• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

9#25e. சாவித்திரி தேவி துதி

"சச்சிதானந்த ரூபிணி! மூலப் பிரகிருதி வடிவே!
ஹிரண்ய கர்ப்ப ரூபிணி! பிரசன்னமாகுவாய்!

வேதஸ்வரூபிணி! பரமானந்த ரூபிணி!
தேவி நீ நித்யை! நித்ய புருஷனின் பத்தினி!

நித்யானந்த ஸ்வரூபிணி! பிரம்ம ஜாதி ஸ்வரூபிணி!
நிகர்த்தவள் நீ ஒளிர்ந்து சுடரை உமிழும் அக்னிக்கு!

மந்திர ரூபிணி நீ! பராத் பரை நீ! காட்சி தா!
மோக்ஷமும், தேஜசும் தருபவளே காட்சி தா!

பஸ்பமாகிவிடும் மனோ,வாக்காயங்களின்
பாவங்கள் உன் பெயரை உச்சரித்தவுடனேயே! "

கோலோகத்தில் கிருஷ்ணன் பிரம்மனுக்குத் தர
குதூஹலத்துடன் உச்சரித்தான் பிரம்ம தேவன்.

பிரம்மலோகத்தை அடைந்தாள் சாவித்திரி;
பிரமனின் மனைவியாக வாழ்கின்றாள் அங்கே.

துதித்தான் அஸ்வபதி இந்த மந்திரத்தை;
மதித்தாள் அவன் துதியை சாவித்திரி தேவி.

சந்தியா வந்தனத்துக்குப் பின் இதை ஓதினால்
வந்து சேரும் நான்கு வேதபாராயண பலன்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#26b. SAVITRI STUTI

"You are the everlasting existence, everlasting intelligence and everlasting bliss! You are the Moolaprakriti! You are the HiraNya Garbha! You get pleased!

You are of the nature of Fire and Energy! You are the Highest! You are the Highest Bliss! You belong to the caste of the twice-born. Do become appeased!

You are eternal! You are dear to the Eternal! You are of the nature of the Everlasting Bliss. O Devi! You, the all auspicious One! Please become satisfied.

Thou art present in everything and everyone! You are the essence of all mantras of the BrAhmaNas! You are higher than the highest! You are the bestower of happiness and the liberation! O Devi! Please become pleased.

You are like the burning flame to the fuel of sins of the BrAhmaNas! You bestow the BrahmA teja (the brilliance of BrahmA)! O Devi! Please become appeased.

All the sins committed by me through my body, my mind and my speech are burnt to ashes - just be remembering your holy name."

Thus saying, the Creator of the world reached the assembly there. Then SAvitri came to the Brahmaloka with BrahmA. The King Aswapati chanted this stotra to SAvitri. She gave him her darshan and all the boons desired by the king.

Whosoever recites this highly sacred king of Stotras after SandhyA Vandanam, quickly acquires the fruits of studying all the four Vedas.
 
BHAARGAVA PURAANAM - PART 1

#22c. செவ்வாய் சதுர்த்தி

“செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தியை
செம்மையானதாகக் கருதுவது ஏன் சுவாமி?”

கிருதவீர்ய மன்னனின் தந்தை கேட்டார்,
அருமையான இக்கேள்வியை பிரமனிடம்!

“நர்மதை நதி தீரத்தில் வசித்து வந்தார்
பரத்துவாஜ முனிவர் என்னும் மகரிஷி.

நதிக்கரைக்கு நீராடச் சென்றார் ஒருநாள்.
அதிசயமான அழகியைக் கண்டார் அங்கே.

சேடிகள் புடை சூழ வந்த அழகிய பெண்ணின்
மேனியைக் கண்டதும் வெளிப்பட்டது தேஜஸ்.

மோக்ஷத்தைக் கெடுக்கும் இது என்று எண்ணி
மோஹத்துக்குக் கடிவாளம் இட்டுச் சென்றார்.

வெளிப்பட்ட தேஜஸ் விழுந்தது பூமியில்!
வெளிப்பட்டது அதனின்று ஓர் ஆண் மகவு!

வாரி அணைத்தாள் அவனை பூமி அன்னை;
பேரிட்டு வளர்த்தாள் அங்காரகன் என்று.

வளர்ந்த பின்னர் கேட்டான் அங்காரகன்,
“உளபடிக் கூறுங்கள் என் தந்தையார் யார்?”

“முனிவர் பரத்துவாஜரே உன் தந்தையார்.
இனிய அழகியிடம் பறிகொடுத்தார் மனதை.

அப்போது தோன்றினாய் நீ அவரிடமிருந்து
இப்போது செல்வோம் அவர் ஆசிரமத்திற்கு!”

முனிவரை விழுந்து வணங்கினான் சிறுவன்;
கனிவுடன் கூறினாள் முனியிடம் பூமித்தாய்,

“தங்கள் வீரியத்தில் தோன்றிய மகனைத்
தங்களிடமே அழைத்து வந்துள்ளேன் ஐயா!

என் கடமை முடிந்து விட்டது இன்றோடு
அங்காரகன் இனி உம் பொறுப்பு!” என்றாள்.

பரவசம் அடைந்தார் முனிவர் பரத்துவாஜர்.
இரு கைகளால் வாரியணைத்தார் சிறுவனை!

உபநயனம் செய்வித்தார் – மந்திரங்களை
உபதேசம் செய்தார், த்யானம் கற்பித்தார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#22c. Chathurthi on Tuesdays

“Why do we consider the chathuri falling on a Tuesday as very auspicious?” King Kruthaveeryan’s father asked Brahma DEvan. Brahma came up with the story of AngArakan.

BharatwAj was a rushi living in the banks of river Narmada. One day he saw a very beautiful girl surrounded by her friends near the river. He was overcome by love at first sight. His tejas dropped on the earth even as he looked at her.

He remembered that Moham (Lust) would destroy Moksham (Liberation). So he walked off without a second look at the girl. The tejas which fell on the earth became a male child. Mother Earth took pity on the child and brought him up well. She named him as AngArakan.

One day AngArakan asked her, “Mother please tell me who is my father” Mother Earth told him how he was born even as his father Rushi BharatwAj felt infatuated by a rare beauty seen near the river Narmada.

She told the boy,”I will take you to your father now.” They both went to the Ashram of sage BharatwAj. Mother Earth told the rushi, “Sir here is your son AngAragan, who was born of your tejas which fell on the earth. I have brought him up well. From now on he is your responsibility.”

BharatwAj was overwhelmed to see his son. He embraced the boy with both hands. He performed upanayanam for the boy. He taught him mantras and dhyAnam.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#5a. நர, நாராயணர்

வியாசர் தொடர்ந்தார் தம் மறுமொழியை,
விசனப்படும் மன்னனைத் தேற்றுவதற்கு.

“யுகம் ஒவ்வொன்றும் அக்காலத்தினருக்கு
யுக்தமாக இருப்பதை மறுக்க முடியாது நாம்.

யுக்தமானது சத்திய யுகம் உத்தம புருஷருக்கு.
யுக்தமானது இக் கலியுகம் அதம புருஷருக்கு.

தர்ம நெறியாக இப்பிறப்பில் கைக் கொள்வதை
நிர்ணயிப்பவை முற்பிறவியின் வாசனைகள்.

பிறந்தான் பிரமனின் இருதயத்திலிருந்து
தருமன் என்னும் மகன் சத்திய விரதன்.

மணந்தான் தக்ஷனின் பத்துப் பெண்களை!
இணங்கி வாழ்ந்தனர் ஒற்றுமையாகவே!

ஹரி, கிருஷ்ணன் என்ற இரு மகன்கள்
நர, நாராயணன் என்ற பெயர் பெற்றனர்.

சித்தி பெற்றனர் பதரிகாசிரமத்தில் – ஒரு
சக்தி வாய்ந்த தவத்தைச் செய்ததால் !

செய்து வந்தனர் கடும் தவம் மேன்மேலும்,
வெய்யிலெனத் தகித்தது தவாக்னி உலகை!

கதி கலங்கினான் இந்திரன் இது கண்டு – தன்
விதி மாறிவிடும் தவம் நிறைவு பெற்றால்!

