• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

devi bhaagavatam - skanda 9

9#21c. Sankhachooda's reply (1)


Sankhachooda replied to MahAdEvA with great humility. "Whatever was told by you is absolute truth oh Lord! What I am going to say is also absolutely true.

Vishnu came in VAmana Roopam to king MahA Bali. He stripped MahA Bali of all his possessions and pushed him down to Atala loka. Bali's fortune was lost for ever from the earth.

HiraNyan and HiraNYAkshan died in the hands of Hari when he took the avatar as VarAha and Narahari.

The Ocean of Milk was churned jointly by the DevAs and the DAnaVAs but everything emerging from The Ocean of Milk was taken away by the DevAs except the Goddess of intoxication VAruni - who was given to the DAnavAs.

Vishnu Took the avatar as Mohini and took possession of the pot of nectar. He cleverly distributed it only to the DevAs and cheated the AsurAs of their share of nectar.

It is the DevAs who cheat the DhAnavAS. It is the DevAs who loot and cheat the DAnaVAs of their lawful shares as promised to them.

That has caused the enmity between the DevAs and the DAnavAs. Victory and defeat result according to our good time or bad time. Wealth is not obtained by himsa.

Wealth is not obtained by treachery. Wealth is obtained when Devi bleses us with her mercy. It is she who gives us wealth and victory or takes it away from us.
 
BHAARGAVA PURAANAM - PART 1 [h=1]#19d. சம்பரன்[/h] தனக்கே வேண்டும் ரதி என்ற ஆசையால் தவித்தான் பலநாட்கள் அசுரன் சம்பரன். தனித்து இருந்த அபலைப் பெண்ணைக் கனிபோலக் கவர்ந்து சென்றான் சம்பரன். ஆகாய மார்க்கமாக அசுரன் செல்கையில் ஆகத்தியம் செய்து நழுவினாள் ரதி தேவி. விடுவித்துக் கொண்டு விழுந்தாள் நீரில்! விழுங்கிவிட்டது ஒரு கடல்மீன் அவளை! கடல் முழுவதும் குடைந்து தேடிய போதும் கிடைக்கவில்லை ரதிதேவி சம்பரனுக்கு. ரதிதேவியை விழுங்கிய மீன் ஒருநாள் அதிசயமாக மீனவன் வலையில் சிக்கியது. ஜொலித்த அந்த மீனைப் பிடித்த மீனவன் அளித்தான் காணிக்கையாக சம்பரனுக்கு. மீனின் வயிற்றை அறுத்தபோது அதில் மானின் கண்ணுடைய பெண் இருந்தாள். இறைவன் அளித்த தன் அன்பு மகளாகக் குறைவின்றி வளர்த்தான் ரதியை அசுரன். மனைவி ஆக்கிக் கொள்ள விரும்பியவள் மகளாக வளருவதை அறியவே இல்லை. நாரத முனிவர் அறியாத ரஹசியமா? நாரத முனிவர் புரியாத கலகங்களா? பிரத்யும்னனிடம் சென்று சொன்னார் பிரிய மனைவி சம்பரனின் மகள் என்று! ரதி தேவியை மீட்டு வரப் போருக்கு அதி விரைவாகப் போனான் பிரத்யும்னன். வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி. #19d. Sambaran Sambaran was an asuran. He fell madly in love with Rathi Devi and wished to possess her. Now that Rathi was all alone by herself he dared to kidnap her and take her to his abode. Rathi Devi struggled to break free from his hold. She slipped and fell down into the sea below. A big fish swallowed her whole immediately. Sambaran searched for Rathi but could not find her. He went back to his place very disappointed. The fish got caught in a net one day. The fisherman was stunned by the glow of this unusual fish. He thought it was best to present it to Sambaran. When the fish was cut open, a lively doe eyed girl was found inside the fish. Sambaran accepted her as the gift of God in the form a lovely daughter. He never realized that it was the same Rathi Devi he wished to possess as a wife. The girl was brought up with love and care by Sambaran. NArada knew that the lovely girl was none other than Rathi Devi. He went to Pradyumnan who was the reincarnation of Manmathan and told him about Rathi Devi. Pradyumnan decided to free her from Samabaran. He led and army and left for a battle with Sambaran immediately.
 
#19d. சம்பரன்

தனக்கே வேண்டும் ரதி என்ற ஆசையால்
தவித்தான் பலநாட்கள் அசுரன் சம்பரன்.

தனித்து இருந்த அபலைப் பெண்ணைக்
கனிபோலக் கவர்ந்து சென்றான் சம்பரன்.

ஆகாய மார்க்கமாக அசுரன் செல்கையில்
ஆகத்தியம் செய்து நழுவினாள் ரதி தேவி.

விடுவித்துக் கொண்டு விழுந்தாள் நீரில்!
விழுங்கிவிட்டது ஒரு கடல்மீன் அவளை!

கடல் முழுவதும் குடைந்து தேடிய போதும்
கிடைக்கவில்லை ரதிதேவி சம்பரனுக்கு.

ரதிதேவியை விழுங்கிய மீன் ஒருநாள்
அதிசயமாக மீனவன் வலையில் சிக்கியது.

ஜொலித்த அந்த மீனைப் பிடித்த மீனவன்
அளித்தான் காணிக்கையாக சம்பரனுக்கு.

மீனின் வயிற்றை அறுத்தபோது அதில்
மானின் கண்ணுடைய பெண் இருந்தாள்.

இறைவன் அளித்த தன் அன்பு மகளாகக்
குறைவின்றி வளர்த்தான் ரதியை அசுரன்.

மனைவி ஆக்கிக் கொள்ள விரும்பியவள்
மகளாக வளருவதை அறியவே இல்லை.

நாரத முனிவர் அறியாத ரஹசியமா?
நாரத முனிவர் புரியாத கலகங்களா?

பிரத்யும்னனிடம் சென்று சொன்னார்
பிரிய மனைவி சம்பரனின் மகள் என்று!

ரதி தேவியை மீட்டு வரப் போருக்கு
அதி விரைவாகப் போனான் பிரத்யும்னன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#19d. Sambaran

Sambaran was an asuran. He fell madly in love with Rathi Devi and wished to possess her. Now that Rathi was all alone by herself he dared to kidnap her and take her to his abode.

Rathi Devi struggled to break free from his hold. She slipped and fell down into the sea below. A big fish swallowed her whole immediately. Sambaran searched for Rathi but could not find her. He went back to his place very disappointed.

The fish got caught in a net one day. The fisherman was stunned by the glow of this unusual fish. He thought it was best to present it to Sambaran. When the fish was cut open, a lively doe eyed girl was found inside the fish.

Sambaran accepted her as the gift of God in the form a lovely daughter. He never realized that it was the same Rathi Devi he wished to possess as a wife. The girl was brought up with love and care by Sambaran.

NArada knew that the lovely girl was none other than Rathi Devi. He went to Pradyumnan who was the reincarnation of Manmathan and told him about Rathi Devi.

Pradyumnan decided to free her from Samabaran. He led and army and left for a battle with Sambaran immediately.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#1b. ஜனமேஜயனின் ஐயங்கள் (2)

பூபாரத்தைத் தீர்க்க வந்தவர் கிருஷ்ணர்;
துவாரகை சென்றார் பகைவருக்கு அஞ்சி!

