• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 3


3#25a. நவராத்திரி

“நவராத்திரியில் செய்யும் தேவி பூஜையால்
நன்மைகள் என்ன விளையும் வியாசரே?”

“சரத் காலம், வசந்த காலம் இரண்டும்
பரப்பும் பற்பல நோய்களை உலகினில்.

கேடு விளைவிக்கும் மனித குலத்துக்கு;
தடுக்கும் தெய்வ அருள் கிடைக்காமல்.

தடுக்க முடியும் இந்தத் தீமைகளை நாம்
தவறாமல் தேவியைப் பூசிப்பதன் மூலம்.

அந்தணருக்கு வழங்க வேண்டும் தானம்.
அமாவாசையில் வேதிகை அமைத்து,

ஸ்தாபிக்க வேண்டும் தேவியின் வடிவத்தை;
ஸ்தாபிக்க வேண்டும் கலசத்தை விதிப்படி.

மலர்களால் தூப தீபத்தோடு பூசிக்க வேண்டும்;
மா, பலா, வாழைக் கனி நிவேதிக்க வேண்டும்.

கும்ப பூஜை முதல் ஹோம பூஜை வரைக்
குறையில்லாமல் செய்து முடித்த பின்னர்

பூஜிக்க வேண்டும் கன்னிப் பெண்களை;
பூஜிக்கத் தகுந்தவர்கள் இவர்கள் ஆவர்.

வயது இருக்கவேண்டும் 2 முதல் 10 வரை/
வயது 2 நிரம்பிய கன்னி ஆவாள் குமாரி.

வயது 3 நிரம்பிய கன்னி திருமூர்த்தி;
வயது 4 நிரம்பிய கன்னி கல்யாணி,

வயது 5 நிரம்பிய பெண் ரோஹிணி;
வயது 6 நிரம்பிய பெண் காளி,

வயது 7 நிரம்பிய பெண் சண்டிகா;
வயது 8 நிரம்பிய பெண் சாம்பவி

வயது 9 நிரம்பிய பெண் துர்கா;
வயது 10 நிரம்பிய பெண் சுபத்திரா.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

3#25a. Navaraatri pooja

“Please tell me the benefits of performing the NavarAtri pooja O venerable sage vyAsa?”

“Sarath ruthu and Vasantha ruthu spread many diseases and block us from getting the grace of Devi. We can easily get rid of this problem by doing aaraadhaana of Devi during that period.

A raised platform must be ready on the New Moon day. Devi’s moorti and kalasam must be established on it as per the rules. Flowers, doopam and depam must be used for the pooja. Mango, jack fruit and Bananas must be offered to the Devi.

After the kumba pooja and the Homa pooja have been completed, dAnam must be given to the Brahmins and very young girls must be honored. The age of these kanya must be between 2 and 10.

A girls aged 2 years is called as KumAri. One aged 3 years is Trimoorti, one aged 4 years is KalyANi, one aged 5 years is RohiNi, one aged 6 years is KALi, one aged 7 years is ChaNdikA, one aged 8 years is SAmbhavi, one aged 9 yeas is Durga and one aged 10 years is Subadra.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#17b. துளசி (2)


தோன்றினான் பிரமன் துளசியின் முன்பு
"வேண்டும் வரம் என்னவோ கூறுவாய்!

பக்தியா? தாஸபாவமா? அமரத்தன்மையா?"
பதில் தந்தாள் துளசி பிரமனுக்கு இவ்விதமாக.

"பிறந்திருந்தேன் கோலோகத்தில் கோபியாக!
சிறந்திருந்தேன் கோபாலனின் பிரிய சகியாக!

"மோஹம் தீரவே இல்லை சம்போகத்தினால்;
கோபப்பட்டாள் ராதிகா என்னிடம் அதீதமாக.

சாபம் தந்தாள் எனக்கு மானிடக் குறியில் பிறந்திட!
சாபம் பெற்றேன் பரிதாபம் கொண்டேன் என் மீதே!

"என் அம்சம் கொண்டவன் ஒருவனை மணப்பாய்!"
அன்புடன் கூறினான் என்னிடம் கிருஷ்ண பரமாத்மா.

பிறந்தேன் அந்தச் சாபம் காரணமாக இங்கே.
பெறவேண்டும் நான் பகவானைக் கணவனாக!"என

பிரமன் கூறினான் துளசியிடம் இந்த விதமாக,
" பிறந்தான் சுதர்மன் கிருஷ்ணன் தேஹத்திலிருந்து;

மோஹம் கொண்டான் உன்னைக் கண்டதும்!
மோஹமும், காமமமும் நிறைவேறவில்லை

சபித்தாள் ராதிகா அவனையும் கூட - பிறந்தான்
சாபத்தினால் பிறந்தான் அவன் சந்திர சூடனாக!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#17b. Tulasee

Brahma appeared in front of Tulasee. He asked her, "What do you wish for my dear child? Do you want bakti or dAsa bhAvam or immortality?"

Tulasee told him thus: "I was born in GOlOka as a gOpi and was very close to Krishna ParamAtmA. I could not get enough satisfaction from the pleasures I enjoyed there.

RAdhA was very annoyed with me and she was angry too! She cursed me that I will be born as a human being. Krishna ParamAtmA consoled me saying that I will marry someone great who was born out of his amsam.

I was born on the earth among human beings because of RAdhA's curse. I want to marry Krishna BhagavAn. I seek nothing else from you!"

Brahma told Tulasee thus: "SudhAman was born out of the body of Sri Krishna ParamAtmA. He fell in love with you madly the moment he set his eyes on you.

But his love remained futile and unfulfilled in GOlOka. RAdha cursed him too to be born in the race of DhAnavAs. He is now born as Sankhachooda in the race of Manus."

 
BHAARGAVA PURAANAM - PART 1

#16g. போர்

சண்டப் பிரசண்டர் வந்தனர் படையுடன்;
மூன்று மகன்கள் வந்தனர் தம் படையுடன்;

தேவர்கள் சேனையும் நின்றது தயாராக;
தேவர்கள் முழங்கினர் பெரும் சங்கநாதம்

பிரமன் செலுத்தினார் அற்புத ரதத்தினை!
பிரான் அமர்ந்தார் தேரின் ஆசனத்தில்.

பூதவெள்ளம் எழுபத்திஎண்ணாயிரம் கோடி;
தேவர்கள் சமூஹம் முப்பத்து முக்கோடி ;

முருகன் வந்தான் தன் தனிப்படையுடன்
அருகில் வீரபத்ரன் தன் தனிப்படையுடன்!

ஏழு கடல்களும் ஓரிடத்தில் கலந்தாற்போல
இரு படை சமுத்திரங்களும் கலந்தன அங்கே.

சுண்டிய விற்களின் நாணொலி பரந்து
அண்டம் எங்கும் சென்று எதிரொலித்தது.

திரிபுரன் பெற்றிருந்தான் அரிய வரங்கள்
திரிபுரங்களையும் இறக்கினான் போரில்.

பறந்து செல்லவும், இறங்க வல்லவும் ஆன
சிறந்த தேர்கள் போரில் ஆயுதங்கள் ஆயின!

சத்தம் இல்லாமல் புறங்களை இறக்கினான்;
மொத்தமாக தேவரை அழிக்க முயன்றான்.

மாயப் போரினைப் புரிந்தான் திரிபுரன்;
மாயையை மாற்றி அமைத்தார் அரன்;

வெற்றி தோல்வி இன்றிப் போர் நீண்டது!
வெல்வாரா பிரான் என்ற ஐயம் பிறந்தது!

