• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#21a. திருமணம்

மாற்றமுடியாது மகள் மனதை என்ற உண்மை
மாற்றிவிட்டது தந்தை சுபாஹுவின் மனத்தை.

விரைந்தான் மன்னர்கள் கூடி இருந்த சபைக்கு;
உரைத்தான் மன்னர்களிடம் பணிவாக இதனை.

“சுயம்வரம் நடை பெறும் இன்றல்ல, நாளை.
சுயமாக வரிப்பாள் சசிகலை தன் கணவனை.

தங்கியிருங்கள் உங்கள் விடுதிகளில் – இரவு
எங்கள் விருந்தை உண்டபின் இளைப்பாறிட!”

சந்தேகித்தனர் சில மன்னர்கள் இதனை – நாற்
சந்திகளில் நிறுத்தினர் தமது காவலர்களை.

‘என்ன நடக்குமோ மறுநாள் மண்டபத்தில்?'
என்ற சிந்தனையிலேயே கழிந்தது இரவு,

வேதியரை வரவழைத்தான் சுபாஹு- அவர்கள்
ஓதினர் மந்திரங்களை ரகசியமான இடத்தில்.

முறைப்படி நடந்து முடிந்தது திருமணம்;
சிறப்பான பரிசுகள் தந்தான் மணமகனுக்கு.

மகிழ்ச்சியில் பூரித்தாள் அன்னை மனோரமை;
நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் மந்திரி, பிரதானிகள்

சீர் வர்சைகள் தந்தான் சுபாஹு மகளுக்கு
ஓர் இழிவும் எவரும் கூற இயலாதவாறு!

கரிகள் இருநூறு, ஒட்டகங்கள் முன்னூறு,
பரிகள் இரண்டாயிரம், ரதங்கள் இருநூறு,

தாசிகள் நூற்றுவர், சேவகர் நூற்றுவர்,
தானிய வகைகள் இருநூறு வண்டிகள்.

“குறையேதும் உண்டோ?” சுபாஹு வினவிட,
“நிறைவே அனைத்தும் குறைவில்லை எனக்கு!

நாட்டையிழந்து காட்டில் வசிப்பவனுக்கு
காட்டினீர்கள் நீங்கள் நல்ல வழி இன்று!”

அன்னை கூறினாள் அரசன் சுபாஹுவிடம்.
தன் மனம் மகிழ்ந்தாள் மணக்கோலம் கண்டு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#21a. The wedding

The fact that his daughter’s mind could not be changed, changed the mind of King Subaahu. He went to the gathering of the kings and made this announcement.


” The swayamvaram will take place as planned tomorrow instead of today. Please go back to your camps to take rest after enjoying the royal feast arranged for you. My daughter will select her husband tomorrow as originally planned.”


Many kings did not believe this statement. They kept their guards in all the crossroads to keep a vigilant watch over all the movements.


The king Subaahu got the priests to perform the wedding as per the saastraa in a secret place. The wedding was performed in secrecy. King Subaahu presented his son in law Sudarsanan with many rich gifts.


Two hundred elephants, two hundred chariots, three hundred camels, two thousand horses, one hundred women servants, one hundred men servants and two hundred carts loaded with food grains were presented to Sudarsanan by Subaahu.


He then asked queen Manorama, “Is her anything lacking in my gifts? The queen relied, “I have no complaints sir! You have done a good deed by presenting your daughter to my son – a prince without a kingdom – living in a forest.”



 
Devi bhaagavatam - skanda 9

9#15a. நந்திக் கொடியோன்

தக்ஷ சாவர்ணி ஆவான் விஷ்ணுவின் பக்தன்;
தக்ஷ சாவர்ணியின் மகன் பிரம்ம சாவர்ணி.

தர்ம சாவர்ணி பிரம்ம சாவர்ணியின் மகன்;
தர்ம சாவர்ணியின் மகன் ருத்ர சாவர்ணி.

தேவ சாவர்ணி ருத்ர சாவர்ணியின் மகன்;
தேவ சாவர்ணியின் மகன் இந்திர சாவர்ணி.

இந்திர சாவர்ணியின் மகன் விருஷபத்வஜன்;
நந்திக் கொடியோன் ஆன அவன் சிவ பக்தன்.

விஷ்ணு பக்தர்கள் முன்னோர்கள் அனைவரும்;
விருஷபத்வஜன் இருந்தான் தீவிர சிவபக்தனாக!.

நினைக்கவில்லை பிற தெய்வங்களை மனத்தாலும்;
நிறுத்திவிட்டான் பிற தெய்வங்களின் ஆராதனையை!

லட்சியம் செய்யவில்லை விருஷபத்வஜன் சிறிதும்
லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு ஆகிய தெய்வங்களை.

கோபம் கொண்டான் இது கண்ட சூரியன் - கொடிய
சாபம் தந்தான் "சம்பத்து இல்லாது போகக் கடவது!"

பரிவு கொண்டார் பக்தனின் மீது சிவபெருமான்;
துரத்தி விரட்டினார் சூரியனைச் சூலாயுதம் ஏந்தி!

சூரியன் ஓடினான் ஆகி வந்த கிரமப்படியே
பிரமன், விஷ்ணு இவர்களின் உலகங்களுக்கு.

பிராணனைக் காத்துக் கொள்ள அழைத்தான்
பிரமதேவனை, நாராயணனை உதவிக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#15A. VRUSHABHA DHWAJAN

The Manu Daksha SAvarNi was a Vishnu devotee and was born of Vishnu's amsam. Brahma SAvarNi his son was also devoted to Vishnu. His son Dharma SAvarNi was also a devotee of Lord Vishnu and a master of his senses.

Rudra SAvarNi was a man of restraint. He and his son Deva SAvarNi were both sincere devotees of Lord Vishnu. Indra SAvarNi the son of Deva SAvarNi was also a VishNu bhakta, but his son Vrishabadwaja was a serious devotee of Lord Siva.

S'iva himself remained at his residence for three Deva Yugas and loved Vrishabadwaja as if he were His own son.

Vrishabadwaja did not care for Lord NArAyaNA or Lakshmi Devi or Saraswati Devi or any other God or Goddess. He discontinued the worship of all the Devas and Devis. He worshipped only Siva Sankara.

At this the Sun God became angry with the King Vrishabadwaja and cursed him thus: “O King! May you be stripped of and deprived of all your wealth and prosperity.”

Sankara became very angry on hearing this curse. He chased the Sun God with his terrible trident lifted ready to attack. The Sun God got frightened and ran to Brahma seeking protection - accompanied His father Kasyapa.

BhagavAn Sankara went chasing them to the BrahmA Loka, with trident in His hands. BrahmA got frightened and took Sun to VaikuntA.They all bowed down to NArAyaNa, praised Him and informed Him of the cause of their visit and terror.

Lord NArAyaNA gave them abhayam and promised that no harm would befall on them while they were with him in Vaikuntham.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#15. பலி என்னும் மகன்

பிரணவ ஸ்வரூபனின் பக்தர் கிருச்சதமர்
பிரபஞ்சம் முழுவதும் பரவியது அவர் புகழ்;

பழித்து எள்ளி நகையாடிய முனிவர்கள்
பணிந்து, வணங்கிக் கௌரவித்தனர்.

சிறிது காலத்துக்குள்ளாகவே அவர் இன்றி
அரிது நிகழ்ச்சிகள் நடப்பது என்றானது.

தியானத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தார்
திறந்த கண்களில் இருந்து வீசியது யோகத்தீ .

பார்வை தீட்சண்யத்திலிருந்து பிறந்தான்
பார்த்தவர்கள் அஞ்சும் அரக்கன் ஒருவன்.

நடு நடுங்கினார் கிருச்சதமர் அச்சத்தால்
விடுத்தார் அச்சத்தை விநாயகனை எண்ணி!

“யார் நீ?” வினவினார் அசுரனிடம் அவர்.
“பார்வையில் தோன்றிய உம் மைந்தன் பலி.

வெல்ல வேண்டும் மூவுலகங்களைப் போரில்.
சொல்லவேண்டும் நீர் அதற்கான உபாயம்” என,

“வினாயக மந்திரத்தை உபதேசிக்கின்றேன்
விக்னங்களை அகற்றி வெற்றி அளிப்பான்.”