உத்தமர்களைக் கொன்றார் பாரதப் போரில்;
பத்தினிகளைக் கவர்ந்த கள்வர்களை அல்ல.

கிருஷ்ணனுக்கு மிகவும் நெருங்கியவர்கள்;
கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.

ராஜாசூய யாகம் செய்தவர்கள் பாண்டவர்கள்;
ராஜ்ஜியதைப் பாண்டவர்கள் இழந்தது ஏன்?

அல்லல் பட்டது ஏன் வனவாசம் சென்று?
அஞ்ஞாத வாசத்தில் ஒளிந்திருந்தது ஏன்?

அவதரித்தாள் திரௌபதி அக்கினியில்!
பத்தினியானாள் பஞ்ச பாண்டவருக்கு!

பக்தி கொண்டிருந்தாள் கிருஷ்ணனிடம்;
இத்தனை இருந்தும் எத்தனை சோதனை?

இழுத்து வந்தனர் கூந்தலைப் பற்றி சபைக்கு!
இழுத்து ஆடையைச் செய்தனர் மானபங்கம்!

அரசியின் சேடியாக வாழ்ந்தாள் ஓராண்டு!
அரற்றினாள் கீசகன் தந்த இம்சையினால்!

அபகரித்துச் சென்றான் அவளை ஜயத்ரதன்!
அபலையை மீட்டனர் கணவர்கள் பாண்டவர்!

இத்தனை துயரம் அடைவதற்கு அவள்
எத்தனை பாவம் செய்திருந்தாள் முன்பு?

கௌரவ வம்சம் கண்ணனால் அழிந்தது ஏன்?
கௌரவமான பரீட்சித்தின் துர்மரணம் ஏன்?

இந்த ஐயங்கள் பந்தாடுகின்றன என் மனதை.
தந்தருள்வீர் மன அமைதியினை வியாசரே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#1b. King Janamejayan’s doubts (2)

King Janamejayan asked Sage Vyaasaa more and more doubts.

He continued, ” Krishna took avatar to rid the earth of its excess population. But he ran away to DwAraka to escape from his enemies. He killed many good persons in the MahA BhArata yuddham and yet he did not kill the thieves who insulted his own wives.

PaNdavAs were very close to Krishna. They had intense bhakti towards Krishna. They performed Rajasooya yAgam. Despite all these, they lost their kingdom. They had to go to vana vAsam. They had to live hiding their real identities for one full year.

Droupati was born out of the yAgA fire. She married the five valorous PANdavAs. She had paripoorna bhakti on Krishna. But what kinds of troubles she had to go through!

She was dragged by her hair to the Durbar. She was disrobed in an assembly of men. She worked as a maid under a queen for one full year.

She had to tolerate the sexual harassment given by Keechakan. She was abducted by Jayadradan. PANdavAs has to free her from him.

To suffer so much, what sins had she committed in the poorva janmAs (previous births)? Why was the race of Kouravas destroyed by Krishna ? Why did the honorable king Pareekshit die in a dishonorable manner?

These doubts and troubling my mind. Kindly clarify my doubts and give me peace of mind Oh sage!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#21d . சங்கசூடனின் பதில் (2)

"வாரி வாரி வழங்கினீர் செல்வத்தை நீரே!
கோரித் தூது அனுப்பினீர் போருக்கு நீரே!

வந்து விட்டேன் போர் புரியத் தயாராக;
இந்த உலகம் நகைக்கும் புரியாவிட்டால்!

கடவுளாகப் போர் புரியவேண்டாம் என்னோடு!
நடக்கட்டும் போர் பந்து என்கின்ற முறையில்!

வெற்றி பெற்றால் வரும் புகழ்ச்சி எனக்கே!
தோல்வி பெற்றால் வரும் இகழ்ச்சி எனக்கே!

வெற்றி, தோல்விகளின் விளைவுகளைப்
பெற்றிடுவேன் நான், உமக்கு ஒன்றுமில்லை!"

"பிரம்ம வம்சம் உன்னுடையது சங்கசூடா!
'பிரம்ம' என்ற சப்தம் உரியது எனக்கும் கூட.

பந்துக்களே நாம் இருவரும் - இதனால்
முந்திப் போர் செய்தேன் திரிபுரர்களிடம்.

தேவி அசுரரைக் கொல்வதும் இதனால் - மா
யாவி விஷ்ணு போரில் வெல்வதும் இதனால்!

கூச்சம் இல்லை உன்னுடன் போர் செய்வதற்கு
கூச்சம் இல்லை வல்லவன் நீ எனச் சொல்வதற்கு."

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
9#21d. Sankhachooda's reply (2)

Sankhachooda continued to speak to Lord MahAdevA," You gave us immense wealth yourself! You sent a messenger calling us to the war front yourself. I have come ready for the war. If we do not fight now, we will be ridiculed by the world.

I have one request to you. Please do not fight with me as God but fight with me as a relative. The fame if we will get if we win or the criticism we will face if we lose will all belong to me. They will not affect you in any manner."

MahAdevA replied, "SankhachoodA! You belong to 'Brahma vamsam'. The term 'Brahma' is applicable to me also. So we are related indeed.

That is why I fought with the Tripura asuras earlier. That is why Devi fights with the asuras. That is why Vishnu fights with the DanaVas.

I am not ashamed to fight with you. I am not shy to admit your greatness!" MahAdevA replied.








 
BHAARGAVA PURAANAM - PART 1

#19e. சதுர்த்தி விரதம்

போர் நடந்தது பல நாட்கள் தொடர்ந்து;
போர் நீடித்தது வெற்றி தோல்வி இன்றி!

போருக்குச் சென்ற தன் மகனை எண்ணித்
தீராத கவலை கொண்டாள் ருக்மிணி தேவி.

“குமாரனுக்குத் துன்பம் விளையக் கூடாது!”
உமா ஸுதனை அவள் வணங்கி வேண்டினாள்.

சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டாள் – அங்கு
அது நிகழ்த்தியது போரில் அற்புதங்களை.

மந்த நிலை மாறிவிட்டது ஆறாவது நாள்
வந்த வேலை முடிந்தது பிரத்யும்னனுக்கு.

கொன்றான் போரில் சம்பரன் அசுரனை.
அன்பு மனைவி ரதியை மீட்டு மணந்தான்.

அழகிய ஜோடிக்குப் பிறந்த குழந்தை தான்
அநிருத்தன் என்னும் ஆண்களுள் அழகன்!

கண்டாள் பாணன் மகள் அவனைக் கனவில்;
கொண்டாள் தீராத மையல் அவன் மீது!

உடலை வாட்டி வருத்தியது விரக தாபம்;
உதவிக்கு வந்தாள் பிரிய சகி சித்ரலேகா.

தூங்கும் அநிருத்தன் தருவிக்கப் பட்டான்;
ஏங்கும் உஷையின் அந்தப்புரத்திற்கு!

கண் விழித்த அநிருத்தன் வியந்தான் அழகிய
கன்னி ஒருத்தியின் அறையில் இருந்ததால்.

ஆறாக் காதலை அவனிடம் உஷை கூற,
ஆட்கொண்டு அருளினான் அநிருத்தன்.