அன்னையைத் துதித்தனர் அனைவரும் கூடி;
அன்னை ஐயனிடம் இவ்வையத்தைகே கூற

“திரிபுரனின் திறமையை வெளிப்படுத்தவே
அரிய போரை வேண்டுமென நீட்டுகின்றேன்.

அழிவு காலம் மிகவும் நெருங்கி விட்டதால்
விழுந்து விடுவான் போரில் விரைவில் பலி!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#16g. The war

ChaNdan and PrachaNdan came with their armies. Bali’s three sons came with their armies. The DEvA got ready their army and blew their conchs such that the sound rocked all the three worlds.

Brahman held the reins of the wonderful chariot made by the DEvA. Siva sat on the seat in the chariot. The Bootha gaNam were 7.8 trillion in number; the DEvA were 330 million in number; Murugan came leading his own army; Veerabadran also joined along with his own army.

As if all the seven seas merged in a spot, the two oceans of warriors merged there. The twang of the bows reverberated through the Universe. The tripurams had magical powers. They could fly from anywhere and land anywhere. So these were used as the weapons in this war.

Tripuran made these chariots descend on the DEvA and killed them effortlessly. The aurAs were experts in MAyAjAl but Siva destroyed their power of MYyA. The war continued for a long time without victory or defeat for any of the two sides.

The DEvA got a doubt now whether Siva could really vanquish Tripuran. They asked their doubt to Uma Devi and she passed it on to Siva.

Siva replied, “I prolonged the war only to bring out the greatness of Tripuran. Now his end is nearing!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#25b. பூஜா பலன்

வறுமை நீங்கும் குமாரியை பூஜித்தால்;
வளரும் செல்வம், ஆயுள், வெற்றிகள்.

திருமூர்த்தியை பூஜித்தால் உண்டாகும்
தன, தான்ய, சந்ததி, வம்ச விருத்திகள்.

பூஜித்தால் உண்டாகும் கல்யாணியை
வித்தையில் வெற்றி, ராஜ்ய சுகம்.

ரோஹிணியைப் பூஜித்தால் மறையும்
ரோகங்கள், நிவர்த்தியாகும் நோய்கள்.

பூஜித்தால் காளியை அழியும் நமக்கு
பகைவர் தரும் பயமும், பகைவரும்.

பூஜித்தால் சண்டிகையை – வளர்ந்து
ஐஸ்வர்யங்கள் எட்டும் நிறையும்.

பூஜித்தால் சாம்பவியை உண்டாகும்
போரில் வெற்றி ராஜ சம்போகம்.

பூஜித்தால் துர்கையை உண்டாகும்
பகைவர் நாசமும், பரலோக சுகமும்.

பூஜித்தால் சுபத்திரையை உண்டாகும்
மங்களம், மனோரத சித்திகள் இவைகள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


3#25b. The effects of this puja.

By worshiping a KumAri (a girl aged 2 years) the person will acquire wealth, long life and victory.

By worshiping Thrimoorthi ( a girl aged 3 years) a person will acquire danam, dhAnyam, santhathi and vamsa vrudhhi.

Worshiping a 4 year old girl KalyAni will make one’s learning successful and give that person kingly pleasures.

Worshiping a RohiNi aged 5 years will remove all diseases and discomforts.

Worshiping a KALi aged 6 years the enemies and the fear of enemies will be destroyed

Worshiping ChaNdika aged 7 years will give the eight aiswaryam

Worshiping SAmbavi aged 8 years will give victory in wars and a kingly life.

Worshiping Durga aged 9 years will destroy one’s enemies and give the paraloka sukham

Worshiping Subadra aged 10 years will give auspiciousness and fulfill one’s dreams and wishes.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#17c . துளசி (3)

"பூர்வ ஜன்ம வாசனை உண்டு அவனுக்கு!
பூர்வ ஜன்ம வாசனை உண்டு உனக்கும்!

பத்தினியாவாய் சங்க சூடனுக்கு இப்போது;
பத்தினியாவாய் நாராயணனுக்குப் பிற்பாடு.

மதிப்பர் மக்கள் அனைவரும் உன்னை வெகுவாக!
துதிப்பர் இறைவனை உன் உதவியோடு நன்றாக!

பிருந்தாவனீ என்று பெயரும், புகழும் பெறுவாய் நீ
பிருந்தாவனத்தில் இனி வரும் காலங்களில் துளசி!

அதிஷ்டான உருவம் ஆவாய் துளசி மரங்களுக்கு நீ!
யதேஷ்டமாக அனுபவிப்பாய் கிருஷ்ணனைக் கூடி!"என

"கிருஷ்ணனின் மீது நான் கொண்டேன் மையல்
கிருஷ்ணனைப் பெறவேண்டும் காதற் கணவனாக!

நீக்க வேண்டும் என்னுள் நிலவும் அச்சத்தை!
போக்க வேண்டும் ராதை மீதுள்ள அச்சத்தை!" என

பிரமன் உபதேசித்தார் ராதிகா மந்திரத்தை;
"பிராணனுக்குச் சமம் ஆவாய் நீ ராதைக்கு!

பிரியம் கொள்வான் கிருஷ்ணன் உன்னிடம்;
பிரியம் கொண்டது தெரியாது ராதிகாவுக்கு."

உபதேசித்தார் பதினாறு அக்ஷர மந்திரத்தை!
உபதேசித்தார் கவசத்தைப் பூஜா விதிகளை!

ஆசிகள் தந்து மறைந்தார் பிரம்ம தேவன்;
சித்திகள் பெற்றாள் துளசி வரங்களால்.

அனுபவித்தாள் விஷ்ணுவோடு போகங்களை;
அனுபவித்தாள் மலர் மஞ்சத்தின் மீது சயனம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#17c. Tulasee (3)

Brahma continued to tell Tulasee the greatness of Sankha Choodan.

"He remembers his poorva janma. You too remember your previous birth. You will make a wonderful couple together! You become the wife of Sankha Choodan now. Later on you will become the wife of Krishna ParamAtmA.


You will be respected the world over. You will become inevitable in any form of worship or puja. You will become famous by the name Brindaavanee.

You will become the deity of all trees and plants. You will enjoy the company of Krishna to your heart's delight without fearing the wrath of RAdhA."

Tulasee told Brahma again,"It is Krishna ParamAtmA whom I want to marry. I am filled with fear towards RAdhikA. Please remove the fear and terror from my heart first."

Brahma taught her the siXteen lettered RAdhikA mantra, RAdhikA kavacham and the rules of worship. He blessed Tulasee and disappeared.

Tulasee worshiped RAdhika as taught by Brahma and attained sidhdhi. She enjoyed the pleasures with Krishna. She was enjoying her rest on her bed of flowers now.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#16h. திரிபுர தஹனம்

திரிபுரங்கள் அழியும் ஒரே ஒரு ஆயுதத்தால்!
திரிபுரங்களும் வரவேண்டும் நேர்கோட்டில்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்
அல்ப சமயத்திற்கு மட்டும் இவ்வரிய நிகழ்வு.

“தம் உதவியால் மட்டுமே அழிக்க முடியும்
திரிபுரனைப் போரில் சிவபெருமானால்!”எனக்

கர்வம் கொண்டனர் தேவர்கள் போரில்;
கர்வம் அழியச் செய்தான் சிவபெருமான்!

சிரித்து எரித்து விட்டான் திரிபுரங்களை!
எரியும் புரங்களின் மேல் எறிந்தான் பிறகு,

அரிய வரம் பொய்க்காது இருக்க எண்ணி,
அரிய சூலாயுதத்தினைப் போரின் முடிவில்!