மந்திர உபதேசம் பெற்றான் பெற்றான் பலி
மனத்தினை அடக்கி மாதவம் செய்தான்.

தவத்தை மெச்சிக் காட்சி தந்தார் கணபதி.
தவத்தின் பயங்களாகப் பெற்றான் வரங்களை.

“மூவுலகங்களையுன் நான் வெல்ல வேண்டும்
ஏவல் செய்து தேவர்கள் பணிய வேண்டும்”

“மூவலகங்களையும் அடிமை கொள்வாய்
மூன்று உலோகக் கோட்டைகள் தந்தேன்

கரும்பொற் கோட்டை, வெண்பொற் கோட்டை
செம்பொற் கோட்டைகளைப் பெறுவாய் நீ!

அரிது அரிது இவற்றை வெற்றி கொள்வது
அரனார் சிவனாரைத் தவிர மற்றவர்களுக்கு”.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#15. Bali – the son of Kruchchadamar

kruchchadamar was a devotee of VinAyaka and his fame spread far and wide very soon. No auspicious event took place without involving him. The rushis who had ridiculed him came to him and honored him.

One day he sat in DhyAnam for a very long time. When he opened his eyes, yoga agni came out of his eyes. A terrifying asuran emerged from it. Kruchchadamar was startled to see him suddenly. He demanded to know who he was!

The asuran replied, “I am your son Bali, born out of the yoga sakthi emerging from your eyes. I want to conquer the three worlds. Please tell me how to go about it”

Kruchchadamar replied, “Son! I will teach you the VinAyaka mantram. He is the God of victory and you shall achieve your ambition. Bali learned the manta from his father. He did severe penance concentrating on VinAyaka.

Ganapathy was pleased with his penance and appeared before him. Bali asked for these boons from VinAyaka. “I must conquer all the three worlds. The DEvA must obey me and serve me well. ”

“You shall conquer the three worlds. I will give you three metal forts made of iron, silver and Gold. No one can overpower them except Lord Siva.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#21b. மன்னர்களின் சினம்

தத்தம் செய்ய விரும்புகின்றேன் நாட்டைச்
சத்தம் இன்றி என் மருமகனுக்கு இப்போதே.

வனவாசம் மேலானதாகத் தோன்றுகிறது;
வானளவான பிரச்சனைகள் உள்நாட்டில்.

சுயம் வரத்துக்கு வந்துள்ள சில மன்னர்கள்
சுய புத்தியை இழந்து விட்டனர் சினத்தால்!

சமாளிக்கின்றேன் அவர்களின் எதிர்ப்பைச்
சாம, தான, பேத தண்ட உபாயங்களால்

தோற்கும் அதர்மம்; வெல்லும் தர்மம் அன்றோ?
வெற்றி கிட்டாது அந்த துஷ்ட மன்னர்களுக்கு ”

“வெற்றியும் மங்கலமும் உண்டாகட்டும்!
வெற்றியுடன் நாட்டை ஆள்வீர் மகனுடன்.

பரமேஸ்வரி அளிப்பாள் சுதர்சனனுக்கு
பரம்பரை உரிமையுள்ள ராஜ்ஜியத்தை.

தேவி துணையிருந்தால் அச்சம் எதற்கு?
பாவிகளின் சூது பக்தர்களை பாதிக்காது!”

மன்னர்கள் அறிந்துகொண்டனர்- ரகசியமாக
முன்னிரவில் நடந்த திருமணம் குறித்து

ஆயத்தம் ஆனர்கள் நகரை முற்றுகையிட.
ஆத்திரம் கொண்டு பேசிக் கொண்டார்கள்.

“அவமானப் படுத்தினான் எல்லோரையும்
அவனை நாசம் செய்வோம் ஒன்று சேர்ந்து!

கண்ட துண்டமாக்குவோம் மணமகனை!
கற்பைச் சூறையாடுவோம் மணமகளின்;

இதைச் செய்யாமல் நாடு திரும்பினால்
இல்லை நமக்கு வெட்கம், மானம் எதுவும்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#21b. The anger of the kings

King Subaahu told Queen Manorama, “I am ready to handover this kingdom to my son in law Sudarsanan and go and live in the forest. Vana vaasam seems to be so much more peaceful than ruling a country.

Some of kings who have come for the swayamvaram have lost their heads due to intense anger. I have to control them using the four fold methods called Saama, Daana, Bedha and Dandam.

Satyameva Jayate. Truth and Dharma will always triumph. The falsehood will never conquer. The wicked kings shall never be victorious – if there is going to be a war.”
Queen Manorama said to him, “May victory and auspiciousnes be with you always.

May you rule your kingdom well with your son. Devi will give back to Sudarsanan his lawful kingdom very soon. With Devi on our side, there is no need to fear anything. The treacherous plans of the wicked kings will be foiled by Her grace!”

The kings learned about the secret wedding performd the night before. They became very angry and got ready to lay a siege on the capital city of Subaahu. They spoke among themselves thus:

“King Subaahu has made fools out of all of us. He needs to be destroyed completely. We will cut the groom into a thousand pieces and ravish the virtue of the princess Sasikala. If we return to our kingdoms without avenging in this manner, we have no sense of shame or dignity or manliness!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#15b. தணிந்தது சினம்

அபயம் தந்தார் நாராயணன் சூரிய தேவனுக்கு,
"அபாயம் இல்லை உனக்கு சிவ சங்கரனாரால்!

வசப்படுவார் சிவசங்கரன் பக்தரின் பக்திக்கு;
வசிப்பார் சிவசங்கரன் பக்தரின் இருதயத்தில்.

உயிரினும் மேலானவர் சிவசங்கரன் எனக்கு!
உயரிய தெய்வம் உண்டோ சிவனாரை விட?

படைக்க வல்லவர் விளையாட்டாகவே சிவன்
படைப்புகளை எல்லாம் உள்ளம் விரும்பினால்.

மங்களகரம் நிரம்பியவர் சிவசங்கரன் - சர்வ
மங்களத்துக்கும் நிலைக்களன் ஆவார் அவர்!"

வினவினார் விஷ்ணு விரைந்து வந்த சிவனிடம்
"விவரம் கூறுங்கள் இத்தனை சினம் எதற்காக ?"

"சபித்துவிட்டான் சூரியதேவன் என் பக்தனை!
சரியான பாடம் கற்பிக்கவே நான் வந்துள்ளேன்.

அழிக்க முடியும் அவன் சம்பத்தைச் சாபத்தால்!
அழிக்க முடியுமா அவன் பக்தியைச் சாபத்தால்?

செல்வத்தை வெறுப்பவர்கள் என் பக்தர்கள்;
செல்வத்தை விரும்பி விழைவது இல்லை!"

"மன்னிக்க வேண்டும் சூரியனின் பிழையை!
விண்ணுலகப் பேறு அடைந்தான் உம் பக்தன்

அரசாண்டு மடிந்தான் விருஷபத்வஜன்;
அரசாண்டு மடிந்தான் மகன் ரதத்வஜன்.

ஆசை கொண்டனர் அவன் இரு புதல்வர்கள்
குசத்வாஜன், தர்மத்வாஜன் செல்வம் பெற்றிட.

புரிந்தனர் தவம் லக்ஷ்மியைக் குறித்து;
அருள்வாள் லக்ஷ்மி புதல்வியாகப் பிறந்து!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#15b. SivA's anger subsided!

Lord NArAyaNa gave abhayam or fearlessness to the Sun God. He said, "There is no danger to you from Lord Sivasankara. He is a devotee of his devotees. He lives in their hearts. He is dearer to me than my own life.

Is there any God greater than Siva?
He can create the Universe as if it were a child's play. He is the personification of auspiciousness and bestows auspiciousness on everyone. "

Lord Siva reached there with his trident and in anger. Lord Vishnu asked him," Why are you so angry ? Tell me all about it"

Siva replied to Vishnu, "The Sun God has cursed my dearest devotee. I want to teach him a good lesson today. He may curse and destroy the wealth of my devotee! But can he destroy the devotion of my devotee by his curse? My sincere devotees do not care for material wealth. They do not desire or pray for worldly wealth."

