• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#19a. காதல் லீலைகள்

மணந்தான் சங்கசூடன் துளசியை விரும்பி!
மலர்மழை பொழிந்தது; துந்துபி முழங்கியது!

மூழ்கினர் இன்ப சாகரத்தில் இருவரும்!
ஆழ்ந்தனர் காம லீலைகளில் இருவரும்!

புரிந்தனர் காம நூலில் கூறப்பட்ட லீலைகளை;
எரிந்தது கொழுந்து விட்டு; காமம் தீரவில்லை!

ஈருடல் ஓருயிர் ஆக மாறி மனம் மகிழ்ந்தனர்;
இடைவெளி இல்லாது அணைத்து மகிழ்ந்தனர்.

நகைப்பர் இருவரும் தங்கள் உடல்களில் உள்ள
நகக் குறி, பற்குறிகளைக் கண்டு மனம் மகிழ்ந்து!

அலங்கரித்தக் கொள்வர் நறுமணம் கமழ்ந்திட;
அலங்கரித்துக் கொள்வர் ஆடை, அணிகளால்.

வருண தேவனின் சிறந்த பட்டாடைகள்;
பெறுவதற்கரிய நவ ரத்தின ஆபரணங்கள்;

ஸ்வாஹா தேவியின் கால் தண்டைகள்;
சாயா தேவியின் அரிய தோள் வளைகள்;

ரோஹிணி தேவியின் அழகிய குண்டலங்கள்;
ரதி தேவியின் மோதிரங்கள், வளையல்கள்;

விஸ்வகர்மா தந்த சங்கு, பொட்டு, நகைகளை
விரும்பி அளித்தான் அரிய பரிசாக துளசிக்கு.

கூடி மகிழ்ந்தார் விரும்பிய இடங்களில்;
கூடி மகிழ்ந்தனர் ஒரு மன்வந்தரக் காலம்.

தடைபட்டன யாக, யக்ஞங்கள், கர்மங்கள்;
தடை பட்டது தேவர்களின் அவிர் பாகமும்!

யாசகர்கள் போலத் திரிந்தனர் தேவர்கள்;
யாகங்கள் தொடர வழி தேடினர் தேவர்கள்.

குறைகளை முறையிட்டனர் பிரம்மனிடம்;
குறைகள் தீரச் சென்றனர் வைகுந்தம் பின்பு.

எடுத்து இயம்பினர் வைகுந்த வாசனிடம்
அடுத்து வந்துள்ள துயரங்களை விரிவாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#19a. The game of love!

Sankha Chooda married Tulasee without any further delay. Flowers rained from the sky and the air resounded with the Deva Dundubi!

The couple immersed themselves in an ocean of joy and pleasure. The more they indulged in amorous sports. the more their desire burned like the fire fed with ghee.

They were two bodies and one soul. They embraced and stopped even air parting them a little. They used to enjoy locating the marks made on their bodies by their nails and teeth.

They would decorate themselves with new clothes, ornaments, flowers and sandal paste and indulge non stop in amorous sports

Sankha Choodan gave Tulasee a pair of garments brought from VaruNa's house, a necklace of rare gemstones hard to find in any of the three worlds, the anklets of Agni's wife SvAhA Devi, Keyura or the armlets of the Sun’s wife ChhAyA Devi, the two earrings of RohiNi Devi - the wife of the Moon, the finger rings of Rati Devi - the wife of KAmadeva, and the wonderfully beautiful conch, given by Visva KarmA.

He gave her excellent cots studded with pearls and jewels. One Manvantara rolled on this way. YAgAs and YagnAs were discontinued. Deva could not get their share of the food from the Havisu and roamed about like beggars.

They wanted the yAga and other karmas to be resumed . They went to BrahmA and sought his help. He went to Vaikuntham with them and explained the predicament to Vishnu BhagaVan.
 
BHAARGAVA PURAANAM - PART 1.

#18b. நளன்

நளராஜன் என்னும் நிடத மன்னனும்
நலம் பெற்றான் சதுர்த்தி விரதத்தால்.


நிடத நாட்டை ஆண்டு வந்தான்
ஈடு இணையற்ற மன்னன் நளன்.


அழகன் நளராஜனின் மனைவி
அழகி, குணவதி ஆகிய தமயந்தி.


கௌதமர் வந்தார் நளனைக் காண;
கௌரவித்த நளன் அவரைக் கேட்டான்,


“பேரின்பப் பேற்றினை அடைவதற்குச்
சீரிய விரதங்கள் செப்புங்கள் ஐயா !” என


“சென்ற பிறவியில் நீ கௌட தேச மன்னன்;
சென்றாய் பகைவரை வென்று வாகை சூட.


சதுர்த்தி விரதம் செய்தாய் பக்தியுடன்.
அது தந்தது விநாயகரின் பூர்ண அருள்.


வென்றாய் பகைவரைப் போரில் எளிதல்;
இன்றும் மன்னனாக வாழ்ந்து வருகின்றாய்.


இப்பிறவியிலும் செய்வாய் சதுர்த்தி விரதம்
எப்பிறவியிலும் எய்துவாய் நற்பயன்கள்!”


நளராஜன் செய்தான் சதுர்த்தி விரதம்;
நளன் அடைந்தான் இக, பர போகங்கள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#18b. NaLan


NaLa RAjan ruled over NishAda Kingdom. His beautiful wife was Damayanti. NaLan performed Chathurti vratham and obtained happiness in this world as well as in the next.

Rushi Gouthama came to visit NaLan once. The king asked the sage, “Sire! please tell me the vrathams I should observe in order to break away from the samsAra and obtain eternal bliss”


Sage Gouthama replied to the king,”You were the king of Gowda dEsam in your previous birth. You went to the battlefield to vanquish your enemies. You performed the Chathurti vratham with sradhdha and bhakti. It earned you the grace of Lord VinAyaka.


You won the battle with ease. You lived a good life. You are again born as a king . If you observe the chathurti vratham now, it will shower on you the grace of VinAyaka and make your life good.”


The king performed the Chathurti vratham and obtained happiness in this world as well in the next.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#27e. ஸ்ரீ ராம சரிதம் (5)

சென்றான் லக்ஷ்மணன் ராமனைத் தேடி,
நின்றான் சந்நியாசி வந்து சீதையை நாடி.

கருதினாள் உண்மை சந்நியாசி என்று சீதை,
கந்த மூல பழங்கள் தந்து உபசரித்தாள் பேதை.

“யார் நீ? உன் தந்தை யார்? உன் கணவன் யார்?
யாருமில்லாத தனி வனத்தில் இருப்பது ஏன்?”என

“ஜனகராஜனின் மகள், தசரதனின் மருமகள்,
வனவாசம் வந்துள்ள ராமனின் பத்தினி சீதை.

சிற்றன்னை நிபந்தனையால் வந்துள்ளோம்;
பெற்றுள்ளான் ராமன் பெரும் தோள் வலிமை!

அச்சமில்லை ராமனுடன் இருக்கையில் எனக்கு;
இச்சகத்தில் ராமனுக்கு ஈடு இணை இல்லை!” என

“மண்ணாளும் மன்னன் இலங்கேஸ்வரன்,
மண்டோதரியின் கணவன் ராவணன் நான்!

அடிமை ஆகிவிட்டேன் உன் அழகுக்கு;
உடமையாக வேண்டும் இனி நீ எனக்கு.

என்ன உள்ளது வனவாசி ராமனிடம்?
என்ன இல்லை லங்காதிபதி என்னிடம்?

அழகிய நங்காய்! நீ இருக்க வேண்டும்
பழகிய என் மாளிகை அந்தப்புரத்தில்!

பத்து திக்குகளையும் வென்றவன் நான் – உன்
பாதங்களில் வீழ்கின்றேன் காதல் பிச்சை தா!

தரித்திரன் ராமனைத் துறந்து வந்து விடு;
இருக்கலாம் என் ராணியாக இன்பத்தோடு.”