திரிபுரங்களையும் அழித்தார் சிவபிரான்;
திரிபுரன் மகன்களையும் அழித்துவிட்டார்;

திரிபுரன் எரிந்து சாம்பல் ஆகிவிட்டான்
தீச் சுவாலையில் ஒரு நொடிப் பொழுதில்!

ஜோதி வெளிப்பட்டது அவ்வுடலிலிருந்து.
ஜோதி வந்து கலந்தது பிரான் உடலுடன்.

எஞ்சிய அசுரர்களைக் கொன்று அழித்தனர்;
அஞ்சாமல் அவரைத் துரத்தி ஓடிய தேவர்கள்.

அழிந்து போன தேவர்களை உயிர்ப்பித்தார்
கழிவிரக்கத்துடன் கைலாசநாதன் அங்கு.

பூ மழை பெய்து மகிழ்ந்தனர் தேவர்கள்;
பூத கணங்கள் மகிழ்ந்து கொண்டாடின!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#16h. Tripura dahanam

The three purams must be destroyed by a single weapon. They should come in a straight line for this to become possible. This rare event occurred for a very short duration once in one thousand years.

The DEvA felt proud that but for their help Lord Siva could not vanquish Tripuran. Siva read their thoughts and wished to prove them wrong. He burned Tripuram just by laughing. The boon given should not be proved false. So he threw his soolAyudham on the already burning Tripuram.

He destroyed the Tripuram. He destroyed the Tripuran and his sons. A flame of light emerged from Tripuran’s body and merged with Siva.

The asurAs who took to their heels were chased by the now-fearless-DEvA and killed. Flowers rained form the sky and the bootha gaNams celebrated this victory.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3# 26. நவராத்திரி மகிமை

விலக்கவேண்டும் பூஜையிலிருந்து – பல
வியாதிகள் உள்ள பெண்களை முற்றிலும்.

நல்ல அழகும், அங்க லக்ஷணமும் கொண்ட
நல்ல குலத்துப் பெண்கள் பூஜிக்கத் தக்கவர்.

பூஜிப்பர் பிராமணப் பெண்களை சர்வ சித்திக்கு;
பூஜிப்பர் க்ஷத்திரியப் பெண்களை வெற்றி சித்திக்க!

பூஜிப்பர் வைசியப் பெண்களை லாப சித்திக்கு!
பூஜிப்பர் சூத்திரப் பெண்களை லாப சித்திக்கு!

வேண்டும் சித்தியைத் தர வல்லவளை,
வேண்டும் நல்ல முறையில் பூஜிப்பது.

சப்தமி, அஷ்டமி, நவமி தின பூஜைகள்
சமமாகும் ஒன்பது தின பூஜைகளுக்கு.

வாழ்ந்தான் சுசீலன் வைசிய குலத்தவன்;
வாடினான் வறுமையில் கோசல தேசத்தில்.

இருந்தனர் மழலைச் செல்வங்கள் அநேகர்;
இருக்கவில்லை வயிறார உண்ண உணவு.

சொற்ப வருமானம் கிடைத்த போதிலும்
நற்பண்புகளில் வழுவாமல் வாழ்ந்தான்.

தரித்திரம் ஒழிய வேதியர் வழி கூறினார்,
“விரதம் அனுஷ்டிப்பாய் நவராத்திரிக்கு!

சக்திக்குத் தக்கவாறு பிராமண போஜனம்;
சக்தி பூஜை, ஜபம், ஹோமம் இவைகளை.”

குருவாக்கிக் கொண்டு உபதேசம் பெற்றான்;
முறைப்படிச் செய்தான் நவராத்திரி பூஜை.

நீங்கியது வறுமை; நிறைந்தது வளமை;
நீண்ட நாட்கள் வாழ்ந்தான் நிம்மதியாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

3#26. NavarArti mahima

We must avoid doing puja to the girls who suffer from various ailments. Only beautiful girls from good families must be worshiped. The girls who can give us what we seek must be worshiped with due honor.

Brahmins girls are worshiped for obtaining Sarva siddhi. Kshatriya girls are worshiped for securing victory. Vaisya and Sudra girls are worshiped for wealth and for earning profits.

Saptami, Ashtami Navami pujas are very important. The puja done on these three days is equivalent to the puja done on all the nine days of NavarAtri.

A vaisya named Suseelan lived in Kosala desam. He and his family lived in utter poverty. He had many children but could not feed them properly. He earned a mere pittance but lived a honest life.

A brahmin told him a way to get rid of his poverty. He told Suseelan to perform the NavarAtri puja as best as he could afford. Brahmins must be fed and Japam, Homan and Shakti puja performed as well as was possible in his humble means.

Suseelan accepted the brahmin as his guru and performed the NavarAtri puja. His poverty vanished and he became prosperous. He lived a long happy life with his loved ones in peace and prosperity.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#18a. கனவில் காதலன்

சயனித்திருந்தாள் துளசி ரதி போல அழகாக;
மயங்கினாள் மன்மதன் மலர் பாணங்களுக்கு.

தாபம் கொண்டாள்; தகித்தது மலர் மஞ்சம்;
காமம் கொண்டாள்; கலங்கியது பெண் மனம்.

சுட்டது அணிந்திருந்த பட்டாடை அக்னி போல்!
சுட்டது பொட்டு நெற்றியில் பட்ட ரணம் போல்!

நொந்த உள்ளம் மகிழ வந்தது ஒரு கனவு - ஒரு
சுந்தர புருஷன் தோன்றினான் அந்தக் கனவில்.

சந்தனப் பூச்சு கமகமத்தது அந்தக் கனவில்;
சுந்தரன் அவனைப் போலக் கண்டதில்லை!

புன்னகை மிளிரும் சுந்தர வாலிபன் - பல
பொன்னகைகள், மாலை அணிந்திருந்தான்.

குனிந்து முத்தமிட்டான் அவள் மதி முகத்தில்;
கனிந்த காதல் கவிதைகள் பேசினான் இனிக்க!

அணைத்தான் காற்றுப் புகவும் இடம் இல்லாமல்;
துணை ஆனான் அழகிய மலர் மஞ்சத்தின் மீது!

போக முற்பட்டான் அவளை விட்டு விட்டு!
"போக வேண்டாம் என்னை விட்டு விட்டு!" என

விழித்துக் கொண்டாள் இனிய கனவில் இருந்து;
அழத் துவங்கினாள் கனவில் வந்தவனை எண்ணி!

தூக்கம் போனதும் துக்கம் வந்தது அந்தோ பரிதாபம்!
ஊக்கம் போனதும் ஏக்கம் வந்தது அந்தோ பரிதாபம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#18a. A lover in the dream

Tulasee was lying on the bed of flowers stretched out beautifully, looking like Rathi Devi, the lovely wife of Manmathan - the God of Love.

Manmathan shot his flower arrows and she was overcome by a burning passion. She felt her flower bed to be as hot as a fire plate. Her silk dress burned on her skin like fire. The bindi in her forehead hurt as if it were a live wound.

Then she had a very pleasant dream. A very handsome man appeared in that dream. He was anointed with sandal paste with a good aroma. She had never seen anyone so handsome before.

He sported a lovely smile on his lips. He was dressed in rich clothes and was decorated with many gold ornaments and fresh flower garlands.

He bent down and kissed her on her face. He spoke to her sweet nothings. He embraced her so tight that even air could not separate them. He was a lovely and lively companion on her flower bed.