Lord NArAyaNA spoke thus: "PleaSe pardon the mistake committed by the Sun . Your devotee Vrishabadwajan has ruled well and reached your abode. His son Rathadwajan also has ruled and reached your abode.

He has two sons Dharmadwajan and Kusadwajan. They both seek wealth and pray to Lakshmi Devi. She will be born as the daughter of Kusadwajan and give them the wealth they so desire"


 
BHAARGAVA PURAANAM- PART 1

#16a. திரிபுரன்-1

விரைவிலேயே பூவுலகை வென்றான்
விநாயகர் அருள் பெற்ற அரக்கன் பலி.

அஞ்சினர் பலியின் வலிமை கண்டவர்;
தஞ்சம் புகுந்தனர் அவன் பாதுகாப்பில் .

பாதாளலோகம் சென்றான் அரக்கன் பலி;
பாதாளம் பணிந்தது எதிர்ப்பு ஏதுமின்றி.

அசுரர்களின் அரசனாக அரக்கன் பலியை
ஒருமனதாகத் தேர்வு செய்தது அரக்ககுலம்.

இந்திரலோகம் பலியின் அடுத்த இலக்கானது;
இந்திரனையும் வென்றால் ஆளலாம் மூவுலகு!

தூதர்களை அனுப்பினான் பலி இந்திரனிடம்;
தூதர்கள் சென்று செப்பினர் தூது மொழிகள்,

“ஏதும் எதிர்ப்பு இன்றிப் பணிந்துவிட்டால்
சேதம் இன்றித் தப்பி பிழைக்கலாம் தேவர்,

பேதப் பட்டு எதிர்த்துப் போரிட்டால் பலி
ஊதித் தள்ளிவிடுவான் உம் தேவர்களை!”

இந்திரனின் கண்கள் சிவந்து போயின.
“இந்திரன் பணிய மாட்டான் பலிக்கு !

யுத்தம் தேவை என்றால் நான் தயார்-ஆ
யத்தம் செய்யுங்கள் உங்கள் படைகளை.”

தோல்வி அடைந்து விட்டது தூது என்று
கேள்விப்பட்டவுடன் பொங்கியது சினம்!

போருக்குத் தயார் ஆயினர் சுர, அசுரர்.
போர் துவங்கியது; படைகள் மோதின;

யானையோடு யானை மோதிக்கொள்ள,
சேனையில் குளம்பொலிகள் கேட்டன.

அம்புகள் கொய்த தலைகள் பறந்தன
அம்புவி அதிர்ந்தது ஆயுத மோதலால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#16a. Thripuran

Bali conquered the earth in no time. The kings had heard of Bali’s strength and his boons. They surrendered unconditionally. Bali went to pAtAl. There was hardly and resistance and he conquered pAtAl. His next target was swargga.

All the asurAs chose him as their king unanimously. He sent messengers to swargga. “If you surrender unconditionally, there will be no damage to life and property. If you choose to resist and fight, Bali will overcome you in no time”

Indra became very angry and replied,” I will never surrender to Bali. If you want a war, than you will have it. Get your army ready for the battle”

Bali was beside himself with anger at the failure of the mission of the messengers. Both the surA and asurA got ready for the war. Elephants fought with elephants. Horses were trotting around all the time.

The heads severed by the arrows flew in the air like balls. The din and the clash of the weapons shook the earth.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#21c. நகர முற்றுகை

ஒலித்தன வாத்திய முழக்கங்கள் காசியில்;
ஒலித்தன சங்குகள், வேதங்கள் காசியில்.

“கணம் தாமதியாமல் முற்றுகை இடுவோம்;
மணம் நடந்தது உண்மை தான்!” என்றனர்.

வந்தான் சுபாஹு மன்னர்கள் அருகில் மெல்ல,
“வரவேண்டும் திருமண விருந்து உண்பதற்கு!

வஞ்சிக்கவில்லை நான் உங்கள் எவரையும் – மகள்
கிஞ்சித்தும் விரும்பவில்லை இந்தச் சுயம்வரத்தை.

வரித்து விட்டாள் சுதர்சனனைத் தன் மணாளனாக;
வரித்து விட்டாள் சுதர்சனனை தேவியின் ஆணையால்.

வரித்து விட்டாள் சுதர்சனனைக் காணும் முன்னரே;
வரித்து விட்டாள் சுதர்சனனை உறுதியான மனதுடன்.

கருணை காட்டுங்கள் புதிய மணமக்கள் மீது;
பெருமையுடன் வாழ நன்கு வாழ்த்துங்கள் !”

“நீர் செய்த இந்த மரியாதைக்கு குறைச்சல்
நீர் தரும் விருந்தை உண்பது தான் போம்!

செய்யும் நீர் இன்னும் செய்ய வேண்டியவற்றை;
செய்வோம் நாங்கள் செய்ய வேண்டியவற்றை!’

என்ன செய்வார்களோ என்றஞ்சினான் சுபாஹு;
சென்றான் தயங்கியபடி தன் அரண்மனைக்கு.

“வெளியே வந்து தானே ஆகவேண்டும் அவர்கள்
வழி மறித்துக் கவர்வோம் கன்னியை நாம்” எனக்

காவல் பலமானது காசி நகரக் கோட்டைக்கு!
காற்றுக் கூடச் செல்ல முடியாது வெளியே!

முற்றுகை இட்டிருந்தனர் மன்னர்கள் காசி நகரை;
சற்றும் குறைவின்றி நடந்தது திருமண விருந்து.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


3#21c. The Siege

The kings could hear the sound of auspicious musical instruments, conches, and Veda gosham. They knew that the marriage has taken place secretly during the night. They decided to lay a siege on the city on Kaasi.

King Subaahu approached the other kings and said in a gentle voice, “Please come and attend the wedding feast arranged in your honor. I did not want to cheat you but my daughter would not agree for the swayamvaram arranged without her consent.

She had chosen Sudarsanan as her husband long ago, as told by Devi, even befoer she saw him or knew him. Have pity on the newly weds and let them start their lives peacefully and happily. Please bless them and attend the wedding feast”

The Kings were very rude and said, “After the way you have deceived all of us what makes you think we will attend the feast and bless the couple.You may do whatever you feel right. We will do what we feel right”

Subaahu got worried as to what would be the outcome of such an anger and threat from the kings. He returned to his palace quietly.

“The newly wed coupe will have to leave this city sooner or later. We will waylay them and abduct the princess at that time!” The siege was intensified so that even air could not enter or leave Kaasi.

While the siege was on, the wedding feast went on in Kaasi undisturbed and undeterred.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#16a. வேதவதி

கடுமையான தவம் செய்தனர் இரு சகோதரர்களும்;
கொடுத்தாள் லக்ஷ்மி விரும்பிய வரங்கள் எல்லாம்.

ஆயினர் புண்ணியசாலிகள்; ஆயினர் செல்வந்தர்;
அடைந்தனர் புத்ர பாக்யம்; அடைந்தனர் மகிழ்ச்சி!

மாலாவதி குசத்வஜனின் அழகிய மனைவி;
மாலாவதி ஈன்றாள் அழகிய பெண் குழந்தை.

லக்ஷ்மியின் அம்சமாகத் தோன்றினாள் அவள்!
லக்ஷணமாக உச்சரித்தாள் வேத சப்தங்களை!

வேதத்வனிகளைச் செய்த குழந்தைக்கு அழகிய
வேதவதி என்ற பெயர் இட்டுப் பேணி வளர்த்தனர்.

தவம் செய்யச் சென்றாள் வேதவதி - அவள்
தவத்தின் நோக்கம் நாராயணனை மணப்பது.

தடுத்தும் கேட்கவில்லை புஷ்கர க்ஷேத்திரத்தில்
கடும் தவம் செய்தாள் ஒரு மன்வந்தரக் காலம்.

இளைக்கவில்லை, வருந்தவில்லை - கட்டுக்
குலையாத இளமை எழிலோடு இருந்தாள்.

"விஷ்ணுவை மணப்பாய் அடுத்த பிறவியில்!"
இஷடப்பட்ட வாக்குறுதியைத் தந்தது அசரீரி.