காம மிகுதியில் பேசினான் ராவணன்;
“ராமன் வருவானா?”ஏங்கினாள் சீதை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


3#27e. Sree Raama charitam


The moment Lakshman went in search of RAmA, a sanyAsi stood before SeetA. She thought he was a real sanyAsi and welcomed him by giving the fruits and roots to eat.

He asked her, “Who are you? Who is your father? Who is your husband? Why are you here all alone in this dense forest?”

SeetA replied,” I am the daughter of King Janaka. I am the daughter in law of King Dasaratha. I am the wife of RAmA who is in vanavaasam now. We had to come here as commanded by his step mother. RAmA is valorous and strong. There is no one who is a match for him. I do not fear the forest when he is with me”

“I am RAvaN the king of Lanka. I am the husband of Queen MaNdothari. I have become a slave to your beauty. I want you to become mine. What does that RAmA possess living in this forest? What is that I do not have as king of Lanka?

Oh pretty damsel! Your rightful place is the harem in my palace. I have conquerEd all the ten directions. I lie at your feet begging for your love. Forsake the good for nothing RAmA and become my queen to live happily hereafter”

RAvaN was steeped in lust and SeetA wished that RAmA should return soon.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#19b. விஷ்ணு தேற்றினார்

"அறிவேன் இவற்று நீங்கள் கூறும் முன்பே!
அறிவேன் சங்கசூடன் சுதாமன் என்பதையும்.

ராதை மிரட்டினாள் கிருஷ்ணனுடன் இருந்தவனை;
ராதையைக் கண்டிக்கவில்லை மௌனி கிருஷ்ணன்.

ராதையை வெருட்டினான் சுதாமன் வெகுண்டு;
ராதை ஆணையிட்டாள் சுதாமனை விரட்டுமாறு!

வெளியேற்றினர் தோழியர் சுதாமனை விரட்டி;
வெளியே சொன்ன பொய் சுதாமன் அடித்ததாக!

அவசரப்பட்டுச் சபித்து விட்டாள் ராதை அவனை,
"அடைவாய் ராக்ஷசக் குறியை!" என்று கோபத்தில்.

அழுது கொண்டே போனான் சுதாமன் - கருணையால்
"அழ வேண்டாம்!" என்று அவனைத் தடுத்தாள் ராதை.

கண்ணீர் விட்டு அழுதனர் கோபர், கோபியர்;
மண்ணில் சாபம் தீர்ந்து திரும்புவான் அவன்!

யோக மாயைகள் நன்கறிந்தவன் சங்கசூடன்;
போக வேண்டும் சூலத்துடன் பிரமன் பூவுலகு;

சம்ஹாரம் செய்வான் சங்கரன் சங்கசூடனை;
சங்கசூடனைக் காப்பது அவன் மந்திரக் கவசம்;

பங்கம் ஏற்பட வேண்டும் பதிவிரதா தர்மத்துக்கு
சங்கசூடனை சங்கரன் சம்ஹரிப்பதற்கு முன்பு.

மங்கையிடம் விடுவேன் நான் என் வீரியத்தை;
பங்கம் ஏற்படுத்துவேன் பதிவிரதா தர்மத்துக்கு!

தேஹம் துறந்த துளசி என் மனைவி ஆகிவிடுவாள்!
தேஹம் துறந்த சங்கசூடன் இணைவான் என்னுடன்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#19b. Vishnu's advice

VishNu told BrahmA," I know all about Sankha Chooda. In his previous birth he was my devotee Gopa SudAmA. He has now become Sankha Chooda - a DAnava due to the curse pronounced by RAdhA.

One day I went to RAsa maNdala accompanied by Gopi VirajA. When RAdhA came there VirajA turned into a river. RAdhA thought that I too had disappeared. So She went back with Her Sakhis.

But when I returned to the house with SudAmA, RAdhA took me to task. I remained silent. But SudAmA rebuked RAdhA in my presence. She immediately ordered Her Sakhis to drive him away from Goloka.

SudAmA got scared as all of RAdhA's friends gathered together to drive him away from there. RAdhA further cursed him, “ May you be born in the womb of a DAnavi.” SudAmA broke down to tears. He bowed down to me and went away crying.

RAdhA melted with mercy and tried to stop him. The Gopas and Gopis also began to weep. I then explained to them, “SudAmA will come back, after fulfilling the curse. O SudAmA! Come back to me here when the curse is exhausted.”

Sankha Chooda will soon return from the earth. Oh MahAdev! Take this Soola and go to BhArata varsha. You will slay the DAnava with this Soola. He wears my auspicious Kavacha and in invincible as it is now.

No one will be able to kill him as long as wears the Kavacha. It is to be taken away from him first. BrahmA! You have given him the boon that he could not be killed as long as his wife Tulasee remains chaste. I will ravish her and destroy her chastity.

Tulaseew will then give up her body and become my wife. Sankha Chooda will give up his body and return to Goloka." Thus speaking NArAyanA gave the Soola to MahA dev
 
BHAARGAVA PURAANAM - PART 1

18c. சந்திராங்கதன்

மாளவ தேசத்தின் கன்ன நகரை
ஆளப் பிறந்தவன் சந்திராங்கதன்.

சத்ருக்களை அழிக்கும் அரிய சக்தி
பெற்றது அவனது அரிய சூலாயுதம்.

நாட்டு மக்களைத் துன்புறுத்தலாயின
காட்டு விலங்குகள் நாட்டில் புகுந்து!

துஷ்ட மிருகங்களை வேட்டையாடுவது
இஷ்டமான பணியே நம் அரசர்களுக்கு.

கொடிய விலங்குகளை அழித்தவனைக்
கொடிய அசுரர்கள் வந்து வழிமறித்தனர்.

அச்சம் என்பதே இலாத அரசனும் அரக்கரை
மிச்சம் மீதியின்றிக் கொன்று குவித்தான்!

அரக்கர்கள் மடிவதைக் கண்டதும் ஓர்
அரக்கி வந்தாள் அப்போரைத் தொடர.

பெண்ணுடன் போர் புரிய விரும்பாமல்
தண்ணீரில் ஒளிந்து கொண்டான் அரசன்.

அந்தத் தடாகமோ நீராடும் இடம் ஆகும்
சிந்தையை மயக்கும் நாக கன்னிகளுக்கு.

மயக்கும் அழகியர் மயங்கினர் அவனிடம்
தயக்கமின்றி உடன் அழைத்துச் சென்றனர்

கூடிக் களிக்க வேண்டும் அவனுடன் என
ஆடிப் பாடி அவனை மயக்க முயன்றனர்.

சந்திராங்கதன் இணங்கவில்லை அதற்கு
சிந்தை கலங்காமல் மறுத்து விட்டான்!

“மன்னன் மகன் நான்; மணமானவன் கூட.
என்னை அனுப்பிவிடுங்கள் என் உலகுக்கு!”

மனம் மாறிவிடாதா என்ற நப்பாசையால்
மன்னனைப் போக விடவில்லை பெண்கள்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

18c. ChandrAngathan

ChandrAngathan was the king of a city in MaaLava desam. He had a weapon (a soolAyudham) which could destroy all his enemies. The wild animals invaded the city and troubled the citizens. It was the king’s duty to keep the wild animals in check and protect his citizens.

The king went on a hunting spree and killed many wild animals. He was waylaid by a group of asurA. The king who never knew fear killed all of them with his Superior weapon.

Immediately a rAkshasi came to continue the battle. Since the king did not want to fight with a woman, he hid himself in the water of a pond. The pretty nAga kanyAs used to bathe in that pond.

They saw the handsome king and fell in love with him. They took him with them to their world. They sang and danced and tried their best to win his love. But the king kept saying, “I am the son of a king. I am already married. Please let me return to my world”

The nAga kanyAs did not lose their hope of winning his love and retained him in their land for a long time.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#28a. ஸ்ரீ ராம சரிதம் (6)

அஞ்சி நடுங்கி விட்டாள் சீதை இதைக் கேட்டு !
கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டாள்,

“பயனற்ற சொற்களைப் பேசுகின்றாய் நீ!
தயரதன் மருமகள் உனக்கு மனைவியா?