இன்ப சாகரத்தில் திளைத்தனர் இருவரும்,
இரகசியமாக அந்த அந்தப்புரத்திலேயே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#19e. Rukmini’s vratham

The war between Sambaran and Pradyumnan continued for many days. Neither victory nor defeat was in sight for either of them.

Rukmini Devi worried about the welfare of her son. She prayed to VinAyaka to help her son win the war. She observed the Chathurthi vratham.

Changes happened in the war immediately. Samabarn was killed by Pradyumnan on the sixth day of the war. Pradyumnan freed Rathi Devi and married her. They got a lovely son whom they named as Aniruddhan.

Usha the daughter of BANAsuran saw Aniruddhan in her dream and fell in love with him. She suffered the severe pangs of separation and her talented and smart friend Chitraleka took pity on her. She had Aniruddhan brought secretly to Usha’s palace.

Anirudhdhan was surprised to find himself in the room of a princess who was madly in love with him. She spoke to him of her deep love. He returned her love. They started living as a man and wife secretly in Usha’s palace.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

4#2a. கர்மவினைப் பயன்கள்

வியாசர் கூறினார் தான் அறிந்தவற்றை;
விசனப்படும் மன்னன் ஜனமேஜயனுக்கு.

“வலிமை கொண்டது கர்மவினைகளின் பயன்;
பொலிவுறும் பிரம்மாண்டம் முக்குணங்களால்!

கட்டு படுத்தும் பிரம்மாண்டத்தை முக்குணங்கள்;
உட்படுத்தும் உயிரினங்களைக் கர்மவிதி நியதிக்கு.

கர்ம விதியினை அறிய இயலாது நம்மால் !
கர்ம விதியினை ஆராய இயலாது நம்மால்!

ஜீவன்கள் ஆதியந்தம் அற்றவைகள் – அந்த
ஜீவன்களின் உடல் கர்ம வினைப் பட்டவை.

உடல் எடுக்கின்றன பல யோனிகளில் பிறந்து!
உடல் எடுக்கின்றன பல யோக போகங்களுடன்!

இல்லை கர்ம வினைபயன்கள் என்றால் – அப்போது
இல்லை கர்ம வினைகளால் உண்டாகும் உடல்கள்!

நல்வினை தீவினை கலந்த புண்ணிய பாவங்கள்
சொல்லப்படும் மூன்று வகைப் பட்டவை என்று.

சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம் என்று
மிஞ்சிடும் பிறக்கும் உடல்களில் இவை.

தேவர்களும் உட்பட்டவர்கள் கர்ம வினைக்கு
தேவர்களுக்கும் உண்டு இன்ப, துன்பங்கள்

எந்த யோனியில் சென்று பிறந்தாலும் – உண்டு
அந்த யோனியில் உண்டாகும் குண விகாரங்கள்.

வலம் வருகின்றான் சூரியன் உலகினை;
வளர்ந்து தேய்கின்றான் சந்திரன் வானில்.

கர்மமும், மாயையும் நித்தியமானவைகள்;
கர்ம, மாயை வசப்பட்ட உலகம் அநித்தியம்.

கர்ம வினைகள் காரணம் ஆகும் உலகுக்கு;
கர்ம வினைகளின் காரியம் உலக உற்பத்தி!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#2a. The Effect of Karma

Sage VyAsA explained to the troubled king Janamejayan whatever he knew. “The effect of karma (actions) is very strong and binding. The creation is made of the three guNaas. The three guNaas control the jeevAs. We can not know the effects of karma nor try to find it out.

The jeevA has neither a beginning nor an end. The body given to every jeevA depends on its karma.The jeevA is born in one of the many thousands of yonis. The jeevA takes birth with many good and bad fortunes in its life.

If there is no karma and if its effect has been nullified, there will be no more births. The effect of the Karma is a mixture of the puNya and pApa and is classified into three types viz Aagamiyam, Sanchitm and PrArabdam.

Even DEva are subjected to these three guNAs. Even the DEva suffer joys and sorrows.The guNAs decide the yoni of the next birth of the jeevA and the yoni imparts to the jeevA the associated guNAs.

The Sun travels in the sky. The moon waxes and vanes. Karma and MAyA are the permanent factors in creation. The creation itself is not permanent.

In short Karma is the cause (kAraNam) of the creation. The creation is the effect (kAriyam) of Karma.“
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#22a. யுத்தம்

போர் தொடங்கியது இரு படைகளின் இடையே;
போர் செய்தான் மகேந்திரன் விருஷபர்வனோடு.

போர் செய்தான் சூரியன் விப்ரசித்தோடு;
போர் செய்தான் சந்திரன் தம்பனோடு!

போர் செய்தான் யமன் காலேஸ்வரனுடன்;
போர் செய்தான் அக்னி கோகர்ணனுடன்;

போர் செய்தான் குபேரன் காலகேயனோடு;
போர் செய்தான் விஸ்வகர்மா மயனோடு ;

போர் செய்தான் ம்ருத்யுபயங்கரன் சங்காரமயனோடு;
போர் செய்தான் வருணன் விகங்கணனோடு;

போர் செய்தான் வாயு சஞ்சலனோடு;
போர் செய்தான் புதன் திருதபிரஷ்டனோடு;

போர் செய்தான் சனி ரக்தாக்ஷனோடு;
போர் செய்தான் ஜயந்தன் ரத்னசாரனோடு;

போர் செய்தனர் வசுக்கள் வர்ச்சோ கணங்களோடு;
போர் செய்தான் தருமன் துரந்தரனோடு;

போர் செய்தனர் அஸ்வினி தேவர் தீப்திமானோடு;
போர் செய்தான் நலகூபரன் தூம்பரனோடு ;

போர் செய்தான் பானு சோபாகரனோடு;
போர் செய்தான் மன்மதன் பிபாரனோடு;

போர் செய்தான் மங்களன் உசாடினோடு;
போர் செய்தான் விச்வன் சபலாசனோடு;

போர் செய்தனர் ஏகாதச ருத்திரர் மஹா பயங்கரனோடு;
போர் செய்தான் மஹாமாரி உக்ர சண்டனோடு.

செய்தான் போர் நந்திதேவன் ராக்ஷசர்களுடன்;
செய்தனர் பிரளய காலப் போர் இரு சேனைகளும்!

அமர்ந்திடுந்தார் மகேஸ்வரன் காச்யாசுதனோடு;
அமர்ந்திருந்தான் சங்கசூடன் பிற அசுரர்களோடு.

சிதறி ஓடினர் தேவர்கள் போர்க்களத்தில்;
பதறி ஓடினர் தேவர் அசுரர் தாக்குதலால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#22a. The war broke out!

Sankhachooda, the King of the DAnavas, bowed down to MahAdeva and got his chariot with his ministers. MahAdeva gave orders to His army to get ready for the war. So did Sankhachooda also.

A terrible fight broke out between Mahendra and VrishaparvA; between BhAskara and Viprachithi'; between NishAkara and Dhambha; between KAla and KAleswara; between Agni and GokarNa, between Kubera and KAlakeya, between ViswakarmA and MAYA, between Mrityu and Bhanyankar, between Yama and SamhAra, between VaruNa and Vikanka, between Budha and Dhritaprishta, between Sani and RaktAksha, between Jayanta and RatnasAra, between the Vasus and Varchasas, between the two Ashvin KumAras and DeeptimAn, between Nalakoobara and Dhoomra, between Dharma and Dhurandhara, between Mangala and UshAksha, BhAnu and ShovAkara, between Kandarpa and the eleven AdithyAs and GodhAmukha, ChoorNa and Khadgadhvaja,DhoormA and Nandi, Viswa and PalAsha, between the eleven Rudras and the eleven Bhayankaras, between UgrachaNda and the other MahAmArees and Nandishvara and the other DAnavas.