கெடுக்க வேண்டும் இவர்கள் தவத்தினை!
ஒடுக்க வேண்டும் இவர்கள் சிறப்பினை!

விரைந்தான் ஐராவதத்தில் ஆரோஹணித்து;
வியந்தான் ‘இரட்டைச் சூரியர்களோ?’ என்று.

தவத்தின் வலிமையால் ஒளிர்ந்தனர் அங்கு
தருமனின் இரு குமாரர்களும் ஒருபோலவே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#5a. Nara, Naaraayanan

VyAsA continued to explain to king Janamejayan.

“Each yugam is the best suited for the jeevAs who are going to live in that period. Sathya yugam was best suited for the utthama jeevAs who lived in that period.

Kali yugam is the best suited for the adhama jeevAs who are living in this period. Our attitudes and aptitudes in our previous births decide how we are going to behave in this birth.

Dharman also known as Satyavrathan was Brahma’s son born out of his heart. He married ten of Dakshan’s many daughters. They all lived in perfect harmony. Their two sons Hari and Krishna were the Nara and NArAyaNan of this story.

They did severe penance in BadarikAsramam and obtained special powers called as siddhis. They continued their penance and the heat of their tapas acted like the scorching Sunlight for the rest of the world. Indra was afraid that if their penance was successful, they may displace him from the throne of the swarggam.

He decided that he had to ruin their penance at any rate and at any cost. He sat on his four tusked white elephant AirAvat and went to see them. He was surprised at the brilliance they had gained because of their severe penance.
 
DEVI BHAAGAVATM - SKANDA 9

9#27a. சாவித்திரி தேவி

சாவித்திரி ஸ்தோத்திரத்தைக் கூறித் துதித்ததும்
சாக்ஷாத்காரம் ஆனாள் தேவி அவன் கண்முன்னே.

"ஆண் குழந்தையை வேண்டுகின்றாய் நீயோ!
பெண் குழந்தையை வேண்டுகின்றாள் அரசி !

"நிறைவேறும் உங்கள் இருவர் விருப்பங்களும்!
நிறைவேறும் இரண்டும் காலக் கிராமத்தில்!" எனத்

திரும்பினான் அரண்மனைக்கு அரசன் அஸ்வபதி;
கருத் தரித்துப் பெற்றாள் பெண் குழந்தையை அரசி.

வைத்தனர் சாவித்திரி தேவியின் பெயரையே;
வளர்த்தனர் ஆவியிலும் பிரியமாக அவளை!

சாவித்திரி எய்திவிட்டாள் மணப் பருவம்;
சத்யசந்தன் சத்யவான் அவள் மணமகன்.

இனிது வாழ்ந்தனர் ஓராண்டு காலம் இருவரும்.
கனிகள் கொய்யச் சென்றான் கணவன் கானகம்.

உடன் சென்றாள் சாவித்திரியும் அந்தக் கானகம்;
உயிர் துறந்தான் மரத்திலிருந்து விழுந்த கணவன்!

காலதேவன் வந்தான்; கட்டி எடுத்துச் சென்றான்
கட்டைவிரல் அளவு சரீரம் உள்ளவனாக மாற்றி!

பின்தொடர்ந்தாள் சாவித்திரியும் காலதேவனை!
பின்னால் வருபவளிடம் சொன்னான் காலதேவன்.

"வரமுடியாது மனித உடலோடு என் பின்னே!
வர விரும்பினால் விட்டுவிடு மனித உடலை!

முடிந்துவிட்டது உன் கணவனின் ஆயுட்காலம்;
தொடங்கிவிட்டது அவன் யமலோகப் பயணம்!

கர்மத்தால் உண்டாகின்றது கிடைத்த சரீரம்;
கர்மத்தால் அழிகின்றது கிடைத்துள்ள சரீரம்.

கர்ம பேதங்களால் மாறுபடுகின்றனர் ஜீவர்கள்;
கர்ம வினைப் பயனால் அடைகின்ற பதங்கள்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
#22d. அங்காரகன்

ஆனைமுகனிடம் அதிக பக்தி கொண்டான்;
ஆனைமுகனின் அருள்பெற விழைந்தான்.

அனுமதி பெற்றான் அங்காரகன் தந்தையிடம்;
ஆயிரம் ஆண்டுகள் அரும் தவம் செய்தான்.

வேழமுகன் தந்தார் தரிசனம் அவனுக்கு!
“வேண்டிய வரம் யாது?” என்றார் அவனிடம்!

“உண்மை பக்தி நிலைக்க வேண்டும்;
உண்ண வேண்டும் தேவருடன் அமுது!”

“நவகிரகங்களில் ஒன்றாக அமைவாய்!
மங்களன் என்ற பெயரையும் பெறுவாய்.”

மங்களவாரம் என்னும் செவ்வாயன்று.
ஐங்கரன் தந்தார் தன் அரிய தரிசனம்!

செவ்வாய் சதுர்த்தி சிறப்புப் பெற்றது.
செவ்வாய் சதுர்த்தி சங்கட சதுர்த்தி.

ஆலயம் எடுத்தான் அன்புடன் அங்கே,
ஆனைமுகத் தேவனுக்கு அங்காரகன்.

ஆராதனைகள் செய்து அருள் பெற்று
ஆனான் நவகிரகங்களில் ஒருவனாக!

அங்காரகன் ஆராதித்த விநாயகர் தான்
மங்களகரமான சிந்தாமணி விநாயகர்!

தேவர்களும் ஆராதித்து நலம் பெற்றனர்,
மனிதர்களும் ஆராதித்து நலம்பெற்றனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#22d. AngArakan

AngArakan was a great bhakta of VinAyaka. He wished to get his blessings. He took his father’s permission and went to do penance. He meditated on VinAyaka for one thousand long years.

VinAyaka appeared to him and asked him what was his aim in doing the penance. AngArakan replied, ” Give me true bhakti towards you. I also wish to share the nectar with the DEvA”

VinAyaka blessed him and said, “You will become one of the nava grahas. You will share the nectar with the DEvA. You will be known by the name ManagaLan henceforth!”

VinAyaka gave his dharshan on a Tuesday. So all the chathurtis falling on a Tuesday are considered more auspicious.
AngArakan was very happy with these boons. He built a temple for VignEswar. He did ArAdhana and became one of the nine planets.

The VinAyaka worshiped by him is called the ChintAmaNi VinAyakar. The DEvA as well as the humans worshiped this VinAyaka and got their prayers answered.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#5b. இந்திரனின் சினம்

இந்திரன் கேட்டான் இரு முனி குமாரர்களிடம்,
தந்திரமாக அவர்கள் தவத்தைக் குலைப்பதற்கு.

“தவத்தின் நோக்கம் என்னவென்று கூறுங்கள்,
தருவேன் அவற்றை நான் உமக்கு வரங்களாக!”

கூறவில்லை ஒரு பதிலும் முனி குமாரர்கள்,
கோரவில்லை ஒரு வரமும் முனி குமாரர்கள்!

‘சிறுமைப்படுத்துகிறார்களோ இவர்கள் என்னை?’
சிறிது சினந்தான் இந்திரன் இரு குமாரர்கள் மீது !

மாயையினால் இன்னல்களை விளைவித்தான்!
மழை பெய்தது இடிகள், மின்னல்களோடு கூடி!

சுழன்று வீசியது கடும் புயல் காற்று – அத்துடன்
கனன்று எரிந்தது நாற்புறங்களிலும் தீச்சுடர்கள்.

உருவாக்கினான் அச்சம் தரும் விலங்குகளை!
பெருமைகளைச் சிறிதும் அறியாத இந்திரன்!

கலங்கவில்லை நர, நாராயணர் இதனால்!
கலையவில்லை அவர்களது தீவிரத் தவம்!!

தேவியை தியானித்துச் செய்தனர் மந்திர ஜபம்;
தேவேந்திரனின் மாயை தீண்டமுடியவில்லை.

காமம் வீழ்த்திவிடும் எத்தகைய மனிதனையும்!
காமதேவனை அழைத்து ஆணையிட்டான் அவன்.

“வசந்த காலத்தின் உதவியோடும், ரதியோடும்,
இசை நடனங்களில் சிறந்த தேவ மகளிரோடும்,

மோசம் செய்வாய் நர நாராயணர்களை நீ!
நாசம் செய்வாய் அவர்களின் தவத்தை நீ!