ராமன் வந்தால் திரும்ப மாட்டாய் உயிரோடு!
ராவணா! சென்றுவிடு இங்கிருந்து இப்போது!”

அஞ்சுபவனா இராவணன் கொஞ்சு மொழிகளுக்கு?
வஞ்சக வடிவை விடுத்ததுச் சுயவுருவெடுத்தான்!

பற்றிச் சென்றான் சீதையைப் பலவந்தமாக!
பறந்தது விமானம் லங்காபுரியை நோக்கி!

அழுதாள் சீதை “ராமா! லக்ஷ்மணா!” என்று.
அழுகுரல் கேட்டான் அருணன் மகன் ஜடாயு.

தாக்கினான் பதிவிரதையைக் கடத்துபவனை;
தாக்கினான் தன் அலகு, நகங்கள், சிறகுகளால்.

வெட்டித் தள்ளினான் ராவணன் சிறகுகளை.
வெகு விரைவாக அடைந்தான் லங்காபுரியை.

அரக்கியர் காவலில் வைத்தான் சீதையை;
அரற்றி அழுதாள் ஆற்றாமையால் பேதை!

அச்சுறுத்துவான் அனுதினம் அங்கு வந்து – பின்
உச்சரிப்பான் அவளிடம் அளவு கடந்த காதலை

பத்தினியை பலவந்தம் செய்ய இயலாததால்
அத்தனை விதங்களிலும் துன்புறுத்தி வந்தான்.

சோகமே வடிவாக இருந்தாள் சீதை – அ
சோக வனத்தில் நலிந்தும், மெலிந்தும்.

‘மரண ஓலத்தைக் கேட்டு அஞ்சியதால்
தரணி மகள் என்ன செய்தளோ?’ என்று

விரைந்து வந்தான் ராமன் பர்ணசாலைக்கு;
வியந்து நின்றான் எதிர்ப்பட்டவனைக் கண்டு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#28a. Sree RAma charitam ( 6 )

SeetA trembled on hearing these words. She gathered all her courage and took to task the mighty RAvaN.”You are talking meaningless words Oh RAvaN! The daughter in law of Dasaratha will never become your wife. If my RAmA returns now, you will not go back from here alive. Go away before my husband returns!”

RAvaN was undaunted by her anger. He took his original terrifying form now. He grabbed SeetA and flew in his vimAnam to Lanka. SeetA cried piteously calling out the names of RAmA and Lakshman.

JatAyu, the son of AruNan, heard these piteous cries. He attacked RAvaN abducting SeetA with terrible anger and fought with him using his strong beak, talons and powerful wings.

RAvaN became very angry by this unexpected interference. He cut off the wings of JatAyu mercilessly and rushed to Lanka with SeetA. He kept SeetA under the constant vigil of the fearsome rAkshasis in Asokha vanam. SeetA became famished, dirty, lean and tired by weeping bitter tears of self pity.

RAvaN made it a point to come to her everyday to tempt her and threaten her. He would glorify himself and tell her to accept him as her mate. He would threaten to devour her if she would not accept him.

Meanwhile RAmA got worried about the wail made the dying asura in RAmA’s own voice. He hurried back to the parNasAla and was shocked to see Lakshman coming to meet him – leaving SeetA all alone in that treacherous forest.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#20a. சிவன் தூது


உறுதியாக நம்பினான் பிரமன் விஷ்ணு கூறியவற்றை;
கருதினான் பரமசிவனைத் தியானத்தில் பூவுலகு சென்று.

அமர்ந்தான் ஓரால மரத்தின் அடியில் தேவர்களுடன்
அழகிய சந்திரபாகா நதிக் கரையில் உடனே சென்று.

சந்திர சூடன் காட்சி தந்தான் பிரம்ம தேவனுக்கு
"சங்க சூடனை அழிக்க வேண்டும் எவ்வாறேனும்!"

பிரார்த்தித்தான் பிரமன் தேவர்களுடன் சிவனை;
பிரமலோகம் திரும்பினான் விண்ணப்பித்த பின்.

சங்கசூடன் தலை நகருக்கு அனுப்பினான் தூதாக,
சந்திரசூடன் கந்தர்வன் புஷ்பதந்தனை அழைத்து!

ஜொலித்தது தலைநகர் சுவர்க்கத்தினும் மேலாக;
ஜொலித்தது அரண்மனை ரத்தினங்கள் இழைத்து.

நான்கு அகழிகள் பாதுகாத்தன நகரை - முன்
நான்கு வாயில்களிலும் பலத்த கட்டுக் காவல்!

பிங்கலாக்ஷன் காவல் செய்தான் சூலத்துடன்;
தங்கு தடையின்றி அனுமதித்தான் தூதுவனை.

"சிவன் தூதன் நான் கந்தர்வன் புஷ்ப தந்தன்!
சிவன் கூறிய தூது மொழியைக் கேள் மன்னா!

திருப்பித் தந்துவிடு தேவர்களின் உலகத்தை!
திருப்பித் தந்துவிடு தேவர்களின் செல்வதை!

மறுத்தால் வா எங்களுடன் போர் புரிவதற்கு;
இருக்கிறார் சிவன் சந்திரபாகா நதிக்கரையில்!

மறுமொழி என்னவோ கூறுவாய் என்னிடம்!" என
சிரித்தான் சங்க சூடன் "வருவேன் நாளை நானே! "

குழுமினர் சிவகணங்களின் தலைவர்கள்;
குழுமினர் அஷ்டபைரவர், ஏகாதச ருத்திரர்;

குழுமினர் அஷ்ட வசுக்கள், துவாதச ஆதித்யர்;
குழுமினர் கூஷ்மாண்டர், யக்ஷர், வேதாளங்கள்.

அந்தப்புரம் சென்றான் துளசியிடம் சங்கசூடன்;
அறிவித்தான் தூது மொழிகள், போரைக் குறித்து.

"கெட்ட கனவு கண்டேன் விடியற் காலையில்;
கெட்ட செய்தி கேட்டேன்!" எனத் துளசி அழுதாள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#20a. SivA's messenger

Brahma entrusted the task of killing Chandra Chooda to Lord Siva and went back to his abode. So did all the other Devas. Now Siva sent Pushpadanta - a Gandharva - as his messenger to Sankha Chooda's capital city.

The capital city was more prosperous than AmarAvathi or ALagApuri. The palace was studded with precious gems everywhere. Multiple trenches protected the city. The twelve main gates were well protected by vigilant guards.

PingalAkshan guarded eagle eyed with his SoolAyudam. But he allowed the messenger from Siva to enter the palace freely.

Puspadantan was duly impressed by the rich spectacle that met his eyes. He was amazed to see the grandeur and prosperity of Sankha Chooda.

He introduced himself and conveyed the message sent by Siva,"Return all the things and privileges the Deva used to enjoy before. Let them live as before without any hindrance. If you will not agree to do this, come to the war front. Lord Siva is waiting on the bank of the river ChandabAga. Tell me your reply to be conveyed to our Lord"

Sankha Choodan laughed and said, "I shall come there tomorrow morning. Now you go back to your Lord and master!"

The leaders of Siva gaNAs assembled. Ashta BahiravAs, EkAdas RudrAs, Asta Vasus, DwAdasa AdithyAs, KooshmANdAs, Yakshas and VetAls all assembled ready for the imminent war.

Sankha Choodan went to the quarters of Tulasee and told her of the happenings of the day. She said,"I had a very scary dream early in the morning. Now I have heard the bad news also from you!" She started weeping uncontrollably.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#18d. இந்துமதி

வேட்டைக்குச் சென்ற அரசன் அங்கு
காட்டில் காணாமல் போய்விட்டான்.

தேடினர் இறங்கித் தடாகம் முழுவதும்;
இடிந்த மனத்துடன் திரும்பினர் நாடு.