The battlefield looked as if pralaya kAlam had come. BhagavAn MahAdeva sat under the peepal tree with KArtikeya and BhadrakAli. Sankhachooda adorned with ornaments sat on his throne.

The army of Sankara got defeated at the hands of the DAnavas. The Devas with cuts and wounds on their bodies ran away from the battle field terrified.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#19f. பாணாசுரன்

மகனைக் காணாது பிரத்யும்னன் தேட,
மகன் இருக்கும் இடம் தெரியவில்லை!

களவுத் திருமணம் வெளியாகி விட்டது;
உளவுத் தொழில் எவரும் புரியும் முன்பே!

இன்பத்தின் விளைவு பெரும் துன்பமானது;
கன்னி கருவுற்றது அதிர்ச்சியை அளித்தது!

அந்தப்புரத்தில் ஆடவன் ஒளிந்திருந்தது
தந்தை பாணனுக்குச் சினத்தை அளித்தது!

கன்னியைக் கருவுறச் செய்தவன் போனான்
கண்ணிமைக்கும் நேரத்தில் சிறைச்சாலை!

தன் மகனைத் தேடி வருந்தி இளைக்கும்
தன் மகனிடம் கூறினாள் ருக்மிணிதேவி

சதுர்த்தி விரதத்தின் மகிமையைகளை!
அது புரியும் வியத்தகு விளைவுகளை!

சதுர்த்தி விரதம் செய்தான் பிரத்யும்னன்
அது வரவழைத்தது ஸ்ரீ நாரத முனிவரை!

பாணன் அநிருத்தனைச் சிறை செய்ததைக்
காணாது மகனைத் தேடுபவனுக்குக் கூற;

அளவற்ற சினத்துடன் போரிட்ட கண்ணன்,
களவு மணத் தம்பதியரை மீட்டு வந்தான்!

பிரிந்தவர் சேர்ந்ததும் பெருகியது இன்பம்,
விரத மகிமையினை உணர்ந்தது உலகம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#19f. BANAsuran

Pradyumnan searched for his missing son Aniruddhan everywhere but could not trace him. The secret wedding came to broad daylight when Usha became pregnant. The happiness of secret love was followed by the public shame of the pregnancy of an unwed girl.

When BANAsuran knew that the man responsible for this was hiding in his palace, he became very angry and put Aniruddhan in prison. Rukmini Devi told her son Prathyumnan who was madly searching for his missing son Aniruddhan the greatness of the Chathurthi vratham.

Pradyumnan performed Chathurti vratham. NArada appeared there and told them that BANAsuran was holding Anirudhdhan as a prisoner. Krishna waged a war with BANAsuran and freed Aniruddhan from the prison.

Usha and Aniruddhan were brought home by Krishna. There was joy everywhere now that the family members got united after a long separation.

Once again the greatness of the Chathuti Vratham was proved to the world.
 
4#2b. வியாசரின் பதில்

“தருமத்தை நிலை நாட்டிய மஹாவிஷ்ணு
விருப்பத்துடன் எடுத்தாரா அவதாரங்களை?

கர்ம வினைகளால் நிகழ்ந்தவை அவை !
கர்ம வினைகள் இன்றி அவதாரங்கள் ஏது?

ஜலக்ரீடை இன்பமாகச் செய்து கொண்டு,
மலர் செண்டுடன் விளையாடிக் கொண்டு

சொக்கட்டான் ஆடியபடி காலத்தைக் கழித்து;
சுக போகங்களை லக்ஷ்மியுடன் அனுபவித்து;

காலம் கழித்திருக்கலாம் வைகுந்தத்திலேயே.
கர்ப்ப வாசம் செய்வதற்கு அவசியம் என்ன?

கர்ப்ப வாசத்திலும் நரகம் வேறொன்று உண்டோ?
கர்ப்பத்தில் தலைகீழாக இருப்பதே ஒரு கொடுமை!

முடங்கிக் கிடக்க வேண்டும் சிறிய பையில்!
தொடங்கும் வாழ்க்கை கருப் பாதையிலிருந்து.

உண்டோ பிறந்த பின்னே வாழ்வில் சுகம்?
மண்டும் துயர்கள், நோய்கள், துன்பங்கள்!

தேவர்களுக்கும் உண்டு கர்ம பலன் – எனவே
தேவர்கள் பிறந்தனர் குரங்குளாக ஒருமுறை.

கிருஷ்ண அவதாரத்தின் பெருமை சொல்வேன்;
கிருஷ்ணன் ஆவான் விஷ்ணுவின் அவதாரம்.

வசுதேவராகப் பிறந்தார் காசியப முனிவர்;
பசு மேய்க்கும் தொழில் வந்தது சாபத்தால்.

மனைவி தேவகி அதிதியின் அவதாரம்;
மனைவி ரோஹிணி சுரசையின் அவதாரம்.

வருணன் தந்த சாபத்தால் வந்து பிறந்தனர்
வசுதேவரின் இரு மனைவிகளாக பூமியில்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#2b.Sage VyAsA’s reply

Sage VyAsA continued ,” Did Vishnu the restorer of Dharma took the avatars willingly? No! They happened as a result of his karmas and actions. Without Karma, there can be no avatar nor birth.

Vishnu can spend his time in Vaikunta happily doing jalakreeda, playing with balls of flowers, playing dice with Lakshmi Devi and indulging with her.

Why should he live in the womb and be born as any normal jeeva? Is there a greater punishment than living in a womb? One has to remain packed tightly in a small bag and hang upside down till the time of birth.

The birth though the small birth canal itself is a harrowing experience. Is there any happiness after being born? Life is filled with problems, difficulties and diseases. Even Deva suffer the effects of Karma. They were born as monkeys once due to the effect of karma.

I shall tell you about Vishnu’s avatar as Krishna now. Sage Kashyap was born as Vasudeva. His wife Aditi was born as Devaki. Rohini was Surasa’s avatar. Due to a curse given by Varuna these three were born thus on the earth.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#22b. யுத்தம் (2)

சிதறியோடும் அமரர்களைக் கண்டு - பெரும்
சினம் கொண்டார் திரு முருகப்பெருமான்.

சிவகணங்களுக்கு அளித்தார் அபயம்;
சிவகணங்ளுக்கு அளித்தார் ஊக்கம்.

தனி ஒருவராகப் போர் செய்து கொன்றார்
கணத்தில் நூறு அக்ஷௌஹிணி சேனையை!

தின்றாள் பத்ரகாளி கரிகளை அறைந்து கொன்று!
திரிந்தாள் களமெங்கும் ராக்ஷசரின் உதிரம் அருந்தி!

ஒடி ஒளிந்தனர் கந்தன் விடுத்த பாணங்களால்!
ஓடி ஒளிந்தனர் கந்தன் கை வேலாயுதத்துக்கு!

