• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#24a. The Trick and the Curse

NAradA asked NArAyaNA,"Tulasee is a chaste woman. How did she lose her chastity? Pease tel me all about it"

NArAyaNA replied to NAradA," It was Vishnu who had taken away the mantra kavacham in the disguise of an old brahmin from Sankhachooda in the war field.

He wore the mantra kavacha and transformed himself to look like Sankhachooda. He went back to Tulasee with his army in jubilation and celebration.

Tulasee looked at them from her balcony and became very happy to see her husband. She gave gifts to the physically challenged people and released the prisoners from the prison.

Vishnu entered the chamber of Tulasee as if he were really Sankhachooda. Tulasee was overcome by passion when she saw her husband after a long time. She made him sit on a throne studded with precious gems. She gave him betel leaves folded with fresh camphor inside them.

She told him,"It is hard to believe that you have won over Lord Sanakra. Can anybody defeat Lord Sankara in a war? Tell me all about it as I am eager to know how you had won over him ?"

Vishnu laughed as Sankhachooda would laugh and replied," Both of us fought for a very long time without a sign of victory or defeat. Brahma loves both of us alike. He made us understand that it was not necessary to fight a war.

I returned the Swargga to the DevAs and the war ended. Sankara went back to his abode and the DevAs too went back to their abode happily."


He indulged in amorous sports with Tulasee. She was puzzled since these were very different from what Sankhachooda used to indulge in.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#21b. விப்பிரதன்-1

நந்துரம் என்ற அழகிய பட்டணம்
அந்த தண்டகாரண்யத்தில் இருந்தது.

வேடர்கள் குடியிருந்தனர் அதனருகே;
வேடன் விப்பிரதன் அவர்களில் ஒருவன்.

கொடுமையே உருவானவன் விப்பிரதன்;
கடுமையே வடிவெடுத்தவன் விப்பிரதன்;

வழிப்பறி செய்து, உடமைகளைப் பறித்து,
வாழ்க்கை நடத்தி வந்தான் அவ்வேடன்!

அந்தணன் ஒருவனை நெருங்கினான்,
அந்தணன் அஞ்சி ஓடத் துவங்கினான்.

காடு மேடு பாராது ஓடிச் சென்றவனை
வேடனால் பிடிக்கவே முடியவில்லை.

ஓடிக் களைத்து இளைத்துப் போனான்!
ஒன்றும் கிடைக்கவில்லை அன்றைக்கு!

தடாகம் ஒன்று தென்பட்டது வழியில்;
தடாக நீரை அள்ளி அள்ளிப் பருகினான்.

தண்ணீரை அருந்திய பின்னர் கரையில்
கண்ணயர்ந்தான் ஒரு பெரிய மரநிழலில்.

வித்தக விநாயகன் ஆலயம் அருகே!
முத்கல முனிவர் வந்தார் அவ்வழியே.

“அந்தணன் தப்பி விட்டான் ஆயினும்
இந்த மனிதனைத் தப்ப விடமாட்டேன்!”

ஓங்கிய வாளுடன் நெருங்கினான் அவரை
ஓங்கிய கரம் தானாகத் தாழ்ந்ததெப்படி?

முனிவரின் கனிவான பார்வையால் ஒரு
மனிதனாக மாறிவிட்டான் விப்பிரதன்!

தீய குணங்கள் மாயமாக மறைந்தன;
நேய குணங்கள் நொடியில் வளர்ந்தன.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#21b. Viprathan

Nanduram was a city in the outskirts of DandakAraNyam. Some hunters were living near it. Viprathan was one of them. He was the personification of cruelty. He was harsh and merciless. He waylaid the travelers and looted their belongings. He had made this his way of living.

One day he saw an Brahmin and closed in on him with a drawn sword. But the Brahmin took to heels and ran for his life like one possessed. Viprathan was unable to catch up with him. He felt very dejected since he had got nothing on that day.

He was hungry and thirsty. He drank the cool and refreshing water from a pond and stretched himself in the shade of a big tree on the bank of the pond. There was VinAyaka temple nearby.

Mudgala rushi came that way. Viprathan eyed him and told himself, “The Brahmin managed to escape by running faster than me. I shall never allow this man to escape”

He approached the rushi with his sword raised. But his hand lowered by itself when the sage cast a merciful glance on the sinner. He was instantaneously reformed to a good man and all his bad qualities disappeared in the flash of a second.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#3c. இந்திரனின் வஞ்சகம்

போதனை கேட்டான் தாயிடம் இந்திரன்;
பேதலித்தான் மனம் துர்போதனைகளால்.

சென்றான் திதியிடம் நயவஞ்சகத்துடன்,
சொன்னான் அவளிடம் இனிய மொழிகளை .

“இளைத்து மெலிந்து விட்டாய் விரதத்தால்
களைத்து நலிந்து விட்டாய் விரதத்தால்.

பாத சேவை செய்யும் பாக்கியம் தருவாய்!
பேதமில்லை மனதில் உனக்கும், தாய்க்கும்!”

பாதங்களைத் தொடையில் வைத்துக் கொண்டு
பாத சேவை தொடர்ந்து செய்தான் இந்திரன்.

ஐயுறவில்லை திதி இந்திரனின் நோக்கத்தை;
அயர்ந்து உறங்கினாள் களைப்பின் மிகுதியால்.

வாய்த்தது இந்திரன் காத்திருந்த சந்தர்ப்பம்!
மாய்த்து விடலாம் எளிதில் உருவான கருவை!

வடிவெடுத்தான் யோகசக்தியால் நுட்பமாக;
குடிகெடுக்க நுழைந்தான் அவள் கர்ப்பத்தில்.

வெட்டினான் சிசுவை ஏழு துண்டுகளாக;
வெட்டப் பட்ட சிசு அழுதது ஓயாமல்!

வெட்டினான் ஒவ்வொன்றையும் ஏழாக!
வெட்டப் பட்டது சிசு நாற்பது ஒன்பதாக!

மரிக்கவில்லை அந்த சிசு அப்போதும்;
மருத்துக்களாக உருவெடுத்தன அவை.

கண் விழித்த திதி அதிர்ந்து போனாள் – இது
கண் மூடித் திறப்பதற்கு என்ன கொடுமை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#3c. The treachery of Indra

Indra listened to the wicked advice of his mother Aditi. His mind was filled with hatred towards his unborn half brother. He went to his stepmother Diti and spoke to her very kind words.

“The austerities of the vratam have made you weak and lean my dear mother. I want to serve you somehow. Please grant me permission to do paada seva to you. I consider you at par with my own mother!”