கூறினர் அரசி இந்துமதி தேவியிடம்
வீரர்கள் இந்தத் துயரச் செய்தியினை.

“தடாகம் முழுவதும் தேடிய போதும்
உடல் கூடக் கிடைக்கவில்லை!” என.

இடிந்து போய்விட்டாள் அரசி இந்துமதி!
கடந்தன பன்னிரண்டு நீண்ட ஆண்டுகள்.

நாரதர் வந்தார் நன்மைகள் புரிந்திட ;
நடந்ததை கண்டார் ஞானக்கண்ணால்.

“இந்தக் கோலம் இனி வேண்டாம் தாயே!
சொந்தக் கணவன் உள்ளான் உயிருடன்.

கடத்திச் சென்றவர் நாக கன்னிகைகள்!
காவலில் வைத்தனர் நாகலோகத்தில்!

மனம் மாறிப் பெண்கள் உன் கணவனை
அனுப்பச் செய்திட வழி ஒன்று உள்ளது.

பொறுப்புடன் சதுர்த்தி விரதம் செய்தால்
விருப்புடன் திருப்பி அனுப்புவர் அவனை!”

உபதேசித்தார் நாரதர் ஏகாக்ஷரத்தை.
உபதேசித்தார் சதுர்த்தி விரத விதியை.

பூர்த்தி ஆனது அரசியின் சதுர்த்தி விரதம்!
மாற்றியது அது நாககன்னியர் மனங்களை!

பன்னிரண்டு ஆண்டுகள் மாறாது இருந்த
மன்னனின் மனவுறுதியை வியந்தனர்.

ஏராளமான பரிசுகளை அளித்து அவனைத்
தாராளமாக அவர்கள் திருப்பி அனுப்பினர்.

மறைந்திருந்த மன்னன் வந்தான் மீண்டு;
நிறைவெய்தியது நாடு முன்போல் மீண்டும்!

விரத மஹிமையை உணர்ந்த அரசனும்
விநாயகச் சதுர்த்தி விரதத்தை செய்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#18d. Indumathi

The King ChandrAngathan went on a hunting expedition with his soldiers and went missing. The soldiers searched inside and outside the lake but found no trace of the missing king. They returned to their city dejected and told the bad news to the queen Indumathi.

She was shattered by this sudden shock. Years rolled by and it was twelve years since the king was missing. NArada came to meet the queen. He knew the whereabouts of the missing king.

NArada told the queen, “No need to shed tears any more oh queen. You husband is alive and well looked after but he is under guard in the land of NAgAs. The only way to bring him back here is to observe the chathurti vratham.”

NArada taught the Queen Indumathi VinAyaka mantra and the Chathrurti puja vidhis. She completed the vratham successfully. That made the nAga kanyAs change their mind.

They understood that if the king could resist their temptation for twelve years, he could do it for any number of years more. They admired his courage and commitment. They showered him with gifts and took him back to his city.

The whole city rejoiced the return of the missing king after twelve years. The king understood the power of chathurti vratham. He himself observed it successfully and lived happily for a long long time.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#28b. ஸ்ரீ ராம சரிதம் (7)

“சீதையைத் தனியே விட்டு விட்டு வந்தாயா?
சீதைக்கு என்ன நேர்ந்ததோ?” என்றான் ராமன்.

“தீங்கான காலம் தான் அண்ணா எனக்கு இது
ஏங்கித் தேடியபடி வந்தேன் உன்னை ” என,

விரைந்தனர் இருவரும் பர்ணசாலைக்கு;
மறைந்து விட்டிருந்தாள்; சீதை அங்கில்லை!

வருந்தியபடித் தேடிச் சென்றனர் வனத்தில்;
அருமைச் சகோதரர் இருவரும் சீதையை.

கண்டனர் வாழ்வின் விளிம்பில் ஜடாயுவை!
விண்டான் தான் கண்டதைப் போரிட்டதை!

“ஆண்மைத் தினவெடுத்துத் தீமை புரிந்தான்!”
மாண்டான் ஜடாயு இதனை உரைத்த பின்பு.

சீதைக்காகப் போரிட்டு உயிர் இழ்ந்தவனுக்குச்
சிதையை மூட்டி தஹனம் செய்தான் ராமன்.

கபந்தனுக்கு அளித்தான் சாப விமோசனம்.
கபந்தன் சொற்படிச் சந்தித்தான் சுக்ரீவனை.

ஒளிந்து வாழ்ந்திருந்த சுக்ரீவனுக்கு ராமன்
அளித்தான் நாட்டை, வாலியைக் கொன்று.

திளைத்தது உலகம் மழையில் நனைந்து!
உளைந்தது மனம் சீதையை எண்ணி ஏங்கி!

“என்ன சோதனையைச் சந்திக்கின்றாளோ?
என்ன வேதனையை அனுபவிக்கின்றாளோ?

ஏதேனும் சீதைக்கு நேர்ந்துவிட்டிருந்தால்
வேதனையில் நான் உயிர் விடுவேன்.”என,

“துன்பம் இன்பம் கலந்ததே வாழ்க்கை
துன்பத்தைக் கண்டு துவளக் கூடாது!

தேவருக்கும் உண்டு இன்ப துன்பங்கள்;
தேவையற்ற கவலையை ஒழியுங்கள்!”

சொந்த அண்ணன் ராமனுக்கு மருந்தாகி
நொந்த உள்ளத்துக்குச் சிகிச்சை தந்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

3#28b. Sree RAma charitam (7)

RAmA was stunned to see Lakshman coming in search of him, leaving SeetA alone in the forest. “Why did you leave SeetA alone Lakshman? Let us hope that nothing has happened to her!” Lakshman replied,” I have a feeling that this is not a favorable period for us dear elder brother!”

They both rushed to the parNasAlA. But SeetA was not to be seen anywhere there. They went in search of her in the forest.

They came across JatAyu at the sunset of his life. JatAyu told the brothers that RAvan had abducted SeetA and his attempt to stop the abduction was futile.

JatAyu breathed his last. RAmA and Lakshman did the last rites for that brave bird. They came across Kabandan and delivered him from his curse.

As advised by Kabandan, RAmA befriended Sugreevan – who was hiding away from his powerful brother VAli .

RAmA killed VAli and made Sugreevan the new king. The rainy months followed and they had to wait for it to get over. RAmA was pained by worrying about SeetA and wondering what could have happened to her.

He told Lakshman,”If anything has happened to SeetA I shall give up my life!” Lakshman consoled RAmA and said,

”Life is a mixture of pleasures and pains. We should not get disheartened by the difficulties and sorrows. Even the Gods have go through pleasures and pains. Please stop worrying unnecessarily. No harm would have befallen SeetA MAtA“
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#20b. சங்கசூடன் அறிவுரை

"தோன்றும் சுகம் துக்கம் காலத்தின் தொடர்பினால்;
தோன்றும் இன்பம் , துன்பம் காலத் தொடர்பினால்!

தோன்றும் பயம், தைரியம் காலத் தொடர்பினால்;
தோன்றுகின்றன அனைத்தும் காலத் தொடர்பால்!

பிரபஞ்சம் தோன்றுகிறது காலத் தத்துவத்தால்;
பிரபஞ்சம் மறைகின்றது காலத் தத்துவத்தால்.

மும்மூர்த்திகள் முத்தொழில்கள் புரிகின்றனர்
தம்மோடு இணைந்த காலத் தத்துவத்தினால்.

பிரகிருதி நிச்சயிக்கிறது காலத் தத்துவத்தை;
பிரகிருதி நிச்சயிக்கிறது இச்சா சக்தியினால்.

பிரம்மாண்டத்தில் இயங்கும் அனைத்தும் காலப்
பிரமாணத்தை ஒட்டியே நிகழ்கின்றன அல்லவா?

காலத் தத்துவத்துக்கு அப்பாற்பட்டவர் இருவர்,
காலைப் பற்றிக் கொள் அந்த இவர்களையும்!

