a friend and gave several rich gifts to Sudarsanan such as a chariot with four horses, the flags and several other riches.

The sages gave him their blessings.They said, “The chief of the hunters has become your friend now. You will get back your father’s kingdom very soon”


Manorama became vary happy since the words spoken by the sages always proved to be true. Whenever Sudarsanan rode on the chariot he appeared to be surrounded by a big army of his own. He realized the effect of the Chanting of Devi’s mantra. He did japam more sincerely than before.


Sasikala was suffering from the pangs of separation. Her father noticed the changes in her behavior and arranged for her swayamvarm.

In those days swayavarams were of three different types.

In Ichchaa swayamvaram the bride chose her own husband from among the kings who had assembled.

In the second type, the winner in the contest arranged by the parents of the princess, married her. In the third type the bride was kidnapped by the prospective husband and he married her after defeating the opponents in a fight.
 
Devi bhaagavatam - skanda 9

9#11. கங்கை

சூரிய வம்ச சகரனுக்கு இரு மனைவியர்;
பிறந்தான் அசமஞ்சன் ஒரு மனைவிக்கு.

அறுபதினாயிரம் மகன்கள் மற்றவளுக்கு;
எரிந்து சாம்பலாயினர் கபிலரின் சாபத்தால்!

கடைதேற்ற கொண்டு வர வேண்டும் தவத்தினால்
கங்கையை விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு!

தவம் செய்தான் அசமஞ்சன் லக்ஷம் ஆண்டுகள்;
தவம் செய்தான் அம்சுமான் லக்ஷம் ஆண்டுகள்;

ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டுவருவதற்கு
அருந்தவம் செய்தான் பகீரதன் லக்ஷம் ஆண்டுகள்;

பகீரதன் தவம் பலித்து விட்டது - ஆகாச கங்கை
பாகீரதியாக இறங்கினாள் நதியுருவில் பூமிக்கு.

தரிசனமே நீக்கிவிடும் பாவங்களை என்றால்
ஸ்பரிசம் தரும் பத்து மடங்கு புண்ணியத்தை.

புண்ணிய தினங்களில் நாம் கங்கா ஸ்நானம்
பண்ணியதின் பலனைச் சொல்வதும் அரிது!

சந்திர கிரஹண ஸ்நானம் கோடிப் புண்ணியம்;
சூரிய கிரஹண ஸ்நானம் பத்து மடங்கு அதிகம்!

நதியுருவத்தில் அடைவாள் லவண சமுத்திரத்தை
அதுவும் ஆகும் மஹா விஷ்ணுவின் ஓர் அம்சம்.

ஓடி வருகின்றாள் கங்கை நதியாகி பாரதத்தில்;
கூடி மகிழ்கின்றாள் தினமும் சமுத்திர ராஜனை.

ஆராதிக்க வேண்டும் வினாயகரை விக்னங்கள் நீங்கிட;
ஆராதிக்க வேண்டும் சூரியனை ஆரோக்கியம் பெற்றிட;

ஆராதிக்க வேண்டும் அக்னியைத் தூய்மை பெற்றிட;
ஆராதிக்க வேண்டும் விஷ்ணுவை சம்பத்துப் பெற்றிட;

ஆராதிக்க வேண்டும் பரமசிவனை ஞான பெற்றிட;
ஆராதிக்க வேண்டும் தேவியை மோக்ஷம் பெற்றிட!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#11. Ganga Devi

Sagara the king of Soorya vamsa had two wives. One of them has a son called Asamanjan and the other gave birth to sixty thousand sons. All of them save Asamanjan got burned down to ash due to the curse of Kapila Muni.

Ganga had to be brought down from heaven to earth to liberate the dead princes. Asamanjan took up penance for one laksh years and died before his aim was realized.

His son AmsumAn took up penance for one lakh years with no success. His son Bhageerata took up penance and his attempt was successful. Ganga descended from the heaven to the earth in the form of a river.

The darshan of Ganga gives a person good merits. Her touch purifies by removing all the sins. The holy dip taken on auspicious days add to our merits and removes our sins.

Ganges runs through several cities in BhArata Varsha and unites with the salty sea which is also an amsam of MahA VishNu.