Suddenly he tried to go away from her. Tulasee said,"Please don't go away from me!" and woke up from her lovely dream. She started crying for the company of the handsome man who had appeared in her dream.

Her sleep had vanished and a flood of fresh sorrow drowned her. She yearned to see the handsome man again in her dream or in her real life.
 
bhaargava puraanam - part 1

#17a. தக்ஷனின் யாகம்

தக்ஷப் பிரஜாபதி பிரமனின் மைந்தன்;
தவம் செய்தான் இவ்வரங்களைக் கோரி;

“தேவர்கள் அடிபணிய வேண்டும் எனக்கு;
தேவி உமை பிறக்க வேண்டும் மகளாக!”

பிறந்தாள் தேவி உமை தாட்சாயணியாக;
சிறந்தாள் கயிலை நாதன் மனைவியாக.

மகளைக் காணக் கயிலை சென்றான் தக்ஷன்;
மகேஸ்வரன் மரியாதை தரவில்லை எழுந்து.

“மாமனாருக்கு மரியாதை தராத மருமகனா?”
மகேஸ்வரனிலும் உயர்ந்தவன் ஆவேன் நான்!”

யாகத்தைத் துவக்கினான் தக்ஷப் பிரஜாபதி.
யாவருக்கும் அழைப்பு சிவபிரானைத் தவிர!

தாட்சாயணிக்கும் வரவில்லை எந்த அழைப்பும்!
தாங்க முடியவில்லை தன்னைத் தவிர்த்ததை!

தந்தைப் பாசம் உந்தித் தள்ளியது அவளை!
தந்தையின் யாகத்துக்குச் செல்ல வேண்டும்

“மதியாதார் வாயில் மிதியாமை நன்று!"என
மதியணி நாதன் விளக்கிக் கூறினான்.

"அழையாதார் இல்லம் நாடிச் சென்றால்
அவமானம் தான் மிஞ்சும் என்றறிவாய்!”என

“பிறந்த வீட்டுக்குச் செல்ல அழைப்பா?
அறிந்தவர் பேசும் பேச்சா இது நாதா?”என

“சரியே நீ சொல்வது வெறும் நாட்களில்;
அரிய யாகம் நடக்கும்போது அல்லவே! என

பிடிவாதம் பிடித்தாள் தாட்சாயணி!
நடராசனால் தடுக்க இயலவில்லை!

கணவன் கட்டளையை மீறிச் சென்றாள்,
கணவனை பழிக்கும் யாகத்தைக் காண!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#17a. Daksha PrajApati

Daksha prajApathi was Brahma’s son. He did penance to get these two boons. “The DEvA should obey me and Devi Uma must be born as my daughter!” Uma was born as his daughter DAkshAyaNi. She married lord Siva.

Once Dakshan visited KailAsh. Siva did not pay respect to Dakshan. “A son in law who won’t show respect to his father in law? I shall become greater than Siva himself!” Dakshan promised himself this!

Dakshan performed a yagna to belittle Siva and to get more powers. All were invited to attend the yagna except Siva and DAkshAyaNi.

DAkshAyaNi wanted to attend the yagna even though neither she nor Siva were invited. She argued to Siva that no one needed invitation to visit one’s parents.

Siva told her, “It is better not to step into the house where you are not respected nor wanted. If you go there uninvited you will feel slighted.”

But DAkshAyaNi was in no mood to listen and went there disregarding Siva’s advice.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#27a. ஸ்ரீ ராம சரிதை (1)

அயோத்தியை ஆண்டு வந்தான் முன்னாள்
ஆதித்திய வம்சத்துச் சக்கரவர்த்தி தசரதன்.

இருந்தனர் அழகிய மனைவியர் மூவர்;
இராமன் பட்டத்து அரசி கோசலையின் மகன்;

இஷ்டமகிஷி கைகேயியின் மகன் பரதன்;
லக்ஷ்மண, சத்ருக்னரின் தாய் சுமித்திரை.

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினர்;
வில் வித்தையினைக் கற்றுத் தேர்ந்தனர்;

யாகத்தை ரக்ஷிக்க உதவி கோரி வந்தார்
யாகம் செய்ய விரும்பிய விஸ்வாமித்திரர்.

‘பதினாறு வயது பாலகனை அனுப்புவதா?’
பரிதவித்தான் தசரதன் புத்திர பாசத்தால்!

கோபமும், சாபமும் முனிவர்களின் சொத்து!
தாபத்துடன் அனுப்பினான் ராம, லக்ஷ்மணரை.

தவ முனிவர்களுக்குத் தொல்லை தந்து வந்த
தாடகை என்னும் கொடிய அரக்கி வந்தாள்!

அழித்தனர் தாடகையைப் பாணங்களால்;
அளித்தனர் வேள்விக்கு முழுப் பாதுகாப்பு.

மிதிலை சென்றனர் முனிவருடன் குமாரர்;
மிதிலையில் சீதைக்குப் பந்தய சுயம்வரம்.

கல்லாகச் சமைந்து கிடந்தாள் அகலிகை,
பொல்லாத இந்திரன் செய்த ஒரு சதியால்;

முடிந்தது கௌதமரின் சாபம் – ராமன் கால்
பொடி அந்தக் கல்லின் மீது பட்டவுடனேயே!

வளைக்க வேண்டும் சிவதனுசை – ராமன்
வளைத்து முறித்தே விட்டான் போட்டியில்!

மணந்தான் ராமன் ஜனகன் மகள் சீதையை,
மணந்தான் லக்ஷ்மணன் தேவி ஊர்மிளையை.

சகோதரன் குசத்துவன் பெண்களை மணந்தனர்
சகோதரர்கள் ஆகிய பரதனும் சத்ருக்னனும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#27a. Sree Raama charitam (1)

AyOdhya was ruled by King Dasaratha of Aadithya vamsam. He had three beautiful queens. RAmA was the son of the queen on throne Kousalya.

Bharat was the son of his favorite wife Kaikeyi. Lakshman and Satrugnan were the twins born to Sumitra.

The four princes excelled in mastering all the sAstrAs. They learned the warfare and all the associated skills.

One day Sage ViswAmitra came to King Dasaratha asking for a favor. A demon named TAtaka was ruining all the yAgAs and yagnAs performed by the rushis. ViswAmitra wanted RAmA to go with him and protect the yAgA he was planning to perform.

Dasaratha was in a dilemma. He did not want to sent his young son in his teens! At the same time he was afraid of the anger and curses of ViswAmitra. However he sent RAmA and Lakshman with the Sage ViswAmitra halfheartedly

RAmA and Lakshman killed TAtaka and protected the yAgA. Now the sage took the princes to Mithila where a contest had been arranged for the swayamvaram of SeetA.

On the way Sage Goutama’s wife Ahalya was lying frozen into stone by her husband’s curse. When the dust from RAmA’s feet fell on the stone the long curse was broken and Ahalya regained her original form.

The contest demanded that the winner must be able to bend the bow of Lord Siva and sting it. RAmA lifted it as if it were a mere feather and bent it with so much force that it broke into two pieces.

RAmA married SeetA DEvi. Lakshman married Urmila DEvi. Bharat and Satrugnan married MANdavi and Srutikeerti – the two daughter of King Janaka’s brother Kushadwajan, respectively.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#18b. சங்கசூடன்

உபதேசம் பெற்றான் சங்கசூடன் ஜைகிஷவ்யரிடம்
சுபமயமான கிருஷ்ண மந்திரத்தை மிகக் கவனமாக.

சித்தி பெற்றான் அதைப் புஷ்கரத்தில் ஜபித்து!
சக்தி பெற்றான் கவசத்தைக் கழுத்தில் தரித்து!