கந்த மாதனத்தில் தொடர்ந்தது கடும் தவம்
"சொந்தமாக வேணும் விஷ்ணு கணவனாக!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#6a. Vedavati

Dharmadhwaja and Kusadhwaja practiced severe penance and worshiped Lakshmi Devi. They then got their desired boons. By the boon of Lakshmi Devi, they
became the rulers of the earth. They acquired great religious merits and they got their children.

MAlAvati was the wife of Kusadhvaja. She delivered a daughter as an amsam of Lakshmi. The baby was full of wisdom and knowledge. She began singing clearly the Vedic mantras from the lying-in-chamber - as soon as she was born.


Therefore She was named Vedavati by the Pundits. She bathed after her birth and got ready to go to the forest to practice severe tapas. Everyone then, tried earnestly to stop her.



But she did not listen to anybody. She went to Pushkara Kshetra and practiced severe penance for one Manvantara. Yet her body did not get lean or tired a bit. By degrees her youth began to show signs in her body and she became extremely beautiful and attractive.


One day she heard an asareeri voice from the air above, “O Fair One! In your next birth NArAyaNA will become your husband.” Hearing this, her joy knew no bounds. She went to the solitary caves in the GandhamAdan mountain to practice tapas again.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#16b. திரிபுரன்-2

பலி உற்சாகப்படுத்தினான் படை வீரரை!
வலிமை பெற்றதோ விநாயகர் அருளால்!

இந்திரன் உடைத்தான் குதிரையின் கால்களை!
இந்திரன் மயங்கும்படி ஓங்கி அடித்தான் பலி.

மூவுலகையும் வெல்லும் வரம் படைத்தவன்
முன் நிற்க இயலாது மறைந்தான் இந்திரன்.

ஐராவதத்தில் அமர்ந்து வென்றான் பலி,
பிரமலோகம், வைகுண்டம், சுவர்க்கம்!

திக்விஜ்யம் முடித்துத் திரும்பினான் பலி;
திரிபுரத்தை அருளவேண்டினான் ஐயனை.

நூறு யோசனை அகலமும், உயரமும் கொண்ட
மூன்று கோட்டைகள் வந்தன வானிலிருந்து.

மகன்கள் மூவரைத் தோற்றுவித்தான் பலி
மனத்திலிருந்து, தன் மனம் விரும்பியபடி.

வஜ்ஜிர தம்ஷ்டிரன், வீமகாயன், காலகூடன்
விரும்பித் தோற்றுவித்த மகன்கள் மூவர்.

சுக்கிலம் ஆனது அந்த இரும்புக் கோட்டை.
சுபிலம் ஆனது அந்த வெள்ளிக் கோட்டை.

சுவர்த்தி ஆனது அந்தத் தங்கக் கோட்டை;
சுரக்ஷணை கூடியது இந்தத் திரிபுரங்களால்!

சண்டன் ஆண்டான் சத்திய லோகத்தை – பிர
சண்டன் ஆண்டான் வைகுண்ட லோகத்தை.

மகிஷி ஈன்றாள் பலியின் மகன் மதனை.
ஏகி ஒளிந்தனர் தேவர்கள் கயிலையில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#16b. Thripuran – 2

Bali encouraged his soldiers to fight better. They were also stronger due to the blessings of VinAyaka. Indra broke the front legs of the horse on which Bali was riding. Bali jumped down and hit Indra hard so as to make him swoon.

A terrible one to one war followed between Indra and Bali. Indra was no match to Bali and he quietly disappeared from the battle field and escaped to KailAsh.

Bali entered the heaven seated on Indra’s four tusked white elephant AirAvat. There absolutely no resistance in swargga. Then he went to SatyalOkam and Vaikuntam. They too fell without any resistance. All the DEvA had taken refuge in KailAsh, since lord Siva was the only person who could win over Bali.

After the completion of the digvijayam, Bali returned to the earth. He requested VinAyaka to grant him the the three metal forts promised earlier. Bali created three sons out of his mind with sankalpam. Vajradamshtran, BeemakAyan and KAlakootan were the three sons.

The three metals forts flew down from the sky. The iron fort was named as Sukla, the silver fort as Subila and the gold fort as Suwarthi. ChaNdan ruled over SatyalOkam and PrachaNdan ruled over Vaikuntam as Bali’s representatives.

Bali’s wife gave birth to a son named Madhan. All the DEvA had taken refuge in KailAsh by then.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#22a. போர் தொடங்கியது

நடந்தது திருமண விருந்து மிகவும் சிறப்பாகத்
தடங்கல் இன்றித் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு.

அமைச்சர்களிடம் சுபாஹு ஆலோசனை கேட்டான்
“அமைந்த முற்றுகையை எதிர்கொள்வது எப்படி?”

உற்சாகமாக உரைத்தான் மணமகன் சுதர்சனன்,
“உதவுவாள் பராசக்தி ஆபத்துக் காலங்களில்!

சென்று விடுவோம் பரத்வாஜரின் ஆசிரமம்;
ஒன்றும் நேராது தீங்கு நமக்கு!” என்றான்.

பொன், பொருள், படை வரிசைகள் திரட்டித்
தன் தாய், மனைவியுடன் ஏறினான் ரதம்.

கண்டான் கோட்டை வாசலை நெருங்கியதும்
மண்டியிருந்த மன்னர்களின் முற்றுகையை!

அடையவில்லை சிறிதளவும் பிராண பயம்;
தடையின்றி ஜெபித்தான் காம பீஜ மந்திரம்.

வெறியுடன் முன்னேறியது மன்னர்கள் படை!
வெறியுடன் எதிர்த்தான் மன்னன் சுபாஹு !

பயங்கரப் போர் மூண்டது படைகளிடையே
பாய்ந்தன பாணங்கள் எதிரெதிர் திசைகளில்.

தியானத்தில் இருந்தான் சுதர்சனன் – சுபாஹு
“நியாயமாகப் போரிட வேண்டியவன் நீ!” எனச்

சிங்க வாஹனத்தில் தோன்றினாள் மஹாதேவி
சிவந்த ஆடை, ஆபரணங்கள், மாலையணிந்து!

அஞ்சினர் மன்னர்களின் படைவீரர்கள் – அங்கு
கொஞ்சமும் எதிர்பாராது தோன்றிய பெண்ணால்.

“துணை புரிய வந்துவிட்டாள் நான் தொழும் தேவி!
இணையில்லை தேவிக்கு எந்தப் படையும்!” என்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

3#22a. The war began!

The wedding feast went on uninterrupted for six long days. Subaahu asked his ministers, “How do we face the siege laid on our city of Kaasi?” Sudarsanan replied with great enthusiasm,”Paraa Shakti helps us during the dangers. We can safely reach sage Bharatwaaj’s ashram. No harm will befall us I assure you!”

Sudarsanan gathered his army, all his wedding gifts and sat on the chariot with his mother and his bride. When he came near the city gates, he saw the dense siege laid on the city by the kings. He never felt threatened or that his life was in danger. He started to do japam of Devi’s Kaama Bheeja mantram.

The collective army of the kings attacked with anger. King Subaahu also fought with great anger. He was shocked to see Sudarsanan immersed in meditation in the battle field. He took his son in law to task and told him, “You are the one who should be fighting now – not me”

Then Mahaa Devi appeared in the battle field on her simha vaahanam. She was dressed in red silk, red ornaments and red garlands. The army men of the kings got the shock of their lives to see a woman in red appear suddenly seated on a lion.

Sudarsanan was happy and said, “Devi has come to our rescue. No army can match her in their might”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#16b. வேதவதி (2)

கண்டான் கட்டுக் குலையாத தபஸ்வினியை!
கொண்டான் காமம் ராவணன் வேதவதியிடம்.

விதிமுறையை மறந்து உறவாட முயன்றான்
அதிகரித்த காம வேகத்தினால், பலவந்தமாக!

ஸ்தம்பிக்கச் செய்தாள் வேதவதி ராவணனை;
ஸ்தம்பமாக நின்றான் அசையவே முடியாமல்!

துதித்தான் மனத்தில் லக்ஷ்மியை ராவணன்;
துதித்ததால் தளர்ந்தது ஸ்தம்பனம் சற்று!

காமம் தலை தூக்கியது மீண்டும் - அவள்
கண்டித்தும் அணைக்க முயன்றான் அவளை

"அழிவீர் வேரோடு நீயும், உன் அரக்கர் குலமும்,
பழி தீர்ப்பேன் பெண்ணுருவில் உன்னை அழித்து!"