Praying to VinAyaka removes all our obstacles. Praying to Sun God bestows good health on us. Praying to Agni gives us purity. Praying to Vishnu gives us wealth. Praying to Siva gives us Knowledge and praying to Devi gives us total Liberation.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#13a. அகலிகை-1

“இந்திரன் எதற்குப் பிரதிஷ்டை செய்தான்?
இந்திரன் எதற்குக் கணேச பூஜை செய்தான்?

விருத்தாந்தங்களைக் கூறுங்கள் விவரமாக!”
விருப்பத்துடன் வினவினான் ருக்மாங்கதன்.

“இந்திரலோகம் சென்றேன் நான் ஓருமுறை.
இந்திரசபையில் ஒரு அற்புத நடன விருந்து!

இந்திரன் வரவேற்று அளித்தான் ஆசனம்.
இந்திரன் கேட்டான்,”நீர் கண்ட விந்தை?”

“சென்றேன் கௌதம முனியின் ஆசிரமம்
கண்டேன் பேரழகி அகலிகையை அங்கே!”

“தேவமாதர்களை விட அவள் அழகியா?”
தேவேந்திரன் கேட்டான் மீண்டும், மீண்டும்.

“லக்ஷணம் மிகுந்த பெண் அகலிகை தேவி .
லக்ஷ்மியைப் போன்றே உவமை அற்றவள்!”

பொங்கியது காமம் இந்திரன் மனத்தில்
‘அங்கம் தழுவி அனுபவிக்க வேண்டும்!’

தேவர்கள் அதிபதியாக இருந்த போதிலும்,
தேவமாதரிடம் இன்பம் துய்த்த போதிலும்,

விரக தாபம் மேலிட்டு வருத்தியது என்று
விண்ணுலகினின்று வந்தான் மண்ணுலகு.

கண்டதும் மதி மயங்கினான் இந்திரன்;
‘விண்டது குறைவே நாரதர் என்னிடம்!’

‘எப்படியாவது ஒருமுறை’ என்ற எண்ணம்
எப்படி வந்தது அந்த ரிஷிபத்தினியின் மீது?

பின் விளைவுகளை அவன் எண்ணவில்லை!
முன்யோசனையாகத் திட்டம் தீட்டினான்.

விடியலில் செல்வார் முனிவர் நீராடுவதற்கு;
முடித்த பின் வருவார் அனுஷ்டானங்களை!

குடிலைச் சுத்தம் செய்துவிட்டு அகலிகை
எடுத்து வைப்பாள் பூஜைப் பொருட்களை.

விருப்பத்தை நிறைவேற்ற நல்ல நேரம்
விடியலில் முனிவர் வெளியேறும் நேரம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
BHAARGAVA PURAANAM - PART 1

13a. Ahayla Devi – 1


“Why did Indra build that temple? Why did he do GanEsa puja? Please tell me everything in detail!” RukmAngathan begged NArada to go on.


NArada said, “Once I went to IndralOkam. The apsaras were giving a divine dance performance. Indra offered me a seat and asked me, “Tell me what is the greatest wonder you have seen today”


I (Narada) replied told Indra. “Today I had been to the ashram of Gouthama rushi. His wife AhaylA DEvi is a beauty nonpareil. Indra kept on asking me “Is she more beautiful than the apsaras of my swarga?”


I told him, ” She is more beautiful than any apsaras. In fact she if a real beauty like Lakshmi Devi whose beauty is second to none!”


Indra’s desire was duly kindled and he felt the deep pangs of lust. Despite being the king of heaven, despite having all the apsaras at his beck and call, he yearned for the proximity of the beautiful AhaylA DEvi.


He went down to the earth. He was spellbound by a mere look at that rushi patni AhaylA Devi, “NArada’s observation is an understatement of her beauty. I must enjoy her proximity at least once, but how?”

He forgot the miserable and frightening consequences he might have to face. He forgot everything except that he must possess her at least once. He found out that rushi Gouthama went to a river very early in the morning, to finish his bath and nithya karma anushtAnam.


That time AhaylA DEvi would clean her hut and get ready the things needed for puja. That would be the ideal time to go near her. He made what he thought to be a fool proof plan.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#18c. தேவியின் கவசம்


தாயின் தவிப்பைக் கண்டான் சுதர்சனன்;
தளரவில்லை தன் மனவுறுதியில் சற்றும்!