Diti trusted him an allowed him to massage her feet gently. She felt relaxed and went into a sound sleep. Now this was the opportunity Indra had been waiting for. He assumed a minute form by his yogic powers and entered into her womb.

He cut off the fetus into seven parts. The fetus did not die but started to cry. He again cut off each of those seven parts into seven parts. Now the fetus was dissected into forty nine parts. Still the fetus did not die but became the forty nine Marut gaNaans.

Diti was shocked by this quick sequence of events from one – who she had trusted as her own son!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#24b. தாபமும், சாபமும்.

"யார் நீ உண்மையைக் கூறி விடு உடனே! - நீ
யாராக இருந்தாலும் நான் சபிப்பேன் உன்னை.

கற்பைச் சூறையாடிவிட்டாய் கணவன் உருவில்!
அற்பப் பதரே! நீ யார் என்ற உண்மையைக் கூறு!" எனச்

சாபத்துக்கு அஞ்சாதவர் யார் உள்ளார்? - பரி
தாபத்துடன் காட்டினார் விஷ்ணு சுயவுருவை.

மயங்கி மூர்ச்சையடைந்து விழுந்தாள் துளசி.
மயக்கம் தெளிந்ததும் ஆத்திரம் கொண்டாள்.

"என்ன காரியம் செய்து விட்டீர் மாயாவியே?
என்ன பாவம் செய்தேன் இந்தத் தண்டனை பெற?

வஞ்சகமாகச் சூறையாடி விட்டீர் என் கற்பை!
வஞ்சகம் வாழாது! வாழவும் கூடாது உலகில்!

கல் நெஞ்சம் படைத்துள்ளீர் நீர் - ஒரு
கல்லாகக் கடவது என்று சபிக்கின்றேன்!"என

விஷ்ணு தேற்றினார் சீறிச் சினந்த துளசியை,
விஷ்ணு கூறினார் பல வினோத விவரங்களை!

"என்னை அடைய விரும்பி நீ தவம் செய்தாய்;
உன்னை அடையச் சங்கசூடன் தவம் செய்தான்!

திருமணம் செய்து கொண்டீர்கள் தவப் பயனாக!
ஈருடல் ஓருயிர் என வாழ்ந்தீர் ஒரு மன்வந்தரம்!

பலிக்க வேண்டும் நீ செய்த தவமும் துளசி - நான்
அளிக்க வந்தேன் உன் தவப் பயனை உனக்கு.

மனித உடலை நீத்துவிடப் போகின்றாய் துளசீ;
புனித உடல் பெற்று என்னுடனே இருப்பாய் நீ!

மாறி விடும் உன் உடல் புனித கண்டகி நதியாக!
மாறி விடும் உன் ரோமங்கள் துளசிச் செடியாக!

கூறுவேன் இனித் துளசிச் செடியின் மகிமையை
பொறுப்பாய் நான் உனக்குச் செய்த பிழையை!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
9#24b. The curse and the consoling

Tulasee became wild with anger. " You coward! Reveal your real identity now! I will curse you whoever you may be! You looted my virtue disguised as my husband. I will never forgive you!"

Vishnu reveled his identity and Tulasee swooned as soon as she saw him. When she came round she asked Vishnu," What have you done oh MAyAvee? What have I done to get this punishment?

You were treacherous to come under a disguise and defile me. You are stone-hearted. I curse you that you will become a stone."

Vishnu consoled her by revealing many facts. "Tulasee you wished to marry me and did severe penance. SudAmA wished to marry you and he too did severe penance.

He married you as the fruit of his penance and lived with you happily for one Manvantara. Now it is time that you obtain the fruits of your penance. I have come here to grant you the fruits of your long and hard penance.

You will cast away your mortal body now and attain a holy body and reside with me always. Your mortal body will become the holy GaNdaki triver. Your hairs will become the holy Tulasee trees. I will tell you the greatness of the Tulasee tree now. Pardon me for my wrong action done to you!"
 
BHAARAGAVA PURAANAM - PART 1

#21c. விப்பிரதன்-2

கண்களில் வழிந்த கண்ணீரால் முனிவரின்
கால்களைக் கழுவினான் வேடன் விப்பிரதன்.

“அறிவில்லாத வேடன் நான் ஒரு மூடன்!
பிறவியிலேயே கொண்டேன் துர்குணம்.

புனிதனாக்கி மனிதன் ஆக்கி விட்டீர்கள்.
இனிப் பிறவா பேரின்பம் பெற வேண்டும்;

கனிவுடன் காட்டுவீர் அதற்கான உபாயம்!”
பணிவுடன் வணங்கி வேண்டினான் வேடன்.

“தடாக நீரில் இறங்கி நீராடி வருவாய்;
இடைவிடாது இம்மந்திரத்தை ஓதுவாய்.”

உபதேசித்தார் விநாயகர் திருமந்திரத்தை.
உடன் அளித்தார் காய்ந்த மரக் கிளையை.

“கம்பை நட்டு அது துளிர்க்கும் வரையில்
கம்பருகே அமர்ந்து ஜபித்து வருவாய்!”

கம்பை நட்டான்; நம்பி நீர் வார்த்தான்;
அன்புடன் ஓதினான் கணேசமந்திரத்தை.

ஆயிரம் ஆண்டுகள் உருண்டு ஓடின.
ஆயினும் கம்பு துளிர்க்கவே இல்லை!

உறுதியில் குறையவில்லை விப்பிரதன்;
அருகினில் அமர்ந்து ஜபித்து வந்தான்.

ஆயிரம் ஆண்டுகள் முடிந்து பின்னர்
மாயக் கொம்பு துளிர்த்தது ஒருநாள்!

முத்கல முனிவரும் எழுந்தருளினார்;
அற்புதம் நிகழ்த்தினார் வந்த இடத்தில்!

கமண்டல நீரைத் தெளித்த உடனே – முக
மண்டலத்தில் தோன்றியது தும்பிக்கை!

நம்பிக்கை இழக்காத வேடனுக்கு ஒரு
தும்பிக்கை பரிசானது புருவமத்தியில்.

விப்பிரதன் என்ற பெயர் இனி இல்லை!
அற்புத தும்பிக்கையால் இனி ப்ருசுண்டி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21c. BrusuNdi

Viprathan bathed the feet of the sage Mudgala with his copious tears. “I am a foolish hunter. I am a cruel man by birth. You have made me into a kindhearted man today. I do not want to take any more births. Please teach me how to achieve it!”