பிரபஞ்சத்தின் மாதா பார்வதி தேவி என்றறிவாய்
பிரபஞ்சத்தின் பிதா பரமேஸ்வரன் என்றறிவாய்.

உண்மையான உறவினர்கள் உயிர்களுக்கு இவர்களே!
உண்மையல்ல நாம் காண்கின்ற பிற உறவுகள் இங்கே!

நம் இருவரையும் இணைத்தது காலத் தத்துவம்;
நம்மைப் பிரிக்கும் இனி அதே காலத் தத்துவம்.

காலத்தின் வயப் பட்டவற்றை எண்ணி அறிஞர்கள்
கவலைப் படுவதோ, அச்சம் கொள்வதோ இல்லை!

அடைவாய் நீ கிருஷ்ணனை வெகு விரைவில்!
அடைவேன் நானும் கிருஷ்ணனை விரைவில்!"

தேறினான் துளசியி பலவாறாக - மஞ்சத்தில்
போற்றினான் அவளை விரும்பும் வண்ணம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#20b. Sankhachooda consoles Tulasee

“My dear wife! It is The Time factor that awards auspiciousness and in-auspiciousness to the living beings. The trees grow up, bloom with flowers, yield plenty of fruits and die out at the appointed time and season!

The universe comes into existence in the appointed time and dies away in its due time. The Creator, Preserver, and Destroyer of the universe, accomplish their assigned tasks assisted by the Time factor.

Only the highest Prakruti Devi is beyond this Time factor. She can make the Time dance to her tunes. She is the Ruler of everything. She is in everything. She is the Highest God.

Take refuge in this Highest power. The wind blows, the Sun rises, the rain falls, the fire burns and the moon cools the plants and the planet earth by her command.

She is the power behind everything and everyone. Surrender to her unconditionally and become free from all kinds of worries!

Who am I? Who are you ? The Creator brought us together due to our favorable Time factor. We will be separated by the same Time factor - since it is unfavorable now.

The Wheel of Time takes us into happiness or into sorrow. There is no point in worrying about things and events which lie beyond our control.

You will return to KrishNa who you wanted for your husband. I will return to my friend KrishNa after exhausting my curse given by RAdhikA. There is no need to worry!"

Sankhachooda consoled his wife and made her happy the way she loved most.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#19a. தாருகன் தவம்

தாருகன் புரிந்தான் நெடும் கடும் தவம்;
‘தனிப்பெரும் தலைவனாக ஆக வேண்டும்.

அண்டங்கள் அனைத்திலும் தன் ஆணை
அமலாக வேண்டும் நூற்றெட்டு யுகங்கள்.

பிரான் அளித்தார் கோரிய வரங்களை!
பிற சக்திகளால் அழிவின்மையும் கூட.

லோகங்கள் அனைத்தையும் வென்றான்;
தேவர்கள் ஆயினர் அடிமைகள் கூட்டம்.

இந்திரன், நான்முகன், நாரணன் சேர்ந்து
சென்றனர் கயிலை பிற தேவர்களுடன்.

“சிவகுமாரன் அவதரிக்க வேண்டும் எனில்
சிவன் உமையுடன் இணைய வேண்டும் !”

எதிர்ப்பட்டாள் உலகத்தின் அன்னை உமை;
துதித்தனர் ஒன்று கூடி அவள் அருளை நாடி,

“பிரான் போதிக்கின்றார் முனிகுமாரருக்கு
பிறர் அறியாவண்ணம் தத்துவ ஞானத்தை!

பிரானை அண்டித் துயர்களைக் களையப்
பிரார்த்திப்பது நல்ல பயன் தரும்!” என்றாள்.

யோகத்தில் ஈடுபட்டுள்ள பெருமானை
போகத்தில் ஈடுபடச் செய்ய வேண்டும்!

யாரால் புரிய முடியும் இவ்வரிய செயல்?
மாரன் மலர்பாணங்களே வெல்லும் வழி

மலர்க்கணைகளைத் தொடுத்து மன்மதன்
சலனப் படுத்தவேண்டும் பிரான் மனத்தை.

அஞ்சினான் மன்மதன் இச் செயல் புரிய.
கெஞ்சினர் தேவர்கள் வேறு புகல் இன்றி.

யோக நிஷ்டையைக் கலைத்தான் மன்மதன்
கோப அக்னியில் எரிந்து சாம்பலானான்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#19a. The penance of TArukan

TArukan performed hard penance for a long time. He wanted to rule over all the worlds for one hundred and eight yuga. He wanted to enslave all the DEvA. Siva granted all his wishes. TArukan could not be destroyed by any power other than that of Siva himself.

TArukan conquered all the universes. The DEvA became his slaves. His atrocities increased day by day. Finally Indra, Brahma and Vishnu went to Kailash. They knew that only Siva’s son could destroy TArukan.

Uma Devi met them. They consulted her about their course of action. Uma told them,” Lord Siva is teaching the tatva to Sanakan and his three brothers. You express your problems to the Lord. He will surely help you”

Siva had to wed Uma to get a son who could kill TArukan. But Siva was in yoga nishta. Who could disturb his nishta, change his mind, make him take interest in Uma and procreate a son?

They all decided that only Manmathan was capable of playing such tricks on the mind, by using his flower arrows. They approached Manmathan with this request. He was scared of Siva’s wrath and refused.

But when requested by all the Deva, he finally gave in. He went to Kailash and shot the flower arrow on Siva. Siva opened his fiery third eye and Manmathan turned into a heap of ash!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#29a. நவராத்திரி விரதம் (1)

நாரதர் வந்தார் சாம கானம் இசைத்தவாறு;
நாரதரை வரவேற்று உபசரித்தான் ராமன்.

“சுவர்க்கம் சென்றபோது அறிந்தேன் ராமா
சுவையான சில பழைய நிகழ்வுகளை நான்.

அஞ்ஞானத்தால் கவர்ந்து சென்றான் ராவணன்;
அவன் மரணத்துக்குக் காரணமாகும் சீதையை.

அவதரித்துள்ளாய் நீ ராவணனை அழிக்க;
அவதார காரியம் நிறைவேறப் போகின்றது!

பூர்வ ஜன்ம சம்பந்தம் உடையது – அவன்
ஆர்வத்துடன் சீதை மேல் கொண்ட மோஹம்.

அரிய தவ முனிவரின் புதல்வி வேதவதி;
வரித்தாள் நாரணனையே மணாளனாக!

கடும் தவம் செய்து அமர்ந்திருந்தவள் மீது
சுடும் மோஹம் கொண்டுவிட்டான் ராவணன்!

வற்புறுத்தினான் தனக்கு வசப்பபடும்படி;
கற்புடன் மறுத்தாள் நாரணனை வரித்தவள்!

கண்ணிருந்தும் குருடன் ஆனான் காம வெறியில்;
பெண்ணை பலவந்தம் செய்யவும் முற்பட்டான்.

"உன்னைக் கொல்வதற்கு மீண்டும் வந்து
மண்ணில் பிறப்பேன் மண்ணின் மகளாக!

தீண்டிய உடலைத் தரியேன் இனிமேல்!”
மண்டிய தீயினில் வீழுந்து மறைந்தாள்.

கழுத்தில் பாம்பைப் போட்டுக் கொள்வது போல்
அழிவுக்கே புரிந்துள்ளான் அக்கிரமச் செயல்!

அம்சம் கொண்டுள்ளாய் மஹா விஷ்ணுவின்;
த்வம்சம் செய்வாய் ராமா ராக்ஷஸ குலத்தை!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


3#29a. NAradA’s visit

NAradA visited RAmA singing sAma gAnam. RAmA welcomed the Deva rushi. NAradA imparted some important information to RAmA.

“During my recent visit to the Swarggam, I learned a few interesting facts RAmA. RAvaN is a fool to have abducted SeetA who is born to bring about his complete destruction.