என்ன உதவி வேண்டுமோ கேள் எனிடம்,
என்ன வரம் வேண்டுமோ கேள் என்னிடம்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



4#5b. Indra’s anger

Indra told the two brothers Nara and Naaraayanan in order to foil their deep penance,”What is the purpose of your severe penance? Please tell me and I shall grant them to you as my boons!” But the two brothers neither replied nor asked for any boons.

Indra felt slighted and therefore became angry. He caused a lot of troubles to the two brothers immersed in deep penance by the power of his Maayaa. He created a stormy wind, accompanied by thunder claps and raining clouds.

Flames of fire appeared all around the brothers. He created frightfully strange animals. He did not realize the greatness of the two brothers.
Nara and Naaraayanan were unruffled by all these things.They concentrated on Devi and were doing her japam so that none of the Maayaa tricks could affect them in the least.

Lust can destroy anyone and everyone. So now Indra decided use the irresistible power of Manmathan and Rati – the gods of love. He summoned Manmathan and said,


“Make use of the spring season, your beautiful consort Rati , the apsaras talented in singing and dancing and disturb and destroy the penance of the two brothers Nara and Naaraayanan. I will extend to you any help you may need. I will give you any boons you wish to seek”
 
Devi bhaagavatam - skanda 9

9#28a. The rain of questions!


SAvitri asked Yama Dharma a series of questions and doubts now! "What is karmA? How does it come into existence? What causes the karmAs? Why do we get a body?

What is meant by DhyAnam? What is the buddhi? What is the true nature of prANA and the indriyAs?


Who are the Gods and DevAs? Who gives the food? Who eats the food? What is the enjoyment? Who is a JeevA? Who is the ParamAtmA? What is prAyachitham? You must please explain all these to me!"


Yama Dhrma replied thus:" VedAs lay down the good karmAs and VedAs prohibit the bad karmAs. Any worship done without seeking any fruit or any result will not bind a person in KarmA. Such a worship devoid of any sankalpam actually destroys karmA and bestows true devotion.


A devotee does not suffer the effects of his KarmAs. A devotee does not suffer from samsAra bandham or worldly bondage. A real devotee is fearless and does not undergo the chainof birth, growth, oldage, diseases and death. He is the jeevan mukta as defined in the VedAs.



Bhakti is of two types namely NirvANa bhakti and VishNu bhakti. The VaishNavAs prefer the worship with form while the gnAnis prefer the worship without forms.


Prakriti Devi is the KarmaroopiNi - since she pulls the strings of karma and manipulates the jeevAs. She gives every jeeva a body according to his KarmAs. She makes the JeevA undergo experiences depending on the KarmAs of the JeevA."


 
9#28b. கேள்விக் கணைகள் (2)

"பருவுடலைக் காரியம் ஆக்குகின்றாள் பஞ்ச பூதங்களுக்கு!
பருவுடலை இயக்குகின்றாள் கருவிகளைக் கைக்கொண்டு!

பஞ்ச வாயுக்கள், பஞ்ச கர்மேந்திரியங்கள் மற்றும்
பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச ஞானேந்திரியங்களைப்

பிரித்து இருக்கச் செய்கின்றாள் உடலை நீத்த பின்
சூரிய மண்டலம், வாயு மண்டலம் போன்றவற்றில்.

சுழற்றுகின்றாள் ஜனன மரணச் சக்கரத்தில் இணைத்து!
கழற்றுகின்றாள் ஞானியரை சம்சார சாகரத்தில் இருந்து!

அறிவுள்ள ஞானியர் அடைகின்றனர் மோக்ஷ சுகம்;
அறிவிலிகள் அடைகின்றனர் சம்சாரத்தில் துக்கம்!"

வினவினாள் சாவித்திரி மேலும் சில ஐயங்களை
ஞானம், பொறுமையின் கடலாகிய தர்மராஜனிடம்.

"எந்தக் கர்ம பேதங்களால் ஏற்படும் யோனியின் பேதங்கள் ?
எந்தக் கர்ம பேதங்களால் ஏற்படும் சுவர்க்க, நரக பேதங்கள் ?

எந்தக் கர்ம பேதங்களால் ஏற்படும் யோகி, ரோகி என்ற பேதம்?
எந்தக் கர்ம பேதங்களால் ஏற்படும் தீர்க்க, அற்ப ஆயுள் பேதம்?

எந்தக் கர்ம பேதங்களால் ஏற்படும் சுகம், துக்கம் என்ற பேதம்?
எந்தக் கர்ம பேதங்களால் ஏற்படும் அங்கஹீனம், புத்திஹீனம்?

எந்தக் கர்ம பேதங்களால் ஏற்படும் சித்தி, முக்தி என்ற பேதம்?
எந்தக் கர்ம பேதங்களால் ஏற்படும் நரகம், துயரம் கூறுங்கள்!

நரகங்கள் மொத்தம் எத்தனை வகை? அவை என்னென்ன?
யார் யார் உழல்கின்றார்கள் அவற்றில்? எத்தனை காலம்?"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#28b. The rain of questions! (2)


Yama DharmA continued to answer SAvitri's questions," Prakruti Devi makes the five gross elements the cause of the physical body and the physical body a product of those gross elements. She operates on this body through the five KarmEndriyAs (organs of action) and the five GnAnEndriyAs (the organs of knowledge).


When the body falls, She stores the Pancha prANAs, Pancha TanmAtrAs, Pancha KarmEndriYAs and five GnAnEndriYas in places like the Soorya maNdalam and VAyu mandalm etc.


She attaches all the JeevAs in the wheel of SamsArA and makes them go round and round endlessly, while She detaches the GnAnis from the wheel of SamsArA and give them total liberation.


The intelligent GnAnis attain the bliss of liberation while the foolish people suffer unending sorrow in the wheel of samsAra."


SAvitri asked some more doubts now," Which difference in the KarmAs cause the differences in the birth we take? Which KarmA decides whether the person will go to Heaven or Hell?


Which KarmAs decide whether the jeevA will become a Yogi or a Rogi? Which difference in the KarmA decides the life span of the JeevA, whether he will have a defective body or lack intelligence? Which KarmA decides whether the JeevA will enjoy hapiness or sorrow and whether he will attain siddhi and mukti?


How many hells are there? Who gets pushed down in those and for how long do they suffer there?"

 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#29a . வரங்கள்

யமன் கூறினான் புன்னகை முகத்துடன்
நிழல் போல் தொடர்ந்த சாவித்திரியிடம்.

"அஸ்வபதியின் தவப்பயன் நீ பெண்ணே!
சாவித்திரி தேவி தந்த வரத்தின் பயன் நீ!

பன்னிரெண்டு வயதுப் பெண் ஆன போதும்
பரம ஞானியைப் போலப் பேசுகின்றாய் நீ!

விஷ்ணுவுடன் லக்ஷ்மி போல இருப்பாய்!
சிவனுடன் உமை போல இருப்பாய் நீயும்!

சௌபாக்கியவதியாக ஜீவிப்பாய் நீ
சௌக்கியமாக அன்புக் கணவனோடு!

கேள் இன்னமும் உனக்கு வேண்டியவற்றை!"
கேட்டாள் சாவித்திரி மேலும் பல வரங்களை!

"வேண்டும் எனக்கு ஒளரச புத்திரர் நூற்றுவர்;
வேண்டும் என் தந்தைக்கு சத் புத்திரர் நூற்றுவர்.

வேண்டும் பார்வை கண் இழந்த மாமனாருக்கு!
வேண்டும் மீண்டும் ராஜ்ய போகம் மாமனாருக்கு!

வாழ வேண்டும் லக்ஷம் ஆண்டுகள் கணவனோடு
வாழ்ந்த பின் வேண்டும் இருவருக்கும் பரமபதம்!"

"தந்தேன் நீ கேட்ட வரங்களை எல்லாம்- மேலும்
தந்தேன் நீ கேளாத உன் மன விருப்பங்களையும்!"

"கர்ம பேதங்கள் தோன்றும் வகை எது - மேலும்
கர்மம் செய்பவர் யார்? அனுபவிப்பவர் யார்?"