இழுத்து வந்தது அவனை பிரம்மனின் வரம்'
பழுதில்லாமல் நிறைவேறிட பதரிகாவனம்.

கண்டாள் அவனைத் துளசி; கொண்டாள் மையல்;
கண்டாள் அவனை நாணத்தோடு முகத்தை மூடி.

"யார் நீ? கூறு என்னிடம் ! யாருடைய புதல்வியோ?
பாரினில் கண்டதில்லை உன் போல் ஒருத்தியை!"என

"தர்மத்வஜரின் புதல்வி நான்; பெயர் துளசி;
தவம் செய்கின்றேன் இந்த பதரிகாவனத்தில்.

வந்த வழியைப் பார்த்துப் போய்விடும் உடனே!
இந்த வினாவைக் கேளான் நல்ல ஆண் மகன்!

இருப்பாள் பெண் காண்பதற்கு பேரழகியாக;
இருப்பாள் பெண் கர்வ மதம் பிடித்தவளாக;

இருக்கும் நாவின் நுனியில் அமிர்தம்
இருக்கும் இத்யதில் விஷக் கும்பம்.

தித்திக்கும் வாய் வார்த்தைகள் - ஆனால்
கத்திக் குத்தாகும் செய்யும் செயல்கள்!

காலைப் பிடிப்பாள் காரியம் ஆகும் வரை;
காலை வருவாள் காரியம் ஆன பிறகு!

கற்புக்கரசிகள் போலப் பேசுவர் வெளியே;
அற்ப காமவெறி கொண்டலைவர் உள்ளே.

அழுவர் சம்போகம் திருப்தி தராவிட்டால்;
தொழுவர் சம்போகம் திருப்தி தந்துவிட்டால்.

விரும்புவர் உணவு, உறக்கம், உடலுறவுகளை
விரும்பவர் அழகன், இளைஞன், வல்லவனை!

விரும்ப மாட்டார்கள் பெற்ற பிள்ளைகளை;
விரும்புவர் உற்ற இன்பம் தரும் ஆடவனை.

படைத்தான் பிரமன் இது போன்ற பெண்களைத்
தடையாக்கி முமுக்ஷுக்களுக்குத் துன்பம் தந்திட!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#18b. Sankha Choodan

Sankha Choodan got the upadesam of the auspicious KrishNa mantram from Maharishi Jaigeeshavya with great care. He chanted it and got sidhdhi in Pushkara kshetram.

He wore the kavacha around his neck and got great powers of Sidhdhi. The boons given by
Brahma drew him towards BadarikAvanam where Tulasee was doing severe penance. Brahma's boon can not prove false.

Tulasee saw him and fell in love with him head over heels at first sight. She covered her face with modesty. Sankha Choodan also fell in love with her at the first sight. He asked her,

Who are you? Whose daughter are you? Tell me everything about you! I have never set my eyes on a girl like you before!"

Tulasee replied to him, "I am the daughter of King Dharmadwaja. My name is Tulasee. I am doing penance in Badarikaavanam.

You had better go off the by same way you have arrived here. A man born in a good family will not ask this question to a girl he sees alone and all by herself.

A girl may look pretty but she may be filled with pride and arrogance. The tip of her tongue may hold nectar and the heart may be pot of deadly poison. Her words may sound sweet but action may hurt like the stabs made with a sharp knife.

She may be very polite until she gets what she wants thereafter she may cause the downfall. She may lecture like a chaste woman but may be filled with lustful desires.

If she is not satisfied with sambogam she will weep bitterly and curse her man. If she is satisfied she will praise him worship him gladly. The only things these women look forward to in life is food, carnal pleasures and sleep.

They are always on the look out for handsome, young and active young men. Such a woman may not care for her children much but will care for her man more. Brahma has created such women only to torture and trouble those men who seek liberation."

 
BHAARGAVA PURAANAM - PART 1

#17b. தாக்ஷாயணி

தாக்ஷாயணியை வரவேற்கவில்லை எவரும்;
தாய் தந்தையரே காட்டினர் அதீத வெறுப்பை.

மெய்யாகியது கணவர் கூறிய வார்த்தைகள்;
பொய்யகியது மகள் மேல் கொண்ட பாசம்

பெரும் கோபம் கொண்டாள் உதாசீனத்தால்
அரும் சாபம் தந்தாள் தக்ஷ யாகசாலைக்கு.

“பேய்கள் நடமாடும் சுடலை ஆகட்டும் இது!”
போய்ச் சேர்ந்தாள் கயிலை பரமசிவனிடம்.

“கெடுப்பீர் தக்ஷனின் யாகத்தை!” என்றாள்.
எடுத்தான் பிறவி வீரபத்திரன் அக்கணமே.

சிவன் சினத்தில் உருவெடுத்த வீரபத்திரன்
சினத்துடன் விரைந்தான் யாகசாலைக்கு.

அழித்தான் யாகசாலையை முழுவதுமாக!
ஒழித்தான் யாகம் காண வந்தவர்களையும்!

தந்தார் ஈசன் சினம் தணிந்து ஆறிய பிறகு
அந்த மனிதர்களுக்கு மீண்டும் உயிர்பிச்சை.

ஆட்டுத் தலையைப் பெற்றான் தக்ஷன் – தன்
அபசாரம் என்றென்றும் நினைவிருக்கும்படி!

தாக்ஷாயணி வருந்தினாள் தக்ஷன் செயலால்;
தக்ஷன் தந்த உடலை விரும்பவில்லை சிறிதும்!

விடுத்தாள் தன் சரீரத்தை யோக அக்னியில்;
எடுத்தாள் வடிவு யோகினி பார்வதிதேவியாக;

வரித்தாள் பரமசிவனைத் தன் மணாளனாக;
விவரித்தாள் பர்வத ராஜனிடம் தன் மனதை;

“பிரானை மணந்து கொள்வதற்கு என்னென்ன
விரதங்கள் நான் இருக்கவேண்டும் தந்தையே?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#17b. DAkshAyaNi

No one was happy to see DAkshAyaNi there. No one welcomed her to the yaaga. Even her parents ignored her arrival. So what Lord Siva said had proved to be true and what she thought proved to be false.

She got very angry at being ignored thus. She gave a terrible curse to the yAga sAla. “May this place become a burning ghat where ghosts roam around”

She went back to Kailash and told Siva, “Please destroy the Daksha Yagam”. Siva created veerabdran out of his anger and ordered him to destroy this Daksha yagna. Veerabadran hurried to the yAga sAla and destroyed the place completely. He destroyed all the guests who were attending the yagna.

Siva cooled down soon and resurrected everyone who was killed by Veerabadran. Dakshan was fitted with the head of a goat – a gruesome reminder of his misbehavior.

DAkshAyaNi did not wish to be identified as Dakshan’s daughter. She wanted to drop down her body given by him. She burned her body in Yoga agni created by her and was born as Parvati Devi.

She wanted to marry Siva again. She told her heart’s wish to her father Parvatha RAjan and asked him what were the vrathAs she should observe in order to marry Lord Siva and get her wishes fulfilled.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#27b. ஸ்ரீ ராம சரிதம் (2)

பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்தான் தசரதன்,
பட்ட மகிஷியின் மகன் மூத்தவன் ராமனுக்கு.

ஒப்பவில்லை இதற்கு இளைய மனைவி கைகேயி;
எப்போதோ பெற்ற இரு வரங்களைப் பிரயோகித்தாள்.