“நடப்பது நடக்கட்டும் அம்மா! – எப்போதும்
நல்லதையே நினைப்போம் நம் மனதினில்.

அரச குலத்தில் பிறந்த நான் அஞ்சுவதா?
அடவியிலேயே வாழ்நாளைக் கழிப்பதா?

முடிவு செய்தேன் சுயம்வரத்துக்குச் செல்ல;
மூவுலகின் அன்னை காப்பாள் என்னை!”

அன்னை கோரினாள் தேவியின் கவசத்தால்;
அன்னை பராசக்தி தன் மைந்தனைக் காத்திட!

“முன்னால் இருந்து காக்கட்டும் அம்பிகை;
பின்னால் இருந்து காக்கட்டும் பார்வதி தேவி.

இடர் தரும் வழிகளில் காக்கட்டும் வாராஹி;
கடின செயல் புரிகையில் காக்கட்டும் துர்க்கை;

கோரமான போரில் காக்கட்டும் மஹாகாளி;
பேரவையினில் காக்கட்டும் பரமேஸ்வரி;

மண நிகழ்ச்சியில் காக்கட்டும் மாதங்கி;
மன்னர்கள் நடுவே காக்கட்டும் பவானி;

மலைக் குகையில் காக்கட்டும் கிரிஜா;
மனிதர் கூடும் நாற்சந்தியில் சாமுண்டி;

கனமான வனங்களில் காக்கட்டும் காமகை;
கனமான வாதங்களில் காக்கட்டும் வைஷ்ணவி;

பகைவருடன் போரில் காக்கட்டும் பைரவி;
சகல இடங்களிலும் காக்கட்டும் ராஜேஸ்வரி;”

தனியே அனுப்ப மனமின்றித் தவித்தாள்
தானும் ரதம் ஏறினாள் மகனுடன் அவள்.

வந்தார் குரு பரத்வாஜரும் அவர்களுடன்;
வந்தாள் பணிப்பெண்ணும் அவர்களுடன்;

சுபாஹு வரவேற்றான் விருந்தினர்களை;
சுகமான ஏற்பாடுகள் செய்து கொடுத்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 3


3#18c. Devi’s kavacham

Sudarsanan noticed the anxiety of his mother and said to her, “Mother! Let us hope for the best always. Whatever will be will be! I am the son of a valorous king. I should not know fear.


I should not spend my entire life in hiding away from my enemies. I have decided to go to the swayamvaram.The mother on the Universe will protect me from all dangers.”


Manorama wished him well and prayed to Devi to protect her son always.


“May Ambika protect you from the front.
May Parvathi protect you from the back.


May Vaaraahi protect you during your travels.
May Durga protect you while performing difficult deeds.


May Mahaa Kaali protect you during the battles.
May Parameswari protect you in a gathering.


May Maathangi protect you during the wedding.
May Bhavaani protect you among all the other kings.


May Girija protect you in the mountain caves.
May Chaamundi protect you at the crossroads.


May Kaamagai protect you in dense jungles.
May Vaishnavi protect you in serious discussions.


May Bhairavi protect you in the wars with enemies.
May Raja Rajeswari protect you everywhere all the time.”


She could not let her son go all alone to the swayamvaram. So she got into his chariot along with Sudarsanan, Guru Bharatwaaj and her trusted maid. King Subaahu welcomed them and made their stay very comfortable.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#12a. கங்கையின் துதி (1)

"வெண்டாமரை நிறத்தவளே! பாப நாசினியே!
கண்ணனிடம் தோன்றிப் பின் சமமானவளே!

தூய ஆடைகள் அணிந்து திகழ்பவளே!
நூறு சந்திரரின் ஒளியை உடையவளே!

புன்னகை முகத்தவளே! இனியவளே!
கண்ணனுக்குப் பிரியமான சுந்தரியே!

சிந்தூரம் சந்தனம், கஸ்தூரி அணிந்தவளே!
சிவந்த கொவ்வை இதழ்களை உடையவளே!

முத்துப் பல் வரிசைகள் உடையவளே!
மோகன விழிகளைக் கொண்டவளே!

வில்வக் கனி ஸ்தனங்கள் கொண்டவளே!
வாழை மரத் தொடைகள் உடையவளே!