இறைவன் உலகினைப் பரிபாலிப்பது எப்படி?
அறிய விரும்புகின்றேன் இந்த விஷயங்களை!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#29a. Boons and Wishes

Yama Dharma told SAvitri who was following him like a shadow," You are the daughter born out of the penance done by Aswapati and the boon given by SAvitri Devi. No wonder you talk so well like a mature gnAni-even though you are just twelve years old!

May you live happily with your dear husband like Lakshmi Devi does with Vishnu and Uma Devi does with Siva.You can ask for any boons you wish for dear daughter!"

SAvitri asked for several boons." I want one hundred sons. I want one hundred sons to be born to my father. I want my father in law's eye sight restored. He should become the ruler of his lost kingdom.

I want to live with my husband happily for one lakh years. After that both if us should reach the highest abode of liberation."

Yama said,"I give you all that you have asked for and even those for which you wish though you have not asked for them"

SAvitri asked a few more questions now."What creates the difference in the karmAs performed? Who performs the karmAs? Who undergoes the effects of karmAs? How does God rule the world? I want to know all these things!"
 
BHAARGAVA URAAANAM - PART 1

#22e. சந்திரன்-1

பிரமனிடம் கேட்டார் மன்னனின் தந்தை,
“விரதம் சந்திரோதயத்தில் செய்வது ஏன்?”

“நாரதர் பெறுமானைக் காண வந்தபோது
நானும் கயிலையில் இருந்தேன் அன்று!

ஒரு கனியை ஈசனிடம் தந்தார் நாரதர்
“ஒரு கனியை இருவருக்குத் தருவதா?

யாருக்குத் தருவது இந்தக் கனியை?”
“முருகனுக்கே கனி!” என்றேன் நான்.

“மூத்தவன் நான் இருக்க அவனுக்கா?”
மூக்கின்மேல் கோபம் வந்து விட்டது!

கலங்கி நின்றேன் கணபதி சினத்தால்
விளங்கவில்லை என்ன செய்வது என!

அவையில் இருந்த சந்திரன் நகைத்தான்;
அவன் மீது கோபம் பாய்ந்தது இப்போது!

“குறைத்தாய் என் பெருமையை நகைத்து!
குறையும் உன் தண்ணொளி இன்று முதல்!

அடைவர் துன்பம் உன்னைக் காண்பவர்!”
மடை திறந்து சாபங்கள் வெளிப்பட்டன.

ஒளி இழந்து மங்கி விட்டான் சந்திரன்;
ஒளிந்து கொண்டான் தன் இடத்திலேயே.

“சந்திரன் இன்றேல் அமுதம் எங்ஙனம்?”
இந்திரனிடம் முறையிட்டனர் தேவர்கள்.

அபச்சாரம் செய்தான் சந்திரன் அன்று.
அதனால் அடைந்தான் கடும் சாபத்தை!

கணநாதர் அளித்த சாபத்தை மாற்றிட
கணநாதரால் மட்டுமே முடியும் எனவே

சரண் அடைவாய் அண்ணலிடம் சென்று
சந்திரன் சாபத்தை நீக்குவார்விநாயகர்!”

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி


#22 e. Chandran - 1

The king Kritaveeryan’s father asked Brahma,”Why do people perform the chathurti vratham when the moon rises?” Brahma related another incident.

Once when I was in KailAsh, NArada came there with a ripe mango. He gave it to Siva to be given to his sons. But how to share one mango among two sons?

I suggested that the fruit be given to Murugan who was younger of the two. But VinAyaka became very angry with this suggestion. “I am the elder son. How can the younger get it in stead of me?”

I got disturbed by his anger and did not know what to do. Seeing my plight the Moon laughed out loud. Now Vinayaka’s anger was directed towards the Moon.

“You have laughed at me in the sabha degrading me. Your glow will get reduced everyday from now on! If anyone sees you, he will suffer many mishaps.”

The moon lost his moonlight and hid himself in shame. Without the beams of the moon, nectar could not be produced. The DEvA sought Indra’s help to resolve this matter.

Indra told them that the curse laid by GanEsh could be removed only by Him. He advised the Deva to go and surrender to lord GanEsh and seek his mercy.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#5c. மன்மதன்

“எதை வேண்டுமானாலும் ஆணையிடு இந்திரா!
இதை என்னால் செய்யவியலாது!” என்றான் மதன்.

“பிரமன், விஷ்ணு, சூரியன் போன்ற தேவர்
பிறர் அனைவரையும் வெல்ல வல்லவன்.

வசப் படமாட்டார்கள் நர, நாராயணர்கள்.
வசீகரிக்க முடியாது பராசக்தியின் பக்தரை!

எத்தனை முயன்றாலும் யத்தனம் பலிக்காது,
சித்த யோகிகள் ஆகிய நர, நாராயணர்களிடம்!”

“அரிய செயல்கள் புரிந்தால் அல்லவா – நல்ல
பெரிய புகழ் வந்து சேரும் உனக்கு மன்மதா?

முயன்றால் முடியாதது என்றும் உண்டோ?
இயலாதது என்று எதுவுமே இல்லை உலகில்!

வெய்யில் என தகிக்கும் தவாக்னி – நீ
செய்யும் செயலால் அணைந்துவிடும்!

வாழ்த்துகின்றேன் வெற்றி உனதே என!
வருவாய் வென்ற பின் எனைக் காண!”

எத்தனை மறுத்தாலும் ஏற்கவில்லை இந்திரன்,
அத்தனை வாதங்களும் விழலுக்கிறைத்த நீர்!

வேறு வழியின்றிச் சென்றான் பதரிகாசிரமம்,
ஊறு விளைவிப்பதற்குக் கடும் தவத்துக்கு!

காம பாணங்கள், வசந்த காலம், ரதி தேவி,
கரும்பு வில், குயில்கள், அப்சரஸ்களுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#5c. Manmathan

Manmathan refused to oblige to Indra’s request. “I can do anything but this O Indra! This is beyond my power! I can infatuate Brahma, Vishnu and the Sun God but Nara Naaraayanan are Devi’s devotees. It is impossible to mislead or confuse them ” said Manmathan to Indra.

Indra told Manmathan, “You will earn greater fame by doing what you consider as an impossible thing. There is nothing that one can not accomplish by sincere efforts.

You can put off the heat of the Agni produced by the tapas done by the brothers Nara and Naaraayanan. I am sure you will emerge victorious. Please meet me again after accomplishing your mission!”

Manmathan tried his best to refuse but Indra would not let him do so. Finally Manmathan had to give in. He left to disturb the penance of the two brothers Nara and Naaraayanan with his retinue which consisted of flower arrows, the Spring Season, his consort Rati Devi, his sugar cane bow, cuckoos and several Apsaras well accomplished in music and dance.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#29b. உபதேசம் (1)

"இருவகைப்படும் கர்மங்கள் அறிவாய் பெண்ணே!
இரு வகைகளாகும் சுப கர்மங்கள், அசுப கர்மங்கள்.

பரத கண்டமே கர்மங்களை அனுபவிக்கும் இடம்,
பிற கர்மப் பெருக்கத்தை அனுபவிக்கும் இடம்.

சுரர், அசுரர், தானவர், மானவர், கந்தர்வர்,
கர்மங்களைச் செய்பவர், அனுபவிப்பவர்!

தோற்றுவிகின்றான் கர்மங்களை சர்வேஸ்வரன்;
புரிவிக்கின்றான் கர்மங்களை அதே சர்வேஸ்வரன்.

அனுபவிக்கச் செய்கின்றான் சர்வேஸ்வரன்;
அகில உலகைப் பரிபாலிக்கும் விதம் இதுவே.

ஜீவர்கள் வகுத்துக் கொள்ள இயலாது கர்மங்களை;
ஜீவர்கள் மனம் போலப்புரியமுடியாது கர்மங்களை;

ஜீவர்கள் விரும்பிய இடங்களில் புரிய முடியாது;
ஜீவர்கள் செய்வார்கள் சர்வேஸ்வரன் வகுத்தபடி!

சுப கர்மம், அசுப கர்மங்களின் பலன்கள் தரும்
சுவர்க்க, நரக வாழ்வையும், அனுபவங்களையும்

யுக்தியுடன் ஒழித்து விடலாம் கர்மங்களை ஜீவர்கள்
நித்தியம் உருபக்தியோ. நிர்வாண பக்தியோ செய்து.