Mudgala told him to take bath in the pond. He taught the hunter the holy mantra of VinAyaka. He gave Viprathan a withered stick. “Plant this and water. Sit near it and chant the mantra I taught you everyday, till it grows fresh leaves.”

Viprathan planted the stick. He watered it. He sat near it and kept on reciting the mantra taught to him by the sage.

One thousand years rolled by but the stick did not grow fresh leaves. Viprathan trusted the words of the sage. He sat near the stick and kept on chanting the mantra with unshaken faith.

One fine day tiny leaves appeared on the stick. At the same time the sage Mudgala also appeared there. The hunter paid his obeisance to the sage. Mudgala sprinkled some water on Viprathan from his kamaNdalam and a miracle took place.

A trunk similar to that of VinAyaka appeared on the face of Viprathan in between his eyebrows. He would be known by his new name BrusuNdi henceforth.
 
4#3d. அதிதியும், திதியும்

சபித்தாள் திதி தந்திரன் இந்திரனை மனமார;
கோபித்தாள் நடத்திய நயவஞ்சக நாடகத்தை.

“திரிலோக அதிபதிப் பதவியை இழந்துவிட்டு
திரிவாய் அலைந்து, குலைந்து, மெலிந்து!”

அதிதியின் வஞ்சனையையும் அறிந்தாள்;
அதீத சினத்துடன் சபித்தாள் அவளையும்!

“பிறந்தவுடனே குழந்தைகள் கொல்லப்பட்டு
இறப்பதைக் கண்டு நெஞ்சு துடிதுடிப்பாய் நீ!”

அறிந்தார் காசியபர் நடந்த நிகழ்ச்சிகளை.
ஆறுதல் கூறினார் அன்புடன் திதி தேவிக்கு.

“மருத்துக்களாக விளங்குவர் மகன்கள்;
பொருந்துவர் இந்திரனுடன் தம் புகழில்.

சாபங்கள் பலன் தரும் துவாபரயுகத்தில்,
சதுர் யுகம் இருபது எட்டில் என்றறிவாய்

கிடைத்துள்ளது எனக்கும் பிரம்ம சாபம்;
கிடைத்துள்ளது எனக்கும் வருண சாபம்;

மானிடப் பிறவியை எடுப்போம் நாங்கள்;
மாளாத துயரை அனுபவிப்போம் நாங்கள்;

சாபம் தொடரும் பல ஜன்மங்களுக்கு;
தாபம் தீர்ந்து மன அமைதி கொள்வாய்!”

கோபம் மறைந்தது திதியின் மனத்தில்;
பாவம் செய்தால் உண்டு தண்டனை!

பிறந்தார் காசியபர் வசுதேவனாக;
பிறந்தாள் அதிதி வந்து தேவகியாக;

சாபங்கள் பலித்தன, பலனைத் தந்தன;
சாபங்கள் தொடரும் ஜன்மாந்திரமாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#3d. Aditi and Diti

Diti cursed Indra for his treacherous deeds. “You will lose your ruler ship on the three worlds and roam around pitiably.”

She knew the wicked part played by her sister Aditi in this foul play. Diti cursed Aditi,” You will suffer as much as I do and have your new born babies killed right in front of your eyes”

Sage Kashyap came to know of these happenings and consoled his wife Diti, “Your sons will become the Forty nine Marut GaNaas. They will be as famous as Indra.Your curses will take effect in the Dwaapara yuga in the twenty eighth Chatur yuga.

I too got cursed by Varuna. I got another curse from Brahma. I will be born as human being along with Aditi. We both will suffer a lot in that birth. The curse will chase for many births until they take effect. The wrongdoer will get punished. Calm down now!” Diti calmed down after listening to her husband.

In the Dwaapara yuga Sage Kashyap was born as Vasudeva and Aditi as Devaki. The curses took effect and they both suffered a lot.

Curses can chase the humans over many births before they come true!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#24c. துளசி மஹிமை

"வாசம் செய்வர் தேவர்கள், தெய்வங்கள்
வாசம் மிகுந்த துளசிச் செடியின் அடியில்!

புனித நீராக மாறிவிடும் துளசியின் கீழ்
மனிதர் தேக்கும் சாதாரண நீரும் கூட!

துளசித் தீர்த்தத்தால் செய்கின்ற ஒரு அபிஷேகம்
வளம் தரும் ஆயிரம் குடம் பாலபிஷேகம் போல.

அருந்துபவர் அடைவர் விஷ்ணு லோகத்தை
மரண காலத்தில் துளசி நீரால் பாவனமாகி.

லக்ஷம் அஸ்வமேத யாகப் பலனைத் தரும்
லக்ஷ்மீகரமான துளசி மாலை - அணிபவருக்கு!

பொய் சத்தியம் துளசியின் அடியில் செய்பவன்
வெய்யிலில் புழுப் போல துடிப்பான் நரகத்தில்!

துவாதசி, மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி
தூய்மையற்ற நாட்களில் துளசியைத் தீண்டுவது

விஷ்ணு தலையைக் கொய்த பாவத்தைத் தரும்!
வீணாக்கவே கூடாது துளசியின் இலைகளை.

கல்லாகும்படிச் சபித்தாய் நீ என்னை - கிடப்பேன்
கல் மலையாக மாறி கண்டகி நதிக் கரையினில்.

கிருமிகள் துளைத்து துவாரம் இடும் அக் கற்களில்;
உருவாக்கும் என் அரிய சின்னகளை அக் கற்களில்!

கண்டகி நதியினில் விழும் இந்த சாளக்கிராமங்கள்;
வண்ணம் மாறும் பிங்களமாக சூரியன் ஜாலத்தால்!

தீர்த்த ஸ்பரிசம் தரும் தீர்த்த ஸ்நான பயனை;
மூர்த்தி பூஜை தரும் யாகங்கள் செய்த பலனை!

சாளக்கிராமம், சங்கு, துளசியைப் பூசிப்பவன்
விளங்குவான் ஞானியாக, விஷ்ணு பக்தனாக!"

துளசி எடுத்தாள் ஒரு திவ்விய உடலை;
துளசி அடைந்தாள் திருமால் திருமார்பை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#24c. The greatness of Tulasee

Vishnu told Tulasee the greatness of Tulasee vruksham and Tulasee leaves.

"The DevAs and Gods reside under the Tulasee Vruksham. The ordinary water at the foot of the Tulasee plant become a holy theertam. The abhishekham done with the Tulasee teerthm will yield the merits of the abishekham done with one thousand pots of pure milk.