பாதுகை அணிந்த தாமரைப் பாதத்தினளே!
பாதங்களில் மந்தாரச் சாறு பூசியவளே!

பக்தர்களின் அர்க்கியத்தை ஏற்பவளே!
பக்தர்கள் விழைவதைத் தருபவளே!

வியாபக ஸ்தானத்தில் உதித்துப் பின்பு
விஷ்ணுபதி என்ற பெயர் பெற்றவளே!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#12a. Ganga stuti.

O Ganga Devi the color of white lotuses! You destroy all the sins of men. You have appeared from the body of Sri. KrishNa but you are equal to him in your power.

You are very chaste and pure. You wear clothes purified by the fire. You are decorated all over your beautiful body with ornaments and jewels.

You are more brilliant than one hundred Full Moons rising together on an autumn evening. You have a pleasing smile on your lips. Your youth and beauty never decrease. You are of a calm and peaceful temperament. You are dear to NArAyaNA.

Your braid of hair is decorated with garlands of MAlati flowers. Your are adorned with sandal paste, Sindoora bindu and musk. Your garment and your beautiful lips are redder than the ripe Bimba fruit.

Your teeth defeat two rows of pearls. Your eyes are so lovely ! Your side-long glance is so attractive! Your young firm breasts resemble two Bel fruits! Your thighs are smoother than the plantain trees. Your feet defy the beauty of the ground Lotuses.
How do the red sandals look lovely with Kunkuma and alaktak (red powder)! What a red tinge!

Your lovely red feet are smeared with the honey of PArijAtA flower that is seen on Indra's head. The Devas, the Siddhas, the Munis, offer Arghyas - offerings of rice with Durba grass - at your feet.

Your lotus feet give liberation to those that want Mukti and enjoyment to those that want Bhukti. You grant boons and you shower your favor on your devotees.You bestow Vishnu padam - since you are born out of Vishu pAdam."
 
BHAARGAVA PURAANAM - PART 1

#13b. அகலிகை-2

விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கும்போதே
வடிவெடுத்துக் கொண்டான் இந்திரன் சேவலாக!

உரக்கக் கூவினான் ஆசிரமத்தின் அருகே நின்று;
உடனே புறப்பட்டார் கௌதம முனிவர் நதிக்கு.

முனிவர் அப்பால் சென்றதும் இந்திரன் – கௌதம
முனிவரின் வடிவெடுத்து நுழைந்தான் குடிலில்.

“அப்போது தான் வெளியே சென்ற தன் கணவர்
அதற்குள் திரும்பிவிட்டாரே!” வியந்தாள் அகலிகை

“கோழி கூவியதால் நீராடச் சென்றேன் விரைந்து.
வழியில் தெரிந்தது இன்னமும் விடியவில்லை என்று.

உறக்கம் கெட்டுவிட்டது இன்று !” என்று கூறி வந்து
கிறக்கத்துடன் அமர்ந்தான் இந்திரன் அகலிகை அருகே.

கணவன் என்று நம்பியதால் ஐயுறவில்லை அகலிகை.
கணவனின் அன்பில் திக்குமுக்காடினாள் அன்று.

உறக்கம் விடாத நிலையில் இருந்தன தென்பட்ட
உலகத்தின் உயிர்க் கூட்டங்கள் அனைத்துமே!

விண்மீன்களில் அமைப்பிலும் தெரிந்தது இன்னும்
விடிவதற்கு வெகுநேரம் உள்ளது என முனிவருக்கு.

மனம் கலங்கிக் குழம்பி ஏனோ சஞ்சலப் பட்டது!
மனம் இது போல இருந்தது இல்லையே தினமும்!

நித்யானுஷ்டானங்களை முடித்தார் விரைவாக.
வித்தியாசமான மனக் குழப்பத்துடன் திரும்ப;

அடைக்கப்பட்டு இருந்தன குடிலின் கதவுகள்
அழைத்தார் மனைவியைக் கதவைத் தட்டி !

கட்டிலில் தன்னுடன் இருந்தது கணவன் எனில்
எட்டியிருந்து அவர் குரல் ஒலிப்பது எப்படி?

கணநேரத்தில் புரிந்தது தான் மோசம் போனது!
கணவன் உருவில் இருந்தவன் கணவன் அல்ல!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 

Latest ads

Back
Top