புண்ணியங்கள், பாவங்களின் பலனைக் கூறுவன
புராணங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள் எனப்படும்.

வர்ணாசிரமம் எல்லைகளை வகுக்கும் - ஜீவர்கள்
கர்மங்களைச் செய்ய வேண்டிய வரைமுறைகளை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#28b. Upadesam by Yama (1)

"KarmAs are of two types - the auspicious KarmAs and the inauspicious KarmAs. Bhatara kaNdam is the place to enjoy the fruits one's KarmAs. SurAs, AsurAs, DAnavAs, MAnavAs and GandharvAs are those who performs the karmAs and enjoy their fruits.

SarweswarA creates our KarmAs; He makes us perform those karmAs; He makes us enjoy the fruits of those karmAs! This is how the SarvewsawA rules the world!

The JeevAs cannot choose their KarmAs; They cannot act as they wish to; They can not act where they wish to; The jeevAs just act according to the plan made by SarweswarA.

Auspicious karmAs give happiness and heaven while the inauspicious karmAs give sorrow and hell. A JeevA can destroy his KarmAs and their effects by his devotion either by worship of forms of God or worship of the formless supreme power.

The PurAnas, Smrutis and IthihAsAs elaborate on the fruits of the good merits and bad effects. The varNAsramam lays down the karmAs and how they must be performed."
 
BHAARGAVA PURAANAM - PART 1

#22f. சந்திரன்-2

தேவர்கள் சென்றனர் கணபதியை நாடி;
தேவர்கள் பணிந்தனர் இனிய துதி பாடி.

“அபச்சாரம் செய்தான் சந்திரன் நகைத்து!
அவமானம் அடைந்தான் ஒளியை இழந்து!

அமிர்தம் சுரக்கத் தேவை நிலவொளி!
புவனம் செழிக்கத் தேவை நிலவொளி!

இரண்டுமே நின்று போய் விட்டன இன்று!
இரங்கவேண்டும் உள்ளம் தயை கூர்ந்து!

தவறு செய்தவன் ஒருவனனே எனில்
தண்டனை அடைந்தவர் எத்தனை பேர்?

தண்டனை வேண்டும் தவறுக்கு – அதைக்
கண்டனத்துடனும் நிறைவேற்றலாமே?”

கழிவிரக்கம் கொண்டார் வேழமுகநாதன்.
இழிவினை அகற்றிவிட மனம் கனிந்தார்.

“ஆவணி பூர்வபக்ஷ சதுர்த்தி நிலவே
அளிக்கும் இன்னல் நோக்குபவர்க்கு!”

சந்திரனிடம் சென்றது தேவர் குழு.
மந்திர மகிமையை அறிவுறுத்தியது.

கங்கா சர்வசித்தி நகரம் சென்றான்
அங்கு இருபது இரண்டு ஆண்டுகள்

தடங்கல் இன்றி அவன் ஜெபித்தான்;
இடர் நீங்கிடவும், ஒளி மீண்டிடவும்.

தோன்றினார் அவன் முன் கணநாதன்.
போற்றினான், புகழ்ந்தான், அழுதான்;

“அறியாது செய்த பிழை பொறுப்பீர்!
அளிப்பீர் முன்பு இருந்த பிரகாசம்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#22f. Chandran

The DEvA went to Ganapathy. They sang his praise in words sweeter than honey.

“Moon did commit a crime and deserves to be punished. Now he has lost his glory and gone into hiding. Chandrika, the moon light is essential for producing nectar. The plants and trees also it for growing well.

Now these two have come to a grinding halt. You must pardon him and reduce the severity on the punishment given to him. He is the one who committed the crime but all of us suffer due to the curse.”

VinAyaka took pity and reduced the severity of the curse. “The chathurti moon in the poorva paksham of the month AavaNi will cause problems to those who see it.” The Deva went straight to the Moon and told him the greatness of the VinAyaka mantra.

Moon went to the Ganga sarva siddhdhi and did penance for twenty two years. Lord VignEsh appeared to him. Moon praised him and begged him,”Please pardon my thoughtless action. Please kindly restore my original glory!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6a. அகால வசந்தம்

மன்மதன் வரவுக்கு முன்னமே அங்கே
மனதை மயக்கும் வசந்தம் நுழைந்தது.

பூத்துக் குலுங்கின மரம் செடி கொடிகள்;
பூக்களில் ரீங்கரித்தன கரிய வண்டினம்.

பாடின பறவைகள், கூவின குயில்கள்,
கூடின விலங்குகள் தம் பேடைகளுடன்.

தென்றல் வந்து தழுவியது சுகமாக – ஓர்
இன்ப லாகிரியைத் தூண்டியது உலகினில்!

முனிவர்கள் கலங்கினர் இந்திரிய வசப்பட்டு;
இனிய, சுகமான இயற்கையின் வசப்பட்டு.

பதரிகாசிரமத்தில் நுழைந்தான் மன்மதன்
பரிவாரங்களோடு பணியைத் தொடங்கிட.

பாடினர், ஆடினார் தேவருலக மங்கையர்!
பாடின, ஆடின, கூடின விலங்கினங்கள்!

கண் விழித்துப் பார்த்தான் நாராயணன்;
கண்டு அதிசயித்தான் அகால வசந்தத்தை!

மலர்களை, மலர் மணத்தை, தென்றலை,
கலவி இன்பம் காணும் விலங்குகளை!

எழுப்பினான் நரனை நிஷ்டையிலிருந்து,
குழம்பினான் நரனும் கண்ட காட்சிகளால்.

கண்டு கொண்டான் காரணத்தை நாராயணன்,
விண்டான் நரனுக்கு நன்கு விளங்கும்படி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


4#6a. Untimely Spring Season

Even before Manmathan entered Badarikaasramam, spring season made its entry there to welcome Manmathan and his retinue.

Trees, plants and creepers bloomed with colourful and fragrant flowers. The bees filled the air with a mesmerizing reengaaram while visiting those fragrant flowers.

The birds chirped, the cuckoos sang and all the animals went after their mates. A cool breeze blew and created a romantic atmosphere. The ascetics and rushis were disturbed from their spiritual activities by the surging of love and lust in them – due to the season and the human nature.

Manmathan entered the Badarikaasramam with his retinue. The apsaras sang sweetly and danced divinely. The birds sang, the animals danced and mated with their respective partners.

Naaraayanan opened his eyes and was surprised to see the sudden changes around him. The spring season was untimely!

He pulled Naran out is his meditation and he too was equally puzzled by these sudden changes. Naaraayanan however guessed the reason for the sudden change in the season and explained it to Naran.
 
DEVI BHAAGAVATM - SKANDA 9

9#29c. உபதேசம்(2)
நான்கு வர்ணங்களிலும் நற்குலம் பிராமண ஜாதி;
மேன்மைக்குக் காரணம் தர்மங்களைப் பின்பற்றுதல்.

சாஸ்திரங்கள் விதிக்கின்றன செய்யவேண்டியவற்றை;
சாஸ்திரங்களின் வழி நடப்பதால் இவர்கள் உத்தமர்கள்.

இரு வகையினர் உள்ளனர் இவர்களிலும் கூட.
ஒரு வகையினர் சகாமர், மற்றவர் நிஷ்காமர்.

பயன் கருதிச் செயல் புரிபவன் சகாமன்;
பயன் கருதாமல் செயல் புரிபவன் நிஷ்காமன்

நிஷ்காமன் ஆவான் அவாவறுத்த பிரம்ம நிஷ்டன்;
இஷ்டத்தால் செய்யாமல் கடமையாகச் செய்பவன்

ஜீவன் உடலைப் பிரியும் போது துன்புற மாட்டான்!
ஜனனம் எடுக்காமல் சேருவான் பிரம்மத்தோடு!

சகாமன் அடைவான் தனது கர்ம பலன்களை;
சகாமன் அடைவான் மேலும் பல பிறவிகளை!

காலக் கிராமத்தில் மாறுவான் சகாமன் நிஷ்காமனாக;
காலக் கிராமத்தில் சேருவான் பிரம்மத்தை நிஷ்காமன்.