You have taken avatar only to kill RAvaN and that is going to happen very soon. The lust RAvaN has for SeetA is from her previous birth.

Vedavati was the beautiful daughter of a rushi. She had decided to marry none other than Lord NArAyan. She sat in intense penance to make her wishes come true.

RAvaN saw her and longed to possess her. He tried to convince her but she refused. Then he tried to molest her. Vedavati told him thus:

“I will be born again as the daughter of the Earth just to destroy you. I do not wish to live in this body defiled by you any more.” She jumped into a roaring fire and died.

Now RAvaN has done a thing as foolish as draping a poisonous snake around one’s own neck. You are the amsam of Lord NArAyaN. You will destroy the race of RAvaN very soon.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#21a. சந்தித்தனர் இருவரும்!

தூய நீரில் நீராடினான் விடியற்காலையில்;
ஆய தானங்கள் செய்தான் வழக்கம் போல்!

பட்டம் கட்டினான் குமாரர்களுக்கு - குருவுக்கு
இட்டதுடன் அளித்தான் அரிய நவமணிகளை!

அந்தணருக்கு வழங்கினான் பொன்னும் மணியும்;
அன்பு மனைவிக்கு நியமித்தான் தகுந்த பாதுகாப்பு.

விரைந்தனர் தூதுவர்கள் நான்கு திசைகளிலும்;
திரண்டனர் வலிமை மிக்க அசுரப் படைவீரர்கள்.

லக்ஷம் பரிகள் ; பதினாயிரம் ரதங்கள் மேலும்
லக்ஷம் கரிகள்; மூன்று கோடி வில்லாளி வீரர்;

மூன்று கோடி சூலதாரிகள் அணி திரண்டனர்;
மூன்று கோடி சூலதாரிகள் அணி வகுத்தனர்.

புறப்பட்டான் போர் முனைக்கு ரத்தின விமானத்தில்
புறப்பட்ட சதுரங்க சேனை விரைந்தது போர்க்களம்.

மேலைக் கடலுக்குக் கிழக்கே, ஸ்ரீசைலத்துக்கு வடக்கே;
மலைய பர்வதத்தின் மேற்கே, கந்தமாதனத்தின் தெற்கே

பத்திரா நதிக் கரையைப் பத்திரமாக அடைந்தனர் - அங்கு
பரமேஸ்வரனைக் கண்டனர் ஓர் ஆல மரத்தின் அடியில்!

கோடி சூரியப் பிரகாசத்துடன், புன்னகை முகத்துடன்,
யோகாசனராகப் பளிங்கு போல் பரிசுத்தமான சிவனை.

எளிதில் மகிழ்ச்சி அடைகின்ற கருணைக் கடலை
அருகில் கண்டதும் மெய் சிலிர்த்தான் சங்கசூடன்!

வணங்கித் தெண்டனிட்டான் மஹாதேவனுக்கு !
வணங்கினான் பத்திரகாளியை, முருகப் பெருமனை!

அணைத்து மகிழ்ந்தான் சிவ கணங்களை எல்லாம்,
அணைத்து மகிழ்ந்தான் அவன் நந்தி தேவனையும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#21a. Sankhachooda meets MahAdEvA

Sankhachooda took bath early next morning. He gave away gifts as was his customs. He crowned his sons the princes to rule after him. He presented rare navaratnas to his guru. He presented gold and gems to the brahmins. He made arrangement for the safety of his dear wife Tulasee.

He sent messengers in all the four directions. All the valiant asura warriors gathered under him. There were one lakh horse riders, one lakh elephant riders, ten thousands charioteers, three crores (30 million) each of wielders of bow and arrows, wielders of the trident and armored warriors.

Sankhachooda got into his gem-studded vimaanam and left to the battle field. The army also followed him and reached the war front, The place was on the bank of river Bhadra, to the east of the Western sea, to the north if Sree Sailam, to the west of Malaya parvatam and to the south of GandhamAdana mountain.

They saw MahAdEvA sitting under a tree. He was as brilliant as ten million Suns put together, with a pleasant smiling countenance and as pure as a crystal - seated in a yogic posture.

Sankhachooda melted at the sight of the lord who was easy to be pleased and generous with his gifts of boons. He prostrated to MahAdEvA, Bhadra KAli and Skanda. He embraced the siva gaNAs and Nandhi Deva.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#19b. ரதியும், மதனும்

யோக நிஷ்டையைக் கலைக்கச் சென்று
கோப அக்னியில் எரிந்து போனான் மதன்.

செய்தி அறிந்த ரதிதேவி ஓடோடிவந்தாள்
செய்வது அறியாமல் சிவபெருமானிடம்.

“தேவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி
தேவரீர் மீது பாணம் எய்தான் மன்மதன்.

பாவம் எதுவும் செய்து அறியாத எந்தன்
பதியை சம்ஹரித்தது நியாயமா ஈசா?

எனக்கு இந்த ஈன கதியினை அளித்திட
எங்ஙனம் மனம் வந்தது பெருமானே!”

மனம் கனிந்தான் பெருமான் உடனேயே.
மகள் அனைய ரதியிடம் சொன்னான்,

“மன்மதன் உயிர்த்து எழுவான் இப்போதே!
தென்படுவான் உன் கண்களுக்கு மட்டுமே!

உருவம் இல்லாதவன் போலவே அவன்
அருவமாக இருப்பான் பிறர் கண்களுக்கு!”

எழுந்தான் மன்மதன் மீண்டும் உயிருடன்;
விழுந்தான் ஈசனின் கால்களில் உடனே!

“அச்சம் கொண்ட தேவர்களுக்கு உதவிட
அச்சத்துடன் செய்தேன் நான் அபசாரம்.

இழந்த சக்திகளைப் பெற்று மீண்டும் நான்
பழையபடி ஆவதற்கு அனுக்ரஹிப்பீர் !”

“ஐங்கரனை சிந்தையில் நிறுத்துவாய்!
பங்கம் இன்றி அனுதினம் ஆராதிப்பாய்!

வந்தடையும் சகல சக்திகளும் முன்போல்.
முந்தைய ஆளுமை மீளும் உயிர்கள் மேல்”

ஏகாக்ஷரத்தை உபதேசித்தான் பெருமான்;
ஏக மனத்துடன் தியானித்தான் மன்மதன்;

ஆராதித்தான் கணபதியை மாயூரத்தில்
ஆயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்தன.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#19b. Rati and Manmathan

Manmathan went to KailAsh to deviate Lord Siva’s mind from Yoga to Bhoga and got burned down to ashes in that process. Rati Devi came running to Lord Siva shedding streams of tears.

“My husband never wanted to disturb your yoga nishta, but all the DEvA forced him to do that. Now you have burned him down to ashes. How can you put me in this state of despair my Lord? My husband has never harmed anyone till now.”

Siva’s heart melted with sympathy and he told Rathi Devi, “Do not worry my child! Manmathan will come back to life right now. But he will be visible only to your eyes! He will be invisible to all the other eyes”

Manmathan came back to life immediately and fell on Siva’s feet. “I was afraid to do abachAram, but I had to help the DEvA. Please pardon my crime oh Lord!! Please tell me how I can get back all my original powers ”

Siva told him, “Establish your mind on VinAyaka and chant his mantras. Only he can give you back your powers and your ability to control all the living creatures”

Siva taught him EkAksharam. Manmathan went to Mayooram and concentrated of VinAyaka chanting the EkAksharam taught by Lord Siva for one thousand years
.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#29b. நவராத்திரி விரதம் (2)

“கற்புக்கரசி வாடுகிறாள் உன் நினைவாகவே.
தற்போது மெலிந்து, நலிந்து போய் விட்டாள்.

அனுப்பினான் இந்திரன் காமதேனுவின் பாலை;
அருந்தினால் மறைந்துவிடும் பசி, தாகம் என்று.

உபாயம் கூறுவேன் இராவணனை வெல்வதற்கு;
உபவாசம் இருந்து நவராத்திரி பூஜை செய்வாய்.