The person who drinks Tulasee theertam at the death bed will reach Vishnu Lokam being purified by it. The person who wears a Tulasee MAlA will get the merits of performing one alkh AswamEda YAgam.

One who swears under the Tulasee vruksham uttering a falsehood will land in the hell and suffer like a wriggling worm in the scorching sun.

It is wrong to touch the Tulasee plant on DwAdasi, the first day of the month, the full moon day and the new moon day. This will give the sin equivalent to cutting off the head of Lord Vishnu. Tulasee leaves should never be wasted.

Tulasee! You have cursed me to become a stone. I will become a huge mound of stone and lie at the bank of river GaNdaki. Thousands of tiny worms will drill holes in those stones forming my holy symbols in them.

These SAlagrAmas will fall into the GaNdaki river water. They will turn golden yellow by the play of the sunlight. The mere touch of this water will give the same merit as a bath taken in it.

The pooja done to this moorti will yield the same merit as a yAgA. One who worships the SAlgrAma, Tulasee and the conch will be a great gnaani and a staunch devotee of Vishnu!"

Tulasee cast off her mortal body and took a divya roopam. She is residing on the chest of Sri Vishnu ever since then.
 
BHAARGAVA PURAANAM - PART 1.

#21d. புருசுண்டி-2

உலர்ந்த கம்பு துளிர்த்தது; அது விந்தை!
உதித்த துதிக்கை விந்தையிலும் விந்தை!

புருவ மத்தியில் தோன்றிய தும்பிக்கையால்
உருவம் மாறிவிட்டது விக்கின ராஜர் போல்!

விப்ரதனைக் கட்டித் தழுவினார் முனிவர்,
“இப்பிறவியின் பயனை அடைந்துவிட்டாய்.

கற்ப காலம் வாழ்வாய் இந்த உருவோடு!
கற்பக விருக்ஷம் ஆகிவிடும் இந்தக் கம்பு;

எண்திசையும் பரவிடும் உந்தன் புகழ்;
எண்ணியதைத் தந்திடும் இந்த விருக்ஷம்.”

ஏகாக்ஷரத்தை உபதேசித்தார் முனிவர்,
ஏகாக்ஷரத்தை ஜபித்தான் புருசுண்டி;

ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடின.
அன்புடன் ஐங்கரன் காட்சி தந்தருளினான்!

துதிமாலைகளைச் சார்த்தினான் புருசுண்டி.
எதுவும் வரங்கள் தர வேண்டாம் என்றான்.

“பிறவாப் பேரின்பம் எய்தும் வழிகள் ஆம்
சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம்.

வேதம் சொன்னதைக் கைக் கொள்வாய்!
பேதம் என்றி என்னுடன் வந்து கலப்பாய்!”

ஐயன் ஆணைகளைப் பணிய புருசுண்டி
மெய்யன்புடன் நல்ல முயற்சி செய்தான்.

நாரதர் சென்றார் யமலோகம் காண்பதற்கு;
நாரதர் கண்டார் நரகத்தின் ஒரு பகுதியில்

கும்பி பாகத்தில் கிடந்தது உழலுகின்ற
தும்பிக்கை முனியின் முன்னோர்களை!

புண்ணிய சீலர் புருசுண்டியின் முன்னோர்
பண்ணிய தீவினைகள் தீர்ந்திடவேண்டும்.

“கும்பீபாகத்தில் துன்புறும் முன்னோரை
உம்மால் கடைதேற்ற முடியாதா” என்றார்.

சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்த புருசுண்டி
முதியோரை விடுவித்தான் நரகத்திலின்று.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#21d. BrusuNdi

It was a miracle that the withered stick grew fresh leaves. It was greater miracle that Viprathan grew a trunk similar to that of VinAyaka. He resembled Vigneshwar very closely now.

Mudgala rushi embraced him and said, “You have achieved the aim of your janma. May you live for a very long time in this swaroopam. This stick will grow into a Karpaga Vruksham and will give whatever one wishes for. Your fame will spread in all the eight directions far and wide”

Mudgala taught him EkAksharam. Brusundi meditated on VinAyaka chanting the EkAksharam. One thousand years rolled on and finally VinAyaka appeared in front of him.

BrusuNdi praised the Lord as best as he could. He did not seek any boons except that he wanted to escape being born again in this world.

VinAyaka told him, “The means of escaping being born again are Sariyai, Kiriyai, Yogam and JnAnam. Follow the words of the VEdas and you will merge with me inseparably at the end of this birth.” Brusundi did his best to follow the path of VEda.

One day NArada went to visit YamalOkam. He was surprised to find the ancestors of BrusuNdi in the KumbeebAgam of the Hell suffering a lot. He decided that they must be delivered from the sufferings of the Hell.

NArada told BrusuNdi that he could deliver his ancestors from the Hell by observing the Chathurti vratham. BrusuNdi did as advised and the suffering souls of his ancestors escaped from Hell and went to Heaven.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

4#4a. மாயையின் சக்தி (1)

“கலைத்தானா இந்திரன் தாயின் கர்ப்பத்தை?
குலைத்தானா அதை அத்தனை துண்டுகளாக?

தேவர்களின் அரசனல்லவா இந்திரன் – செய்யத்
தேவை அதர்மத்தை வென்று தர்மம் காப்பது!

மூன்று உலகங்களின் அதிபதி ஆனவன்
முன் மொழிந்தான் தாயின் மீது அசத்தியம்.

பெரும் பாவமல்லவா நம்பிக்கை துரோகம்?
பெரும் துரோகம் அல்லவா நயவஞ்சகம்?

நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை;
நீசத்தனமான இத்தகைய ஒரு செயலை.

பாரதப் போர்க்களத்தில் அரங்கேறின
பல கொடூரங்கள் என்று நான் அறிவேன்.

உத்தமர் செய்யும் செயல்களா அவை?
எத்தனை அதர்மங்கள் செய்துள்ளனர்!

சாந்தி தரவில்லை உம் வார்த்தை எனக்கு;
காந்துகின்றது என் மனம் கொடுமைகளால்.

இருந்தார் கிருஷ்ணன் ஸ்த்ரீ லோலனாக!
இருந்தார் கிருஷ்ணர் கபட வஞ்சகனாக!

பிராமண வடிவத்திலேயே கிருஷ்ணன்
புரிந்துள்ளார் பல பாதகங்கள் வாழ்வில்.

தர்ம தேவதை கால்கள் நான்கு உடையது,
தானம், தயை, சத்யம் ஆசாரம் என்பவை.