வைஷ்ணவர்கள் ஆவார்கள் எப்போதும் சகாமர்கள்;
வைஷ்ணவர்களுக்கு உண்டாகாது நிர்மலமான புத்தி.

இஷ்டப் படுவர் சுய தர்மம், தீர்த்த யாத்திரைகளில்,
கஷ்டமான தவத்தில் அடைவர் பிரம்ம லோகத்தை!

சத்கர்மத்தில் பக்தியும் ஆசையும் உடையவர்கள்
சூரிய லோகத்தைச் சென்று அடைவர் தவறாமல்!

தெய்வங்களின் மேல் பற்றுள்ளவர்கள் சேருவர்
தெய்வங்களின் லோகத்தை வாழ்ந்த பின்னர்.

செய்யும் கர்மங்களே காரணம் ஆகும் பிறவிக்கு;
செய்யும் கர்மங்களுக்குக் காரணம் ஆகும் பிறவி.

நீங்காது பிறவி எடுக்கும் தன்மை அவா இருந்தால்;
நீங்கும் பிறவி எடுக்கும் தன்மை அவா அறுந்தால்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#29c. Upadesam by YamA (2)

"Of the four varNAs, Brahmins are suposed to be the best. The real cause for their greatness is that they follow the Vedic dharmAs.

SAstrAs lay down the "do"s and the "don't"s for the right living. Brahmins adhere to these rules. So they are considered as the best among the four varnAs.

Among the Brahmins there are two types - the SakAmAn and the NishkAmAn. One who performs an action without desiring anything in return is a NishkAman. He is the true Brahma Nishtan - who performs any action as a duty and not for getting anything in return.

Such a NishkAman does not suffer when he parts with his life. He will not be born again but will merge with the supreme Brahman once for all.

The SakAman performs actions desiring specific results. He achieves what he set out for. But he also takes several more births in the world. In due course of time, SakAman will mature to become a NishkAman and eventually merge with the supreme Brahman over a period of time.

VaishnaVas are always SakAmAns. They do not have the NishkAma, nirmala buddhi. The persons who are interested in swadharmam, theerta yAthrAs and severe penance attain Brahma lokam. Those who are interested in performing good actions will reach the Soorya lokam.Those who are attached to specific gods and Goddesses will attain their God's lokam.

Our KarmAs are the cause of the births we take. The births we take decide our future karmAs. Janana - Marana cycle will not cease as long as there is any desire in the jeevA. One who is free from all sorts of desires is the one who is qualified for jumping out of the cycle of birth and death."

 
BHAARGAVA PURAANAM - PART 1


#22g. பாலசந்திரர்

“அன்றே அளித்தேன் சாப விமோசனம்;
இன்று அளிப்பேன் இனியதொரு வரம்!

சங்கட சதுர்த்தியில் என்னைத் தொழுபவர்
சந்திர உதயத்தில் உன்னையும் தொழுவர்.

என்னை வாங்குபவர் உன்னையும் வணங்க
உன் ஒரு கலையை அணிவேன் முடியில்!”

சந்திரன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை;
சந்திரனின் ஒளி முன்னிலும் ஜொலித்தது!

ஆலயம் எடுத்தான் அன்புடன் அவன்
ஆனைமுக நாதனுக்கு அதே இடத்தில்.

பாலசந்திர விநாயகரை அமைத்துப்
பல சித்திகள் பெற்றான் ஆராதித்து.

சந்திரனைச் சூழ்ந்தன பல துன்பங்கள்!
சந்திரனின் துன்பங்கள் விலகின காண்!”

விவரங்களை எடுத்து உரைத்தான் பிரமன்.
விரும்பிக் கேட்ட மன்னனின் தந்தை.

ஐயம் ஒன்றை எழுப்பினார் மீண்டும்,
“வையத்தில் புல்லுக்கு மகிமை ஏன்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#22G. BAlachandra VinAyakar

Lord GanEsha told the Moon,”I have given you sApa vimOchanam long back. Today I will give you more boons! Whoever worships me in the Sankata chathurti will worship you as you rise in the sky. To make sure that whoever worships me worship you also, I will wear your chandrakalai on my crown henceforth”

The joy of Chandran knew no bounds. His brilliance was even more than what it was before. He built a temple for VinAyaka there. He established BAlachandra VinAyaka there. Moon did ArAdhanA and got many siddhis.

Moon was surrounded by problems and later they all vanished by the grace of lord GanEsha”

Brahma told this to the King’s father who asked one more doubt now, “Why is the Arugu grass considered so auspicious for GanEsha puja?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6b. வசந்த லக்ஷ்மி

“குலுங்குகின்றன செடிகளில் மலர்கள் ;
கூவுகின்றன மனோஹரமாகக் குயில்கள்.

ரீங்கரிக்கின்றன மதுவுண்ட கருவண்டுகள்;
ஏங்குகின்றன இன்பம் துய்க்க விலங்குகள்;

சிங்கம் போல ஆனது அந்த வசந்தருது.
சிசிரருது ஆனது வலிய யானை போல.

கூரிய நகங்களே முருக்க மலர்கள்;
சீரிய கைகளே அசோக மலர்கள்.

கால்கள் கல்யாண முருக்க மலர்கள்
கார்மேகக் கூந்தல் அசோக மரங்கள்.

முகமே அன்றலர்ந்த தாமரை மலர்,
விகசிக்கும் கண் கருநெய்தல் மலர்.

கண்கவர் தனங்கள் வில்வப் பழங்கள்
கண்கவர் பல்வரிசை குருக்கத்தி மலர்.

அழகிய செவிகள் ஆயின பூங்கொத்து.
செவ்விய உதடுகள் கோவைப் பழங்கள்.

ஒளிரும் நகங்கள் செந்நெல் கதிர்கள்
ஒலிக்கும் குரல் குயில்களின் ஓசை.

மிளிரும் நகைகள் மயில் பீலிகள்;
படரும் ஆடை கடம்ப மரங்கள்;

ஒட்டியாணம் மல்லிகைக் கொடி!
கட்டழகு நடை அன்னப் பேடை!

வந்துள்ள பெண் வசந்த லக்ஷ்மி;
வந்துள்ளாள் தவத்தைக் கலைக்க.

திட்டம் தீட்டியவன் தேவேந்திரன்
திறம்படச் செய்பவன் மன்மதன்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#6b. Vasantha Lakshmi

“The plants and trees are laden with fragrant flowers. The cuckoos are singing sweetly.The bees hum intoxicated with honey. All the animals wish to mate. Spring season can be compared to a brave Lion and the late Winter season to an elephant.

Flowers of the tress in various colours form the nails, the hands and the legs of a lovely lady. The dark coloured asoka trees form her dark hair, the fresh lotus flower is her face, the blue water lilies are her eyes, the fruits of vilava tree are her young breasts.

Kurukkathi flowers form her pearly teeth, kovai fruits form her red lips, the song of cuckoo is her sweet voice, the peacock feathers are her jewellery, the kadamba trees are her dress, the jasmine creeper is her waist chain and the swans form her dainty walk.

This lovely lady is known as Vasantha Lakshmi. She has come here to ruin our penance. Indra has hatched this scheme and Manmathan is carrying out the plan!” Naaraayanan told this to Naran.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#29d. உபதேசம் (3)
ஸ்வதர்மத்தைப் பின்பற்றுவோர் - கன்னிகாதானம்
ஸ்வதர்மத்தைப் பின்பற்றுவோருக்குச் செய்தவர்

இந்திர லோகத்தில் வசிப்பர் - பதினான்கு
இந்திரன் ஆயுட்காலம் வரை இன்பமாக!

பொன், வெள்ளி, நெய், ஆடைகள் அளிப்பவர்
மன்வந்தர காலம் வாழ்வர் சந்திர லோகத்தில்!

பொன், தாமிரம், பசு தானம் செய்பவர் வாழ்வர்
சூரியலோகத்தில் சுகமாகப் பதினாயிரம் ஆண்டு!

பூமியை, தனத்தைத் தானம் செய்பவர் வாழ்வர்
விஷ்ணு லோகத்தில் சந்திர, சூரியர் உள்ளவரை.

தேவதைகளை முன்னிட்டுத் தானம் செய்பவர்
தேவதைகளின் உலகை அடைவர் இன்பமாக!