“நாடாள வேண்டும் என் மகன் பரதன் – ராமன்
காடாள வேண்டும் பதினான்கு ஆண்டுகள்!” எனத்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அல்லவா?
தம்பி, சீதையுடன் சென்றான் ராமன் வனவாசம்!

புத்திர சோகத்தால் உயிர் நீத்தான் தசரதன்;
இத்தனையும் செய்தவள் கைகேயி அல்லவா?

அரசாள அழைத்தான் ராமனை பரதன் – பின்பு
அரசனாக்கி விட்டான் ராமனின் பாதுகைகளை.

ராமனைக் கண்டு தன் வயம் இழந்தாள்;
காமன் கணைகள் தாக்கிய சூர்ப்பனகை.

சீதையை அசூயையால் பழித்த அரக்கியைச்
சேதித்து லக்ஷ்மணன் அங்கஹீனம் செய்தான்!

போருக்கு வந்தனர் அரக்கர்கள் கர, தூஷணர்;
போரில் மாய்ந்து விட்டனர் வந்த அரக்கர்கள்

ராவணனை நாடி ஓடினாள் சூர்ப்பனகை;
ராவணனை மயக்கினாள் சீதையின் அழகில்

காமவயப் பட்ட ராவணன் நிச்சயித்தான்,
‘ராமனின் மனைவியைக் கடத்தி வருவேன்!’

பணித்தான் மாரீசனை மாய மானாக மாறிட,
துணிந்து விட்டான் சீதையைக் கடத்திவிட.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

3#27b. Sree Raama charitam (2)

King Dasaratha decided to crown his eldest so Raamaa as his successor. But Kaikeyi wanted her son Bharat to become the new king. She used the two boons given to her by Dasaratha long ago and demanded that Bharat should rule Ayodhya and Raamaa should go for vana vaasam for fourteen long years. Raamaa went for vnanvaasam with his brother Lakshman and wife Seetaa.

Dasaratha could not stand the separation of Raamaa and gave up his ghost. Bharat was angry with his mother Kaikeyi who had caused all these miseries. He invited Raamaa to come back to Ayodhya and rule over it. But Raamaa would not disobey his father’s wishes. Bharat took to Ayodhya Raamaa’s paaduga to represent him as the ruler of Ayodhya.

Soorpanaka the sister of RaavaN saw Raamaa and fell head over heels in love with him. She tried to harm Seetaa who stood between herself and Raamaa. Lakshman got very angry and cut off her ears and nose.

Soorpanaka fled to Lanka and lamented over her woes to her brother RaavaN. She described the beauty of Seetaa and got RaavanN infatutaed with the woman he was yet to set his eye upon. RaavaN decided to abduct Seetaa. He ordered Maareecha to go and attract her as a golden deer.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#18c. சங்கசூடன்

சிரித்தான் சங்க சூடன் துளசி கூறியவற்றுக்கு;
"சரிதான் நீ கூறியவற்றில் சில உண்மைகளே!

பெண்ணைப் படைத்துள்ளான் பிரம்ம தேவன்
மண்ணுலகம் போற்றவும், தூற்றவும் ஏற்றபடி.

பஞ்சப் பிரகிருதிகளின் அம்சத்தில் பிரமன்
கொஞ்சம் பெண்களைப் படைத்துள்ளான்!

துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, சாவித்திரி, ராதிகா,
சர்வ மங்களம் தரும் தூய பெண்களின் வடிவம்.

பிற தேவிகளும் தெய்வத் தன்மை வாய்ந்தவர்கள்;
சிறப்புப் பெறுகின்றனர் இவர்களின் அம்சங்களால்.

சத்துவ குணப் பெண்கள் உத்தம வர்க்கத்தினர்;
மற்ற பெண்கள் இருவகைப் படுவர் குணத்தால்

கூடிக் களிக்கும் போகத்தில் ஆசை கொண்டவர்;
ஆடி ஓடும் ரஜோ குணத்தவர், மத்திம வகையினர்.

வசப் படுத்திக் கொள்வர் ஆடவரை மதி மயக்கி;
இசையச் செய்வர் அவரைத் தம் விருப்பத்துக்கு!

கண்ணாக இருப்பர் தம் காரியத்திலேயே - இவர்
மண்ணாகி விடுவர் தர்மம், சட்டம், நியாயத்தை!

தமோ குணம் கொண்ட பெண்களோ எனில்
தலை வணங்க மாட்டார்கள் எவருக்குமே!

அதம ஸ்திரீகள் ஆவர் இவர்கள் - கேவலம்
அடிமட்டத்தைச் சேர்ந்தவர் பெண்ணினத்தில்!

படித்த அறிஞனும், பண்புள்ள நல்லவனும்
பரஸ்த்ரீயிடம் கேட்கக் கூடாது யார் என்று!

ஜலம் இல்லாத இடத்திலும், ரகசியத்திலும்,
ஜனம் இல்லாத இடத்திலும் கேட்கக் கூடாது!

வந்துள்ளேன் உன்னைக் கந்தர்வ மணம் புரிந்திட;
வந்துள்ளேன் பிரமன் நமக்குத் தந்த வரத்தின்படி!"

உரைத்தான் தனது பூர்வ ஜன்ம நினைவுகளை;
உரைத்தான் அவள் பூர்வ ஜன்ம நினைவுகளை!

"அச்சம் வேண்டாம் ராதையை நினைத்து - நாம்
மிச்சம் உள்ள வாழ்வை இன்பமாக வாழ்வோம்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#18c. Sankha Choodan

Sankha Choodan laughed aloud after hearing Tulasee speak thus. "Yes! some of what you has just said is correct! Brahma created women worthy of being praised as well being criticized.

He has created some superior women in the image of the Pancha Prakritis namely DurgA, Lakshmi, Saraswati, SAvitri and RAdikA.

They are the personification of all good qualities and all auspiciousness. Many other Devis are also great since they are created in the amsams of these five Devis. They are the uththama sthrees in the creation.

The ordinary women are of two types based on their RAjasic and TAmasic temperaments. The RAjasic women love all the pleasures of life. They enjoy marital bliss and are active running around getting their other desires also fulfilled.

They belong to the madhyama varggam. They infatuate and entice men and possess them completely. They can control the thoughts and actions of the men who have become their slaves. They never lose sight of their goals and aims in life. They do not care for justice or dharma or even established laws.

The adhama sthrees are those created out of Tamo gunam. They are unlawful, noisy, disobedient and do not care for anything or anyone.

A man is not supposed to ask a woman who is a total stranger, "Who are you?" A learned man will not do it. A cultured man will not do it. Any man should not ask this question in any place devoid of people, devoid of water or in secrecy.

I have come here to wed you in Ghandharva vivAham. I have come here to fulfill the boons given to us by Brahma."

He then related in great detail his poorva janma and her poorva janma also. He told Tulasee,"No need to be afraid of RAdhikA any more. Let us live our remaining life happily and enjoy the bliss of togetherness."



 
BHAARGAVA PURAANAM - PART 1.

#17c. சதுர்த்தி விரதம்

ஆதிப் பரம்பொருள் ஆவார் விநாயகர்;
மூவர்க்கும் முதல்வர் ஆவர் விநாயகர்;

சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பவர்கள்
சாதிப்பார்கள் உள்ளக் கிடக்கையை.

ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தியில்
ஆரம்பிக்க வேண்டும் இந்த விரதத்தை.

மண்ணால் ஓர் உருவம் சமைக்கவேண்டும்;
பொன்னால் ஓர் உருவம் சமைக்க வேண்டும்;

பொற்கலசம் ஒன்றை அமைக்க வேண்டும்;
பற்றுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும்.