சங்கசூடன் பெய்தான் சரமாரியை விண்ணிலிருந்து;
சங்கசூடன் எய்தான் அவற்றைத் தடுக்க இயலாதபடி.

மரங்கள், மலைகள், அம்புகள், பாம்புகள் முருகனை
மறைத்தன பனியால் மூடிய செங்கதிரவனைப் போல..

உடைத்தான் முருகனின் தேரை, அறுத்தான் கைவில்லை!
தடுத்தான் வேலை, அலைக் கழித்தான் கந்தன் மயிலை!

அறுத்து எறிந்தான் முருகன் அவை அனைத்தையும்;
எறிந்தான் தன் சக்தி ஆயுதத்தைச் சங்கசூடன் மீது!

மயங்கி விழுந்தான்; பின் தெளிந்து எழுந்த அவன்
ஏவினான் சக்தி ஆயுதத்தைக் கந்தன் மார்பினில்!

தாவி ஓடிவந்த காளி அணைத்துக் காத்தாள்;
ஏவிய சக்தி தாக்கவில்லை கந்த பெருமானை!

உடன் இருந்து போர் செய்தாள் காளி தேவி ;
உதவின போரினில் மோகினிப் பரகணங்கள்.

பொழிந்தாள் பிரளயாக்னியைக் காளி தேவி!
அழித்தான் மேகாஸ்திரத்தினால் சங்கசூடன்!

பிரயோகித்தாள் காளி வருணாஸ்திரத்தை;
எறிந்தான் சங்கசூடன் கந்தர்வாஸ்த்திரத்தை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#22b. The war (2)

Skanda became angry seeing the DevA running in confusion in the battle field. He gave Abhayam to the frightened army and fought with the asura army single-handedly. He killed one hundred akshouhiNi of the asura army in just a moment.

Bhadra KAli killed and swallowed the elephants. She went around the battle field drinking the blood of asuras. Now it was the asurAs' turn to run in confusion and hide from the Shakti Aayudam of Skanda.

Sankhachooda rained arrows from the sky. They came so fast that they were unstoppable even for Skanda. Trees, Moutains, arrows and snakes covered Skanda like the dense mist covering the morning sun.

Sankhachooda shattered the chariot of Skanda, cut off his bow, stopped his Shakti Ayudam and gave a hard time to his vAhanam the peacock.

Skanda cut off all these and aimed his Shakti on Sankhachooda. He fainted hit by the Shakti Aayudam but regained consciousness fast and threw his own Shakti Aayudam on Skanda.

Bhadra KAli rushed in and saved Skanda for being attacked. She fought the asura army side by side with Skanda. The Mohini Para GaNas also helped her in the war.

KALi rained praLayAgni on Sankkachooda and he put it off with his MeghAsthram. KALi shot at him her VaruNAsthram and Sankhachood shot his GandhavAsthram.
 
BHAARAGAVA PURAANAM - PART 1

# 20a. ஆதிசேஷன்-1

கயிலாய நாதனைக் காண வந்த தேவர்கள்
மெய்யன்போடு தொழுதனர் ஈசன் உமையை.

இடத்தால் கிடைத்த உயர்வால் ஆதிசேஷன்
சடைமேல் இருந்து அடைந்தான் கர்வம்!

கர்வம் கொண்டால் கிடைக்கும் தண்டனை!
சர்வமும் அறிந்துள்ள பெருமான் அளிப்பார்.

கையால் பற்றி இழுத்தார் கைலாய நாதர்;
மெய் வருந்த ஓங்கி அடித்தார் தரையில்.

ஆயிரம் பிளவுகள் ஆகிவிட்டது அவன் சிரம்.
போய் விழுந்து மயங்கிவிட்டான் தரையில்!

திரிகாலஞானி, திரிலோக சஞ்சாரி நாரதர்
பரிவுடன் கேட்டார், ” சேஷா!என்ன ஆயிற்று?”

அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை ஆதிசேஷன்;
அவருக்கு ஒரு பதிலும் கூறவில்லை அவன்.

ஞானக் கண்ணால் கண்டார் நடந்தவற்றை
ஞானம் புகட்டினார் நாரதர் ஆதிசேஷனுக்கு!

“இடத்தால் கிடைக்கும் பெருமையினால்
அடையக் கூடாது மனதில் பெரும் கர்வம்!

கொடுத்தவன் இந்தப் பெருமையை ஈசனே!
விடக் கூடாது இந்த நினைவை என்றுமே!

விக்கினங்கள் நீக்குபவர் நம் வினாயகர்;
விரதம் அனுஷ்டிப்பாய் நீ சதுர்த்தியன்று.

ஷடாக்ஷரம் ஓதியபடித் துதித்து வந்தால்
சர்வலோக நாயகன் புரிவார் திருவருள்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

# 20a. Aadhiseshan

When DEvA came to Kailash they paid obeisance to Siva and Uma.

Adhiseshan who was on the matted coils on Siva’s head also got worshiped by this act. He felt proud that he too got respected by all.

Siva read his thoughts. Siva loves to nip the pride in the bud. He pulled out Aadiseshan from his head and smashed his head on the ground.

The head broke into one thousand shreds and Adhiseshan fell faint.
NArada went by and asked him what had happened. Aadiseshan was filled with shame and did nor reply to him.

NArada told him, “We should not feel proud when we get lifted to place of honor. We must remember that it is also a gift of God and remain grateful to him always. Only Lord VinAyaka can remove all your trouble. Worship him and pray for his grace!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#2c. ஜனமேஜயனின் கேள்விகள்

குறுக்கிட்டான் ஜனமேஜயன் இப்போது.
சிறந்த அறிவு படைத்த முனிவரே கூறுங்கள்!

எந்தப் பாவச் செயலைச் செய்தார் காசியபர்?
எந்த சாபத்தினால் அவர் பிறந்தார் வசுதேவராக?

விஷ்ணு ஏன் மானிடப் பிறவிகள் எடுத்தார்?
விஷ்ணு ஏன் அடைய வேண்டும் இன்னல்கள்?

துக்கமே கர்ப்பவாசம்; துக்கமே பிறப்பு;
துக்கம் அஞ்ஞானம், துக்கம் காம வேதனை.

ராமாவதாரத்தில் ராமன் துயருற்றது ஏன்?
ராஜ்ஜியமிழந்து வனவாசம் சென்றது ஏன்?

மனைவியைப் பறி கொடுத்துவிட்டு
மனம் கலங்கி புலம்பித் திரிந்தது ஏன்?

பிறந்தான் கண்ணன் க்ஷத்திரிய குலத்தில்,
வளர்ந்தான் கண்ணன் யாதவ குலத்தில்;

மாடு கன்றுகளை மேய்த்தான் இளமையில்;
கொடுங்கோலன் கம்ஸனைக் கொன்றான்.

அஞ்சி வெளியேறினான் மதுராபுரியிலிருந்து;
தஞ்சம் புகுந்தான் கண்ணன் த்வாரகாபுரியில்!

சம்சாரத் துக்கங்கள் விஷ்ணுவுக்கு எதற்காக?”
சம்சயங்களைத் தீர்க்கவேண்டும் குருதேவரே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#2c. Doubts raised by Janamejayan

King Janamejayan interfered now. He asked the sage Vyaasaa his doubts,

“Oh sage Vyaasaa! Please tell me what was the sin committed by Kashyapa that he had to be born as Vasudeva. Why did Vishnu take avatars as human beings? Why did he suffer like any normal human being?