தடாகப் பிரதிஷ்டை தரும் ஒருவனுக்கு ஜனலோகம்.
தடாகத்தைச் சுத்தம் செய்வதும் தரும் ஜனலோகம்.

அரச மரம் நடுபவன் அடைவான் தபோலோகத்தை!
நந்தவனம் தந்தவன் அடைவான் துருவலோகத்தை!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


9#29d. Upadesam by YamA (3)

"Those who follow the swadharmam as told by SAstrAs and VEdAs and those who marry their daughters to men who adhere to swadharman will live in Indra Lokam for a period equal to the life span of fourteen IndrAs.

Those who donate Gold, Silver, ghee and New clothes will live in Chandra Lokam for one ManvatarA.

Those who donate Gold, Copper or Cow will live in Soorya Lokam for ten thousand years. Those who donate land and wealth will live in Vishnu Lokam as long as the Sun and the Moon exist.

Those who donate for the sake of Gods and Goddesses will reach the land of that God or Goddess and live there happily.

A man who digs a pond and one who cleans an existing pond will reach Janarlokam.

A man who plats a Peepal tree will reach Tapolokam. A man who donates a flower garden will reach Dhruvalokam."
 
BHAARGAVA PURAANAM - PART 1

#23a. மூவர் இட்ட சாபம்-1

சுலபன் அரசாண்டான் அவந்தி நகரை.
சுபத்திரை சுலபனின் அருமை மனைவி.

நீதி நெறி வழுவாத அரசன் சுலபனிடம்
நிதி உதவி கேட்டு வந்தான் ஓர் அந்தணன்.

உடல் மெலிந்து வாடி இருந்தான் அந்தணன்.
உடைகளும் நலிந்து கந்தல் ஆகியிருந்தன.

பரிவு தோன்றவில்லை அந்த அந்தணனிடம்.
பரிகாசம் செய்து நகைத்தான் அரசன் சுலபன்.

நகைப்பொலி கேட்டது சீறி எழுந்தான்,
நாகம் போலவே அந்தணன் மதுசூதனன்.

“செல்வச் செருக்கால் சிரித்தாய் மன்னா நீ!
இல்லாதவரைக் கண்டு இப்படி நகைப்பதா?

பல் இளிக்கும் பசுவின் வாலை முகர்ந்த எருது!
பல் இளித்த நீயும் ஒரு எருதாகக் கடவாய்!”

சுலபன் பெற்ற சாபத்தினால் வெகுண்டாள்
சுபத்திரை என்னும் கற்புடைய அவன் அரசி.

“அந்தணனாகப் பிறந்தவனுக்கு கோபமா?
அரசன் சிரித்ததற்கு கொடிய சாபமா?

கழுதையைப் போல நடந்துகொண்டாய் நீ!
கழுதையாக மாறிச் சுமப்பாய் மூட்டைகளை!”

அரசியின் சாபம் வெறுப்பேற்றியது மேலும்,
அரசன் சிரிப்பினால் சினந்த மதுசூதனனை!

“குற்றம் புரிந்தவன் அரசன் உன் கணவன்;
குற்றவாளி ஆக்குகிறாய் ஏழை அந்தணனை!

சாபத்திற்கு எதிர் சாபம் தந்த நீயும் ஒரு
சண்டாளப் பெண்ணாக மாறக் கடவது!”

காலம் செய்த கோலத்தினால் பல சாபங்கள்!
காலம் கடக்கும் முன்பே உருவ மாற்றங்கள் !!

எருதாக மாறிய அரசன் சுலபன் சென்றான்
உழுது பயிர் செய்யும் ஒருவனின் வீட்டுக்கு.

மதுசூதனன் மாறினான் ஒரு கழுதையாக.
விதிப்படி அடைந்தான் வண்ணான் வீட்டை.

சேரியை அடைந்தாள் சண்டாளப் பெண்ணாக
மாறிவிட்ட அரசி சுபத்திரை அந்தக் கணமே.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


# 23a. The exchange of curses

King Sulabhan ruled over Avanthi. His wife was Subhadra. One day a poor Brahmin came to the king asking for money. The Brahmin was named Madhusoodanan. He looked famished and thin. His clothes were nearly rags. In stead of pitying the Brahmin, the king laughed out loudly.

Madhusoodanan became wild when the king laughed at his poverty. “What kind of a king are you anyway? Laughing at a poor man since you are so rich. The bull which smells the hind quarters of a cow shows all its teeth. You did the same thing now. May you become a bull and serve a farmer to plough his field. ”

The queen got angry now! She spoke to Madhusoodanan,” In spite of Being a Brahmin you have become so angry. You have cursed the king just because he laughed at you. You have behaved irresponsibly like a donkey. May you become a donkey and serve well a washer-man.”

Madhusoodanan was already fuming with anger at the king’s behaviour. The queen’s curse added fuel to the fire. He told her,”The king your husband is the culprit here. But you try to project me as a culprit. You have cast a counter-curse for my curse. May you become an untouchable chandaala sthree and live in the slums.”

The time was not right for those three people. Curses and counter-curses were freely exchanged. Their appearance changed immediately. The king became a bull and went to the house of a farmer. The Brahmin became a donkey and went to the house of a washer-man. The queen became an untouchable chandaala sthree and went to live in the slum.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6c. ஊர்வசி

புலப்பட்டனர் தபஸ்விகளின் கண்களுக்கு
பொலிவுடைய ரதி, மதன், அப்சரஸ்கள்

நர, நாராயணர் கண்டு அதிசயித்தனர்
வரிசையாக வந்த அழகிய பெண்களை!

தங்களின் அங்க அழகை எல்லாம் – அந்த
மங்கையர் வெளிப்படுத்தினர் நாணாமல்.

ஆடினார் காமத்தைத் தூண்டும் நடனம்;
பாடினர் போகத்தைத் தூண்டும் பாடல்.

சிந்தித்தார்கள் நர நாராயணர் இது பற்றி!
‘இந்திரன் விழைந்தானோ நம்மை மயக்க?

வனப்பு மிகுந்த வனிதையை சிருஷ்டித்து
மனதில் பதிப்பேன் தவத்தின் வலிமையை!’

“உங்களுக்குத் தர வேண்டும் ஒரு விருந்து
எங்களால் இயன்ற அளவுக்குச் சிறப்பாக !”

தட்டினர் தம் தொடையை நாராயணன் – வெளிப்
பட்டாள் ஒரு பேரழகி அவர் தொடையிலிருந்து!

ஊர்வசி என்னும் தேவ கன்னிகை வந்தாள்
ஊரு ஆகிய தொடையில் இருந்து வெளியே.

நாணினர் அப்சரஸ் அவள் அழகினில் – நாணிக்
கோணினர் அவள் தம்மிலும் சிறந்தவள் என்று.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

4#6c. Oorvasi

Nara Naaraayana could now see the Rati, Manmathan and the apsaras. They were surprised at the beauty of the visitors from heaven.

The damsels displayed their curves and beauty shamelessly. They danced and sang sweetly so as to arouse the two brothers and make them seek carnal pleasures.

Naarayanan thought to himself, “So Indra wants to disturb our penance. I shall display to them the power of my penance by creating a woman more beautiful than them .”

He then spoke to them, We want to give you a befitting feast.” He slapped on his thigh and an apsaras – far more beautifuL than those present there – emerged from his thigh.

She was named as Oorvasi since she emerged from the ‘ooru’ or the thigh of Naaraayanan. The visitors from heaven became shy seeing the superior beauty of Oorvasi.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 9

9#29e. உபதேசம் (4)
"ஆலய விமானம் தானம் தந்தவன் பரம பதத்தையும்
சித்திர விமானம் தந்தவன் அதிக நற்பேறும் அடைவர்.

இறைவன் பவனி செல்லும் வீதியை அமைத்தவன்
இருப்பான் ருத்திர லோகத்தில் பதினாயிரம் ஆண்டு!

உயர்ந்த லோகத்தை அடைந்து மீள்பவர் பிறப்பர்
உயர்ந்த பரத கண்டத்தில் உயர்ந்த அந்தணராக.

முயல்வர் முக்தி நெறி அடைவதற்கு - அது
முடியாதவர் அடைவர் மீண்டும் சுவர்க்கத்தை.