அடுத்தமாதம் சுக்கில பட்ச சதுர்த்தியில்
விடவேண்டும் மண் விநாயகரை நீரில்.

முப்பது நாளும் குறையாத பக்தியுடன்
தப்பாமல் விநாயகரைத் தொழவேண்டும்.”

“இத்துணை கடின விரதத்தை எவரேனும்
இதுவரை செய்தது உண்டா தந்தையே?”

“விரதங்களில் சிறந்தது சதுர்த்தி விரதம்!
பரமனே உரைத்தான் அன்று முருகனுக்கு.

முழுமுதற் பொருள் விநாயக மூர்த்தி.
மும்மூர்த்திகளைப் படைத்தவரும் அவரே.

தோற்றங்கள் பல எடுத்துள்ளார் அவர் – என்
மூத்த குமாரனாக வந்ததது அதில் ஒன்று.”

சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தாள் பார்வதி!
வதுவையாடினாள் சிவனை எண்ணியபடி!

விவரித்தார் முனிவர் விரத மகிமைகள்,
வினாயகர் பெருமைகள் பற்றி மேலும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 17c. Chathurti vratham.

“VinAyaka is the foremost among Gods. VinAyaka created the trimoortis. Those who observe Chathurti vratham achieve what they had set out to achieve. The Chathurti vratham must be started on the fourth day in the poorva paksha in the month of AavaNi.

Image of VinAyaka must be made of clay as well as gold. A gold kalasam must be set up along with the two moortis. Pooja must be done with bhakti for thirty days continuously. On the chathurti day of the next month, the clay image must be thrown in a river or lake.

“Has anyone performed this difficult vratham so far?” PArvathi asked her father Parvatha RAjan. “Chathurti vratham is considered the best among all the vrathams. Parama Sivan told Murugan on one occasion that VinAyaka is the foremost among gods. He has taken many avatars. Appearing as his elder one was one of them.”

PArvathi observed the tough Chathurti Vratham in the prescribed manner. She married Lord Siva as her heart desired. The sage went on to describe the greatness of VinAyaka and Chathurti Vrat
ham.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#27c. ஸ்ரீ ராம சரிதம் (3)

பொன் நிறத்தில் ஓர் அழகிய புள்ளி மான்!
மின்னின உடல் மீது வெள்ளிப் புள்ளிகள்!

காதுகளை உயர்த்திக் கண்களை விரித்துச்
சாதுவாக நடை பயின்றது சீதையின் முன்பு.

விதி விளையாடியது; மதி மயங்கியது;
இது போன்ற மான் எங்காவது இருக்குமா?

“விளையாடத் தேவை எனக்கு ஒரு துணை!
இளைய பொன்மானைப் பிடித்துத் தாருங்கள்!”

சிந்திக்கவில்லை ராமனும் ஒரு கணம் நின்று;
பந்தித்து இருந்தது அவன் மதியையும் விதி!

காவலாக வைத்தான் சீதைக்கு லக்ஷ்மணனை,
ஆவலோடு தொடர்ந்தான் ராமன் பொன்மானை!

கைக்கு எட்டுவது போலத் தோன்றும் – ஆனால்
கைக்கு எட்டாமல் ஓடிச் செல்லும் முன்னே.

போக்குக் காட்டி அழைத்துச் சென்றது மான்!
தாக்கியது ராமனை ஓர் எண்ணம் அப்போது.

‘மாய மான் கபட அசுரர்களின் வேலையோ?’
தூய ராமபாணத்தை எய்தான் பொன்மான் மீது.

மனிதனைப் போலவே மரண ஓலம் இட்டான்
தனிப் பெரும் ராமனின் குரலில் மாய மாரீசன்!

பதறினாள் சீதை கணவனின் குரல் கேட்டு!
உதறினாள் முற்றிலும் சிந்திக்கும் திறனை!

உதவி செய்யப் போகவில்லை லக்ஷ்மணன்;
உணர்ந்திருந்தான் அது ஒரு மாயமான் என்று.

“ராமனை அழிக்க வல்லவன் உள்ளானோ?
ராமன் குரல் அல்ல அது அஞ்சற்க தாயே!

காவல் வைத்துவிட்டுச் சென்ற அண்ணனின்
ஏவலை மீறி நான் செல்லேன் இங்கிருந்து.

உறுதியாகத் திரும்புவான் ராமன் இங்கு.
இறுதிக் குரல் ராமனுடையது அல்ல நம்பு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


3#27c. Sree Raama charitam (3)

A beautiful deer appeared in front of SeetA. It had a golden body and silver spots all over the body. It perked its ears, widened its large eyes and waked attractively in front of SeetA. Destiny played its role. SeetA got deluded by the golden deer. Can there be a such a deer really?

SeetA told RAmA,” I need a companion to play with. Please give me that golden deer to have as my pet.” RAmA also never stopped for moment to think whether such a deer could be real. He told Lakshman to guard SeetA and went chasing the strange golden deer.

The deer appeared to be within RAmA’s arm length and then suddenly it would take off fast. It dodged and ran and led him far far away from his parNasAla.

Suddenly RAmA got a doubt that this unusual deer might be the trick played by the wicked asuras. He shot his arrow on the deer. It gave out the last wail of a dying man in RAmA’s very own voice!

SeetA heard the cry for help in RAmA’s voice. She got so agitated that she lost her sense completely. Lakshman did not go to help RAmA. He already knew that such an unusual deer could not be real.

He reassured the agitated SeetA thus: “No body can hurt RAmA the invincible. It is not RAmA shouting for help. Please do not panic dear mother!

I will not leave you alone here and go there since I do not want to disobey my brother’s orders. RAmA will come back safe and sound. I am sure that it was not RAmA’s voice at all”
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#18d. பரீட்சை

மகிழ்ந்தாள் துளசி இதைக் கேட்ட பிறகு!
'மங்கையர் விரும்பும் வாலிபன் இவனே!'

"பரீட்சை செய்தேன் உம்மை அறிந்துகொள்ள;
பரீட்சித்த பின் வரிக்க வேண்டும் கணவனாக!

வரண்டவன், வயோதிகன், குணமிலி,
அறிவிலி, தரித்திரன், மூர்க்கன் மேலும்

குஷ்டன், வியாதியஸ்தன், கோபக்காரன்,
துஷ்டப்பயல், துர்முகன், நொண்டி மற்றும்

அங்கஹீனன், குருடன், செவிடன்,
அசடன், கசடன், ஊமையன் மேலும்

ஆண்மையற்றவன், நம்புசகன், பாவிக்குப்
பெண்ணைத் தருபவன் செய்கிறான் பாவம்!

கண்ணைக் கட்டிக் கடலில் தள்ளும் தந்தை
மண்ணில் அடைவான் பிரம்மஹத்தி தோஷம்!

பத்து யாகப் பலன் அடைவான் - பெண்ணைப்
படித்த நல்ல குணசாலிக்கு அளிக்கும் தந்தை!"எனத்

தோன்றினான் பிரமன் அவர்கள் முன்பு!
"வீண் வார்த்தைகள் எதற்கு சங்கசூடா?

ஆடவர்களில் சிறந்தவன் நீ சங்கசூடா!
மாதர்களில் சிறந்தவள் துளசி ஆவாள்!

சமர்த்தன் ஆகிய ஆண்மகன் கூட வேண்டும்
சமர்த்தை ஆகிய ஒரு பெண்ணுடன் மட்டுமே!

பதிவிரதையே! பரீட்சை செய்வது எதற்கு?
சதி, பதியாக இனிது வாழ்வீர் இனியேனும்!