காணவில்லை அவர்கள் வாழ்வில் இவற்றை!"
பேணவில்லை நிச்சல புத்தியுடன் இவற்றை!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



4#4a. The power of Maayaa (1)


King Janamejayan was shocked to hear this.” Did Indra really try to kill the baby in the womb of his stepmother? Did he really cut it into forty nine pieces?


Indra is the king of Deva. His duty is to uphold Dharma and punish the wrong doers.He should not become a wrong doer himself! He is the ruler of the three worlds. Yet he falsely swore on his mother!

Isn’t breach of trust a great sin? Isn’t treachery a great sin? I can’t imagine such treachery?


I have heard that many wicked things happened during the Mahaa Bhaarata yuddham. Can real good people perform such actions? Your words do not give me any peace. My heart burns to think of the injustice.


Krishna was womanizer. He was a crooked cheat. He did many tricks and cheated even in the form of a brahmin.

Dharma stands on four legs namely Daanam (Sharing), Daya (Mercy), Satyam (Truth) and Aachaaram (Good Conduct). These are not seen in their lives. They never bothered about these things.”
 
There will be no posting from 8th September for about a week.

I need time to prepare for the travel, travel to the Western hemisphere,

and settle down in the new time zone exactly 12-30 hours behind IST.

That need NOT disturb your reading these poems and stories.

All these and much more can be accessed in my website using the link

http://visalakshiramani.weebly.com/ :pray2:
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#25a. சாவித்திரி பூஜை

"எதற்காகப் பிறந்தாள் சாவித்திரி தேவி?
எவரெவர் பூஜித்தனர் வேதத்தின் தாயை?"

வினவினான் நாரத முனிவன் நாரணனிடம்,
விளக்கினான் நாரத முனிவனுக்கு நாரணன்.

"பிரமன், தேவ கணங்கள், பண்டிதர்கள் மேலும்
அஸ்வபதி, நான்கு வர்ணத்தவர் பூஜித்தனர்.

பத்திர தேசத்து அரசன் அஸ்வபதி; அரசி மாலதி;
பக்தியோடு உபதேசம் பெற்றாள் வசிஷ்டரிடம்

ஆராதிக்கும் விதிகளை சாவித்திரி தேவியை;
ஆராதித்தாள் தேவியை பக்தியோடு பல காலம்.

காட்சி தரவில்லை தேவி அவளுக்கு - மாலதி
நாட்டுக்குத் திரும்பினாள் தன் அரண்மனைக்கு!

அஸ்வபதி அறிந்தான் அரசி படும் துயரை;
புஷ்கரத்தில் செய்தான் நூறாண்டு கடும் தவம்.

ஆகவில்லை பிரத்யக்ஷம் தேவி அஸ்வபதிக்கும்;
அசரீரி ஒலித்தது விண்ணிலிருந்து அப்போது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#25a. SAvitri Pooja (1)

"Why was SAvitri Devi born? Who all did worship SAvitri Devi?" NAradA asked and NArAyan replied!

"Brahma, The Deva GaNAs, the pundits, king Aswapati and the people of all the four varNas worshiped Devi SAvitri!

Aswapati was the icing of Bhadra desam. His wife was Malati. She got upadesam from sage Vasishta with great care. She learned the method of worshipping SAvitri Devi and did worship the Devi for a very long time.

But SAvitri Devi did not give dharshan to her. She got disapponited and went back to her country and her palace.

King Aswapati learned about the disappointment of his dear wife. He did penance in Pushkara kshetram for along time. Yet Savitri Devi did not give him her dharshan.

An asareeri sounded from the heaven. "Do Gayatri japam one lakh times!"

 
BHAARGAVA PURAANAM - PART 1

#22a. கிருதவீர்யன்-1

காவிரித் தீரத்தில் அழகியதொரு நகரம்
காவல் மன்னன் கிருதவீர்யன் ஆண்டான்.

அன்பு மனைவி அழகி சுகந்தி – ஆயினும்
இன்பம் தருவதற்கு இல்லை ஒரு குழந்தை!

கானகம் சென்றனர் அந்த அரசனும் அரசியும்.
கடும் தவம் செய்தனர் அன்ன பானம் இன்றி.

நன்மையை விரும்பிடும் நாரதர் சென்றார்
மன்னன் தந்தையைக் காண பித்ருலோகம்!

“கடும் தவம் நீடித்தால் உயிருக்கு ஆபத்து!
உடனே ஆவன செய் வம்ச விருத்திக்கு.”

பிரமனை நாடிச் சென்றார் மன்னன் தந்தை,
“பிறக்க வேண்டும் சந்ததி, வழி கூறுங்கள்!”

விருத்தாந்தங்களை விவரித்தான் பிரமன்.
விளக்கினார் வாரிசு இன்மைக்குக் காரணம்.

முற்பிறப்பில் கிருதவீரியன் அந்தணன் சாம்பன்.
கற்புடைய மனைவி தந்தாள் மகன் கணேசனை.

இன்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் அவர்கள்.
துன்பம் தொடங்கியது பீடித்த வறுமையினால்.

புசிப்பதற்கு உணவு இல்லாமல் ஆனது.
பசி வந்திடப் பத்தும் பறந்து போனது.

வழிப் பறி செய்து கிடைத்த பொருளால்
வழி பிறந்தது வயிற்றுப் பசி தீர்ந்திட.

காட்டு வழியே செல்லும் அந்தணர்கள்
மாட்டிக் கொண்டனர் பன்னிருவர் அன்று!

அடித்தே கொன்றான் அத்தனை பேரையும்;
எடுத்துக் கொண்டான் அவர் உடமைகளை;

குகையில் வீசினான் அவர்கள் உடல்களை;
குமாரனைக் காண விரைந்தான் இல்லம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#22a. Kruthaveeryan – 1

Kruthaveeryan ruled over a city on the banks of the river Kaveri. Suganthai was his loving wife. But they did not have a child to fill the cup of their joy. The king and queen left the city and went to the forest to do severe penance.

They did not take any food or water and their health started deteriorating very fast. NArada wanted to help them somehow. So he went to the pitru lokam and met Kruthaveeryan’s father.

NArada told him, “This kind of penance will endanger the lives of your son and his wife. Do something and help them get a child soon”

Krutaveeryan’s father went and met Brahma and sought his advice for the birth of a grandchild. Brahma told him the story of Kruthaveeryan in his previous birth and explained why he did not have a child.

In his previous birth Kruthaveeryan was a Brahmin called Saamban. He had a lovely wife and a son named Ganesan. They lived happily until dire poverty afflicted them.