சபித்தாள் பதிவிரதை வேதவதி அவனை!
சாய்ந்தாள் மண்ணில் உடலைத் துறந்து!

கழிவிரக்கம் கொண்டான் இராவணன் - மிக
அழுது புலம்பியபடிச் சென்றான் இருப்பிடம்.

பிறந்தாள் லக்ஷ்மியின் அம்சமான வேதவதி;
வளர்ந்தாள் ஜனக மன்னனின் புதல்வியாக!

கைப்பிடித்தான் சீதையை ஸ்ரீ ராமன்; அவன்
கடை பிடித்தான் தந்தையிட்ட ஆணையை.

வனவாசம் சென்றனர் ராம, லக்ஷ்மண, சீதையர்
வன சஞ்சாரத்தில் அடைந்தனர் ஒரு கடற்கரை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

VEDAVATI -2

RAvaNa set his eyes on this beautiful young tapasvini one day. He saw her smiling face, beautiful teeth, her face resembling a lotus in autumn, her heavy loins and her full breasts and became very passionate.

He lost his selfcontrol and was ready to violate her by sheer force. Seeing this Vedavati, became angry and out of her power of penance made him unable to move.

He remained motionless like an inanimate body. He could not move his hands or feet nor could he speak. That clever fellow mentally recited praises to Lakshmi Devi.

Praising of the Higher Sakti can never go futile. Vedavati became pleased with his stuti and granted him religious merits in the next world. But she also pronounced this curse!

"You have defiled my body out of your lust and passion! You and your whole race will pay for this by perishing for my sake!" Saying this to RAvaNa, Vedavati left her body by her yogic power.

Vedavatî took birth afterwards as SeetA, the daughter of
Janaka. For the sake SeetA RAvaNa and his whole race got destroyed just as Vedavati had cursed before quitting her mortal body


By the merits earned by her penance in her previous birth, Vedavati reborn as SeetA married RAmachandra. SeetA in her fresh youth enjoyed various pleasures in the company of her husband, who was handsome, peaceful in temperament, strong and invincible.

But the all-powerful Destiny is irresistible. RAmA had to keep up the promise made by his father to his step mother. He had to go to the forest as ordained by the all powerful Destiny. He went with his wife SeetA and younger brother Lakshman. They reached a beach during their wandering.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#16c. திரிபுரன்-3

கயிலையில் பதுங்கி இருந்த தேவர்கள் – தம்
இயலாமையை இயம்பினர் நாரத முனியிடம்.

“விநாயகர் அருள் அளித்துள்ளது வலிமை.
விதியும், நாரணனும் வெல்ல இயலாதார்!

அரன் மட்டுமே அழிக்க வல்லவர் பலியை.
வரம் தந்த கணநாதன் காட்டுவார் வழியை.

அபாயம் செய்யும் அசுரனை வெல்லுகின்ற
உபாயம் இருக்கும் என்பது மட்டும் உறுதி!”

ஏகாக்ஷரத்தை உடனே உபதேசித்தார் நாரதர்,
ஏகாக்ஷரத்தை ஓதத் தொடங்கினர் தேவர்கள்,

வித்தக வினாயகனைச் சித்தத்தில் வைத்து
மொத்தக் கூட்டமும் ஏகாக்ஷரம் ஜபித்தது.

கோடி சூரியப் பிரகாசத்துடன் தோன்றினார்,
வாடிய தேவர்கள் முன் வேழமுக நாதன்;

நான்கு கரங்கள், நவரத்ன அணிமணிகள்
மூன்று கண்கள், முன் வளைந்த துதிக்கை.

“பலிக்குத் தந்தீர் பலமும் வலிமையையும்,
பலிக்கு அஞ்சி ஒளிந்துள்ளோம் நாங்கள்!

வாழ்வையும் வளத்தையும் தந்த நீரே
தாழ்வையும் அழிவையும் தரவேண்டும்”

“கடும் தவம் செய்து வரம் பெறுபவர்கள்
கொடும் செயல்கள் செய்வது வழக்கம்.

வரத்தினால் அடைவர் வளமான வாழ்வு;
வரத்தினால் அடைவர் அளவற்ற மமதை!

கயிலாய நாதரே வெல்ல வல்லவர் – நீவீர்
கயிலைக்குச் சென்று விண்ணம் செய்வீர்

பலியின் அழிவுக்கான வழியினை நான்
பல நாட்கள் முன்பே வகுத்தது உண்மை.

பலியின் அழிவுக்கான முயற்சியை நான்
எளிமையாக துவக்கி வைக்கிறேன் இன்று”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#16c. Tripuran – 3

The DEvA who were hiding in KailAsh told NArada about their sufferings. “VinAyaka has given Bali special boons. Even VishNu and Brahma can’t destroy him. Only Siva can destroy Bali. I am sure lord VinAyaka will show you the way. Pray to him!” NArada taught them EkAksharam and the DEvA started chanting it concentrating on VinAyaka Moorthi.

VinAyaka appeared in front of them with the brilliance of ten million suns shining together. He had four arms, three eyes and the vakra thuNdam. He wore exquisite jewels made of the nine precious gems.

“Lord! You have given boons to Bali making him invincible. Only you can bring about his destruction. We are helpless!” The DEvA pleaded to VinAyaka.

“Those who do severe penance and get boons later on become arrogant because of their boons and start troubling everyone else. Only Lord Siva can put an end to Bali. Please go and pray to him in KailAsh.

In the meantime, I well start doing certain things which will speed up Bali’s destruction” VinAyaka promised the DEvA.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#22b. வெற்றி முழக்கம்

எழுந்தது ஹூம் என்ற சிங்கத்தின் கர்ஜனை!
விழுந்தன யானைகள் அஞ்சி உயிர் இழந்து!

பெருமூச்செறிந்தது தேவியின் சிங்கம்,
பெரும் புயலானது அதன் மூச்சுக் காற்று.

எட்டு திசைகளிலும் சுருட்டி வீசியது
எதிரியின் படைவீரரைப் புயல் காற்று.

“எங்கே என்னை எதிர்க்க வந்தவர்கள்?” என
அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர் அரசர்கள்.

யுதாஜித் சினந்தான் மற்ற மன்னர்களிடம்,
“யுத்தத்தில் பெண்ணைக் கண்டு அஞ்சுவதா?

அழிப்போம் மணமகனை அடியோடு – கூடிக்
களிப்போம் மணமகளுடன் அனைவரும்!”

எடுத்தாள் மஹாதுர்க்கை பல வடிவங்கள்;
தொடுத்தாள் சரமழையை எதிரிகள் மீது.

கொன்று விட்டாள் யுதாஜித், சத்ருஜித்தை!
வென்றுவிட்டது சுதர்சனனின் சிறிய படை!

தக்க தருணத்தில் வந்து உதவிய தேவியை
மிக்க பக்தியுடன் வணங்கினான் சுதர்சனன்.

போற்றினான் தேவியை நாவாரத் துதித்து,
“பெற்றுக் கொள் நீ விரும்பும் வரங்களை!”

தேவி கூறினாள் அளவில்லாத கருணையுடன்;
தேவியிடம் பெற்றான் சுதர்சனன் வரங்களை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


3#22b. The joy of victory

Devi’s lion roared loudly. All the elephants in the enemy’s side fell dead in fear. The lion breathed fiercely. A storm blew and threw out the enemy soldiers in all the eight directions. The kings who had laid the siege now stood shaking in fear.

Yudaajit got annoyed with the other kings. “Will you be afraid of a woman who appeared in the battle field? We will kill Sudarsanan and ravish the princess”

Devi got angry and took on many different forms now. She shot arrows like a rain cloud showering water droplets. She killed Yudaajit and Satrujit. She shattered and scattered the enemy’s army. The small army of Sudarsanan thus vanquished the combined army of all those kings.

Sudarsanan paid obeisance to the Devi who appeared at the right time and place to make him victorious. Devi wished to grant him boons. He praised Devi and got the boons he wished for.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#16c. வேதவதி (3)

வந்தான் அக்னி தேவன் தேவர்களின் தூதுவனாக
"வந்தது ராவணன் சீதையை அபகரிக்கும் நேரம்.