நிஜமான வெற்றி கிடைக்கும் எளிதாக ராமா!
பூஜை, ஜபம், ஹோமம் முறையாகச் செய்தால்”

எடுத்துக் கூறினார் நாரதர் ராமனுக்கு விரிவாக,
அடுத்துச் செய்யவேண்டிய விரத முறையினை.

திரவியங்கள் சேகரித்தான் ராமன் – தன்
விரதத்துக்கு குருவாக்கினான் நாரதரை.

விதிப்படி பூஜித்தான் மால்யவான் மலையில் - தேவி
அதிசயக் காட்சி தந்தாள் அஷ்டமி நள்ளிரவில்,

மலையுச்சியின் மேல், சிங்க வாகனத்தில்!
மகிழ்வுடன் கூறினாள் ராமனிடம் இதனை.

“மச்சமாகிக் காத்தாய் நால்வேதங்களை!
மந்தரகிரியைத் தாங்கினாய் கூர்மமாகி!

வராஹமாகி நிலை நிறுத்தினாய் பூமியை!
நரசிம்மமாகி அழித்தாய் இரண்யகசிபுவை!

நன்மை புரிந்தாய் தேவருக்கு வாமனனாகி!
வென்றாய் க்ஷத்திரியரைப் பரசுராமானகி!

தசரதன் மகனாகத் தோன்றியுள்ளாய் நீ
தசமுகனை அழிப்பதற்கு என்றறிவாய்.

அம்சம் ஆவாய் நீ மகா விஷ்ணுவின்;
அம்சம் லக்ஷ்மணன் ஆதிசேஷனின்!

அம்சம் ஆவர் வானரர் தேவர்களின்!
த்வம்சம் செய்வீர் நீங்கள் அரக்கர்களை!”

பூர்த்தி செய்தார் நவராத்திரி விரதத்தை;
ஆசி தந்தார் வெற்றியடைவதற்கு நாரதர்.

விஜய தசமியன்று பயணம் தொடங்கியது.
விஜயம் கிடைத்தது அசுரருடன் போரில்.

சிறைபட்ட மனைவி சீதையை மீட்ட ராமன்,
குறைவற்ற ஆட்சி செய்தான் அயோத்தியில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


தேவி பாகவதம் மூன்றாவது ஸ்கந்தம் முற்றுப் பெற்றது

3#29b. Nava rAthri puja

NAradA continued to tell RAmA about the pathetic condition of SeetA in Asokha vanam. “Oh RAmA! SeetA is pining for you. She has become thin, weak and famished. Indra had sent her the milk of the divine cow KAmadhenu to keep off her hunger and thirst.

I will tell you a sure method of defeating RAvaN easily. Do Nava rAtri puja and observe upavAsam. Do the japam and homam as prescribed. It is sure to bring you an easy victory over RAvaN."

NAradA further explained the rules of the puja. RAmAS collected the various articles required for the puja and homam. He made NAradA himself his guru. The puja went on as per the prescribed rules on the Maalyavaan mountain.

Devi gave her stunning darshan on the midnight of Ashtami on her simha vaahanam. She was very pleased and told Rama thus:

“You saved the four Vedas in the form of a fish.
You lifted the Mandargiri in the form of a tortoise.

You re-established the earth in the form of Varaha.
You killed the arrogant HiraNyan in the form of Narasimham.

You helped the DevAs in the form of VAmana.
You put an end to the wicked Kshatriya in the form of Parasu RAmA.

You are born as the son of Dasaratha only to kill the Dasa mukha RAvaN.
You are the amsam of MahA Vishnu, Lakshman of Aadhiseshan and the vAnarAs of Deva. Together you will put an end to the race of RAvan”

The puja was duly completed and NAradA blessed RAmA to emerge victorious. They left for the war on the Vijya dasami day. RAmA won in the war, killed the wicked RAvaN and released SeetA from her prison in Asokhavanam. He returned to Ayodhya and ruled RAma RAjyam very well and for very long.

The third Skanda of Devi Bhaagavatam gets completed here.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#21b. சிவன் அறிவுரை

மஹாதேவன் கூறினான் சங்கசூடனிடம்,
"மஹாப் புகழ் வாய்ந்த வம்சத்தவன் நீ!

பிரமன், மரீசி, கஸ்யபன், விப்ரஜித்து
தம்பன் ஆவோர் உன் மூதாதையர்கள்.

திகழ்ந்தனர் தவம், சித்திகள் பெற்று!
திகழ்ந்தனர் செல்வச் செழிப்புப் பெற்று!

தேவர்களின் ராஜ்ஜியத்தில் எதற்கு ஈடுபாடு?
தேவர்களின் சொத்தில் ஏன் இத்தனை பிடிப்பு?

பிறர் சொத்தை விரும்புவது ஹிம்சை ஆகும்;
பிறர் சொத்தை விழைவது வறுமையைத் தரும்.

நிலையற்ற செல்வம் பெறுவதற்கு முயன்று
நிலையான புகழை இழக்கலாமா நீயே கூறு!

அதிகாரமும், செல்வமும் நிலைத்திருப்பதில்லை;
'விதி'யையும் கூட விதி விடுவதில்லை அறிவாய்!

தவிப்பான் பிரம்மன் தன் தொழிலைச் செய்யாது!
தேவி வந்து உதவுவாள் பிரமன் மயக்கத்தை நீக்கி!

சந்திரன் வளர்வான், தேய்வான், மறைவான்!
கதிரவன் வெப்பமாவான் வானில் ஏறுகையில்!

தர்மம் கூடத் தேய்ந்து வருகிறது யுகம் தோறும்;
தர்மம் பரி பூரணமாக இருந்தது கிருத யுகத்தில்.

தர்மம் முக்கால் பங்கானது திரேதா யுகத்தில்;
தர்மம் அரைப் பங்கானது துவாபர யுகத்தில்;

கால் பங்காகிவிட்டது தர்மம் கலி யுகத்தில்;
கால பேதங்கள் பாதிப்பது இல்லை என்னை!

நிலையற்றவை இங்கு காணப்படும் பொருட்கள்!
நிலையாக இருப்பவன் நான் ஒருவன் மட்டுமே.

பிரம்மனால் சிருஷ்டியும், விஷ்ணுவால் ஸ்திதியும்
ருத்திரனால் லயமும் அடையமாட்டான் என் பக்தன்!

பக்தனை நெருங்க அஞ்சுவான் காலனும்!
அத்தகையவன் ஆக வேண்டும் நீயும் கூட.

சங்கசூடன் வணங்கினான் சந்திர சூடனை!
சங்கசூடன் பதில் தந்தான் சந்திர சூடனுக்கு

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#21b.MahAdEvA's advice

MahAdEvA told Sankhachooda, "You belong to an illustrious lineage Sankhachooda! Brahma, Mareechi, Kahsyapa, Viprajit, and Tamban are your ancestors.They had possessed many siddhis due to their power of penance performed by them. They all were very prosperous too!

I fail to see why you are interested in the kingdom of DevAs? Why do you show this interest in the wealth of the DevAs? It is himsa to covet the possession of another person. The greed for the property of another person is the cause of poverty.

Wealth is transient and fortune is fickle minded. But fame and a good name are eternal. Do you want to lose your fame which is eternal for the sake of the wealth which is temporary?

Neither Power nor wealth are not permanent even for Brahma. At times he would be in trouble unable to do his job of creation. At those times it is Devi who solves his problems and helps him to go on with creation.

Even the Moon waxes and wanes and disappears from view. The Sun becomes hotter as he ascends the sky. Dharma is undergoing changes from one yugA to the next yugA.

It was in its full glory in Krita yugA. It became three fourth its glory in TretA yugA and half its glory in DwApra yugA. In Kaliyuga it has become just one fourth of what it was at first.

The only thing immutable by time is me. Time does not affect me in any way. My true bhakta will not be subjected to creation by Brahma, protection by Vishnu or destruction by Rudra. You to must become one such bhakta SankhachoodA!"