There was nothing to eat and no means of livelihood. Saamban used to rob the passengers passing through a jungle and grab their belongings. This became his means of livelihood.

One day he saw twelve Brahmins passing by. He killed everyone of them and took their belongings. He threw their bodies in a cave and rushed home to meet his hungry son.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#4b. மாயையின் சக்தி (2)

வாமன வடிவெடுத்து வந்தார் விஷ்ணு;
வஞ்சித்துப் பெற்றார் மூன்றடி நிலத்தை!

வளர்ந்தார், அளந்தார் மூவுலகங்களையும்!
தளர்ந்தான் பாதாளம் சேர்ந்த மஹாபலி !

அநீதிமான் அல்லவே மஹாபலி மன்னன்!
அனைத்தும் வழங்கிய வள்ளல் ஆயிற்றே!

சத்திய சந்தன், பல யாகங்கள் புரிந்தவன்,
நிச்சயமாக இந்திரியங்களை வென்றவன்!

வஞ்சித்தார் வாமன ரூபத்தில் வந்த விஷ்ணு;
விஞ்சுமோ புகழ் வானளவாக வளர்ந்ததால்?”

கேட்டான் மன்னன் ஜனமேயஜயன் வியாசரை
கேட்டவற்றை விளக்கினார் வியாச முனிவர்.

“தர்மம் சத்தியத்துக்கு மாறுபட்டதல்ல!
தர்மமே சத்தியத்துக்கு மூல காரணம்.

மாயை மயக்கிவிடும் மனித மனத்தினை.
மாயை தாக்கும் குணங்களைக் கொண்டு;

மாயை மறைத்துவிடும் தூய அறிவினை;
மாயை பிறக்கச் செய்யும் வஞ்சகத்தை!

மாயை கட்டாது சத்தியத்தின் பாதையை;
மாயை விளக்காது தர்மத்தின் நெறியினை;

கலந்து தோன்றும் சத்தியம் அசத்தியத்தில்!
கலந்து தோன்றும் அசத்தியம் சத்தியத்தில்!

மாயைக்கு உட்பட்ட சம்சாரி ஜீவனை
மயக்கி ஆட்டுவிக்கின்றன இந்திரியங்கள்.

இந்திரியங்களின் வழிச் செல்லும் நம் மனம்!
இந்திரியங்கள் மாயையின் வழிச் செல்லும்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#4b. The power of MAyA (2)

King Janamejayan continued asking his doubts to sage VyAsA. ” Vishnu came in the form of a VAmana – a very young Brahmana. He tricked King MahA Bali and got the gift of three paces of land. He then grew sky high and measured the Heaven and the earth in two paces. MahA Bali got pushed down to the PAtAla lokam.

MahA Bali was not an unjust king. He was a just king and one very famous for his rich gifts. He spoke the truth always. He had performed 99 yAgA and yagnAs, He had conquered his IndriyAs. Yet Vishnu tricked him in order to help Indra retain his post in Heaven. Has Vishnu become more famous than Bali just because he grew sky high?”

VyAsA replied to these doubts raised by king Janamejayan. “Dharma and Satyam are not two opposing factors. In fact Dharma forms the basis of Satyam. But MAyA deludes and confuses the human mind. MAyA acts through the three guNaas viz Satvam, RAjasam and TAmasam.

MAyA covers a man’s intelligence. MAyA can make a person wicked. MAyA will not show the path of Dharma and justice. Satyam will get mixed up with asatyam. A samsAri is deluded by the all powerful MAyA. He is under the power and influence of his IndriyAs. His IndriyAs are under the power and influence of MAyA!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#25b. சாவித்திரி பூஜை (2)

"செய்வாய் காயத்திரி ஜபம் ஒரு லக்ஷம் முறை!"
செப்பியது அசரீரி அஸ்வபதிக்கு இவ்வறிவுரை!

சென்றார் முனிவர் பராசரர் அவ்வழியே - மன்னன்
செய்திருந்த நற் கர்மங்களின் பயனாகப் போலும்!

பணிவுடன் மன்னன் முனிவரை வணங்கினான்;
கனிவுடன் கூறினார் முனிவர் அவனிடம் இதை.

"ஒருமுறை ஜபித்தால் அழியும் ஒரு நாள் பாவம்;
நூறு முறை ஜபித்தால் அழியும் ஒரு மாதப் பாவம்.

ஒரு லக்ஷம் ஜபித்தால் அழியும் ஒரு ஜன்ம பாவம்.
பத்து லக்ஷம் ஜபித்தால் அழியும் பல ஜன்ம பாவம்.

பத்து முறை இதைச் செய்தால் சித்திக்கும் முக்தி;
எத்தகைய பாவத்தையும் அழித்துவிடும் காயத்ரி.

செய்ய வேண்டும் ஜபம் கிழக்கு முகமாக அமர்ந்து!
செய்ய வேண்டும் ஜபம் ஆலயம், நதிக்கரையினில்.

அணிய வேண்டும் ஜபமாலை ஸ்படிக மணிகளால்;
அணிய வேண்டும் வெண்டாமரைக் கொட்டைகளால்!

பூச வேண்டும் கோரோசனை நூறு காயத்ரி ஜபித்து;
புனிதப் படுத்த வேண்டும் கங்கை, பஞ்சகவ்யத்தால்.

பத்து லக்ஷம் காயாத்ரி இந்த மாலையுடன் ஜபித்தால்
பிரத்தியக்ஷம் ஆவாள் கண்முன்னே சாவித்திரி தேவி."

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#25b. SAvitri Pooja (2)

An asareeri sounded from the heavens "Do Gayatri Japam one lakh times!'" By the good fortune of King Aswapati, sage ParAsarA was passing by at that time. The king paid obeisance to the sage and asked about the significance of the asareeri.

The sage explained to the king patiently,"If we do the japa of GAyatri mantra once, the sins committed by us in one day will be destroyed! If we do the japa one hundred times, the sins committed in one month will be destroyed.

If we do japam one lakh times, the sins committed in one whole birth will be destroyed. If we do the japa ten lakh times, the sins committed in many births will vanish.

If this is repeated ten times all over again, one will be liberated from SamsAra chakram. One must sit facing east while doing the japa - either in a temple or on a river bank.

The japamAla must be made of crystals or the seeds of white lotus flower. One must do the japa of Gayatri mantra one hundred times and smear Gorochana on the japamAlA. The mAlaA must be sprinkled with pancha gavaya and Ganga water.