தந்து விடுங்கள் சீதையை பத்திரமாக என்னிடம்;
தந்து விடுகிறேன் ஒரு மாய சீதையை உம்மிடம்.

போருக்குப் பின் தருவேன் சீதையை உம்மிடம்;
சொல்லவேண்டாம் தேவ ரகசியம் எவரிடமும்!"

போலி சீதையை உருவாக்கினான் அக்னி தேவன்;
போனான் நிஜ சீதையைப் அழைத்துக் கொண்டு.

மாய மானிடம் மயங்கினாள் மாய சீதா தேவி.
மாய மானைத் துரத்திச் என்றான் ராமசந்திரன்.

தூரத்தில் அலறியது மாயமான் ராமன் குரலில்;
துரத்தினாள் சீதை ராமனிடம் லக்ஷ்மணனை!

அபகரித்தான் சீதையை அங்கு வந்த ராவணன்;
அலைந்து திரிந்து தேடினர் சீதையை இருவரும்.

தெரிந்தது சீதையிருப்பிடம் அனுமன் உதவியால்;
பரிந்து உதவியது வானர சேனை ராம லக்ஷ்மணருக்கு.

சென்றான் ராமன் கடல் கடந்து இலங்கைக்கு
வென்றான் ராவணாதியரைப் பெரிய சமரில்.

மீட்டான் சீதையை அசோக வனத்தில் இருந்து;
இட்டான் கட்டளை அக்னிப் பரீட்சைக்கு ராமன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#16c. Vedavati (3)

Agni Deva had come as the messenger from the Devas. He told RAmA, "The time for the abduction of SeetA by RAvaNa is nearing. Please hand over SeetA Devi to me. I shall replace her with a mAya SeetA. I will return her to you safely after RAvaNa is vanquished. This is a Deva rahasyam. Please do not reveal this to anyone."

So a mAya SeetA was created by Agni and the real SeetA was led away to safety. The mAya SeetA fell in love the mAya deer and wanted to have it as a pet.

RAmA went chasing that strange golden deer. When he realized that it was the wrok of an sura, RAmA struck it with an arrow. But the deer shouted in the voice of RAmA before giving up it ghost.

SeetA sent away Lakhsman to help RAmA. RAvaNA found a chance to abduct SeetA to Lanka. RAmA and LakhmaNa searched for SeetA everywhere. They befriended Sugreeva and with the help of the vAnara sEnA found the whereabouts of SeetA Devi.

With the help of the vAnara sEnA, RAmA and Lakshmana crossed the sea and reached Lanka. They killed RAvaNA and his clan in a terrible war.

SeetA was freed from Asoka vanam. RAmA ordered her to enter the fire in an Agni pareeksha or ordeal of fire.

 
BHAARGAVA PURAANAM - PART 1

#16d. கலாதரன்

தேவர்கள் தேடிச் சென்றனர் சிவபிரானை;
வேழமுகன் தேடிச் சென்றான் திரிபுரனை.

அந்தணன் வடிவில் வந்த கணபதியை
அழைத்து உபசரித்தான் திரிபுரன் பலி.

“மூவுலகாளுகின்றேன் ஒரு குடைக் கீழ்!
பூவுலகினில் தங்கள் தேவை என்ன?” என;

“அசுரர் அரசே! அந்தணன் கலாதரன் நான்.
ஆச்சரியம் அடைந்தேன் உன் புகழ் கேட்டு!

ஆனைமுகனின் பக்தன் ஆவாய் நீ – நானும்
ஏனைய தெய்வங்களைத் தொழுவதில்லை!

கைலாய நாதன் ஆராதித்து வருகின்றான்
வையகத்தில் காண இயலாத மூர்த்தியை.

சிந்தாகுலம் தீர்ப்பதில் தன்னிகரற்றது அது!
சிந்தாமணி விநாயகர் எனப் பெயர் பெற்றது.

விழைந்தேன் அந்த மூர்த்தியினைப் பெற்றிட.
விரைந்தேன் இங்கு உன் உதவியைப் பெற்றிட

உன்னால் அதனைப் பெற்றுத் தர இயலுமா?
என்னால் அதனை ஆராதிக்க இயலுமா?”

“வல்லமையில் ஐயம் கொண்டுளீர் ஐயா!
சொல்லியும் விட்டீர் அதை இங்ஙனம்.”

“வல்லமையில் ஐயம் இல்லை திரிபுரா!
உள்ளபடி நீயும் ஒரு விநாயகர் பக்தனே!

கண்டவுடன் காதல் கொண்டு, மூர்த்தியை
வேண்டும் உனக்கு என்று கூறிவிட்டால்?”

இடியோசை போல நகைத்தான் அசுரன்!
நடுங்கியது அரசவை அவ்வொலியில்.

“உடனே தருவிகின்றேன் அந்த மூர்த்தியை.
இடம் தருவேன் இங்கேயே தங்குவதற்கு!”

“அருகிலேயே தங்கியுள்ளேன் நான் இப்போது;
வருவேன் வேண்டும்போது மீண்டும் இங்கே”

வாழ்க வளமுடன், விசாலக்ஷி ரமணி.

#16d. KalAdharan

The DEvA went to meet lord Siva and VinAyaka went to meet Bali. Bali welcomed the young Brahmin who was in fact Lord VinAyaka himself in a disguise.

“What is that you wish to possess sir? I have the three worlds under my rule and can get you anything you wish to have!” Bali told the young Brahmin boy.

“I am a Brahmin named as KalAdharan. I am impressed by your greatness. I heard that you worship only VinAyaka. I too do not worship any other God except VinAyaka.

Lord Siva has a ChintAmaNi VinAyaka statue. It has the power to put an end to all our worries. I wish to do ArAdhanA to that statue. Can you please get it for me?” The young brahmin boy asked the mighty Bali.

“You still have doubts in my powers. You have let it out this way. ” Bali told KalAdharan who replied to Bali thus:

“I have no doubts in your power. But you may wish to keep the statue with you once you set your eyes on it!”

Bali laughed like thunderclaps and the whole sabha reverberated. “I shall get that statue for you right now. Please stay with me in the palace till then!” Bali told KalAdharan.

“I am already staying nearby. I can come here at anytime I wish to.” KalAdharan told Bali this and left the palace.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3# 23. சுபாஹு கேட்ட வரம்

“மண்ணுலக போகங்கள் நிலையற்றவை.
விண்ணுலக வாழ்வும் நிலையற்றதே!

நீங்காத இன்பம் உன் தரிசனம் ஒன்றே!
நீங்காத அனுபவம் உன் தரிசனம் ஒன்றே;

தேங்காது வளரும் பக்தியைத் தருவாய்!
தங்குவாய் என் அரண்மனையில் என்றும்.

சத்ரு பயம் இல்லாமல் வாழவேண்டும் மக்கள்
நித்தியக் காவல் தெய்வமாக அமர்வாய் தாயே!”

“முக்தி தரும் காசியில் உறைவேன் நான்;
நித்தியக் காவல் தெய்வமாக என்றென்றும்!”

தேவி வரம் தந்தாள் காசி மன்னனுக்கு;
தேவி வரம் தந்தாள் சுதர்சனனுக்கும்.

“அரசாள்வாய் அயோத்திக்குச் சென்று!
அரசாள்வாய் ராஜநீதியில் வழுவாமல்!

நித்தியம் என்னை மறவாது துதித்தால்
சத்தியமாக உனக்கு நன்மை செய்வேன்.

கிருஷ்ண பக்ஷ அஷ்டமி, நவமி, சதுர்த்தியில்
கிராமமாகச் செய்து வருவாய் பலிதானம்.

சரத் ருதுவில் வரும் நவராத்திரியில் மற்றும்
சித்ரம்,ஆஷாடம், ஆச்விஜம் மாதங்களில்

முறைப்படி பூஜை செய்து வருமாறு – எடுத்து
உரைப்பாய் உன் நாடு, நகரங்களில்!” என்றாள்.

பிழைத்திருந்த எதிரி மன்னர் புடை சூழ்ந்தனர்’
“பிழை செய்துவிட்டோம் உன்னை பகைத்து!