அடைவாய் நீ கோலோகம் சென்று கிருஷ்ணனை!
அடைவான் சங்கசூடன் வைகுண்ட நாராயணனை!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#18d. The acid test!

"I tested you to ascertain your strength in learning. It is highly advisable to choose one’s husband after examining his merits and defects.

The sin committed by a father is equivalent to the murder of a BrAhmin - when he gives away his daughter to a man who is not worthy of her.

To a man void of all necessary qualifications, to an old man, to one who is ignorant, to the poor, to the illiterate, to one afflicted with diseases, to the ugly, to the short tempered, to the very harsh, to the lame, to one who lacks limbs and organs, to the deaf, to the dumb and to one who is impotent.

If one gives in marriage a daughter to a young man of good character, learned, well qualified and of a peaceful temper, one acquires the fruits of performing ten horse sacrifices."

Now BrahmA appeared in front of them and said,"Why are you both still wasting time in useless and idle talk. Sanka ChoodA! You are a gem among men and Tulasee, You are a gem among women!

The man and his wife must be well matched in everything to lead a happy life. Get married in Gandharva style and start living as a man and his wife happily without any fear or worry." brahmA advised them!
 
BHAARGAVA PURAANAM - PART 1

#18a. கர்த்தமன்

தர்மத்தில் நிலை நின்று அரசாண்டான்
கர்த்தமன் என்னும் ஒரு பராக்கிரமசாலி.

அரண்மனைக்கு வந்தார் பிருகு முனிவர்,
ஆசிகள் பெற்றான், கேட்டான் ஓர் ஐயம்.

“இப்பிறவியில் கிட்டும் நற்பயன்கள்
முற்பிறவியோடு ஒட்டியவா அல்லவா?”

கர்த்தமனின் முற்பிறப்பை உரைத்தார்
கருத்துடன் கண்டறிந்த பிருகு முனிவர்.

“ஏழை வைசியனாக இருந்ததால் நீ
ஏழை பாழைகளுக்கு உதவவில்லை.

குற்றம் கூடியது உன் உற்றம் சுற்றம்,
முற்படவில்லை காரணம் அறிந்திட.

பிராணத் தியாகத்தை தீர்மானித்தாய்,
பிரயாணித்து அடைந்தாய் ஓர் காட்டை.

முனிவர் சௌபரியின் ஆசிரமம் கண்டாய்
கனிவுடன் அம்முனிவரை வணங்கினாய்.

“வாடிய முகத்தோடு நீ இந்தக் காட்டைத்
தேடி வரக் காரணம் என்ன?”என்றார்.

“வறுமையால் செய்ய இயலவில்லை
தரும காரியங்களைக் குலவழக்கப்படி!

உயிர்த் தியாகம் செய்யவந்தேன் இங்கு
உயர்ந்த உம்முடைய தரிசனம் கண்டேன்.”

விநாயகர் மகா மந்திரத்தை சௌபரிமுனி
விருப்பத்துடன் உபதேசித்தார் உனக்கு.

சதுர்த்தி விரதத்தையும் நடத்தி வைத்தார்
அது சேர்த்தது செல்வதை உன் வீட்டில்.

பழமரத்தை நாடும் பட்சிக் கூட்டம் என
இழிநிலையை மறந்து வந்தது உறவு!

தான தருமங்கள் செய்தாய் குறைவின்றி,
தானே மன்னன் கர்த்தமனாகப் பிறந்தாய்.”

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.

#18A. Kardaman

A King named Kardaman ruled his country in a manner which earned him a lot of praise. Brugu rushi visited him once. The King got his blessings and asked him a doubt.

“Does our previous birth influence our present birth?” Brugu could look into his previous birth and told him about it.

“In your precious birth you were a poor vaisya. You could not perform any good karma due to the lack of riches. Your relatives found fault with you for not donating money to the poor but they did not try to find out the real reason behind it.

You felt very hurt and decided to end your life. You went to the dense jungle and saw the ashram of Rushi Soubari there. You went near and paid obeisance to him.

The rushi asked you for the reasons which made you go to the unfriendly forest and for feeling so dejected in life.

You told him the reasons. He took pity on you and taught you the VinAyaka MahA mantra. He helped you to conduct the Chathurthi Vratham in the prescribed manner.

Your house was filled with riches. Your relatives forgot your miserable past and became friendly with you again. You could do sat karma as prescribed and as a result of the puNya you are now born as a king Kardaman.”
 
DEVI BHAAGAVATM - SKANDA 3

3#27d. ஸ்ரீ ராம சரிதம் (4)

சாந்த ஸ்வபாவம் கொண்டவள் தான் சீதை;
காந்தனின் குரல் கேட்டு மதியிழந்தாள் பேதை!

கொடூரமான சொற்களைக் கூரிய அம்புகளாகத்
தொடுத்தாள் சீதை அப்பாவி லக்ஷ்மணன் மீது!

“துணையாக வந்தாயா எங்களுக்கு – அல்லது
துணைவியாக்கிக் கொள்ள வந்தாயா என்னை?

பாசத்தால் வரவில்லை நீ வனவாசம் – என் மீது
நேசத்தால் வந்து காத்திருக்கிறாய் வாய்ப்புக்கு.

ராமனுக்கு எதுவும் நேர்ந்திருந்தால் – நானும்
ராமனுடனே மடிந்துவிடுவேன் அறிந்து கொள்!

காமத்துடன் காத்திருக்கும் உன்னை நான்
ஏமாற்றுவேனே அன்றி உன் வசப்படேன்!

அண்ணன் அண்ணன் என்று நீ குழைவது
உண்மை எனில் உடனே செல்! உதவி செய்!”

விம்மி விம்மி அழுதான் லக்ஷ்மணன்;
நிம்மதி அழிந்தது நச்சுச் சொற்களால்!

“எப்படி எண்ண முடிகிறது என்னைப் பற்றி
இப்படிக் கீழ்த்தரமாக அன்னையே கூறு!

விபரீதம் விளையப் போகிறது ஐயமின்றி!
அபரிமிதமான பேசிவிட்டாய் என்னிடம்.

பின் விளைவுகள் நன்மை தராது உறுதி!
என் பேச்சைக் கேள் உன் நன்மை கருதி!

தண்ட வேண்டாம் நான் வரைந்த கோட்டை!
அண்டாமல் தடுக்கும் இது வரும் கேட்டை!"

மனமில்லாமல் விலகிச் சென்றான் அவன்,
மனக் கவலையில் மூழ்கித் தத்தளித்தபடி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


3#27d. Sree RAma charitam (4)

SeetA by nature was calm and kindhearted. But the wail she had heard and thought to be RAmA’s made her very rude now. She spoke cruel words to Lakshman doubting his character, his integrity and his intentions.

“Did you come here to help us in vana vAsam or did you come here to possess me when you get a chance? You have not come due your love for your elder brother. You have come here due to your lust for me.

If anything happens to RAmA, I will rather die along with him than become your woman. I will never belong to you! If it is true that you have any love for RAmA, go forth now to help him in his danger!”

Lakshman crumbled down hearing these harsh and cruel words. He lamented, “How can you think of me so low? A harm is about to befall us, I have no doubts. You have spoken words which should never be spoken by anyone. I am sure the consequence of this is going to be very painful!

I will draw a line. For your own sake and for your own safety do not cross the line for any reason whatever. It will keep off all the impending danger!”

He drew the Lakshman rekha and went away looking for RAmA weeping bitter tears.
 

Latest ads

Back
Top