Life in a womb is a torture; being born is a torture. Ignorance gives us sorrow. Desires make us sad. Why did Raamaa suffer so much in his avatar? Why did he go for vanavaasam ? Why did he lose Seetaa and roam around in the jungle crying out her name?

Krishna was born as a Kshatriya. But he grew up as a Yadava. He looked after the cows and calves in his childhood. He killed the wicked Kamsan. He left Maduraapuri and went to Dwaarakaapuri to escape from his enemies.

Why did Vishnu have to suffer the sorrows of samsaaram? Please clarify my doubts sire!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#22c. யுத்தம் (3)

எய்தாள் காளி மஹேஸ்வர அஸ்திரத்தை;
எய்தான் சங்கசூடன் சதாசிவ அஸ்திரத்தை.

ஏவினாள் காளி வீரபத்திர அஸ்திரத்தை
தாவியது வானில் சங்கசூடன் தொழுததும்.

அஸ்திரத்துக்கு அஸ்திரம் பதிலானது.
ஆயுதத்துக்கு எதிர் ஆயுதம் பதிலானது.

பாசுபதாஸ்திரத்தை எடுத்தாள் காளி எய்வதற்கு!
"பத்தினியாகத் துளசி உள்ளவரை இல்லை மரணம்.

ஒலித்தது அசரீதி விண்ணிலிருந்து மண் வரை
ஒலித்தது, "பிரமன் தந்த வரம் அது இவனுக்கு!"

விழுங்க ஓடினாள் காளி சங்கசூடனை;
விழுங்க இயலாத பேருருவம் எடுத்தான்.

உடைத்தாள் தேரை; எறிந்தாள் சூலத்தை!
தடுத்தான் சூலாயுதத்தை இடது கையால்!

மூர்சித்தான் காளி கொடுத்த அடியில்;
மூர்ச்சை தெளிந்து செய்தான் மல்யுத்தம்.

எய்யவில்லை பாணங்களை மாத்ரு பக்தியால்
எய்யவில்லை பாணங்களைக் காளியும் கூட.

சுழற்றி வீசினாள் சங்கசூடனை விண்ணில்!
சுழன்று வணங்கிவிட்டு விமானம் ஏறினான்!

காளி கூறினாள் சிவபெருமானிடம் சென்று,
"வாயிலிருந்து நழுவிய அசுரர் மிகுந்தனர்!"

அசரீரி தடுத்தது காளியின் பாசுபதாஸ்திரத்தை!
அசல் ஞானி அவனும் எய்யவில்லை பாணம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
9#22c. The war (3)

Kali shot her MahEswara asthram on Sankhachooda. He shot his SadAsiva asthram on her. Now KAli shot the MahA Veerabhada asthram. It went away in the sky - the moment Sankhachooda paid obeisance to it.

Every asthram released by KAli was met by a suitable asthram by Sankhachooda. Every weapon used by her met its match in his hands.

KAli took out her PAsupthAsthram and then an asareeri was heard."As long as Tulasee remains a pativrata, Sankhachooda will not fall. It is the boon given to him by BrahmA"

KAli wanted swallow him whole and ran towards him. Sankhachooda assumed a form to huge to be swallowed by her.

KAli broke his chariot and threw her Soolayudam on Sankhachooda. He stopped it with his left hand. She beat him and he fainted right away. When he came round, he started wrestling with KAli.

Neither KAli nor Sankhachooda shot any more asthrams on each other. KAli threw him high up. He landed safely, did a namaskAr to her and got into his vimAnam.

KAli went back and told Lord SivA, "Only those asurAs who had slipped from my mouth have survived."

Asareri stopped KAli from shooting PAsupatAstram and Sankhachooda being a gnAni did not shoot any asthram at her.




 
BHAARGAVA PURAANAM - PART 1

#20b. ஆதிசேஷன்-2

பிரவாள நகரம் சென்றான் ஆதிசேஷன்,
விரதம் அனுஷ்டித்தான் பயபக்தியுடன்.

சித்தி, புத்தி தேவியர்களுடன் விநாயகர்
சிங்க வாகனத்தில் தோன்றி அருளினார்.

சிரம் தாழ்த்தி வணங்கினான் ஆதிசேஷன்;
பிரார்த்தித்தான்,” என்னைக் காத்தருளும்!”

“கர்வத்தால் இழந்து விட்ட உன் சக்திகள்
சர்வமும் உன்னை வந்தடையும் மீண்டும்!

தரையில் அடித்ததால் ஏற்பட்ட பிளவுகள்
சிரங்களாக மாறிவிடும் இப்போது முதல்.

தாங்கி வருவாய் ஆயிரம் தலைகளுடன்
தரணியை முன் எப்போது போலவே நீ!

ஈசன் சடை மீது ஐந்து தலைகளுடன்
இருந்து வருவாய் நீ எப்போதும் போல.

இன்னமும் நீ மாறுவாய்! இனி எனது
இனிய உத்தர பந்தனமாகவும் ஆவாய்!

விஸ்வரூபம் எடுத்தார் விநாயகபிரான்!
வயிற்றைச் சுற்றி அணிந்தார் அவனை.

விநாயகர் அருளால் இழந்தவைகளை
வெற்றியுடன் பெற்றான் ஆதிசேஷன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#20b. Aadhiseshan

Aadhiseshan went to the City called PravALa and observed the Chathurti vratham. VinAyaka appeared to him accompanied by Siddhi Devi and Buddhi Devi on Simha vAhana. Aadhiseshan prayed to him, “Please save me!” VinAyaka blessed him and said,

“You will regain all that you have lost due to your pride. The thousand shreds of your head caused when it was smashed on the ground will become thousand heads. You will carry the world on your heads as before. You will be on Siva’s jada as a five headed snake. You will become my Udhara bandhan also now!”

He took viswaroopam and tied Aadiseshan around hid waist. Adiseshan was happy to get back his lost powers and become the udhara bandan of VinAyaka.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

4#3a. சக்களத்திகள் பொறாமை

ஒருமுறை அபகரித்தார் காசியப முனிவர்
வருணனின் பசுவை யாகம் செய்வதற்கு.

வருத்தத்துடன் வந்து கேட்டான் வருணன்,
“திருப்பித் தாரும் முனிவரே என் பசுவை!

“எடுத்த பொருளைத் திருப்புவதாக இருந்தால்
எடுத்திருக்கவே மாட்டேனே!” என்றார் முனிவர்.

முறையிட்டான் குறையினை பிரமனிடம் வருணன்,
“பிறப்பாய் யாதவனாக!” எனச் சபித்தான் முனிவரை.

தணியவில்லை வருணனின் சினம் இன்னமும்,
துணைவியரைச் சபித்தான் புத்திரரைப் பிரிந்திட.

பிரமனும் கடிந்து கொண்டான் மகன் காசியபரை;
“பிறர் பொருளை அபகரிப்பது தவறு அல்லவா?

பூவுலகில் மனைவியரோடு சென்று பிறந்து
ஆவினங்கள் மேய்த்து வருவாய்!” என்றார்.