புருஷார்த்தங்களைத் தரும் தேவியைக் கண்முன்
பிரத்தியக்ஷமாகத் தோன்றச் செய்துவிட்டாய் நீ!

சக்தியின் மகிமையைக் கூறவேண்டும்!” எனச்
சக்தியின் மகிமையைக் கேட்டு மகிழ்ந்தனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

3#23. Boon sought by Subaahu

Subaahu praised Devi thus: “The pleasures of the life on earth are ephemeral. The life in heaven is temporary. The only everlasting experience and happiness in one’s life is getting your divine darshan oh Devi!.

Please grant me bhakti which does not diminish with time. Please reside in my palace in my city of Kaasi forever. My citizens must live without any fear of the enemies. Please become the protecting deity of Kaasi”

” I shall reside in Kaasi – the city which assures mukti – as the protecting deity forever.” Devi assured Subaahu. Devi granted boons to Subaahu and Sudarsanan.

She told Sudarsanan,”Go to Ayodhya and rule your kingdom wisely and justly. If you remember me and do aaraadhana everyday, I will be always there to help you in any difficulty or danger.

Perform Bali daanam on the Ashtami, Navami and Chathurdasi in Krishna paksha without fail. Tell you countrymen to celebrate the Navaraatri in Sarat ruthu and do aaraadhana in the months of Chaitram, Aashaadam, Aasvijam in the prescribed manner.”

The kings who had not got killed came and surrounded Sudarsanan now. “We have committed a grave mistake in fighting with you Sudarsanan. You have made Devi – the giver of chatur vidha purushaartham namely Dharma, Artha, Kaama and Moksham appear in front of our eyes. Please expatiate to us on the greatness of Shakti Devi”

They listened to the greatness of Shahti Devi with deep interest.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#16d. வேதவதி (4)

வெளிவந்தாள் அசல் சீதை அக்னியிலிருந்து
"வழி காட்டும் எனக்கு! என்றாள் சாயாதேவி.

சாயாதேவி என்பது அக்னி உருவாக்கிய
மாய சீதைக்கு இன்னொரு பெயர் ஆகும்!

"புஷ்கரத்தில் செய்வாய் நீண்ட நெடும் தவம்!"
ஸ்வர்க்க லக்ஷ்மியாகிவிட்டாள் சாயாதேவி.

பிறந்தாள் பாஞ்சாலியாக யக்ஞ குண்டத்தில்;
சிறந்த பாண்டவர்களுக்கு மனைவியானாள்.

வேதவதியாக இருந்தாள் கிருத யுகத்தில்;
சீதையாக இருந்தாள் திரேதா யுகத்தில்;

திரௌபதியாக இருந்தாள் துவாபர யுகத்தில்;
திரிகாயனி என்ற பெயர் பெற்றாள் சாயாதேவி.

"ஐந்து கணவர்களை அடையக் காரணம்?"
வியந்து கேட்டான் நாரதன் நாரணனிடம்.

சங்கரனைக் குறித்துத் தவம் செய்தாள் சாயாதேவி ;
சங்கரனிடம் கணவனை வேண்டினாள் ஐந்துமுறை!

'ஐந்து முறை கேட்டாய் கணவனை வேண்டி!
ஐந்து கணவர்களை மணம் புரிவாய் என்றார்"

அரசாண்டான் ராமன் பதினோராயிரம் ஆண்டு.
இரண்டறக் கலந்தாள் வேதவதி லக்ஷ்மியிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#16d. Vedavati (4)

MAya SeetA - also knwon as ChAyA Devi - entered the fire and the real SeetA emerged from the fire. Now ChAyA Devi asked RAma what she was supposed to do.

She was advised to perform a long penance in the Pushkara kshetra. She did as told and became the Swargga Lakshmi.

She was born again as PAnchAli from the yagna kundam. She married and became the wife of the Pancha PANdavAs.

She was born as Vedavati in Krita yuga; she was born as SeetA in TretA yuga and she was born as PAnchAli in the dwAparauyuga. She has another name as Thri KAyanee.

NAraDA asked NArAYaNA,"Why did ChAyA Devi get five husbands as Droupadi?"

NArAyaNa replied, "She did penance towards Siva. She asked for a good husband five times. Siva blessed her with five husbands since she had asked five times."

RAmA ruled well for eleven thousand years and Vedavati merged with Lakshmi Devi inseperably.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#16e. அற்புத ரதம்

கயிலைநாதனைக் காணச் சென்றவர்
செய்தனர் ஓர் அற்புத ரதம் அவருக்கு.


சூரிய சந்திரர்கள் ஆயினர் திகிரிகள்;
அரிய ரித்விக்குகள் அழகிய உட்பரப்பு.


சீரிய சமயங்கள் ஆயின உள்ளிடம்;
மாயை ஆனது ரதத்தின் முகப்பாக.


பூவுலகம் ஆனது தேர்த் தட்டாக.
மேலுலகானது அழகிய ஆசனம்.


மலைகள் ஆயின வலிய தூண்கள்;
மணிவடங்கள் ஆயின புராணங்கள்


மேல்குடம் ஆயின தத்துவங்கள் ;
மேகங்கள் ஆயின சுற்றுப் பட்டாடை


தோரணங்கள் ஆயின சமுத்திரங்கள்
தாரணியோர் கண்டிராத அற்புதரதம்;


நான்கு வேதங்கள் ஆயின பரிகள்;
நல்ல ஆபரணங்கள் உபநிடத்துக்கள்;


அஷ்ட வசுக்கள் ஆயினர் கடிவாளம்;
இஷ்ட நுகத்தடி கர்ம ஞான காண்டம்.


தேரின் சாரதி ஆனார் நான்முகன்;
மேருமலை மாறியது அழகிய வில்லாக!


நாரணன் ஆனார் வில்லில் ஒரு பாணம்
நாண் கயிறு ஆனது வலிய வாசுகி.


தேவர்கள் ஆயினர் அரிய ஆயுதங்கள்
தேவர்கள் சேர்த்தனர் ரதத்தைக் கயிலை.


அன்புடன் அளித்தனர் முக்கண்ணனுக்கு.
இன்னல்களை எடுத்து இயம்பினர் தேவர்.


அபயம் அளித்தார் கைலாச நாதர்.
ஆறுதல் கூறினார்,” விடிவு வரும்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#16e. The wonderful chariot.


The DEvA who want to meet Lord Siva created an extraordinary chariot for him. The Sun and the Moon were made as its two wheels. The inner side of the chariot was made of rithviks. The inner space was made out of the religions.

MAyA became the front side of the chariot. The earth became the chariot plate and the swargga became the seat in the chariot. The mountains became its Strong pillars. The tatvas became the kalasa on the top.


The clouds became the silk cloth wound around the chariot. PurANAs and sAsthrAs became the ropes. The oceans became the decorative thoraNas. Such was that wonderful chariot as the world had never seen before!


The four VEdAs became the four horses. Upanishats became the decorations on the horses. Ashta vasus were the girdles of the horses. Karma kANdam and JnAna kANdam became the harnesses. Brahma became the sArathi.


Mount Meru became a strong bow. VishNu transformed into an arrow. The bow string was the strong sarpa Vasuki. All the DEvA transformed themselves into asthrAs and sasthrAs.


The chariot was taken to KailAsh and presented to Lord Siva. The DEvA elaborated their sufferings to Lord Siva who gave them abhayam and promised that their troubles would come to an end very soon.
 
3# 24. சுதர்சனனின் ஆட்சி

அயோத்தியை அடைந்தான் சுதர்சனன்
ஆதரித்து வரவேற்றனர் நகரத்து மக்கள்.

கண்டான் அந்தப்புரம் சென்று சிற்றன்னையை;
எண்ணி வணங்கினான் தன் தாயைப் போலவே.

“துர்க்கை கொன்றாள் உன் தந்தையை, மகனை!
துக்கம் வேண்டாம் மாண்டவர்களை எண்ணி!

புத்திரன் ஆவேன் இனி உனக்கும் நானே!
புத்தியில் சற்றும் பேதம் இல்லை தாயே!

துக்கப் படவில்லை கட்டில் அலைந்த போதும்;
தாக்கம் ஏற்படவில்லை கடின வனவாசத்தால்;

ஆனந்தப் படவில்லை அயோத்தி அடைந்ததால் ;
அனுபவிக்க வேண்டும் நம் வினைப் பயன்களை!”