If you do the japam of GAyatri mantrA ten lakh times with this mAlA, SAvitri Devi will surely give you her dharshan!" The sage ParASArA advised the king.
 
9#25c. சந்தியா வந்தனம்

அந்தணன் ஆகும் தகுதியை இழக்கின்றான்
சந்தியா வந்தனம் செய்யாத ஒரு வேதியன்.

மூன்று சந்திகளையும் முறையாகச் செய்பவன்
விண்ணில் ஆதவன் போல நன்கு ஒளிர்வான் !

இணையவான் அவன் தேஜஸில் சூரியனுக்கு!
இணையாவான் அவன் தவத்தில் சூரியனுக்கு!

தூய்மையடையும் பூமி அவன் பாதத் துளிகளால்!
தூய்மையடையும் பாயும் நதி அவன் நீராடுவதால்!

சந்தி செய்யாத அந்தணனும் ஒரு சூத்திரனே!
சந்தி செய்யாதவன் செய்யும் கர்மங்கள் வீணே!

ஏற்க மாட்டார்கள் தேவர்கள் இவன் செய்யும் பூஜையை!
ஏற்க மாட்டார்கள் பித்ருக்கள் இவன் தரும் பிண்டத்தை!

மூலப் பிரகிருத்யின் பக்தன் ஆகாத ஒருவனும்,
மூல மந்திரத்தை ஜபம் செய்யாத ஒருவனும்,

தேவிக்கு உற்சவங்கள் செய்யாத ஒருவனும்,
வேளைக்குச் சந்தியைச் செய்யாத ஒருவனும்,

ஏகாதசி விரதம் அனுஷ்டிக்காத ஒருவனும்,
நிவேதிக்காத உணவை உண்ணும் ஒருவனும்,

சூத்திரான்னத்தைச் சுவைத்துப் புசிப்பவனும்,
சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்தவனும்,

சூத்திரனுக்குச் சமையல் செய்து போடுபவனும்,
சூத்திரனிடம் தானம் பெறுகின்ற அந்தணனும்,

கத்தியைக் காட்டி வயிறு வளர்ப்பவனும்,
வட்டியை வாங்கி வயிறு வளர்ப்பவனும்,

சூரியோதயத்தின் போது நித்திரை செய்பவனும்,
பூஜை, புனஸ்காரங்களை விட்டு ஒழித்தவனும்,

வேஷத்தால் அந்தணர்கள் போல இருந்தாலும்,
விஷமற்ற பாம்புகளுக்கு இணையாவார்கள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
9#25c. SandhyA Vandanam

A brahmin who does not perform SandhyA Vandanam does not qualify to be called as a Brahmin. The man who performs all the three SandhyA Vandanams regularly will shine like the Sun in the sky!

He will become equal to the Sun in his tejas and penance. The earth will become purified by his foot steps. The running rivers will become purified wgen he takes bath in their water.

A brahmin who does not perform SandhyA Vandanam is a SoodrA - even if born as a Brahmin. All the karmAs performed by him will go in waste. DevAs will not accept his pooja and Pitrus will not accept his srArdha karmAs.

The brahmin who is not the devotee of Moola Prakruti Devi;

The brahmin who does not chant her divine mantrAs;

The brahmin who does not follow EkAdasi vratam;

The brahmin who eats food not offered to God;


The brahmins who eats the food cooked by a SoodrA;

The brahmin who has married a SoodrA woman;

The brahmin who cooks for food for a SoodrA;

The brahmin who receives DAnam from a SoodrA;

The brahmins who makes a living by brandishing a knife,

The brahmin who lives on the interest earned on money;

The brahmin who sleeps at Sooryodhaya kAlam and

The brahmin who has given up the pooja and other form of worship
may look like brahmins but they are equal to the non poisonous snakes.
 
I did not want to leave Savitri Devi dangling with half finished posting for over a week.

So I posted 2 today and wil post the remaining 2 tomorrow.

The ETERNAL search for the true brahmin is ON and yet the answer eludes the seekers.

May be this post will make them understand who is NOT a brahmin

and then come to a conclusion as to who can be defined as a true brahmin!

They will have ample time to think, wonder, ponder and make up their mind! :)
 
BHAARGAVA PURAANAM - PART 1

#22b. கிருதவீர்யன்-2

தாளிடப் பட்டிருந்தது வாயிற் கதவு – முதல்
நாளிலிருந்தே முழுப் பட்டினி தான் மகன்.

களைத்துச் சுருண்டிருப்பான் என நினைத்து,
அழைத்து மும்முறை தட்டினான் கதவை.

மனம் கலங்கினான் மகன் எழுந்து வராததால்;
மனம் உடைந்தான் அவன் இறந்ததைக் கண்டு!

இரவு முழுவதும் அவன் கதறி அழுததால்,
பிரிந்தது அவன் ஆவி விடியற்காலையில்!

அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி ஆம்.
அன்ன ஆகாரம் இன்றி உயிர் துறந்ததால்

விண்ணுலகிலிருந்து வந்தது ஒரு விமானம்.
விண்ணுலகேகினான் அதில் அமர்ந்த மகன்.

பிராமணர்களைக் கொன்றுவிட்ட தோஷம்
பிரம்மஹத்தியாக வந்து பீடித்தது சாம்பனை.

மும்முறை “கணேசா!” என்று அழைத்ததால்
மன்னனாகப் பிறந்துள்ளான் இப்பிறவியில்.

பிரம்மஹத்தி நீங்கும் வரை கிடைக்காது
இம்மையில் மக்கட்செல்வம் அவனுக்கு!”

“பிரம்மஹத்தி நீங்கிட வழி கூறுவீர்!”என
பிரமனை வேண்டினார் மன்னனின் தந்தை.

“சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒன்றே
சங்கடங்களை நீங்கும் முற்றிலுமாக.

மாசி மாதம் அமர பட்ச செவ்வாய் அன்று
பூசித்துத் தொடங்கவேண்டும் கணபதியை.

மந்திரங்கள் ஜபிக்க வேண்டும் நீராடிவிட்டு.
சந்திரோதயத்தில் செய்ய வேண்டும் பூஜை!

அந்தணர்களுக்கு அன்னமிட்டு ஆராதித்து,
கண்விழித்துக் கேட்பீர் கணபதி கதைகளை!

இடைவிடாது ஓராண்டு செய்தால் விரதம்
தடையின்றித் தரும் நல்ல சந்ததிகளை.