அதிதியிடம் கூறினார் பிரமன் அடுத்ததாக,
“கதி கலங்குவாய் குழந்தைகளைப் பிரிந்து!”

யாதவன் வாசுதேவனாகக் காசியபர் பிறக்க
மாதவன் பிறந்தான் எட்டாவது மகனாக.

அதிதி பிறந்தாள் மனைவி தேவகியாக
அதிதி பிரிந்தாள் பிறந்த குழந்தைகளை”

ஜனமேஜயன் கேட்டான் வியாசரிடம்,
“மனமே கலங்கும் கொடிய சாபத்தால்.

இந்திரனைப் பெற்ற அன்னை அதிதிக்கு
இந்தச் சாபம் வரக் காரணம் என்ன?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#3a. Jealousy between wives

Once Sage Kashyap stole Varuna’s cow for performing a YAgA. Varuna requested the sage to return his cow to him.”If I plan to return it to you, I would not have stolen it in the first place!” The sage mocked at him.

Varuna complained to Brahma. Since his anger was unabated, Varuna cursed the sage Kashyap to born on earth as a YAdava. He cursed sage’s wives to get separated from their new born babies.

Brahma also took to task Kashyap for coveting for the cow which did not belong to him. Brahma cursed Kashyap to be born on earth along with his wives and tend the cows and calves. He cursed Adidi that she would suffer the pangs of separation from her new born babies.

Sage Kashyap was born as Vasudeva and Aditi was born as Devaki. Vishnu was born as their eighth son Krishna. Aditi reborn as Devaki got separated from all her eight children as soon as they were born.

King Janamejayan interrupted now and said, “My heart shatters to hear of such a cruel curse. Why was Adidi given such a cruel curse?”
 
Devi bhaagavatam - skanda 9

9# 23. சங்க நாதம்

கணங்களுடன் களம் சென்றார் சிவபெருமான்;
வணங்கினான் தரையில் இறங்கிய சங்கசூடன்.

புரிந்தனர் யுத்தம் நூறு ஆண்டுகள் தொடர்ந்து!
தெரியவில்லை வெற்றி தோல்வி ஏற்படும் வழி!

உயிர்பெறச் செய்தார் சிவன் மாண்டவர்களை;
புயலுக்குப் பின் அமைதியானது போர்க்களம்.

பிராமணக் கிழவன் வந்தான் யுத்த பூமிக்கு;
பிரார்த்தனை செய்தான் ஒரு பொருளை ஈந்திட!.

சத்தியம் செய்தான் சங்கசூடன் தருவதாக;
"நித்தியம் அணியும் மந்திரக் கவசம் தாரும்!"

தந்துவிட்டான் சங்கசூடன் சத்தியம் காக்க;
அந்தணன் மாறினான் போலி சங்கசூடனாக!

சென்று கூடினான் துளசியை கணவனைப் போல!
சென்று மறைந்து விட்டது அவள் பதிவிரதா தர்மம்!

பதிவிரதா தர்மத்துக்குப் பங்கம் நேர்ந்ததும்
விதி வசமாக அழிந்தது 'விதி' தந்த வரமும்.

நெருங்கிவிட்டது மரண காலம் சங்கசூடனை!
எறிந்தார் சிவன் பிரம்மாண்டமான சூலத்தை!

தியானத்தில் அமர்ந்தான் சங்கசூடன் உடனே!
பாய்ந்த சூலாயுதம் பஸ்பமாக்கியது அவனை.

திவ்விய உருவம் எடுத்தான் அவன் சுதாமனாக!
திவ்விய விமானம் வந்து இறங்கியது அவன்முன்.

அடைந்தான் கோலோகத்தை அதில் அமர்ந்து;
அடைந்தான் ராதா கிருஷ்ணர்களை மீண்டும்.

வணங்கினான் ராதா கிருஷ்ணர்களை அன்போடு;
அணைத்துக் கொண்டானர் சுதர்மனை அன்போடு!

சூயாயுதம் திரும்பிச் சென்றது சிவபெருமானிடம்;
சூலாயுதம் மாற்றியது எலும்புகளைச் சங்குகளாக.

சங்குத் தீர்த்தம் புனிதத் தீர்த்தம் தெய்வங்களுக்கு;
சங்கின் ஓசை லக்ஷ்மிகரமானது தெய்வங்களுக்கு.

சங்கு இருக்கும் இடத்தில் இருப்பாள் லக்ஷ்மி;
சங்கு இல்லாத இடத்தை அலக்ஷ்மிகரம் என்பர்.

சிவலோகம் திரும்பி விட்டார் சிவபெருமான்;
திமிலோகப் பட்டது தேவ துந்துபியின் நாதம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
devi bhaagavatham - skanda 9

9# 23. The sound of the conch

Siva entered the war field accompanied by his Siva gaNAs. Sankhachooda got down from his vimAnam and paid his obeisance to Lord Siva. Then they fought for one hundred long years. There was no sign of victory or defeat to either of them!

Siva resurrected all those who had died in the war. There was a calm after the storm. An old brahmin came to the war front. He begged Sankhachooda for a specific gift. Sankhachooda promised to give him whatever it might be. Now the brahmin wanted the mantra kavasam always worn by and protecting Sankhachooda.

Just to keep his promise, Sankhachooda parted with his mantra kavacham and lost its magical protection. The old brahmin new transformed himself to look like another Sankhachooda and wore the mantra kavacham around his neck!
He went to Tulasee as if he were her husband and enjoyed marital pleasures with her. Without her knowledge, Tulasee had lost her pavi-vratA dharmam.

The boon given by Brahma became powerless now. Sankhachooda also became powerless after parting with his mantra kavacha. His end had neared.

Siva threw his huge SoolAyudam at him. Sankhachooda sat down in deep DhyAnam immediately in the war field. The SoolAyudam hit him and turned him into a heap of ash and his bones became rare conchs.

Sankhachooda got back his divya sareeram as SudAmA of GolokA. A vimAnam came down to take him back to the Goloka. He met RAdhA and Krishna and prostrated to them. They hugged him with great affection.

The SoolAyudam went back to the hands of Lord Siva. All the bones of Sankhachooda had became rare conchs. Conchs are auspicious to all the Gods. The water from a conch is a holy water. The sound of a conch is auspicious. Lakshmi dwells wherever there is a conch.


Siva went back to Sivaloka. There was a great rejoicing and the air was filled with the sounds of Deva Dundubi!
 
BHAARGAVA PURAANAM - PART 1

#21a. புருசுண்டி-1

ஸஹஸ்ரபுர மன்னன் ஆவான் சூரசேனன்,
ஸகல நற்குணங்களும் பொருந்தியவன்.

சூரியனை நிகர்த்த விமானம் ஒன்று
பாரில் இறங்குவதைக் கண்ணுற்றான்.

தூதர்களை அனுப்பினான் அறிந்து வர;
தூதர்கள் காட்டினர் இறங்கிய இடத்தை!

தகதக வென்ற தங்கவிமானத்தில் வந்து,
தரையில் இறங்கியவன் தேவராஜன்.

வணங்கினான் இந்திரனை வலம் வந்து!
“வந்த பணி என்னவோ?” வினவினான்.

“பூவுலகின் விந்தைகளை எல்லாம்
தேவர்கள் அறிவது நாரதர் மூலமே.