வெட்கம் அடைந்தாள் லீலாவதி – தன்னுடைய
துக்கத்தை மறந்து ஆசீர்வதித்தாள் சுதர்சனனை.

சிறந்த சிற்பிகள் வந்து குழுமினர் காசியில்.
குறித்தனர் ஒரு சுப முஹூர்த்த வேளை.

கட்டினான் ஒரு மணிமண்டபம் தேவிக்கு;
கட்டித் தங்கத்தில் நவரத்தின சிம்மாசனம்!

பிரதிஷ்டை செய்தான் இஷ்ட தேவதையை;
பிரஜைகளையும் பூஜை செய்ய வைத்தான் !

ராம ராஜ்ஜியம் போலவே ஆட்சி செய்தான்;
காம வயப்படவில்லை அந்நாட்டு மக்கள்.

வளர்ந்தன வர்ணாசிரம தர்மங்கள்;
வளர்ந்தது அறம், தளர்ந்தது மறம்;

எல்லோரும் இன்புற்று வாழ்ந்தனர்,
எல்லா நலன்களையும் இனிதே பெற்று!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


3#24.
Sudarsanan – the king

Sudarsanan returned to Ayodhya. The citizens of the city welcomed him heartily. He went to greet his stepmother Leelaavati. He paid obeisance to her – as if she were his very own mother. He told her thus:

” Oh mother! Durga Devi killed your father and son in the battle. Please do not lament thinking about them. I will be your son henceforth. I consider you as my own mother!

I was not sorrowful when forced to live in a forest. I am not elated to have got back my kingdom. Each of us have to accept the fruits of our past karma.”

Leelaavati felt ashamed by the magnanimity of Sudarsanan and blessed him sincerely.

The best sculptors of that time were invited to Kaasi. An auspicious muhoortam was fixed. A gem studded mandapam was constructed for Devi.

Her throne was made of solid gold and studded with nava ratnas. Pratishta of Devi was done as per the prescribed rules. Sudarsanan worshiped Devi and made sure that all his citizens did likewise.

Sudarsanan ruled his kingdom as well as Sree Rama had done. The people were not deluded or infatuated with worldly things. The varnaasramam was well established. Dharma grew well while Adharma dwindled and died.

Everybody lived a contented and happy life under his just rule.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#17a. துளசி

மாதவி தர்மத்வஜ மன்னனின் அன்பு மனைவி
காதற் கணவனோடு லயித்திருந்தாள் மாதவி;

கந்த மாதனந்தில் மலர் மஞ்சம் ஒன்றில்,
சந்தனப் பூச்சுடன், மணம் வீசும் தென்றலில்!

இச்சை கொண்டனர் இன்ப லீலைகளில்!
இச்சை தீரவில்லை நூறு தேவ ஆண்டுகள்!

பிரிந்து சென்றான் மன்னன் அரசாட்சி செய்ய;
அரிய கர்ப்பம் தரித்தாள் நூறு ஆண்டுகள்.

பிறந்தாள் அழகிய பெண் குழந்தை மகளாக,
கார்த்திகை பௌர்ணமி, வெள்ளிக்கிழமை!

இட்டனர் துளசி என்னும் அழகிய பெயரை
ஈடு இணை இல்லாதவள் என்ற பொருள் பட.

'நாயகனாக அடைய வேண்டும் நாரணனை!'
நனைந்து மழையில் காய்ந்தாள் வெய்யிலில்.

பஞ்சாக்னிகளின் மத்தியில் கோரத் தவம்
கொஞ்சமும் தயங்காமல் செய்து வந்தாள்!

புசித்தாள் பழங்களை மட்டும் 20, 000 ஆண்டுகள்.
புசித்தாள் இலைகளை மட்டும் 30, 000 ஆண்டுகள்

சுவாசித்தாள் காற்றை மட்டும் 40, 000 ஆண்டுகள்
புசிக்கவில்லை எதனையுமே 10, 000 ஆண்டுகள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#17a. Tulasee (1)

MAdhavi was the queen of King Dharmadwajan. She was enjoying marital pleasures with her husband in GandamAdan - anointed with sandal paste, on a bed of flowers in the fragrance of the cool breeze.

Both the king and his queen were equally interested in the acts of love and enjoyed on undisturbed for one hundred long celestial years.

Then the king remembered his kingly duties and went away. MAdhavi remained pregnant with his child for one hundred years. She delivered a beautiful girl child on the ausppicious full moon day in the month of KArtik on a Friday.

The baby was exceeding beautiful with no one equal to her. So she was names as Tulasee meaning a beauty nonpareil whom no one can be equal to!

Tulasee wanted to wed Lord Sriman NArAyaNa. She went out to perform strict penance and could not be stopped by anyone. She got wet in the drenching rain and dried in the scorching sun.

She performed the harsh austerities in the PanchAgni - surrounded by four burning agni kundams and under the scorching Sun.

She survived only on fruits for the first 20,000 years. She survived on leaves for the next 30,000 years. She lived on air for the next 40,00 years. She did not consume anything at all for the next 10,000 years.
 
BHAARGAVA PURAANAM - PART 1.

#16f. பலியின் தூது

பலியின் தூதர்கள் வந்தனர் அங்கே.
பலியின் மொழிகளைப் பகர்ந்தனர்;

“சிந்தாமணி விநாயகரைப் பெறும் எண்ணம்
சிந்தையில் கொண்டுள்ளான் மன்னன் பலி.

எடுத்துத் தருக எமக்கு அந்த மூர்த்தியை.
மடங்கிச் செல்வோம் பெற்ற உடனேயே.”

கைலாயநாதன் மாறிவிட்டார் ருத்திரனாக!
கைலாயம் வந்த தூதர்களிடம் கூறினார்,

“விநாச காலே விபரீத புத்தி என்று
விளங்கும் முதுமொழி மெய் ஆனது!

நெருங்கியது அழிவு காலம் பலிக்கு !
செருக்குடன் அனுப்பியுள்ளான் தூது”

தூதர்கள் திரும்பினர் தம் மன்னனிடம்.
ஓதினர் சிவபெருமானின் சொற்களை.

“இல்லை!” என்ற சொல்லைக் கேட்டதும்
நில்லாமல் வரம்பு மீறியது அவன் சினம்!

“கூண்டோடு கைலாசம் அனுப்புவதற்கு
கூடியுள்ளார்கள் தோதாக அங்கேயே!

தானைத் தலைவர்களுக்கு ஆணை இது:
சேனைகளை உடனேயே ஆயத்தம் செய்க!”

முழுமுதற்கடவுளான கணபதி தேவனைப்
பழுதின்றித் துதித்தார் பரம சிவனார்.

“பலியின் அழிவு நிகழும் என் கைகளால்.
பலம் தருவீர் பலியை வெற்றி கொள்ள”

பஞ்சமுகங்களுடன் தோன்றினார் விநாயகர்
பரமசிவனின் முகத் தாமரைகளிலிருந்து.

“பலியை போரில் வென்று வாகை சூடிட
பலம் தந்தோம் தேவரீருக்கு!” என்றார்.

மகிழ்ந்தனர் தேவர் பூமழை பொழிந்து!
அதிர்ந்தது உலகம் துந்துபி நாதத்தால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#16f. Bali’s messengers

Bali’s messengers came to KailAsh. Bali’s message was short and to the point. “Bali wishes to posses the ChinthAmaNi VinAyaka. Please hand it over and we will go back immediately!”

Siva became Rudran on hearing this message. “It is said the pride comes before fall. It is true as proved by the message sent by Bali. I will not part with the moorthy of ChintAmaNi VinAyaka.”

The messengers went back empty handed. Bali’s anger knew no bounds when he heard Siva’s message. “Getting rid of the DEvA from KailAsh as a gang has become easier since they have assembled there already. Get the army ready for the battle”

Siva then meditated on VinAyaka and prayed, “It is destined that I should destroy Bali. Give me the power I need to do this task!” Pancha mukha VinAyaka emerged from the five faces of Lord Siva.

He told Siva,” You have the power to put an end to Bali and his misdeeds” Flowers rained from the sky and the sound of dundubi was heard in all the three worlds.
 

Latest ads

Back
Top