வன்னி மரத்தடியில் இதை அனுஷ்டித்தால்
சின்னச் சின்னக் குறைகள் கூட நீங்கிவிடும்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#22b. Kruthaveeryan – 2

The door was locked and his son Ganesan had been starving from the previous day. SAmban though he must be too tired to open the door. He called out his name thrice and knocked the door.

He entered the house through the back door. He was shocked beyond words to find the dead body of his son. He was heart broken and cried throughout the night. The next day morning he too died.

A vimAnam came from the heaven. It was a sankatahara chathurthi day. Since the boy Ganesan had not eaten any food and died on that auspicious day he was taken to the heaven in the vimAnam.

SAmban had killed the brahmins. It afflicted him as Brahmahaththi dosham. So he could not get into the vimAnam. But since he called out the name of Ganesan thrice on that day, he is born as a king in this birth. Unless and until the brahmahaththi dosham is removed he can not have any children”

Brahma completed his long speech. Kruthaveeryan’s father asked Brahma, “Please tell me how he can get rid of the brahmahaththi dosham oh sire!”

Brahma replied, “Sankatahara chathurthi vratham can absolve him of this grave sin. He will have to start the vratham in the month of MAsi in the amarapaksham on Tuesday with a puja to Ganapathy. Everyday he must take bath and do japam. The puja must be done when the moon rises.

Brahmins must be offered feasts and honored. During the night he will have to remain awake and listen to the glorious stories of Ganapathy. If this vratham is continued for one full year without any interruptions, your son will be blessed with good children. If this vrtham is observed under a Vanni tree, even the smallest defects will be got rid of”

Brahma advised the king Kruthaveeryan’s father thus.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#4c. யாக யக்ஞங்கள்

“மாயையில் மயங்கிய மனிதர்கள் பின்பு
மயங்குகின்றனர் சத்திய அசத்தியத்தில்!

ஆசைப்பட்டவற்றை அடைவதற்காக மனிதன்
மோசம் செய்கின்றான் வஞ்சக எண்ணத்துடன்.

மறைந்து விடுகின்றது பகுத்தறியும் திறன்;
வெறி பிறக்கிறது விரும்பியதை அடைய.

அஹங்காரம் தோன்றுகிறது ஐஸ்வரியத்தால்!
அஹங்காரத்தினால் தோன்றும் அஞ்ஞானம்!

அசூயை, துவேஷம், பொறாமை, பேராசை,
அதர்ம புத்தி, ஆடம்பரம் டாம்பீகம் என்று

தோன்றுகின்றன பல துர் குணங்கள்;
தோன்றுகின்றன மனிதனை அழிக்க!

விரும்புவதைப் பெற்றிட யாக, யக்ஞங்கள்,
தருமம், தானம், தவம், ஜபம் போன்றவை.

தூய்மையான திரவியங்களால் செய்தால்
தூய்மையான நற்பயன்கள் கிடைக்கும்.

தூய்மையற்ற திரவியங்களால் செய்வது
தூய்மையற்ற பயன்களை அளிக்கும்

துரோகம் செய்யாமல் ஈட்டிய பணம்
தூய்மையானது என்று கூறப்படும்

உற்பத்தி செய்தான் அனைவரையும் பிரமன்
உற்பத்தியாயினர் தேவர் சத்துவ குணத்தில்.

உற்பத்தியாயினர் மனிதர் ராஜச குணத்தில்;
உற்பத்தியாயினர் அசுரர் தாமச குணத்தில்.

துவேஷம் லோபத்துடன் யாகம் செய்வர் மனிதர்;
துவேஷ புத்தியுடன் தவத்தைக் கெடுப்பர் தேவர்.

சம்சாரம் உண்டாவது அஹங்காரத்தில் – அந்த
சம்சாரம் தோற்றுவிக்கும் துவேஷ புத்தியை.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#4c. YAga, Yagnas.

Sage VyAsA continued his explanation to the king Janamejayan.
“Men are deluded by MAyA and confuse the truth with the falsehood. In order to gain whatever is coveted by him, a man cheats, dupes with behaves treacherously.

He loses the power of thinking lucidly. He gets motivated to possess the desired article. Riches and wealth make a person proud and egotistic. Ego develops ignorance. Intolerance, Jealousy, enmity, greed, pomp and show are some of the bad qualities developed by ignorance.

YAga, Yagna, DAnam, Penance and Japam are prescribed to achieve what a man wishes for. YAga done with pure objects yields good results. The yAga performed with impure objects yield bad results. The money earned in any just means is considered pure and that earned by foul means is unholy.

Brahma procreated all the jeevAs. He created the Deva in Satva GuNa, the Manushya in RAjasa GuNaa and the Asura in TAmasa GuNaa. Man performs YAga with dwesham and lobham (greed). The Deva disturb the penance done by man due to dwesham.

Dwesha buddhi is inevitable in a jeevA who is in samsArA. AhankArA gives birth to samsAA and samsArA gives birth to dwesha buddhi or animosity.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#26a. சாவித்திரி தேவி தியானம்

உருக்கிய பொன்னிறம் வாய்ந்தவள் தேவி;
பிரம்மா தேஜசுடன் ஒளிர்ந்து ஜொலிப்பவள்.

கிரீஷ்ம ருதுவில் ஒளிரும் நண்பகல் சூரியன்
ஆயிரவரின் காந்தியை அடையப் பெற்றவள்.

புன்னகை தவழுகின்ற மலர்ந்த முகத்தினள்;
பொன்னகை, ரத்தினங்கள் அணிந்துள்ளவள்.

பக்தருக்கு அருளும் திருவுள்ளம் கொண்டவள்;
பக்தருக்கு முக்தியையும், சுகத்தையும் தருபவள்.

சாந்தை, காந்தை, பிரம்ம பத்தினி!
சர்வ சம்பத் வடிவினி, பிரதாயினி!

வேதத்துக்கு அதிஷ்டான தேவதை!
வேத சாஸ்த்ர, வேத பீஜ வடிவானவள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#25d. SAvitri Devi DhyAnam

SAvitri Devi is of the color of molten gold! She glows with Brahma tejas! She has the brilliance of one thousand Suns which have risen together in the Greeshma rutu.

She has a smiling countenance! She is adorned with ornaments made of gold and precious gemstones. She is kindly disposed to bless her devotees. She gives her devotees liberation and happiness.

She is calm; She is attractive; She is the wife of Brahma; She is the personification of all the wealth and also giver of all the wealth.

She is AdishtAna Devata of the VedAs. She is the VEda Bheeja Swaroopini.
 

Latest ads

Back
Top