மகான் ஒருவரைப் புகழ்ந்தார் நாரதர்.
மகத்துவம் ஆகும் அவர் வேழமுகம்.

விநாயகர் மேல் கொண்ட பக்தியால்
விநாயகர் போல் அடைந்தார் தோற்றம்!

புருசுண்டி என்னும் புண்ணிய புருஷனை
தரிசித்துத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

பாவி ஒருவனின் பார்வை பட்டதும்
பாதை மாறி விமானம் இறங்கியது!

விமானத்தை விண்ணில் எழுப்புவதற்கு
விநாயகர் விரதம் செய்பவர் தேவை.

சங்கட சதுர்த்தி விரதம் செய்பவரே
சங்கடத்தைப் போக்கிவிட முடியும்!”

சூரசேன மன்னன் வியப்பில் ஆழ்ந்தான்,
தேவராஜனைக் கேட்டான், ”அவர் யார்?

விநாயகர் அருள் கிட்டியது எங்ஙனம்?
விநாயகர் தோற்றம் கிட்டியது எங்ஙனம்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21a. BrusuNdi

Soorasenan was the good king of Sahasrapuram. He was endowed with all the noble qualities. One day he saw a vimAnam glittering like the sun landing on the ground, deviating from its aerial path in the sky. He sent his messenger to find out everything about the vimAnam.

The messengers located the vimAnam and took their king to it. It was Indra himself who was traveling in it. Soorasenan circumnavigated the vimaanam, paid his respects to Indra and asked the purpose of his visit to the earth.

Indra replied, “We DEvA learn about all the wonderful things happening on the earth through NArada. One day NArada praised a mahAn. His greatness was that his face resembled the face of VinAyaka. I visited him and was going back to swargga.

One sinner eyed my vimAnam and it landed abruptly. Now to make it rise again I need the help of a person who performs Sankata Chathurthi vratham. Can you please help me to find a Person in your country who observes Sankata Chathurti vratham?”

Soorasenan was astonished by what he had heard and asked Indra,” Who is that mahAn? How did he get the grace of VinAyaka and a resemblance to His appearance besides?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

4#3b. திதியும், அதிதியும்

தக்ஷனின் பெண்கள் திதியும், அதிதியும்,
தர்ம பத்தினிகள் காசியப முனிவருக்கு.

இணையற்றவன் அதிதி மகன் இந்திரன்;
இணையாகும் மகனை விழைந்தாள் திதி.

கோரினாள் வலிய மகனைக் கணவனிடம்;
கூறினார் கணவர் விரத விதிமுறைகளை.

“விரும்பும் மகன் வந்து பிறப்பான் – நீ இந்த
விரத விதிமுறைகளை மீறாமல் இருந்தால்.”

பால் அருந்தினாள்; உணவை விடுத்தாள்;
பரிசுத்தமாக உறங்கினாள் தரையில்.

பூர்த்தி ஆனது விரதம் ஒரு குறையுமின்றி.
பூர்த்தி ஆனது அவள் கோரிக்கையும் கூட.

கருவில் உருவானான் ஒரு வலிய மகன்!
கரு தந்தது திதிக்கு விரதத்தின் பொலிவை!

பொறாமை கொண்டாள் இது கண்ட அதிதி.
‘பெருமை சேரும் திதிக்கும், மகனுக்கும்.

சிறுமை சேரும் எனக்கும், இந்திரனுக்கும்!
சீரழிக்கவேண்டும் இவள் கருவை உடனே.

“உருவாகி வளர்கின்றான் உனக்குப் பகைவன்;
உன் சிற்றன்னை திதியின் வயிற்றில் இந்திரா!

உபயம் சிந்திப்பாய் மகனே இந்திரா! உடனே
அபாயம் விளைவிப்பாய் அவள் கருவுக்கு!

பிறந்தால் குறைந்து விடும் உன் பெருமை.
பிறக்கும் முன்னர் அழிப்பது அறிவுடைமை.”

இந்திரன் மனத்தைக் கலைத்தாள் அதிதி.
இந்திரன் வெறுத்தான் தன் பகைவனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#3b. Aditi and Diti

Diti and Aditi were two of the daughters of Dakshan. Both were the wives of Sage Kashyap. Aditi’s famous son was Indra. Diti wished to have a son as famous a Indra. She conveyed her wish to her husband sage Kashyap.

The sage told her to observe a vratam as it was prescribed and then her wish would get fulfilled. Diti followed the rules to the letter and observed the vratam. When the vratam was completed she became pregnant with a son as great as Indra himself.

The vratam had purified her and she shone like pure gold. Aditi became jealous of her brilliance and her pregnancy. She thought to herself, “If Diti gives birth to a son as famous as Indra, then Indra as well as I will become less popular.” She decided to destroy the pregnancy by any means and at any cost.

She spoke to Indra” Your enemy now grows in the womb of your stepmother Diti. If he is born he will overshadow you. I do not want that to happen By hook or crook destroy the baby in her womb!”

Indra got corrupted and influenced by his mother and decided to destroy the child in his step mother’s womb.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#24a. மாயமும், சாபமும்!

"பதிவிரதை துளசி கற்பிழந்தது எப்படி?" என,
"சதி செய்த அந்தணன் விஷ்ணு அல்லவா?

மந்திரக் கவசத்தைப் பெற்றான் விஷ்ணு;
தந்திரமாக வடிவெடுத்தான் சங்கசூடனாக!

வெற்றிக் களிப்போடு திரும்பினான் துளசியிடம்,
வெற்றி முழக்கம் இடும் சேனைகளுடன் வந்து!

பலகணி வழியாக அவர்களைப் பார்த்த துளசி
பரவசம் அடைந்தாள் கணவனைக் கண்டதும்!

வழங்கினாள் தான, தர்மம் அங்கஹீனர்களுக்கு;
வழங்கினாள் விடுதலை சிறைக் கைதிகளுக்கு!

அந்தப்புரத்தில் கணவனாக நுழைந்தான் விஷ்ணு;
அமரச் செய்தான் அவனை ரத்தின அரியணையில்.

காம இச்சை பெருகியது கணவனைக் கண்டதும்;
தாம்பூலம் தந்தாள் பச்சைக் கற்பூரசூர்ணத்தோடு.

"நம்பமுடியவில்லை நீங்கள் வெற்றி பெற்றதை!
அம்புவியில் சங்கரனை வெல்லவும் இயலுமோ?

சங்கரனனை நீர் வென்றது எங்கனம் எனக் கூறுவீர்!"
சங்கசூடன் போலச் சிரித்தபடிக் கூறினான் விஷ்ணு

"போர் செய்தோம் இருவரும் ஓயாமல் நெடுங்காலம்;
பிரியம் கொண்டவன் பிரமன் எங்கள் இருவரிடமும்.

புரியச் செய்தான் போர் தேவையில்லை என்பதை;
திருப்பித் தந்துவிட்டேன் அமரர்களின் உலகத்தை.

சென்றுவிட்டார் சிவபெருமான் கைலாயம் - மேலும்
சென்று விட்டனர் அமரர்கள் தங்கள் சுவர்க்கத்துக்கு !"

கூடி மகிழ்ந்தான் துளசியுடன் காம லீலைகளில்!
ஊடினாள் துளசி நவீன லீலா வினோதங்களால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 

Latest ads

Back
Top