பிரம்ம சித்தி அடைய விரும்பும் க்ஷத்திரியர்
பிறக்க வேண்டும் பிராமணர் குலத்திலேயே.

அரிது அரிது அந்தணனாகப் பிறத்தல் அரிது!
அரிய புண்ணியச் செயல்களால் இது லபிக்கும்!.

புண்ணிய, பாவங்கள் ஆகும் கர்ம பலன்கள;
புண்ணிய பாவங்கள் ஊட்டுவது கர்ம பலனை!.

செய்யாமல் இருக்க முடியாது ஜீவர்கள் கர்மங்களை;
அனுபவிக்காமல் இருக்க முடியாது கர்ம பலன்களை!

துன்பத்தைக் குறைக்கும் தெய்வத்தின் சகாயம்;
துன்பத்தைக் குறைக்கும் புண்ணிய நதி நீராடல்;

துன்பத்தைக் குறைக்கும் ஞானிகளின் ஸ்பரிசம்;
துன்பம் அடைவர் தர்மத்தைக் கைவிட்டவர்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

9#29e. Upadesam by YamA (4)

A man who donates the VimAnam of a temple will rech the highest abode called Parama Padam. One who donates a chitra vimAnam will get higher merits. A man who paves the street on which the Gods are taken in a procession will live in Indra Loka for ten thousand years.

Those who return from higher abodes back to earth take birth as Brahmins. They will try to attain total liberation called Mukti. If they fail in this they will go back to heaven one more time. Even a kshatriya who seeks liberation must be born as a brahmin to achieve this.

Bering born as a Brahmin is very rare. One gets this only as result of the merits earned in previous births. PuNyam and PApam are the fruis of the karmAs. PuNyam and PApam give us the fruits of our karmAs.

A JeevA cannot but perform KarmAs. A JeevA cannot but suffer from his karmAs. But the intensity of the suffering can be reduced by devotion to God, taking dips in holy rivers and by the touch of true gnaanis.

Those who give up their dharma are those who suffer in Hells.
 
bhaargava puraanam - part 1

#23b. மூவர் இட்ட சாபம்-2

ஏரிலிருந்து அவிழ்த்து விட்டதும் எருது
சேர்ந்தது ஒரு வயற்காட்டை மேய்ந்தபடி.

அழுக்கு மூட்டைகளை இறக்கிய பின்னர்
கழுதையும் வந்தது அதே வயற்காட்டுக்கு.

சேரிப் பெண்ணாக மாறிய சுபத்திரையும்
சேர்ந்தாள் புல் அறுக்க அதே வயற்காட்டை.

மூவரும் ஒன்று சேர்ந்தனர் ஒரே இடத்தில்!
மூவருக்கும் நினைவில்லை நடந்தவை!

மேகம் சூழ்ந்தது, மின்னல் வெட்டியது.
சோவென கன மழை பொழியலானது!

மழைக்கு ஒதுங்க இடம் தேடினார்கள்.
வேழமுகத்தோன் ஆலயம் தென்பட்டது.

ஓடிச் சென்றனர் மூவரும் ஆலயத்துக்கு.
ஓரமாக ஒதுங்கினர் வெளிப் பிரகாரத்தில்.

இரவு நேரம் வந்த பின்னரும் சற்றும்
குறையவே இல்லை மழையின் வேகம்!

புல்லைக் கண்டதும் கழுதைக்குப் பசி.
மெல்ல அதை இழுத்து உண்ணலாயிற்று .

கழுதையைத் தடியால் அவள் அடித்ததும்,
கழுதை மிரண்டு உதைத்தது எருதை.

கழுதையை எருது முட்டித் தள்ளவும்,
கழுதை மோதியது சுபத்திரையின் மீது.

மூவரும் செய்த கலவரத்தைக் கண்டு
முனிவர்கள் விரட்டினர் அங்கிருந்து!

குறையவில்லை கனமழை சிறிதும்;
உறைந்தது உடல் அக்குளிர் காற்றில்!

புல்லுக் கட்டை இழுத்தன பிராணிகள்;
புல்லுக் கட்டு விழுந்தது சன்னதி முன்பு.

பறந்து சென்றன மூன்று பசும் புற்கள்!
இறைவன் சிலை மீது சென்று விழுந்தன.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#23b. The exchange of curses (2)

One fine day the bull who had been the king was released from the yoke. He reached a field grazing the grass. The donkey was left loose after he delivered the bundles of dirty clothes in the river bank. He too reached the same field.

The chandaala sthree also reached the field to cut green grass. The three main characters of this story were in the same place but did not remember the happenings of the past.

Suddenly rain clouds moved in and it started pouring heavily. There was no place to take shelter from the rain save the temple of Vinayaka seen at a distance.

All three ran fast and took shelter in the outer praakaara of the temple. The rain slashed nonstop throughout the night. The donkey felt hungry. It started pulling the bundle of grass from the woman.

She became angry and hit the donkey with her stick. The donkey got frightened and kicked hard the bull. The bull knocked the donkey on Subadra and there was a lot of confusions and noise.

The pujaris of the temple got angry and tried to chase them away from the temple premises. The wind was chill and the rain continuous. Both the animals tried to eat the grass now.

They pulled it in opposite directions and the bundle fell in front of the sannidhi. Out of the bundle three blades of grass flew and fell on the vigraham in the temple.
 
devi bhaagavatam - skanda 4

4#6d. பரிசாக ஊர்வசி

பதினேழாயிரத்து ஐம்பதின்மர் வந்தனர்
பழங்களை ஏந்தியபடி விண்ணுலகிலிருந்து.

பதினேழாயிரத்து ஐம்பதின்மர் தோன்றினர்
பணி செய்து ஊர்வசியைப் பேணுவதற்கு.

தாமரை முகத்தினளைக் கண்ட அப்சரஸ்
தவத்தின் வலிமையை உணர்ந்தனர் நன்கு.

“கருணையும், மகிமையும் கொண்டுள்ளீர்!
கரும்புவில் பாணத்துக்கு மயங்கவில்லை!

நரஹரியின் அம்சம் ஆவீர் இருவரும் – இங்கு
நாமாக வரவில்லைத் தவத்தைக் குலைக்க.

பங்கம் செய்யச் சொன்னவன் இந்திரன் தான்.
எங்கள் மேல் நீர் கொள்ளவில்லை கோபம்!

அளிக்கவில்லை கொடிய சாபங்கள் – மேலும்
அளித்தீர்கள் நல்ல சுவையான விருந்து.

சாபம் அளிப்பார்கள் தவ முனிவர்கள்
கோபம் அளவு மீறும் போதெல்லாம்.

சாபம் விரயம் செய்து விடும் தவத்தை!
கோபம் கொள்ளார் உத்தம முனிவர் !”

மனம் மகிழ்ந்தனர் நர, நாராயணர்கள்
மனம் உவந்து அளித்தன ஊர்வசியை,

“இந்திரனுக்கு அளியுங்கள் எம் பரிசாக.
இந்திரலோகம் திரும்பலாம் நீங்கள்”

செல்ல விரும்பவில்லை அந்தப்பெண்கள்,
சொல்லத் தொடங்கினார் உள்ளக் கருத்தை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

[SUB]4#6d. Oorvasi was presented to Indra

Seventeen thousand and fifty persons came from heaven carrying divine fruits. Seventeen thousand and fifty persons appeared on earth to serve Oorvasi. The apasaras saw the lotus-faced Oorvasi and realized the power of penance.

They spoke to Nara and Naaraayanan now. ” You are well accomplished and kindhearted. You did not succumb to the flower arrows shot by the God of Love Manmathan with his sugar cane bow. You both are the amasam of Narahari.

We did not come here on our own to disturb your penance. Indra ordered us to do so. Still you did not get angry with us. You did not cast on us terrible curses. In stead you gave a grand feast.

Many rushis end up cursing people when made angry by them. But the curse will steal them of their power of penance. Wise rushis do not curse and waste their hard earned power of penance.”

Nara and Naaraayanan became happy with their humble words. They told the heavenly visitors,”You may return to your abode now. Please take Oorvasi with you as our gift to your king Indra.”

Strangely those visitors from Heaven did not want to go back there. They spoke out their innermost thoughts frankly to Nara and Naaraayanan now.
[/SUB]
 

Latest posts

Latest ads

Back
Top