Sankhachooda prostrated to Lord Chandrachooda and replied with great humility.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#19c. பிரத்யும்னன்

ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் ஐயன்
ஆயிரம் ஆதவர்கள் போலத் தோன்றினார்.

“என்ன விரும்புகிறாய் மன்மதா நீ கூறு!
என்னை தியானித்த காரணத்தைக் கூறு!”எனத்

“தாருகனை அழிக்கத் தோன்ற வேண்டும்
ஏறுமயில் வாஹனன் நம் ஈசனிடமிருந்து!

யோகத்தில் அமர்ந்துவிட்ட ஈசனை நான்
போகத்தில் செலுத்துவது எளிதானதா?

பஞ்ச பாணங்களை எய்தேன் ஈசன் மீது!
பஞ்சாக எரிந்தேன் பார்வை பட்டபோது!

உயிர்ப்பிச்சை தந்துவிட்டார் உடனேயே
உருவத்தை இன்னும் பெறவில்லை நான்!

இழந்த சக்திகளை மீண்டும் தரவேண்டும்
இழந்த உருவை மீண்டும் பெறவேண்டும்”என

“நிறைவேறும் உன் கோரிக்கை விரைவில்;
நிறைவெய்துவாய் முன்போலவே திறனில்.

கண்ணன் ஆவான் மண்ணில் நாரணன்!
கண்ணன் மகன் ஆவாய் நீயும் மன்மதா!

முன் போலவே அடைவாய் - இழந்துவிட்ட
உன் சக்தியையும், அழகிய உருவையும்!”என

மன்மதன் எடுத்தான் ஆலயம் அங்கே;
மகோற்கட வினாயகரை அமைத்தான்;

கண்ணன் ஆனான் மண்ணில் நாரணன்.
காலம் கனிந்தது குறைகள் நிறைவெய்த!

பிரிய ருக்மிணியிடம் தோன்றினான் - மகன்
பிரத்யும்னன் என்கின்ற அழகிய மன்மதன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#19c. Pradyumnan

Manmathan meditated on VinAyaka for one thousand years. VinAyaka appeared as one thousand suns shining together. He blessed Manmathan and asked him, “What do you wish for? Please tell me!”

“TArukan has to be destroyed. Only Siva’s son can do it. Siva is in Yoga. I was ordered to change his interest from Yoga to Bhoga. I aimed my flower arrows at him. But his fiery glance burned me down. I was resurrected immediately but I am yet to regain my original form and my powers.”

“You will regain your powers and your original form very soon. Vishnu will take avatar as Krishna very soon. You will be born as his son Pradyumnan. Then you will regain your form and all your powers as before.”

Manmathan became happy with this boon. He built a temple there for VinAyaka. He established a VinAyaka there and did ArAdhana.

When VishNu appeared as Krishna on earth, Manmathan was born as his son Pradyumnan to Rukmini Devi.
 
தேவி பாகவதம் - நான்காவது ஸ்கந்தம்


4#1a. ஜனமேஜயனின் ஐயங்கள்

“எல்லாம் அறிந்த வியாச முனிவரே! எனக்குச்
சொல்ல வேண்டும் சில அற்புத சரித்திரங்களை.

சிறந்த வசுதேவனையும், தேவகியையும்
சிறைப்படுத்தினான் கம்சன் எனும் கயவன்.

கொன்று தீர்த்தான் பிறந்த சிசுக்கள் அறுவரை!
சென்றாள் ஏழாவது குழந்தை வானில் பறந்து!

அஷ்ட புஜங்களுடன் ஒரு தெய்வீகக் கன்னியாகி
இஷ்ட தெய்வமாகிக் குடியேறினாள் கோவிலில்.

எட்டாவதாகப் பிறந்தவர் ஸ்ரீமன் மகாவிஷ்ணு;
விட்டுப் பிரிந்தார் தாயைப் பிறந்தவுடனேயே!

யாதவ குலத்தில் வளர்ந்தார் கண்ணனாக;
மாதவனாகப் புரிந்தான் லீலைகள் அநேகம்.

கர்ப்ப வாசம் செய்யும் அவலநிலை எப்படி
அற்பனைப் போல ஏற்பட்டது கண்ணனுக்கு?

தர்ம தேவதையின் இரு புத்திரர்கள் இவர்கள்;
தர்மத்தைக் காக்கும் விஷ்ணுவின் அம்சங்கள்.

நர, நாராயணர் என்னும் அற்புதத் தபஸ்விகள்;
பிறந்தனர் பார்த்தன், கிருஷ்ணனாக அடுத்து.

தன் குலஆசாரம் தவறாமல் வாழ்பவர்
தன் குலத்திலும் உயர்ந்ததில் ஜனிப்பர்.

பிராமணர்கள் ஆகிய நர, நாராயணர்கள்
பிறந்தது ஏன் க்ஷத்ரிய குலத்தில் சென்று?

யாதவ குலம் ஏன் நசித்தது சாபத்தால்?
மாதவன் ஏன் மாண்டான் சாபத்தால்?

கண்ணன் மீண்டும் வைகுண்டம் சென்றதும்
கண்ணன் மனைவியர் துயருற்றதும் ஏன்?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#1a. Janamejayan’s doubts

King Janamejayan asked Sage VyAsA, ” Please tell me these wonderful stories! Wicked Kamsan imprisoned Vasudevan and his wife Devaki. He killed their six sons as soon as they were born.

The seventh child was a girl. She flew up into the sky when Kamsan tried to kill her. She became a goddess with eight arms and now resides in the temples.

MahA Vishnu was born as their eighth child. He got separated from his mother as soon as he was born. He grew up in Gokulam and performed many miracles. Why did Vishnu have to dwell in the womb of a women like a normal human being?

Nara and NArAyan were the amasam of Vishnu. They became Arjun and Krishna in their next birth. Those who live faultless lives are usually born in a better race in their next birth. How and why did these brahmins Nara and NArAyan have to be born in Kshatria race?

Why did the YAdava race perish due to a curse? Why did Krishna have to return to Vaikuntam? Why were the wives of Krishna troubled by the band of thieves?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#21c. சங்கசூடனின் பதில்

"உண்மை தான் நீங்கள் கூறியவை எல்லாம்;
உண்மை தான் இனி நான் கூறப் போவதும்!

வஞ்சகமாக வந்தார் வாமன ரூபத்தில் விஷ்ணு
வஞ்சித்து அபகரித்தார் மகாபலியின் சம்பத்தை

அழுத்திவிட்டார் மகாபலியை அதல லோகத்துக்கு
அழுந்திவிட்டன பலியின் செல்வங்களும் அங்கே

இரண்யன், இரண்யாக்ஷன் மாண்து போயினர்,
ஹரி எடுத்த மாய அவதாரங்களின் செயலால்!

பாற்கடலைக் கடைந்தனர் அமரர்கள், அசுரர்கள்.
பாற்கடல் தந்த பரிசுகள் அனைத்தும் அமரருக்கே

மதியை மயக்கும் வாருணி மட்டும் அசுரருக்கு!
மதியை மயக்கினார் மோகினியாக விஷ்ணுவும்!

அபகரித்தார் அமிர்த கலசத்தைக் கபடமாக;
அனுபவித்தனர் அமரர் அமுதச் சுவையை.

வஞ்சித்துக் கெடுப்பவர் அமரர்களே அசுரர்களை!
வஞ்சனையின் விளைவு எம்மிடையே துவேஷம்.

போர் நடக்கின்றது அடிக்கடி எங்களிடையே;
போரில் வெற்றி தோல்வி வரும் மாறி மாறி.

செல்வம் வருவது ஹிம்சையினால் அல்ல!
செல்வம் வருவது வஞ்சனையினால் அல்ல!

செல்வம் தருவது தேவியின் கருணைக் கடாக்ஷம்!
செவ்வம் காப்பது தேவியின் கருணைக் கடாக்ஷம்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 

Latest ads

Back
Top